Jump to content

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் செய்திகள்


Recommended Posts

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்! - களமிறங்கும் உள்ளூர்க்காரர் மருது கணேஷ்

சென்னை ஆர்.கே.நகர்  சட்டமன்றத் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதி என்பதால் இந்த இடைத்தேர்தல் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னர் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே, வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து, இடைத்தேர்தலை ரத்துசெய்வதாகக் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஏழு மாதங்கள் முடிந்த நிலையில், டிசம்பர் 21-ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

rk nagar
 

 

இரட்டை இலையை மீட்ட உற்சாகத்தில் இருக்கின்றனர் பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி அணி. ஆனால், மைத்ரேயனின் ஃபேஸ்புக் பதிவால் இரு தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாகத் தெரிகிறது. இந்நிலையில் நேற்று ஆர்.கே.நகர் இடைர்தேர்தலில் மதுசூதனன் மீண்டும் போட்டியிடுவாரா என்று நிருபர்கள் எழுப்பியக் கேள்விக்கு நழுவலாகப் பதில் அளித்து சென்றுவிட்டார் அமைச்சர் உதயகுமார்

அ.தி.மு.க இடையே லேசாக விரிசல் தென்பட்டு வரும் நிலையில், தி.மு.க வேட்பாளராக மருது கணேஷை முன்நிறுத்தியுள்ளார் மு.க.ஸ்டாலின். இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை முடிவில் ஆர்.கே.நகர் கிழக்குப் பகுதி செயலாளர் என்.மருது கணேஷ் ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க வேட்பாளராகக் களமிறங்க உள்ளதாக ஸ்டாலின் அறிவித்தார். ``நான் ஆர்.கே.நகரில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்கிறேன். எனவே, மக்கள் ஆதரவு எனக்கு உள்ளது” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் மருதுகணேஷ். டி.டி.வி.தினகரன், பா.ஜ.க, தீபா பேரவை வேட்பாளர்கள் யார் என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்! 

https://www.vikatan.com/news/tamilnadu/108867-rk-nagar-bypoll-marudhu-ganesh-announced-as-dmk-candidate.html

Link to comment
Share on other sites

  • Replies 82
  • Created
  • Last Reply

இலையை மீட்க இலையை எதிர்க்கிறோம்...! ஆர்.கே நகரில் மீண்டும் தினகரன்....!

 

IMG-20171124-WA0014_16470.jpg

கடந்த 22-ம் தேதி சென்னையிலிருந்து கோவை கிளம்பிய தினகரனுக்கு பாதி வழியிலேயே இரட்டை இலை நமக்கு இல்லை என்ற தகவல் பெரும் அடியாய் விழுந்தது. ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி கொங்கு மண்டல நிர்வாகிகளுடனான
ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள  ஒருநாள் முன்னதாகவே திருப்பூர் வந்தவர், முன்னாள் எம்.பி சிவசாமியின் இல்லத்தில் இரவு தங்கினார். அடுத்தநாள் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள கிளம்பியவருக்கு ஆர்.கே நகர் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பும் வந்துசேர, கொங்கு மண்டல ஆலோசனைக் கூட்டம் ஆர்.கே நகர் இடைத்தேர்தல் ஆலோசனைக் கூட்டமாக மாறிப்போனது.

 

முதலில் பேசிய சிவசாமி, தி.மு.கவில் இருந்து வைகோ உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் எல்லாம் பிரிந்து சென்ற சமயத்தில், கட்சியில் பெயரே தெரியாதவர்கள்தான் கருணாநிதியுடன் இருந்தார்கள். ஆனால் அவர்களை எல்லாம் மாவட்டச் செயலாளர்களாக, அமைச்சர்களாக அவர் உருவாக்கிக் காட்டினார். அதேபோல இன்று தினகரனுக்கு தோள்கொடுத்து நிற்கும் நம்மைப் போன்றவர்கள், நாளை எம்.எல்.ஏக்களாக அமைச்சர்களாக உருவாவது நிச்சயம் என்றார்.

IMG_20171124_111436_16406.jpg

 

தன்னுடைய அரசியல் அனுபவத்தைப் பற்றிப் பேச தினகரனுக்கு வயது பத்தாது என எடப்பாடி பேசுகிறார். 2011 - ல் நீயும், நானும் ஒன்றாகத்தான் ஜெயலலிதாவிடம் அமைச்சர்களாக பணியாற்றினோம். உன்னுடைய லட்சணத்தைப் பார்த்துதான் 2014 தேர்தலில் சேலம் நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளராக ஜெயலலிதா என்னை நியமித்தார். சசிகலாவும், தினகரனும் போட்ட பிச்சையில் வாழ்ந்துவிட்டு இப்போது எங்களையே எதிர்க்கிறாயே, என்று எடப்பாடியை ஏகத்துக்கும் வருத்தெடுத்தார் செந்தில் பாலாஜி.

தங்க தமிழ்ச்செல்வன் பேசுகையில், எடப்பாடி - ஓ.பி.எஸ் அணியிடம்தான் அதிகபட்சமாக 111 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள் என்றுகூறி தேர்தல் ஆணையம் சின்னத்தை அவர்களுக்கு ஒதுக்கியிருக்கிறது. ஆனால், எங்களிடம் அன்றைக்கு 122 எம்.எல்.ஏ-க்கள், 37 எம்.பி-க்கள் இருந்தார்களே, அப்போது மட்டும் ஏன் சின்னத்தை முடக்கினார்கள். மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் தேர்தல் ஆணையம் இருக்கிறது என்பதை இந்த முடிவு வெளிச்சம்போட்டு காட்டிவிட்டது. சசிகலாவிடம் பேசி, ஆர்.கே நகர் தேர்தலில் தினகரனை மீண்டும் இறக்கிவிடுவோம். மத்திய மாநில அரசுகளைவிட அதிக செல்வாக்குப் படைத்தவர் தினகரன்தான் என்பதை ஆர்.கே நகர் இடைத்தேர்தல் நிரூபிக்கும் என்றார்.

IMG-20171124-WA0017_(2)_16372.jpg

பின்னர் பேசிய தினகரன், துரோகிகளிடம் இருந்து நாம் இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்கு கிடைத்த பொன்னான வாய்ப்பாகத்தான் ஆர்.கே நகர் இடைத்தேர்தல் நமக்கு அமைந்திருக்கிறது. இரட்டை இலை சின்னத்துக்கு எதிராகவே போட்டியிட்டு  இரட்டை இலை சின்னத்தை நம் பக்கம் மீட்டெடுக்கப் போகிறோம்.
அதேபோல தேர்தல் ஆணையம் கொடுத்துவிட்ட இந்த தீர்ப்பு ஒன்றும் இறுதியானது அல்ல. நீதிமன்றத்தை நாடி நியாயத்தை வெல்வோம். முதல் சுற்றில் வெற்றி பெறுவது முக்கியமல்ல. இறுதிச் சுற்றில் யார் வெற்றி பெறுகிறார் என்பதுதான் முக்கியம். மீண்டும் ஆர்.கே நகர் தேர்தலில் தொப்பி சின்னத்தில் போட்டியிடுவேன். இது தர்மத்துக்கும் துரோகத்துக்கும் நடக்கின்ற யுத்தம் என்று முடித்தார்.

 

ஆர்.கே நகர் சீசன் 2 துவங்கிவிட்டது....! இனி கந்துவட்டி பேச்சுக்கள் கரை ஒதுங்கிவிடும்.

https://www.vikatan.com/news/tamilnadu/108831-dinakaran-to-contest-in-rk-nagar-again.html

Link to comment
Share on other sites

’ஸ்டாலின் கேட்டார்.... ஒப்புக்கொண்டேன்!’ - திருமாவளவன் பளீச்

 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷை ஆதரிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

திருமா

 

 

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் தி.மு.க சார்பில் மருது கணேஷ் போட்டியிடுகிறார். மருதுகணேஷ் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்ட விவரத்தை தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். இந்நிலையில், தி.மு.க வேட்பாளர் மருது கணேஷுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளித்துள்ளது.

இதுதொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் மருது கணேஷை ஆதரிக்க வேண்டும் என்று தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் கோரிக்கை வைத்தார். அதை ஏற்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளருக்கு விடுதலை சிறுத்தைகள் ஆதரவு தருகிறது. மதசார்பற்றக் கட்சிகள் இந்தத் தேர்தலில் இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

மருது கணேஷ் கடந்த முறை இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோதும், தி.மு.க சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஆர்.கே.நகரில் தி.மு.க தவிர, நாம் தமிழர் கட்சி கலைக்கோட்டுதயத்தை வேட்பாளராக அறிவித்துள்ளது.

https://www.vikatan.com/news/tamilnadu/108881-rk-nagar-bypoll-viduthali-siruthaigal-supports-dmk.html

Link to comment
Share on other sites

“ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகிறது”ராஜேஷ் லக்கானி பேட்டி...

 
 

ஆர்.கே.நகர்

ர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்து ஏறக்குறைய ஒரு ஆண்டு முடிய உள்ளது. தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருக்கும் ஒருவர் இறந்துவிட்டால், ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி கடந்த ஏப்ரல் 12-ம் தேதி ஆர்.கே.நகர் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

 

தேர்தல் பிரசாரத்தின்போது, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வீடுகளில் வருமான வரிச் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு 89 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதற்கான ஆவணம் சிக்கியது. இதன் அடிப்படையில் ஆர்.கே.நகர் தேர்தலை ரத்துசெய்வதாக தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்தது. தேர்தல் நடத்தும் சூழல் வந்தபின் தேர்தல் நடத்துவதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

எம்.எல்.ஏ. இல்லாமல் முழுமையாக 300-க்கும் அதிகமான நாள்களை கடந்திருக்கிறது ஆர்.கே.நகர். இந்தச் சூழலில் டிசம்பர் 31-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதவிர அ.தி.மு.க-வின் பெயருக்கும், கட்சி சின்னத்துக்கும் அ.தி.மு.க-வின் தினகரன் அணி, ஓ.பி.எஸ்- அணி, தீபா  அணி ஆகியவை உரிமை கோரின.

பின்னர் ஓ.பி.எஸ் அணி எடப்பாடி அணியுடன் இணைந்துவிட்டது. அதுகுறித்து தேர்தல் ஆணையத்திலும் அவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பின்னர் முடிவு எடுப்பதை தேர்தல் ஆணையம் தள்ளிப்போட்டபடி இருந்தது. இந்தச் சூழலில் 23-ம் தேதி அன்று, இரட்டை இலைச் சின்னமும், அ.தி.மு.க என்ற பெயரையும், முதல்வர் எடப்பாடி அணியினர் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.இது ஒருபுறம் இருக்க உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.

ராஜேஷ் லக்கானி

"தேர்தல் நடத்தை விதிமுறைகள் எப்போது முதல் அமலுக்கு வரும்?"

"நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகிறது. தேர்தல் நடத்தை விதிகள் கடுமையாக அமல்படுத்தப்படும்."

"ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்களா?"

"ஆர்.கே.நகர் தொகுதியில் 45 ஆயிரம் பேரை நீக்கி இருக்கிறோம். இதுதவிர பெயர் சேர்க்கவும் மனுக்கள் வந்திருக்கின்றன. இதுகுறித்து சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியான கார்ப்பரேஷன் கமிஷனர் முடிவு எடுப்பார். அதன்பின்னர் இரண்டு நாள்களில் வாக்காளர் பட்டியல் வெளியாகும்."

"கடந்த முறை ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக வருமான வரித்துறை ஆவணம் கைப்பற்றி, தேர்தல் ஆணையத்துக்கு அளிப்பப்படதன் அடிப்படையில் நடவடிக்கை இருக்குமா?"

"வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரம்குறித்து ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியான, கார்ப்பரேஷன் கமிஷனர் போலீஸில் புகார் செய்திருக்கிறார். போலீஸில் விசாரணைசெய்து, இதில் என்ன முன்னேற்றம் இருக்கிறது என்று தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளிப்பார்கள்."

"ஆர்.கே.நகரில் இப்போது இடைத் தேர்தல் நடத்தும் சூழல் இருக்கிறதா?"


 

"தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் செய்வதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. தேர்தல் நடத்தச் சொல்லி நீதிமன்றத்தில் உத்தரவிட்டிருக்கின்றனர். அதன்படி  தலைமைத் தேர்தல் ஆணையத்தில் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது" என்றார்.

https://www.vikatan.com/news/coverstory/108753-rajesh-lakhani-explains-regarding-the-possibilities-of-election-in-rk-nagar.html

Link to comment
Share on other sites

ஆண்டுக்கொரு தேர்தலை சந்திக்கும் ஆர்.கே.நகர் தொகுதி

 

 
download%205

ஆர்.கே.நகர் வாக்காளர்கள், ஜெயலலிதா   -  கோப்புப் படம்

கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலிலிருந்து ஆண்டுக்கு ஒரு தேர்தலை ஆர்.கே.நகர் தொகுதி சந்தித்து வருகிறது. அது பற்றிய ஒரு விரிவான தகவலை பார்ப்போம்.

தமிழக சட்டமன்ற வரலாற்றில் ஒரு தொகுதி வாக்காளர்கள் 4 ஆண்டுகளில் நான்கு தேர்தலில் விதவிதமான வேட்பாளர்களை பார்த்தார்கள் என்றால் அது ஆர்.கே.நகர் தொகுதியாகத் தான் இருக்கும். 2014-ம் ஆண்டு தொடங்கிய தேர்தல் பிரச்சாரம் இன்று வரை நடந்துக் கொண்டுத்தான் இருக்கிறது.

ஆர்.கே.நகர் தொகுதியில் 2011-ம் ஆண்டு கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து அதிமுக மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. சென்னையில் பெரும்பாலான இடங்களை அதிமுக கூட்டணி கைப்பற்றியது. சென்னையின் கோட்டையாக விளங்கிய ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிவேல் வென்றார்.

கடந்த 2011 சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வரானார். சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தால், குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதால் கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி ஜெயலலிதாவின் எம்.எல்.ஏ. மற்றும் முதல்வர் பதவி பறிபோனது.

பெங்களூரு உயர்நீதிமன்றம் 2015, மே 11ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து ஜெயலலிதா அதே மாதம், 23ஆம் தேதி தமிழக முதல்வராக மீண்டும் பதவியேற்றார். ஜெயலலிதா எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்பதற்காக சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ. வெற்றிவேல் 2015, மே மாதம் 17ஆம் தேதி ராஜினாமா செய்தார். அதனால் ஆர்.கே.நகர் தொகுதியில் ஜுன் 27ஆம் தேதியே இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பின்னர், 2016ஆம் ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஜெயலலிதா போட்டியிட்டார். அந்த தேர்தலிலும் ஜெயலலிதா வெற்றி பெற்று முதல்வரானார். இந்நிலையில், ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு டிச.5ஆம் தேதி உயிரிழந்தார். இதனால் மீண்டும் ஆர்.கே.நகர் தொகுதி இடைதேர்தல் வரும் நிலைக்கு தள்ளப்பட்டது. ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆர்.கே.நகர் தொகுதி காலியானதை தொடர்ந்து கடந்த மே மாதம் இறுதிக்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் அதிமுக அணி இரண்டாக பிளவு பட்டதால் எடப்பாடி அணியில் தினகரன் தொப்பிச்சின்னத்தில் ஓரணியிலும், ஓபிஎஸ் அணியில் மதுசூதனன் இரட்டை விளக்கு சின்னத்திலும் நின்றனர். திமுக சார்பில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மருது கணேஷ் போட்டியிட்டார், தீபாவும் போட்டியிட்டார், தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா அதிக அளவில் இருந்ததாக புகார் எழுந்ததை அடுத்து இடைதேர்தல் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் ஆர்.கே.நகரில் 45 ஆயிரம் போலி வாக்காளர்கள் இருப்பதாக திமுக வழக்கு தொடர்ந்தது. போலி வாக்காளர்களை நீக்காமல் தேர்தல் நடத்தக்கூடாது என வழக்கு தொடரப்பட்டது. பின்னர் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து 45 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்கியதாக நீதிமன்றத்தில் அறிவித்ததை அடுத்து டிசம்பர் 31க்குள் தேர்தலை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் ஆர்.கே நகர் இடைதேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

டிச.21 அன்று நடக்கும் தேர்தலில் திமுக சார்பில் பழைய வேட்பாளரே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுகவில் இதுவரை வேட்பாளரை அறிவிக்கவில்லை. பாஜக போட்டியிடுவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளது. தேமுதிக ஏற்கனவே போட்டியிடவில்லை என்று அறிவித்து விட்டது. தினகரன் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2014 பாராளுமன்ற தேர்தல், 2015-ல் ஜெயலலிதா நிற்பதற்காக இடைதேர்தல், 2016-ல் சட்டப்பேரவை தேர்தல், 2017-ல் இடைதேர்தல் அது ரத்துசெய்யப்பட்ட நிலையில், தற்போது 2017 டிச-21 இடைதேர்தல் என குறுகிய காலத்தில் அதிக அளவில், ஆண்டுக்கொரு தேர்தலை சந்தித்த மக்கள் ஆர்.கே நகர் தொகுதி வாக்காளர்களாக மட்டும் தான் இருப்பார்கள்.

http://tamil.thehindu.com/tamilnadu/article20910379.ece?homepage=true

Link to comment
Share on other sites

gallerye_011735914_1905062.jpg

சென்னை:சென்னை, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், பணம் பட்டுவாடாவுக்கு, 'செக்' வைக்கும் விதமாக, அதிரடி கட்டுப்பாடு களை, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. 'பகலில் மட்டுமே பிரசாரம் செய்ய கட்சிகளுக்கு அனுமதி; காலை, 9:00 மணியிலிருந்து, மாலை, 5:00 மணி வரை மட்டுமே, வீடு வீடாக சென்று, ஓட்டு சேகரிக்க லாம்; இரவில் யாரும் செல்லக் கூடாது; தெருக்களில், துப்பாக்கி ஏந்திய வீரர்கள் வலம் வருவர்; எந்த கடையிலும், 'டோக்கன்' முறையில் பொருட்கள் விற்கக் கூடாது; மீறி விற்றால் கைது செய்யப்படுவர்' என்பது உட்பட, பல்வேறு கட்டுப்பாடுகளை, தேர்தல் கமிஷன் விதித்துள்ளது.

 

பண பட்டுவாடாவுக்கு, தேர்தல்கமிஷன், 'செக்!'

சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல், டிச., 21ல் நடக்கிறது. இந்த முறை, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடைபெறுவதை, எப்படியும் தடுத்து விட வேண்டும் என்ற முடிவில், தேர்தல் கமிஷன் உள்ளது. அதனால், கட்சிகளுக்கும், வேட்பாளர் களுக்கும், இதுவரை இல்லாத வகையில், கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
 

அதன் விபரம்:


* தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவோர், காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை மட்டுமே, வீடு வீடாக சென்று, ஓட்டு சேகரிக்க, அனுமதி வழங்கப்படும். மற்ற நேரங்களில், வீதிகளில் பிரசாரம் செய்யலாம்

* பிரசாரத்திற்கு செல்லும் வேட்பாளர்கள், தங்களுடன் எத்தனை நபர்களை அழைத்து செல்கிறோம் என்ற விபரத்தை, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவித்து, முறையாக அனுமதி பெற வேண்டும்

* தொகுதி வாக்காளர்களின் வாகனங்கள் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களுக்கு, அடையாள அட்டை வழங்கப்படும். பிற வாகனங்கள், தொகுதிக்குள் செல்ல, தேர்தல் நடத்தும் அலுவலரிடம், அனுமதி பெற வேண்டும்

* ஒரு வேட்பாளர், எத்தனை வாகனங்களுக்கு வேண்டுமானாலும், அனுமதி பெறலாம். அனுமதி பெறாமல், தேர்தல் பிரசாரத்திற்கு வரும் வாகனங்கள், பறிமுதல் செய்யப்படும்; சம்பந்தப்பட்டவர்கள் மீது, வழக்கு பதிவு செய்யப்படும்.பறிமுதல் செய்யப்பட்ட வாகனம், தேர்தல் முடிந்த பிறகே விடுவிக்கப்படும்.

பிரசாரத்திற்கு வரும் வாகனங்களை கண்காணிக்கும் பொறுப்பு, சோதனையிடும் பொறுப்பு, துணை ராணுவ வீரர்களிடம் ஒப்படைக்கப்படும்

* தொகுதி முழுவதும் உள்ள தெருக்களில், இரவிலும், பகலிலும், துப்பாக்கி ஏந்திய வீரர்கள் வலம் வருவர். அதற்காக, 10 கம்பெனி துணை ராணுவத்தினர் வந்துள்ளனர்; மேலும் வர உள்ளனர்

* வாகனங்களுக்கு அனுமதி பெற, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்படும்

* சென்னை மாவட்டம் முழுவதும், கடைகள் மற்றும் வர்த்தகநிறுவனங்களில், 'டோக்கன்' மூலமாக பொருட்கள் வழங்க, தடை விதிக்கப்படுகிறது. மீறி டோக்கனுக்கு, யாரேனும் பொருட்கள் வழங்கினால், அவர்கள் கைது செய்யப்படுவர்

* அரசியல் கட்சிகள், தெருக்களில் தற்காலிக, 'பூத்' அமைக்க, தடை விதிக்கப்படுகிறது. தெருக்களில், மேஜை, நாற்காலி போட்டு, யாரும் அமரக் கூடாது. வேட்பாளர்களுக்கு, ஒன்று அல்லது இரண்டு பணிமனை அமைக்க, அனுமதி வழங்கப்படும்

* அமைச்சர்கள் உட்பட முக்கிய நபர்கள் யாராக இருந்தாலும், அனுமதி பெறாத வாகனத்தில் வந்தால், வாகனம் பறிமுதல் செய்யப்படும்

* தொகுதிக்குள் வரும் வெளிநபர்கள், கண்காணிக்கப்படுவர்

* வாக்காளர்கள், எந்த சின்னத்திற்கு ஓட்டு அளித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் வசதி கொண்ட, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்

* ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், குறைந்தது ஒரு மத்திய அரசு ஊழியர் பணியில் இருப்பார்
* வாக்காளர்களின் வங்கி கணக்குகள் கண்காணிக்கப்படும்.இவ்வாறு அதிரடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
 

நட்சத்திர பேச்சாளர் பட்டியல்



'ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், பிரசாரம் செய்ய உள்ள, நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை, அரசியல் கட்சிகள், டிச., 4க்குள் சமர்ப்பிக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரசாரம் செய்யும்போது, விமானம் உள்ளிட்ட போக்குவரத்து செலவுகள், கட்சி வேட்பாளர் மற்றும் முகவர்கள் கணக்கில் சேராது. இந்த சலுகையைப் பெற, பிரசாரம் செய்யும்

 

தலைவர்களின் பட்டியலை,தேர்தல் கமிஷனிடம் அளிக்க வேண்டும்.

தேர்தல் செலவினத்தில் இருந்து, விலக்கு பெற வேண்டிய தலைவர்கள் பட்டியலை, தேர்தல் அறிவிப்பு வெளியானதிலிருந்து, ஏழு நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். எனவே, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில், தங்கள் கட்சி சார்பில், பிரசாரம் செய்யும் தலைவர்கள் மற்றும் நட்சத்திர பேச்சாளர்கள் பெயர் பட்டியலை, தேர்தல் கமிஷன் அல்லது தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரிக்கு,
டிச., 4க்குள் அளிக்க வேண்டும்.

இந்தப் பட்டியலில் உள்ளவர்களின், பயணச் செலவுக்கு மட்டும், விலக்கு அளிக்கப்படும். இது தவிர, மற்ற செலவினங்கள் அனைத்தும், வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும்.
அதேநேரம் வேட்பாளருக்கு, வேறு கட்சியின் நட்சத்திரத் தலைவர் பிரசாரம் செய்தால், அதில் விலக்கு கோர இயலாது என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
 

தி.மு.க., வேட்பாளர் மருதுகணேஷ்


சென்னை, ஆர்.கே.நகர் தி.மு.க., வேட்பாளராக, மருதுகணேஷ், மீண்டும் அறிவிக்கப்பட்டு உள்ளார்.ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டபோது, தி.மு.க., சார்பில், வழக்கறிஞர் மருதுகணேஷ் போட்டியிட்டார். ஓட்டுப் பதிவிற்கு முன், தேர்தல் நிறுத்தப்பட்டது. தற்போது, டிச., 21ல், தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, மீண்டும் மருதுகணேஷை வேட்பாளராக, தி.மு.க., நிறுத்தி உள்ளது. இதற்கான அறிவிப்பை, தி.மு.க., பொதுச்செயலர், அன்பழகன் வெளியிட்டார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலினை சந்தித்து, மருதுகணேஷ் வாழ்த்து பெற்றார்.அதன்பின், மருதுகணேஷ் கூறியதாவது:

ஏற்கனவே, இந்த தொகுதியில், தி.மு.க., வெற்றி பெறும் நிலையில், தேர்தல் நிறுத்தப்பட்டது. முன்பை விட, இந்த ஆட்சி மீது, மக்கள் கோபமாக உள்ளனர். அந்த கோபம், தி.மு.க.,விற்கு சாதகமாக மாறும். ஸ்டாலின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை, அதிக ஓட்டுகளை பெற்று தரும். கூட்டணி கட்சியினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

எனவே, அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். இந்த வெற்றி, வருங்காலத்தில்
ஸ்டாலின் தலைமையில், ஆட்சி அமைய முன்னோட்டமாக இருக்கும். ஆட்சியின் அவல நிலையை முன்வைத்து, பிரசாரம் செய்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1905062

Link to comment
Share on other sites

ஆர்.கே.நகர் அ.தி.மு.க. வேட்பாளர் யார் ? கட்சிக்குள் வெடிக்கும் பூகம்பம்... ! #RKNagarAtrocities

ணைந்த கரங்கள் மீண்டும் பிரியுமா என்ற எதிர்பார்ப்பை டன் கணக்கில் அறுவடை செய்து வைத்துள்ளது ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல். ஆளுங்கட்சியின் அணிகளுக்குள் நடக்கும் கண்ணாமூச்சு ஆட்டம், டி.டி.வி. தினகரனின்  'ஸ்லீப்பர் செல்' வார்த்தைக்கு உயிரூட்டிக் கொண்டிருக்கிறது.

ஆர்.கே.நகர்

 

வட சென்னைக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளை, 1973 ஆம் ஆண்டு மறுசீரமைப்பு செய்தபோதுதான் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) தொகுதி உருவானது. அதற்கு முன் இந்தத் தொகுதி மக்கள், மூன்று தொகுதிகளுக்குள் பிரித்து, மடக்கி வைக்கப்பட்டிருந்தார்கள்.

 அது 1977- ஆம் ஆண்டு தேர்தல். எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க., கருணாநிதி தலைமையிலான தி.மு.க., மூப்பனார் தலைமையிலான காங்கிரஸ் என மூன்று கட்சிகளும் தனித்தனியாக களத்தில் நின்றன.  அ.தி.மு.க வேட்பாளரான நடிகர் ஐசரி வேலன், தி.மு.க வேட்பாளர் ஆர்.டி.சீதாபதியைவிட 1,488 வாக்குகள் அதிகம்பெற்று வெற்றி பெற்றார்.  ஆர்.கே.நகர் சந்தித்த முதல் தேர்தல், கூட்டணி வைக்காமல் நடந்த தேர்தலாகும்.

எடப்பாடி அண்ட் கோ

 அடுத்ததாக 1980- ஆம்  ஆண்டு தேர்தல். கூடவே, 'கூட்டணி' முறையும் வந்தது. தி.மு.க-வுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தது.  அ.தி.மு.க-வோ, சி.பி.ஐ, சி.பி.ஐ (எம்) ஆகிய கட்சிகளோடு கூட்டணி வைத்தது. தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜசேகரன் 7, 188 வாக்குகள் அதிகம்பெற்று வெற்றிபெற்றார். அ.தி.மு.க-வின் ஐசரிவேலன் தோற்றார்.

அடுத்ததாக 1984- ஆம் ஆண்டு தேர்தல். அ.தி.மு.க - காங்கிரஸ் ஒரு பக்கமும், தி.மு.க. - கம்யூனிஸ்ட் கட்சிகள்  இன்னொரு பக்கமுமாக கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன.  அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வேணுகோபால், தி.மு.க வேட்பாளர் எஸ்.பி சற்குணத்தை  3,851 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

ஆர்.கே.நகர்

அடுத்ததாக, 1989- ஆம்  ஆண்டு  தேர்தல். அ.தி.மு.க-வின் நிறுவனர் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு வந்த முதல் தேர்தல் அது. அ.தி.மு.க. இரண்டாகப் பிரிந்து  ஜானகி அணி, ஜெயலலிதா அணி  என்று  தனித்தனியாகத் தேர்தலைச் சந்தித்தன. இதில்,  'ஜா' அணிக்கு இரட்டைப்புறா சின்னமும், 'ஜெ' அணிக்கு சேவல் சின்னமும் கொடுக்கப்பட்டிருந்தது. முந்தைய தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு, ஆதரவு தந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்தத் தேர்தலில், ஆதரவை இடம் மாற்றின. சி.பி.ஐ. (எம்) கட்சி தி.மு.க.வுக்கும், சி.பி.ஐ. கட்சி ஜெயலலிதாவின் தலைமையிலான அ.தி.மு.க-வுக்குமாக ஆதரவு கொடுத்தன.  முதல்முறையாக தேர்தலைச் சந்தித்த நடிகர் திலகம் சிவாஜிகணேசனின்  தமிழக முன்னேற்ற முன்னணி,  'ஜா' அணிக்கு ஆதரவு கொடுத்தது.  அ.தி.மு.க-வுடனும், தி.மு.க-வுடனும் மாறி, மாறி கூட்டணியில் கைகோத்துவந்த காங்கிரஸ் கட்சி, இந்தத் தேர்தலில் தனியாக நின்றது.

தி.மு.க. வேட்பாளரான எஸ்.பி.சற்குணம், 24,256 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க-வின்  'ஜெ' அணி வேட்பாளர் மதுசூதனனை தோற்கடித்தார். மதுசூதனன் பெற்ற மொத்த வாக்குகள்  29,960. நடிகர் திலகத்தின் அரசியல் வாழ்க்கையை முடிவு செய்ததும், இதே தேர்தல்தான்... 

அடுத்ததாக வந்த, 1991- ஆம் ஆண்டு  தேர்தல்தான், தமிழக அரசியலில் மாற்றத்தை உண்டு பண்ணிய தேர்தல் என்று கூட சொல்லலாம். தி.மு.க., ஜனதா தளம், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஓர் அணியாக நின்றதும், பா.ம.க. முதன்முதலாக தேர்தலில் போட்டியிட்டதும் இந்தத் தேர்தலில்தான். பிரிந்திருந்த 'ஜா'வும், 'ஜெ'வும் ஓரணியாக நின்று 'இரட்டை இலை' சின்னத்துடன் எம்.ஜி.ஆருக்குப் பின் களத்துக்கு வந்ததும் இந்தத் தேர்தலின் போதுதான். ராஜீவ்காந்தி படுகொலையில் தி.மு.க. மீது சந்தேகப் பார்வை விழுந்ததும் இதே காலகட்டத்தில்தான்.  இந்தத் தேர்தலில், இரட்டை இலை வேட்பாளரான அ.தி.மு.க-வின் மதுசூதனன், 24,952 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

ஆர்.கே.நகர்

அடுத்ததாக, 1996-  ஆம் ஆண்டு  தேர்தல். ஜெ-வுக்கு எதிராகக் குரல் கொடுத்த ரஜினிகாந்தின் 'வாய்ஸ்' எடுபட்டது. காங்கிரசிலிருந்து வெளியேறி ஜி.கே. மூப்பனார் உருவாக்கியிருந்த, 'தமிழ் மாநில காங்கிரஸ்' கட்சி, தி.மு.க-விலிருந்து வெளியேறி வைகோ உருவாக்கியிருந்த ம.தி.மு.க. என்று பல கட்சிகளும் இந்தத் தேர்தலில் போட்டியிட்டன. 1996-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலை வரலாற்று சிறப்பு மிக்க தேர்தலாகவும் அது மாற்றியது.  தி.மு.க வேட்பாளரான எஸ்.பி.சற்குணம், 43,081 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.எம்.டி.ரவீந்திரனைத் தோற்கடித்தார். 

 அடுத்ததாக, 2001-  ஆம் ஆண்டு  தேர்தல். த.மா.கா, காங்கிரஸ், பா.ம.க, கம்யூனிஸ்ட்டுகள் என தமிழகத்தின் அத்தனை பிரதான கட்சிகளும்  அ. தி.மு.க. தலைமையை ஏற்று கூட்டணிக்குள் வந்த தேர்தல் இதுதான். பி.ஜே.பி. மற்றும் சிறு சிறு கட்சிகள் துணையுடன் தி.மு.க. அமைத்த  கூட்டணி, கடும் வீழ்ச்சியை  சந்தித்தது. அ.தி.மு.க. வேட்பாளர் பி.கே.சேகர்பாபு, தி.மு.க. வேட்பாளர் சற்குணபாண்டியனை  27,332 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

அடுத்ததாக, 2006-  ஆம் ஆண்டு  தேர்தல். தி.மு.க, காங்கிரஸ், பா.ம.க, கம்யூனிஸ்ட் கட்சிகள்  கூட்டணி வைத்தன. ம.தி.மு.க. உள்ளிட்ட சில கட்சிகளுடன் அ.தி.மு.க. கூட்டு வைத்தது. ஆட்சியை தி.மு.க. கைப்பற்றியது. ஆர்.கே.நகர் தொகுதியோ அ.தி.மு.க-வுக்குப் போனது. தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரசின் மனோகர் என்கிற ராயபுரம் மனோ, அ.தி.மு.க. வேட்பாளரான, சேகர்பாபுவிடம் 18,063 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.

அடுத்ததாக, 2011- ஆம் ஆண்டுதேர்தல். 'கடவுளுடன் மட்டுமே கூட்டணி' என்று சொன்ன விஜயகாந்தை கார்டனுக்கு வரவழைத்து ஜெயலலிதா கூட்டணி பேசி முடித்த தேர்தல் இது.  தே.மு.தி.க. தவிர, கம்யூனிஸ்ட் கட்சிகளும் அ.தி.மு.க. கூட்டணிக்குள் அப்போது வந்தன.  காங்கிரஸ்,பா.ம.க, வி.சி.க. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்ட தி.மு.க. தோல்வியைத் தழுவியது. அ.தி.மு.க. வேட்பாளரான வெற்றிவேல், தி.மு.க. வேட்பாளரான சேகர் பாபுவை, 31,255 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.  

அடுத்ததாக, 2015- ம் ஆண்டு வந்ததோ, இடைத்தேர்தல். முதல்வராக இருந்த ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கில், பெங்களூரு தனி நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பால் தனது  பதவியை இழந்தார். மேல்முறையீட்டில்  ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதும் மீண்டும் தமிழக முதல்வராக தேர்தலில் நின்று ஜெயிக்கவேண்டியத் தேவை ஏற்பட்டது.  அதற்கு வசதியாக, ஆர்.கே.நகர்த் தொகுதி எம்.எல்.ஏ. வெற்றிவேல் தன் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து செயற்கையான இடைத்தேர்தல் ஆர்.கே. நகர்த் தொகுதியில் உருவாக்கப்பட்டது. தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன், ஆட்சியதிகாரத்தில் இருந்த ஜெயலலிதாவிடம், 1,50,722 வாக்குகள் வித்தியாசத்தில் இமாலய  தோல்வியடைந்தார். ஆர்.கே.நகர்த் தொகுதியில் இப்படி 83 விழுக்காடு வாக்கு வித்தியாசத்தில் வேறு யாராவது இனி ஜெயிக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான்.

ஆர்.கே.நகர்

 அடுத்ததாக, 2016- ஆம் ஆண்டு  பொதுத்தேர்தல் வந்தது. இதற்குப்பின் நடந்தது அத்தனையும் தமிழகத்துக்கு சோதனை காலமாகவே அமைந்து விட்டது.

தி.மு.க - காங்கிரஸ் ஓரணி, பா.ம.க. தனி அணி, ம.தி.மு.க., வி.சி.க, கம்யூனிஸ்ட் கட்சிகள், தே.மு.தி.க ஆகிய கட்சிகள் இணைந்து உருவாக்கிய, 'மக்கள் நலக் கூட்டணி' ஓரணி என்று களத்தில் நிற்க, ஆளுங்கட்சியாக இருந்த அ.தி.மு.க சிறுசிறு கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக்கொண்டு போட்டியிட்டது. இதில், தி.மு.க. வேட்பாளர் சிம்லா முத்துச் சோழனைவிட 39,545 வாக்குகள் கூடுதலாகப் பெற்று ஜெயலலிதா வெற்றி பெற்றார். இடைத்தேர்தல் போல 83 விழுக்காடு என்றில்லாமல் 22.73 விழுக்காடு வித்தியாசத்தில் மட்டுமே ஜெயலலிதாவால், வெற்றிபெற முடிந்தது.

 தேர்தலில் வெற்றி பெற்ற ஓரிரு மாதங்களிலேயே முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 2016, செப்டம்பர் 22-ஆம் தேதி, சென்னை அப்போலோ தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 75 நாட்களாக தொடர் சிகிச்சை பெற்றுவந்தவர் டிசம்பர், 5 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்துபோனதாக அறிவிக்கப்பட்டது. புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பெயரை கட்சி தேர்வு செய்தது ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார். அதன்பின்னர் நடந்த அரசியல் மாற்றங்களில், ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைத்தண்டனை பெற்றார், தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவிஏற்றார். இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. இப்படி அ.தி.மு.க-வில் நிறைய அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன.

ஜெயலலிதா இறப்பால் காலியான ஆர்.கே.நகர்த் தொகுதிக்கு ஏப்ரல் 2017-ல் இடைத்தேர்தல் என்று தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. ஓ.பி.எஸ். அணியில் 'இரட்டை மின் விளக்கு' சின்னத்துடன் மதுசூதனன் போட்டியிட்டார். தி.மு.க. வேட்பாளராக வழக்கறிஞர் மருதுகணேஷ்  நிறுத்தப்பட்டார். சசிகலா தரப்பு அணியில் டி.டி.வி தினகரன் தொப்பி சின்னத்துடன் வேட்பாளராக களம் இறங்கினார். பி.ஜே.பி சார்பில் இசையமைப்பாளர் கங்கை அமரன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். 

இன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல், அத்தனை மந்திரிகளும் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக 'தொப்பி' சின்னத்துக்கு வாக்கு கேட்டு வீதிகளில் வலம் வந்தனர்.  தொகுதியில் பணப் பட்டுவாடா நடந்ததாக எழுந்த புகாரில் ரூ.89 கோடி பணப்பட்டுவாடா நடந்ததற்கான ஆதாரங்கள் சிக்கின. இதையடுத்து தேர்தல் ஆணையத்தால் இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டது.  

கால ஓட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா அணியிலிருந்து விலகி தனி அணி கண்டார். இதையடுத்து எடப்பாடி தலைமையிலான அணியினருடன் பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது. ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ் அணிகள் ஒன்றிணைந்தன. முடக்கப்பட்டிருந்த "இரட்டை இலை சின்னமும், கட்சிக் கொடியும் எடப்பாடி-ஓ.பி.எஸ். தலைமையிலான அணிக்கே சொந்தம்" என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. கூடவே, ஆர்.கே.நகர்த் தொகுதிக்கு 2017, டிசம்பர் 21-ஆம் தேதியன்று இடைத்தேர்தல் என்றும் அறிவித்தது.  இந்நிலையில், 'அணிகள் இணைந்தாலும் இன்னும் மனங்கள் இணையவில்லை' என்று ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த மைத்ரேயன் எம்.பி. ட்வீட் செய்தார். அது உண்மைதானோ என்கிற கேள்வி கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது. 'தொகுதியின் வேட்பாளர் மதுசூதனன்தானே?' என்று கேட்டு வைக்கும் சந்தேக மனநிலை வலுவாகிக் கொண்டிருக்கிறது. ஓ.பி.எஸ். அணிக்கு முதல் ஆளாக வந்தவரும், கட்சிக்கு அவைத் தலைவராக இருப்பவருமான மதுசூதனனுக்கே 'சீட்'  மறுப்பு என்றால்... இன்னமும் இவர்கள் முழுமையாக ஒட்டவில்லையா? என்ற கேள்வி வலுப் பெறுகிறது. இன்னும் தாமதப்படுத்தி அ.தி.மு.க. வேட்பாளர் இவர்தான் என்று மதுசூதனன் பெயரை அறிவிப்பதும் ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு பலவீனம்தான். குடும்ப சண்டையை எதிரிக்கு காட்சிப்படுத்துவது போல்தான், இதுவும். இந்த பலவீனங்கள் எதிரணி வேட்பாளரான (தி.மு.க) மருதுகணேஷின் வெற்றிக்கு சிவப்புக் கம்பளம் விரித்துக் கொடுத்திருக்கிறது. 

சென்ற இடைத் தேர்தலுக்கும், இந்த இடைத் தேர்தலுக்கும் இருந்த இடைவெளியில் தொகுதியை சீரமைப்பு செய்திருக்கலாம்.  யாரும் எதுவும் செய்யவில்லை. ஆனால் மழை செய்யப் போகிறது. நவம்பர்-டிசம்பர் மாதங்களில் பெய்யக் கூடிய மழை கருணையே இல்லாமல் கடமையைச் செய்தால், வாக்குக் கேட்டுப் போவோரின் நிலைமை பரிதாபம்தான். 

வடசென்னை மக்களின் கோபத்தில் நியாயமும், வீரியமும் அதிகம் என்பதைக் காட்ட அப்படியொரு வாய்ப்பு அமையாதவரை வேட்பாளர்கள் கொடுத்து வைத்தவர்கள்தான்!

https://www.vikatan.com/news/coverstory/108941-who-is-the-admk-candidate-at-rk-nagar.html

Link to comment
Share on other sites

ஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளர் அறிவிப்பு தள்ளிவைப்பு: முடிவு எட்டப்படாத உயர்மட்டக்குழு கூட்டம்

 

 
download%201

மதுசூதனன், அதிமுக கூட்டம்   -  கோப்புப் படம்

ஆர்.கே.நகரில் அதிமுக வேட்பாளர் யார் என்பது குறித்து முடிவெடுக்காமல் கூட்டம் முடிவடைந்தது. இரண்டு நாள் விருப்ப மனு பெற்ற பிறகே வேட்பாளர் அறிவிப்பு என்று செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடை தேர்தல் வரும் டிச.21 அன்று நடக்க உள்ளது. இதற்கான வேட்பாளர் தேர்வை அனைத்து கட்சிகளும் முடிவு செய்து வருகின்றன. திமுக சார்பில் ஏற்கனவே போட்டியிட்ட மருது கணேஷையே வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். திமுகவுக்கு காங்கிரஸ், முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளித்துள்ளது. சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை திமுக கேட்டுள்ளது.

தினகரன் தரப்பில் தானே நிற்கப்போவதாக அவர் அறிவித்துள்ளார். சீமான் தனது கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். பாஜக இதுவரை தன் நிலைபாட்டை அறிவிக்கவில்லை. இந்நிலை அதிமுகவில் வித்தியாசமான ஒரு சூழ்நிலை நிலவுகிறது.

கடந்த முறை இடைதேர்தல் தள்ளி வைப்பதற்கு முன் அதிமுக அணி ஓபிஎஸ் அணி, எடப்பாடி அணி என இரண்டாக பிரிந்திருந்தது. எடப்பாடி அணி சார்பாக டிடிவி தினகரன் போட்டியிட்டார். ஓபிஎஸ் அணி சார்பாக மதுசூதனன் போட்டியிட்டார். ஆனால் தேர்தல் ரத்துச் செய்யப்பட்டப்பிறகு அணிகளில் மாற்றம் ஏற்பட்டது.

தினகரன் ஓரங்கட்டப்பட்டார், ஓபிஎஸ் அணி எடப்பாடி அணியுடன் இணைந்தது. அதே போல் இரட்டை இலை சின்னத்தை பெறுவதிலும் போட்டி ஏற்பட்டது. இறுதியில் ஓபிஎஸ், எடப்பாடி அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தது.

இந்நிலையில் மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுகவில் ஓபிஎஸ் அணிக்குள்ளேயே யார் வேட்பாளராக போட்டியிடுவது என்ற போட்டி ஏற்பட்டது. கே.பி.முனுசாமி தனக்கு அங்கீகாரம் வேண்டும் என்று கேட்டு வருவதாகவும், ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வெல்வதன் மூலம் அமைச்சராகும் வாய்ப்பு உள்ளதால் கே.பி.முனுசாமி தனது விருப்பத்தை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தேர்தல் தேதி அறிவித்த உடனே கட்சி தனக்கு வாய்ப்பு கொடுத்தால் மீண்டும் போட்டியிட தயார் என்று மதுசூதனன் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் போட்டியிடுவதற்கு கட்சியில் அமைச்சர்கள் சிலரே எதிர்ப்புத்தெரிவிப்பதாக அதிமுக வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

வேட்பாளரை தேர்வு செய்ய ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் இன்று ஆட்சிமன்ற குழுக்கூட்டம் நடந்தது. அதில் மதுசூதனன் மீண்டும் தேர்வு செய்து முடிவெடுத்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அதிமுகவுக்குள் மதுசூதனனை தேர்வு செய்வதில் உள்ள எதிர்ப்புக் காரணமாக அவர் பெயரை அறிவிக்காமல் விருப்பமனுவை பெற்று பரிசீலித்து முடிவெடுப்பது என்று முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் அதிமுக வேட்பாளர் தேர்வுக்கு இன்றும் நாளையும் விருப்பமனு பெறப்படும். வரும் 29-ம் தேதி ஆட்சிமன்றக்குழு கூடி விருப்ப மனுக்களை ஆய்வு செய்து வேட்பாளரை அறிவிக்கும் என்று தெரிவித்தார். இதன் மூலம் வேட்பாளர் தேர்வில் முடிவெடுக்க முடியாத நிலை அதிமுகவில் உருவாகியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/article20965867.ece

Link to comment
Share on other sites

 

அ.தி.மு.கவா, தி.மு.கவா? - ஆர்.கே நகர் யாருக்கு ?

தேர்தல் ஆணையம் மீண்டும் ஆர்.கே நகரில் 21 டிசம்பர் தேர்தல் என அறிவித்தது. விரைவில் தேர்தல் காலமாக மாற இருக்கும் ஆர்.கே நகர் யாருக்கு ? இம்முறை தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் ? ஆர்.கே நகர் மக்களின் குரல்களை கேட்போம் இந்த வீடியோவில்.

Link to comment
Share on other sites

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தமாகா போட்டியிடாது: வாசன் அறிவிப்பு

 
newPic7387jpg1682408g

ஜி.கே.வாசன் | கோப்புப் படம்.   -  கோப்புப் படம்.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் த.மா.கா. போட்டியிடவில்லை என்றும் தேர்தல் களத்தில் ஒதுங்கி இருப்பதாகவும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு காலியான ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த ஏப்ரல் 12-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. பணப்பட்டுவாடா உள்ளிட்ட முறைகேடுகள் காரணமாக வாக்குப் பதிவுக்கு 2 நாள்கள் முன்பாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் வரும் டிசம்பர் 21-ம் தேதி ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வேட்பாளர் தேர்வை அனைத்து கட்சிகளும் முடிவு செய்து வருகின்றன. திமுக சார்பில் ஏற்கனவே போட்டியிட்ட மருது கணேஷையே வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். திமுகவுக்கு காங்கிரஸ், முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தேமுதிகவும் தேர்தலில் போட்டியிடவில்லை, யாருக்கும் ஆதரவு இல்லை எனத் தெரிவித்துள்ளது.

தினகரன் தரப்பில் தானே நிற்கப்போவதாக அவர் அறிவித்துள்ளார். சீமான் தனது கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். பாஜக இதுவரை தன் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. அதிமுக தரப்பில் இன்னும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் த.மா.கா. போட்டியிடவில்லை என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இதுகுறித்து புதன்கிழமை அன்று அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ''தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைந்த பிறகு அவர் ஏற்கெனவே சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்ட சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது.

பணப்பட்டுவாடா புகாரின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் கடந்த ஏப்ரல் 12-ம் தேதியன்று நடைபெற இருந்த இடைத்தேர்தலை ரத்து செய்தது. தற்சமயம் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரிலேயே இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த இடைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடவில்லை என்பதோடு தேர்தல் களத்தில் ஒதுங்கி நிற்பது என்ற முடிவை எடுத்திருக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.

முன்னர் நடைபெறுவதாக இருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணியும், எடப்பாடி அணியும் தனித்தனியாகப் போட்டியிட்டன. அதில் ஓபிஎஸ் அணிக்கு ஜி.கே.வாசன் ஆதரவு தெரிவித்தது நினைவுகூரத்தக்கது.

http://tamil.thehindu.com/tamilnadu/article21049476.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஆர்.கே.நகரில் தினகரன் போட்டி: அணி நிர்வாகிகள் அறிவிப்பு

 

download%2010

டிடிவி தினகரன், ஆர்.கே.நகர்.   -  கோப்புப்படம்

download%2011

தினகரன், வேட்பாளர் அறிவிப்பு கூட்டம்   -  சிறப்பு ஏற்பாடு

 

 

 

ஆர்.கே.நகரில் டிடிவி.தினகரன் போட்டியிட உள்ளதாக அதிகாரபூர்வமாக அவரது அணி நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

ஆர்.கே.நகரில் ஜெயலலிதா மறைவுக்கு பின் கடந்த ஏப்ரல் மாதம் இடைதேர்தல் அறிவிக்கப்பட்டு பிரச்சாரமும் நடந்து வந்தது. ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி, திமுக, பாஜக, சிபிஎம், நாம் தமிழர், ஜெ.தீபா என பலமுனை போட்டி இருந்தது.

திமுக சார்பில் மருது கணேஷும், எடப்பாடி அணியில் டிடிவி தினகரனும், ஓபிஎஸ் அணியில் மதுசூதனனும், பாஜக சார்பில் கங்கை அமரனும் போட்டியிட்டனர். ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியினர் தனித்தனி அணியாக போட்டியிட்டனர். இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால் தினகரன் தொப்பி சின்னத்திலும், மதுசூதனன் இரட்டை விளக்கு சின்னத்திலும் நின்றனர்.

பின்னர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் தேர்தல் ரத்துச்செய்யப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் தினகரன் ஒதுக்கப்பட்டு ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்து இரட்டை இலையையும் பெற்றுவிட்டனர். ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டு விட்டது.

இதனால் தனித்து விடப்பட்ட தினகரன் தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் தான் கண்டிப்பாக தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும், தனக்கும் திமுகவுக்கும்தான் போட்டி என்று தெரிவித்திருந்த தினகரன் தொப்பி சின்னத்தில் மீண்டும் போட்டியிடுவேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்று சசிகலாவை சந்தித்த பின்னர் வேட்பாளரை எங்கள் நிர்வாகிகள் அறிவிப்பார்கள் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று மாலை அடையாறு டிடிவி தினகரன் இல்லம் முன்பு கூடிய டிடிவி அணி நிர்வாகிகள் டிடிவி தினகரன் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட உள்ளார் என்று தெரிவித்தனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/article21091046.ece?homepage=true

Link to comment
Share on other sites

'ஸ்லீப்பர் செல்' வியூகம்: தினகரன் கலக்கம்
 
 
 

தினகரனின், 'ஸ்லீப்பர் செல்' ஆட்களே, அவரை ஓய்க்க வியூகம் அமைத்துள்ளனர். ஆர்.கே.நகர் தேர்தலில், அவரை வேட்பாளராக நிற்க வைத்து, வேரறுக்க முடிவு செய்துஉள்ளனர்.

 

'ஸ்லீப்பர் ,' வியூகம்,தினகரன்,கலக்கம்

கடந்த முறை கையாண்ட, 4,000 ரூபாய் பட்டு வாடா விவகாரத்தை வெளியிட்டு, அவருக்கு பாடம் புகட்டவும் திட்டமிட்டு உள்ளனர். சென்னை, ஆர்.கே. நகர் சட்டசபை தொகுதிக்கு, மார்ச் மாதம், ஏற்கனவே தேர்தல் அறிவிக்கப் பட்டது. அப்போது, சசிகலா அணி சார்பில், சசிகலா அக்கா மகன், தினகரன் களம் இறங்கினார்.

அவருக்காக, முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், வீதி வீதியாக சென்று, ஓட்டு சேகரித்தனர். அவர் தரப்பில், வாக்காளர் களுக்கு, 4,000 ரூபாய் பணம் கொடுக்கப்பட்ட தாக, புகார் எழுந்தது.அதைத் தொடர்ந்து, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

சோதனையில், ஆர்.கே. நகர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்கான, ஆவணங்கள் சிக்கின. அதன் அடிப்படையில், தேர்தல் கமிஷன், அந்த தேர்தலை ரத்து செய்தது.

இந்நிலையில், மீண்டும், ஆர்.கே.நகர் தொகுதிக்கு, தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது.தனித்து விடப்பட்ட தினகரன், இம்முறை, அ.தி.மு.க.,வை எதிர்த்து போட்டியிடலாமா அல்லது தன் ஆதர வாளர்களில் யாரையாவது நிறுத்தலாமா என, ஆலோசித்து வந்தார். ஆனால், அவரது ஆதரவாளர்கள், 'நீங்களே களம் இறங்குங்கள். அப்போது தான், அ.தி.மு.க., வெற்றியை தடுக்க முடியும். ஓரளவுக்காவது ஓட்டுகள் வாங்க முடியும்.

'வேறு யாரை நிறுத்தினாலும், 'டிபாசிட்' கூட தேறாமல், அசிங்கமாகி விடும்' என எச்சரித்தனர். அதையடுத்து, தினகரன், சுயேச்சை வேட்பாளராக, களம் இறங்குகிறார்.இதையடுத்து, 'அ.தி.மு.க., தொண்டர்கள் அனைவரும், என் பின்னால் உள்ளனர்' என, 'உதார்' விடும் தினகரனை, வேட்பாள ராக நிற்க வைத்து வேரறுக்க, அவர் அடிக்கடி கூறும்,'ஸ்லீப்பர் செல்' ஆட்கள் திட்டமிட்டுள்ளனர்.

இது குறித்து, தினகரன் ஆதரவு வட்டாரம் கூறியதாவது:

அ.தி.மு.க.,வில் எல்லா மட்டத்திலும், 'ஸ்லீப்பர் செல்' எனப்படும் ரகசிய ஆதரவு பிரிவு, தனக்கு இருப்பதாக, தினகரன் அடிக்கடி கூறி வருகிறார்.

 

அப்படியொரு ஆதரவு படை இருந்திருந்தால், இந் நேரம், அவருக்கு இந்த கதி ஏற்பட்டு இருக்காது. அவரது சமூகத்தை சேர்ந்த, மந்திரிகளே, அவருக்கு எதிராக திரும்பி நிற்கின்றனர்.அவர், யாரை மனதில் வைத்து, ஸ்லீப்பர் செல்லாக கருதினாரோ, அவர்களே, இந்த தேர்தலில், அவரை தோற்கடிக்க, வியூகம் வகுத்துள்ளனர்.

கடந்த முறை, இங்கு அவர் போட்டியிட்டபோது, அந்த ஸ்லீப்பர் செல் ஆட்கள் தான், பணப் பட்டுவாடாவை கவனித்தனர். அவர்களுக்கு, வீடு வீடாக, ஓட்டுக்கு, 4,000 ரூபாய் கொடுத்தது உள்ளிட்ட எல்லா ரகசியமும் தெரியும். அது தொடர்பான ஆதாரங்களை வெளியிட்டு, தினகரனை ஓய்க்க காத்திருக்கின்றனர். இவ்வாறு அந்த வட்டாரம் கூறியது.
- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1908036

Link to comment
Share on other sites

வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 4 நாட்களே அவகாசம்: ஆர்.கே.நகரில் போட்டியிட கங்கை அமரன் மறுப்பு - புதிய வேட்பாளரை தேடும் பாஜக

 

 
30CHRGNGANGAIAMARAN

ஆர்.கே.நகரில் கடந்த ஏப்ரலில் இடைத்தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டபோது, தொகுதி முழுவதும் சுற்றி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக வேட்பாளர் கங்கை அமரன். உடன் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.   -  (கோப்புப் படம்)

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட கங்கை அமரன் மறுத்துவிட்டதால் வேறு வேட்பாளரைத் தேடும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அப்போது, இசையமைப்பாளர், இயக்குநர், பாடலாசிரியரான கங்கை அமரன், பாஜக சார்பில் போட்டியிட்டார். ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆனால், வாக்குப்பதிவுக்கு 2 நாட்கள் முன்பாக தேர்தல் ரத்து செய்யப் பட்டது.

இந்நிலையில், ஆர்.கே.நகரில் வரும் டிசம்பர் 21-ம் தேதி மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற் கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. திமுக சார்பில் ஏற்கெனவே போட்டியிட்ட என்.மருதுகணேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். டிடிவி தினகரன், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா ஆகியோர் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளனர். அதிமுக வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட இருக்கிறார்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் டிசம்பர் 4-ம் தேதியுடன் முடிகிறது. அதற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், வேட்பாளரை அறிவிக்க முடியாமல் பாஜக திணறி வருகிறது.

ஏற்கெனவே போட்டியிட்ட கங்கை அமரனை மீண்டும் நிறுத்த பாஜக திட்டமிட்டிருந்தது. ஆனால், தேர்தலில் போட்டியிட அவர் மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. தனது செல்போனையும் அவர் சுவிட்ச்ஆப் செய்துள்ளார். இதனால், பாஜக தலைவர்களால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

கங்கை அமரனை தொடர்பு கொள்ள முடியாததால், அவரது மகனும், நடிகருமான பிரேம்ஜி அமரனிடம் கேட்டபோது, ‘‘அப்பா சொந்த வேலை காரணமாக வெளியூரில் இருக்கிறார். 2 வாரங்களுக்குப் பிறகே சென்னை திரும்புவார்’’ என்றார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் சில நாட்களுக்கு முன்பு தேர்தல் பணிக்குழு கூட்டம் நடந்தது. ‘‘இப்போதைய சூழ்நிலையில், இடைத்தேர்தலை புறக்கணிப்பதுதான் நல்லது’’ என்று அந்தக் கூட்டத்தில் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்த வேறு சில நிர்வாகிகள், ‘‘மத்தியில் பாஜக ஆட்சியில் இருக்கும்போது என்ன காரணம் சொல்லி தேர்தலை புறக்கணிக்க முடியும்? ஏற்கெனவே, அதிமுகவை பின்னணியில் இருந்து பாஜக இயக்குவதாக பெயர் உள்ளது. இந்த நிலையில், தேர்தலையும் புறக்கணிப்பது நல்லது அல்ல. அவ்வாறு செய்தால், அதிமுக மீதான அவப்பெயர், அதிருப்தி ஆகியவை பாஜக மீதும் விழும். எனவே, ஆர்.கே.நகரில் போட்டியிட வேண்டும்’’ என்று அவர் கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பாஜக தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘தேர்தல் பணிக் குழு கூட்டத்தில் இருவிதமான கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. ஆனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கட்டாயம் போட்டியிட வேண்டும் என்பதில் கட்சி மேலிடம் உறுதியாக உள்ளது. உடல்நிலை சரியில்லை என்பதால் கங்கை அமரன் போட்டியிட மறுத்துவிட்டார். எனவே, வேறு வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்’’ என்றார்.

கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை எதிர்த்து பாஜக வேட்பாளராக எம்.என்.ராஜா போட்டியிட்டார். இவர், முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்தின் மருமகன். இவர் உட்பட 3 பேர் தற்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், இந்த 3 பேர் பட்டியலை கட்சி மேலிடத்துக்கு தமிழிசை அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆர்.கே.நகரில் போட்டியிட தமிழிசையும் விருப்பம் தெரிவித்திருக்கிறார். ஆனால், பாஜகவுக்கு அடித்தளம் இல்லாத ஆர்.கே.நகரில் மாநிலத் தலைவர் போட்டியிட்டு சொற்ப வாக்குகள் பெற்றால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் என்று கூறி மேலிடம் மறுத்துவிட்டதாக பாஜக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article21190925.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் மதுசூதனன்! தலைமைக்கழகம் அறிவிப்பு

Link to comment
Share on other sites

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு

ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு அளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு
 
சென்னை:

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் அடுத்த மாதம் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருதுகணேஷ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் போட்டியிடுகிறார். இதேபோல் டிடிவி தினகரன், தீபா ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
201711302043541522_1_deeppa._L_styvpf.jpg
தி.மு.க.வுக்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளித்துள்ளன. பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிவிட்டன. இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தேர்தலில் போட்டியிடுவதில்ல என்ற முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

‘இந்த இடைத் தேர்தலில் மட்டுமே தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்கிறோம். தி.மு.க.வுடன் கூட்டணி எதுவும் இல்லை. இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது தி.மு.க.வுடன் இணைந்து செயல்பட மாட்டோம். தனி மேடையில் இருந்து அவர்களுக்கு ஆதரவு அளிப்போம். ஆர்.கே.நகரில் பணப் பட்டுவாடாவை முழுமையாக தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும்’  என்றும் ராமகிருஷ்ணன் கூறினார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/11/30204341/1131939/Marxist-Communist-support-fo-DMK-in-RK-Nagar-by-election.vpf

Link to comment
Share on other sites

ஆர்.கே.நகரில் மும்முனைப் போட்டி?: களத்தில் அதிமுக, திமுக, டிடிவி தினகரன்

 

இடைத் தேர்தல் நடைபெறவுள்ள சென்னை ஆர்.கே.நகரில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், சுயேச்சை வேட்பாளராக டிடிவி தினகரனே போட்டியிடுவாரா அல்லது அவரது ஆதரவாளருக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
டிசம்பர் 4-இல் கடைசி: ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்குப் பதிவு டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கலுக்கு வரும் 4-ஆம் தேதி கடைசி நாளாகும். இதையடுத்து, பிரதான அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் வெள்ளிக்கிழமை வேட்புமனுக்களை தாக்கல் செய்யவுள்ளனர்.
திமுக சார்பில் மருதுகணேஷும், அதிமுக சார்பில் இ.மதுசூதனனும் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர். டிடிவி தினகரன் போட்டியிட உள்ளதாக அவரது அணியைச் சேர்ந்த அன்பழகன் அறிவித்தாலும், அது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதும் தினகரனிடம் இருந்து வெளியாகவில்லை.
இதனால், அவரே போட்டியிடப் போகிறாரா அல்லது அவரது ஆதரவாளர் யாரேனும் களம் இறங்கப் போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் ஏற்கெனவே இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, அதிமுக அம்மா அணி சார்பில் போட்டியிட்ட டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டது.
ஆனால், இந்த முறை தேர்தல் ஆணையம் அதே தொப்பி சின்னத்தை ஒதுக்குமா என்ற சந்தேகம் டிடிவி தினகரன் தரப்பினருக்கு எழுந்துள்ளது. 
டிடிவி தினகரனோ அல்லது அவரது ஆதரவாளர்களில் ஒருவரோ போட்டியிட்டாலும், ஆர்.கே.நகரில் மும்முனைப் போட்டி என்பது உறுதியாகியுள்ளது.
பாஜக நிலைப்பாடு: தேர்தலில் போட்டியிடுவது குறித்து தமிழக பாஜகவும் ஆலோசித்து வருகிறது. ரத்து செய்யப்பட்ட இடைத் தேர்தலின் போது இசையமைப்பாளர் கங்கை அமரன் பாஜக சார்பில் போட்டியிட்டார். ஆனால், இந்த முறை அவர் போட்டியிட மறுத்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், யாரை வேட்பாளராக களம் இறக்குவது என்பது குறித்து கட்சியின் உயர்நிலைக் குழு ஆலோசித்து வருகிறது.
ஓரிரு நாள்களில் தேர்தல் நிலைப்பாடு தொடர்பான அறிவிப்பை அந்தக் கட்சி வெளியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுகவுக்கு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. இதைத் தவிர்த்து, நாம் தமிழர் சார்பில் கலைக்கோட்டுதயம் உள்ளிட்ட சிலரும் போட்டியிட வேட்புமனுதாக்கல் செய்துள்ளனர்.
ஆர்.கே.நகர் தொகுதியில் பிரதான கட்சிகளைப் பொருத்தவரையில் இதுவரை மும்முனைப் போட்டி ஏற்பட்டிருக்கிறது. வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் மூன்று நாள்கள் எஞ்சியிருக்கும் நிலையில், வேட்பு மனுத் தாக்கல் வாபஸ் தேதிக்குப் பிறகே எத்தனை முனைப் போட்டி இருக்கும் என்பது தெரியவரும்.

http://www.dinamani.com/tamilnadu/2017/dec/01/ஆர்கேநகரில்-மும்முனைப்-போட்டி-களத்தில்-அதிமுக-திமுக-டிடிவி-தினகரன்-2818151.html

Link to comment
Share on other sites

மதுசூதனனின் கரம்பிடித்து வேட்புமனுத்தாக்கல் செய்ய அழைத்துவந்த ஜெயக்குமார்!

 
 

அ.தி.மு.க. சார்பில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவைத் தாக்கல்செய்ய அமைச்சர் ஜெயக்குமாருடன் வந்தார் மதுசூதனன்.

மதுசூதனனுடன் ஜெயக்குமார்

 

அ.தி.மு.க-வின் ஆட்சி மன்றக் குழு நேற்று காலை சென்னை, ராயப்பேட்டையில் இருக்கும் அக்கட்சியின் தலைமைக் கழகத்தில் கூடியது. அப்போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட கட்சி சார்பில் தாக்கல்செய்யப்பட்டிருந்த 27 விருப்ப மனுக்களை பரிசீலித்தது ஆட்சி மன்றக் குழு. அதன்படி எடுத்த ஒருமனதான முடிவின்படி கழக அவைத்தலைவர் மதுசூதனன் அ.தி.மு.க சார்பில்  இம்மாதம் 21-ம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று அவர் அமைச்சர் ஜெயக்குமாருடன் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வருகை தந்துள்ளார். அப்போது, ஜெயக்குமார், மதுசூதனனின் கையைப் பிடித்து அழைத்து வந்தார்.

 

ஜெயக்குமாருக்கும் மதுசூதனனுக்கும் இடையே மோதல் போக்கு இருந்துவந்த நிலையில், இருவரும் ஒன்றாக வேட்பு மனுத்தாக்கல்  செய்ய வந்தது குறிப்பிடத்தக்கது. 

https://www.vikatan.com/news/tamilnadu/109475-madhusudhanan-files-nomination-for-contesting-rknagar-byelection.html

தி.மு.க வேட்பாளர் மருது கணேஷ் வேட்புமனுத்தாக்கல்

 
 

தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ் இன்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

மருதுகணேஷ்

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே. நகர் தொகுதியில், டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 27-ம் தேதி தொடங்கியது. தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து நிற்கும் சசிகலா அணி சார்பில் தினகரன் போட்டியிடுகிறார். தி.மு.க சார்பில் மருது கணேஷ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி, கலைக்கோட்டுதயத்தைக் களம் இறக்கியுள்ளது. மற்ற கட்சிகள் வேட்பாளர் பெயரை இன்னும் அறிவிக்கவில்லை.

 

இந்நிலையில், இன்று அறிவித்தப்படி தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ் வேட்புமனுத் தாக்கல் செய்தார். சென்னை தண்டையார்பேட்டையில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார் மருது கணேஷ். வேட்புமனு தாக்கல்செய்ய டிசம்பர் 4-ம் தேதி இறுதி நாளாகும். மனுக்கள் மீதான பரிசீலனை டிசம்பர் 5-ம் தேதி நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற டிசம்பர் 7-ம் தேதி கடைசிநாள். 

https://www.vikatan.com/news/tamilnadu/109469-dmk-maruthuganesh-filed-his-nomination.html

Link to comment
Share on other sites

அ.தி.மு.க-வை மிரட்ட தினகரன் தீட்டும் அதிரடித் திட்டம்! அதகளப்படும் ஆர்.கே.நகர் ! #RKNagarAtrocities

 
 

தினகரன் மனு தாக்கல்

ஆர்.கே. நகர் தேர்தலில் எங்கள் இலக்கு வெற்றி அல்ல... அ.தி.மு.க-வைத் தோற்கடிப்பதுதான்” என்று உத்வேகத்தோடு சொல்கிறார்கள் தினகரன் ஆதரவாளர்கள்.

 

இரட்டை இலைச் சின்னமும் அ.தி.மு.க கட்சியும் கிடைத்த உற்சாகத்தில் ஆர்.கே. நகர் தேர்தலில் உற்சாகமாகக் களம் இறங்குகிறது எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. இத்தனை நாள்கள் மூவர்ணக் கொடியையும் அ.தி.மு.க-வின் பெயரையும் பின்புலமாகக் கொண்டு அரசியல் செய்துவந்த டி.டி.வி தினகரன் கொடியையும் பயன்படுத்த முடியாமல், அ.தி.மு.க என்ற கட்சியும் இல்லாம் சுயேச்சை வேட்பாளராக மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஆனால், ஆர்.கே. நகரில் மனுத்தாக்கல் செய்வதற்கு இவர் கொடுத்த என்ட்ரியே அ.தி.மு.க-வை மிரட்டிப் பார்க்கும் வகையில் அமைந்துவிட்டது.

ஆர்.கே நகரில் வேட்புமனுத் தாக்கல்செய்ய தினகரன் முடிவு செய்தபோதே வேட்புமனுத் தாக்கலை அமர்களப்படுத்திவிட வேண்டும் என்று அவருடைய ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர். மதுசூதனனுக்குக் கூடும் கூட்டத்தைவிட தனக்குக் கூடுதல் கூட்டம் இருக்க வேண்டும் என்று தொகுதியின் பொறுப்பாளராக இருக்கும் வெற்றிவேலிடம் தினகரனும் சொல்லியுள்ளார். அதனால், 1-ம் தேதி வேட்புமனுத் தாக்கல்செய்த அன்று காலையில் இருந்தே தண்டையார் பேட்டையை தினகரன் ஆதரவாளர்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனன் வீட்டுக்கு முதல்வர் எடப்பாடியும் துணைமுதல்வர் பன்னீர்செல்வமும் வருகை தந்தபோது, சாலையில் நின்ற தினகரன் ஆதரவாளர்கள் “தினகரன் வாழ்க” என்று கோஷம் எழுப்பி எடப்பாடி தரப்புக்கு எரிச்சலை ஏற்படுத்தினார்கள். தினகரன் வேட்புமனுத் தாக்கல்செய்த அதே நேரம் அவருடைய மனைவி அனுராதா காளிகாம்பாள் ஆலயத்தில் தினகரன் பெயரில் சிறப்பு அபிஷேகத்தை செய்துகொண்டிருந்தார்.

அ.தி.மு.க-வினரைவிட தினகரன் ஆதரவாளர்களே வேட்புமனுத் தாக்கல் செய்த இடத்தில் குழுமி இருந்தது அ.தி.மு.க-வினருக்கே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இதே உற்சாகத்தோடு தேர்தல் பணியிலும் ஈடுபட தினகரன் ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளார்கள்.

தினகரன் வீட்டில் இரண்டு தினங்களுக்கு முன் முக்கிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது ஆர்.கே. நகரில் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணிகள் பற்றி ஆலோசனை செய்துள்ளார்கள். அந்த ஆலோசனைக் கூட்டத்தில், “அ.தி.மு.க-வின் வேட்பாளராக மதுசூதனன் அறிவிக்கப்பட்டது ஒருவகையில் நமக்கு சாதகம்தான். மதுசூதனனுக்கு எதிராகக் கட்சிக்குள்ளே அதிருப்தி அதிகம் இருக்கிறது. அ.தி.மு.க-வில் இருக்கும் நம்முடைய ஸ்லீப்பர் செல்களை வைத்து ஆர்.கே. நகரில் உள்ள முக்கிய நிர்வாகிகளை நம் பக்கம் வளைக்க வேண்டும்” என்று பேசப்பட்டுள்ளது.

அதேபோல், கடந்த முறை தொப்பிச் சின்னத்தில் தினகரன் போட்டியிட்டார். தொப்பிச் சின்னத்தைக் காட்டித்தான் கரன்ஸிகளையும் தண்ணீராய் ஆர்.கே. நகரில் இறக்கினார்கள். எனவே, இந்த முறை எப்படியும் தொப்பிச் சின்னத்தைத் தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெற்றுவிட்டாலே பாதி கிணற்றைத் தாண்டிவிடலாம் என்று தினகரனிடம் அவருக்கு நெருக்கமானவர்கள் ஆலோசனை கொடுத்துள்ளார்கள். அ.தி.மு.க-வினர் இரட்டை இலையை எப்படி நம்புகிறார்களோ, அதேபோல் ஆர்.கே. நகரில் தொப்பிச் சின்னத்தை நாம் நம்பிக்கையோடு எதிர்கொள்ளலாம் என்றும் சொல்லியுள்ளார்கள்.

ttv_1_19572.jpg

எடப்பாடி அணியினருக்கு இரட்டை இலைச் சின்னம் கிடைத்த மறுதினமே ஆர்.கே. நகர் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் சின்னத்தை முடக்க முடியவில்லை என்ற வருத்தம் தினகரன் அணியிடம் இருந்தாலும், வேறு ஒரு ரூபத்தில் மதுசூதனனுக்கு செக் வைக்க தினகரன் தரப்பு திட்டமிடுகிறது. அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ வேட்பாளர் மதுசூதனன்தான் என்பதற்கு சான்றாக ‘பி’ பாரத்தில் பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கையெழுத்திட்டுள்ளார்கள். ஆனால், அ.தி.மு.க சட்டப்படி பொதுச்செயலாளர் கையெழுத்திட்டால்தான் பி. பாரம் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற பிரச்னையை வேட்புமனு பரிசீலனை செய்யும் தினத்தன்று கிளப்பத் தயாராகி வருகிறது தினகரன் தரப்பு. ஆனால், ஒருங்கிணைப்பாளரும், இணைஒருங்கிணைப்பாளரும் கையெழுத்திட்டாலே பி பாரம் செல்லும் என்று எடப்பாடி தரப்பு தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதிவிட்டதாக எடப்பாடி தரப்பில் சொல்லப்படுகிறது.

 

மேலும், தினகரன் தரப்பின் ஒரே அஜெண்டா தேர்தலில் வெற்றியோ, தோல்வியோ அல்ல... அ.தி.மு.க-வைவிட கூடுதல் வாக்குகள் வாங்க வேண்டும். அதற்கு எந்த விலையும் கொடுக்க தயங்கவேண்டாம் என்ற முடிவில் உள்ளது. ஆர்.கே. நகரில் தேர்தல் பணியாற்ற தமிழகம் முழுவதும் உள்ள தன்னுடைய ஆதரவாளர்களை சென்னை வரச்சொல்லியுள்ளார் தினகரன். வரும் 3-ம் தேதி அன்று தினகரன் தரப்பின் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற உள்ளது. அதில் மேலும் சில முடிவுகளை எடுக்க உள்ளார்கள். அது அ.தி.மு.க-வை மிரட்டும் வகையில் இருக்கும் என்று கண்சிமிட்டுகிறார்கள் தினகரன் ஆதரவாளர்கள்.

https://www.vikatan.com/news/politics/109524-ttv-dhinakarans-winning-formula-for-rk-nagar.html

Link to comment
Share on other sites

ஆர்.கே.நகர்  இடைத்தேர்தல் ,RK Nagar by election,  மொபைல் ஆப், mobile app, வாக்காளர்கள்,  voters,வருமான வரித்துறை, Income Tax department,தேர்தல் ஆணையம் ,election commission,மறைந்த முதல்வர் ஜெயலலிதா , late Chief Minister Jayalalithaa,  அ.தி.மு.க., AIADMK, தி.மு.க.,DMK,  பா.ஜ, BJP,  இரட்டை இலை ,irattai ilai, முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy,துணை முதல்வர் பன்னீர்செல்வம் ,Deputy Chief Minister Panneerselvam, சசிகலா,Sasikala, தினகரன்,Dinakaran,  டிஜிட்டல் பண பரிவர்த்தனை, Digital Cash Transaction,பணப் பட்டுவாடா,

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு, மொபைல் போன் வாயிலாக, நுாதன முறையில், தீவிரமாக பணப்பட்டுவாடா செய்ய, சில அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அதை, மோப்பம் பிடித்த வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம் வாயிலாக, தனியார் மொபைல் போன் ஆப்பரேட்டர்களின் பரிவர்த்தனைகளை கண்காணிக்க, அதிரடி உத்தரவிட்டுள்ளது.

 

ஆர்.கே.நகர்  இடைத்தேர்தல் ,RK Nagar by election,  மொபைல் ஆப், mobile app, வாக்காளர்கள்,  voters,வருமான வரித்துறை, Income Tax department,தேர்தல் ஆணையம் ,election commission,மறைந்த முதல்வர் ஜெயலலிதா , late Chief Minister Jayalalithaa,  அ.தி.மு.க., AIADMK, தி.மு.க.,DMK,  பா.ஜ, BJP,  இரட்டை இலை ,irattai ilai, முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy,துணை முதல்வர் பன்னீர்செல்வம் ,Deputy Chief Minister Panneerselvam, சசிகலா,Sasikala, தினகரன்,Dinakaran,  டிஜிட்டல் பண பரிவர்த்தனை, Digital Cash Transaction,பணப் பட்டுவாடா,

முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவால் காலியான, சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு, டிச., 21ல், இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு, அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ஜ., கட்சிகள் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. அ.தி.மு.க., என்ற பெயரும், இரட்டை இலை சின்னமும், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தரப்புக்கு கிடைத்துள்ள நிலையில், சசிகலாவின் அக்கா மகன் தினகரன், சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
அணிகள் பிரச்னையில், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால், ஏப்ரலில் நடக்க இருந்த இடைத்தேர்தலில், தினகரன், சுயேச்சையாக போட்டியிட்டார். அவர், ஜெயித்தால் முதல்வர் ஆவார் என கருதப்பட்டது.

கண்காணிப்பு:


அதனால், அவரது ஆதரவாளர்கள், ஓட்டுக்காக பணத்தை வாரி இறைத்தனர். பணம் பட்டுவாடா செய்யப்படுவதை, வீடியோ ஆதாரமாக, போட்டி வேட்பாளர்கள் வெளியிட்டனர். இதனால், வருமான வரித்துறையில், தொகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
அதே நேரம், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் ஆதர வாளர்கள் வாயிலாக, வாக்காளர்களுக்கு, 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள், வருமான வரித்துறை சோதனையில் சிக்கின.

பணப் பட்டுவாடா உறுதியானதால், தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், ஆர்.கே.நகருக்கு, டிச., 21ல், தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. எனினும், தற்போது காட்சிகள் முற்றிலும் மாறியுள்ளன. இரட்டை இலை சின்னம், பழனிசாமி - பன்னீர்செல்வம் தரப்புக்கு கிடைத்துள்ளது. தினகரனோ, 'இரட்டை இலையை இழந்தாலும், மக்கள் ஆதரவு உள்ளது' என, உதார் விட்டு, களத்தில் இறங்கியுள்ளார். அதனால், வெற்றி பெற இருதரப்பும், எல்லா உத்திகளையும் கையாளும்.
தினகரனுக்கு இது வாழ்வா, சாவா என்ற போராட்டம்என்பதால், முன்பை விட பணத்தை வாரி இறைக்க வாய்ப்பு உள்ளது. மற்ற கட்சிகளும் பணம், பரிசுப்பொருட்களை வழங்கலாம் என்பதை, தேர்தல் ஆணையமும், வருமான வரித்துறையும் உணர்ந்துள்ளன. அதனால், கண்காணிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. எனினும், அவர்கள் கண்ணில் மண்ணை துாவி, நுாதன முறையில், டிஜிட்டல் நுட்பத்தில், தீவிரமாக பணப் பட்டுவாடா செய்ய, அரசியல் கட்சிகள் திட்டமிட்டிருப்பதை, வருமான வரித்துறை மோப்பம் பிடித்துள்ளது. அதைத் தடுக்க, அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நுாதன உத்தி:


இது தொடர்பாக, தமிழக வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் கூறியதாவது: இந்திய வரலாற்றில், தமிழகத்தில் தான் முதல் முறையாக, பணப் பட்டுவாடா காரணமாக, தஞ்சை, அரவக்குறிச்சி மற்றும், ஆர்.கே.நகரில், தேர்தலும் ரத்து செய்யப்பட்டது. ஆர்.கே.நகரில் மீண்டும் தேர்தல் நடக்கஉள்ளதால், கூடுதல் கவனத்துடன் இருக்கிறோம். தீவிர கண்காணிப்பு உள்ளதால், இம்முறை, வாக்காளர்களுக்கு, மொபைல் போன் வழியாக, டிஜிட்டல் முறையில் பணப் பட்டுவாடா செய்ய, சிலர் திட்டமிட்டுள்ளனர்.
தேர்தல் ரத்து செய்யப்படாமல் இருக்கவும், அதே நேரம், வாக்காளர்களுக்கு சிக்கலின்றி பணப்பட்டுவாடா செய்யவும், இந்த நுாதன உத்தியை வகுத்துள்ளனர். இது தொடர்பாக, தேர்தல் ஆணையத்துடன் ஆலோசித்து, அனைத்து மொபைல் போன்

 

ஆப்பரேட்டர்களுக்கும், கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அதில், 'குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள மொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கு, வழக்கத்திற்கு மாறாக, டிஜிட்டல் முறையில், பணப்பரிவர்த்தனை நடப்பது தெரிய வந்தால், எங்கள் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களும், கண்காணிப்பை துவக்கி உள்ளனர்.
குடும்பத்தில் ஒரு நபர், மொபைல் போன் வழியாக பணப்பரிவர்த்தனை செய்தால் கூட, அவர் வாயிலாக, மற்ற நபர்களுக்கு, அண்டை வீட்டாருக்கோ பணப் பட்டுவாடா செய்ய முடியும். அதைத் தடுக்கவே இந்த ஏற்பாடுகளை செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பணம் செலுத்துவது எப்படி?


* ஒருவரது மொபைல் போன் எண் தெரிந்தால், அவரது வங்கிக் கணக்குக்கு, டிஜிட்டல் முறையில் பணம் அனுப்ப முடியும்
* சில தனியார் வங்கிகளில், பிரத்யேக வசதி உள்ளது. இதன்படி, குறிப்பிட்ட நபரின் மொபைல் போன் எண் தெரிந்தால் போதும். அவருக்கு, வங்கிக் கணக்கு இல்லாவிட்டாலும், மொபைல் போன் எண்ணை பயன்படுத்தி, பணம் செலுத்தவும், பணம் எடுக்கவும் முடியும்
* 'பேடிஎம்' போன்ற, டிஜிட்டல் பண பரிவர்த்தனை, செயலிகளை பயன்படுத்துவோருக்கு, பணம் அனுப்பினால், அதை, இருப்பு வைத்து, பொருட்களை பின் வாங்கலாம்
* மத்திய அரசின், 'ஜன்தன்' திட்டத்தில், பெரும்பாலான மக்களுக்கு, வங்கிக் கணக்கு துவங்கப்பட்டுள்ளது. இந்த எண்களை பெற்று, அதற்கு, டிஜிட்டல் முறையில், மொத்தமாக பணப்பட்டுவாடா செய்ய முடியும்
* அவர்களது, மொபைல் போன் எண், வங்கி பதிவேட்டில் நிச்சயம் இருக்கும். அதனால், எஸ்.எம்.எஸ்., தகவல் போகும்; அந்த, மொபைல் ஆப்பரேட்டருக்கு பணப் பரிவர்த்தனை தகவல் தெரிய வரும். இந்த அனைத்து பரிவர்த்தனைகளும், மொபைல் போன் நிறுவனங்களுக்கு தெரியாமல் நடக்காது.
- நமது சிறப்பு நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1909642

Link to comment
Share on other sites

 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் போட்டி..!

 

ஆர்.கே.நகரில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக நடிகர் விஷால் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். 

vishallll_15574_18071.png

 


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே. நகர் தொகுதியில், டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல், நவம்பர் 27-ம் தேதி தொடங்கியது. இந்தத் தொகுதியில் தி.மு.க சார்பில் மருது கணேஷூம் அ.தி.மு.க சார்பில் மதுசூதணனும் டி.டி.வி.தினகரன் சுயேச்சையாகவும் களமிறங்கவுள்ளனர். மேலும், பா.ஜ.க சார்பில் கரு.நாகராஜன் போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்நிலையில், நடிகர் விஷாலும் இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட உள்ளார் என்று அவர் தரப்பிலிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவருடைய நண்பர்களுடன் தீவிரமாக ஆலோசித்த பின்பு விஷால் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று தெரிகிறது. திங்கள்கிழமை, அவர் வேட்புமனுத்தாக்கல் செய்யவுள்ளார். அவர், ஏற்கெனவே நடிகர் சங்கச் செயலாளராகவும் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருந்துவருகிறார். சமீப காலமாக அரசியல் தொடர்பான கருத்துகளை விஷால் தைரியாமாகத் தெரிவித்துவந்த நிலையில் தற்போது அரசியில் இறங்கியுள்ளார்.

https://www.vikatan.com/news/cinema/109604-vishal-contest-rknagar-byelection.html

Link to comment
Share on other sites

விஷால் போட்டியிடுகிறார்.... கமல் ஆதரிக்கிறாரா...? பரபரக்கும் ஆர்.கே.நகர் தேர்தல் களம்

 
 

no_11_20500.jpg

"நடிகர் கமலஹாசன் எதைச் செய்தாலும் சரியாகத்தான் செய்வார். அமைச்சர்களுக்கும் அவருக்குமானப் பிரச்னையில் தமிழ் திரையுலகமே அவருக்குப் பின்னால் நிற்கும்" இதைச்சொன்னவர் நடிகர் விஷால். அரசு தரப்பில் அமைச்சர்கள் கமலஹாசனை எதிர்த்துப் பேசத்துவங்கிய போது, கமலஹாசனுக்கு ஆதரவாக வலுவாக குரல் உயர்த்தியவர்களில் முதன்மையானவர் நடிகர் விஷால் தான். இவர் தான் இப்போது சுயேட்சையாக ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுகிறார்.

 

2015-ல் நடிகர் சங்கத்தேர்தல், 2017-ல்  தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் என இரு தேர்தல்களில் அடுத்தடுத்து வெற்றி பெற்ற விஷாலுக்கு, ஆரம்பத்தில் இருந்து உறுதுணையாக இருந்தவர் நடிகர் கமலஹாசன். தென்னிந்திய நடிகர் சங்க கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா விஷால் தலைமையில் நடந்தபோது, அதில் பங்கேற்று கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டியவர் நடிகர் கமலஹாசன். இப்படி நடிகர் கமலஹாசன் - விஷால் ஆகியோரின் நட்பு அண்மைகாலமாக மிக நெருக்கமாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் தான், ஆர்.கே.நகர் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார் நடிகர் விஷால். சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ள விஷால், திங்கட்கிழமை (4ம் தேதி) வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும் அறிவித்திருக்கிறார். இந்நிலையில், விஷாலுக்கு தனது ஆதரவை கமலஹாசன் தெரிவிக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
தீவிர அரசியலில் இறங்குவதாக நடிகர் கமலஹாசன் ஏற்கனவே முடிவெடுத்து விட்டார்.

அதற்கான ஆயத்தப்பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். இந்த சூழலில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தன் தரப்பில் விஷாலை போட்டியிட கமலஹாசன் முன்மொழிந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அரசியல் கட்சி துவங்குவதற்கு முன்னால், சுயேட்சையாக களமிறங்கும் விஷாலை கமலஹாசன் ஆதரிக்கக் கூடும் என்றும், அதற்கான அறிவிப்பை கமலஹாசன் வெளியிடுவார் என்றும் சொல்லப்படுகிறது. தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கங்களை நடத்த திட்டமிட்டுள்ள கமலஹாசன், ஆர்.கே.நகரில் இருந்து அதைத்துவங்கக் கூடும் என்றும் சொல்லப்படுகிறது.

கடந்த சில மாதங்களாகவே அரசியல் கருத்துக்களை சொல்லி வரும் கமலஹாசன், இந்த தேர்தலில் ஒரு நிலைப்பாடு எடுப்பது என்பது மிக அவசியம். அதற்காகக்கூட விஷாலை கமலஹாசன் முன்னிறுத்தி இருக்கலாம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். விஷாலுக்கு ஆதரவாக கமலஹாசன் குரல் எழுப்புவாரா? இல்லை தனி ஆளாக விஷால் களம் காண்பாரா என்பது அடுத்த சில நாட்களில் தெரியவரும்.

https://www.vikatan.com/news/tamilnadu/109616-will-kamal-haasan-support-vishal-in-rk-nagar-byelection.html

Link to comment
Share on other sites

 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தி.மு.க மருதுகணேஷுக்கு வைகோ ஆதரவு

 
 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷுக்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார்.

வைகோ

 
 

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து இடைத்தேர்தல் ரத்துசெய்யப்பட்டது. இதனிடையே, டிசம்பர் இறுதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருதுகணேஷ், சசிகலா அணி சார்பில் டி.டி.வி. தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் உள்ளிட்டோர் தேர்தலில் போட்டியிட உள்ளனர். எம்.ஜி.ஆர் ஜெயலலிதா தீபா பேரவை சார்பில் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தே.மு.தி.க. த.மா.கா, பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துவிட்டன. தி.மு.க வேட்பாளருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

 

இந்நிலையில் இன்று ம.தி.மு.க-வின் உயர்நிலைக்குழு கூட்டம் எழும்பூரில் உள்ள தாயகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து வைகோ பேட்டி அளிக்கையில், “தமிழர்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் மத்திய அரசு முன் மெளனம் காத்து வருகிறது அ.தி.மு.க அரசு. நூற்றாண்டுகள் கண்ட திராவிட இயக்கத்தின் பாரப்பரியத்தை காக்க வேண்டிய கடமை உள்ளது. இதனால் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து வருகிற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க-வுக்கு ஆதரவு அளிப்பதாக ஒருமனதாக முடிவு செய்துள்ளோம்” என்றார்.

https://www.vikatan.com/news/tamilnadu/109652-vaiko-supports-dmk-in-rknagar-elections.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.