Sign in to follow this  
நவீனன்

கூகுள் க்ரோம் vs மொஸில்லாவின் குவான்டம்... எது சாம்பியன்? #FirefoxQuantum

Recommended Posts

கூகுள் க்ரோம் vs மொஸில்லாவின் குவான்டம்... எது சாம்பியன்? #FirefoxQuantum

 
 

ந்தயத்தில் அத்தனை பேரையும் முந்தி, முதல் ஆளாக ஓடிக்கொண்டிருந்த கூகுளின் க்ரோம் பிரவுசருக்கு திடீர் ஷாக் கொடுத்துள்ளது மொஸில்லா. க்ரோமுக்குப் போட்டியாக, ஃபயர்பாக்ஸ் குவான்டம் பிரவுசரை வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம். இத்தனை நாள்கள், கொஞ்சம் கொஞ்சமாக பட்டி டிங்கரிங் பார்த்து அப்டேட்ஸ் விட்டுக்கொண்டிருந்த மொஸில்லா, இந்தமுறை ஃபயர்பாக்ஸை A டு Z முழுமையாக மாற்றியிருக்கிறது. இதன் பெயர்தான் 'ஃபயர்பாக்ஸ் குவான்டம்'.

மொஸில்லா குவான்டம்

 

என்ன ஸ்பெஷல்?

பிரவுசரின் டிசைனில் இருந்து வேகம் வரைக்கும் எல்லா ஏரியாவிலும் இறங்கி வேலை செய்திருக்கிறது மொஸில்லா. பழைய ஃபயர்பாக்ஸைப் பயன்படுத்தியவர்களுக்கும் சரி, க்ரோமை பயன்படுத்துபவர்களுக்கும் சரி; இருவருக்குமே அசத்தல் அனுபவத்தைத் தருகிறது குவான்டம் பிரவுசரின் யூசர் இன்டர்ஃபேஸ். க்ரோமில் இருப்பது போலவே, பேக் பட்டன் டிசைன், கஸ்டமைஸ்டு டூல்பார் போன்றவை புதிய அம்சங்கள். இதுதவிர, இன்னும் சில விஷயங்களைப் புதிதாக சேர்த்துள்ளது மொஸில்லா.

லைப்ரரி:

பிரவுசரில் நாம் எடுக்கும் ஸ்க்ரீன்ஷாட்ஸ், புக்மார்க்ஸ், பிரவுசிங் ஹிஸ்டரி அனைத்தையும் ஒருங்கிணைத்து லைப்ரரி மெனுவுக்குக் கீழே வைக்க முடியும். வழக்கமான புக்மார்க்ஸ் வசதியைத் தவிர்த்து 'பாக்கெட்' வசதியையும் கூடுதலாக இணைத்துள்ளது மொஸில்லா. இதன்மூலம், நாம் சேமிக்கும் அனைத்து இணைய இணைப்புகளையும் ஒரே அக்கவுன்ட்டில் சேமிக்கமுடியும். பாக்கெட் ஆப்பை மொபைலில் இன்ஸ்டால் செய்துகொண்டால், மொபைலிலும் இவற்றை எடுத்துக்கொள்ளலாம். கிளவுடில் பதிவாவதால், எந்த கேட்ஜெட்டில் இருந்தும் இவற்றை எடுக்கமுடியும். இதுதான் 'பாக்கெட்' வசதியின் ப்ளஸ். இதற்கு முன்பு எக்ஸ்டென்ஷனில் மட்டுமே கிடைத்துக்கொண்டிருந்த இந்த வசதியை டிஃபால்ட்டாகவே மாற்றிவிட்டது மொஸில்லா.

ஸ்க்ரீன்ஷாட்:

பிரவுசரில் இருந்து நேரடியாக ஸ்க்ரீன்ஷாட் எடுப்பதற்காக ஒரு புதிய ஆப்ஷன் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எளிதாக ஸ்க்ரீன்ஷாட் எடுத்து, அதனை டவுன்லோடு செய்துகொள்ள முடியும்.

screenshot feature

வேகம்:

"குவான்டம் பிரவுசர் குரோமை விடவும் 30 % குறைவான மெமரியையே பயன்படுத்துகிறது" என்கிறது மொஸில்லா நிறுவனம். இணையத்தின் வேகம் என்பது பொதுவாக இணைய இணைப்பு, கணினியின் திறன் மற்றும் பிரவுசரின் வேகம் ஆகியவற்றைப் பொறுத்தே அமையும். இந்த விஷயத்தில் குவான்டம் பிரவுசர் கில்லி என்பதால், பயன்படுத்த ஸ்மூத்தாக இருக்கிறது. இவைதவிர, கூகுளில் இருப்பது போலவே ஆட்டோ கம்ப்ளீட் (Auto complete) வசதியும் இருக்கிறது. 

மொஸில்லா Vs குரோம் 

 

யாஹூவை கழட்டிவிட்ட மொஸில்லா:

கடந்த 2014-ம் ஆண்டு யாஹூ நிறுவனத்துடன் மொஸில்லா நிறுவனம் போட்ட ஒப்பந்தத்தின்படி, 2019-ம் ஆண்டு வரைக்கும் ஃபயர்பாக்ஸ் பிரவுசரில் யாஹூதான் டிஃபால்ட் சர்ச் ஆக இருக்கவேண்டும் (அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில்). இந்தமுடிவுக்கு மக்களிடம் இருந்து பெரிய ஆதரவில்லை. பெரும்பாலானோர் கூகுளையே அதிகம் விரும்பியதால், ஃபயர்பாக்ஸ்க்கும் சிக்கல் வந்தது. இந்நிலையில், தற்போதைய குவான்டம் பிரவுசரில் டிஃபால்ட் சர்ச் இன்ஜினாக கூகுளை மாற்றிவிட்டது மொஸில்லா. இந்த மாற்றம் குறித்தும், ஒப்பந்தம் குறித்தும் பதிலளித்துள்ள மொஸில்லா நிறுவனத்தின் தலைமை சட்ட அதிகாரி, "இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. மக்களுக்கு சரியான தேடுதல் முடிவுகளை வழங்குவது, மொஸில்லாவின் எதிர்காலம் போன்றவற்றையெல்லாம் கருத்தில் கொண்டோம். இந்த சர்ச் இன்ஜினைத் தவிர்த்தும் வெரிசானுடன் எங்களால் பல வகைகளில் இணைந்து செயல்படமுடியும்.  புதிய குவான்டம் பிரவுசரில் கூகுள் மட்டுமின்றி, மேலும் 60 சர்ச் இன்ஜின்களை இணைத்துள்ளோம்" எனக் கூறியிருக்கிறார்.

 

இதனைப் பயன்படுத்த, ஏற்கெனவே இருக்கும் ஃபயர்பாக்ஸ் பிரவுசரை அப்டேட் செய்தாலே போதும். இல்லையெனில் டவுன்லோடு செய்துகொள்ளலாம். ஆண்ட்ராய்டின் ஆதிக்கத்தாலும், அருமையான செயல்பாட்டினாலும், க்ரோம்தான் உலகின் முன்னணி பிரவுசர். அந்த இடத்தில் குவான்டம் நிச்சயம் அதிர்வை ஏற்படுத்தும்.

https://www.vikatan.com/news/information-technology/107925-mozillas-new-quantum-browser-and-its-features.html

Share this post


Link to post
Share on other sites

மொஸில்லா குவாண்டம் உலாவியை கடந்த இரு தினங்களாக பயன்படுத்துகிறேன்..

பழைய மொஸில்லா உலாவியை விட மொஸில்லா குவாண்டம் வடிவமைப்பில், வேகத்தில் சிறந்ததுதான். ஆனால் கூகிள் குரோமை விட அதிக வேகம் என சொல்ல இயலவில்லை. தற்பொழுது இரண்டும் ஏறக்குறைய ஒரேவித வேகத்தில் இருக்கிறதென உணர்கிறேன்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

பழைய மொஸில்லா அதிகமான மெமொறியை எடுத்துக் கொண்டு வேகம் குறைவாக வேலை செய்தது. குவாண்டம் தரவிறக்கம் செய்து பதிந்துள்ளேன். ஆரம்பத்தில் மிகக் குறைவான மெமொறியையே பாவிக்கின்றது. பாவித்துப் பார்க்கலாம்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this