Jump to content

ஐரோப்பிய வார இறுதி கால்பந்தாட்ட செய்திகள்


Recommended Posts

வென்றது பரிஸ் ஸா ஜெர்மைன்
 

image_ff8a3c8f2f.jpg

பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லீக் 1 தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டியொன்றில் பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றுள்ளது.

பரிஸ் ஸா ஜெர்மைன், 4-1 என்ற கோல் கணக்கில், நன்டீஸை வென்றது. பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாக, எடின்சன் கவானி இரண்டு கோல்கலையும் ஏஞ்சல் டி மரியா, ஸ்கேவியர் பஸ்டோரே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.

அந்தவகையில், இப்போட்டியின் முடிவில் 35 புள்ளிகளைப் பெற்றுள்ள பரிஸ் ஸா ஜெர்மைன், லீக் 1 புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்திலுள்ளது. பரிஸ் ஸா ஜெர்மனை விட நான்கு புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ள மொனாக்கோ இரண்டாமிடத்தில் காணப்படுகின்றது.

 

நாப்போலி, றோமா வென்றன
 

image_0cadb50dd0.jpg

இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டியில், நாப்போலி, றோமா ஆகியன வென்றன.

நாப்போலி, 2-1 என்ற கோல் கணக்கில், ஏ.சி மிலனை வென்றது. நாப்போலி சார்பாக, லொறென்ஸோ இன்சீனியா, பியோட்டர் ஸிலின்ஸ்கி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.  ஏ.சி மிலன் சார்பாகப் பெறப்பட்ட கோலை அலெஸ்ஸியோ றோமக்னோலி பெற்றார்.

றோமா, 2-1 என்ற கோல் கணக்கில், லேஸியோவை வென்றது. றோமா சார்பாக, டியகோ பெறோட்டி, றட்ஜா நைங்கொலன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். லேஸியோ சார்பாகப் பெறப்பட்ட கோலை சிரோ இம்மொபைல் பெற்றார்.

 

சமநிலையில் றியல், அத்லெட்டிகோ போட்டி
 

image_845d2da0ed.jpg

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற றியல் மட்ரிட், அத்லெட்டிகோ மட்ரிட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையிலேயே குறித்த போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இப்போட்டியில் இரண்டு அணிகளின் பின்கள வீரர்களும் சிறப்பாகச் செயற்பட்டிருந்த நிலையில், போட்டியின் மூன்றாவது நிமிடத்தில் கிடைத்த கோல் பெறும் வாய்ப்பை அத்லெட்டிகோ மட்ரிட்டின் ஏஞ்சல் கொரேரா வீணாக்கியிருந்தார். றியல் மட்ரிட்டின் கோல் எல்லைப் பகுதியில் எதுவித அழுத்தமுமில்லாமலிருந்த ஏஞ்சல் கொரேரா, தனது உதையை கோல் கம்பத்துக்கு வெளியே செலுத்தியிருந்தார்.

இதேவேளை, அத்லெட்டி மட்ரிட்டின் கெவின் கமெய்ரோவின் உதையை, றியல் மட்ரிட்டின் பின்கள வீரர் ரபேல் வரானே தடுத்திருந்ததுடன், றியல் மட்ரிட்டின் மத்தியகள வீரர் டொனி குரூஸின் உதையை, அத்லெட்டிகோ மட்ரிட்டின் கோல் காப்பாளர் ஜான் ஒப்பிளக் தடுத்திருந்தார்.

இந்நிலையில், இப்பருவகால லா லிகாவில் தடுமாறிவரும் றியல் மட்ரிட்டின் முன்கள வீரர்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ, கரிம் பென்ஸீமா மற்றும் அத்லெட்டிகோ மட்ரிட்டின் அந்தோனி கிறீஸ்மன் ஆகியோர் இப்போட்டியிலும் பிரகாசிக்கவில்லை.

இதேவேளை, நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில், 3-0 என்ற கோல் கணக்கில் லெகனிஸை பார்சிலோனா வென்றிருந்தது. பார்சிலோனா சார்பாக லூயிஸ் சுவாரஸ் இரண்டு கோல்களையும் போலின்ஹோ ஒரு கோலையும் பெற்றனர்.

அந்தவகையில், லா லிகா புள்ளிகள் தரவரிசையில் 34 புள்ளிகளுடன் முதலிடத்தில் பார்சிலோனா காணப்படுகின்றது. பார்சிலோனாவை விட 10 புள்ளிகள் குறைவாக, 24 புள்ளிகளைப் பெற்றுள்ள றியல் மட்ரிட்டும் அத்லெட்டிகோ மட்ரிட்டும் முறையே மூன்றாம், நான்காமிடங்களில் காணப்படுகின்றன.

 

வென்றது இன்டர்; தோற்றது ஜுவென்டஸ்
 

image_27a1986a02.jpg

இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ கால்பந்தாட்டத் தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில், இன்டர் மிலன் வென்றுள்ளதுடன், ஜுவென்டஸ் தோற்றுள்ளது.

இன்டர் மிலன், 2-0 என்ற கோல் கணக்கில் அட்லாண்டாவை வென்றது. இன்டர் மிலன் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் அவ்வணியின் தலைவர் மெளரோ இகார்டி பெற்றிருந்தார்.

ஜுவென்டஸ், 2-3 என்ற கோல் கணக்கில், சம்ப்டோரியாவிடம் தோல்வியடைந்தது. சம்ப்டோரியா சார்பாக, டுவன் ஸபட்டா, லூகாஸ் டொரெய்ரா, ஜியமர்கோ பெராரி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஜுவென்டஸ் சார்பாக, கொன்ஸலோ ஹியூகைன், போலோ டிபாலா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

அந்தவகையில், இப்போட்டிகளின் முடிவில், சீரி ஏ புள்ளிகள் தரவரிசையில் 35 புள்ளிகளுடன் முதலிடத்தில் நாப்போலியும் 33 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் இன்டர் மிலனும் 31 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் ஜுவென்டஸும் காணப்படுகின்றன.

http://www.tamilmirror.lk

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருப்பார்கள். ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
    • வேடிக்கையை விட, இதில் யதார்தத்தை குறும்பாக சொல்வதுதான் தொனிக்கிறது. என்னதான் வெளி உலகில் கணவன் ஆண்டான் மனைவி அடிமை என அன்றைய சமூகம் கட்டமைத்து வைத்திருந்தாலும், நிஜ வாழ்வில், வீட்டுள், இந்த இறுக்கங்கள் இருப்பதில்லை என்ற முரண்நகையை கேலியாக சொல்கிறதென நான் நினைக்கிறேன். டெல்லிக்கு ராஜா, வீட்ல வேலைக்காரன் என்பதை போல. Nobody is perfect; I am nobody. இதை நெப்போலியனின் கூற்று என்பார்கள். இதன் அர்த்தம் I am perfect என்பதாக வரும். இதுவும் வார்த்தை ஜாலம் wordplay யே ஒழிய சிரிப்பு வரும் விசயம் இல்லை. தத்தக்க பித்தக்க நாலு கால், தாவி நடக்க இரெண்டு கால், ஒட்டி முறிந்தால் மூன்று கால், ஊருக்கு போக எட்டுக் கால்.
    • சிறிய வயது பெட்டைகள் இந்தா பார் செய்து காட்டுகிறேன் என்று சவால் விட்டுட்டுப் போயிருப்பார்கள். மூட்டை மூட்டையாக தூக்கிக் கொண்டு போறதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை மட்டும் மடக்கி பிடித்திருக்கிறார்கள். கட்டாருடன் கதைத்து 7 பேரை விடுதலை செய்த மாதிரி ஜெய்சங்கர் வந்து கதைத்து இவர்களையும் விடுவிக்க வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.