Jump to content

தேர்தல் ஆணையம், எங்களுக்கு சாதகமான தீர்ப்பையே வழங்கியுள்ளது! - முதல்வர் பளீச்


Recommended Posts

தேர்தல் ஆணையம், எங்களுக்கு சாதகமான தீர்ப்பையே வழங்கியுள்ளது! - முதல்வர் பளீச்

 
 
Chennai: 

பெரும்பான்மை உறுப்பினர்கள் எங்கள் பக்கம் இருப்பதால், 'இரட்டை இலை' சின்னம் விவகாரத்தில், தேர்தல் ஆணையம் தங்களுக்கு சாதகமான தீர்ப்பையே அளித்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

EPS_new_14259.jpg

 


சென்னையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்ட ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ’பெரும்பான்மையான நிர்வாகிகளின் ஆதரவு அடிப்படையில், தேர்தல் ஆணையம் எங்களுக்கு சாதகமான தீர்ப்பை அளித்துள்ளது. 90 சதவிகித நிர்வாகிகள் எங்களுக்கே ஆதரவளித்து வருகின்றனர்’ என்றார்.

WhatsApp_Image_2017-11-23_at_1.39.22_PM_

 


'பா.ஜ.க தலையீட்டின் பேரிலேயே இரட்டை இலை சின்னம் உங்களுக்கு ஒதுக்கப்பட்டது' என்று குற்றம் சாட்டப்படுவதாக பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ‘அது தவறு. பெரும்பான்மையான எம்.எல்.ஏ-க்கள், எம்.பிக்கள்., கட்சித் தொண்டர்கள் எங்களுடன் இருக்கின்றனர். இவர்கள் அனைவரையும் விசாரித்தே தேர்தல் ஆணையம் எங்களுக்கு சாதகமான தீர்ப்பை அளித்துள்ளது’ என்றார். தேர்தல் ஆணையத்தின் தீர்ப்புகுறித்த தகவலால், சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகம் முன்பாக, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் குவிந்துவருகின்றனர். இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் அவர்கள் கொண்டாடுகின்றனர்.

https://www.vikatan.com/news/tamilnadu/108681-ec-has-given-judgement-in-our-favour-tn-cm-edappadi-k-palaniswami-on-two-leaves-symbol.html

Link to comment
Share on other sites

இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைத்துள்ளது; தேர்தல் ஆணையம் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது: முதல்வர் பழனிசாமி

 

 
twojpg

இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் தங்கள் அணிக்கு ஒதுக்கியுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "எங்கள் அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. நாங்கள் கொடுத்த ஆதாரங்களை பரிசீலித்து தேர்தல் ஆணையம் நல்ல, நியாயமான தீர்ப்பை வழங்கியுள்ளது. எங்கள் பக்கம் நியாயம் இருந்ததாலேயே இரட்டை இலை சின்னம் எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

90% நிர்வாகிகள் எங்கள் பக்கம் உள்ளனர். இரட்டை இலை சின்னம் கிடைத்ததன் பின்னணியில் மத்திய அரசு இருக்கிறது என்பது தவறான கருத்து" எனத் தெரிவித்தார்.

முன்னதாக, இரட்டை இலை சின்னத்தை அதிமுகவின் ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிக்கு ஒதுக்குவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாயின. ஆனால், இதுதொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகமல் இருந்தது. இந்நிலையில், முதல்வர் பழனிசாமியே இரட்டை இலை சின்னம் தங்கள் அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

இதன்மூலம் கட்சியின் பெயர், கட்சியின் சின்னம், கட்சியின் லெட்டர் பேடு என அனைத்தையும் அதிகாரபூர்வமாக பயன்படுத்துவதற்கான உரிமை ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிக்கு கிட்டியுள்ளது.

சின்னத்துக்கான போட்டி..

முதல்வராகவும் அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ம் தேதி மறைந்தார். அவரது மரணத்தைத் தொடர்ந்து அதிமுக இரு அணிகளாக பிரிந்தன. அதனைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது இரட்டை இலை சின்னத்துக்கு இரு தரப்பும் உரிமை கோரியதால் தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது.

சின்னம் முடக்கப்பட்ட பிறகு சசிகலா, தினகரனுக்கு ஆதரவாக இருந்த முதல்வர் பழனிசாமி அணியினர் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் இணைந்தனர். இதனால் பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஒரு அணியாகவும் டிடிவி தினகரன் தரப்பினர் தனி அணியாகவும் பிரிந்து, இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி வந்தனர்.

இருதரப்பும் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்த நிலையில் நீண்ட காலமாக விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இன்று (நவம்பர் 23, 2017) அன்று தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆர்.கே.நகர் தேர்தலுக்காக..?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் கடந்த 11 மாதங்களாக காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் டிசம்பர் 31-க்குள் இடைத்தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் பாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கான இறுதி முடிவை எடுக்க, தமிழக தலைமைத் தேர் தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இரு தினங்களில் டெல்லி செல்கிறார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை விரைவில் நடத்துவதற்கு ஏதுவாக இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் இன்று இந்த முடிவை அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இரட்டை இலை துளிர்த்த கதை..

திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கு 1973-ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. புதிதாகத் தொடங்கப்பட்ட அதிமுக அந்தத் தொகுதியில் போட்டியிடும் என்று அறிவித்தார் எம்.ஜி.ஆர். வேட்பாளரின் செல்வாக்கு, சாதி பலம் என்பன உள்ளிட்ட அம்சங்களைக் கணக்கிட்டுப் பார்த்த எம்ஜிஆர், மாயத்தேவரை வேட்பாளராக அறிவித்தார்.

அப்போது தனக்கான சின்னத்தைத் தேர்வுசெய்ய மதுரை மாவட்ட ஆட்சியரை அணுகினார் வேட்பாளர் மாயத்தேவர். அப்போது அவரிடம் 16 சுயேச்சை சின்னங்கள் காட்டப்பட்டன. அவற்றிலிருந்து இரட்டை இலையைத் தேர்வுசெய்தார் மாயத்தேவர். அந்த இடைத்தேர்தலில் மாயத்தேவர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அப்போது அண்ணா கண்ட உதயசூரியன் சின்னம் மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டது.

இரட்டை இலை அதிகாரபூர்வமான சின்னமாக மாறியதும் அதைச் சுவர்களில் வரைந்து மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்தினர் தொண்டர்கள். மக்களைச் சந்திக்கும் போது கைகூப்புவதுபோல இரட்டை விரல்களைக் காட்டுவதை வழக்கமாக்கிக்கொண்டார் எம்ஜிஆர். அதே வேகத்தில் 1974-ல் கோவை மேற்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தபோது, அதிமுக வேட்பாளரான அரங்கநாயகம் இரட்டை இலையில் வெற்றிபெற்று முதன்முறையாகச் சட்டமன்றத்துக்குள் நுழைந்தார். 1977-ல் நடந்த மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றது அஇஅதிமுக.

http://tamil.thehindu.com/tamilnadu/article20688372.ece?homepage=true

Link to comment
Share on other sites

தேர்தல் ஆணையம்மீது டி.டி.வி.தினகரன் சரமாரி புகார்! உச்ச நீதிமன்றத்துக்கு செல்வேன் என அறிவிப்பு

 
 

இரட்டை இலைச் சின்னத்தை பழனிசாமி அணிக்கு ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம் என்று டி.டி.வி. தினகரன் கூறினார்.

டி.டி.வி.தினகரன்

 
 


இரட்டை இலைச் சின்னத்தை முதல்வர் பழனிசாமி அணிக்கு ஒதுக்கீடுசெய்து தேர்தல் ஆணையம் இன்று உத்தரவு பிறப்பித்தது. கட்சியின் பெயர் மற்றும் கொடியை அந்த அணியே பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டது. 

இந்தத் தீர்ப்புக்குப்பின் சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி. தினகரன், “தேர்தல் ஆணையம் நடுநிலையாக நடக்கவில்லை. மத்திய அரசின் விருப்பப்படியே செயல்பட்டது. இரட்டை இலைச் சின்னத்தை முடக்குவதில் தேர்தல் ஆணையம் குறியாக இருந்தது. 122 எம்.எல்.ஏ-க்கள் மற்றும் 37 எம்.பி-க்கள் ஆதரவுடன் இருந்தபோது, சின்னத்தை ஏன்  முடக்கினார்கள். தேர்தல் ஆணைய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்வோம். 

குஜராத் மாநில தலைமைச் செயலாளராக இருந்தவர் இப்போது தேர்தல் ஆணையத் தலைவராக இருக்கிறார். இதிலிருந்தே உங்களால் புரிந்துகொள்ள முடியும். சின்னம் யாருக்கு என்பதை அடிப்படை உறுப்பினர் ஆதரவைக் கொண்டுதான் முடிவுசெய்ய வேண்டும். ஆனால், அது நடைபெறவில்லை. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நாங்கள் கட்டாயம் போட்டியிடுவோம். நிர்வாகிகள் ஆதரவுடன் நான் ஆர்.கே. நகரில் போட்டியிடுவேன். இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுப்போம். பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்ட மத்திய அரசு இப்போது எடப்பாடிக்கு ஆதரவாக செயல்பட்டுவருகிறது. பன்னீர்செல்வம் இப்போது திரிசங்கு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அதனால்தான் மைத்ரேயன் போன்றவர்கள் எதிர்க்குரல் எழுப்பிவருகிறார்கள்” என்றார்.

https://www.vikatan.com/news/tamilnadu/108701-appeal-supreme-court-to-oppose-the-verdict-of-election-commission-ttv-dinakaran.html

Link to comment
Share on other sites

'ஜெ.தீபா அடிப்படை உறுப்பினர்கூட இல்லை'- தேர்தல் ஆணையம் பளீச்

 

இரட்டை இலைச்சின்னம் வழக்கில் இன்று தீர்ப்பு கூறிய தேர்தல் ஆணையம், 'ஜெ.தீபா அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர்கூட இல்லை' என்று கூறி அவர் தரப்பு வாதங்களை நிராகரித்துள்ளது.

ஜெ.தீபா

 
 

இரட்டை இலைச் சின்னத்தை முதல்வர் பழனிசாமி அணிக்கு ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் இன்று தீர்ப்பு வழங்கியது. ஜெயலலிதா மறைவுக்குப்பின் அ.தி.மு.கவில் பிளவு ஏற்பட்டபோது, அதில் ஒரு தரப்பினர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவுக்கு ஆதரவு அளித்தனர். அவருடைய வீட்டின் முன்பு கூட்டம் திரண்டது. இதையடுத்து, அரசியலில் ஈடுபடப்போவதாக ஜெ.தீபா அறிவித்தார். எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அரசியல் இயக்கத்தைத் தொடங்கினார். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டு, தேர்தல் ஆணையத்துக்கு வழக்கு போனபோது, இரட்டை இலைச் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஜெ.தீபா தரப்பில் தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டது. சுமார் 20,000 ஆயிரம் பிரமாணப் பத்திரங்கள் அந்த அணி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் தாக்கல்செய்யப்பட்டன.

ஜெ.தீபா தரப்பு கோரிக்கையை தேர்தல் ஆணையம் அடியோடு நிராகரித்துள்ளது. ஜெ. தீபா அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர்கூட இல்லை என்பதால் அவர் தரப்பு வாதங்களை கணக்கில் கொள்ளவில்லை என்று தனது தீர்ப்பில் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 

https://www.vikatan.com/news/tamilnadu/108705-jdeepa-not-a-member-in-aiadmk-election-commission.html

 

 

இரட்டை இலைச் சின்னம் பழனிசாமி அணிக்கு வழங்கியது ஏன்? தேர்தல் ஆணையத்தின் 83 பக்க தீர்ப்பு

 
 

இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி அணிக்கே என்று தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ சின்னமான இரட்டை இலைக்கு சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உரிமை கோரியதால், அதை முடக்கி கடந்த மார்ச் 22-ல் தலைமைத் தேர்தல் ஆணையம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிகள் இணைந்தன. அதன்பின்னர் இரு அணிகள் இணைந்து பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்தன. சசிகலா தரப்பிலும் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

 

இரட்டை இலை


இந்த வழக்கை தேர்தல் ஆணையம் விசாரித்துவந்தது. விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டது போல எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அணிக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கீடுசெய்து தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. தீர்ப்பை மொத்தம் 83 பக்கங்களில் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. சாதிக் அலி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. 

மதுசூதனன் தலைமையிலான அ.தி.மு.கவுக்கு இரட்டை இலைச்சின்னம் வழங்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. ஏனெனில், அ.தி.மு.க சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என இரு பிரிவாக பிரிந்தபோது, பன்னீர்செல்வம் தரப்பில் அவைத்தலைவர் மதுசூதனன் பேரில்தான் இரட்டை இலைச் சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டது. பழனிசாமி, பன்னீர்செல்வம் அணிகள் இணைந்த பின்னர், அவரின் பெயரில்தான் வழக்கு நீடித்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவின் மூலம் பழனிசாமி அணி இனி அ.தி.மு.க என்ற பெயரைப் பயன்படுத்த முடியும். முன்னர் இந்தப் பெயரைப் பயன்படுத்துவதற்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது. அ.தி.மு.க. அம்மா, புரட்சித்தலைவி அம்மா என்ற பெயரிலேயே அ.தி.மு.க அணிகள் வழங்கப்பட்டுவந்தன. 

இரட்டை இலை

 


இரட்டை இலைச் சின்னம் வழங்கப்பட்ட அணிக்கு மக்களவையில் 34 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 8 உறுப்பினர்களும், மாநில சட்டசபையில் 111 உறுப்பினர்களும் இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தி உள்ளது. 

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் அ.தி.மு.க ஜெ.அணி, ஜானகி அணி என இரண்டாகப்பிரிந்தது. அப்போது இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. பின்னர் ஜெ. அணிக்கு இரட்டை இலைச்சின்னம் ஒதுக்கப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப்பின் இரண்டாவது முறையாக இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. முடக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னம் மீண்டும் கிடைத்திருப்பது அ.தி.மு.க-வில் எடப்பாடி அணியினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. அதேசமயம், டி.டி.வி. தினகரன் தலைமையிலான சசிகலா அணியினருக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.

https://www.vikatan.com/news/india/108696-two-leaf-symbol-allottedto-edappadis-party-made-them-happy.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சீமான் உட்பட எவருமே தங்கம் இல்லை. ஆகவே இவரும் மாற்று இல்லை. ஒரு கள்ளனை இன்னொரு கள்ளனால் பிரதியிடுவது அல்ல மாற்று. ஓம். ஏன் எண்டால் அவர் சின்ன கருணாநிதி என நான் எப்போதோ அடையாளம் கண்டு கொண்டதால்.
    • இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.