Jump to content

பேரின ஒற்றையாட்சி பல்லின நாட்டுக்கு உரியதல்ல


Recommended Posts

பேரின ஒற்றையாட்சி பல்லின நாட்டுக்கு உரியதல்ல

21213-f7f7b9deedc8c799096f1f6045c5478b72b1356b.jpg

 

முதலில் 15 ஆம் நூற்­றாண்டில் வடக்குத் தமி­ழர்கள் போர்த்­துக்­கே­ய­ரிடம் தான் தமது சுய நிர்­ண­யத்­தையும் அர­சு­ரி­மை­யையும் இறை­மை­யையும் இழந்­தார்கள். பின்னர் அவை ஒல்­லாந்­த­ருக்குக் கைமாறி இறு­தி­யாக ஆங்­கி­லே­ய­ரிடம் வந்­தன. 1833 ஆம் ஆண்டு தமது நிர்­வாக வச­திக்­கா­கவே ஆங்­கி­லேயர் வடக்கை ஏனைய பகு­தி­க­ளோடு சேர்த்து ஒற்­றை­யாட்­சிக்கு உட்­ப­டுத்­தினர். எல்லாப் பிர­தே­சங்­க­ளையும் ஒரே நிர்­வாகக் கட்­ட­மைப்­புக்குள் கொண்டு வரவே இந்த ஒற்­றை­யாட்சி முறை வழி கோலி­யது.

இது விதே­சிய கால­ணித்­து­வவா­திகள் சுதே­சிய இன மக்­களை ஒட்­டு­மொத்­த­மாக ஆளு­வ­தற்குக் கொண்டு வந்த ஒற்­றை­யாட்­சி­யாகும். 1815 ஆம் ஆண்டு அவர்கள் கண்­டி­ய­ரசைக் கைப்­பற்­றி­யதும் 1818 ஆம் ஆண்டில் கிளர்ச்சி ஏற்­பட்­டது. இது பல பிர­தே­சங்­க­ளுக்கும் பர­வி­ய­தா­லேயே முற்­றிலும் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக 1833 ஆம் ஆண்டு ஒற்­றை­யாட்சி முறையைக் கொண்டு வந்­தி­ருந்­தார்கள். இந்­தி­யாவில் மாகாண முறை இருந்­தது. இலங்­கையில் இத்­த­கைய முழு நாட்டு நிர்­வாக ஒரு­மைப்­ப­டுத்­தலின் மூல­மா­கவே 1834 ஆம் ஆண்­டிலும் 1842 ஆம் ஆண்­டிலும் 1848 ஆம் ஆண்­டிலும் நிகழ்ந்த கிளர்ச்­சி­களை அவர்­களால் ஒடுக்க முடிந்­தது. எனவே இது அந்த ஒற்­றை­யாட்சி நிர்­வா­கத்தை முழு இலங்­கைக்­கு­மாக ஒரு முகப்­ப­டுத்­து­வ­தற்­கு­ரி­ய­தாகும். ஆக 1972 ஆம் ஆண்டு குடி­ய­ரசு யாப்பு ஆங்­கி­லே­யரின் கால­ணித்­து­வத்தை முற்­றிலும் ஒழித்­ததன் மூலம் அவர்­களின் முழு நாட்டு நிர்­வா­கத்­துக்­கான ஒற்­றை­யாட்­சியும் இல்லா தொழிந்­து­விட்­டது. தற்­போ­துள்ள ஒற்­றை­யாட்சி ஆங்­கி­லே­ய­ரி­ட­மி­ருந்து சிங்­கள மக்கள் கைமாற்றிக் கொண்­ட­தாகும். பாரா­ளு­மன்­றத்தால் சோல்­பரி யாப்பை மாற்ற முடி­யாது என அதில் ஒரு ஷரத்து இருந்­ததால் ரோயல் கல்­லூ­ரியின் நவ­ரங்­க­ஹல மண்­ட­பத்தில் சிங்­கள மக்கள் மட்டும் கூடி மாற்­றி­னார்கள். அப்­போது இவர்கள் வகுத்துக் கொண்ட ஒற்­றை­யாட்சி முழு நாடும் சிங்­கள மக்­க­ளுக்கே என்­றா­கி­றது. பௌத்த மத, பௌத்த சாசன முன்­னு­ரி­மைகள் மூலமும், சிறு­பான்­மைக்­காப்­பீட்டு ஷரத்து நீக்­கப்­பட்­டதன் மூலமும் இது உறு­தி­யா­கி­றது. அதா­வது சிங்­கள மக்­க­ளுக்கு உரி­மைகள் எனவும் சிறு­பான்­மை­க­ளுக்கு சலு­கைகள் எனவும் அர்த்­தப்­ப­டு­கின்­றன.

இதுவே சுய­நிர்­ணய உரி­மை­யையும் கூட்டு இறை­மை­யையும் கோரி வடக்கு கிழக்கு மக்கள் குர­லெ­ழுப்பக் கார­ண­மா­யிற்று. ஆங்­கி­லே­யரின் ஒற்­றை­யாட்­சிக்குள் தமது பகு­தியும் கலந்து இருந்­த­தாலும் அதை ஒரு தலைப்­பட்­ச­மாக சிங்­கள மக்கள் மட்டும் கூடி அப­க­ரித்துக் கொண்­ட­தாலும் பிர­தேச அதி­காரப் பர­வ­லுடன் கூடிய சமஷ்டிக் கோரிக்­கையை வடக்கு கிழக்கு மக்கள் முன்­வைத்­தி­ருக்­கி­றார்கள். ஒரு தலைப்­பட்­ச­மாக ஆங்­கி­லே­ய­ரி­ட­மி­ருந்தும் சிறு­பான்­மை­க­ளி­ட­மி­ருந்தும் அப­க­ரித்துக் கொண்­டதே தற்­போ­தைய ஒற்­றை­யாட்­சி­யாகும்.

அத­னால்தான் இவர்கள் ஏக்­கீய (ஒற்றை) எனும் சொல்லில் விடாப் பிடி­யாக நிற்­கி­றார்கள். 75 வீத சிங்­கள மக்­களின் விகி­தா­சார அதி­க­ரிப்பும் பௌத்த மத பௌத்த சாசன முன்­னு­ரி­மை­களும் இருந்து சிறு­பான்மைக் காப்­பீட்டு ஷரத்­து­மில்­லா­தி­ருக்கும் ஒற்­றை­யாட்சி சிறு­பான்­மை­க­ளுக்­கு­ரிய சுயநிர்­ண­யத்­தையும் கூட்டு இறை­மை­யையும் வாழ்­வா­தா­ரத்­தையும் பிர­தேச அதி­காரப் பர­வ­லையும் உத்­த­ர­வா­தப்­ப­டுத்­துமா? ஒரு­போதும் இல்லை. ஏக்­கீய (ஒற்றை) எனும் சொல்லை எக்சத் (ஐக்­கிய) என மாற்ற வேண்டும். அதன் மூலம்தான் வடக்கு கிழக்கு மக்­களின் தனித் துவத்­தையும் ஏற்­றுக்­கொண்டு ஒரே நாட்­டுக்குள் எல்­லோரும் இணக்­க­மாக வாழலாம். இது தனி நாட்டு ஏற்­பாடோ பிரி­வி­னையோ அல்ல. ஒரே நாட்­டுக்குள் ஒரு முகப்­பட்டு இணங்கி வாழும் யதார்த்த நிலைப்­பா­டாகும். இலங்­கையர் என்­ப­தாகும்.

மத்­திய அரசைப் பேரின வடிவில் ஒற்­றை­யாட்சி என வைத்­துக்­கொண்டு ஒரு சிறு­பான்மை இனத்­துக்­கு­ரிய பிர­தேச அதி­காரப் பகிர்­வையும் தனித்­து­வத்­தையும் வாழ்­வா­தா­ரத்­தையும் உத்­த­ர­வாதப் படுத்த முடி­யாது. எக்சத் (ஐக்­கிய) எனும் சொல் மூலமே அது சாத்­தி­யப்­படும். எனவே ஏக்­கீய எனும் சொல்­லையே வலி­யு­றுத்தி முரண்டு பிடிப்போர் வடக்கு கிழக்கின் பிர­தேச அதி­காரப் பர­வ­லையே எதிர்க்­கி­றார்கள் எனலாம். இன,மொழி, மத அதி­காரப் பரவல் இந்­தி­யா­விலும் உண்டு.

பெரும்­பான்மைச் சமூ­கத்தின் பூரண சம்­ம­த­மின்றி புதிய யாப்பை இயற்­றவோ நிறை­வேற்­றவோ அமுல்­ப­டுத்­தவோ மாட்டோம். காணி விடு­விப்பு, தமிழ்க் கைதிகள் விடு­தலை இப்­போ­தைக்கு இல்லை. காணாமற் போனோரைத் தேடு­கின்றோம் என்­றெல்லாம் கூறிக் கொண்­டி­ருப்­பது மஹிந்த ராஜபக் ஷவின் வழியைப் பின் தொடர்­வ­தே­யாகும். இதற்கு அவ­ரோடு ஒத்­து­ழைத்­த­வர்கள் அவரை ஐ.நா. விலி­ருந்தும் சர்­வ­தேசப் பிடி­யி­லி­ருந்தும் கழற்­று­வ­தற்­கா­கவே ஆட்சி மாற்றம் செய்­தி­ருக்­கி­றார்கள் எனும் எண்­ணப்­பாட்டை உரு­வாக்­கி­விடும்.

தமிழ்த் தலை­மைக்கு எதிர்க்­கட்சித் தலை­மையைப் பெற வாய்ப்­ப­ளித்­தி­ருப்­பது இன ரீதியில் சுமுகம் ஏற்­பட்­டி­ருப்­பதால் பிரச்­சினை இல்லை என்­பதைக் காட்­டு­வ­தற்­கா­கவா? இதன் மூலம் தமிழ்த் தலைமை மீது தமிழ் மக்கள் வைத்­தி­ருந்த நம்­பிக்­கையை இழக்கச் செய்­வ­தற்கா? தமிழ்க்­கட்சி எதிர்க்­கட்­சி­யாக அமை­வ­தென்­பது தற்­போ­தைய சூழ்­நி­லையில் பெரும்­பான்மைச் சமூகம் 75 வீதம் இருக்கும் பாரா­ளு­மன்­றத்தில் அவர்­களை ஒரு­மு­கப்­படுத்­தி­விடும். இது மஹிந்த ராஜபக் ஷவுக்கு வாய்ப்­பான சங்­க­தி­யாக இருக்­கி­றது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு சம­யோ­சி­த­மாக இச்­சந்­தர்ப்­பத்தில் எதிர்க்­கட்சித் தலை­மையை ஏற்­கா­தி­ருந்­தி­ருக்க வேண்டும். வடக்கு கிழக்­கைப்­பற்றி மட்­டுமே சம்­பந்தன் பேசு­கிறார் என சிங்­களத் தரப்­பினர் குற்றஞ் சுமத்­து­கையில் அங்கு அவர் அடக்கி வாசிக்­கிறார் எனத் தமிழ் தரப்­பினர் பழி சுமத்­து­கின்­றனர்.

இப்­போது எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்­தனும் வட மாகாண சபை முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனும் வெவ்­வே­றாக இயங்­கு­கி­றார்கள். ஒன்றோ சம்­பந்தன் வழியில் விக்­னேஸ்­வரன் இருக்க வேண்டும். இன்றேல் விக்­னேஸ்­வரன் இருக்க வேண்­டிய வழிக்கு சம்­பந்தன் வர­வேண்டும். விக்­னேஸ்­வரன் தமிழ் மக்­களின் அடிப்­படை உணர்­வு­களைப் பிர­தி­ப­லிக்­கிறார். சம்­பந்தன் அதை நடை­மு­றைப்­ப­டுத்தும் யதார்த்­த­மான வியூ­கத்தைக் கையா­ளு­கிறார்.

தமிழ் மக்­களின் அடிப்­படை நிலைப்­பாடு­களை வலி­யு­றுத்தி தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­புக்குப் புறம்­பாக விக்­னேஸ்­வரன் ஓர் அமைப்பை உரு­வாக்­கி­ய­தோடு பல இறுக்­க­மான தீர்­மா­னங்­க­ளையும் வட­மா­காண சபை­யிலும் நிறை­வேற்­றி­யி­ருந்தார். இது தமிழ் மக்­களின் உணர்­வ­லை­களை மங்­காமல் வைத்­தி­ருக்கும் நிலைப்­பா­டாகும்.

இந்த நல்­லு­றவை தமிழ் ஆயுதப் போரா­ளிகள் மீறி­னார்கள் என்­ப­தற்­காக எல்லா தமி­ழர்­க­ளையும் குற்றம் காண­மு­டி­யாது. ஆயுத பாஷை அப்­ப­டித்தான் இருக்கும். அவர்கள் தலை­வர்­க­ளையும் சமூ­கத்­தி­ன­ரையும் கூட கொன்­ற­வர்கள். அவர்­க­ளையும் சாதா­ரண தமி­ழர்­க­ளையும் செயற்­பாட்டில் சமப்­ப­டுத்த முடி­யாது.

இப்­போது முஸ்­லிம்கள் பேச வேண்­டி­யது ஆயுதம் தாங்­கிய தமி­ழர்­க­ளு­ட­னல்ல ஜன­நா­யக வழிக்குத் திரும்­பிய தமி­ழர்­க­ளோ­டுதான். ஆயுதம் தாங்­கிய தமி­ழர்­க­ளு­ட­னேயே முன்பு இந்­தி­யா­வுக்குப் போய் ராசிக் பரீத், பதி­யுதீன் மஹ்மூத், டபிள்யூ.எம். அமீர் ஆகி­யோ­ரோடு சம்­பந்தன் சிங்கக் கொடியைத் தூக்­கினார். தேசிய கீதம் தமி­ழிலும் பாடப்­பட்­டது. பிரி­வினை கோர­மாட்டோம் என சம்­பந்தன் உயர்­நீ­தி­மன்­றத்தில் சத்­தி­யமும் செய்­தி­ருந்தார். சமஷ்டி பிரி­வினை அல்ல என உயர்­நீ­தி­மன்றம் தீர்ப்பும் வழங்­கி­யது? மஹிந்த ராஜபக் ஷவுடன் பேசியும் பார்த்தார். சேர்ந்து அர­சியல் செய்வோம் எனவும் அழைத்தார். விக்­னேஸ்­வரன் நிக்­கா­யாக்­க­ளுக்கு விளக்­கமும் அளித்தார்.

இந்த கட்­டத்தில் சம்­பந்­தனின் இத­மான அணு­கு­மு­றையை அரசு ஏற்­றுக்­கொண்டு உடன்­பாட்­டுக்கு வரா­விட்டால் விக்­னேஸ்­வ­ரனின் மித­மான அணு­கு­மு­றை­க­ளுக்கு வாய்ப்­பா­கி­விடும். பறை அறைவோன் பறை முழங்­கு­கிறான் என அலட்­சி­யப்­ப­டுத்­தி­வி­டக்­கூ­டாது. ஏனெனில் அதில் அரசன் உத்­த­ரவு, அரசன் உத்­த­ரவு எனக் கூறப்­ப­டு­கி­றது. அதை மீறு­வது ஆபத்­தாகும்.

ஆயுதப் போரில் சர்­வ­தேசம் அரசின் பக்கம் இருந்­தது. அது நியாயப் போர் அல்ல அழிவுப் போர் என இப்­போது கருதி பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு சார்­பாக இருக்­கி­றது. அழிக்க உத­வி­பெற்றோர் நிவா­ரணம் வழங்­கப்­ப­டு­வதைத் தடுப்­ப­தற்கு நியா­யா­திக்கம் இல்லை.

அரசில் பல்­லின மத, மொழி உறுப்­பி­னர்­களும் இருக்­கையில் சிங்­கள ஆதிக்­கத்தை மட்டும் குறிக்கும் ஏக்­கீய ராஜ்ய (ஒற்­றை­யாட்சி) எனும் சொல் பொருத்­த­மா­குமா? உறுப்­பு­ரி­மையில் பன்­மையும் உரி­மையில் ஒரு­மை­யுமா? இதில் முரண்­பாடு உண்டு.

நிலங்­களை பிரிப்­ப­தையே பிரி­வினை என்­கி­றார்கள். பல்­லின நாட்டில் இனங்­களைப் பிரிப்­பதே பிரி­வி­னை­யாகும். பல்­லின நாட்டில் அப்­படிப் பிரிப்­போரே தனித்­தனி ஆட்­சிக்கு வித்­தி­டு­கி­றார்கள். சர்­வ­தேச விதி­மு­றைப்­படி எந்த ஓர் இனத்­துக்­கா­யினும் வாழ்­வா­தார மத, மொழி, கலை, கலா­சார, பிர­தேச வர­லாற்று கட்­ட­மைப்பு இருக்­கு­மாயின் அதற்கு சுய நிர்­ணய இறைமை உண்டு. அதன் சனத்­தொகை பற்­றிய வரை­யறை இல்லை.

இதைப் புரிந்து கொள்­ளா­துதான் இது­வரை இலங்கை அறையில் ஆடி­யது. இப்­போது அம்­ப­லத்தில் ஆடும் நிலை. அதா­வது சர்­வ­தே­சத்­துக்கு முகம் கொடுக்கும் நிலை ஏற்­பட்­டி­ருக்­கி­றது. பல்­லின நாட்டின் பேரின யாப்பை அது ஏற்­றுக்­கொள்­ளுமா? பல்­லின யாப்பை முன்­வைத்­தா­லேயே அது அங்­கீ­காரம் வழங்கும். மீண்டும் பேரின யாப்பு முன்­வைக்­கப்­ப­டு­மாயின், சாத்­வீ­க­மா­கவும், அர­சியல் ரீதி­யிலும், ஜன­நா­யக வழி­யிலும், ஆயுதம் மூலமும் வடக்கு கிழக்கு மக்கள் போரா­டி­யதை நியாயம் என்றே சர்­வ­தேசம் கருதும்.

இதனால் போர்க்­குற்ற விசா­ரணை தீவி­ர­மாக்­கப்­பட்டு பொரு­ளா­தாரத் தடை­களும் விதிக்­கப்­பட்டு வடக்கு கிழக்கின் சுய நிர்­ண­யத்­தையும் இறை­மை­யையும் சர்­வ­தேசம் அங்­கீ­க­ரிக்கும் நிலையை நாமே ஏற்­ப­டுத்திக் கொடுக்கும் நிலை ஆகி­விடும்.

1949 ஆம் ஆண்டு கிழக்கில் திட்­ட­மிட்ட சிங்­களக் குடி­யேற்­றத்தை வலிந்து டி.எஸ். சேனா­நா­யக்க ஏற்­ப­டுத்­தித்தான் தந்தை செல்வா சமஷ்டி கோர வழி­ச­மைத்தார். 1972 ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ பேரின யாப்பை இயற்­றித்தான் 1976 ஆம் ஆண்டை தந்தை செல்வா வட்­டுக்­கோட்­டைத்­தீர்­மா­னத்தில் சுய நிர்­ணய தனி இறைமைக் கோரிக்­கையை முன்­வைக்க வித்­திட்டார். 1978 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மக்­களின் ஆணைக்கு எதி­ராக இரா­ணுவ அடக்­கு­மு­றையைக் கையாண்­டுதான் ஜே.ஆர். தமிழ் ஆயுதப் போராட்­டத்­துக்கு உர­மூட்­டினார்.

கிழக்கில் திட்­ட­மிட்ட சிங்­களக் குடி­யேற்றம் நிக­ழா­தி­ருந்தால் சமஷ்டிக் கோரிக்கை எழுந்­தி­ருக்­காது. பேரின யாப்பு இயற்­றப்­ப­டா­தி­ருந்­தி­ருக்­கு­மாயின் சுய நிர்­ணய தனி­ இ­றை­மைக் ­கோ­ரிக்கை எழுந்­தி­ருக்­காது. ஆயுத அடக்­கு­முறை இல்­லா­தி­ருந்­தி­ருக்­கு­மாயின் வடக்கு கிழக்கில் ஆயுதத் தமிழ்ப் போரா­ளிகள் உரு­வா­கி­யி­ருக்க மாட்­டார்கள். ஆக தமிழ்ப் போரா­ளிகள் தாமாக உரு­வா­க­வில்லை. பேரி­ன­வா­தி­களே உரு­வாக்கி வளர்த்­தார்கள்.

ஆக, உள்­நாட்டில் இவர்கள் வடக்கு கிழக்கு மக்­களின் நியா­யா­திக்­கத்தை தம்மை அறி­யா­மலோ அறிந்தோ வளர்த்­து­விட்­ட­போதும் சர்­வ­தேச ரீதியில் முழு வளர்ச்­சியும் பெற மஹிந்த ராஜபக் ஷவே வழி செய்து கொடுத்­தி­ருந்தார்.

சர்­வ­தேச யுத்த விதி­மு­றை­களைப் பேணாமல் இருந்து கொண்டே இது பயங்­க­ர­வா­தி­களின் பிடி­யி­லி­ருந்து அப்­பா­வி­களைக் காப்­பாற்­றிய மனி­தா­பி­மான யுத்தம் என விளக்கம் கூறினார். வேண்­டு­மானால் விசா­ரித்துப் பாருங்கள் என வழியும் விட்டார். ஆக இவரே சர்­வ­தேச விசா­ர­ணைக்கு வழியும் விட்டார். அதன்­படி ஐ.நா. தருஸ்மன் குழுவை நிய­மித்து அறிக்­கையைப் பெற்­றதும் அதை நிரா­க­ரித்­து­விட்டார்.

முன்­னுக்குப் பின் முர­ணான அவ­ரது செயற்­பா­டுதான் இலங்கை மீது சர்­வ­தேசம் பார்வை செலுத்த முதற்­கா­ர­ண­மா­கி­யது. போட்­டிக்கு இவரும் ஒரு விசா­ரணைக் குழுவை நிய­மித்து ஐ.நா. வுக்கு சவால் விட்டார். இவர் நிய­மித்த விசா­ரணைக் குழுவும் ஏறத்­தாழ ஐ.நா. வின் அறிக்கை போன்றே இருந்­ததால் அதில் உள்­ள­வற்றை அமு­லாக்­க­வில்லை.

தென்­னா­பி­ரிக்கா வழங்­கிய கற்­றுக்­கொண்ட பாடங்­களும் நல்­லி­ணக்­கமும் எனும் தீர்வு முறை­யையும் கூட மஹிந்த ராஜபக் ஷ சட்டை செய்­ய­வில்லை. ஐ.நா வின் செய­லாளர் பான் கீ மூன் மட்­டு­மல்ல மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்­ளை­யையும் கூட மதிக்­க­வில்லை. ஐ.நா. வை எதிர்த்து அதன் இலங்கைக் காரி­யா­ல­ய­ம­ருகே உண்­ணா­வி­ர­தமும் மேற்­கொள்­ளப்­பட்­டது.

மஹிந்த ராஜபக் ஷ பொறுப்புக் கூறு­வ­தையும் உதா­சீ­னப்­ப­டுத்­தினார். ஐ.நா. வோடு ஒத்­து­ழைக்­காது கடு­மை­யாக முரண்­பட்டார். உள்­நாட்டில் மேலும் அதி­கா­ரத்தைக் கூட்­டிக்­கொண்டார். இவ்­வா­றெல்லாம் செய்து சர்­வ­தே­சத்தை வெல்ல முடி­யுமா? இது மரபு யுத்­தமும் கொரில்லா யுத்­தமும் கலந்த போர் முறை என்­ப­தா­லேயே தமிழ் மக்கள் பாரிய அழிவைச் சந்­திக்கும் நிலை ஏற்­பட்­டது. போதிய அறிவோ தெளிவோ முன் அனு­ப­வமோ இல்­லா­ததே இதற்குக் கார­ண­மாக அமைந்­து­விட்­டது. எமது தவறை ஒப்புக் கொள்­கிறோம். பொறுப்புக் கூறலை ஏற்றுக் கொள்­கிறோம். இனிமேல் இவ்­வாறு நிகழ இட­ம­ளிக்­க­மாட்டோம். எதிர்­கால செயற்­பா­டு­க­ளுக்கு உங்கள் முழு­மை­யான அனு­ச­ர­ணையை வேண்­டிக்­கொள்­கிறோம். இழப்­பீ­டு­களை முழு­தா­கவே வழங்­குவோம். உரிய தீர்­வையும் கொடுத்து விடுவோம் என மஹிந்த அரசு ஐ.நா விடம் கூறி­யி­ருந்தால் முடிச்சு அவிழ்க்­கப்­பட்­டி­ருக்கும். ஆக வடக்கு கிழக்குப் பிரச்­சி­னைக்கு உரிய தீர்வை வழங்­கா­மையும் யுத்த விதி­மு­றை­களை மீறி­ய­மையும் ஐ.நா. வோடு முரண்­பா­டு­களை வளர்த்­துக்­கொண்­ட­மை­யுமே ஐ.நா வின் பிடியில் இலங்கை சிக்­கவும் சர்­வ­தேச ரீதியில் தனி­மைப்­ப­டவும் கார­ணங்­க­ளா­யின.

 

பிரிட்டிஷ் பிர­தமர் வின்சன்ட் சேர்ச்சில் இரண்டாம் உலக மகா யுத்­தத்தின் போது நேசப் படை­களை வெற்றி பெறச் செய்­தி­ருந்தும் அவ்­வ­ருடம் நிகழ்ந்த தேர்­தலில் ஹட்லி பிர­பு­விடம் தோற்­றி­ருந்தார். வின்சன்ட் சேர்ச்சில் யுத்த மனோ­பாவம் உள்­ளவர், ஹட்லி பிரபு சமா­தா­னப்­பி­ரியர் என மக்கள் கரு­தி­யதே இதற்குக் கார­ண­மாகும். எனினும் அன்று பிரிட்டிஷ் மக்­க­ளிடம் காணப்­பட்ட இந்த தெளி­வான சிந்­தனை தற்­போது அமெ­ரிக்க மக்­க­ளிடம் இல்லை. அத­னால்தான் ஹிலாரி கிளின்டன் தோற்று ரொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்­றி­ருக்­கிறார். தோல்­வி­யுற்ற பின்பும் மஹிந்த ராஜபக் ஷ பழைய நிலைப்­பாட்­டி­லேயே இருக்­கிறார் என்றால் வெற்றி பெற்­றி­ருப்­பா­ராயின் இலங்­கையின் நிலை என்ன? தற்­போது ஐ. நா. விலும் சர்­வ­தே­சத்­திலும் உள்­நாட்­டிலும் சகல சுமை­க­ளையும் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே ஏற்றுக் கொண்­டி­ருக்­கிறார் என்­றாலும் கூட அவ­ருக்குச் சரி­யான பின்­புலம் இல்லை. உட்­கட்­சிக்குள் மஹிந்த ராஜபக் ஷ வோடும் இருப்­புக்கு வழி செய்த ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வோடும் இழு­ப­றி­ பட்டுக் கொண்­டி­ருக்­கிறார்.

ஒருவன் தவ­றிப்போய் கிணற்றில் விழுந்­தானாம், கிடைத்த கொப்பில் தொங்­கிய அவன் மேலே பார்த்­த­போது புலி, கீழே பார்த்­த­போது பாம்பு, கொப்பை அரிக்­கி­றது எலி, தேன் கூட்­டி­லி­ருந்து தேன் வழி­கி­றது என்­பது போல் ஆகி­வி­டக்­கூ­டாது. ஆற்றில் ஒரு பஞ்­சுப்­பொதி மிதப்­பதைக் கண்ட ஒருவன் மெத்தை தைக்க விரும்­பிப்போய் அதை எடுத்­த­போது அது அவனை நீருக்குள் இழுத்துக் கொண்டு சென்­றதாம். காரணம் அது பஞ்சு பொதி­யல்ல பனிக்­க­ர­டிதான் புரண்டு மிதந்­தி­ருக்­கி­றது. முன்பும் ஊழல் பொறுப்­பேற்று 3 மாதங்­க­ளி­லி­ருந்தும் ஊழல் மின்­சாரக் கதி­ரைக்குப் போகாமல் நாம்தான் மஹிந்­தவைக் காப்­பாற்­றினோம். ராணு­வத்தை விசா­ரிக்­கவோ கண்­டிக்­கவோ விட­மாட்டோம். ஐ.நா விட­மி­ருந்து ஏற்­றுக்­கொண்ட அனு­ச­ர­ணை­யையும், பொறுப்­புக்­கூ­ற­லையும் கூட பாத­க­மான சூழலில் விரை­வாக செயற்­பட்டுத் தீவிர உணர்­வா­ளர்­க­ளிடம் பிடி­கொ­டுத்து ஆட்­ட­மி­ழக்க மாட்டோம் என அரசு தொடர்ந்தும் கூற முடி­யுமா? தீர்வு விட­யத்­திலும் இந்தத் தயக்கம் தெரி­கி­றது.

அர­ச­மைப்பு சபை­யையும் அதன் வழிப்­ப­டுத்தல் குழு­வையும் அது முன்­வைத்­துள்ள இடைக்­கால அறிக்­கை­யையும் இரத்­துச்­செய்­யு­மாறு முன்னாள் நீதி­ய­மைச்சர் விஜே­தாச ராஜபக் ஷ அண்­மையில் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­விடம் கோரி­யுள்ளார். காரணம் அவை சட்­டத்­துக்குப் புறம்­பா­னவை என்­கிறார். இவர் ஒரு முன்­னணி சட்­டத்­த­ரணி என்­பதால் பின்­வரும் இவ­ரது கருத்­துக்­களை அலச வேண்­டி­யுள்­ளது.

இவரே 2015 ஆம் ஆண்டின் ஆட்சி மாற்­றத்­துக்குப் பின் நீதி­ய­மைச்­ச­ராக இருந்­தவர் என்­பதால் 18 ஆம் ஷரத்தை மாற்றி 19 ஆம் ஷரத்தை இயற்­று­வ­திலும் பெரும்­பங்கு வகித்­தவர். 19 ஆம் ஷரத்தில் ஜனா­தி­ப­தி­யி­னதும் பிர­த­ம­ரி­னதும் வலு இழந்து சபா­நா­ய­கரின் வலு அதி­க­ரிக்­கப்­பட்­டி­ருக்­கி­றதா? அத­னால்தான் இவர் அர­ச­மைப்பு சபை­யையும் அதன் வழிப்­ப­டுத்தல் குழு­வையும் அது முன்­வைத்­துள்ள இடைக்­கால அறிக்­கை­யையும் இரத்து செய்­யு­மாறு சபா­நா­ய­க­ரிடம் கூறி­னாரா?

அர­ச­மைப்பு சபை உரு­வாக்­கப்­பட்டு வழிப்­ப­டுத்தல் குழுவும் நிய­மிக்­கப்­பட்­ட­போது ஆட்­சே­பிக்­காத விஜே­தாஸ ராஜபக் ஷ தற்­போது அமைச்­ச­ராக இல்லை. அத­னால்தான் இவர் இப்­போது ஆட்­சே­பிக்­கிறார். சட்டம் மக்­க­ளுக்­காக இயற்­றப்­ப­டு­வ­தாகும். அதை மாற்­று­மாறு மக்­க­ளாணை கிடைத்தால் மாற்­றத்தான் வேண்டும். ஆனால் இவரோ ஜனா­தி­பதி வேட்­பாளர் ஒரு கட்­சியின் தலை­வ­ரா­கத்தான் இருக்க வேண்டும். சாதா­ர­ண­மா­ன­வ­ராக இருக்­கக்­கூ­டாது. அப்­ப­டிக்­கேட்டு வெல்­ப­வ­ருக்கு யாப்பை மாற்­றவோ திருத்­தவோ ஆணை கோர உரி­மை­யில்லை, நிறை­வேற்ற மட்­டுமே செய்­யலாம் என்­கிறார். இது யாப்பில் எந்த ஷரத்தில் இருக்­கி­றது. அத்­தோடு ஜனா­தி­ப­தி­யிடம் நிறை­வேற்று அதி­காரம் மட்­டுமே உண்டு. சட்­ட­வாக்கம் இல்லை. நாடா­ளு­மன்­றத்தில் தலைமை பிர­த­ம­ரிடம் இருந்­த­போதும் அதன் அலுவலக செயற்பாடுகளும் நடத்தும் அதிகாரங்களும் சபாநாயகருக்கே உண்டு எனவும் கூறுகிறார். இது சிங்கள மக்கள் தமக்கென இயற்றிக் கொண்ட சட்டம் அது மட்டுமல்ல சபாநாயகர் பாராளுமன்றத்தில் அமரவும் விருப்புடன் பங்குபற்றவும் முடியும். எம்.பி.யும் இல்லை, வாக்குரிமையும் கிடையாது எனவும் குறிப்பிடுகிறார். சபாநாயகர் பாராளுமன்றத்தில் அமரலாம் தானே, நாடாளுமன்றத்தின் தலைமை பிரதமரிடம் இருக்கின்றது தானே, நிறை வேற்று அதிகாரம் ஜனாதிபதியிடம் உண்டு தானே, மூவரும் சேர்ந்துதானே செய்யப்போகிறார்கள். தேர்தலில் ஆணை கோரப்படும் போது விஜேதாஸ ராஜபக் ஷ ஏன் தடுக்கவில்லை ஆணை பிறப்பிக்காத நிறைவேற்று அதிகாரம் எங்கும் உண்டா? மனுநீதியே நீதியின் அடிப்படை

அதன் காரணமாகவே 1954 ஆம் ஆண்டு அப்போது வாழ்ந்த முஸ்லிம் அறிஞர்களால் தற்போதிருக்கும் முஸ்லிம் தனியார்சட்டம் வகுக்கப்பட்டு அரசிடம் கையளிக்கப்பட்டு யாப்பில் இணைக்கப்பட்டது. இக்கால கட்டத்தில் இலங்கையில் இரண்டு மூன்று அரபு மத்ரஸாக்களும் பத்துபன்னிரண்டு ஆலிம்களுமே இருந்ததாலும் தெளிவிலும் குறைபாடு இருந்தாலும் உள்ள நிலவரப்படியே இதை அமைத்திருந்தார்கள்.

மனிதனால் தொகுக்கப்பட்ட எதுவும் கால மாற்றத்தால் மாறுதலடைவது இயற்கை நியதி எனும் அடிப்படையில் புது ஆய்வு செய்து சீரமைக்கலாம். இது இஸ்லாத்தை மாற்றும் செயற்பாடு என்றோ அந்நிய மதத்தினரின் தலையீடு என்றோ அரசாங்கத்தின் இடையூறு என்றோ கூற வேண்டியதில்லை. இதை இஸ்லாத்தை மேலும் தெளிவுபடுத்தும் வாய்ப்பாகவே கருதவேண்டும்.

பெண் வீட்டார் மாப்பிள்ளைக்கு வழங்கிய சீதனமே கைக்கூலி எனக் குறிப்பிடப் பட்டிருக்கிறது. மாப்பிள்ளை பெண் வீட்டாருக்குத் தன்னைத்தானே விற்றுக் கொள்ளலாமா? மாப்பிள்ளை கூலி பெறும் தொழிலாளியா? இதனால்தான் இற்றைவரை இப்பழக்கம் நின்று நிலைத்து பல்வேறு வடிவங்களிலும் வியாபித்திருக்கின்றது.

ஏ.ஜே.எம். நிழாம் 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-11-18#page-4

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.