Jump to content

நட்சத்திரா


Recommended Posts

நட்சத்திரா - சிறுகதை

 

1

`பயணிகளின் கனிவான கவனத்திற்கு... வண்டி எண் ஒன்று ஆறு ஏழு இரண்டு மூன்று... சென்னை எழும்பூரிலிருந்து திருச்சி, மதுரை, கன்னியாகுமரி வழியாகத் திருவனந்தபுரம் வரை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், தடம் எண் ஐந்திலிருந்து சரியாக மணி ஏழு ஐம்பதுக்குப் புறப்படும்’ பதிவு செய்யப்பட்ட அந்தப் பெண்ணின் குரலில் இருந்த கம்பீரத்தை ஒரு நொடி நின்று மூளையில் சேமித்துப் பின் கடந்தான். ‘ரெய்ரே ரெய்ரே ரெய்ரே ரெய்ரே...’ என்னவென்றே புரியாத ஒலியை எழுப்பியபடி கையேந்தியிருந்த யாசகனின் தலைக்குப் பின்புறம் இவன் பார்த்த பார்வையில் ஒரு வெற்றுத் தண்டவாளமும் அருகில் ஒரு ரயிலும் நின்றிருந்தன. ரயிலற்ற தண்டவாளம் தாள முடியாத மன முறிவை ஏற்படுத்தியது. கடந்தான். பத்தாவது பிளாட்ஃபார்மில் வந்து நின்று நிமிர்ந்து பார்த்தபோது அங்கிருந்த டிஜிட்டல் போர்டில் அடுத்த வண்டி தாம்பரம் என்ற சிவப்பு எழுத்துகள் நகர்ந்துகொண்டிருந்தன. யாரோ ஒருவர் அவனிடம் ‘`செங்கல்பட்டுக்கு எப்போ வண்டி?’’ என்றார். ‘`அடுத்த வண்டி’’ என்றபடி தண்டவாளத்தைப் பார்த்தான். இடதுபுறம் கழுத்து வளைத்து ரயில் வரும் திசை பார்க்க, இருளாக இருந்தது. இரவில்லை. கண்கள் நிலைகுத்தியிருக்க இருள் தாண்டி எங்கோ சில மதுக்கோப்பைகள் மதிய வெப்பத்தின் மத்தியில் உயர்த்தப்பட்டன. `ச்சியர்ஸ்.’ அவனின் நண்பர்கள் பரவசத்தில் இருந்தனர். ‘`என்னடா ஆச்சி இவனுக்கு... பீராவது அடிடா’’ என்ற ஒருவனின் விருப்பத்துக்கு இன்னொருவன் பதில் சொன்னான். ‘`டேய் அவன் லவ் ஃபெய்லியர்ல இருக்கான்டா.’’

84p1.jpg

‘`அப்போ அதுக்குதான் இந்த பார்ட்டியா?’’

‘`ஆமாண்டா, ஒனக்கு வாழ்ந்தாலும் பார்ட்டி. செத்தாலும் பார்ட்டி. இது நம்ம மனோகர் அப்ரைசலுக்குக் கொடுக்கிற பார்ட்டி.’’

‘`சரி... அவன் ஆள் யாருன்னே சொல்லலியே இதுவரைக்கும். இதுல ஃபெய்லியர் வரைக்கும் போயாச்சா...’’

‘`ஏன்... நீ அவன் ப்ரொஃபைல் பிக்சர் பார்த்ததில்லியா... ஸ்க்ரீன் சேவர் பார்த்ததில்லியா... தெரியாத மாதிரிதான் கேப்ப.’’

‘`டேய். அது வேதிதா மேனன். ஒளறாதீங்க.’’

‘`போடாங்... இன்னிக்கி காலைல எஃப்.பி ஃபுல்லா இதுதான்டா நியூஸ். பிரபல நடிகை வேதிதா மேனனுக்கும் பிரபல நடிகர் அதிஷ் கிருஷ்ணாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. வரும் டிசம்பரில் திருமணம். பார்க்கலியா நீ?’’

‘`அதைப் பார்த்தேன். அதுக்கு இவன் ஏன் மூட் அவுட் ஆகுறான்?’’

‘`என்னதான் இருந்தாலும் தன்னோட கனவுக் கன்னிக்கு கல்யாணம்னா, வருத்தம் இருக்கத்தானே செய்யும். அதான் பார்ட்டியை அவாய்ட் பண்றாரு சார்.’’

‘`டேய்... இதெல்லாம் மேட்டருன்னு மூஞ்சைத் தூக்கி வெச்சிட்டு உட்கார்ந்துருக்கே. இதை அடிடா.’’

 அவன் நீட்டிய மது தளும்பிய பிளாஸ்டிக் டம்ளரை வாங்கிக் குடித்தவன், ஊற்றி வைக்கப்பட்டிருந்த இன்னொரு டம்ளரையும் எடுத்துக் குடித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.

ரயில் வரும் ஓசை கேட்டது. இந்த வெற்றுத் தண்டவாளம் இன்னும் சிறிது நேரத்தில் தன் வாழ்நாள் சாபம் தீர்ந்து பெருமூச்சு விடும் என்று உணர்ந்தவனின் கண்களில், சற்றுமுன் பார்த்த ரயில் வராத தண்டவாளம் தெரிந்து சிதைந்து மறைந்தது. பேன்ட் பாக்கெட்டில் கைகளை நுழைத்துக்கொண்டு நின்றிருந்தவனைச் சுற்றிலும் மக்கள், முன்பின்னாகக் கடந்து சென்றுகொண்டிருந்தார்கள். போகிற வேகத்தில் யாரோ ஒருவர் அவன்மீது மோதிவிட்டு ``ஸாரி’’ என்றார். கடைசி மன்னிப்புக்குத் தயாரானான். ரயில் பெரும் சப்தத்துடன் வளைவில் திரும்பியது. சற்று முன்னகர்ந்தான். இருபது அடி தூரத்தில் ரயிலின் வெளிச்சம் தண்டவாளத்தில் படிந்தபோது அந்த வெளிச்சத்தை நோக்கித் தன் உடம்பை வீழ்த்தினான். பிளாட்ஃபார்ம் முழுவதும் மனிதக்குரலின் கூட்டுச்சத்தம் எழுந்தது. ரயிலின் முன் சக்கரம் அவன் உடம்பில் ஏறி இறங்கியதில் நெஞ்சுக்கூடு நொறுங்கி உடலின் சகல துவாரங்களிலிருந்தும் ரத்தம் பீறிட, சக்கரத்தில் சிக்கிக்கொண்ட உடலை ரயில் சற்றுதூரம் இழுத்துச்சென்று கைவிட்டது.



சலீம், திருப்பூரிலிருந்து சென்னைக்கு வர ஒரே காரணம் போதுமானதாயிருந்தது. சினிமா. பள்ளிக்கூடத்துக்குச் செல்லும்போதும் சரி, தொழுகைக்குப் பள்ளிக்குச் செல்லும்போதும் சரி, சலீமின் பார்வையில் படும் சினிமா போஸ்டர்களில் அவ்வளவு வசீகரம் இருந்தது. சினிமாவுக்கான மொழி தெரியாமல் தனக்குத் தெரிந்த கதையை சினிமாவாக்கி எழுதி வைத்திருந்த ஸ்க்ரிப்ட் பேடுடன் பல சினிமா ஆபீஸ்கள் ஏறி இறங்கினான். அப்படிப்பட்ட ஒருநாளில்தான் முரளியைச் சந்தித்தான். முரளி ஒரு முன்னாள் இயக்குநர். ஆமாம், அப்படிச் சொல்வதுதான் சரியாக இருக்கும். முரளி இயக்கிய முத84p2.jpgல் படத்தில் இப்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சக்தியாய் இருக்கும் ஒரு பெரிய ஹீரோதான் நடித்தார். படம் படுதோல்வி. ஆனால், வளர்ந்துவந்த அந்த ஹீரோவை காலம் மேலும் மேலும் வளரவைத்தது. முரளிக்கோ அடுத்த படம் கிடைக்கவில்லை. வடபழனியிலும் சாலிகிராமத்திலும் பல டீக்கடைகளில் முரளிக்கு அக்கவுன்ட் ஏறிக்கொண்டே போனது. சலீமைச் சந்தித்ததுகூட ஒரு தேநீர் இடைவேளையில்தான். சலீம் கையிலிருந்த ஸ்க்ரிப்ட் பேடைப் பார்த்ததும் புன்னகை பூத்த முரளி, ``ஸ்க்ரிப்டா’’ என்றான் சலீமைப் பார்த்து. டீயின் முதல் மிடறு உள்ளிறங்கியதும் ``ஆமா’’ என்ற சலீமின் புருவங்கள் முரளியிடம் கேள்வியாய் உயர்ந்தன. ``நீங்க...’’ என்ற சலீமிடம், ``நான் முரளி. திலீப்ராஜோட முதல் ஆக்‌ஷன் படம் ஞாபகமிருக்கா?’’ என்ற முரளி தன் முகம் முழுவதும் சிரிப்பைத் தேக்கி வைத்திருந்தார்.

``சிவன்தானே... சரியா’’ சலீம் எதையோ கண்டுவிட்ட ஆச்சர்யத்தில் இருந்தான்.

``ம். அந்தப் படத்தோட டைரக்டர் முரளி நான்தான்’’ சொன்னதும் சலீம் தன் கைகளை நீட்டினான். ``ஓ... ஸாரி சார். உடனே ஞாபகம் வரலை.’’

``சினிமாவில டைரக்டர் முகம் ஞாபகத்துக்கு வராது. அதுதான் சினிமா.  படம் ஃபெய்லியர். நான் காணாமப்போயிட்டேன். ஆனா, இப்போ அவர் இருக்கிற உயரமே வேற. 30 அடி. அன்னிக்கி உதயம் தியேட்டர் வாசல்ல பாத்தேன். பேனரும் கட் அவுட்டுமா. என்ன நீங்களும் சினிமாவா?’’

``ஆமா சார். சினிமா பிடிக்கும். கையில ஒரு ஸ்க்ரிப்ட் இருக்கு. எங்கூர்காரர்தான் டைரக்டர் குமார். அவரைத்தான் பாத்தேன். அடுத்த பட டிஸ்கசன்ல இருக்கார். இன்னும் அவருக்கு ப்ரொடியூசர் கிடைக்கலை. என் கதையைக் கேட்டுட்டு கொஞ்சநாள் அவர்கிட்ட அசிஸ்டென்ட்டா இருக்கச் சொன்னார். சினிமான்னு ஆசைப்பட்டு வந்தாச்சி.’’ சலீம் தன் பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்துக் கொடுத்து ``ரெண்டு டீக்கு எடுத்துக்குங்க’’ என்றான்.

`` பாஸ்... உங்க பேரென்ன சொல்லுங்க’’ என்றார் முரளி.

``சலீம்’’ என்றதும் ``எனக்குத் தெரிஞ்சி குமார் சார் ரொம்ப நல்ல மனுசன். அவர்கிட்ட ஒன் இயர் வொர்க் பண்ணிட்டு அப்புறம் தனியா படம் பண்ணுங்க. உங்களுக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும். உங்க போன் நம்பர் குடுங்க சலீம். எனக்கு ஏதாவது தோணிச்சின்னா கால் பண்ணிச் சொல்றேன். மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துலதான் என் வீடு. ஒருநாள் வாங்க’’ முரளியின் முகத்தில் புன்னகை மாறவில்லை.

சலீம் தன் நம்பரைச் சொல்ல, முரளி குறித்துக்கொண்டார். ஆனாலும் சலீமுக்கு சினிமா போதுமான நம்பிக்கையை அளிக்கவில்லை. சினிமாவைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் போவதைவிட ஒரு பிரபல இயக்குநரிடம் உதவி இயக்குநராய் இருந்துவிட்டு, பின் தனியே படம் பண்ணலாம் என்றுதான் குமாரிடம் சேர்ந்தது. ஆனால், சினிமா லகுவான பாதையை வளைத்துக் கொடுத்து சலீமை வரவேற்கவில்லை. குமாரின் உறக்கம் தொலைத்த கண்களைக் காலையில் பார்க்கும்போது சலீமுக்கு மனம் சோர்வாக இருந்தது.

ஒருமுறை லண்டனிலிருந்து மூன்று பணக்காரர்கள் படம் தயாரிக்கும் எண்ணத்தில் கோடம்பாக்கத்தில் முகாமிட்டார்கள். முரளிதான் சலீமுக்கு போன் பண்ணினார். புதிய இயக்குநராய் அவர்கள் தேடிக்கொண்டிருப்பதாகச் சொன்ன முரளி, சலீமுக்கு `ஆல் தி பெஸ்ட்’ சொன்னார். கிண்டியில் உள்ள ஓர் உயர்தர ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கியிருந்தார்கள். சலீம் போன் செய்துவிட்டு ஹோட்டலுக்குச் சென்றான்.  அறைக்குள் நுழைந்ததும் மிக அந்நியத்தன்மையை உணர்ந்தான். சோபாவில் அமரும்போதே கவனித்தான். எதிரிலிருந்த கண்ணாடி மேசைமீது உயர் ரக மதுபாட்டில் ஓப்பன் செய்யப்பட்டிருந்தது. அருகில் ஐஸ் க்யூப்ஸ் அடங்கிய பக்கெட். மூன்று கண்ணாடி டம்ளர்களில் இரண்டு காலியாகியிருந்தன. ஒன்றில் பாதி போதை. மூவருமே சலீமைப் பார்த்ததும் புன்னகைத்தனர். சலீம் கை குலுக்கினான். தாங்கள் எம்ஜிஆர் எனவும் முறையே முருகன், கண்பத், ராஜன் என்றும் அறிமுகப்படுத்திக்கொண்டனர். லண்டனில் செட்டிலான தமிழர்கள். நண்பர்கள். சினிமா தயாரிக்கும் ஆசையில் இந்தியா வந்திருப்பதாய்ச் சொன்ன முருகன், சலீமிடம் மது அருந்துகிறீர்களா எனக் கேட்டு, சலீம் தனக்குப் பழக்கமில்லையென மறுத்ததும் ஆச்சர்யப்பட்டார்கள். மூவரில் அதிகம் பேசாத ராஜன் மட்டுமே சட்டை அணிந்திருந்தார். மற்ற இருவரும் டி ஷர்ட்டில் இருக்க, சலீம் கதை சொல்லத் தொடங்கினான்.

``இப்போ உள்ள ட்ரெண்ட்படி பேய்க்கதைகள்தான் தமிழ் ஃபீல்டுல ஈசியா ஜெயிக்குது. அதனால மட்டும் இல்ல. இது சினிமா சார்ந்த ஒரு பேய்க்கதை...’’ சலீம் நிறுத்திக் கவனித்தான். முதலாமவர் தன் மொபைலில் எதையோ நோண்டிக்கொண்டிருந்தார். இரண்டாமவர் தன் லேப்டாப் விரித்துவைத்துப் பார்த்துக்கொண்டிருக்க, ராஜன் மட்டும் அந்த மீதி போதையிலிருந்து சிறிது அருந்திவிட்டு இவனைப் பார்த்தார்.

``சார்... நீங்க பணம் போடுற தயாரிப்பாளர்கள்தான். மூணுமணி நேரம் ஓடுற ஒரு படத்தோட கதையை நான் உங்களுக்கு மூணுமணி நேரம் சொல்லப்போறதில்லை. வெறும் முப்பது நிமிசத்துக்குள்ள நான் அந்தப் படத்தைச் சொல்லணும். தயவுசெஞ்சு கொஞ்சம் கவனிச்சிக் கேளுங்க.’’

``ஏன் முப்பது நிமிசம். ஒன்லைன்ல சொல்ல முடியாதா?’’ என்றார் முருகன், மொபைலிலிருந்து பார்வையை விலக்காமலே.

``ஹலோ... என்ன பேசுறீங்க... இப்பவும் நாங்க பிசினஸ் பண்ணிட்டுதான் இருக்கோம். உங்க கதையைக் கேட்கிற நேரத்துல எங்களால ரெண்டு கோடி டர்ன் ஓவர் பண்ண முடியும். லண்டன்ல எம்ஜிஆர் மால், ரெஸ்டாரென்ட், ஹோட்டல்ஸ் எல்லாம் எங்க மூணு பேரோடதுதான். டெய்லி அக்கவுன்ட்ஸ் பார்த்தாதான் பணம். அந்தப் பணத்தை வெச்சிதானே உங்க சினிமாவே எடுக்க முடியும். நீங்க கதையைச் சொல்லுங்க. பிடிச்சிருந்தா பண்ணலாம்’’ கண்பத் லேப்டாப்பிலிருந்து விலகியிருந்தாலும் பேசிய வார்த்தைகளில் நிறைய குளறல்கள் இருந்தன. 

சலீமுக்கு நெஞ்சுக்குள் எரிந்தது. ``கோடிக்கணக்கில இன்வெஸ்ட் பண்ணி ஒரு சினிமா எடுக்கப்போறீங்க. அதுக்கு ஒரு அரைமணி நேரம் ஒதுக்கி உங்களால கதை கேட்க முடியல. ஸாரி சார்... என்னால நான் நெனச்ச படத்தை எடுக்க உங்க ஒத்துழைப்பும் வேணும். இப்படிச் சொன்னீங்கனா அந்தப் படத்தை எடுக்க முடியாதுன்னு நெனைக்கிறேன். என்னை மன்னிச்சுடுங்க.’’

முருகன் மொபைலை அணைத்தார். கண்பத் லேப்டாப் மூட, சலீம் கதை சொல்ல ஆரம்பித்தான். அடுத்த அரைமணி நேரத்துக்கு சலீம் அலறினான்; அழுதான்; பயந்தான்; சிரித்தான்; கோபித்தான். அரைமணி நேர முடிவில் வியர்வையில் நனைந்திருந்தார்கள் அனைவரும். கண்பத்துக்கு போதை  இறங்கியிருந்தது. அவசரமாக பாட்டிலைச் சரித்துத் தன் கோப்பையில் ஊற்றி ஒரே மடக்கில் தொண்டையில் கவிழ்த்தார். முருகன் சிரித்துக்கொண்டே ``அந்த ஏ.சி-யைக் கூட்டிவை’’ என்றார் ராஜனிடம். மூவரும் எழுந்து சலீமுக்குக் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்கள். கலந்து பேசி முடிவெடுத்துப் பதில் சொல்வதாய்ச் சொன்னார்கள். சலீம் எழுந்து கதவைத் திறந்து வெளியேறும் முன் ராஜன், சலீமிடம் கேட்டார். ``படத்துக்கு என்ன டைட்டில் வெச்சிருக்கீங்க?’’

``நட்சத்திரா’’ என்றான் சலீம்.

3

சலீமுக்கு யாரோ வணக்கம் வைத்தபடி பைக்கில் விரைந்தார்கள். அது தனக்கானதல்ல என்று சலீமுக்குப் புரிந்து புன்னகைத்துக்கொண்டான்.  சலீம் போன் எடுத்துத் திரை பார்த்தான். டைரக்டர்.

``சொல்லுங்க சார்.’’84p5.jpg

``எங்க இருக்கீங்க? உடனே ஒரு ஆட்டோ பிடிச்சிட்டு வடபழனி பார்க் ஹோட்டல் ரூம் நம்பர் நூத்தியெட்டுக்கு வாங்க. இஸ்மாயில்னு பேர் சொல்லுங்க.’’

``சரி சார்’’ போனை வைத்தான் சலீம். வடபழனி ஹோட்டலில் வைத்து இஸ்மாயிலை அறிமுகப்படுத்தினார் குமார். தன் படத்தின் இணை இயக்குநர் என்றார் சலீமை. சலீமுக்கு உள்ளுக்குள் நிறைவு பூத்து அடங்கியது. குமார் தன் அடுத்த படத்துக்கான அட்வான்ஸ் பெற்றுக்கொண்டார். ஆபீஸ் போட்டு வேலைகள் தொடங்கின. ஹீரோ, ஹீரோயின் தேடலில் தன் முந்தைய பட ஹீரோயின் வேதிதா மேனனையே இந்தப் படத்துக்கும் ஹீரோயினாகப் போட்டுவிடலாம் என முடிவெடுத்து சலீமிடம் சொல்லி வேதிதாவுக்கு போன் செய்து தேதி ஃபிக்ஸ் செய்யச் சொன்னார். சலீம் முதன்முறையாக வேதிதாவுக்கு போன் செய்தான்.

ஷூட்டிங். வேதிதாவிடம் ஓர் இணை இயக்குநராய் பட சம்பந்தப்பட்ட எல்லாம் பேசினாலும், சலீமுக்கு தனது ஸ்க்ரிப்டிலும் வேதிதாவே நடித்தால் நன்றாக இருக்குமென்று தோன்றியது. காரணம் வேதிதாவின் சிரிப்பும் அழகும், அநாயாசமான நடிப்பும். வேதிதாவோ ஷூட்டிங் ஸ்பாட்டில் தனது சீன் முடிந்ததும் கேரவனுக்குள் நுழைந்துகொண்டால், போனோடுதான் இருப்பாள். பிரபல மலையாளத் தயாரிப்பாளர் சசிமோனின் மகன் மலையாள ஹீரோ அதிஷ் கிருஷ்ணாவுடனான வேதிதாவின் காதல் தமிழ்நாட்டுக்குத் தெரிந்ததுதான். அவனுடன்தான் அவள் பேசிக்கொண்டிருக்கிறாள் என்பதைத் தெரிந்த சலீம் நாகரிகம் கருதி விலகியிருந்தான். சலீமிடம் ஒருநாள், ``எப்போ கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க சலீமண்ணா?’’ என்றாள் வேதிதா.

``என் முதல் படம் ஹிட் ஆனதும்’’ என்றான்.

``நீங்க தனியா படம் பண்ற மாதிரி ஐடியாவில இருக்கீங்களா?’’ சலீமுக்கு உடனே அது புரியவில்லை.

``ஆமா, ஸ்க்ரிப்ட் இருக்கு. இன்னும் ப்ரொடியூசர் அமையல. தயாரிப்பாளர் கிடைச்சுட்டா ஆபீஸ் போட்டுடலாம்’’ மனதில் சிறு குறுகுறுப்புடன் சலீம் கேட்டான். ``அப்படிக் கிடைச்சிட்டா நீங்க நடிக்கிறீங்களா?’’

வேதிதா கண்களால் சிரித்தாள். ``ஓ நோ... சலீமண்ணா உங்களுக்கு மட்டும் ரகசியம் சொல்றேன். வெளியில யார்கிட்டவும் சொல்லிடாதீங்க. நான் நடிக்கிற கடைசிப்படம் இதுவாத்தான் இருக்கும். எனக்கு மேரேஜ் ஆகப்போகுது. ப்ளீஸ்ணா யார்கிட்டவும் சொல்லிடாதீங்க’’ சொல்லிவிட்டுத் தனது வாயை வேதிதா பொத்திக்கொண்ட அழகில் சலீம் இறந்து பிறந்தான். தமிழ் சினிமா ஓர் அழகிய நடிகையைத் தொலைக்கப்போகிறது. ஆனாலும், சலீமிடம் அவன் இயக்கப்போகும் கதையைக் கேட்டாள் வேதிதா. சலீம் கதை சொல்ல ஆரம்பித்தான். அடுத்த அரைமணி நேரத்துக்கு சலீம் அலறினான்; அழுதான்; பயந்தான்; சிரித்தான்; கோபித்தான். அதன் பின்னான நாள்களில் சலீமிடம் தனக்கும் அதிஷுக்குமான காதல்பற்றி அதிகம் பகிர்ந்துகொண்டாள். ``இதெல்லாம் உங்க ஸ்க்ரிப்ட்டுக்கு யூஸ் ஆகும் . வெச்சுக்கோங்கண்ணா’’ சொல்லிவிட்டு ``ஐயோ அண்ணா, நான் சும்மா சொன்னேன். எடுத்துடாதீங்க’’ பொய்யாய்க் கைக்கூப்பினாள்.

சலீமுக்கு போன் வந்தது. புதிய எண். எடுத்து ``ஹலோ’’ என்க, ``நல்லாருக்கீங்களா சலீம். உங்க டைரக்டர் அடுத்த படம் ஆரம்பிச்சுட்டார்போல. நீங்க எப்போ உங்க நட்சத்திராவை ஆரம்பிக்கப்போறீங்க?’’ சலீம் ஒரு நொடி இமைகளை மூடித் திறந்தான். எப்போதோ கேட்ட குரலில் சந்தோசம் இருந்தது. ``ஸாரி சார்... நீங்க யாருன்னு ஞாபகம் வரலை’’ குற்ற உணர்வுடன் சலீம் சொல்ல, ``நான் ராஜன் பேசுறேன். ஞாபகமிருக்கா... படம் பண்றது சம்பந்தமா பேசினோம். அதே ஹோட்டல். அதே ரூம். ஃப்ரீயா இருந்தா வர்றீங்களா. பேசலாம், உங்க முதல் சினிமா பற்றி’’ ராஜனின் குரலில் லேசான நாடகத்தனம் இருந்தாலும் நட்பு ரீதியான உரிமையும் தெரிந்தது. சலீமின் உலகம் அத்தனை வண்ணமயமாய் அந்நொடி மாறுமென்று அவன் எண்ணவில்லை. குமாரிடம் செய்தி சொல்லிவிட்டு `ஆல் தி பெஸ்ட் சலீம்’, இன்னொரு உதவி இயக்குநரிடம் பைக் இரவல் வாங்கிக்கொண்டு விரைந்தான். சென்னைப் போக்குவரத்தில் எல்லா சிக்னலிலும் பச்சை ஒளிர்ந்தது. ட்ராஃபிக் போலீஸ்காரர் சலீமுக்கு வணக்கம் வைத்தார். இந்த சல்யூட் தனக்குத்தான் என உறுதியாக நம்பினான் சலீம். ராஜன் சொன்ன ஹோட்டல் அறைக்குச் செல்ல ராஜன் மட்டும் இருந்தார். மற்ற இருவரும் இல்லை. ராஜன் பெரிதாய் சிரித்துக்கொண்டே சலீமை அணைத்தார். ``வாழ்த்துகள் டைரக்டர் சலீம்’’ என்றார். சலீம் ராஜனின் கால்களில் விழுந்தான்.

84p3.jpg

``படம் நான் மட்டும்தான் பண்றேன். ஆர் ஃபிலிம்ஸ்ங்கிற பேர்ல ப்ரொடியூஸர் கவுன்சில்ல ரெஜிஸ்டர் பண்ணிடலாம். நான் மூணு மாசம் இங்கதான் இருக்கப்போறேன். நட்சத்திராவை முடிச்சி ரிலீஸ் பண்ணி சக்சஸ் மீட் வெச்சிட்டுதான் லண்டன் போறேன். இந்தாங்க உங்களுக்கான அட்வான்ஸ் செக்’’ சலீம் கை நடுங்கப் பெற்றுக்கொண்டான். கண்ணீர் நழுவி கன்னம் தாண்டிச் சிதறியது. ``ரொம்ப நெர்வஸா இருக்கு சார்’’ என்றான்.

``ரிலாக்ஸ். எனக்கு நீங்க கதை சொன்ன விதம் பிடிச்சிருந்தது. ஒரு டைரக்டரா நீங்க ரசிச்சிப் பண்றீங்க. ஒரு தயாரிப்பாளரா நான் அந்தக் கதையை எஞ்சாய் பண்றேன். நமக்குப் பிடிச்சது இந்த மக்களுக்குப் பிடிக்காதா என்ன... படம் ஸ்டார்ட் பண்ணுங்க. இதுதான் பட்ஜெட். எல்லாம் உங்க விருப்பம். ஒண்ணே ஒண்ணு மட்டும் என் விருப்பம்’’ நிறுத்திவிட்டு, புன்னகைத்த ராஜனின் கண்களில் ரகசியமிருந்தது. ``எனக்கு நடிகை வேதிதா மேனனை ரொம்பப் பிடிக்கும். இப்போ நீங்க வொர்க் பண்ற படத்துலேயும் அவங்கதானே ஹீரோயின். நம்ம நட்சத்திரா கேரக்டரையும் அவங்க பண்ணணும். அப்போதான் நல்லாருக்கும். இது என் தாழ்ந்த விண்ணப்பம்.’’

வேதிதாவுக்கு போன் செய்தான் சலீம். தொடர்ந்து பிசியாக இருந்தது வேதிதாவின் எண். வேதிதா மேனன் தனது நிச்சயதார்த்தம் குறித்து முக்கியப் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுத்துக்கொண்டிருந்தாள் தனது அலைபேசியில்.

4

வேதிதா மேனனுக்குக் கண்களுக்குள் விழிப்பு வந்தது. ஆச்சர்யப்பட்டாள். அதற்குள்ளாகவா விடிந்துவிட்டது. நேற்றிரவு நிச்சயதார்த்த பார்ட்டி முடிந்து படுக்க லேட்டாகிவிட்டது. அதிஷ்தான்  ட்ராப் பண்ணிவிட்டுப் போனான். விலகும்போது நெற்றியில் தந்த முத்தத்தின் சூடுகூடக் குறையவில்லை. உடம்பும் மிக அசதியாய்த்தான் உள்ளது. ஆனாலும், விடிந்துவிட்டது. போர்வையை நீக்கி இமைகளைப் பிரித்தவள் அதிர்ந்தாள். விடியவில்லை. தன் பெட்ரூம்,  இரவு வெளிச்சத்தை உதறாமல்தான் இன்னும் இருக்கிறது. படுக்கையின் கால்பக்கம் கவனித்தவள் விருட்டென்று காலைப் போர்வைக்குள் இழுத்தாள். யாரோ தன் படுக்கையருகில் இருக்கிறார்கள். யார் அது? அந்த உருவம் குனிந்திருந்தது தெரிந்தது. கையை நீட்டி அறை விளக்கின் சுவிட்ச் தட்டினாள். வெளிச்சம் பரவியதும் எதுவுமே இல்லை. என்ன இது... தான் பார்த்தது என்ன... யாருமில்லையா... விடியவே இல்லை. தனக்கு ஏன் விழிப்பு வந்தது. இன்னொன்றையும்84p2.jpg உணர்ந்தாள். அறையில் ஏ.சி இல்லை. புழுக்கம் அதிகமாகி வியர்க்கத் தொடங்கியது. கட்டிலை விட்டு இறங்கி சிட் அவுட் வந்து நின்றாள். நிசி. வாசல் கேட் தெரிந்தது. அடுத்த அதிர்ச்சி தொண்டையில் நழுவியது. கேட் திறந்திருந்தது. வெளியே அந்த உருவம் குனிந்தவாறு நின்றிருந்தது. வேதிதா வினோதமாய் ஏதோ உணர்ந்தாள். ஷூட்டிங் நடக்கிறது. கேமரா எங்கிருக்கிறதென்றுதான் தெரியவில்லை. டைரக்டரும் ஆக்‌ஷன் கட் சொல்லவில்லை. இது ஷூட்டிங்தான். வேறொன்றும் இல்லை. வாட்ச்மேனைக் காணவில்லை. அவருமா இப்படத்தில் நடிக்கிறார். மேலிருந்தபடியே கத்தினாள். ``ஹலோ... யாரது’’ மிகவும் அதிகமான டெசிபலில்தான் கத்தினாள். ஆனால், அவள் அப்படிக் கத்தியதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் காற்றிலும் இருட்டிலும் அவ்வளவு நிசப்தம். திடீரென்று மிகப்பெரிய அலறலுடன் ஒரு ரயில் கடந்தது. வேதிதாவின் முகத்தில் பாய்ந்த ரயிலின் முன் விளக்கின் வெளிச்சம் கண்களைக் கூசச்செய்தது. இமை வலிக்க வலிக்க விழி மூடினாள். ரயில் அவள் வீட்டு வாசலிலிருந்து வந்துதான் அவள் முகத்தில் மோதியது. அலறினாள். சிட் அவுட்டிலிருந்து தவறி மேலிருந்து விழுந்தாள். ``சலீமண்ணா கட் சொல்லுங்கண்ணா... என்னால முடியல. ப்ளீஸ்ணா...’’ புலம்பியபடியே தன் வீட்டிலிருந்து தொடங்கியிருந்த தண்டவாளத்தில் ஓடத் துவங்கினாள். கற்கள் குத்திக் கால்களில் கசிந்த ரத்தம் பற்றிய கவனமின்றி ஓடினாள். ஓடிக்கொண்டிருக்கும்போதே அருகில் ஒரு ரயிலும் அவள் கூடவே வந்தது. ஆம். அவள் எந்த வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தாளோ அதே வேகத்தில்தான் ரயிலும் இணையாக வந்தது. ஒரு திருப்பத்தில் அருகில் வந்த ரயில் சட்டென்று வளைந்து வேதிதாவின் முகத்துக்கு எதிரே வந்து வேகமாக முத்தமிட்டது. ரத்தம் தெறிக்க வேதிதா சாயும் முன் ரயிலின் முன் கண்ணாடியில் எழுதப்பட்டிருந்ததைப் படித்தாள். `நட்சத்திராவில் நீங்கள் நடிக்கக் கூடாது.’

5

தான் அமர்ந்திருந்த நாற்காலியின் இருபக்கமும் இறுகப் பிடித்தவாறு இருந்தான் சலீம். முகம் வேதிதாவின் கண்களையே உற்று நோக்கிக்கொண்டிருந்தது. அந்தக் கண்களில்தான் எத்தனை எக்ஸ்பிரஷன். நேற்று, தான் கண்ட கனவினை அப்படியே தன் கண்முன் உயிர்ப்பிக்கும் ஒரு பெண் நிச்சயம் பிரமாதமான நடிகையாகத்தான் இருப்பார். வேதிதா நட்சத்திராவாக மாறியிருந்தாள்.

 ``நேத்துதான் அதிஷ்கிட்ட நீங்க சொன்ன கதையைச் சொன்னேன். அவரும் ஒனக்கு விருப்பமிருந்தா நடின்னு சொல்லிட்டார். கல்யாணத்துக்கப்புறம் மறுபடி ஃபிலிம்ல நடிக்க எனக்கு விருப்பமில்ல. இப்போ நடிச்சிட்டிருக்கிற படம்தான் கடைசிப்படம்னு நெனச்சேன். பட் நீங்க சொன்ன கதையை எவ்ளோ அப்சர்வ் பண்ணிருந்தேன்னா அந்த சீன்ஸ்லாம் அப்படியே கனவா வரும்! ரயில், ஆவி எதுவுமே மாறல. எல்லாமே நீங்க சொன்ன மாதிரிதான். ஆனா, நீங்க சொல்லாத ஒரு சீன்தான் கடைசியா வந்தது. அந்த எழுத்து கண்ணாடியில ரத்தமா படிஞ்சி வழியுது. ‘நட்சத்திராவில் நீங்கள் நடிக்கக் கூடாது.’ இன்னமும்கூட அது கனவா இல்லை நிஜமாவே நடந்ததான்னு தெரியல. நான் காலையில முடிவு பண்ணிட்டேன். கல்யாணத்துக்கு முன்னாடி என் கடைசிப்படம் உங்க படமா இருக்கணும்னு. நான் நட்சத்திராவா நடிக்கிறேன். சலீமண்ணா உங்களுக்குச் சந்தோசம்தானே...’’ கண்களைக் குறும்பாக உருட்டியபடி கேட்ட வேதிதாவின் கையைப் பற்றினான் சலீம். கண்களில் ஒற்றிக்கொண்டான்.

உள்ளுக்குள் எழுந்த விம்மலை அடக்கிக்கொண்டான்.

குமாரிடம் விவரம் சொன்னதும் கண்கள் விரித்து மனம்கொள்ளா சிரிப்புடன் வாஞ்சையாய் சலீமை அணைத்துக்கொண்டார். ``என் படத்துக்கு ரெண்டு மாசம்தான் நீங்க வொர்க் பண்ணியிருந்தாலும் அவ்ளோ அர்ப்பணிப்பு பார்த்தேன். ப்ரொடியூஸரை அனுசரிச்சுப் போங்க. படம் முடியற வரைக்கும் வேறெதையும் மைண்ட்ல ஏத்திக்காதீங்க. பெஸ்ட் ஆஃப் லக்.’’ குமாரின் காலைத் தொட்டு வணங்கி விடைபெற்றான் சலீம்.

சம்பவம் 1

நட்சத்திரா பட பூஜை. தினசரிகளில் அரைப்பக்க விளம்பரம் தந்திருந்தார் ராஜன். மிகவும் உற்சாகத்திலிருந்தார். காலை 8 மணியிலிருந்து ஒவ்வொருவராக வரத் தொடங்கியிருந்தனர். பத்து மணிக்குப் பூஜை தொடங்குவதாக அறிவித்திருந்தார்கள். முதல் படம் என்றாலும் திரையுலகின் பல பிரமுகர்களை நேரில் சென்று அழைத்திருந்தார்கள் சலீமும் ராஜனும். பத்து மணிக்கு முன்பான சில நிமிடங்களில் `நட்சத்திரா சீன் 1 ஷாட் 1’ என்று எழுதப்பட்டிருந்த கிளாப் போர்டு அருகில் இருந்த விளக்கு சாய்ந்து  தீப்பற்றி எரியத் தொடங்கியது.

``இதுக்கெல்லாம் அப்செட் ஆனா எப்படி. ஒங்களுக்கொண்ணு தெரியுமா... இளையராஜாவோட ஃபர்ஸ்ட் ரெக்கார்டிங் அன்னிக்கி கரன்ட் போச்சாம். அது மாதிரிதான் இதுவும். திருஷ்டி கழிஞ்சுதுன்னு நெனச்சுக்குங்க. உள்ள நுழைஞ்சப்பவே கவனிச்சேன். அப்பவே துரத்தி விட்ருக்கணும். இங்க இருக்கிற பூனையோன்னு அலட்சியமா விட்டுட்டேன். அதுதான் தட்டி விட்ருக்கணும். ஆனா, ப்ரொடியூஸர் சார் தங்கமான மனுசன். அவர் மனசு கஷ்டப்படக் கூடாது. அதுதான் முக்கியம். அரைமணி நேரத்துல மறுபடியும் ரெடி பண்ணி பூஜை போட்டாச்சுல்ல. அப்புறம் ஏன் அதையே நெனச்சுட்டிருக்கீங்க. நான் ப்ரொடியூஸரை அடையாளம் காட்டினதெல்லாம் பெரிய உதவியே இல்ல. ஆனா, அதை மனசுல வெச்சுக்கிட்டு உங்க படத்துல வொர்க் பண்ண கூப்பிட்டீங்களே... அந்த நல்ல மனசுக்கு எதுவும் நடக்காது சலீம். உங்க ஸ்க்ரிப்டைக் கொடுங்க. நான் வீட்டுக்கு எடுத்துட்டுப்போய் இன்னிக்கே ஃபுல்லா படிச்சிடுறேன்’’ தன் கைகளைப் பிடித்தபடி ஆறுதல் சொன்ன முரளியின் கண்களையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தான் சலீம். இந்த நம்பிக்கைதான் இத்தனை வருடமாகியும் இவரை சினிமாவில் உயிர்ப்புடன் இயங்கவைக்கிறதா என யோசித்தபடி நட்சத்திராவின் முழு ஸ்க்ரிப்டையும் முரளியிடம் தந்தான்.

சம்பவம் 2

இரவு. படுத்த ஐந்தாவது நிமிடம் அந்தச் சத்தம் கேட்டது. முரளி எழுந்தார். நட்சத்திரா இருந்த அறையிலிருந்துதான் சத்தம். இவ்வளவு நேரம் அந்த ஸ்க்ரிப்டைத்தான் முழுமையாக வாசித்துவிட்டு மனநிறைவுடன் வந்து படுத்தார். திரைக்கதையில் சலீம் மிரட்டியிருந்தான். கடிகாரம் பார்த்தார். மணி ஒன்றைத் தாண்டியிருந்தது. அந்த அறைக்கு வர ஆச்சர்யமானார். நன்றாக நினைவிருக்கிறது. ஸ்க்ரிப்ட் வாசித்து முடித்துவிட்டு வரும்போது அறைக்கதவை மூடியிருந்ததும் லைட்டை அணைத்திருந்ததும். அறைக்கதவு திறந்திருக்க லைட் எரிந்துகொண்டிருந்தது. நடமாட்டம் வேறு. யார் இருக்கிறார்கள் அறைக்குள்? கேள்வியுடன் வந்து பார்க்க, யாருமில்லை. ஸ்க்ரிப்ட், தான் வைத்துவிட்டுப் போனதுபோலவே இருந்தது. அமர்ந்திருந்த நாற்காலியை நெருங்கினார். நெருங்க நெருங்க முதுகில் அந்த வேகமான  உரசலும் சத்தமும் கேட்டார். ரயில் சத்தம். அதிர்ந்து திரும்ப சட்டையில்லாத அவர் முதுகில் கீறியபடி பெருத்த சத்தத்துடன் ஒரு பூனை ஜன்னல் நோக்கிப் பாய்ந்தது.

சலீமின் கண்களிலிருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்துகொண்டிருந்தது. ராஜனின் கைகள் சலீமின் தோளை ஆறுதலாய்ப் பற்றியிருக்க, ``நான் பூஜை அன்னிக்கிதான் முரளியைப் பார்த்தேன். ஆனா, அவர்தான் இந்த 84p5.jpgசான்ஸுக்கு மூலகாரணம்னு தெரியாது. நேத்து கிளாப் போர்டு எரிஞ்சதும் அதிகம் பதற்றமில்லாம எல்லா வேலையும் இழுத்துப் போட்டு செஞ்சவர் அவர்தான். நீங்க சொல்லித்தான் எனக்கே தெரியும். அவர் இந்தப் படத்துல உங்ககூட வொர்க் பண்றாருன்னு. திடீர்னு ஹார்ட் அட்டாக்குன்னா நம்பவா முடியுது. ரெண்டு நாள்ல என்னென்னமோ நடந்திடுச்சி. ஒன் வீக் கழிச்சு நம்ம ஷூட்டிங்கை ஆரம்பிக்கலாமா சலீம். நானும் கொடைக்கானல் போயிட்டு வரணும். பிசினஸ் சம்பந்தமா ஒருத்தரைப் பார்க்கச் சொல்லிருக்காங்க. நீங்க ஊருக்குப் போய் அம்மா அப்பாவைப் பாத்துட்டு வாங்க. கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும். பணம் இருக்கா. தரவா?’’ ராஜனின் உள்ளங்கை ஆறுதல் சொற்களாக மாறி இறங்கிக்கொண்டிருந்தது.

``முரளிதான் எனக்குப் பெரிய நம்பிக்கையா இருந்தாரு. இன்னமும் அவர் செத்துப்போயிட்டாருங்கிறதை என்னால நம்ப முடியல. ஆசையா என் ஸ்க்ரிப்ட்டை வாங்கிட்டுப் போனாரு. முழுசா படிச்சிருக்காரு. ஆனா, ஸ்க்ரிப்ட்டை மாத்தியிருக்காரு. முதல்ல நடக்கிற தற்கொலையைக் கடைசியா மாற்றி வெச்சிருக்காரு. ஏன்னு தெரியலை. என்னைக் கேட்காம அப்படிப் பண்ண மாட்டார். என் கதையை முழுசா படிச்சவர், கதையை மாற்றி அடுக்கி வெச்சவர் நாற்காலியில் உட்கார்ந்தபடியே இறந்துபோயிருக்கிறதை நெனச்சா கொடுமையா இருக்கு. முரளியோட மனைவி அழுதுகிட்டே சொன்ன எதையும் என்னால ஜீரணிக்க முடியலை. சிகரெட் பிடிப்பாரு. அது ஹார்ட் அட்டாக் வரைக்கும் கொண்டு போகுமான்னு தெரியலை. நான் ஊருக்குப் போறேன் சார். குமார் சார் படத்து டேட்ஸைத்தான் வேதிதா மேடம் நமக்கு அட்ஜஸ்ட் பண்ணிக் கொடுத்தாங்க. அதனால அவங்களுக்குப் பிரச்னையில்ல. அந்த ஷூட் போகட்டும். நான் அவங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணிக்கிறேன். நீங்க அட்வான்ஸ் கொடுத்த பணத்துலதான் செகண்ட் ஹாண்ட்ல பைக் வாங்கினது. ஊருக்குப் போக பணம் வேணும் சார். அம்மாகிட்ட கொடுத்தா சந்தோசப்படுவாங்க’’ கண்ணீருடன் சலீம் பேசினான். முரளியின் கண்களில் முதல்நாள் தென்பட்ட நம்பிக்கை மறுநாள் சடலமாய்ப் பார்க்கையில் பயமாய் உறைந்திருந்தது மட்டும் நெருடலாய் இருந்தது.

சம்பவம் 3

ராஜன் தந்த பணத்தையும் தன்னிடம் மிச்சமிருந்த பணத்தையும் சேர்த்து 50,000 ரூபாயை சலீம் தந்தபோது விக்கித்துப்போனார் சலீமின் அம்மா. வாய் மட்டும் அல்லா அல்லா என்று முனகியபடி இருந்தது. சலீம் தன் அம்மாவிடம் எல்லாவற்றையும் சொன்னான். யாரிடமாவது எல்லாவற்றையும் சொல்லி அழுதால் நன்றாக இருக்குமென்று தோன்றியது. அழுதான். தலை கோதிய அம்மா, ``தர்காவுக்குப் போய் மோதினார்கிட்ட ஓதி ஒரு கயிற்றை வாங்கிக் கைல கட்டிட்டு வா. ஏதாவது சைத்தானா இருந்தா போய்த்தொலையும்’’ என்றாள். சலீம் இரண்டுநாள் கழித்து ஒரு சாயங்காலத்தில் தர்கா சென்றுவிட்டுத் திரும்பியபோது வீட்டில் அவன் அறையில் வைத்திருந்த ஸ்க்ரிப்ட் கீழே இருந்தது. ஒரு பூனை அதைக் கிழித்துக்கொண்டிருந்ததைப் பார்த்ததும் நிலமதிரக் கத்தினான். உள்ளிருந்து அவன் அறைக்கு அம்மா வந்தபோது ரயிலின் பலத்த சத்தம் அவனைக்  குலுக்கியது. சலீமின் அம்மா டி.வி. வால்யூமைக் குறைத்து வைத்தாள். சலீம் கிழிந்திருந்த ஸ்க்ரிப்ட்டுடன் நின்றுகொண்டிருந்தான்.

84p4.jpg

``என்னப்பா ஆச்சு?’’

 ``பூனையெல்லாம் ஏன் வீட்ல விடுறீங்க. பார்க்கிறதில்லையா. இங்க பாருங்க என் ஸ்க்ரிப்ட்டோட நிலைமையை.’’

 ``கொஞ்சநாளாதாம்பா இந்த காலனியில பூனை ஒண்ணு வந்துட்டிருக்கு. ஆனா, அது ஏதும் பண்ணாதப்பா...’’

 ``எதுவும் பண்ணாமலா இப்படி ஆகியிருக்கு?’’ சட்டென்று பேச்சை நிறுத்தினான்.

 ``ஆமா, நான் ஸ்க்ரிப்ட்பேடை மேலதானே வெச்சிருந்தேன். நீ எடுத்துக் கீழ வெச்சியா?’’

 ``இல்லப்பா... நான் ஏன் எடுக்கிறேன். நீதான் மறந்தாப்ல கீழ வெச்சிருப்பே. அங்கங்க கிழிஞ்சிருக்கு. புதுசா எழுதிக்கப்பா... என்னமோ நடக்குது. என்னன்னுதான் தெரியல’’ முனகிக்கொண்டே விலகினாள் அம்மா.

சலீம் தலையில் கையை வைத்துக்கொண்டு அமர்ந்தான். ஏன் மறுபடியும் மறுபடியும் பிரச்னைகள். எல்லாம் யதேச்சையாகத்தான் நடக்கிறதா? நன்றாக ஞாபகமிருக்கிறது; மேலே வைத்தது. அவ்ளோ உயரத்துக்குப் பூனை தாவினாலும் குறிப்பாக இதை மட்டும் எதற்கு... காற்றில் தாள்கள் புரள கண்ணில் அந்த மாற்றம் தென்பட்டது. லேசான நடுக்கத்துடன் பேடைப் பிரித்தான். யாரோ நெஞ்சுக்குள் கத்திவைத்து அழுத்தியதுபோல் வலி உணர்ந்தான். முரளி செய்திருந்த அதே வேலை. திரைக்கதை மாற்றி வைக்கப்பட்டிருந்தது. பளிச்சென்று மின்னல் வெட்டியது. முரளியின் திடீர் மரணம் குறித்து டாக்டர் சொன்னது, ``ஹார்ட் அட்டாக்ல இறந்திருக்காரு. முதுகுல பூனை கீறின தடம் இருக்கு. அந்த மிட்நைட்ல அவர் ஏதோ பார்த்து பயந்திருக்கலாம். அதிர்ச்சியில இறந்திருக்கலாம்.’’ சலீம் உடனே ராஜனுக்கு போன் செய்தான். ரிங் போய்க்கொண்டே இருந்தது. மீண்டும் மீண்டும் முயன்றான். ராஜன் போனை எடுக்கவில்லை.

சலீமுக்கு இரவில் போன் வந்தது ராஜனிடமிருந்து. பதற்றமாய் எடுத்து ``ஹலோ’’ என்றான்.

``சொல்லுங்க சலீம். ரிலாக்ஸாயிட்டீங்களா...எனக்கும் வொர்க் முடிஞ்சிடுச்சி. இப்போ ரிட்டர்ன். ஈவ்னிங் நல்ல மழை. இப்போ இல்லை. அதான் கிளம்பிட்டேன். ஸ்க்ரிப்ட் கிளியர் பண்ணிட்டீங்களா?’’ மிக உற்சாகத்திலிருந்தது ராஜனின் குரல்.

 ``சார் நீங்க நல்லாருக்கீங்களா?’’ குரலில் ஏன் இவ்வளவு பயம். சலீம் இறுக்கமாய் உணர்ந்தான்.

 ``நல்லா இருக்கேன். சென்னை வந்ததும் ஷூட் போகலாம். ரெடியா இருங்க. நட்சத்திராவையும் ரெடியா இருக்கச் சொல்லுங்க.’’

 ``சார் நான் சொல்றதைக் கொஞ்சம் கவனமா கேளுங்க. பட பூஜை அன்னிக்கி கிளாப் போர்டு எரிஞ்சது. முரளி சொன்னார், பூனை தட்டிவிட்டதா... அப்போ நான் அதைப் பெரிசா எடுத்துக்கல. அன்னிக்கிதான் முரளி ஸ்க்ரிப்ட்டை வீட்டுக்கு எடுத்துட்டுப் போனார். நைட் ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டார்.  டாக்டர் பூனை கீறுன தடம் முரளி முதுகுல இருந்ததா சொன்னார். இன்னிக்கி என் வீட்ல என் ஸ்க்ரிப்ட்டை ஏதோ ஒரு பூனை கிழிச்சி எறிஞ்சிட்டுப் போகுது. முரளி என் கதையை மாற்றி வெச்சாரு. ஓகே. ஆனா, நான் அதை மறுபடியும் பழையபடி மாத்திட்டேன். இப்போ பூனை கிழிச்ச ஸ்க்ரிப்ட் முரளி மாற்றி வெச்ச மாதிரி இருக்கு. ஏதோ தப்பா நடக்குது சார். ரொம்பக் கொழப்பமா இருக்கு. முரளி இறந்துகிடந்த ரூம்ல லைட் ஆஃப் ஆகி இருந்ததா அவர் மனைவி சொன்னாங்க. லைட்டை ஆஃப் பண்ணிட்டுத் திரும்பவும் முரளி ஏன் நாற்காலியில உட்காரணும்? நான் சரி பண்ணின கதை மறுபடியும் முரளி மாற்றி வெச்ச மாதிரி ஏன் ஆகணும்? எனக்குப் புரியல சார். நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.’’

``சலீம்... ஒண்ணு நல்லா புரிஞ்சிக்குங்க. நீங்க எடுக்கிற சினிமா மூலமா மக்கள்கிட்ட என்ன சொல்றீங்க. 84p5.jpgஆவி இருக்குன்னு சொல்லித்தானே சினிமா எடுத்துக் காசு சம்பாதிக்கிறீங்க. சினிமாவில நம்பச் சொல்ற ஆவியை நிஜத்திலேயும் நம்பிட்டுப் போங்க. ஜஸ்ட் ஃபார் ஃபன். ஒரு விஷயம் எனக்கு நல்லா புரிஞ்சிடுச்சி. நீங்களும் வேதிதாவும் உங்க கதை மேல ரொம்ப கான்ஃபிடென்ட்டா இருக்கீங்க. அதனாலதான் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க. மொட்டத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டது போதும். வேதிதா மேனன் நடிச்ச முதல் சூப்பர் டூப்பர் ஹிட் படம் `நேனு பெல்லா’. அதுல பூனைதான் எல்லாரையும் பழி வாங்கும். லவ் பண்ணும். அந்தப் படத்தையும் உங்க படத்தையும் போட்டுக் கொழப்பிக்காதீங்க. உங்க கதையை வேதிதா உள்வாங்கின மாதிரி அவங்க படத்தை நீங்க உள்வாங்கிட்டீங்கபோல. மனசு தெளிவாகி நாளைக்கி ஷூட்டிங் ஆரம்பிங்க. நானும் வந்துடுறேன்.’’

சலீம் அதல பாதாளத்தில் வீழ்ந்துகொண்டிருந்தான். வேதிதாவின் முதல் படம் குறித்து அவனுக்கு ஞாபகமே இல்லை. இப்போது பூனை எங்கிருந்து வருகிறது என்பது புரிந்தாற்போல் இருந்தது. நட்சத்திரா பூஜையிலிருந்து நிதானமாக யோசித்தான். பூஜையன்று தீ விபத்து. தொடர்ந்து முரளி மரணம். திருப்பூர் வந்தால் பூனை கிழிக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் ஆரம்பமாய் வேதிதா கண்ட கனவு. சலீம் வேதிதாவுக்கு போன் செய்தான். 

சம்பவம் 4

கொடைக்கானலில் நின்றிருந்த மழை திண்டுக்கல் தாண்டியதும் தொடங்கிவிட்டது. பெரம்பலூர் சாலையில் விரைந்துகொண்டிருந்தது கார். மெலிதான இசை காரின் உள்ளே கசிந்துகொண்டிருந்தது. வைப்பரை இயக்கினார் ராஜன். காரின் முன் விளக்கின் வெளிச்சம் சாலை மழையில் விழுந்து நிறம் மாற்றி நனைந்தது. ரயில்வே ட்ராக் குறுக்கிட்டது. வெளியில் மழை கண்ணாடியை அறைந்து அறைந்து பெய்துகொண்டிருக்க, ஸ்டீயரிங்மீது விரல்களால் தாளம் போட்டுக்கொண்டிருந்த ராஜன் மழையில் நனைந்தபடி ரயில் வேகமாய்க் கடந்துபோனதைக் கவனித்தார். இருளும் ரயிலும் மழையும் ராஜனுக்குள் சிலிர்ப்பைப் பரப்பின. கேட் திறந்ததும் காரை ஸ்டார்ட் செய்தார். கியர் மாற்றினார். `மியாவ்’ என்ற அழைப்பில் மிரண்டு கண்கள் விரிய பின்னால் திரும்பிப் பார்த்தார். பின் சீட்டில் அந்தப் பூனை படுத்திருந்தது. ராஜனைப் பார்த்து ஒருமுறை நாக்கைச் சுழற்றிப் பச்சை நிரம்பிய கண்களால் மியாவ் என்றது. கார் வேகமெடுத்தது.

6

காலையில் சலீமுக்கு போன் செய்து முரளியின் மரணத்துக்கு வருத்தம் தெரிவித்தும் சலீமுக்கு ஆறுதலாகவும் பேசினாள் வேதிதா. ஷூட்டிங் எப்போது ஆரம்பித்தாலும், தான் வந்து நடித்துக்கொடுப்பதாய்ச் சொன்னாள். காலை ஏழு மணிக்கு ராஜனிடமிருந்து சலீமுக்கு போன் வந்தது.

``சொல்லுங்க சார். சென்னை வந்துட்டீங்களா?’’ என்றான் போனை எடுத்ததும்.

``சலீம்’’ என்றது புத்தம் புதிதான ஓர் ஆண்குரல். ராஜன் போனிலிருந்து வேறு யாரோ பேசுகிறார்கள் என்றதுமே சலீம் மனதில் பயம் புள்ளியாய்த் தைத்தது. அடுத்தடுத்த உரையாடலில் அப்புள்ளி கோடென நீண்டு வளைந்து சுற்றிய சுருக்கில் சலீம் மயங்கி விழுந்தான்.

சலீம் ஸ்பாட்டுக்குச் சென்றபோது மதியம் ஒரு மணி. ராஜனின் கார் ரயில்வே கிராஸ் கேட்டின் ஓரத்தில் மோதிக் கவிழ்ந்திருந்தது. ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றிருந்தார்கள் ராஜனின் உடலை.

``நேத்து மிட்நைட்ல ஃபுல் ஸ்பீடுல வந்திருக்காரு. நல்ல மழை. ரயில்வே கிராஸ் இருந்ததைக் கவனிக்காம மோதிட்டாரு. ஸ்பாட்லேயே டெத். பாடி மார்ச்சுவரி போயிருக்கு. அவர் கடைசியா அட்டெண்ட் பண்ணின போன் உங்களுடையது. சொல்லுங்க, நீங்க யாரு, அவர் யாரு?’’ சலீம் உடம்பில் எவ்வித உறுதியும் இல்லாமல் இருந்தான். நடப்பதெல்லாம் தனக்குத்தானா என்ற கேள்விதான் செய்தி கேள்விப்பட்டதிலிருந்தே மூளைக்குள் வட்டமடித்துக் கொண்டிருந்தது. எல்லாவற்றையும் சொன்னான். லண்டனிலிருந்து முருகனும், கண்பத்தும் வந்து சம்பிரதாயங்களை முடித்து ராஜனின் உடலைப் பெற்றுச் சென்றனர். கடைசிவரை சலீமைச் சந்திப்பதை இருவருமே தவிர்த்தார்கள்.

வேதிதா ஊட்டியில் படப்பிடிப்பில் இருந்தாள். சலீம் கிளம்பிச் சென்றான். தனியே அறை எடுத்துத் தங்கினான். கையில் நட்சத்திரா ஸ்க்ரிப்ட் இருந்தது. ஷூட்டிங் ஸ்பாட் சென்றான். கேரவனில் இருந்த வேதிதாவிடம் தனது முதல் படம் பூஜையுடன் நின்றுவிட்டது என்றான். தன் அறைக்கு வந்து பெருங்குரலெடுத்து அழுதான். ``மழையில அவ்ளோ வேகமா வரவே முடியாது. அவர் குடிக்கவுமில்லை. பின்னே ஏன் அப்படி ஒரு வேகத்துல வந்தார்னு தெரியல. ஆனா, அவர் முகம் திரும்பி இருந்ததைப் பார்த்தா, காரை நேரா பாத்து ஓட்டலைனு தெரியுது. எதையோ பார்த்து பயந்திருக்கலாம். அதனால பதற்றத்துல வண்டியை மோதியிருக்கலாம். நாங்க இதை விபத்துன்னுதான் பதிவு பண்ணப்போறோம். உங்களுக்கு யார்மீதாவது சந்தேகம் இருந்தா சொல்லுங்க’’ இன்ஸ்பெக்டர் சொன்னது சலீமின் காதை விட்டு அகலவில்லை. ஒரு வெள்ளை பேப்பர் எடுத்து வரிசையாக எழுதினான். வேதிதா படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ஒரு கனவின் மூலம். அது கனவுதானா? கதை படிக்கும்வரை நன்றாக இருந்த முரளி அன்றிரவு ஏன் ஏகப்பட்ட சந்தேகங்களுடன் சாக வேண்டும், ஸ்க்ரிப்ட் மாற்றி வைத்தது உண்மையிலே முரளிதானா? பூனையின் தடம் எதற்கு அங்கே? அதே பூனைதான் தன் வீட்டுக்கும் வந்ததா, தன் வீட்டில் ஸ்க்ரிப்ட்டை மாற்றி வைத்தது யார்? ஷூட்டிங் போகும் ஆவலில் வந்த ராஜன் ஏன் அகால மரணம் அடைய வேண்டும், அது உண்மையிலே விபத்துதானா? கதை பற்றித் தெரிந்தவர்களில் இப்போது உயிரோடு இருப்பது வேதிதாவும் டைரக்டர் குமாரும்தான். இருவரும் வாழ, தன் கனவை எரிப்பதே நல்லது. கடைசியாய் ராஜன் பேசியது மட்டும் ஆணிகொண்டு மனதில் கீறியிருந்தது. ``நீங்க எடுக்கிற சினிமா மூலமா மக்கள்கிட்ட என்ன சொல்றீங்க. ஆவி இருக்குன்னு சொல்லித்தானே சினிமா எடுத்துக் காசு சம்பாதிக்கிறீங்க. சினிமாவில நம்பச் சொல்ற ஆவியை நிஜத்திலையும் நம்பிட்டுப் போங்க.’’ சலீம் நம்பினான். முடிவெடுத்தான். குளிரை எரித்துக்கொண்டிருந்த நெருப்பில் நட்சத்திரா ஸ்க்ரிப்ட்டின் ஒவ்வொரு பக்கத்தையும் வீசினான். தீயில் சலீமின் முதல் சினிமா, கனவு, வாழ்க்கை பல வண்ணங்கள் காட்டியபடி எரியத் தொடங்கியது.

7

பிரபல வாரப்பத்திரிகைக்குப் பேட்டி தந்த சலீம் ``உங்க முதல் படமே இப்படி சூப்பர் டூப்பர் வெற்றி அடையும்னு எதிர்பார்த்தீங்களா?’’ என்ற கேள்விக்கு, ``நான் எடுக்க நினைச்ச முதல் படம் இது இல்லை. அது பூஜையோட நின்னு போச்சு. ஆனா, கண்டிப்பா அந்தப் படத்தை ஒருநாள் எடுப்பேன்; என்ன நடந்தாலும்’’ குரலில் அவ்வளவு தீவிரம் இருந்தது.

``உங்க முதல் படத்தோட கதை என்ன சார்?’’

``என் ஹீரோயின் நட்சத்திரா மிக அழகான நடிகை. அவளை லவ் பண்ணாத ஆண்களே இல்லைனு சொல்லலாம். அவனும் லவ் பண்ணினான். ஆனா, நட்சத்திரா கல்யாணம் பண்ணிக்கப் போறான்னு தெரிஞ்சதும் தாங்க முடியாத அவன் ரயில்ல விழுந்து சூசைட் பண்ணிக்கிட்டான். இந்தச் சம்பவம் கேள்விப்பட்ட ஒரு டைரக்டர் இதை கான்செப்டா வெச்சு ஒரு படம் எடுக்கிறார். இறந்தவனுக்குத் தன் கதை படமா எடுக்கப்படுறதில் விருப்பமில்ல. அந்தப் படம் எடுக்கவிடாம என்னென்ன செய்யணுமோ எல்லாம் செய்றான். டைரக்டர் அந்தப் படம் எடுத்தாரா இல்லையாங்கிறது க்ளைமாக்ஸ்.’’

``இது உண்மைச் சம்பவமா சார்?’’

8

திருப்பூர் ரயில் நிலைய நடைமேடையில் வெள்ளைத்துணியால் போர்த்தி வைக்கப்பட்டிருந்த அந்தச் சடலத்தின் மேல் துணி அகற்றப்பட்டதும் சலீம் அலறினான். ``சிராஜி... அல்லா.’’

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • ஈவிம் மிசின் குள‌று ப‌டிக‌ள்🤔.............................
    • கஜேந்திரன் கட்சி கட்டுகாசை இழக்குமென்று சொன்ன பெரும்தகைகளில் ஒருவர்.😎
    • அது சரி  அந்த 300  ரூபாய் யாரிடம் கொடுப்பது  ??   அந்த சத்தம் எனக்காக உருவாக்கப்படவில்லை   சத்தம் பசியை. தீர்க்க போவதுமில்லை  தமிழ்நாட்டிலும். இலங்கையிலும் சில இடங்களில் இலவசமாக சாப்பிடலாம்   10 ரூபாய் க்கு  விரும்பிய அளவு இட்டலி சாப்பிடும் ஆய. கடையும் தமிழ்நாட்டில் உண்டு”   😀
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோத‌ரி🙏🥰......................................
    • ஓம் ஓம் நீங்க‌ள் அவுட்டு விடும் புர‌ளி ஒரு போதும் உண்மை ஆகி விடாது தேர்த‌ல் ஆனைய‌ம் ந‌டு நிலையா தானே செய‌ல் ப‌டுகின‌ம் அண்ண‌ன் சீமான் மைக் சின்ன‌ம் வேண்டாம் ப‌ட‌கு சின்ன‌ம் கேட்க்க‌ மேல‌ இருந்து எங்க‌ளுக்கு அழுத்த‌ம் வ‌ருது உங்க‌ளுக்கு வேறு சின்ன‌ம் கொடுக்க‌ கூடாது என்று 😡 இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ தேர்த‌ல் ஆணைய‌ம் யார் க‌ட்டு பாட்டில் இருக்கு என்று விவ‌சாயி சின்ன‌ம் ப‌றி போன‌தில் பிஜேப்பியின்  குள‌று ப‌டிக‌ள் உள் குத்து வேலைக‌ள் நிறைய‌ இருக்கு....................இப்ப‌டியே போனால் உங்க‌ளுக்கும் 200ரூபாய் கொத்த‌டிமைக‌ளுக்கும் வித்தியாச‌ம் இல்லாம‌ போய் விடும் யாழில் உங்க‌ளுக்கு இருக்குல் ந‌ட் பெய‌ரை நீங்க‌ளாக‌வே கெடுக்க‌ வேண்டாம்.....................உள்ள‌தை க‌ண்ட‌ அறிய‌ என‌க்கும் தமிழ் நாட்டில் ஆட்க‌ள் இருக்கின‌ம்............. ந‌டுநிலையான‌ விம‌ர்ச‌க‌ர்க‌ள் எத்த‌னையோ பேர் இப்ப‌வும் இருக்கின‌ம் விலை போகாம‌ய்...........................அவ‌ர்க‌ள் உண்மைய‌ உண்மை என்றே சொல்லுவின‌ம் அதுக்குள் போலி க‌ட்டுக் க‌தை இருக்காது சொல்வ‌தெல்லாம் உண்மை😏.......................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.