Sign in to follow this  
நவீனன்

சன்கிரி- லா ஹோட்டல்

Recommended Posts

சன்கிரி- லா ஹோட்டல்

1-ba735457812f7005199fce929b651e3fa2dbfb19.jpg

சன்கிரி- லா ஹோட்டல் கொழும்பு அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த மாபெரும் உத்தியோகபூர்வ திறப்பு விழா வைபவத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோ ருடன், அமைச்சர்கள், அரச அதிகாரிகள், சன்கிரி-லா முகா மைத்துவத்தின் முக்கிய உறுப்பினர்கள், விசேட அதிதி கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், வர்த்தகப் பங்காளிகள் உட்பட பெருந்தொகையானோர் கலந்து கொண்டனர். 

வன் கோல்பேஸ் என்ற முகவரியைக் கொண்டுள்ள சன் கிரி-லா ஹோட்டல் கொழும்பு, இக்குழுமத்தின் இரண் டாவது இலங்கை முதலீடாகக் காணப்படுகிறது. வருடம் முழுவதும் பார்த்து ரசிக்கக்கூடிய கடற்கரைகள், வர லாறு மற்றும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்கள், இயற்கை மற்றும் வன ஜீவராசிகள் என்பன இலங் கையில் சுற்றுலா பயணிகளைக் கவர்ந்து வருகின்றமை இங்கு பிரதானமாக விளக்கப்பட்டது. நகரத்திற்கு புதிய சுபீட்சத்தைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் 500 விருந்தினர் அறைகள் மற்றும் சுவீற் அறைகளையும், 41 சேவை வழங்கும் அபார்ட்மன்ட் தொகுதிகளையும் கொண்டுள்ளது. 

நவீன அமைப்பைக் கொண்டுள்ள விருந்தினர் அறை களுடன், கடற்கரைக்குப் பொருத்தமான மண் நிற மற்றும் அது சார்ந்த வர்ணங்களை அது கொண்டுள்ளது. 42 சதுர மீற்றர் முதல் 210 சதுர மீற்றர் வரையிலான அளவுகளில் அதிசொகுசு கண்ணாடிக் கற்கள் பொருத்தப்பட்ட இந்த அறைகள் இலங்கைக்கு ஒரு புதிய பெறுமானத்தைப் பெற்றுக் கொடுக்கிறன. 

ஹோட்டலின் முதல் மூன்று மாடிகளில் ஹொரைஸன் கிளப் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் தங்கியிருப்போர் பிரவேசிக்கும் வசதி, காலை உணவு, கொக்டேல்கள், கிளப்புக்கான கொன்ஸியாஜ் சேவைகள் மற்றும் 32 ஆம் மாடியில் அமைந்துள்ள நாட்டின் ஒரேயொரு பிரத்தியேக பிரவேசத்தைக் கொண்ட ஹொரைஸன் கிளப் லவுஞ்ச்க்கு பிரவேசிக்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளன.

உயர்மட்ட வாழ்க்கைத் தரத்தைக் கொண்டோருக்கான 34 சுவீற்களைக் கொண்ட இந்த ஹோட்டலில், தனிப்பட்ட சேவைக்கென தனியான ஒரு பணியாளர் மற்றும் ஹொரைஸன் கிளப் லவுஞ்ச்க்கான பிரவேசிக்கும் வசதி என்பன வழங்கப்பட்டுள்ளன. ஒன்று, மூன்று படுக்கை அறைகள் கொண்ட விசேட சுவீற்களில் இந்து சமுத்திரத்தை இரசிக்கக்கூடிய வகையிலான அமைப்புகள். மிகப் பெரிய சன்கிரி-லா சுவீற் ஆனது, 210 சதுர மீற்றர்களைக் கொண்ட மூன்று படுக்கை அறைகளுடன் சமப்படுத்த முடியாத வசதிகளைக் கொண்டுள்ளது.

நீண்ட நாட்கள் தங்கியிருக்கும் விருந்தினர்கள், இரட்டை படுக்கை அறைகளைக் கொண்ட சேவை வழங்கும் அபார்ட்மண்ட்களில், முழுமையான வீட்டு உபகரணங்களுடன் கூடிய சமையலறை மற்றும் பாவனை அறைகளுடனான 41 அபார்ட்மண்ட்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

கொழும்பு நகரில் உணவு உட்கொள்ளும் அனுபவத்தை உயர் மட்டத்திற்கு இட்டுச் செல்ல எதிர்பார்க்கப்படும் இங்கு 06 ஹோட்டல் ரெஸ்டூரண்டுகளும், பார்களும் அமைக்கப்பட்டுள்ளன. ‘டேபிள் வன்’ என்ற பெயரிலான ஹோட்டலின் பெறுமதி மிக்க முகவரியான ‘வன் கோல்பேஸைக்’ குறிக்கும் இங்கு, கலந்து சமைக்கும் அனுபவத்தையும் பெற்றுக் கொடுக்கக்கூடிய வகையில் அமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கறுவா மரத்தினால் தயாரிக்கப்பட்ட விசேட சீலிங் மற்றும் உணவு உட்கொள்ளும் இடங்கள் காலை முதல் நள்ளிரவு வரை திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

இந்த ஹோட்டலில் செங் பெலஸ் சைனீஸ் ரெஸ்டூரண்டும் அமைந்துள்ளது. சீனாவின் சிஹெயுவான் இல்லங்களின் அமைப்பை ஒத்ததாக, பாரம்பரிய மரங்களினாலான கைமரங்கள் பயன்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளன. இது வரலாற்று நிகழ்ச்சிகளைக் குறிக்கக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது. இந்த ரெஸ்டூரண்டின் மத்தியில் உள்ள வாத்து வடிவிலான விறகு அடுப்பானது, வாத்து உணவு வகைகள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. சிச்சுவான், டொங்பி மற்றும் கென்டொன் ஆகிய பகுதிகளின் பாரம்பரிய உணவு வகைகளை சங் பெலஸில் பெற்றுக்கொள்ள முடியும். இதில் டிம் சம் சமையலறை, சந்தை வடிவிலான நண்டு சமையலறை மற்றும் தனிப்பட்ட உணவு உட்கொள்ளும் அறைகள் என்பனவும் காணப்படுகின்றன.

நாகரிக அம்சங்களுடனான 204 ஆசனங்களைக் கொண்ட ‘கெப்பிட்டல் பார் அன்ட் கிறில்’ இறைச்சி வகைகள், கிறில் செய்யப்பட்ட கடல் உணவுகள் என்பனவற்றுடன் நகரின் அதிகூடிய விஸ்கி வகைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். இங்கு வரும் விருந்தினர்களுக்கு தொடர்ச்சியாக புத்துயிர் அளிக்கக்கூடிய ‘ஜாஸ்’ இசைக் கலைஞர்களின் திறமைகளைக் கண்டு இரசிப்பதோடு, 'த வைற் ரூம்" இல் தனிப்பட்ட உணவு உட்கொள்ளலையோ 'புளு ரூம்" இல் சமையலறைக் காட்சியுடனான உணவு உட்கொள்ளலையோ அனுபவிக்க முடியும்.

இலங்கையின் உணவு வகைகளைக் கொண்ட ரெஸ்டூரண்ட் மற்றும் ஒரு பார் ஆக செயற்படும் ‘கேம சூத்ர’ வில் செலிபிரிட்டி செப் தர்ஷன் முனிதாச கடமையாற்றுகிறார்.

 இலங்கையின் வாசனை மிகுந்த கறிச்சரக்குகள், உணவு பதனூட்டிகள் என்பனவற்றுடன் பாரம்பரிய சமையல் நுட்பங்களைப் பயன்படுத்தி, பல்வேறு பகுதிகளின் உணவு வகைகள் இங்கு தயாரிக்கப்படுகின்றன. இந்தப் பகுதி, யானைகளின் வடிவங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. பண்டைய கால வரலாற்றுக் கதைகளில் வரும் கதாபாத்திரங்களின் முகமூடிகளும் இங்கு பொருத்தப்பட்டுள்ளன. மேலும், தீப்பந்தம் வடிவிலான வெளிச்ச அமைப்பும் கொடுக்கப்பட்டு தீவின் அனுபவமும் இங்கு பெற்றுக்கொடுக்கப்படுகிறது.

சபிர் லவுஞ்ச்சில் மாலை நேர தேநீர் விசேட

மாகத் தயாரிக்கப்பட்டு, ஆபரணங்கள் வடிவி

லான பாத்திரங்களில் பரிமாறப்படுகிறது. 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/vanika-ula/2017-11-20#page-1

Share this post


Link to post
Share on other sites

 சிறப்பாக கவனிக்கப்பட்ட மஹிந்த குடும்பம்

 

கொழும்பில் திறந்து வைக்கப்பட்ட பாரிய ஹோட்டலுக்கு மஹிந்த குடும்பம் நேற்று விஜயம் செய்துள்ளது.

கொழும்பு காலிமுகத்திடலில் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ள Shangri-La ஹோட்டலை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது 71வது பிறந்த தினத்தை நேற்று கொண்டாடினார்.

இதன்போது Shangri-La ஹோட்டலுக்கு அழைக்கப்பட்ட மஹிந்த அங்கு பிறந்த நாள் கொண்டாடியுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் மைத்திரிக்கு இணையாக மஹிந்தவும் மீண்டும் ஹோட்டலை திறந்து வைத்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஹோட்டல் திறக்கப்பட்ட அன்று மஹிந்த குடும்பத்தினரை அழைத்து மீண்டும் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. எனினும் நேற்றையதினம் மஹிந்தவின் பிறந்தநாள் என்பதால் அன்றையதினம் மஹிந்தவினை அழைக்குமாறு Shangri-La Colombo ஹோட்டலின் நிர்வாகியும் கோடீஸ்வர வர்த்தகருமான Sajad Mawzoon ஹோட்டல் நிர்வாக குழுவிடம் உத்தரவிட்டுள்ளார்.

அதற்கமைய நேற்று இரவு மஹிந்த உட்பட குடும்பத்தினருக்கு இராப்போசனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிரபல சீன உணவுகள் உட்பட பல பாரம்பரிய உணவுகள், பெறுமதியான மதுபானங்கள் நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எனினும் கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வின் போது ஜனாதிபதி, பிரதமர் உட்பட குழுவினரை 32 ஆம் மாடிக்கு அழைத்து சென்று தேனீர் விருந்து ஒன்றே வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்வு அறைக்கு மஹிந்த செல்லும் போது, எங்கள் ஜனாதிபதி என அவரை Sajad Mawzoon வரவேற்றுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

625.0.560.320.160.600.053.800.700.160.90625.0.560.320.160.600.053.800.700.160.90625.0.560.320.160.600.053.800.700.160.90625.0.560.320.160.600.053.800.700.160.90

கடந்த மஹிந்த ஆட்சியின் போது சீனாவின் மிகவும் நெருக்கிய நண்பான மஹிந்தவினால், குறித்த ஹோட்டல் அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.quicknewstamil.com

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this