Jump to content

இளையராஜா (சிறுகதை) ♥ஜி.ஆர்.சுரேந்தர்நாத்


Recommended Posts

♥குரல் தழுதழுக்க, என் முன்னாள் காதலியின் கடிதத்தப் படித்து முடித்த என் மனைவி நந்தினி, ''யாரு இந்த ஜெஸ்ஸி?' என்றாள். அப்போது அவளின் விழியோரம் எட்டிப்பார்த்த கண்ணீர், அடுத்து நான் சொல்லப்போகும் வார்த்தைகளைக் கேட்டு, கன்னத்தில் வழிவதற் காகக் காத்திருந்தது. நான் குரலில் எவ்வித உணர்ச்சியும் இன்றி, ''இந்த லெட்டர் உனக்கு எப்படிக் கிடைச்சது?' என்றேன்.

♥''உங்களோட ஒரு பழைய புத்தகத்துல இருந்துச்சு' என்ற நந்தினி, படுக்கை அறையில் இருந்து குழந்தையின் சிணுங்கல் சத்தம் கேட்க... வேகமாக உள்ளே சென்றாள்.

♥நான் பால்கனிக்குச் சென்று ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டு வெளியே பார்த்தேன். டெல்லியின் ஜனவரி இரவுக் குளிருக்கும் மனதில் பரவியிருந்த மெல்லிய சோகத்துக்கும் சிகரெட் புகை இதமாக இருந்தது. புகையை இழுத்து வெளியே விட்டபடி தூரத்தில் தெரிந்த துக்ளகாபாத் கோட்டையைப் பார்த்தேன்.   மெயின் ரோட்டில் விளக்குகள் மின்னியபடி வாகனங்கள் ஊர்ந்துகொண்டிருந்தன. ஜெஸ்ஸி யின் கண்களும் இப்படித்தான்... கண்ணுக்குள் யாரோ நட்சத்திரங்களை ஒளித்துவைத்தது போல் மின்னிக்கொண்டே இருக்கும்.

♥ஜெஸ்ஸி... சென்னையில் நான் புராஜெக்ட் இன்ஜினீயராகப் பணியாற்றிய கம்பெனியின் ஹெச்.ஆர்-ல் பணிபுரிந்தவள். இளையராஜாவில் ஆரம்பித்து, இளையராஜாவில் முடிந்த காதல் அது.

♥''ரொம்ப ரேர் இளையராஜா பாட்டெல்லாம் வெச்சிருக்கீங்க. ப்ளுடூத்ல அனுப்புறீங்களா வினோத்?'

♥''இளையராஜா புரொகிராமுக்கு ரெண்டு டிக்கெட் வாங்கியிருக்கேன்... வர்றீங்களா வினோத்?'

♥'' 'மயங்கினேன்... சொல்லத் தயங்கினேன்...' பாட்டைக் கேக்குறப்ப எல்லாம் உங்களைத்தான் நினைச்சுக்கிறேன் ஜெஸ்ஸி.'

♥''நமக்குப் பையன் பிறந்தா இளையராஜான்னு பேர் வைக்கணும் வினோ.'

♥''இளையராஜாவின் உன்னதமான சங்கீதத்தில் நம் காதல் ரகசியமாக வாழும்.'

♥காலம் நம்மிடம் இருந்து எல்லாவற்றையும் பறித்துக்கொண்டு, இளையராஜாவை மட்டும் பிரிக்க முடியாமல் தோற்றுக்கொண்டேயிருக்கிறது.

♥குழந்தையைத் தூங்கவைத்துவிட்டு வந்த நந்தினி, ''சொல்லுங்க... யாரு அந்த ஜெஸ்ஸி?' என்றாள்.

♥எனக்கு எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. நந்தினி, அதிகம் வெளியுலகு தெரியாமல் வளர்ந்த ஒரு கிராமத்து வாத்தியார் வீட்டுப் பெண். என்னைத் திருமணம் செய்து கொண்ட பிறகுதான் செய்தித்தாளே படிக்க ஆரம்பித்தாள். என் மீது மிகவும் பொசஸிவ்வாக இருப்பாள். அபார்ட்மென்ட்டில் பனியனுடன் வெளியே சென்று நின்றால், ஓடிவந்து என் தோளில் துண்டைப் போர்த்திவிட்டு, ''ஏன் உடம்பைக் காமிச்சுக்கிட்டு நிக்கிறீங்க?' என்பாள்.

''ஆமாம்... பெரிய சரத்குமார் பாடி...'

♥என்பேன் நான். அப்படிப்பட்டவளிடம் பேச்சும், சிரிப்பும், கனவுகளும், கவிதைகளுமாக என் வாழ்வில் ஒரு பெண் இருந்தாள் என்பதை எப்படிச் சொல்ல?

♥''சொல்றேன். பதட்டப்படாமக் கேளு.ஜெஸ்ஸி... சென்னைல என்கூட வேலை பார்த்த பொண்ணு. அவ கிறிஸ்டியன். ரெண்டு பேர் வீட்லயும் ஒப்புக்கலைனு பிரிஞ்சுட்டோம்.'

''ரெண்டு பேரும் எத்தனை வருஷம் லவ் பண்ணீங்க?'

''மூணு வருஷம்.'

♥''மூணு வருஷம் ஒருத்திய லவ் பண்ணி யிருக்கீங்க. அவளைக் கல்யாணம் பண்ணிக் காம, என்னை ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?'

♥'ஒருவரைக் காதலித்துவிட்டு, இன்னொருவரைத் திருமணம் செய்துகொள்ள சாபம் விதிக்கப்பட்ட தேசம் இது நந்தினி’ என்று மனசுக்குள் நான் சொல்லிக்கொண்டிருந்தபோது, ''இப்பவும் அவளை நினைச்சுப்பீங்களா?' என்றாள் நந்தினி.

♥''எங்க ஊரு அரச மரத்தடில, எங்கூட உக்காந்து ராட்டினம் சுத்தின குமரேசனையே நான் இன்னும் மறக்கல நந்தினி. மனுஷன்னா, அவன் வாழ்க்கைல கடந்துவந்த எல்லோருடைய நினைவும் இருக்கத்தானே செய்யும்' என்று நான் கூறியபோது என் மொபைல் சிணுங்கியது.

'மெட்டி ஒலி காற்றோடு...’ என்று ரிங்டோன் ஒலிக்க... நான் மொபைலைக் கட் செய்தேன்.

''இது இளையராஜா பாட்டுதானே?' என்றாள் நந்தினி.

''ஆமாம்.'

♥''என் நினைவில்லாம இளையராஜாவோட ஒரு பாட்டைக் கூட உங்களால கேக்க முடியாதுன்னு எழுதியிருந்தாளே... ஒவ்வொரு தடவை இளையராஜா பாட்டு கேக்குறப்பவும் அவள நினைச்சுப்பீங்களா?' என்று நந்தினி கேட்டபோது, அவள் குரல் தழுதழுத்தது.

♥நான் நந்தினியின் கேள்விக்குப் பதில் சொல்லாமல், ''நந்தினி... உனக்குக் கஷ்டமாத்தான் இருக்கும். எனக்குப் புரியுது. என்ன பண்றது? நான் ஜெஸ்ஸியைக் காதலிச்சது, உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது... எதையும் இப்ப மாத்த முடியாது. ஆனா, என்னோட காதல் தோல்வி நம்ம வாழ்க்கையை எந்த விதத்துலயும் பாதிக்கலை. உன்கூட நல்லபடியா சந்தோஷமாத் தானே இருக்கேன்.'

♥''அதெல்லாம் சரி... ஆனா, எனக்கு முன்னாடி ஒரு பொண்ணு, முழுசா மூணு வருஷம் உங்க வாழ்க்கைல இருந்திருக்காளே. அதை எப்படிங்க தாங்கிக்கிறது?' என்ற நந்தினி அழ ஆரம்பித்தாள். நான் மேற்கொண்டு ஒன்றும் பேசாமல், அழுது மனம் ஆறட்டும் என்று விட்டுவிட்டேன்.

♥மறுநாள் இரவு. அருகில் நந்தினி அசந்து தூங்கிக்கொண்டிருந்தாள். குனிந்து அவள் நெற் றியில் அன்புடன் முத்தமிட்டேன். நந்தினியின் அருகில் படுத்திருந்த குழந்தையின் கையில் நந்தினியின் புடைவை நுனி. நான் புடைவையின் நுனியை எடுக்க முயற்சித்தேன். குழந்தை சிணுங்க... விட்டுவிட்டேன். தன் புடைவை நுனியைப் பிடித்துக்கொண்டு தூங்க நந்தினி குழந்தைக்குப் பழக்கப்படுத்தியிருந்தாள்.

♥எனக்குப் பாட்டு கேட்க வேண்டும்போலத் தோன்றியது. எழுந்து பால்கனிக்குச் சென்றேன். மொபைலில் ''வானுயர்ந்த சோலையிலே...' பாடலை ஒலிக்கவிட்டு சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டேன். பாடலில் மெள்ள மெள்ளக் கரைய ஆரம்பித்தேன்.

♥'தேனாகப் பேசியதும்
சிரித்து விளையாடியதும்...
வீணாகப் போகுமென்று
யாரேனும் நினைக்கவில்லை...’

♥என்ற வரிகளைக் கேட்டவுடன் ஜெஸ்ஸியின் நினைவில் இருந்த எனக்குக் கண்கள் கலங்கின. அப்போது ''என்ன... அவ நினைப்பா?' என்று பின்னால் இருந்து நந்தினியின் குரல் கேட்க... அவசரமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டு திரும்பினேன்.

♥நந்தினியின் கண்களில் கோபம் மின்ன, ''நான் வந்து நின்னதுகூடத் தெரியாம பாட்டு கேட்டுட்டு இருக்கீங்க. அவ நினைப்புல தான் தினம் வீட்டுக்கு வந்தவுடனே இளைய ராஜா பாட்டு கேக்குறீங்களா?'

''இல்லம்மா... சாதாரணமாதான் கேக்குறேன்.'

♥''சும்மா சொல்லாதீங்க. இப்ப இந்தப் பாட்டுல, 'தேனாகப் பேசியதும், சிரித்து விளையாடி யதும், வீணாகப் போகுமென்று’னு கேட்டப்ப அவ நினைப்பு வரலைனு சொல்லுங்க பாப்போம்?'

♥மற்ற விஷயங்களில் சற்று விவரம் இல்லாத பெண்கள்கூட, கணவனின் பெண் நட்பு சார்ந்த விவகாரங்களில் மட்டும் மிகவும் நுணுக்கமான புத்திசாலிகளாகிவிடுகிறார்கள். உண்மையைச் சொன்னால் மேலும் பிரச்னை என்பதால், ''அதெல்லாம் இல்ல நந்தினி... நீயாவே நினைச்சுக்கிற?' என்றதும், வேகமாக உள்ளே சென்ற நந்தினி, தூங்கிக் கொண்டிருந்த கைக்குழந்தையைத் தூக்கிக்கொண்டு வெளியே வந்தாள். நான் சற்றும் எதிர்பாராதவிதமாக என் முன் குழந்தையை நீட்டி, ''நம்ம பொண்ணு மேல சத்தியம் பண்ணிச் சொல்லுங்க. அந்தப் பாட்டக் கேக்குறப்ப, அவ நினைப்பு வரலைனு சொல்லுங்க பாப்போம்' என்று கூற... நான் அதிர்ச்சியுடன் நந்தினியை நோக்கினேன். எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை என்றாலும், பெற்ற குழந்தை மீது பொய் சத்தியம் பண்ணச் சங்கடமாக இருந்தது. குழந்தை தூக்கம் கலைந்து அழ ஆரம் பித்தது. நான் வேகமாகக் குழந்தையை வாங்கி என் தோளில் சாய்த்து இறுக்கமாக அணைத்தபடி, ''ஆமாம் நந்தினி... அந்தப் பாட்டக் கேட்டப்ப ஜெஸ்ஸியத்தான் நினைச்சுட்டிருந்தேன்' என்றேன்.

♥சட்டென்று கண் கலங்கிய நந்தினி, ''அவள நினைச்சுட்டு இருக்கிறதுக்கு என்னை ஏங்க கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க? பொண்டாட்டி, பிள்ளையத் தூங்கவெச்சிட்டு எவளையோ நினைச்சுட்டு பாட்டு கேக்குறேன்னு சொல்றீங்களே... என் மனசு என்ன பாடுபடும்னு யோசிச்சீங்களா?' என்றாள்.

''எனக்குப் புரியுது நந்தினி... என்னை இப்ப என்ன செய்யச் சொல்ற?'

''நீங்க இனிமே அவள நினைக்கக் கூடாது.'

''சரி...'

♥''ஆனா, இளையராஜா பாட்டு கேக்குறப்பல்லாம் உங்களுக்கு அவ நினைப்பு வரும்ல?' என்று நந்தினி கேட்க... நான் பதில் ஒன்றும் சொல்லவில்லை.

''சொல்லுங்க... வரும்ல?'

''வரலாம்.'

♥''அப்படின்னா, இனிமே இளையராஜா பாட்டக் கேக்காதீங்க' என்றவுடன் எனக்கு யாரோ என் கழுத்தைப் பிடித்து நெரிப்பதுபோல் இருந்தது. நான் பிறந்ததிலிருந்து என்னைத் தொடரும் பாடல்கள் அவை. நான் குழந்தையாக இருந்தபோது, 'கண்ணே... கலைமானே...’ பாடலைப் பாடித்தான் என்னைத் தூங்கவைத்ததாக அம்மா சொல்லியிருக்கிறாள். பள்ளியில், 'ஆடி மாசம் காத்தடிக்க...’ பாடலுக்கு நடனம் ஆடி முதல் பரிசு வாங்கியிருக்கிறேன். ஒரு மழைக்கால மாலையில் 'புத்தம் புது பூ பூத்ததோ...’ பாடல் கேட்டு முடித்த பிறகுதான் ஜெஸ்ஸி என் தோளில் சாய்ந்து தன் காதலைச் சொன்னாள். என்னிடம் இளையராஜாவின் பாடல்களைக் கேட்காதே என்று சொல்வது, என் இறந்த காலத்தை அழிக்கச் சொல்வதுபோல். ஒரு மனிதனின் இறந்த காலத்தை எப்படி நந்தினி அழிக்க முடியும்?

♥ஆனாலும், நந்தினியின் துயரத்தைப் புரிந்து கொண்டு, கொஞ்சம் நாள் சென்றால் சரியாகி விடும் என்ற நம்பிக்கையுடன், ''சரி... இனிமே கேட்கல!'' என்றேன்.

♥அதன் பிறகு ஒரு வாரம் வரையிலும் நான் இளையராஜாவின் பாடல்களைக் கேட்கவே இல்லை. அதற்கு மேல் என்னால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஒரு புதன் கிழமை இரவு, நந்தினியும் குழந்தையும் தூங்கிய பிறகு கட்டில் ஆடாமல், நந்தினி மேல் என் கை கால் படாமல் கவனமாக இறங்கினேன். அன்றைக்கு பால்கனி யில் பாடல் கேட்டுத்தான் மாட்டிக்கொண் டோமே என்று ஃப்ளாட் கதவைத் திறந்து கொண்டு மொபைலுடன் மொட்டைமாடிக்கு வந்தேன். 'கடவுளே... ஒரு பாடல் கேட்க இவ் வளவு திருட்டுத்தனமா?’ என்று மனம் துக்கத்தில் கசிந்தது.

♥இருட்டில் மொபைலில் ஆவலுடன் பாடல் களைத் தேடி, 'என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்... ஏன் கேட்கிறது?’ பாடலைக் கேட்க ஆரம்பித்தேன். பாடல் ஆரம்பித்து பல்லவியைக் கூடத் தாண்டவில்லை. 'ணங்’கென்று யாரோ முதுகில் குத்த... பயந்து திரும்பினேன். நந்தினி என்னை ஆவேசத்துடன் பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள். நான் கலக்கத் துடன், ''நந்தினி...' என்று ஆரம்பிக்க... நந்தினி என்னைப் பேச விடாமல், ''அன்னைக்கி எங்கிட்ட இனிமே இளையராஜா பாட்டக் கேக்க மாட்டேன்னு சொன்னீங்கள்ல?' என்று சத்தமாகக் கேட்டபடி என் நெஞ்சில் கைவைத்துத் தள்ளினாள்.

♥லேசாகத் தடுமாறிய நான் சமாளித்து நின்றுகொண்டு, ''ஏன் நந்தினி சின்னப் புள்ள மாதிரி பிடிவாதம் பண்ற? வெறும் பாட்டுதானே நந்தினி...' என்றேன்.

♥''உண்மையச் சொல்லுங்க... உங்களுக்கு அது வெறும் பாட்டுதானா? இளையராஜா பாட்டக் கேக்குறப்பல்லாம் அவ நினைப்பு உங்களுக்கு வர்றதில்ல?'

♥''சும்மா பாட்டு கேக்குறதால எதுவும் நடந்து டாது நந்தினி. அவ சென்னைல இருக்கா. நான் டெல்லில இருக்கேன். தேவையில்லாம நீ பயப் படற. பாட்டு கேக்குறது வேற. அவள நினைச்சுக் கிறது வேற.'

♥''உங்களுக்கு ரெண்டும் ஒண்ணுதாங்க' என்று என் அருகில் வந்த நந்தினி கண்களில் உக்கிரத் துடன், ''இனிமே இளையராஜா பாட்டு கேக்க மாட்டேன்னு சொல்லுங்க' என்றாள். நான் மௌனமாக நிற்க... ''கேக்க மாட்டேன்னு சொல்லுங்க... சொல்லுங்க... சொல்லுங்க' என்று மீண்டும் மீண்டும் ஆவேசத்துடன் கத்திய நந்தினி, என் சட்டைக் காலரைப் பிடித்து வெறி பிடித்தவள்போல் உலுக்கினாள்.

♥ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த நான், ''பைத்தியக்கார நாயே... ஏண்டி இப்படி என் உயிர எடுக்குற?' என்றபடி ஓங்கி அவள் கன்னத்தில் அறைந்தேன். சட்டென்று அமைதியாகி, அதிர்ச்சியுடன் என்னை நோக்கிய நந்தினியின் கண்களில் இருந்து நீர் வழிந்தது. சில விநாடிகள் என் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த நந்தினி மேற்கொண்டு ஒன்றும் பேசாமல், இறங்கிச் சென்றாள். நான் வீட்டுக்குச் செல்லப் பிடிக்காமல் மொட்டை மாடியிலேயே படுத்துக்கொண்டேன்.

♥எப்போது கண் அசந்தேன் என்று தெரியவில்லை. சட்டென்று விழித்தபோது விடிந்திருந்தது. கீழே இறங்கினேன். வீட்டினுள் நுழைந்தபோது வீடு அமைதியாக இருந்தது.

♥''நந்தினி...' என்றபடி படுக்கை அறையில் பார்த்தேன். நந்தினி அங்கு இல்லை. குழந்தையையும் காணவில்லை. சமையல் அறையிலும் நந்தினியைக் காணாமல், ஃப்ளாட் வாசலை நெருங்கியபோதுதான் கவனித்தேன். செருப்பு ஸ்டாண்டில் அவளுடைய செருப்பு இல்லை. சற்றே திகிலுடன் அவளுடைய பர்ஸையும் மொபைலையும் தேட... இரண்டும் கிடைக்கவில்லை. பதற்றத்துடன் என் மொபைலை எடுத்து அவள் மொபைலுக்கு அடிக்க சுவிட்ச் ஆஃப். வேகமாக பேன்ட், சட்டையை மாட்டிக்கொண்டு பைக் சாவியுடன் படி இறங்கினேன்.

♥வாட்ச்மேனிடம் விசாரித்தேன். ''சுப பாஞ்ச் பஜே, பச்சி கி சாத் மதுரா ரோட் கி தரஃப் ஜா ரஹி தி' என்றான். கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தேன். ஆறரை. ஐந்து மணிக்கே குழந்தையோடு மதுரா ரோடு பக்கம் சென்றிருக்கிறாள். ஒருவேளை கோபித்துக்கொண்டு தமிழ்நாட்டுக்குக் கிளம்பியிருப்பாளோ? ஊருக்குப் போக வேண்டும் என்றாலும், மதியம் மூன்றரைக்குத்தான் ரயில். எனவே, அருகில்தான் எங்காவது சென்றிருக்க வேண்டும் என்ற முடிவோடு மதுரா மெயின் ரோடு, ஆனந்த்மாய் ரோடு, அர்பிந்தோ மார்க் ரோடு என்று அனைத்து வீதிகளையும் சுற்றிச் சுற்றி வந்தேன். அடுத்து எங்கு சென்று பார்ப்பது என்று புரியாமல் ஸாகர் ரத்னா ஹோட்டல் வாசலில் தவிப்புடன் நின்றுகொண்டிருந்தேன். என் துணை இல்லாமல் துக்ளகாபாத்துக்கு வெளியே நந்தினி சென்றது கிடையாது. இந்தியும் அவளுக்குத் தெரியாது. கையில் ஆறு மாதக் குழந்தையுடன், மொழி புரியா ஊரில் எங்கு சென்றிருப்பாள்?

♥நேரம் ஆக ஆக... எனக்குப் பயம் அதிகரித்தது. வாட்ச்சைப் பார்த்தேன். மணி எட்டு. வாட்ச்மேனை மொபைலில் அழைத்து விசாரித்தேன். அவன் 'நந்தினி இன்னும் வரவில்லை’ என்றான். சட்டென்று ஒருவேளை நந்தினி ஏதேனும் செய்துகொண்டிருப்பாளா என்று தோன்றியவுடனேயே வயிறு கலங்கியது. மேலும் யோசிக்கவும் நடக்கவும் சக்தியற்று தெருவையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

♥'கடவுளே... எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு வாழ்க்கை?’ என்று மனதுக்குள் புலம்பியபோது என்னை அறியாமலேயே என் கண்களிலிருந்து நீர் வழிந்தது. கண்களைத் துடைத்துக்கொண்டு, மொபைலை எடுத்து மீண்டும் ஒரு முறை நந்தினியின் போனுக்கு அடித்துப் பார்த்தேன். சுவிட்ச் ஆஃப். ஊரில் இருக்கும் நந்தினியின் பெற்றோரிடம் ஏதாவது சொன்னாளா என்று தெரிந்துகொள்ள, நந்தினியின் அப்பாவை மொபைலில் அழைத்தேன். போனை எடுத்த என் மாமனாரிடம், ''மாமா... நந்தினி ஏதும் போன் பண்ணியிருந்தாளா?'' என்றேன்.

''ஒண்ணும் பண்ணலையே. என்ன விஷயம் மாப்ள?'

♥''நேத்து ராத்திரி ஒரு சின்ன சண்டை. மொட்டைமாடிலயே படுத்துத் தூங்கிட்டேன். காலைல எந்திரிச்சுப் பாத்தா ஆளக் காணோம்.'

''என்ன மாப்ள சொல்றீங்க?' என்ற மாமனாரின் குரலில் அதிர்ச்சி.

♥''நானும் மூணு மணி நேரமாத் தேடிப் பாத்துட்டேன். ஆளக் காணோம்...' என்ற என் குரல் உடைந்து அழுகை வரப் பார்த்தது.

♥''பயப்படாதீங்க மாப்ள. கோபத்துல பக்கத்துல எங்கயாச்சும் போயிருப்பா. நீங்க எல்லா இடத்துலயும் நல்லாத் தேடிப் பாத்தீங்களா?'

''பாத்தாச்சுங்க.'

''பக்கத்து கோயில்ல ஏதும் பாத்தீங்களா?'

''இல்லையே.'

♥''பக்கத்துல இருக்கிற கோயில்ல எல்லாம் பாருங்க. இங்க எங்ககூட ஏதாவது சண்டை வந்துச்சுன்னா, கோயில்ல தான் போய் உக்காந்திருப்பா' என்று மாமனார் கூற... எனக்கு மூச்சு வந்தது.

♥''சரி மாமா...' என்ற நான் வேகமாக பைக்கை உதைத்துக் கிளம்பினேன். அந்தப் பிரதேசத்தில் காணப்படும் ஷிவா மந்திர், லோட்டஸ் டெம்பிள், கல்காஜி காளி மந்திர், சாய் மந்திர் என்று அத்தனை கோயில்களிலும் தேடினேன். எங்கும் நந்தினியைப் பார்க்க முடியவில்லை. இன்னும் ஆர்.கே.புரம் மலைமந்திர் மட்டும்தான் பாக்கி. அது வீட்டிலிருந்து தூரம். இருப்பினும், அது தமிழர்களால் நடத்தப்படும் முருகன் கோயில் என்பதால், அங்கு வந்து செல்பவர்கள், அர்ச்சகர்கள் என்று எல்லோரும் தமிழர்களாகத்தான் இருப்பார்கள். எனவே, நந்தினி அங்கு சென்றிருக்கக்கூடும் என்று நம்பிக்கையுடன் பைக்கில் வேகமாகப் பறந்தேன். மலைமந்திர் வாசலில் பைக்கை நிறுத்தியபோது நான் மிகவும் களைத்திருந்தேன்.

♥மெதுவாக நடந்து கீழே விநாயகர் சந்நிதி, மீனாட்சி சந்நிதியில் பார்த்தேன். நந்தினி இல்லை. படியேறி மேலே சென்றேன். முருகன் சந்நிதியிலும் அவளைக் காணாமல் ஏமாற்றத்துடன் சுற்றிலும் பார்த்தேன். துர்கையம்மன் சந்நிதி அருகே ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்க... நான் வேகமாகச் சென்றேன். அங்கு நந்தினி புல்தரையில் அமர்ந்தபடி ரிங் ரோட்டையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

♥வீட்டுக்கு வந்தும் இருவரும் ஒன்றும் பேசவில்லை. அழுத குழந்தைக்குப் பால் கொடுத்துத் தூங்கவைத்த பிறகு நிதானமாக நந்தினியிடம் பேச ஆரம்பித்தேன்.

♥''நான் உங்கிட்ட ஏன் போனேன்னு கேக்கப்போறதில்ல. இனிமே நான் என்ன பண்ணணும்னு மட்டும் சொல்லு' என்றேன்.

''இனிமே நீங்க இளையராஜா பாட்ட கேக்கக் கூடாது' என்றாள் வேகமாக.

♥நான் ஒரு விநாடியும் யோசிக்காமல், ''சரி... இனிமே கேக்க மாட்டேன்' என்றபோது லேசாகத் தொண்டை அடைத்தது.

♥''கேக்க மாட்டேன்னு சொல்லிட்டு, வெளிய போறப்ப கேட்டீங்கன்னா என்ன பண்றது? உங்க மொபைல்ல இருக்கிற இளையராஜா பாட்டையெல்லாம் அழிங்க' என்றாள். நான் மௌனமாக மொபைலில் இருந்த பாடல்களை அழித்துவிட்டு ''போதுமா?' என்றேன்.

♥''கம்ப்யூட்டர்ல இருக்கிற இளையராஜா பாட்டு?' என்று நந்தினி கூற... கணினியை இயக்கி இளையராஜா பாடல்களைஅழித்துவிட்டு அவள் முகத்தை நோக்கினேன். அவள், ''சி.டி-ல் லாம்...' என்றாள். நான் அலமாரியைத் திறந்து, இளையராஜாவின் பாடல்களைப் பதிவுசெய்து வைத்திருந்த சி.டி-க்கள், டி.வி.டி-க்கள் என்று எல்லாவற்றையும் ஒரு இயந்திரம்போல் எடுத்துக் கீழே போட்டேன்.    

♥நந்தினி, ''இவரு இளையராஜா பாட்டு கேட்டு அவள நினைச்சுக்கிட்டே இருப்பாராம். நான் வேடிக்கை பாத்துட்டு இருக்கணுமாம்' என்றபடி வெறி பிடித்தாற்போல் சரக்... சரக்... என்று சி.டி-க்களைத் தரையில் தேய்த்தாள்.

♥அடுத்து வந்த மூன்று மாத காலமும் ஒரு பிரச்னையும் இல்லை. உள்ளுக்குள் ஒரு வெறுமை இருந்தாலும், வெளியில் என்னால் இயன்றளவு சகஜமாக இருக்க முயன்றேன். ஆனால், இளையராஜா பாடல்கள் கேட்காமல் இருப்பது, நெஞ்சில் முள்ளாக உறுத்திக்கொண்டேயிருந்தது.  ஒரு நாள் தமிழர்கள் அதிகம் வசிக்கும் முனீர்கா பகுதியில் சென்றபோது ஒரு வீட்டிலிருந்து 'உன் குத்தமா... என் குத்தமா?’ பாடல் கேட்க, அப்படியே பைக்கை நிறுத்திக் கேட்டுக்கொண்டிருந்தேன். இரவுகளில் படுத்தபடி மனதுக்குள்ளேயே இளையராஜாவின் பாடல்களை ஆரம்பத்தில் இருந்து ஃப்ரீலூட், இன்டர்லூடுடன் கேட்க... மனம் சற்று நிம்மதியடைந்தது. என் செவியில் ஒலிக்காத இளையராஜாவின் பாடல்கள், என் மனதில் ஒலித்துக்கொண்டேயிருந்தன. அப்படியே தூங்கிவிட... கனவிலும் இளையராஜா பாடல்களைக் கேட்டுக்கொண்டேயிருந்தேன்.

♥ஒரு விடியற்காலை கனவில், 'நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி...’ பாடலைக் கேட்கக் கேட்க மிகவும் இன்பமாக இருந்தது. சட்டென்று விழிப்பு வர... அப்போதும் பாடல் தொடர்ந்து ஒலித்தது. விழித்த பிறகும் எப்படிப் பாடல் ஒலிக்கிறது என்று நான் திகைக்க... கட்டிலில் புன்னகையுடன் நந்தினி அமர்ந்திருந்தாள். அவள் கையில் இருந்த பாக்கெட் சி.டி. ப்ளேயரில் இருந்துதான் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. நடப்பதை நம்ப முடியாமல் ஆச்சர்யத்துடன் எழுந்து அமர்ந்தேன்.

சட்டென்று என் நெஞ்சில் சாய்ந்த நந்தினி, ''ஸாரிங்க?' என்றாள்.

''ஏய்... என்னாச்சு உனக்கு?' என்றேன்.

♥''நீங்க இளையராஜா பாட்ட கேக்குறத நிறுத்தின பிறகு, பழைய மாதிரியே இல்ல. நீங்க என்னதான் எங்கிட்ட சிரிச்சுப் பேசினாலும், அதெல்லாம் நடிப்புனு நல்லாத் தெரிஞ்சுபோச்சு. பழைய கலகலப்பு, மனசுவிட்டுச் சிரிக்கிறது, துறு துறுனு எங்கிட்ட வம்பிழுக்கிறதுனு எல்லாம் போயிடுச்சு. எனக்கு நீங்க பழைய வினோத்தா வேணுங்க. அதுவும் இல்லாம உங்ககூட சேர்ந்து இளையராஜா பாட்டக் கேட்டுக் கேட்டு, அது இல்லாம எனக்கே ஒரு மாதிரியா இருக்கு. அதான் இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்போம்னு நேத்து அலைஞ்சு திரிஞ்சு பத்து இளையராஜா பாட்டு டி.வி.டி. வாங்கிட்டு வந்தேன்' என்று கூறியவளை உற்றுப் பார்த்தேன்.

♥அப்போது என் மனதில் நந்தினியின் மீது ஏற்பட்ட அபாரமான காதலை இந்த சாதாரண எழுத்துக்களைப் பயன்படுத்திச் சொல்ல முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஜெஸ்ஸியோடு எனக்கு இருந்த காதலைவிடப் பல மடங்கு பெரிய காதல் இது. ''நந்தினி...' என்று நான் ஆவேசத்துடன் அவளை இறுக அணைத் துக்கொண்டேன்.

''ஆனா, ஒரு கண்டிஷன்... பாட்டு கேக்குறப்ப நீங்க அவள நினைக்கக் கூடாது.'

♥''நினைச்சுப்பேன்... ஆனா, அவள இல்ல. இனிமே எங்கே இளையராஜா பாட்டக் கேட்டாலும், உன் நினைப்புதான் வரும்' என்று நான் கூற... நந்தினி என்னை இறுகத் தழுவிக்கொண்டாள். சி.டி-யில் அடுத்த பாடல் ஒலித்தது.

♥'என்னோடு வா வா... என்று சொல்ல மாட்டேன்...
உன்னைவிட்டு வேறு எங்கும் போக மாட்டேன்

 

மூலம்: http://www.sirukathaigal.com/சிறப்பு-கதை/இளையராஜா/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதையின் நாயகன் ஒரு வெறும் முட்டாள். இதேபோல ஒரு கடிதத்தை மனிசியின் பெட்டியில் இருந்து எடுத்தால் என்ன ஆட்டம் போட்டிருப்பார்.ஆனால் எல்லாத்துக்கும் ஒரு பரிகாரம் இருக்கு.....!

1) பழைய காதல் தடயங்களை முற்றாக அழிச்சிடனும்.அதையும் மீறி அவங்க கண்ணுல ஏதாவது தட்டுப்பட்டால், படும்  அப்போது அதுக்கு சொல்ல சரியான காரணம் ஒன்றை கைவசம் வைத்திருக்க வேண்டும்.

2) அந்தக் கடிதமே தான் வைத்திருக்க வேண்டுமென்றால் , அத்துடன் இன்னும் வேறு நாலைஞ்சு  பெயர்களில் வெவ்வேறு கடிதங்கள் எழுதி அதோடு சேர்த்து வைத்து விட்டால் பிரச்சினை முடிஞ்சுது. மனிசி பாத்திட்டு "நாய் நல்லா நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு அலைஞ்சிருக்கு" என்று ஜோக்காக எடுத்துக் கொண்டு போய் விடுவாள்....!  tw_blush:

Link to comment
Share on other sites

On 24/11/2017 at 7:52 PM, suvy said:

இந்தக் கதையின் நாயகன் ஒரு வெறும் முட்டாள். இதேபோல ஒரு கடிதத்தை மனிசியின் பெட்டியில் இருந்து எடுத்தால் என்ன ஆட்டம் போட்டிருப்பார்.ஆனால் எல்லாத்துக்கும் ஒரு பரிகாரம் இருக்கு.....!

1) பழைய காதல் தடயங்களை முற்றாக அழிச்சிடனும்.அதையும் மீறி அவங்க கண்ணுல ஏதாவது தட்டுப்பட்டால், படும்  அப்போது அதுக்கு சொல்ல சரியான காரணம் ஒன்றை கைவசம் வைத்திருக்க வேண்டும்.

2) அந்தக் கடிதமே தான் வைத்திருக்க வேண்டுமென்றால் , அத்துடன் இன்னும் வேறு நாலைஞ்சு  பெயர்களில் வெவ்வேறு கடிதங்கள் எழுதி அதோடு சேர்த்து வைத்து விட்டால் பிரச்சினை முடிஞ்சுது. மனிசி பாத்திட்டு "நாய் நல்லா நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு அலைஞ்சிருக்கு" என்று ஜோக்காக எடுத்துக் கொண்டு போய் விடுவாள்....!  tw_blush:

:D நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.