Jump to content

என்ன செய்யப் போகிறது தமிழ் மக்கள் பேரவை?


Recommended Posts

என்ன செய்யப் போகிறது தமிழ் மக்கள் பேரவை?

 

ஒரு நாடு ஜன­நா­ய­கத்­தன்­மை­யுடன் அதன் விழு­மி­யங்­களை மதித்து நடை­போ­டு­கி­றது என்­பதை நாட்டு மக்­க­ளுக்கும் சர்­வ­தே­சத்­திற்கும் வெளிப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே குறிப்­பிட்ட காலப்­ப­கு­திக்குள் தேர்­தல்­களை நடத்­து­வ­தற்கு திட்­ட­மி­டு­கின்­றது. அதற்­கேற்­பவே உள்­ளூ­ராட்சி முதல் பாரா­ளு­மன்றம் மற்றும் ஜனா­தி­பதி தேர்தல் வரை குறிப்­பிட்ட கால எல்லை நிர்­ண­யிக்­கப்­பட்டு அதன் ஆட்­சிக்­காலம் நிறை­வ­டைந்­த­வுடன் அல்­லது அதற்கு சற்று முன்­ன­தா­கவே தேர்­தல்கள் நடை­பெ­று­வது வழக்கம். இலங்­கையைப் பொறுத்த வரையில் பிரித்தானிய ஆட்­சி­யா­ளர்­க­ளிடம் இருந்து அதி­காரம் கைமா­றி­யதன் பின்னர் இந்த நாட்டின் பாரா­ளு­மன்றத் தேர்­தல்­களே உரிய காலக்­கி­ர­மத்தில் நடை­பெ­றா­மலும், சில வேளை­களில் பாரா­ளு­மன்றம் இடையில் கலைக்­கப்­பட்டு புதி­தாக தேர்­தல்­களும் நடத்­தப்­பட்டு வந்­தி­ருக்­கி­றன. இதன் உச்ச கட்­ட­மாக 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்­தலில் ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன தலை­மை­யி­லான ஐக்­கி­ய­தே­சியக் கட்சி ஆறில் ஐந்து பெரும்­பான்­மை­யுடன் ஆட்­சியைப் பிடித்த போது, பாரா­ளு­மன்­றத்தின் ஆயுட்­காலம் நிறை­வ­டைந்த பின்­னரும், அடுத்த ஆயுட்­காலம் வரை தேர்தலை நடத்­தா­ம­லேயே தனது நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையின் மூலம் பாரா­ளு­மன்­றத்தின் ஆயுட்­கா­லத்தை நீடித்து இருந்தார். 

தற்­போ­தைய சூழ­லிலும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தல் பல வரு­டங்­க­ளாக நடத்­தப்­ப­டாமல் உள்­ளது. இது அனை­வ­ரது கவ­னத்­தையும் ஈர்த்து அர­சாங்­கத்­தையும் ஒரு நெருக்­க­டிக்குள் தள்­ளி­யி­ருந்­தது. இதன் விளை­வா­கவே அர­சாங்கம் விரும்­பா­விட்­டாலும் கூட ஒரு தேர்­த­லுக்­கான தயா­ரிப்­புக்­களில் ஈடு­பட நேர்ந்­தது. புதிய அர­சியல் யாப்பு ஒன்றை தயா­ரிப்­ப­தற்­கான முயற்­சிகள் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்கும் வேளையில் தேர்­தல்கள் நடத்­தப்­ப­டு­வது அந்த முயற்­சியை சீர்­கு­லைப்­ப­தாக அமையும் என்ற கருத்தை முன்­வைத்து பிர­தான எதிர்க்­கட்­சி­யான தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும், இந்த தேர்­தல்கள் ஒத்திப் போவ­தற்கு கார­ண­மாக இருந்­தி­ருக்­கி­றது. நெருக்­க­டி­களை சமா­ளிப்­ப­தற்­காக தேர்­தல்­க­ளுக்­கான முஸ்­தீ­புகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும், அதற்­கான வேலைகள் நடை­பெ­று­வ­தா­கவும் காட்டிக் கொண்­டாலும் இதனை எப்­ப­டி­யா­வது தடுத்து நிறுத்தி விட வேண்டும் என்­ப­தி­லேயே அர­சாங்­கமும், எதிர்க்­கட்­சியும் செயற்­ப­டு­வ­தாக தெரி­கி­றது. 

எது எப்­படி இருப்­பினும், தமிழ் தரப்பைப் பொறுத்த வரையில் இந்தத்தேர்தல் மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக திகழ்­கி­றது. தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைமை தமிழ் மக்கள் மத்­தியில் பொருள் பொதிந்த விவா­தத்தை மேற்­கொண்டு வழி­ந­டத்தல் குழுவில் தமது கருத்­துக்­களை முன்­வைக்­க­வில்லை என்றும் குறைந்­த­பட்சம் அங்­கத்­துவ கட்­சி­க­ளுடன் கூட பேசி முடி­வெ­டுக்­க­வில்லை என்றும் பர­வ­லான குற்­றச்­சாட்டு எழுந்­துள்­ளது. இந்­நி­லையில் வழி­ந­டத்தல் குழுவில் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரா­கவும் தமி­ழ­ரசுக் கட்­சியின் சிரேஸ்ட தலை­வ­ரா­கவும், எதிர்­க்கட்சித் தலை­வ­ரா­கவும் திகழ்­கின்ற சம்பந்­தனும், அதே கட்­சியைச் சேர்ந்த சுமந்­தி­ரனும் கூட்­ட­மைப்பின் சார்பில் கலந்து கொண்­டுள்­ளனர். ஒரு அர­சியல் யாப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான வழி­ந­டத்தல் செயற்­பாட்டில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மட்­டுமே இருக்க வேண்டும் என்ற அடிப்­ப­டை­யி­லேயே அவர்­களைக் கொண்ட ஒரு குழு அமைக்­கப்­பட்டு இருக்­கின்­றது. இதுவே விமர்­ச­னத்­திற்கு கார­ண­மா­கவும் அமைந்­தி­ருக்­கின்­றது. 

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பி­னு­டைய அதி­ருப்­தி­யான செயற்­பா­டு­களால் போரில் பல­வற்­றையும் இழந்து தங்­க­ளது நாளாந்த பிரச்­ச­ி னை­களைக் கூட தீர்த்துக் கொள்ள முடி­யாத நிலையில் உள்ள தமிழ் மக்கள், தங்கள் மீது கரி­சனை செலுத்தக் கூடிய, தங்­க­ளுடன் இணைந்து செய­லாற்றக் கூடிய, தங்­களை பற்­று­தி­யுடன் வழி­ந­டத்தக் கூடிய ஒரு தலைமை அல்­லது ஒரு இயக்கம் அல்­லது ஒரு அர­சியல் கட்சி வராதா என்ற அங்­கலாய்ப்­புடன் தமது பிரச்­ச­ினை­களை தாமே கையில் எடுத்துக் கொண்டு இந்த வரு­டத்தின் முக்கால் பகு­திக்கும் மேலாக வீதியில் கழித்து வரு­கின்­றனர். மக்­களின் அன்­றாட பிரச்­ச­ினை­க­ளுக்கு முகம் கொடுக்க கூடிய வகை­யிலும், உரு­வாக்­கப்­ப­ட­வி­ருக்­கின்ற புதிய அர­சியல் யாப்பில் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்­களின் பிரச்­ச­ி னைக்­கான அர­சியல் தீர்வு எவ்­வாறு இருக்க வேண்டும் என்­பதை வலி­யு­றுத்­து­வ­தற்­கா­கவும், ஒரு மக்கள் இயக்­க­மாக தமிழ் மக்கள் பேரவை தோற்றம் பெற்­றது. 

2010 ஆம் ஆண்டு முதலே தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தமிழ் மக்­களின் பிர­தான அர­சியல் சக்­தி­யாக இயங்­கு­கின்ற அதே­வே­ளையில், அர­சியல் கட்­சி­க­ளுக்கு அப்பால் உள்ள அமைப்­புக்­களை இணைப்­ப­தற்­காக தமிழ் தேசிய பேரவை என்ற ஒன்றை உரு­வாக்க வேண்டும் என்ற எண்­ணக்­க­ருவும் உத­ய­மா­கி­யி­ருந்­தது. இந்த தேவையை பூர்த்தி செய்யும் முக­மா­கவே பேர­வையும் தோற்றம் பெற்­றது. மக்­களும் தாங்கள் எண்­ணி­யி­ருந்த ஒரு அமைப்பு உத­ய­மா­கி­விட்­ட­தாக மகிழ்­சி­ய­டைந்­தனர். பேர­வையின் அங்­கு­ரார்ப்­பண நிகழ்வில் இது ஒரு அர­சியல் கட்சி அல்ல. தேர்­தல்­களில் போட்­டி­யி­டு­வதை நோக்­க­மாக கொண்­டதும் அல்ல. ஆனால் பிலிப்பைன்ஸ் போன்ற நாடு­களில் உள்­ளதைப் போன்று பேர­வையால் முன்­வைக்­கப்­ப­டு­கின்ற கோரிக்­கை­களை ஏற்று அதற்கு உழைப்­ப­தாக உத்­த­ர­வாதம் அளிக்கக் கூடி­ய­வர்­க­ளுக்கு ஆத­ரவு வழங்கும் ஒரு அமைப்­பாக அது செயற்­படும் என்றும், அதன் ஆத­ரவு பெற்று வெற்றி பெற்ற மக்கள் பிர­தி­நி­திகள் மக்­களின் அபி­லா­சை­களில் இருந்து தவறும் பட்­சத்தில் அவர்­களை கடு­மை­யாக விமர்­சித்து மக்கள் மத்­தியில் அம்­ப­லப்­ப­டுத்தும் என்றும் சொல்­லப்­பட்­டது. ஆனால் இவை எழுத்து பூர்­வ­மாக இருக்­கின்­றதா? இல்­லையா என்­பது வேறு விடயம். அதை பேரவை காத்­தி­ர­மாக முன்­னெ­டுத்து இருக்­கின்­றதா என்­பதே தற்­போ­துள்ள கேள்வி. 

தற்­போ­தைய சூழலில் வந்­தி­ருக்­கின்ற இடைக்­கால அறிக்கை ஏமாற்றம் அளிப்­ப­தா­கவும், தமிழ் மக்­களின் அபி­லா­சை­களை நிவர்த்தி செய்யும் வகை­யிலும் இல்லை என்றும் பேரவை சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. இந்­த­நி­லையில் எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் என்­பது நாடு முழு­வதும் நடை­பெறக் கூடிய ஒரு சூழலில் தென்­ப­கு­தியைச் சேர்ந்­த­வர்கள் அனை­வரும் தமிழ் மக்­களின் அபி­லா­சைகள் நிறை­வேற்றம் தொடர்பில் ஒத்த கருத்­து­டை­ய­வர்­க­ளா­கவே இருக்­கின்­றனர். அதே­நேரம் தமிழர் தரப்பில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினர் இந்த இடைக்­கால அறிக்­கை­யுடன் இணங்கிப் போகின்ற போக்­கையே காண­மு­டி­கி­றது.  தமிழ் மக்கள் பேர­வையும், பேர­வையில் அங்­கத்­துவம் வகிக்­கின்ற இரண்டு அர­சியல் கட்­சி­களும் இந்த விட­யத்தில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் நிலைப்­பாட்­டிற்கு எதி­ரா­ன­வர்­க­ளாக இருக்­கின்­றனர். 

தமிழ் தலை­மைக்கும், இலங்கை அர­சிற்கும், சர்­வ­தேச சமூ­கத்­திற்கும் இலங்கை தமிழ் தேசிய இனத்தின் அபி­லா­சைகள் தொடர்பில் எடுத்துச் சொல்­வ­தற்கும், அழுத்தம் கொடுப்­ப­தற்­கா­க­வுமே பேரவை தோற்றம் பெற்­றுள்­ள­தாக சொல்­லப்­பட்­டது. மக்­களின் அபி­லா­சைகள் தொடர்பில் பாதிக்­கப்­பட்ட தமிழ் தேசிய இனத்­திற்கு அதன் அர­சியல் தலை­மையின் செயற்­பாட்டின் மீது சந்­தேகம் எழும்­பி­யி­ருக்கும் போது அந்த சந்­தே­கத்தை வலுப்­ப­டுத்­து­வ­தாக பேர­வையின் செயற்­பா­டு­களும் அமைந்­தி­ருக்­கின்ற நிலையில் அந்த மக்­க­ளுக்கு உரிய தலை­மையை வழங்கி தாங்கள் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் சமூ­கத்தை ஆபத்தில் இருந்து காப்­பாற்ற வேண்­டிய பொறுப்பும் கட­மையும் பேர­வைக்கும் இருக்­கி­றது. தன்­னு­டைய நோக்­கத்தை முன்­வைத்து மக்கள் மத்­தியில் ஒப்­பு­தலைக் கேட்டு வடக்­கிலும், கிழக்­கிலும் நடத்­திய இரண்டு எழுக தமிழ் பேர­ணிக்கும் மக்கள் வெள்ளம் எனத் திரண்டு தமது ஆத­ரவை வழங்­கி­யுள்­ளனர். ஆகவே பேரவை ஏனை­ய­வர்கள் மீது விரல் நீட்­டு­வ­தற்கு முன்­ன­தாக ஏனைய மூன்று விரல்­களும் தம்மை நோக்கி திரும்­பு­வ­தையும் அந்த மூன்று விரல்­களும் விலகிச் சென்று விடாமல் பெரு­விரல் அமர்த்திப் பிடித்­தி­ருப்­ப­தையும் உணர்ந்து கொள்ள வேண்டும். குழப்­பத்தில் இருக்கும் மக்­களை மேலும் மேலும் குழப்­பாமல் சரி­யான மக்கள் பிர­தி­நி­திகள் உரு­வா­கு­வ­தற்கும், பேர­வையின் எண்­ணக்­க­ருக்­களை முன்­னெ­டுத்துச் சென்று மக்­களை அணி­தி­ரட்­டு­வ­தற்கும் பற்­றுதி மிக்­க­வர்­களை இனங்­கண்டு அவர்­க­ளுக்கு ஆத­ரவு வழங்க வேண்­டிய பொறுப்பும் பேர­வைக்கு இருக்­கி­றது. இந்த கட­மையில் இருந்து பேரவை தவ­று­மானால் சிறு சிறு குழுக்­க­ளாக ஆங்­காங்கே நின்று கொண்டு சமூக மாற்­றத்திற்­கா­கவோ அல்­லது சமூ­கத்தின் அபி­வி­ருத்­திக்­கா­கவோ எதுவும் செய்­யாமல் வாய் சொல் வீரர்­க­ளாக எல்­லாமே தவறு என்று விமர்சனம் செய்பவர்களைப் போன்றே இவர்களையும் நோக்க வேண்டி வரும். பேரவை நேரடியாக அரசியலுக்கு வருகிறதோ அல்லது மறைமுகமாக வருகிறதோ என்பது இல்லை கேள்வி. அது தோற்றம் பெற்றதற்கான தேவையையும், நோக்கத்தையும் புரிந்து பொறுப்புடன் செயற்பட வேண்டிய தருணமிது. 

இனியாவது நேரத்திற்கு ஒரு பேச்சைப் பேசாமல் நோக்கத்தில் இருந்து திரும்பி விடுவவோமோ, பழிச் சொல்லுக்கு ஆளாகி விடுமோ, நமது கௌரவத்திற்கு பாதிப்பு வந்து விடுமா என்றெல்லாம் தனி மனித ஒழுக்கம் சார்ந்து சிந்திக்காமல் ஒரு சமூகத்தின் விடியலுக்கான பொறுப்பை ஏற்றுள்ளோம் என்ற சமூக சிந்தனையின் அடிப்படையில் செயற்பட முன்வர வேண்டியது பேரவையில் உள்ள ஒவ்வொருவரினதும் இன்றைய தலையாய கடமையாகும். இதனை அவர்கள் புரிந்து கொள்வதன் மூலமே உண்மையான ஒரு மக்கள் இயக்கமாக அவர்கள் தொடர்ந்தும் செயற்பட முடியும். அதுவே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு தேவையான விடயமாகும்.

ருத்திரன்-

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-11-18#page-8

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.