Jump to content

கிந்தோட்டை கலவரம் - ஓர் விரிவான அலசல் இதோ.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Untitled.jpg
 
நான்கு கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டமைந்த, சிங்களக் குடும்பங்கள் உட்பட சுமார் 2000 குடும்பங்கள் வாழும், 
 
 
மிகவும் அபூர்வமாக ஒரு சில சம்பவங்கள் நடந்தாலும் உடனடியாக அப்பிரச்சினை தீர்க்கப்பட்டு சுமூக நிலைக்குத் திரும்பும் அளவுக்கு பக்குவப்பட்டிருந்த ஒரு ஊரில் இப்படி ஒரு பேரவலம் ஏற்பட்டது
உண்மையிலே கவலைக்குரிய ஒரு விடயமாகும்.
 
இச்சிறு சம்பவம் பூதாகரமாக்கப்படுவதற்கு சமூக வலைதளங்களும், இனவாதத்தினை வௌிப்படையாகவே போதிக்கும் சில பௌத்த காவிகளுமே காரணமாகும்.
 
கடந்த சில தினங்களுக்கு முன் இடம்பெற்ற ஒரு வீதி விபத்தே இப்பிரச்சினையின் மூல காரணமாக இருந்தது என்றாலும் இதற்குப் பின்னால் அரசியல் உள்நோக்கங்களும் இல்லாமல் இல்லை என்பது ஊரிலுள்ள புத்திஜீவிகளினதும், பொதுமக்களினதும் அபிப்பிராயமாகும்.
 
 
விடயத்திற்கு வருவோம். பாதையில் சென்று கொண்டிருந்த ஒரு முஸ்லிம் தாயினையும், அவரது சிறிய மகளையும் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த ஒரு சிங்கள இளைஞன் முட்டி மோதியதே பிரச்சினையின் மூல காரணமாகும்.
 
குறித்த இளைஞன் அவ்வேளை சாராயம் அருந்தியிருந்ததாகவும் சந்தர்ப்பத்தின் போது வீற்றிருந்த மக்கள் சொல்கின்றனர். வழமையாகவே இச்சிங்கள இளைஞன் மக்களை எரிச்சலடையச் செய்யும் வகையிலும், பிரச்சினையொன்றை வலுக்கட்டாயமாகவே உருவாக்கிக் கொள்வதற்கும் இவ்வாறு மிக வேகமாகப் பயணிப்பதனை தனது வாடிக்கையாகக் கொண்டவன்.
 
இவனைப் போலவே வம்புக்கிழுப்பதற்கென்றே சில சிங்கள இளைஞர்கள் பாதைகளில் மிகப் பயங்கர வேகத்துடன் பயணிப்பது தினமும் நடைபெறும் ஒரு விடயமானாலும் அதனை ஊரிலுள்ள முஸ்லிம்கள் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.
 
 மறுபக்கம், முஸ்லிங்களும் பாதைகளில் நிறைந்து கொண்டு போக்குவரத்திற்கு சில நேரங்களில் அஷௌகரீகமாக நடந்து கொள்வதனையும் மறுப்பதற்கில்லை.
 
 
பொதுவாக, வாகன விபத்துக்கள் ஏற்பட்டால் பாதசாரிகளின் பக்கம் பிழை இருந்தாலும், உயிருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து குறித்த வாகன உரிமையாளரை எச்சரிப்பது அல்லது தாக்குவது தான் இலங்கை போன்ற மூன்றாம் மண்டல நாடுகளின் வழமை. இதனை இலங்கையில் எந்தப் பகுதியிலும் காணலாம். இப்படியான விபத்துக்களின் போது கொதிநிலையடையும் பொதுமக்கள் குறித்த வாகனத்தினை எரியூட்டுவதனையும், தன் பக்கம் பிழை இல்லை என்றாலும் வாகன சாரதி தப்பி ஒழித்து ஓடுவதும் இலங்கையில் சர்வசாதாரணமாக நடக்கும் ஒரு விடயம்.
 
 
குறித்த இந்த சம்பவத்தில் அந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனின் மேலே முழுத் தவறும் இருந்தது. மோதுண்ட மறுகணவே அந்த சிங்கள இளைஞன் குறிப்பிட்ட இடத்திலிருந்து ஓடித் தலைமறைவாகியதுடன் தனது நண்பனொருவனைத் தொடர்பு கொண்டு அந்த இடத்திற்குச் சென்று தனது மோட்டார் சைக்கிளை மீட்டுத் தருமாறு வேண்டியுள்ளான்.
 
அந்த இளைஞனும் வழமையாகவே முஸ்லிங்களை சீண்டும் பழக்கம் கொண்டவன் தான். தனது நண்பனின் வேண்டுகோளுக்கிணங்க அங்கு வந்த குறித்த இளைஞன் விபத்துக்குள்ளான அந்த மோட்டார் சைக்கிளை அகற்றிக் கொண்டு செல்ல முற்பட்ட வேளை அங்கிருந்த சில முஸ்லிம் இளைஞர்கள் அவனைத் தடுத்து சம்பந்தப்பட்ட ஓடி ஔிந்த இளைஞனுக்கு வந்து மோதுண்ட குறித்த அப்பாவிப் பெண் விடயத்தில் நீதியாக நடந்து கொள்ளச் சொல்லுமாறு வேண்டியுள்ளனர். அதனைப் பொருட்படுத்தாத அந்த சிங்கள இளைஞன் மிக மோசமான இனவாத சொற்களைக் கொண்டு முஸ்லிங்களைத் தூற்றிக் கொண்டு செல்லவே பொறுமையிழந்த ஒரு முஸ்லிம் இளைஞன் அவனைத் தாக்கியுள்ளான். (நாட்டு நிலவரங்களைக் கருத்திற்கொண்டு முஸ்லிம் இளைஞர்கள் இங்கு கொஞ்சம் விட்டுக்கொடுத்து நடந்திருக்கலாம்.)
 
விடயம் பொலிஸ் வரை செல்லவே, அங்கு பாதிக்கப்பட்ட குறித்த பெண்ணுக்கு ரூ.25,000.00 நஷ்டஈடு வழங்குவது என்ற இணக்கப்பாட்டுடன் குறித்த சம்பவம் முடிவுக்கு வந்தது.
 
 
ஆனால், மறுதினம் முஸ்லிம் இளைஞர்கள் சிலர் பின்னேரம் விளையாடி விட்டு சிங்களவர்கள் செரிந்து வாழும் விதானகொட என்ற பாதையால் வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளை சிங்கள இளைஞர்கள் சிலரால் தாக்கப்பட்டுள்ளனர்.
 
அடிவாங்கிய முஸ்லிம் இளைஞர்கள் மீண்டும் தமது நண்பர்களைத் திரட்டிக் கொண்டு தம்மைத் தாக்கியவர்களை மீண்டும் தாக்க வந்துள்ளனர். இதன்போது அந்த சிங்கள இளைஞர்கள் அங்கிருந்த ஒரு சிங்கள வீட்டினுள் புகுந்ததால் அவ்வீட்டுக்கு ஒரு சிறிய தேசம் ஏற்பட்டது. ஆனால் சேதத்தினை அதிகரித்துக் காட்டுவதற்காக அவ்வீட்டாரும், குறித்த சிங்கள இளைஞர்களும் தமது கைகளாலேயே அந்த வீடு மற்றும் உபகரணங்களை சேதப்படுத்திக் கொண்டு முஸ்லிங்கள் மீது அதனைப் பலிபோடும் கைங்கரியத்தினையும் செய்துள்ளனர்.
 
 
இதற்குப் பின்னர் இந்த சம்பவத்தினை முடியுமானவரை சுமூக நிலைக்குத் திருப்ப முஸ்லிம் ஊர் தலைமைகள் கடும் முயற்சி செய்தும் பௌத்த குருமார் அதற்குத் தயாராக இருக்கவில்லை. சம்பவத்துடன் தொடர்புடைய சில முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டதோடு பௌத்த தேரர்களின் வேண்டுகோளுக்கிணங்க குறித்த பிரதேச சபை முன்னால் உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஹூஸைன் கியாஸ் அவர்களும் கைது செய்யப்பட்டார். இங்கு ஹூஸைன் கியாஸ் என்பவர் குறித்த முஸ்லிம் இளைஞர்களைக் கட்டுப்படுத்திக் கொள்வதற்காகவே குறித்த இடத்திற்கு சமூகமளித்திருந்தார் என்பதும் ஊரில் இன, மத பேதம் பாராது சேவையாற்றுபவர் என்பதும், தான் கற்ற சிங்களப் பாடசாலையான கா/ கிந்தோட்டை மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க செயலாளராக சிங்கள சகோதரர்களாகலேயே தெரிவு செய்யப்பட்டவர் என்பதும் குறித்த சம்பவத்திற்கு அவரும் காரணம் என்று சிங்கள இனவாத ஊடகங்களில் அவர் பற்றிய பிழையான செய்திகள் பரப்பப் பட்டு வருகின்றது எனபதும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு விடயமாகும்.
 
 
குறித்த நாள் இரவு அதாவது 16.11.2017 அன்று ஊரின் ஒவ்வொரு எல்லைகளிலும் சிங்கள இளைஞர்கள் குழுமிக் கொண்டு அவ்வழியால் வரும் முஸ்லிங்களை அச்சுறுத்திக் கொண்டிருந்ததோடு ஒரு சிலரைத் தாக்கியும் உள்ளனர். அதில் முஸ்லிங்களால் மிகவும் மதிக்கப்படும் ஊரில் இன, மத பேதங்களுக்கு அப்பால் சமூகப் பணிகளில் முழுமையாக தன்னை அர்ப்பணித்து செயலாற்றும் காலி மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபையின் உப தலைவரான மௌலவி லுதுபுல் அளீம் அவர்களும் ஒருவராவார்.
அடுத்த நாள் அதாவது 17.11.2017 அன்று காலை முதல் பொலிஸ் மற்றும் இராணுவப் பாதுகாப்பு ஊரில் பலப்படுத்தப்பட்டிருந்தாலும் முஸ்லிங்கள் பெரியளவு அச்சமோ, சந்தேகமோ கொள்ளவில்லை. இந்த சம்பவங்கள் இதற்கு முன்னாலும் நடந்திருப்பதால் பெரிய விபரீதமாக மாறும் என்று யோசிக்கும் அளவுக்கோ, அல்லது அதற்கான முன் ஆயத்தங்களுக்கோ முஸ்லிங்கள் செல்லவில்லை.
 
 
 மாறாக, வழமையான நாட்களைப் போன்றே அந்நாளைக் கடத்தினர். ஆனால், இதற்கு மாற்றமாக கிந்தோட்டையிலுள்ள தூபாராம விகாரையில் பௌத்த குருமாரின் தலைமையில் சிங்கள மக்களால் மாலை 7.30 மணிக்கு ஒரு சதி ஒன்றுகூடல் மேற்கொள்ளப்பட்டு பல தீர்மானங்களுக்கு அவர்கள் வந்துள்ளமை பின்னர் தான் முஸ்லிங்களுக்குத் தெரிய வந்தது. அவ்வேளை ஒரு சில பொலிஸாரைத் தவிர ஊரில் மேற்கொள்ளப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் முற்றாக நீக்கப்பட்டிருந்தன. நிலைமைகள் விபரீதமாகும் என்ற அச்ச நிலைமை தோன்றியதன் பின் பல்வேறு பட்ட அரசியல் தலைமைகளுக்கும், பாதுகாப்புப் பிரிவினருக்கும் தகவல் வழங்கப்பட்டும் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.
 
பல அரசியல் தலைவர்களது தொலைபேசி இணைப்புக்கள் செயற்படவில்லை.
 
இந்நிலையில், ஏற்கனவே திட்டமிட்டிருந்த படி சமூகவலைதளங்கள் ஊடாகவும், ஏனைய வழிமுறைகளூடாகவும் வெவ்வேறு பகுதியிலிருந்து பல வாகனங்களில் திரட்டப்பட்டு வந்த 300க்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் பல குழுக்களாகப் பிரிந்து கிந்தோட்டைக்குப் பிரவேசிக்கும் பாதைகளை எல்லாம் இடைமறித்த வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்குள் பிரவேசித்து இரவு 9.30 மணியளவில் தமது தாக்குதல்களை ஆரம்பித்தனர். குறிப்பாக, அம்பிடிய தூபாராம, கினிகுருந்த, எலபடவத்த, உக்குவத்த ஆகிய கிந்தோட்டைக்குப் பிரவேசிக்கும் பாதைகளினூடாக நான்கு குழுக்களாக வந்த சிங்களக் காடையர்கள் முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் ஏனைய உடைமைகளைத் தாக்கிக் கொண்டும் தீயிட்டுக் கொண்டும் சென்றனர்.
 
பயங்கரமாக மிகவும் மோசமான இனத்துவேச வார்த்தைகளைப் பிரயோகித்துக் கொண்டு தமது தாக்குதல்களை ஆரம்பித்த சிங்கள இளைஞர்களை வழிநடாத்தியவர்கள் சமூகங்களுக்கு மத்தியில் சுமூக நிலையினை ஏற்படுத்த வேண்டிய பௌத்த குருமார் என்பதுதான் மிகவும் கவலைக்கிடமானது. எதிர்பாராத இத்தாக்குதல்கள் தொடரவே எந்தவித எற்படுகளுமின்றி இருந்த முஸ்லிங்கள் நிலைகுழம்பிப் போய் வீதி விலக்குகளையும், வீட்டு விளக்குகளையும் அணைத்து விட்டு வீடுகளுக்குள் அடங்கிக் கொண்டனர். ஒரு சில முஸ்லிம் இளைஞர்களே களத்தில் நின்றாலும் அவர்களிடம் எந்தவித ஏற்பாடுகளும் இருக்கவில்லை.
 
முடியுமானவரை அவர்களின் பிரவேசத்தினைத் தடுக்க அவர்கள் பாடுபட்டனர். அவ்விளைஞர்களும் களத்தில் இருந்திருக்காவிட்டால் சேதங்கள் இன்னும் மிகப் பயங்கரமாகவே இருந்திருக்கும்.
மூன்று மணித்தியாலங்களாகத் தொடர்ந்த இத்தாக்குதல்கள் காரணமாக சுமார் 60க்கு மேற்பட்ட வீடுகளும், 26 கடைகளும், 12 வாகனங்களும் இரண்டு பள்ளிவாயல்களும் சேதப்படுத்தப்பட்டன. (குறித்த புள்ளிவிபரங்கள் 18.11.2017 அன்று காலி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒரு கூட்டமொன்றின் போது முன்வைக்கப்பட்டவை என்பதனால் அதனையே பதிந்தேன்) இதில் பல வீடுகள் மோசமாக சேதப்படுத்தப்பட்டிருந்ததோடு பல வாகனங்கள் முழுமையாக தீக்கிரையாக்கப்பட்டிருந்தன.
 
 
பாதுகாப்புப் பிரிவினர்கள் மிகத் தாமதித்தே களத்துக்கு விரைந்ததமை சிங்களவர்கள் தாம் எதிர்பார்த்தது போலவே தாக்குதல்களை மேற்கொள்வதற்கு வசதியாக அமைந்துவிட்டது.
 
 
களத்துக்கு விரைந்த பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் பொலிஸார் கூட நடுநிலைமையாக இயங்காமல் மிகவும் பாரபட்சமாகவே நடந்து கொண்டனர். முஸ்லிம் இளைஞர்களைத் தடுத்து நிறுத்துவதில் அவர்கள் காட்டிய அக்கறையின் தீவிரத்தில் ஒரு சதவீதத்தினைக் கூட தாக்குதலை மேற்கொள்ள வந்த வௌியூர்காரர்களைத் தடுப்பதில் அவர்கள் காட்டவில்லை. இக்கலவரத்தின் போது களத்தில் சிங்களக் காடையர்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருந்த ஒரு சிங்கள பௌத்த பிக்குவை பொலிஸார் குனிந்து கைகூம்பி வணங்கிக் கொண்டிருந்ததனையும் எமது இளைஞர்கள் காணத் தவறவில்லை. மட்டுமல்லாது, முஸ்லிங்களை அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட ஒரு சிங்களக் கடை பாதுகாப்புப் பிரிவினராலேயே தீவைக்கப்பட்டமை மிக உறுதியான தகவலாக அமைந்திருந்ததோடு அதனை குறிப்பிட்ட பகுதியினைச் சேர்ந்த ஒரு சிங்கள வைத்தியர் ஒருவரும் உறுதிபடக் கூறியுள்ளார்.
 
 
மூன்று மணித்தியாலங்களாக முழுத் தாக்குதலில் ஈடுபட்ட சிங்களக் காடையர்கள் தமது முயற்சியினை கைவிடாமல் தொடர்ந்தும் விடியும் வரை கலைந்து செல்லாமல் மீண்டும் மீண்டும் சந்தர்ப்பங்களை எதிர்பார்த்து ஒவ்வொரு இடங்களிலும் குழுமிக் கொண்டிருந்தனர்.
 
 
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு அடுத்த நாள் காலை 9.00 மணிக்கு ஊரடங்குச் சட்டம் நீக்கப்படும் வரை வீடுகளில் பெண்களும், சிறுவர்களும் வீடுகளின் பின்பக்கங்களிலும், கழிவறைகளிலும் நேரத்தினைக் கடத்தியுள்ளனர். ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதோடு களத்திற்கு விரைந்த முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் உடனடியாக சேத விபரங்களை மதிப்பிடத் தொடங்கினர்.
 
பல வீடுகளிலிருந்து பணங்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் கூட அலுமாரிகள் உடைக்கப்பட்டு களவாடப்பட்டிருந்தன. ஒரு வீட்டிலே சின்னப் பிள்ளைகளால் ஆர்வத்தோடு முட்டிகளில் சேமிக்கப்பட்டிருந்த சில்லறை நாணயங்களும் முட்டிகள் உடைக்கப்பட்டு களவாடப்பட்டிருந்தது. சேத விபரங்களை மதிப்பிடல், ஆவணப்படுத்தல் வேலைகளோடு முழு ஊர் மக்களுக்கும் தேவையான மூவேளைச் சாப்பாடுகளை ஏற்பாடு செய்வதிலும் ஊர் சிவில் சமூகங்கள் முழுமையாக ஈடுபட்டனர்.
 
 
மீண்டும் மாலை 6.30 (18.11.2017) முதல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையிலும் இரவு 10.00 மணியளவில் சிங்களப் பகுதியை அண்டிய மிகவுமே வறிய நிலையிலுள்ள ஒரு ஏழை முஸ்லிமின் வீடு தீக்கிரையாக்கட்டது. குறித்த சந்தர்ப்பத்தில் அவ்வீட்டில் யாரும் இருக்கவில்லை. அவர்கள் ஏற்கனவே பயத்தின் காரணமாக வௌி இடங்களில் தங்கியிருந்தனர். (குறித்த தீவைத்தல் கைங்கரியத்தில் ஈடுபட்டவர் முஸ்லிங்கள் மிகவுமே செரிந்து வாழும் பகுதியில் சில்லறைக் கடை மற்றும் மற்றும் பழக்கடை வியாபாரம் செய்து முற்றுமுழுதாக முஸ்லிங்களையே வாடிக்கைளானராகக் கொண்ட ஒரு வியாபாரி என்பது இப்பொழுது தெரிய வந்துள்ளது. அத்தோடு நேற்யை இரவும் ஒரு ஜம்ஆ பள்ளிக்கு பெற்றோல் குண்டு வீசப்பட்டிருந்தது. ஆனால் பாதிப்புக்கள் ஏற்படவில்லை.
 
 
வியாழக்கிழமை இடம்பெற்ற சம்பவத்தின் பின்னால் வௌ்ளிக்கிழமை கா/ கிந்தோட்டை மகா வித்தியாலம் என்ற சிங்களப் பாடசாலைகளில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்களை அப்பாடசாலையைச் சேர்ந்த சிங்கள மாணவர்களெ மிக மோசமாக இனவாத சொற்கனைகளால் திட்டி பல்கலைக்கழகங்களில் பகிடிவதை செய்வது போன்று கண்ணையும், கையையும் கட்டி முகத்துக்கெல்லாம் தாக்குதல் செய்துள்ளனர். சிங்கள இளைஞர்கள் மட்டுமல்லாது சிறுவர்களுக்கு மத்தியிலேயே மிக மோசமான இனவெறி ஊட்டப்பட்டு வருகின்றது என்பதனையே இது வௌிப்படையாக எடுத்துக் காட்டுகின்றது. சம்பவங்களோடு எந்தவிதத் தொடர்பும் அற்ற, பரீட்சைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய அப்பாவி முஸ்லிம் மாணவர்கள் சகபாடி மாணவர்களாலேயே தாக்கப்படுவது எந்தவித்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதவொன்று என்பதும் சகவாழ்வு, சகிப்புத்தன்மை, பன்மைத்துவத்தினை அங்கீகரித்தல் என்பன எந்தளவு தூரம் மாணவர்கள் மத்தியிலிருந்தே அற்றுப் போயுள்ளது என்பது ஆழமாக விவாதிக்கப்பட வேண்டியவொன்றாகும். நாட்டின் எதிர்காலத் தலைவர்களாக வர வேண்டிய இந்த சிறுவர்கள் சிறு வயதிலேயே மிக மோசமான இனவாதிகளாக மாறிக் கொண்டிருப்பதற்கு யார் காரணம் என்பதும் தேடப்பட வேண்டிய ஒரு விடயம். குறித்த இந்த கலவரத்தினால் இந்த முறை க.பொ.த. சாதாரணப் பரீட்சை எழுத வேண்டிய முஸ்லிம் மாணவர்கள் உளவியல் ரீதியாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு அவர்கள் கற்றல் நடவடிக்கைகளையும் முற்றாகக் கைவிட்டு விட்டு ஊர் வேளைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது மிகவும் துரதிஷ்டமான ஒரு நிகழ்வாகும்.
 
 
இங்கு இன்னொரு விடயத்தினையும் சுட்டிக்காட்ட வேண்டும். முஸ்லிங்கள் மத்தியில் வியாபாரத் தளங்களை நிறுவி முஸ்லிங்களையே 90 வீத வாடிக்கைளார்களாகக் கொண்ட சிங்கள வியாபாரிகளும் இத்தாக்குதல் நடவடிக்கைளில் ஈடுபட்டிருந்தனர்.
 
கிந்தோட்டை முஸ்லிங்கள் தம்மோடு இணைந்து வாழும் சிங்களவர்களை என்றுமே ஒதுக்கிப் பார்த்ததில்லை. பல சிங்கள மேசன் மற்றும் தச்சர்கள், சில்லறைக்கடை வியாபாரிகள், வைத்தியர்களின் முழுமையான வாடிக்கைளார்கள் முஸ்லிங்களே. என்றுமே சிங்களவர்களை கிந்தோட்டை முஸ்லிங்கள் இனவாதக் கண்ணோட்டத்தோடு பார்த்ததில்லை.
பேசித் திர்க்கப்பட வேண்டிய ஒரு சிறிய சம்பவம் இனவாதத்தினை விதைப்பதையே முழு நேரத் தொழிலாகக் கொண்ட பொளத்த காவி நாய்களாலும், செய்வதற்கு உறுப்படியான ஒரு வெலை இல்லாமல் முகநூலில் குந்திக் கொண்டு இனவாதத்தினைப் பரப்பிக் கொண்டிருக்குக்கும் சிங்கள இளைஞர்களாலும், அரசியல் உள்நோக்கம் கொண்ட அரசியல்வாதிகளாலும் ஒரு பெரிய கலவரத்துக்கே வித்திடப்பட்டது இலங்கையின் ஒரு சாபக் கேடாகும்.
 
இலங்கை போன்ற வளங்கள் நிறைந்த ஒரு மிகச் சிறிய நாட்டினை திட்டமிட்டு முன்னேற்ற வக்கில்லாத ஒரு கேவலமான, லாயக்கே அற்ற அரசியல் தலைவர்களையும், மதத் தலைவர்களையும் கொண்ட ஒரு நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். யுத்தத்தின் பின் கண்ட அபிவிருத்திக் கனவு, கனவாகவே யுக முடிவு வரை இருக்கப் போகின்றது.
 
 
பிராந்தியத்திலுள்ள மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகள் பொருளாதாரத்தில் எங்கோ சென்று கொண்டிருக்க, வெறுமனே 20% முஸ்லிங்களை சனத்தொகையாகக் கொண்ட சிங்கப்பூர் நாட்டில் பர்தா அணியும் ஒரு முஸ்லிம் பெண் ஜனாதிபதியாகும் அளவுக்கு மிகவுமே பக்குவப்பட்ட மக்களையும், அரசியல் சாசனத்தினையும் கொண்டிருக்க, வளங்கள் நிறைந்த இச்சிறு நாடோ சுடுகாடாகிக் கொண்டு செல்கின்றது.
இனி எந்தவொரு ஜென்மத்திலாவது இலங்கை அபிவிருத்தி அடையும் என்பதனை கனவிலும் எதிர்பார்க்க முடியாது.
 
"இலங்கைக்கு அபஸரண"
By : ரஸ்மி Galle
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் நந்திகடலில் அழியும்போது வெடிகொளுத்திய கூட்டம் இன்று தனக்கு விழும் அடியைபார்த்து குத்துது குடையுது என்கினம் .தனக்கென வரலாறும் மொழியும் ,பண்பாடும் அற்ற இனம் வெகுவிரைவில் அழிந்துவிடும் இல்லை மதமாற்றம் செய்யபட்டு விடும் முடிந்தால் தமிழ் என்று சேர்ந்து விடுங்கள் இல்லை சிங்களவனிடம் அடிவேன்டியே செத்து போவீர்கள் மிஞ்சியவர்கள் புத்த சமயத்துக்கு மாறுவார்கள் எது வசதி ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

இனி எந்தவொரு ஜென்மத்திலாவது இலங்கை அபிவிருத்தி அடையும் என்பதனை கனவிலும் எதிர்பார்க்க முடியாது

20 % சோனிகளுக்கு அடித்தால் நாடு முன்னேறாமல் போய்விடுமா ....? அப்போ 25 % தமிழர்களுக்கு அடிக்கக்குள்ள மட்டும் இலங்கை அபிவிருத்தியின் உச்சத்திலா இருந்தது ...வாங்கிற அடிய வாயை மூடிக்கிட்டு வாங்கணும் இப்படி விஞ்ஞானி மாதிரி பேசக்கூடாது. நாங்கள் எல்லோரும் கிழக்கையும் காலியையும் இணைக்கவேண்டும் என்று போராடப்போகிறோம் ...செமத்தியா போட்டிருக்கணுவ பயபுள்ளைகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஒன்று. நாளைக்கே ஒன்றுசேர்ந்து தமிழர்களை விரட்டிவிட்டு ஒன்றாய் இருந்து  கிரிபத் சாப்பிடுவினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றும் தெரியாத --------------பாப்பாவின் கதை இது.......அப்பாவிகளா..... அட் நல்லா கதை அளப்பியள்...உங்கடை நானாமாரிட்டை சொன்னா மன்னரிலையும் ..முல்லையிலும் காணீ புடிச்சுத்தருவினம்......

Link to comment
Share on other sites

On 11/20/2017 at 11:58 AM, colomban said:

வெவ்வேறு பகுதியிலிருந்து பல வாகனங்களில் திரட்டப்பட்டு வந்த 300க்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் பல குழுக்களாகப் பிரிந்து கிந்தோட்டைக்குப் பிரவேசிக்கும் பாதைகளை எல்லாம் இடைமறித்த வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்குள் பிரவேசித்து இரவு 9.30 மணியளவில் தமது தாக்குதல்களை ஆரம்பித்தனர்.

இது சமாதானத்துக்கான ஒரு தாக்குதல் தான். இதை முஸ்லிம்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

On 11/20/2017 at 11:58 AM, colomban said:

மூன்று மணித்தியாலங்களாகத் தொடர்ந்த இத்தாக்குதல்கள் காரணமாக சுமார் 60க்கு மேற்பட்ட வீடுகளும், 26 கடைகளும், 12 வாகனங்களும் இரண்டு பள்ளிவாயல்களும் சேதப்படுத்தப்பட்டன.

சமாதானத்துக்கான முயற்சியில் இதெல்லாம் சகஜம் தானே! இது ஒரு பெரியவிடயம் இல்லை.

On 11/20/2017 at 11:58 AM, colomban said:

இந்த முறை க.பொ.த. சாதாரணப் பரீட்சை எழுத வேண்டிய முஸ்லிம் மாணவர்கள் உளவியல் ரீதியாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு

இவர்கள் புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்படல் வேண்டும்!

 

On 11/20/2017 at 11:58 AM, colomban said:

யுத்தத்தின் பின் கண்ட அபிவிருத்திக் கனவு, கனவாகவே யுக முடிவு வரை இருக்கப் போகின்றது.

இது போன்ற தாக்குதல்களின் பின்னர் தான் அபிவிருத்தி ஏற்படும்! ஆனால் இதைவிட பல்லாயிரம் மடங்கு பரவலான தாக்குதல் தான் அதிக அபிவிருத்தியை தரும்.

 

On 11/20/2017 at 11:58 AM, colomban said:

20% முஸ்லிங்களை சனத்தொகையாகக் கொண்ட சிங்கப்பூர் நாட்டில் பர்தா அணியும் ஒரு முஸ்லிம் பெண் ஜனாதிபதியாகும் அளவுக்கு மிகவுமே பக்குவப்பட்ட மக்களையும்,

50% க்கு மேல் முஸ்லிம்களைக்கொண்ட முஸ்லீம் நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் பக்குவமற்றவர்கள் என்று ஏற்றுக்கொண்டுள்ளது நல்ல செய்தி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/20/2017 at 6:28 AM, colomban said:

வெறுமனே 20% முஸ்லிங்களை சனத்தொகையாகக் கொண்ட சிங்கப்பூர் நாட்டில் பர்தா அணியும் ஒரு முஸ்லிம் பெண் ஜனாதிபதியாகும் அளவுக்கு மிகவுமே பக்குவப்பட்ட மக்களையும், அரசியல் சாசனத்தினையும் கொண்டிருக்க, வளங்கள் நிறைந்த இச்சிறு நாடோ சுடுகாடாகிக் கொண்டு செல்கின்றது.

அவர்கள் உங்கள் அரசியல்வாதிகள் போல் பேசுவதில்லை பேசவும் முடியாது வடகிழக்கை இணைத்தால் இரத்த ஆறு ஓடும் இப்படி அங்கு கதைத்தால் பதவியையும் பறித்து பின்னாலை பிரம்படியும் போட்டு ஜெயிலில் போட்டு விடுவார்கள் .அதைவிட அந்த பதவி பூம் பூம் மாடு போல் ஒரு குறிப்பிட்ட அதிகாரங்களை கொண்ட பதவி மட்டுமே சொறிலங்கா போல் இல்லை. 

As a result of constitutional amendments passed in 1991, the presidency became a popularly elected office with certain custodial powers, particularly over government expenditure and key appointments to public officeshttps://en.wikipedia.org/wiki/President_of_Singapore

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/11/2017 at 7:28 AM, colomban said:

 

 
மிகவும் அபூர்வமாக ஒரு சில சம்பவங்கள் நடந்தாலும் உடனடியாக அப்பிரச்சினை தீர்க்கப்பட்டு சுமூக நிலைக்குத் திரும்பும் அளவுக்கு பக்குவப்பட்டிருந்த ஒரு ஊரில் இப்படி ஒரு பேரவலம் ஏற்பட்டது
உண்மையிலே கவலைக்குரிய ஒரு விடயமாகும்.
 
இச்சிறு சம்பவம் பூதாகரமாக்கப்படுவதற்கு சமூக வலைதளங்களும், இனவாதத்தினை வௌிப்படையாகவே போதிக்கும் சில பௌத்த காவிகளுமே காரணமாகும்.
 
கடந்த சில தினங்களுக்கு முன் இடம்பெற்ற ஒரு வீதி விபத்தே இப்பிரச்சினையின் மூல காரணமாக இருந்தது என்றாலும் இதற்குப் பின்னால் அரசியல் உள்நோக்கங்களும் இல்லாமல் இல்லை என்பது ஊரிலுள்ள புத்திஜீவிகளினதும், பொதுமக்களினதும் அபிப்பிராயமாகும்.
 
 
 
குறித்த இளைஞன் அவ்வேளை சாராயம் அருந்தியிருந்ததாகவும் சந்தர்ப்பத்தின் போது வீற்றிருந்த மக்கள் சொல்கின்றனர். வழமையாகவே இச்சிங்கள இளைஞன் மக்களை எரிச்சலடையச் செய்யும் வகையிலும், பிரச்சினையொன்றை வலுக்கட்டாயமாகவே உருவாக்கிக் கொள்வதற்கும் இவ்வாறு மிக வேகமாகப் பயணிப்பதனை தனது வாடிக்கையாகக் கொண்டவன்.
 
இவனைப் போலவே வம்புக்கிழுப்பதற்கென்றே சில சிங்கள இளைஞர்கள் பாதைகளில் மிகப் பயங்கர வேகத்துடன் பயணிப்பது தினமும் நடைபெறும் ஒரு விடயமானாலும்
 
 
அந்த இளைஞனும் வழமையாகவே முஸ்லிங்களை சீண்டும் பழக்கம் கொண்டவன் தான். தனது நண்பனின் வேண்டுகோளுக்கிணங்க அங்கு வந்த குறித்த இளைஞன் விபத்துக்குள்ளான அந்த மோட்டார் சைக்கிளை அகற்றிக் கொண்டு செல்ல முற்பட்ட வேளை அங்கிருந்த சில முஸ்லிம் இளைஞர்கள் அவனைத் தடுத்து சம்பந்தப்பட்ட ஓடி ஔிந்த இளைஞனுக்கு வந்து மோதுண்ட குறித்த அப்பாவிப் பெண் விடயத்தில் நீதியாக நடந்து கொள்ளச் சொல்லுமாறு வேண்டியுள்ளனர். அதனைப் பொருட்படுத்தாத அந்த சிங்கள இளைஞன் மிக மோசமான இனவாத சொற்களைக் கொண்டு முஸ்லிங்களைத் தூற்றிக் கொண்டு செல்லவே பொறுமையிழந்த ஒரு முஸ்லிம் இளைஞன் அவனைத் தாக்கியுள்ளான். (நாட்டு நிலவரங்களைக் கருத்திற்கொண்டு முஸ்லிம் இளைஞர்கள் இங்கு கொஞ்சம் விட்டுக்கொடுத்து நடந்திருக்கலாம்.)
 
விடயம் பொலிஸ் வரை செல்லவே, அங்கு பாதிக்கப்பட்ட குறித்த பெண்ணுக்கு ரூ.25,000.00 நஷ்டஈடு வழங்குவது என்ற இணக்கப்பாட்டுடன் குறித்த சம்பவம் முடிவுக்கு வந்தது.
 
 
ஆனால், மறுதினம் முஸ்லிம் இளைஞர்கள் சிலர் பின்னேரம் விளையாடி விட்டு சிங்களவர்கள் செரிந்து வாழும் விதானகொட என்ற பாதையால் வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளை சிங்கள இளைஞர்கள் சிலரால் தாக்கப்பட்டுள்ளனர்.
 
 
இலங்கை போன்ற வளங்கள் நிறைந்த ஒரு மிகச் சிறிய நாட்டினை திட்டமிட்டு முன்னேற்ற வக்கில்லாத ஒரு கேவலமான, லாயக்கே அற்ற அரசியல் தலைவர்களையும், மதத் தலைவர்களையும் கொண்ட ஒரு நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். யுத்தத்தின் பின் கண்ட அபிவிருத்திக் கனவு, கனவாகவே யுக முடிவு வரை இருக்கப் போகின்றது.
 
 
பிராந்தியத்திலுள்ள மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகள் பொருளாதாரத்தில் எங்கோ சென்று கொண்டிருக்க, வெறுமனே 20% முஸ்லிங்களை சனத்தொகையாகக் கொண்ட சிங்கப்பூர் நாட்டில் பர்தா அணியும் ஒரு முஸ்லிம் பெண் ஜனாதிபதியாகும் அளவுக்கு மிகவுமே பக்குவப்பட்ட மக்களையும், அரசியல் சாசனத்தினையும் கொண்டிருக்க, வளங்கள் நிறைந்த இச்சிறு நாடோ சுடுகாடாகிக் கொண்டு செல்கின்றது.
இனி எந்தவொரு ஜென்மத்திலாவது இலங்கை அபிவிருத்தி அடையும் என்பதனை கனவிலும் எதிர்பார்க்க முடியாது.
 

அடடா

அடடா

என்னே  தத்துவம்

எவ்வளவு  அனுபவப்பதிவு

இருக்குடா

இனித்தான் இருக்கு..

சிங்களவன்  ரொம்ப  நல்லவன்

அடிச்சா குனிஞ்சு  வாங்கிக்கோங்க

பழகிப்போன  ஒன்று தானே

எதுக்கு  திருப்பி அடிப்பான்?

உங்களுக்கு  வந்தா  ரத்தம்

எங்களுக்கு வந்தா??

நாசமாப்போவார்

கொஞ்சம் ஒத்துழைச்சிருந்தா

இன்றைக்கு சொக்கபுரியில் வாழ்ந்திருக்கலாம்

அழிஞ்சு போவியள்

அழிஞ்சு போவியள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
    • யாழ். பல்கலைக்கழகத்திலும் அன்னை பூபதியின் நினைவேந்தல் April 20, 2024     இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நினை வேந்தல் நிகழ்வுகளின் போது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்கு கொண்டு அன்னை பூபதிக்கு தங்கள் புகழ் வணக்கங்களைச் செலுத்தியிருந்தனர்.   https://www.ilakku.org/யாழ்-பல்கலைக்கழகத்திலும/  
    • இல்லை, மீரா. தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்கு தெரிந்தே செய்கிறார்கள். ஏனென்றால், அதுதான் அவர்களின் தேவை. தேசியமும், விடுதலையும், சுய நிர்ணயமும், அடையாளமும் இல்லாது போகவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆகவே, அவர்கள் குறித்து உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருங்கள். 
    • வடையை ரூ.800க்கு விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, உளுந்து வடை மற்றும் தேநீரை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேகநபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றில்  இன்று (19) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வெளிநாட்டு சுற்றூலாப் பயணிக்கு சந்தேகநபர், உளுந்து வடை மற்றும் தேநீரை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்டிருந்தார்.    அது தொடர்பில் சுற்றுலாப் பயணி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரிடம் சந்தேகநபர் 800 ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளார்.  இதனையடுத்து,  அதிகூடிய விலைக்கு வடையை விற்பனை செய்தவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த ஓட்டோ சாரதி என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.    பொருள் விலை காட்சிப்படுத்தப்படாமை, பற்றுச்சீட்டு வழங்கப்படாமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையானால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.    இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்துரொட்டியை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    https://www.tamilmirror.lk/செய்திகள்/வடையை-ரூ-800க்கு-விற்றவர்-கைது/175-336087
    • அன்புள்ள ஐயா தில்லை  காதலுக்கு இல்லை ஐயா எல்லை  கணனிக் காதலர்க்கு  நீங்கள் ஒரு தொல்லை ........!  😂 நல்லாயிருக்கு நகைச்சுவை .......தொடருங்கள்.......!  👍  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.