Jump to content

பினாமி சட்டம்... சஃபேமா... ரெய்டுக்கு அடுத்த அஸ்திரங்கள் ரெடி!


Recommended Posts

மிஸ்டர் கழுகு: பினாமி சட்டம்... சஃபேமா... ரெய்டுக்கு அடுத்த அஸ்திரங்கள் ரெடி!

 
 

 

ரெயின்கோட்டை உதறியபடியே நுழைந்த கழுகாரின் முகத்தை உற்றுப்பார்த்தோம். ‘‘சசிகலா குடும்பம்மீதான இந்த மெகா ரெய்டின் நோக்கம் என்ன? தமிழக மக்கள் மனதில் இருக்கும் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும்’’ என்றோம்.

‘‘அவர்களை ஒட்டுமொத்தமாக அரசியலிலிருந்து அகற்றுவதுதான் டெல்லியின் நோக்கம். ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு, அதற்கான பேச்சுவார்த்தைகள் பல கட்டங்களில் சசிகலா குடும்பத்துடன் நடத்தப்பட்டன. ஆனால், அவர்கள் மசியவில்லை. கட்சியை உடைத்து, அதிகாரத்தைப் பறித்து, சிறைக்கு அனுப்பியபிறகும் அவர்கள் ஒதுங்குவதாகத் தெரியவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் டெல்லி பி.ஜே.பி-யிடம் புலம்பிய புலம்பல்களை அடுத்தே இந்த ரெய்டுகள் வேகம்பிடித்தன.’’

p42b.jpg

‘‘என்ன புலம்பினார்களாம்?’’

“ ‘எங்களால் அந்தக் குடும்பத்தை எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியவில்லை. போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லம் ஆக்குவோம் என்று அறிவித்தோம். ஆனால், அங்கே எங்களால் நுழையக்கூட முடியவில்லை.‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழ், ஜெயா டி.வி ஆகிய இரண்டுமே அவர்களிடம்தான் உள்ளன. அவற்றில் எங்களுக்கு எதிரான செய்திகள்தான் வருகின்றன. சாதாரண அ.தி.மு.க தொண்டர்கள், அதைத்தான் வேதவாக்காக நினைக்கிறார்கள். எங்களுக்குப் போட்டியாக எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை பல ஊர்களில் தினகரன் நடத்துகிறார். அதற்கு, எல்லா வகையிலும் பண உதவிகள் வருகின்றன. ஜெயலலிதாவின் சொத்துகள் அனைத்தும் அவர்களின் கைகளில் இருக்கின்றன. ஒருவர் போனால் இன்னொருவர் வந்து ஆதிக்கம் செலுத்துகிறார். மொத்தமாக அவர்களைத் துடைத்தெறிய வேண்டும்’ எனப் புலம்பினார்களாம். இதையடுத்தே ஸ்கெட்ச் துல்லியமாகப் போடப்பட்டது.’’

‘‘அதற்கு உதவியவர்கள் யார்?’’

‘‘சசிகலா குடும்பத்தின் உள்விவகாரங்கள் அறிந்த எடப்பாடி, பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் என்று பலர் உதவினாலும், மைத்ரேயன், அரவிந்த் பாண்டியன், கே.பி.முனுசாமி ஆகியோர்தான் பல விவரங்களை அள்ளிக்கொடுத்தவர்கள். கடந்த ஆறு மாதங்களாக, ஆவணங்களைத்தான் கைப்பற்றியது வருமானவரித் துறை. ஆனால், யார் யார் சசிகலாவின் உறவினர்கள், யார் யார் பினாமிகள் என்று துல்லியமாகச் சொல்லிக்கொடுத்தது  கே.பி.முனுசாமிதான்.’’

‘‘சரி, தினகரன் வீட்டில் எந்த ரெய்டும் நடக்கவில்லையே?’’

‘‘1995-ம் ஆண்டு, ஃ்பெரா வழக்கு அவர்மீது தொடரப்பட்ட காலத்திலிருந்தே அவரது கணக்கு வழக்குகள் வெளிப்படையானவை. அதனால், அவர் வீட்டில் புகுந்தால் ஒன்றும் தேறாது என்பது வருமானவரித் துறைக்குத் தெரியும். அதனால்தான், அவரின் சென்னை வீட்டில் ரெய்டு எதுவும் நடக்கவில்லை. புதுச்சேரி பண்ணை வீட்டில் மட்டும் ரெய்டு நடந்தது. இளவரசியின் வாரிசுகள்தான் அதிகம் குறிவைக்கப்பட்டனர்.’’

‘‘என்ன காரணம்?’’

‘‘சசிகலா பரோலில் வந்த சமயத்தில் உமது நிருபர், ‘கட்சிக்கு தினகரன்... ஆஸ்திக்கு விவேக்’ என எழுதி இருந்தாரே, அதே காரணம்தான்! பரோலில் வந்த சசிகலா, சொத்துகளை இளவரசியின் மகன் விவேக் பொறுப்பில் ஒப்படைத்தார். அதுபோல, விவேக்கின் சகோதரி கிருஷ்ணப்ரியாவின் பெயரிலும் சில சொத்துகள் பரிமாற்றம் செய்யப்பட்டன. இந்தத் தகவல்கள் டெல்லிக்குப் போகாமல் இருந்திருக்குமா? அதனால்தான் விவேக் வீட்டிலும், விவேக்கின் மாமனார் பாஸ்கர் வீட்டிலும் துருவித் துருவி சோதனைபோட்டனர். தினகரனே விவேக்கிடம் பணம் வாங்கித்தான் ஊர் ஊராகச் சென்று கூட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறார். அதனால்தான் விவேக் குறிவைக்கப்பட்டார்.’’

p42.jpg

‘‘சோதனைகளில் என்ன கிடைத்ததாம்?’’

‘‘கிலோ கணக்கில் நகை, கோடிக்கணக்கில் பணம் என்று எதையும் எதிர்பார்த்து அதிகாரிகள் போகவில்லை. அவர்களின் கவனமெல்லாம் ஆவணங்களில்தான் இருந்தது. கைப்பற்றப்பட்டதில் மிக முக்கியமானவை, சொத்து மற்றும் கம்பெனி ஆவணங்கள்தான். 1,430 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றை வைத்துத்தான் அடுத்த ஆட்டத்தை ஆட உள்ளது டெல்லி. அதைத் தெரிந்துகொண்டுதான் தினகரனும், ‘என் உறவினர்கள் ஏதாவது வைத்திருந்தால், அதற்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்’ எனப் பின்வாங்கினார்.’’

‘‘டெல்லியின் அடுத்த ஆட்டம் என்னவாக இருக்கும்?’’

‘‘சில நாள்களுக்குமுன்பு இமாசலப் பிரதேசத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘யாருடைய பினாமி சொத்துகளும் தப்பாது’ என்று எச்சரிக்கை விடுத்தார் அல்லவா! அதுதான் நடக்கப்போகிறது. எடுத்துச்சென்ற ஆவணங்கள் மூலம், பினாமிகள் பெயரில் உள்ள சொத்துகளெல்லாம் பினாமி தடைச்சட்டம் மூலம் முடக்கிவைக்கப்படும். அதன்மூலம் சசிகலா குடும்பத்தின் முதுகெலும்பை உடைப்பதுதான் அடுத்த ஆட்டம். தினகரன் இந்த நேரத்திலும் கலங்காமல் இருப்பதுபோலக் காட்டிக்கொள்கிறார். ஆனால், அதையும் மீறி அவரிடம் வாட்டம் தெரிகிறது. மாற்றுக் கட்சியினர் தினகரனுக்கு ஆதரவாகவும், மத்திய அரசைக் கண்டித்தும் பேசியது அவரைக் கொஞ்சம் உற்சாகப்படுத்தியுள்ளது.’’
‘‘இதற்குப் பிறகும் தினகரன் ஓயவில்லை என்றால் என்ன நடக்கும்?’’

‘‘அமலாக்கத்துறை அடுத்து களமிறங்கும். அதன்பின் பினாமி சட்டத்தின்படி நடவடிக்கை பாயும் என்கிறார்கள். 2016 நவம்பரில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டபோது, இந்தச் சட்டத்தையும் அமல்படுத்தியது மத்திய அரசு. இந்தச் சட்டத்தின்படி போடப்பட்ட முதல் வழக்கைச் சந்தித்த அரசியல்வாதி, முன்னாள் பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ். அதேவழியில், தினகரனையும் வளைக்கப் போகிறார்கள். இந்தச் சட்டத்தின்படி, பினாமி பெயரில் வாங்கப்பட்ட சொத்துகள் பறிமுதல் செய்யப்படும். அப்படிச் சொத்து வாங்கியவருக்கு, அந்தச் சொத்தின் மதிப்பில் 25 சதவிகிதம் வரை அபராதம் விதிக்கலாம்; கூடவே ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கவும் வழி இருக்கிறது. இதேபோல, அந்நியச் செலாவணி மோசடி செய்பவர்களைக் குறிவைக்கும் ‘சஃபேமா’ என்ற சட்டத்தையும் பயன்படுத்தலாமா என ஆலோசித்துவருகிறார்கள். அடுத்தடுத்து இந்த அஸ்திரங்களையே சசிகலா குடும்பம்மீது பிரயோகிக்க உள்ளார்கள்’’ என்ற கழுகார், ரெயின் கோட்டை எடுத்து அணிந்துகொண்டார். பிறகு, கோட்டின் உள்பாக்கெட்டிலிருந்து சில குறிப்புகளை எடுத்துக்கொடுத்துவிட்டு, வேகமாகப் பறந்தார்.

படங்கள்: கே.குணசீலன்,
வி.ஸ்ரீனிவாசுலு


கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்

dot4.png வருமானவரித் துறையினர் விவேக் வீட்டுக்கு வந்தபோது, அவரின் மைத்துனர் பிரபுவும் வீட்டில் இருந்துள்ளார். அவர், ‘‘எனக்கும் இந்தச் சோதனைக்கும் சம்பந்தமில்லை. நான் வெளியே போகலாமா?’’ எனக் கேட்டுள்ளார். ஆனால், ‘‘ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தை நீங்கள்தான் மேற்பார்வை செய்கிறீர்கள் என்று எங்களுக்குத் தெரியும். உங்களையும் விசாரிக்க வேண்டும்’’ என உட்கார வைத்துவிட்டனர். உயர் ரக நாய்கள் இரண்டை வளர்த்து வருகிறார், விவேக். அவற்றை மட்டும்தான் வீட்டை விட்டு வெளியே கொண்டுசெல்ல அனுமதி அளித்துள்ளனர்.

dot4.png ‘‘2006-ம் ஆண்டு ஜெயலலிதா, பெருமதிப்புள்ள சொத்து ஒன்றை வாங்கினார். ‘அந்தச் சொத்து பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும். அது யார் பெயரில் உள்ளது? அதன் ஆவணங்கள் எங்கே உள்ளன?’ என்ற கேள்வியையே நான்கு நாள்களும் வெவ்வேறுவிதமாக விவேக்கிடம் கேட்டார்கள்’’ என நெருங்கிய வட்டாரங்களில் சொல்கிறார்கள்.

p42c.jpg

dot4.png 2016 நவம்பரில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது விவேக் செய்த பரிமாற்றங்கள், வெளிமாநிலங்களில் அவர் செய்த முதலீடுகள், வாங்கிய கார்கள் உள்ளிட்ட சில விஷயங்களைத்தான் கேள்விகளாகத் துளைத்தார்களாம்.

dot4.png போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் பி.ஏ-வாக இருந்த பூங்குன்றன், சசிகலா சிறைக்குச் சென்றபிறகு எங்கும் தலைகாட்டவில்லை. சசிகலா பரோலில் வந்தபோதுதான் அவரைப் பார்க்கமுடிந்தது. அந்த நேரத்தில் பூங்குன்றனிடம் சில பல கையெழுத்துகள் வாங்கப்பட்டதாகவும், அதன்பிறகு அவர் களையிழந்து காணப்பட்டதாகவும் சொல்கிறார்கள். அந்தக் கையெழுத்துகள் தொடர்பாகத்தான் அவரிடம் விசாரணை நடந்ததாம்.

dot4.png 72 மணி நேரம், 100-க்கும் மேற்பட்ட கேள்விகள் என ரெய்டில் திவாகரனைத் துளைத்தெடுத்தனர். திவாகரன், அவரின் கல்லூரியில்  பேராசிரியராகப் பணியாற்றும் அன்புக்கரசி, கல்லூரியை நிர்வகித்து வரும் விநாயகம், டிரைவர் வினோத் ஆகியோரை முழுமையான விசாரணை வளையத்தில் கொண்டு வந்தார்கள். கல்லூரியின் பெண்கள் விடுதியில் ஓர் அறை மட்டும் பூட்டப்பட்டிருந்தது. பூட்டை உடைத்து உள்ளே சென்ற அதிகாரிகள், அங்கிருந்து நிறைய ஆவணங்களை எடுத்துள்ளனர். அவற்றை வைத்தே திவாகரன் மகள் ராஜமாதங்கி வீட்டுக்கும் சோதனைக்குச் சென்றனர். ஆவணங்களில் 16 பண்டல்களை மட்டும் தங்களது வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளார்கள். மீதியுள்ள ஆவணங்கள் மற்றும் பொருள்களைக் கல்லூரியில் 8-ம் நம்பர் அறையில் வைத்துப் பூட்டி சீலிட்டுவிட்டுச் சென்றுள்ளார்கள் அதிகாரிகள்.

dot4.pngl ‘அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளும் இணைய முயற்சி செய்ததால்தான் இந்த ரெய்டு நடைபெற்றதா’ என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை விட்டிருந்தார். அந்த அறிக்கை பற்றி மத்திய உளவுத்துறையினர் தீவிரமாக விவாதித்தனராம். குறிப்பாக, பன்னீர் தரப்பிலிருந்து பெங்களூரு சிறைக்கு ஒரு தூதர் போயிருந்ததாக வெளியான செய்தியும் இதனுடன் இணைத்துப் பேசப்பட்டதாம்.

dot4.png பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்துக்கு, சைக்கிள் சப்ளை செய்யும் நிறுவனத்தை முடிவு செய்யும் டெண்டரில் பல விதிமீறல்கள் நடந்துள்ளனவாம். சைக்கிள் தயாரிப்பில் அனுபவமே இல்லாத சில நிறுவனங்களும் உள்ளே நுழைந்துவிட்டனவாம். அவர்கள் ‘சைக்கிள்’ என்ற பேனரில் எதைக் கொடுப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.   

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.