Jump to content

இறுதி எல்லை!


Recommended Posts

இறுதி எல்லை!

 

சமஷ்டியென்பது தென்னிலங்கை மக்கள் மத்தியில் நாசாரமாக  காய்ச்சி வார்க்கப்படுகிறதென்பதனாலேயே அதற்கு மாற்று மருந்தை ராஜ சாணக்கியத்துடன் கையாள வேண்டிய தேவை கூட்டமைப்பின் தலைமைக்கு ஏற்பட்டது என்பது அறிவுபூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் 

 

வடக்கில் புதிய கூட்­ட­ணி­யொன்றை உரு­வாக்கும் முயற்சி தீவி­ர­ம­டைந்து காணப்­ப­டு­கி­ற­தென்ற செய்தி வெளி­வந்து கொண்­டி­ருக்­கி­றது. விரைவில் நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்­றத்­தேர்­தலில் கள­மி­றங்­கு­வ­தற்­காக இக்­கூட்­டணி உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளது. இதை உரு­வாக்­கு­வதன் மூலம் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­புக்கு நேரொத்த கூட்­ட­ணி­யாக இது இருக்­கப்­போ­வது மாத்­தி­ர­மல்ல சவா­லா­கவும் மாறப்­போ­கி­றது என்ற கருத்­துக்­களும் முன்­வைக்­கப்­ப­டு­கின்றன.  

தமிழ்த்­தே­சிய மக்கள் முன்­ன­ணியும், சுரேஷ் பிரேமச்சந்­தி­ரனை தலை­மை­யாகக் கொண்ட ஈ.பி.ஆர்.எல்.எப்.ஆகிய கட்­சிகள் இணைந்து இப்­பு­திய கூட்­ட­ணி­யி­னூ­டாக புதி­ய­தொரு சின்­னத்தில் போட்­டி­யி­ட­வுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இக்­கூட்­ட­ணிக்கு அனு­ச­ரணை வழங்க தமிழ் மக்கள் பேர­வையும் சில அமைப்­பு­களும் தயா­ரா­க­வுள்­ளன என்ற தக­வல்­களும் கசிந்து கொண்­டி­ருக்­கி­ன்றன. ஏலவே 2015 ஆம் ஆண்டு பொதுத்­தேர்­த­லுடன் ஏற்­பட்ட விரி­சல்கள், இடைக்­கால அறிக்கை சார்­பான கருத்­துக்­க­ளுடன் உரம்­பெற்று தற்­பொ­ழுது உள்­ளூ­ராட்சி தேர்­தலை எதிர்­கொள்ளும் சூழ்­நி­லையில் கூட்­ட­மைப்­பென்ற குடையின் கீழ் ஒன்­று­பட்டு நின்ற கட்­சி­க­ளுக்­கி­டையில் கருத்து முரண்­பா­டு­களும் நேர் எதிர்­வா­தங்­களும் காய்தல், உவத்­தல்­களும் வலுத்­துப்­போ­வதை கவ­லை­யுடன் பார்க்க வேண்­டி­யுள்­ளது.

இன்னும் தெளி­வாக சொல்­வ­தானால் தந்­தையால் ஆரம்­பிக்­கப்­பட்ட இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்சி மீதும், தம்­பியால் உண்­டாக்­கப்­பட்ட தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­புக்கும் கண்­பட்­டு­விட்­டதோ அல்­லது யாரா­வது சூன்யம் செய்­து­விட்­டார்­களோ என்று கவ­லை­கொள்ளும் அள­வுக்கு நிலை­மைகள் தமிழ் மக்­களை கவ­லை­கொள்ள வைக்­கின்­றது.

குறிப்­பாக, 2015 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­யி­லி­ருந்து கூட்­ட­மைப்­புக்குள் தெளி­வான ஒரு­மித்த போக்கு குறைந்­த­ளவே காணப்­பட்டு வந்­தன என்ற கருத்தில் உண்­மை­யுள்­ளதோ இல்­லையோ, சில சந்­தர்ப்­பங்­களில் அவை வெளிப்­ப­டை­யாக உண­ரப்­பட்ட சம்­ப­வங்­களும் இருக்­கத்தான் செய்­தது. அதிலும் 2010 ஆம் ஆண்டு தேர்­தலைத் தொடர்ந்து தமிழ்த்­தே­சிய மக்கள் முன்­ன­ணிக்கும் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­புக்கும் இடை­யி­லான நேர்­நி­லைத்­தன்­மைகள் பெரி­ய­ளவில் காணப்­ப­ட­வில்­லை­யென்­பதும் சுட்­டிக்­காட்­டப்­பட்ட விட­ய­மாகும்.

கடந்­த­வாரம் தமிழ் மக்கள் பேர­வை­யா­னது நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் தொடர்­பான கலந்­து­ரை­யா­ட­லொன்றை நடத்தியது. இதனையடுத்து புதிய கூட்­ட­ணி­யொன்றை உரு­வாக்கி வட­கி­ழக்கில் போட்­டி­யிடப் போவ­தாக ஈ.பி.ஆர்.எல்.எப். அணித்­த­லை­வரும் தமிழ்த்­தே­சிய மக்கள் முன்­னணித் தலை­வரும் பகி­ரங்­க­மாக அறி­வித்­துள்­ளனர்.

புதிய கூட்­ட­ணியின் தேவை அவ­சியம் பற்றி கருத்துத் தெரி­வித்த கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் அண்­மையில் பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்டு, விவா­திக்­கப்­பட்ட இடைக்­கால அறிக்­கை­யா­னது தமிழ்த்­தே­சிய நலன்­களை உதா­சீனம் செய்­கி­றது. தமிழ்த்­தே­சிய அபி­லா­ஷை­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைக்கும் இவ்­ இடைக்­கால அறிக்­கையின் பின்­ன­ணி­யி­லேயே இதனை முழு­மை­யாக ஆத­ரித்து கூட்­ட­மைப்­பா­னது மக்கள் மத்­தியில் பிர­சாரம் செய்­யப்­போ­கி­றது. என­வேதான் இவ்­வ­ர­சியல் அமைப்பை ஏன் தமிழ் மக்கள் நிரா­க­ரிக்க வேண்­டு­மென்ற கார­ணங்கள் மக்கள் மத்­தியில் கொண்டு செல்­லப்­பட வேண்­டு­மாயின் நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்­றத்­தேர்­தலை ஒரு கருத்­துக்­க­ணிப்­பாக மாற்ற முயற்சி செய்ய வேண்­டு­மென தெரி­வித்­தி­ருந்தார்.

பொன்­னம்­ப­லத்தின் கருத்­துக்கள் தர்க்க ரீதி­யாக உடன்­பாடு காணக்­கூ­டி­ய­தா­க­வி­ருந்­தாலும் ஒரு அக்­கினிப் பரீட்­சையை நடாத்­தக்­கூ­டிய கள­மா­கவோ நேர­மா­கவோ இதைப் பார்க்­கக்­கூ­டாது என்­பதே மக்­களின் கருத்­தாகும்.

தமிழ் மக்கள் ஏற்­றுக்­கொள்­ளாத எந்­த­வொரு தீர்­வையும் நான் கைநீட்டி வர­வேற்­கப்­போ­வ­தில்லை. தமிழ் மக்­களின் நீண்­ட­கால அற­வழி ஆயுத மற்றும் ராஜ­தந்­திரப் போராட்­டங்­க­ளுக்­கு­ரிய பெறு­ம­தி­மிக்க ஒரு தீர்வைப் பெற்றுத்தரும் வரை யான் ஓயப்­போ­வ­தில்­லை­யென்ற தனது அழுத்­த­மான கருத்­துக்­களை த.தே.கூ. அமைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் அவர்கள் பல தட­வைகள் கூறி­வ­ரு­வ­துடன் அதற்­கா­கவே பல விட்­டுக்­கொ­டுப்­புக்­களை மேற்­கொண்டு போராடி வரு­கி­றா­ரென்­பது உல­க­ம­றிந்த விட­ய­மாகும். அது­மட்­டு­மன்றி ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா குறிப்­பிட்­டது போல், இரா.சம்­பந்தன் எமக்கு கிடைத்த கடைசி ஆயுதம் என்­பது போல் தமிழ் மக்­களின் இறுதிப் போரா­ளி­யாக இருக்­கப்­போ­வதும் அவரே என்­பதை தமிழ் மக்கள் மாத்­தி­ர­மல்ல கூட்­ட­மைப்­புக்குள் உள்ள சகல பங்­காளிக் கட்­சி­களும் உணர்ந்­து­கொள்ள வேண்டும்.

தமிழ் மக்­களின் போராட்­டத்தை தந்தை செல்வா அவர்கள் ஒரு கால­கட்­டத்­துக்குள் இருந்து இன்­னொரு கால களத்­துக்குள் கொண்­டு­வந்து விட்டார். தலைவர் பிர­பா­கரன் தமிழ் மக்­களின் உரி­மைப்­போரை ஆயு­தப்போர் என்ற வடி­வத்தில் மூன்று தசாப்த கால வல்­லமைப் போராக மாற்­றிய பெருமை அவ­ரையே சாரும். தற்­பொ­ழுது ராஜ­தந்­திர ரீதி­யான நகர்­வுகள் மூலம் உல­கத்­த­ரப்பின் ஒத்­தா­சை­யுடன் தமிழ் மக்­க­ளுக்­கான உரி­மையை வென்­றெ­டுக்கும் சாணக்­கியப் போரை நடாத்திக் கொண்­டி­ருக்கும் சம்­பந்தன் ஐயா அவர்­க­ளுக்கு அனைத்து தரப்­பி­னரும் ஒத்­தாசை வழங்கி பலம் சேர்க்க வேண்­டிய ஒரு கால­கட்­டத்தில் இருக்­கின்­றோ­மென்ற நிலையே யதார்த்­த­மா­னது.

முன்னாள் நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாஸ மற்றும் மஹிந்த அணி­யினர் அர­சி­ய­ல­மைப்பு சபையின் உரு­வாக்­க­மா­னது செல்­லு­ப­டி­யற்­ற­தாகும்; இவை அர­சியல் அமைப்­புக்கு முர­ணா­ன­வை­யாகும். ஆகவே அர­சியல் அமைப்பு நிர்­ணய சபையை உட­ன­டி­யாக கலைத்து விடுங்கள் என்று கோஷம் எழுப்பிக் கொண்­டி­ருக்­கி­றார்கள். இவ்­வ­கை­யான கடும்­போக்கு கோஷத்தை பௌத்த பீடங்­க­ளையும், விஹா­ரா­தி­ப­தி­க­ளையும் எழுப்­பு­வ­தற்கு தூண்டிக் கொண்­டி­ருக்­கி­றார்கள். இவ்­வகை இன­வாத கோஷங்கள் தென்­னி­லங்கை மக்­க­ளுக்கு கேட்­கி­றதோ என்­னவோ, அடிக்கு மேல் அடி­ய­டித்தால் அம்­மியும் நகரும் என்­பது போல் நிலை­மை­களை மாற்­று­வ­தற்கு வெகு­நேரம் பிடிக்­காது என்­பதை தமிழ்த் தரப்­பினர் உணர்ந்­து­கொள்ள வேண்டும்.

தலைவர் சம்­பந்­தனைப் பொறுத்­த­வரை இரு­பக்க நிலை­மை­களை சமா­ளிக்­கவும் வென்­றெ­டுக்­க­வேண்­டிய நிலையில் உள்ளார் என்­பது சாதா­ரண மனிதன் ஒரு­வனும் விளங்­கிக்­கொள்ளும் விவ­கா­ர­மாகும்.

புதிய அர­சியல் அமைப்­புக்கு இன்­னொரு வகையில் கூறு­வ­தானால், தமிழ் மக்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்­டிய அர­சியல் தீர்­வுக்கு இன­வா­திகள், அடிப்­ப­டை­வா­திகள், பெளத்­த­பீ­டங்கள், தென்­னி­லங்கை கடு­மைசார் புத்­தி­ஜீ­விகள், அர­சியல் தலை­வர்கள் என்ற பரந்­த­ள­வி­லான குழு­வினர் எதிர்ப்பு காட்டி வரு­கி­றார்கள். அர­சி­ய­ல­மைப்பு வரை­வ­தற்கு முன்­னமே பூசை ஆவ­தற்கு முன் சன்­னதம் கொள்­ளு­வ­துபோல் எதிர்ப்புக் காட்­டு­கி­றார்கள். அதுவும் இடைக்­கால அறிக்­கை­யையே எதிர்க்கும் அவர்கள் அர­சியல் வரைபை எவ்­வாறு எதிர்ப்­பார்கள் என்று கற்­பனை கூட, செய்து பார்க்க முடி­யாத நிலை. இவ்­வகை எதிர்ப்­புக்­களை சமா­ளிக்க வேண்­டிய நிலை இரா.சம்­பந்தன் ஐயாவின் நிலை.

மறு­புறம் இடைக்­கால அறிக்­கையில் ஒன்­று­மில்லை, இது ஒரு ஏமாற்­றுப்­பத்­திரம், இதை தமிழ் மக்கள் நிரா­க­ரிக்க வேண்டும்.

புதிய தலை­மைத்­து­வத்தின் தேவை தற்­பொ­ழுது உண­ரப்­பட்­டி­ருக்­கி­றது. தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு தமிழ் மக்­களின் ஆணையை உதா­சீனம் செய்து செயற்­ப­டு­கி­றது. தமி­ழ­ர­சுக்­கட்சி கூட்­ட­மைப்­புக்குள் தன்­னிச்­சை­யாக செயற்­ப­டு­கி­றது. வட­கி­ழக்கு இணைக்­கப்­பட்டால் இரத்த ஆறு ஓடும் என்­றெல்லாம் சீறிக் கொண்­டி­ருக்கும் தரப்­பி­னரை சமா­ளிக்க வேண்­டிய தேவை­யென ஏகப்­பட்ட போராட்­டங்­க­ளுக்கு மத்­தியில் சம­நி­லையை உண்­டாக்க வேண்­டிய பொறுப்பு கூட்­ட­மைப்பின் தலை­வரைச் சார்ந்­தது என்ற தார்­மீக பொறுப்பை உணர்ந்து எதிர்­வாதம் புரி­ப­வர்கள் நடந்து கொள்ள வேண்­டு­மென்­பதே தமிழ் மக்­களின் எதிர்­பார்ப்­பா­கவும் காணப்­ப­டு­கி­றது.

அர­சியல் தீர்­வென்ற முறை­யொன்றின் கீழ் அதி­காரப் பகிர்வை பெறக்­கூ­டிய அளவு பெறும் வாய்ப்பு உரு­வா­கி­வரும் சூழ்­நி­லையில் அச்­சந்­தர்ப்­பத்தை இல்­லாது ஒழிக்கும் நிலை­யொன்று உரு­வா­கு­மானால் மீண்டும் தமிழ் மக்கள் வெறுங்­கை­யோடு நின்று யாசிக்­க­வேண்­டிய நிலை­யொன்று உரு­வாக முடியும்.

தமிழ் மக்­களின் அர­சியல் பய­ணத்தில் பல்­வேறு வாய்ப்­புக்­களை நாம் தவ­ற­விட்­டி­ருக்­கிறோம். அவை தட்­டிப்­ப­றிக்­கப்­பட்­டது என்­பது வெகு­தொ­லைவில் மறைந்­து­போன சம்­ப­வங்­க­ளு­மல்ல, வர­லா­று­க­ளு­மல்ல.

பண்டா – செல்வா ஒப்­பந்தம், டட்லி – செல்வா ஒப்­பந்தம் தட்­டிப்­ப­றிக்­கப்­பட்­டது. 1987 ஆம் ஆண்டின் இலங்கை – இந்­திய ஒப்­பந்­தத்தால் உரு­வாக்­கப்­பட்ட மாகாண சபை நகர்­வு­களை கைவிட்டோம். 1994 ஆம் ஆண்டின் பின் அம்­மையார் சந்­தி­ரி­காவின் கால அர­சியல் பொதியில் திருப்­திப்­ப­டாத நிலை ஒரு புறம் இருக்க, அது பாரா­ளு­மன்­றத்தில் கிழித்­தெ­றி­யப்­பட்ட அசாத்­திய நிலை என எத்­த­னையோ சந்­தர்ப்­பங்­களை நாமாக இழந்­த­வையும் தட்­டிப்­ப­றிக்­கப்­பட்­ட­வை­யு­மான அனு­ப­வங்­களை மீள்­பார்வை செய்ய வேண்­டி­ய­தேவை உண்­டா­கி­யுள்­ளது.

ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஸ் பிரே­மச்­சந்­திரன் இக்­க­லந்­து­ரை­யாடல் தொடர்பில் கருத்து தெரி­விக்­கையில், தமிழ் மக்­க­ளுக்கு மாற்று தலை­மை­யொன்று தேவை­யான கால­கட்­டத்­துக்கு வந்­தி­ருக்­கிறோம். தமி­ழ­ரசுக் கட்­சி­யா­னது தமிழ் மக்கள் வழங்­கிய ஆணையை முழு­மை­யாக கைவிட்­டு­விட்­டது. இக்­கட்சி ஒரு சிலரின் கைப்­பொம்­மை­யாக செயற்­ப­டு­கி­றது. சமஷ்டி என்ற சொல் இல்­லா­விட்­டாலும் அதி­காரம் கிடைக்­கு­மென கூறு­வது ஏமாற்­று­வித்தை என பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­தி­ருப்­ப­துடன் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வில­கு­வது தவிர மாற்­று­வ­ழி­யில்­லை­யென கடும் நிலையில் கருத்­துக்­களை பொழிந்­துள்ளார்.

சுரேஸ் பிரே­மச்­சந்­தி­ரனின் ஏனைய கருத்­துக்­களை நாம் அலட்­சி­ய­மாக கவ­னத்தில் கொள்­ளாது விட்­டாலும் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வில­கு­வதைத் தவிர ஈ.பி.ஆர்.எல்.எப். க்கு மாற்­று­வ­ழி­யில்­லை­யென்று கூறி­யி­ருப்­பது கவ­னத்தில் எடுத்­துக்­கொள்­ளப்­பட வேண்­டிய விட­யமே.

சுரேஸ் பிரே­மச்­சந்­திரன் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வில­கு­வ­தாக தெரி­வித்­தி­ருக்­கின்­ற­போதும் உத்­தி­யோ­க­பூர்­வ­மான அறி­விப்பைச் செய்­வா­ராக இருந்தால் அதற்கு தக்க பதிலை அளிக்க காத்­தி­ருக்­கிறேன் என தலைவர் இரா.சம்­பந்தன் அறிக்­கை­யொன்றை வெளி­யிட்­டி­ருப்­ப­தையும் கவ­னத்தில் கொள்­ள­வேண்­டி­யுள்­ளது.

இதே­வேளை வடக்கு முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் தமிழ் கூட்­ட­மைப்பின் பிள­வுக்கு கார­ண­மென்­ன­வென்­பதை விளக்­கி­யுள்ளார். அவரின் கண்­டு­பி­டிப்­பின்­படி தமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­தையே தான்­தோன்­றித்­த­ன­மாக எமது தலை­மைகள் முன் வைத்­த­மையே பிள­வுக்குக் காரணம் எனக் கூறி­ய­துடன் சில விட­யங்­களை அட்­ட­வ­ணைப்­ப­டுத்­தியும் காட்­டி­யுள்ளார்.

இன்­றைய தமிழ்த் தலை­மைத்­துவம் பௌத்­தத்­துக்கு முத­லிடம் வழங்­கவும், சிங்­கள பேரி­ன­வா­தத்­துக்கு இடம் கொடுக்­கவும் வடக்கு, கிழக்கை இணைக்­காது விடு­வ­தற்கு தயார் என்றும், தன்­னாட்சி தாயகம் போன்ற கோரிக்­கையை கைவிட்டு சமஷ்டி சாத்­தி­ய­மில்­லை­யென்று கூறி ஒரு சில சலு­கை­களை மட்டும் பெறும் வகையில் செயற்­ப­டு­வ­த­னால்தான் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­புக்குள் பிளவு ஏற்­ப­டப்­பார்க்­கி­றது என்றும் விவ­ர­ண­மொன்றை செய்­துள்ளார்.

விக்­னேஸ்­வ­ரனின் இந்த விவ­ர­ண­மா­னது நேர­டி­யா­கவே தமிழ் தலை­மை­களை குற்றம் சாட்­டு­வ­தாக அமைந்­துள்­ளது. அவரின் இக்­குற்­றச்­சாட்­டுக்கள் எவ்­வாறு இருக்­கின்­ற­தென்றால் கண்­ணாடி வீட்­டுக்குள் இருந்து கொண்டு கல் வீசு­வது போன்ற காட்­சி­யையே ஞாப­கப்­ப­டுத்­து­கி­றது.

இனி விக்­னேஸ்­வ­ரனின் குற்­றச்­சாட்­டு­க­ளுக்கே வருவோம். 2015 ஆம் ஆண்டு கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­பனம் தயா­ரிக்­கப்­பட்ட வேளை, வட­மா­காண முத­ல­மைச்சர் எந்­த­வி­த­மான பங்­கெ­டுப்­பையும் செய்­து­கொள்ள முய­ல­வில்லை என்­ப­துடன் மேற்­படி விஞ்­ஞா­ப­னத்தை தயா­ரித்த தலை­மைகள் தமது 60 வருட அபி­லா­ஷை­களின் வெளிப்­பா­டா­கவே அந்தப் பட்­ட­யத்தைத் தீட்டி மக்கள் ஆணையைப் பெற்­றி­ருந்­தார்கள். இந்த ஆணை செல்லும் தண்டவாளத்திலிருந்து அவர்கள் எப்பொழுதும் விலத்திக் கொள்ள தயாராகவிருக்கவில்லை என்பதை சம்பந்தன் ஐயா அடிக்கடி உறுதிபடக் கூறிவந்துள்ளார்.

சமஷ்டியென்பது தென்னிலங்கை மக்கள் மத்தியில் நாசாரமாக காய்ச்சி வார்க்கப்படுகிறதென்பதனாலேயே அதற்கு மாற்று மருந்தை ராஜ சாணக்கியத்துடன் கையாள வேண்டிய தேவை கூட்டமைப்பின் தலைமைக்கு ஏற்பட்டது என்பது அறிவுபூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

1972 ஆம் ஆண்டு யாப்பில் பௌத்தத்துக்கு முதல் நிலைமை வழங்கும் முன்னுரிமை எழுதப்பட்டது. இது 1978 ஆம் ஆண்டு சோஷலிச யாப்பிலும் இன்னும் பலப்படுத்தப்பட்டது. அந்த யாப்பு வியாக்கியானங்கள், விளக்கங்களுக்கு அமையத்தான் நீதிமன்றங்கள் செயற்பட்டன.

இவையெல்லாவற்றையும் வாதப்பிரதிவாதம் செய்வதில் இப்பொழுது எவ்வித பயனையும் தமிழ் மக்கள் அடையப்போவதில்லை. வெண்ணெய் திரண்டுவருகின்ற வேளையில் தாழியை உடைத்த கதைபோல் இல்லாமல் ஒற்றுமையை வலுப்படுத்தவேண்டிய இறுதிச் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களும் அவர்கள் தம் தலைமைகளும் உள்ளனவென்ற உண்மையை ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

காலாகாலமாக நாம் காட்டிவரும் குரோதங்கள், முரண்பாடுகள், விரிசல்கள், விருப்புவெறுப்புக்கள் எல்லாவற்றையும் ஒரு மூலையில் ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றுபட்ட பேரணியில் கைகோர்த்து தமிழ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க வேண்டிய இறுதி எல்லையில் நின்றுகொண்டிருக்கிறோமென்பதை ஏற்றுக்கொண்டு செயற்பட வேண்டுமென்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும். 

திரு­மலை நவம்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-11-18#page-2

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர், சுமேந்திரன் ஆளுமையில் சில தவறுகள் இருக்கலாம். ஆனாலும் அவர்களின் நிலைப்பாடு மிக சரியானது.

இன்றைய நிலையில், சிங்கள அரசியல்வாதிகள், சர்வதேசத்தின் முன்னால் தமது சுயரூபம் தெரியுமளவுக்கு நிர்வாணமாக தெரிகின்றனர்.

இது எமக்கு மிகவும் அனுகூலமானது. இன்னமும் பொறுமையாக இருந்து அவர்கள் தமது விசம பிரச்சாரம் மூலம், சர்வஜன வாக்கெடுப்பில் புதிய அரசியல் அமைப்பினை தோல்வி அடைய செய்தால், சர்வதேசத்துக்கு வேறு வழியே இல்லை.

அந்த நிலையில், தமிழருக்கான சுஜ நிர்ணய உரிமைக்கான தேர்தல் குறித்த பேச்சும், கோரிக்கையும் எழுவதை, அதே சிங்கள அரசியல் வாதிகள் மறுக்க முடியாத நிலை உருவாகும்.

இதனால் தான், சிங்கள அரசியல் வாதிகள், கூட்டமைப்பினை உடைக்க பெரும் பாடு படுகின்றனர். பணமும் விளையாடுகின்றது. சிலர் எடுபடுகின்றனர்.

இன்று சுரேஷ், கஜன் கூட்டத்தின் அவசரதனத்தில் நிதானம் இல்லாமல் இருக்கின்றனது தெளிவு.

முக்கியமாக புலிகள், பிரபாகரன் கூட, சர்வதேச ஆதரவு இன்றி தமிழ் ஈழ நாட்டுக்கான ஆதரவு சாத்தியம் இல்லை என அறிந்திருந்தார்கள். 

சிறுபான்மை இன கூட்டம், முஸ்லீம் மக்கள் திட்டமிட்டு பிரிக்கப்படட நிலையில் மீண்டும் பெரும்பாண்மைக்கு  எதிராக ஆயுதம் அல்லது வேறு விதத்திலோ போராட வேண்டும் என்பதே பெரும்பான்மையின் எதிர்பார்ப்பு.

அதையே கரணம் காட்டி, சர்வதேசத்திடம் தப்பிக்க முடியும் என நினைக்கிறது.

சிங்களம் முழுவதுமாக தனது சுஜத்தினை வெளிக் காட்டிட வந்துள்ள சந்தர்ப்பினை பயன் படுத்தாமல் விடடால், நாமே மூடர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

சம்பந்தர், சுமேந்திரன் ஆளுமையில் சில தவறுகள் இருக்கலாம். ஆனாலும் அவர்களின் நிலைப்பாடு மிக சரியானது.

இன்றைய நிலையில், சிங்கள அரசியல்வாதிகள், சர்வதேசத்தின் முன்னால் தமது சுயரூபம் தெரியுமளவுக்கு நிர்வாணமாக தெரிகின்றனர்.

இது எமக்கு மிகவும் அனுகூலமானது. இன்னமும் பொறுமையாக இருந்து அவர்கள் தமது விசம பிரச்சாரம் மூலம், சர்வஜன வாக்கெடுப்பில் புதிய அரசியல் அமைப்பினை தோல்வி அடைய செய்தால், சர்வதேசத்துக்கு வேறு வழியே இல்லை.

அந்த நிலையில், தமிழருக்கான சுஜ நிர்ணய உரிமைக்கான தேர்தல் குறித்த பேச்சும், கோரிக்கையும் எழுவதை, அதே சிங்கள அரசியல் வாதிகள் மறுக்க முடியாத நிலை உருவாகும்.

இதனால் தான், சிங்கள அரசியல் வாதிகள், கூட்டமைப்பினை உடைக்க பெரும் பாடு படுகின்றனர். பணமும் விளையாடுகின்றது. சிலர் எடுபடுகின்றனர்.

இன்று சுரேஷ், கஜன் கூட்டத்தின் அவசரதனத்தில் நிதானம் இல்லாமல் இருக்கின்றனது தெளிவு.

முக்கியமாக புலிகள், பிரபாகரன் கூட, சர்வதேச ஆதரவு இன்றி தமிழ் ஈழ நாட்டுக்கான ஆதரவு சாத்தியம் இல்லை என அறிந்திருந்தார்கள். 

சிறுபான்மை இன கூட்டம், முஸ்லீம் மக்கள் திட்டமிட்டு பிரிக்கப்படட நிலையில் மீண்டும் பெரும்பாண்மைக்கு  எதிராக ஆயுதம் அல்லது வேறு விதத்திலோ போராட வேண்டும் என்பதே பெரும்பான்மையின் எதிர்பார்ப்பு.

அதையே கரணம் காட்டி, சர்வதேசத்திடம் தப்பிக்க முடியும் என நினைக்கிறது.

சிங்களம் முழுவதுமாக தனது சுஜத்தினை வெளிக் காட்டிட வந்துள்ள சந்தர்ப்பினை பயன் படுத்தாமல் விடடால், நாமே மூடர்கள்.

இந்த சர்வதேச காவடி ஆட போனால் 
வெறும் பொரி விளாங்காய் மட்டுமே எஞ்சும்.

மியான்மரில் இத்தனை கொடுமை நடந்தும் யாரும் 
எட்டியும் பார்க்கவில்லை ...
இப்போ ஐ நா இது இனப்படுகொலை என்று அறிக்கை விட்டிருக்கு 

சிங்களவனிடம் வாதாடி பெறுவது மட்டுமே உண்மை 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • எனக்கு யாழில் இரெண்டு பேர் பத்த வச்சிடுவினமோ எண்டு பயமா கிடக்கு🤣
    • சீமான் உட்பட எவருமே தங்கம் இல்லை. ஆகவே இவரும் மாற்று இல்லை. ஒரு கள்ளனை இன்னொரு கள்ளனால் பிரதியிடுவது அல்ல மாற்று. ஓம். ஏன் எண்டால் அவர் சின்ன கருணாநிதி என நான் எப்போதோ அடையாளம் கண்டு கொண்டதால். இப்ப GOAT ல பிசி🤣.  பிகு நான் விஜை ஆதரவாளனோ பிரச்சாரகரோ இல்லை. ஒரு போதும் ஆக போவதில்லை. ஆனால் நம்ம மருமகன். சினிமாவில் பிழைக்க முடியாமல் போனபின் கட்சி தொடங்காமல் - நினைத்து பார்க்க முடியாத பணம் கொட்டும் வியாபாரத்தை விட்டு விட்டு வருகிறார். திரிசாவோ, நயனோ நாசம் பண்ணி விட்டார் என பொதுவெளிக்கு வரவில்லை🤣. இன்னும் கள்ளன் என நினைக்கும்படி எதுவும் மாட்டவில்லை. ஆகவே இப்போதைக்கு இவருக்கு benefit of the doubt ஐ கொடுக்கலாம்.
    • இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.