• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
நவீனன்

கனடாவில் வாழையிலைச் சோறால் பிரபலமடைந்த இலங்கைப் பெண்!

Recommended Posts

கனடாவில் வாழையிலைச் சோறால் பிரபலமடைந்த இலங்கைப் பெண்!

 

கனடாவின் ரொரொண்டோவில் வாழையிலை உணவால் பிரபலமடைந்த இலங்கைப் பெண்ணொருவர் குறித்து அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கனடாவில் வாழையிலைச் சோறால் பிரபலமடைந்த இலங்கைப் பெண்!

குறித்த ஊடகம், ரொரொண்டோ நகர் மிகப்பெரிய இலங்கை மக்கள் தொகையினைக் கொண்டதாக விளங்குகின்றது என்றும் ஸ்கார்பரோ பகுதி இலங்கை உணவுகளுக்கு மிகவும் பிரசித்திபெற்ற ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேரி மார்டின் எனும் இலங்கை கொழும்பைச் சேர்ந்த பெண்ணொருவர் பற்றியே அந்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஸ்கார்பரோவிற்கு எண்பது தொண்ணூறுகளில் (1980-1990) ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் புலம்பெயர்ந்து சென்றதனால் அந்தப்பகுதியில் இலங்கை உணவு வகைகளே ஆட்கொண்டுள்ளதாக மேரி மார்டின் குறிப்பிட்டுள்ளார்,

 

சோறும் கறியும் இலங்கையில் பிரதான உணவாகும் என குறிப்பிட்ட அவர், கனடாவிற்கு கொழும்பில் இருந்து சென்ற பின்னர் நாம் விரைவாக இலங்கை உணவுகள் சிற்றுண்டிகள் மற்றும் பல்வேறு மரக்கறிகளிலான உணவுகளை பெற்று கொடுக்க ஆரம்பித்தோம் எனத் தெரிவித்தார்.

மேரி மார்டின் அங்கே பேக்கரி ஒன்றை ஆரம்பித்து இரண்டு தசாப்தங்களாக சிறப்பாக நடத்தியதாகவும், அண்மையில் அதன் பெயரை மாற்றி வேறு இடத்திற்கு கொண்டு சென்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Metro Morning New Quality Bakery

இலங்கைச் சிற்றுண்டி வகைகளான ரோல்ஸ், சமோசா என்பன ஸ்கார்பரோவில் மேரியிடமிருந்து பலரால் விரும்பி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதோடு மட்டுமன்றி அதனைச் சுவைத்தவர்கள் தொடர்ந்தும் வாங்குவதற்கு வந்துள்ளார்கள் என்றும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

Metro Morning New Quality Bakery

மேரி மார்டினின் இன்னுமோர் கையாளுகை அங்குள்ள பலரையும் கவர்ந்திருக்கிறது. அதுதான் வாழையிலைச் சோறு. தனது கடையிலே வாழையிலையில் வைத்து இலங்கை உணவுப் பாரம்பரியத்திற்கேற்ற சோறு மற்றும் கறி வகைகளைப் பரிமாறியுள்ளார். இதனால் அங்குள்ள மக்கள் பலரும் மிகுந்த ஆர்வத்துடன் மேரியின் கடைக்கு வாழையிலைச் சோறு வாங்குவதற்கு வருவதாகவும் அந்த ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Lamprais or lump rice is a quintessentially Sri Lankan dish, writes Metro Morning food guide Suresh Doss.Metro Morning New Quality Bakery

https://news.ibctamil.com/ta/world-affairs/Mary-Martin-owner-of-New-Quality-Bakery

Share this post


Link to post
Share on other sites
vaazhai
வாழை இலையின் மகத்துவத்தைப் பன்னெடுங்காலம் முன்பே உணர்ந்து, உடல் ஆரோக்கியம் காக்க அதை எல்லா வேளையிலும் பயன்படுத்திய பண்பாடு நம்முடையது. அதைப் பதிவு செய்யும் வகையில், வாழை இலையில் உணவருந்துவதால் கிடைக்கும் ஏராளமான பலன்களைக் கீழ்க்காணும் அகத்தியர் குணவாகடப் பாடல் தெளிவுபடுத்துகிறது:
 
“தொக்கினுறு மின்னுஞ் சுகபோ கமுமன்னும்
அக்கினி மந்தம் பலமொடு திக்கிடுகால்
பாழை யிளைப்புமறும் பன்னுபித்த முஞ்சமனமாம்
வாழை யிலைக்குணரு வாய்”
 
வாழை இலையில் சாப்பிடத் தொடங்கிவிட்டால்போதும், தேகம் பளபளப்படையும். வாழை இலையில் உணவருந்துவதால், உடலில் உள்ள நச்சுகள் வெளியேற்றப்பட்டு உடல் தூய்மையடையும்.

பித்த நோய்கள் மறைய
உடலில் பித்தத்தின் அளவை குறைக்கவும், உயர் ரத்தஅழுத்தம், தலைவலி, வயிற்றுப் புண், தோல் நோய்களின் தீவிரம் குறையவும் வாழை இலையில் உணவருந்தலாம். வாழை இலைக்குக் குளிர்ச்சியுண்டாக்கிச் செய்கை இருப்பதால், பித்தம் சார்ந்த நோய்கள் அனைத்தும் சாந்தப்படும். நோய்களைத் தவிர்க்க ஆசைப்படு பவர்களுக்கு `வாழை இலை உணவு’ அற்புதமான தேர்வு.

செரிமானம் அதிகரிக்க
உண்ட உணவு செரிக்காமல் வயிற்றுக்குள் ஏற்படும் `கடமுட’ ஓசையை அடிக்கடி கேட்பவர்களும், சிறிதளவு சாப்பிட்டாலும் வயிறு உப்பிக்கொண்டு அவதிப்படுபவர்களும் வாழை இலையில் சாப்பிட்டுவந்தால் நல்ல செரிமானம் உண்டாகிப் பிரச்சினைகள் மறையும். மந்தத்தைப் போக்கும் குணம், வாழை இலைக்கு உண்டு. சூடான உணவு வகைகளை வாழை இலையில் வைத்துச் சாப்பிடும்போது, அதில் உண்டாகும் அற்புதமான இயற்கை மணமே பசி உணர்வைத் தூண்டிச் செரிமானச் சக்தியை அதிகரிக்கும். உணவின் மணத்துக்கும் பசி உணர்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.
நம்முடைய முதன்மை உணவான சோறும், மரக்கறி உணவு வகைகளையும் தாராளமாக வைத்துச் சாப்பிட வாழை இலையைத் தவிரச் சிறந்த உண்கலம் வேறு இல்லை. உணவு செரிமானத்துக்குத் தேவையான துணைப்பொருட்கள் அனைத்தும் வாழை இலையில் உண்டு. அதன் மற்ற உறுப்புகளான வாழைப் பூ, தண்டு, காய், பழம் ஆகியவற்றையும் சாப்பிட்டுவந்தால், பல்வேறு உடல் உபாதைகளிலிருந்து விடுதலை பெறலாம்.

நோய்களிலிருந்து விடுதலை
எந்தெந்த உணவுப் பொருட்களில் ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்ஸ் கொட்டிக் கிடக்கிறது எனத் தேடுவதற்குப் பதிலாக, விரும்பும் உணவு வகைகளை வாழை இலையில் வைத்துச் சாப்பிட்டால், தேவைக்கு அதிகமாகவே ஆன்ட்டிஆக்ஸிடண்ட் கிடைக்கும். உடல் செல்களின் அழிவைத் தடுக்கக்கூடியதும், நோய்கள் வராமல் பாதுகாக்கக்கூடியதுமான சிறந்த ஆன்ட்டி ஆக்ஸிடண்டான பாலி ஃபீனால்கள் (Epigallocatechin gallate) வாழை இலையில் பொதிந்திருக்கின்றன. அதிலுள்ள Polypheno> oxidase, நடுக்குவாத நோய் (பார்கின்சன் நோய்) வராமல் தடுக்கிறது.
உணவுப் பொருட்களின் சுவை தெரியாமல் திண்டாடும் `சுவையின்மை’ நோயாளிகளும் உடல் பலவீனமானவர்களும் வாழை இலையில் தொடர்ந்து புசித்துவந்தால், அறுசுவையையும் உணர்ந்து உடல் பலமடையும், விந்தணுக்களும் பெருகும்.

வாழை இலைப் பொதிவு
வாழை இலையில் உணவைப் பொதிந்து கொடுத்த காலம் மாறி, தீமை விளைவிக்கும் நெகிழி (பிளாஸ்டிக்) பைகளில் உணவைப் பொதிந்து தருவது ஆரோக்கியத்தைக் கெடுக்கக்கூடிய அம்சம். தொலைவான பயணங்களின்போதும் ஹோட்டல்களிலிருந்து உணவை வாங்கி வரும்போதும், பிளாஸ்டிக்குக்குப் பதிலாக வாழை இலையைப் பயன்படுத்துவது நல்லது. அதேபோலச் சம்மணமிட்டு வாழை இலையில் உணவருந்தும்போது, வயிற்றுப் பகுதிக்கும் நல்ல பயிற்சி கிடைக்கிறது. சிறுவயதிலேயே வாழை இலையில் சாப்பிடும் பழக்கத்தைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுத்தால் செரிமானம் சார்ந்த நோய்களைத் தடுக்கலாம், பசி உணர்வும் அதிகரிக்கும்.
 
வாழை இலையில் வெதுவெதுப்பான சோறு, கமகமக்கும் குழம்பு, காய்கறி, கீரைகள், ரசம், மோரை நம் மரபு முறைப்படி சாப்பிடும்போது, ஆரோக்கியத்துக்கு எந்தக் குறைவும் வராது.
 
வைத்துச் சாப்பிடும் வேறு இலைகள்
> பலா இலையில் சாப்பிடுவதால், பித்தம் அதிகரிக்கும் அதேநேரம் பெருவயிறும் குன்மமும் குறையும்.
> தாமரை இலையில் உணவருந்துவதால், பித்த, வாத நோய்களும் செரியாமையும் உண்டாவதால், அதில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
> இவை தவிர தேக்கு இலைகளும் உண்கலன்களாக பயன்படுகின்றன.
 
வாழை இலைபற்றிய தேடலில் கிடைத்தவை. :)

Share this post


Link to post
Share on other sites

b0a178.jpg

1f2ef6.jpg

 

 

Share this post


Link to post
Share on other sites

 

 

கோதாரி விழுந்த கொத்து ரொட்டி :

தமிழர்கள் எப்படி இந்த கொத்துரொட்டிப் பழக்கத்துக்கு ஆளானார்கள் என்பது தெரியவில்லை. யாழ்ப்பாணத்தில் நாலு பெடியள் செட்டாகிவிட்டால் தின்னுவது கொத்து ரொட்டி. கொழும்பில் வாழும் தமிழ் பிரம்மச்சாரிகளின் மெயின் சாப்பாடு கொத்து ரொட்டி.

பும்பெயர் தேசத்தில் எல்லாக் கலை கலாச்சார நிகழ்வுகள், அரசியல் கூட்டங்கள், சந்திப்புகள், பார்ட்டிகள், விளையாட்டுப் போட்டி கள் அனைத்திலும் கொத்து ரொட்டிதான் மெயின் விற்பனை.

அதோடை, ரோல்ஸ், சிக்கின்/மட்டன்/மரக்கறி ரொட்டி.

அனைத்தினதும் அடிபடை மூலப்பொருள் இந்த அமெரிக்கன் வெள்ளைக் கோதுமை.

இது ஒரு காலத்தில் "கூப்பன் மா" எனப்பட்டது. (கூப்பன் கடையில் வழங்கப்படும் இலவச மா)

உலகிலேயே ஆரோக்கியம் அதிகம் "குறைவான" உணவுப் பண்டம் எது என்று கேட்டால் அது அமெரிக்கன் வெள்ளைக் கோதுமை மா என்று அடித்துச் சொல்வேன்.

கோதுமைத் தானியத்தின் ஆரோக்கியமான பகுதி அதனை அரைக்கும் போது வரும் "தவிடு" ஆகும். அந்த தவிட்டை அடியோடி அப்புறப்படுத்தி எடுத்த பின் வருகிற மீதமுள்ள சக்கைதான் இந்த வெள்ளைக் கோதுமை மா. தமிழ்நாட்டில் இதை "மைதா மா" என்பார்கள்.

அமெரிக்காவில் தேவைக்கு அதிகமாக மிஞ்சிப் போகும் இந்த சக்கையை பொட்டாசியம் போட்டு சுத்த "வெள்ளை" ஆக்கி எம்மை தின்ன வைத்தார்கள் காலனித்துவ ஆட்சியாளர்கள். அதையே எமது பிரதான உணவுப் பண்டமும் ஆக்கினார்கள். அதிலும் பாவப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களின் மூன்று நேர உணவாக ஆனது சத்தேயில்லாத இந்த பாழாய் போன வெள்ளைமா "ரொட்டி".

வியர்வை சிந்தி தினமும் உழைக்கும் தொழிலாளர்களுக்கு "டயப்பட்டிக்" வர வாய்ப்பே இல்லை. ஆனால் இன்று அதிகமான பெருந்தோட்டத் தொழிலாளர்கள் டயப்பட்டிக் நோய்க்கு ஆளாகி உள்ளனர். அதற்கு காரணம் இந்த அமெரிக்கன் வெள்ளை மாவும் அவர்கள் அன்றாடம் உண்ண வேண்டியிருந்த இந்த கூப்பன்மா ரொட்டியும் ஆகும்.

ஆரோக்கியக் கேடு விளைவிக்கும்
அத்தகைய அமெரிக்கன் மாவில் செய்யப்படும் கொத்து ரொட்டியையும், கோதாரிச் சாப்பாடுகளையும் எங்கடை "இனமானச் சிங்கங்கள்" ஏதோ ஈழத் தமிழரின் பண்பாட்டு உணவு போலவும் ஆரோக்கியமான ஆகாரம் போலவும் கூவிக் கூவிக் கொடுக்கிறார்கள். அதைத் தின்ன ஆக்கள் லைனில் நிற்கிறார்கள்.

இந்த கொத்து ரொட்டியை இலங்கையில் அறிமுகம் செய்தவர்கள் மலையாள ஹோட்டல் வியாபாரிகள்.

ஆனால் கேரளாவில் இந்த கொத்து ரொட்டிக்கு இவ்வளவு டிமாண்ட் எங்குமில்லை. அவர்கள் மிகவும் ஆரோக்கியமான உணவு வகைகளையே உண்கிறார்கள். அந்த ஆரோக்கியமான உணவுப் பழக்கம் எங்கள் பண்பாட்டிலும் இருக்கு.

பன்றி எப்பவும் (எதையோதான்) தின்னுமாம்.

அது மாதிரித்தான் நாம் எம்மிடத்தில் எவ்வளவோ ஆரோக்கியமான உணவுப் பண்பாடு இருந்தும் இந்த பாழாய் போன அமெரிக்கன் மாவுக்கும், கொத்து ரொட்டிக்கும் நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு திரியிறம்.

ஒரு இனம் முதலில் தனக்கான ஒரு ஆரோக்கியமான உணவுப் பண்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். மொழி மட்டுமல்ல, கலை கலாச்சாரம் மட்டுமல்ல... உணவும் எமது அடையாளந்தான்.

பிற பண்பாடுகளில் இருந்து நல்ல விடயங்களை உள் வாங்குவது எப்படி தவறில்லையோ அவ்வாறு பிற மக்களின் உணவுப் பழக்கங்களில் இருந்து நல்ல உணவுகளையும் உணவுப் பழக்கத்தையும் உள்வாங்குவதில் தவறில்லை.

ஆனால் கொத்து ரொட்டி ஒரு சீரழிவு உணவுப் பழக்க வழக்கம் - பிட்சா, KFC, McDonald's போல!

தமிழர்களின் உணவுப் பண்பாட்டை சிதைப்பதும் இனவழிப்பின் ஒரு அங்கமே.

கொத்து ரொட்டி மீதான எமது மோகம் ஒருவகை "சுய இனவழிப்பு! "

(இன்று ஒரு நடன நிகழ்ச்சிக்கு போன இடத்தில் பசிக்கு சாப்பிட கொத்து ரொட்டியையும் ரோல்ஸ் ஐயும் தவிர வேறை ஒண்டும் இருக்கவில்லை. அந்த கடுப்பில் எழுதப்பட்ட பதிவு இது)

Edited by Knowthyself
  • Like 1

Share this post


Link to post
Share on other sites
17 hours ago, Knowthyself said:

 

 

 

(இன்று ஒரு நடன நிகழ்ச்சிக்கு போன இடத்தில் பசிக்கு சாப்பிட கொத்து ரொட்டியையும் ரோல்ஸ் ஐயும் தவிர வேறை ஒண்டும் இருக்கவில்லை. அந்த கடுப்பில் எழுதப்பட்ட பதிவு இது)

அது சரி நீங்கள் போன நடனம் எந்த நடனம்.:unsure:

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, சுவைப்பிரியன் said:

அது சரி நீங்கள் போன நடனம் எந்த நடனம்.:unsure:

 

(இன்று ஒரு நடன நிகழ்ச்சிக்கு போன இடத்தில் பசிக்கு சாப்பிட கொத்து ரொட்டியையும் ரோல்ஸ் ஐயும் தவிர வேறை ஒண்டும் இருக்கவில்லை. அந்த கடுப்பில் எழுதப்பட்ட பதிவு இது)

உந்த வசனத்தை நாங்கள் எழுதவில்லை.

Gnanadas Kasinathar எழுதியது.

எங்கள் வேலை, இணைப்பது, வெட்டுறது, ஒட்டுறது (இவைகளுக்கு யாராவது LIKE போட்டா சிரிக்கிறது), யாராவது லூசுக்கதை கதைச்சா பொங்கியெழுகிறது.

 

Edited by Knowthyself

Share this post


Link to post
Share on other sites

அதுவும் எந்தக் கேவலமா கொத்துரொட்டி செய்து வித்தாலும் அடிபட்டு வாங்கிச் சாப்பிடுதுகள் தமிழ் சனங்கள்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

ஐரோப்பிய யூனியன் கேபப்புக்கு தடை கொண்டு வருகிறார்கள் பேசாமல் இதையும் தடை பண்ணினால் நல்லது போல் கிடக்கு இன்று கொத்தின கொத்து ரொட்டியை ஏழு நாளைக்கு மேல் பிரிட்சுக்குள் வைச்சு விக்கிற உணவங்களில் போட்டிக்கு வாங்கி சாப்பிட ஆள் இருக்கும்வரை வியாபாரம் படுக்காது . ஊரில் கொத்துக்கு போடும் பச்சைமிளகாய் ,வெங்காயம் அனைத்தும் உடன் வெட்டி போடுவார்கள் அந்த கடைகளில் தான் கூட்டம் இருக்கும் .இங்கு வெங்காய மனம் ஜக்கட்டில் பிடித்தால் பக்கத்து வெள்ளை முகம் சுளிக்கும் என்று எதையோ இழந்து எதையோ தேடுறம் .

http://metro.co.uk/2017/12/01/doner-kebabs-to-be-outlawed-across-europe-7124829/

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, பெருமாள் said:

ஐரோப்பிய யூனியன் கேபப்புக்கு தடை கொண்டு வருகிறார்கள் பேசாமல் இதையும் தடை பண்ணினால் நல்லது போல் கிடக்கு இன்று கொத்தின கொத்து ரொட்டியை ஏழு நாளைக்கு மேல் பிரிட்சுக்குள் வைச்சு விக்கிற உணவங்களில் போட்டிக்கு வாங்கி சாப்பிட ஆள் இருக்கும்வரை வியாபாரம் படுக்காது . ஊரில் கொத்துக்கு போடும் பச்சைமிளகாய் ,வெங்காயம் அனைத்தும் உடன் வெட்டி போடுவார்கள் அந்த கடைகளில் தான் கூட்டம் இருக்கும் .இங்கு வெங்காய மனம் ஜக்கட்டில் பிடித்தால் பக்கத்து வெள்ளை முகம் சுளிக்கும் என்று எதையோ இழந்து எதையோ தேடுறம் .

http://metro.co.uk/2017/12/01/doner-kebabs-to-be-outlawed-across-europe-7124829/

மாதக்கணக்காய் வைச்சு தின்னுற எங்கடையளுக்கு ஏழுநாள் பழசெல்லாம் ஜுசுப்பி...:grin:

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

இலங்கைச் சிற்றுண்டி வகைகளான ரோல்ஸ், சமோசா?

CHINA காரன்ரை FROZEN இல் வைத்த DOUGH (rubber), தண்ணியில் தொட்டு ஒவ்வொன்றா களட்டியெடுக்கிறது, சுத்தி பொரிச்செடுக்கிறது, இலங்கை சிற்றுண்டி, வந்தனென்டா கொளுத்தி ...

உவாவின் வாழையிலைச்சாப்டை பாத்தலே தெரியுது வைச்சு சூடாக்கினெதென்று
 

Share this post


Link to post
Share on other sites
On 6.12.2017 at 10:11 AM, பெருமாள் said:

ஐரோப்பிய யூனியன் கேபப்புக்கு தடை கொண்டு வருகிறார்கள் பேசாமல் இதையும் தடை பண்ணினால் நல்லது போல் கிடக்கு

Gastritis+burn.jpg

உந்த ஐரோப்பிய யூனியன் கையோடை அட்டோம் பொம்ப் லெவெலுக்கு இருக்கிற எங்கடை மிளகாய்தூள்களையும் தடை செய்ய வேணும்.வயிறு எரியுற எரிச்சலுக்கு மாற்றுமருந்து ஐரோப்பா கண்டத்திலையும் இல்லையாம் கண்டியளோ....என்ன கோதாரியை கலந்து நாசமறுக்கிறங்கள் எண்டு தெரிஞ்சாக்கள் சொல்லுங்கோப்பா...போறவழிக்கு புண்ணியமாய்ப்போகும்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now