Jump to content

பிரிட்டனில் நடுவானில் விமானம்- ஹெலிகாப்டர் மோதி விபத்து..!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டனில் நடுவானில் விமானம்- ஹெலிகாப்டர் மோதி விபத்து..!!

2 hrs ago


helicopterflightcrash.jpg

பிரிட்டனின் மத்திய மாகாணமான பக்கிங்ஹாம்ஸ்பயர் பகுதியில் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்த போது நடுவானில் ஹெலிகாப்டருடன் சில மணி நேரங்களுக்கு முன்பு பயங்கர சத்தத்துடன் மோதி வேடிஸ்டன் ஆலிஸ்பரி என்ற எஸ்டேட் பகுதியில் விழுந்து விபத்திற்குள்ளானதாக தகவல்கள் வெளியானது.

சம்பவ இடத்திற்கு தேம்ஸ்வெய்லி போலீசார் விரைந்தனர்.நடுவானில் மோதிய விமானம் ஹெ லிகாப்டரின் பாகங்கள் கிடைந்ததை போலீசார் உறுதி செய்து தீயணைப்பு வாகனத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து ஏராளமான தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று மீட்புபணியில் ஈடுபட்டு வருவதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் விமானம் மற்றும் ஹெலிகாப்டரில் பயணித்தவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

http://thedipaar.com/index.php/home/newsdetail/4473

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விமானம் பறக்கின்ற உயரத்தின் அளவுக்கு, உலங்கு வாநூர்தி  பறக்க வேண்டிய  அவசியம்  என்ன?
இந்த... கற்றுக் குட்டி,  உலங்கு வாநூர்தி சாரதியால்... விமானத்தில் பல கனவுகளுடன் பயணித்த.... 
எத்தனை மக்கள்  உயிரிழந்தார்களோ... எனும் போது, கவலை ஏற்படுகின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது நானிருக்கும் இடத்தில இருந்து ஒரு 5 மைல் தொலைவில் நடந்தது. விமானத்தில் பயணம் செய்த இருவரும் உலங்கு வானூர்தியில் பயணம் செய்த இருவருமாக நால்வர் இறந்துள்ளனர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Ahasthiyan said:

இது நானிருக்கும் இடத்தில இருந்து ஒரு 5 மைல் தொலைவில் நடந்தது. விமானத்தில் பயணம் செய்த இருவரும் உலங்கு வானூர்தியில் பயணம் செய்த இருவருமாக நால்வர் இறந்துள்ளனர். 

விசுகு  இணைத்த... செய்தியில்,
அகஸ்தியன், 5 மைல்  தொலைவில் இருந்து, உடனடி தகவல் தந்தமை...
யாழ். களத்தில்... எனக்கு ஒரு, வித்தியாசமான... மகிழ்ச்சியான அனுபவம்.     :love:

உலகம்.... சிறு கைகளில்,  சுருங்கி விட்டது. :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.