Jump to content

இளைஞர்களின் முகநூல் பதிவுக்கு எதிராக வவுனியா வடக்கு பிரதேச செயலர் முறைப்பாடு


Recommended Posts

இளைஞர்களின் முகநூல் பதிவுக்கு எதிராக வவுனியா வடக்கு பிரதேச செயலர் முறைப்பாடு

 

Nedunkeni-2.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நெடுங்கேணி பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கு எதிராக வவுனியா வடக்கு பிரதேச செயலாளரினால் நெடுங்கேணி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யபட்டு உள்ளது.  வவுனியா வடக்கு பிரதேச செயலகம் முன்பாக நின்ற பழமையான மரம் ஒன்று வெட்டப்பட்ட நிலையில் அதன் கீழ் உள்ள மதிலில் ‘ மர நடுகை மாதம் ‘ எனும் தொனிப்பொருளில் பதாகை ஒன்று கட்டப்பட்டு உள்ளது.

அதனை அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் படம் பிடித்து தனது முகநூலில் பகிர்ந்து உள்ளார். குறித்த இளைஞன் பகிர்ந்த படத்தை மற்றுமொரு இளைஞன் தனது முகநூலில்  பகிர்ந்து பகிர்ந்துள்ளார்.

அவ்வாறு படத்தினை முகநூலில் பகிர்ந்தமை பிரதேச செயலகத்தை அவமான படுத்தியதாக காவல் நிலையத்தில் இரு இளைஞர்களுக்கு எதிராகவும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் இன்று வியாழக்கிழமை குறித்த இரு இளைஞர்களையும் , நெடுங்கேணி காவல்துறையினர் அழைத்து விசாரணைகளை மேற்கொண்டு உள்ளதுடன் பின்னர் நாளை வெள்ளிக்கிழமை இளைஞர்களின் மடிக்கணணியை கொண்டு வரும் படி பணித்துள்ளனர்.

Nedunkeni.jpg

http://globaltamilnews.net/archives/51188

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன கோதாரி? இதில என்ன தப்பு கிடக்கு.....இருக்கிற மரத்தை வெட்டாதையுங்கோ என்று சொல்ல வந்துள்ளார்கள் இளைஞர்கள்....இந்த பதிவை பார்த்து என்னையும் கைது செய்து போடுவாங்களோ தெரியல்ல‌

Link to comment
Share on other sites

பொதுமக்களது கருத்துச் சுதந்திரத்தைக் காவு வாங்கும் வவுனியா வடக்கு பிரதேச செயலக அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும்..

 

jpc.jpg

தற்போதைய சூழலில் சமூக ஊடகங்கள் என்பவை கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தின் புதியதொரு பரிமாணமாக பரந்துசெல்கின்றது. ஊடகவியலாளர்கள் மட்டுமே எழுதலாம்,பேசலாமென்ற எல்லையினை தாண்டி மக்கள் ஒவ்வொருவரும் தங்களது மனதில் தோன்றுவதை வெளிப்படுத்தும் கருத்துச்சுதந்திரத்தை அண்மைக்காலமாக சமூக ஊடகங்கள் தோற்றுவித்து வழங்கிவருகின்றன.

ஆனாலும் இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கதிரையேறும் அரசுக்களையும் அவர்களது முகவர்களையும் பொறுத்தவரையில் ஊடக சுதந்திரம் முதல் கருத்து சுதந்திரம் வரை விருப்பத்துக்குரிய ஒன்றாக என்றுமே இருப்பதேயில்லை. இதனால் தான் 44 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் அல்லது காணாமல் போகச்செய்யப்பட்டுள்ளனர். பலர் இன்றுவரை விசாரணைகள் என்ற பேரில் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

அண்மையில் இணைய செய்தி ஒன்றிற்காக இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொழும்பு வரை விசாரணைக்கு சென்றுவரவேண்டியிருந்தது. இதன் பின்னணியில் தமிழ் பெண் அமைச்சர் ஒருவர் இருந்திருந்த கதை வெளியே பலருக்கு தெரிந்திருக்கவுமில்லை.

இந்நிலையில் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்கு முன்பதாக காணப்பட்ட மரமொன்றின் கீழே ‘மரம் நடுகை மாதம்’ என்ற, பதாகை கட்டப்பட்டிருந்தது. சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்ற அர்த்தத்தை தரக்கூடிய அந்தக் காட்சியைக்கைபேசியில் படமெடுத்து அதனை முகப்புத்தகத்தில் பதிவேற்றியதுடன் அதனைப் பார்த்த பலர் பகிரவும் இளைஞர்கள் சிலர் வழி கோலியிருந்தார்கள்.

மறைப்பதற்கு ஏதுமற்ற பெருவெளியில் காணப்பட்ட தகவலொன்றை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்துவது பாரதூரமான குற்றமல்ல.தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை பெறுவதற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை அரசோ பிரச்சாரப்படுத்தி வருகின்றது.ஆனால் அதே அரசின் ஊதியம் பெறும் அதிகாரிகளோ பொதுவெளியில் காணப்பட்ட தகவல் தொடர்பில் முகநூலில் வெளிப்படுத்திய இளைஞர்கள் மீது அச்சுறுத்தும் வகையில் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.அடக்கு முறைகளின் நீட்சியான அவர்களது மனேபாவமே இதற்கு காரணமாக அமைந்துள்ளது.

கருத்து சுதந்திரத்திற்காக உயிர்களை ஆகுதியாக்கிய ஊடகத்துறையே தமிழர் தாயகத்தில் இருந்து வந்திருந்தது. அது தொடர்ந்தும் கருத்து சுதந்திரத்திற்காக ஓங்கி குரல் கொடுக்கும். பொதுமக்களது கருத்துச் சுதந்திரத்தைக் காவு வாங்கும் வவுனியா வடக்கு பிரதேச செயலக அதிகாரிகள் இதற்கான விளக்கத்தை பொது வெளியில் முன்வைக்க யாழ்.ஊடக அமையம் பகிரங்கமாக கோருகின்றது. அத்துடன் காவல்துறையில் முறைப்பாடு செய்வதென்ற இத்துப்போன உத்தி மூலம் இளைஞர் சமூகத்தை அச்சமூட்ட மேற்கொண்ட முயற்சிகளையும் யாழ்.ஊடக அமையம் வன்மையாக கண்டிக்கின்றது.

அத்துடன் ஊடக சுதந்திரத்திற்காக குரல் கொடுக்கும் அதேவேளை தமிழ் தேசிய சிந்தனை சார்ந்த சமூக நலன்களிற்கு குந்தகம் விளைவிக்காத கருத்து சுதந்தந்திரத்தை பேணிப்பாதுகாக்க யாழ்.ஊடக அமையம் உறுதியுடன் மக்களுடன் இணைந்து என்றுமே நிற்குமென்பதையும் அறியத்தருகின்றோம்.

இணைப்பாளர்
யாழ்.ஊடக அமையம்

http://globaltamilnews.net/archives/51268

Link to comment
Share on other sites

 முகநூல் பதிவுக்கு எதிராக பிரதேச செயலரால் செய்யப்பட்ட முறைபாட்டுக்கு , சிங்களத்தில் எழுதிய அறிக்கையில் கையொப்பம் வைக்க மிரட்டிய காவல்துறை

 

Nedunkeni-2.jpg

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வவுனியா வடக்கு பிரேதச செயலரால் இளைஞர்களின் முகநூல் பதிவு தொடர்பில்  காவல் நிலையத்தில் பதியப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட  காவல்துறையினர்  சிங்களத்தில் எழுதப்பட்ட கடிதம் ஒன்றில் கையொப்பம் வாங்கி கொண்டதாக குறித்த இரு இளைஞர்களும் தெரிவித்துள்ளனர்.

நெடுங்கேணி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் வவுனியா வடக்கு பிரதேச செயலகம் முன்பாக நின்ற பழமையான மரம் ஒன்று வெட்டப்பட்ட நிலையில் அதன் கீழ் உள்ள மதிலில் ‘ மர நடுகை மாதம் ‘ எனும் தொனிப்பொருளில் பதாகை ஒன்று கட்டப்பட்டு இருந்ததை படம் பிடித்து தமது முகநூலில் பதிவிட்டனர்.

அவ்வாறு படத்தினை முகநூலில் பகிர்ந்தமை பிரதேச செயலகத்தை அவமான படுத்தியதாக காவல் நிலையத்தில் இரு இளைஞர்களுக்கு எதிராக பிரதேச செயலரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் நேற்று வியாழக்கிழமை குறித்த இரு இளைஞர்களையும் , நெடுங்கேணி போலீசார் அழைத்து விசாரணைகளை மேற்கொண்டு உள்ளனர்.

அதன் பின்னர் இன்றைய தினமும் விசாரணைக்கு வருமாறு    காவல்துறையினர் ; இரு இளைஞர்களையும் அழைத்து மிரட்டும் தொனியில் விசாரணைகளை மேற்கொண்டனர் என இரு இளைஞர்களும் தெரிவித்தனர்.

அத்துடன்   விசாரணையின் முடிவில் தங்களை குற்றவாளிகள் என   காவல்துறையினர்  கூறினார்கள்  எனவும் பின்னர் முகப் புத்தகத்தில் எந்த பதிவுகளையும் பதிவிடமுன் பலரின் ஆலோசனை பெற வேண்டும்,  அரச கட்டிடத்தை படம் எடுக்க முடியாது அப்பிடி எடுப்பது சட்ட விரோத குற்றம் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும்  சமூகத்தில் படித்த மனிதர்கள் இப்பிடியான வேலைகள் செய்ய மாட்டார்கள் எனவும்  நீங்கள் தப்பு செய்து விட்டீர்கள் இந்த பிரச்சினை நீதிமன்றம் சென்றால் உங்களுக்கு அரசதொழில் இல்லாமல் போகும் எனவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன்  மரம் வெட்டுவம் பிடுங்குவம் இதை கேட்க நீங்கள் யார் ? படித்த பெரிய மனிதர் பிரதேச செயலர்  , அவர் காவல் நிலையம் வரமாட்டார் நாங்கள்தான் அங்கு போக வேண்டும் எனவும்  காவல்துறையினர்  கூறியதாகவும் குறித்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இறுதியாக விசாரணை அறிக்கை சிங்களதத்தில் எழுதப்பட்டு அதில் தம்மை கையொப்பம் வைக்க கோரினார்கள் எனவும் அதற்கு நாம் மறுப்பு தெரிவித்த போது தம்மை மிரட்டி அதில் கையொப்பம் வைக்க பணித்தார்கள் எனவும் இரு இளைஞர்களும் தெரிவித்தனர்.

நாம் முகநூலில் பகிர்ந்த புகைப்படத்தை பார்த்து  காதவல்துறையினர் தமக்குள்ள அதனை காட்டி தம்மையும் புகைப்படத்தையும் பார்த்து பார்த்து சிரித்தனர் எனவும் மேலும் அவர்கள் தெரிவித்தனர்.

http://globaltamilnews.net/archives/51188

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.