Sign in to follow this  
நவீனன்

எத்­தனை காலம்­தான் ஏமாற்­று­வார்­கள்?

Recommended Posts

  • எத்­தனை காலம்­தான் ஏமாற்­று­வார்­கள்?

மழைக்கு முளைக்­கும் காளான்­க­ளாக தேர்­தல் வந்­த­தும் புதிய அர­சி­யல் கூட்­ட­ணி­கள் உரு­வாக ஆரம்­பித்­து­விட்­டன. அதில் முத­லா­வ­தாக அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ர­சும் , ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்­பும் இணைந்து ஒரு தேர்­தல் கூட்­ட­ணியை உரு­வாக்­கி­யுள்­ளன.

இந்­தக் கூட்­ட­ணிக்கு தமிழ் மக்­கள் பேரவை ஆத­ரவு என்று நேற்று அந்த அமைப்பு விடுத்த அறிக்­கை­யில் மறை­மு­க­மா­கத் தெரி­வித்­தி­ருந்­தது.

தேர்­தல் அர­சி­யல் என்­பது சந்­தர்ப்­ப­வா­தக் கூட்டு என்­பது இந்­தக் கூட்­டணி மூலம் மீண்­டும் நிரூ­ப­ண­மா­கி­யுள்­ளது.

இந்­தக் கூட்­ட­ணி­யில் உள்ள தமிழ்க் காங்­கி­ரஸ் கட்சி, இரு தேசம் ஒரு நாடு என்­பதே தமது கொள்கை என்று இது­வரை கூறி­வந்­தது. அந்­தக் கொள்­கை­யின் அடிப்­ப­டை­யில் அமை­யாத இலங்­கை­யின் அர­ச­மைப்­பின் கீழ் உரு­வாக்­கப்­பட்ட மாகாண சபை­கள், உள்­ளு­ராட்சி சபை­கள் என்­ப­வற்­றில் போட்­டி­யி­டு­வ­தில்லை என்று கடந்த 8 வரு­டங்­க­ளாக பிடி­வா­த­மாக இருந்­தது அந்­தக் கட்சி. அதுவே தமது கொள்­கைப்­பற்­றுக்­கான சான்று என்­றும் காட்டி வந்­தது.

இந்த 8 வருட காலத்­தில் நடந்த 2 நாடா­ளு­மன்­றத் தேர்­தல்­க­ளி­லும் போட்­டி­யிட்டு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­டம் படு­தோல்­வி­யும் கண்­டது.

இப்­ப­டியே போனால் தமக்கு அர­சி­யல் எதிர்­கா­லமே இல்லாது போய்விடும் என்­ப­தைப் புரிந்­து­கொண்ட அந்­தக் கட்சி, தமக்­கி­ருக்­கக் கூ­டிய சொற்ப வாக்­குப் பலத்தை மூல­த­ன­மாக்­கிக்­கொண்டு வளர்­வ­தற்­கா­கக் கொள்­கை­யைத் தூக்கி எறிய முன்­வந்­தது.

அர­சி­ய­லில் இத்­த­கைய முடி­வு­க­ளைத்­தான் சாணக்­கி­யம் என்­கி­றார்­கள். அப்­படித் தனது அர­சி­யல் எதிர்­கா­லத்­தைப் பாது­காக்க உள்­ளு­ராட்­சித் தேர்­த­லில் போட்­டி­யி­டு­வ­தன் மூலம் ஒரு சில உறுப்­பி­னர் பத­வி­க­ளை­யா­வது பெற்று, தமது அர­சி­யல் வாழ்க்­கையை உயிர்ப்­போடு பேணும் முடி­வுக்கு அந்­தக் கட்சி வந்­தது.

அதற்கு அந்­தக் கட்சி சொன்ன கார­ணம், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புப் போன்ற தவ­றான தலை­மை­க­ளின் கைகளில் மக்­கள் மன்­றங்­க­ளின் ஆட்சி போவ­தைத் தடுப்­ப­தற்­கா­கவே தாம் உள்ளூ ­ராட்சி மற்­றும் மாகாண சபைத் தேர்­தல்­க­ளில் போட்­டி­யி­டப்­போ­கின்­றோம் என்­பது.

அர­சி­யல் கட்­சி­கள் எப்­போ­தும் தமது கட்சி நலன் சார்ந்த முடி­வு­களை உள்­ள­ப­டியே மக்­கள் முன் ஒத்­துக்­கொள்­வது மிக மிக அரிது. தாங்­கள் எடுக்­கும் முடி­வு­கள் எல்­லா­வற்­றை­யும் மக்­க­ளின் நலன் சார்ந்தே எடுப்­ப­தாக அவர்­களை நம்ப வைப்­ப­து­தான் அவற்­றின் உத்தி. அதையே இந்­தக் கட்­சி­யும் செய்­தது, செய்­கி­றது.

ஆனால், தமிழ் மக்­க­ளின் தீர்வு சார்ந்து நாடா­ளு­மன்ற முறைமை தவிர்ந்த வேறு எந்த வழி­வ­கை­க­ளும், – தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு தற்­போது செயற்­பட்டு வரு­வ­தைப் போன்று – அந்­தக் கட்­சி­யி­டம் இல்லை என்­பது வெளிப்­படை. இருந்­தா­லும் தாங்­கள் ஆட்­சி­யைப் பிடித்­தால் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு “ மாற்று” என்று தமிழ் மக்­களை நம்ப வைப்­ப­தற்கு அது முயற்­சிக்­கி­றது.

அந்த முயற்­சிக்­கா­கவே தமிழ் மக்­கள் பேரவை உரு­வாக்­கத்­தில் அது பங்­கெ­டுத்­தும் கொண்­டது. தம் மீதான கடந்­த­கால விமர்­ச­னங்­கள், துரோகப் பட்­டங்­கள், இறு­திப்­போ­ரின்­போது நிகழ்ந்த போர்க் குற்­றம் எனச் சொல்­லப்­ப­டும் வெள்­ளைக்­கொ­டிச் சம்­ப­வத்­தில் இந்­தக் கட்­சி­யின் தலை­வர் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லத்துக்கு இருக்­கும் தொடர்­பு­கள் பற்­றிய பழிச் சொற்­கள் என்­ப­வற்­றில் இருந்து தம்­மைப் புனி­தப்­ப­டுத்­திக்­கொள்ள, தமிழ் மக்­கள் பேர­வை­யை­யும் அதற்­கூ­டாக நடத்­தப்­பட்ட சில போராட்­டங்­க­ளை­யும் இந்­தக் கட்சி பயன்­ப­டுத்­திக்­கொண்­டது.

இந்­தக் கட்­சி­யு­டன் கூட்டு வைத்­துக்­கொண்­டுள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ். கடந்த 8 வருட கால­மாக தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்­குள் தமிழ் அர­சுக் கட்­சிக்கு நிக­ரான மதிப்­புக்­கா­கக் கல­கம் செய்து வந்­தது.

அது சாத்­தி­யப்­ப­டாது போன­போது, குழப்­ப­வா­தி­யான கட்­சி­யின் தலை­வர் சுரேஸ் பிரே­மச்­சந்­தி­ர­னுக்கு தேசி­யப்­பட்­டி­யல் நாடா­ளு­மன்ற உறுப்­பு­ரி­மையை வழங்­கா­மல் தமிழ் அர­சுக் கட்சி புறக்­க­ணித்­ததை அடுத்தே தன்­னைப் பாது­காத்­துக்­கொள்­வ­தற்­கான இடத்தை அந்­தக் கட்சி தேடத் தொடங்­கி­யது. அப்­போது கிடைத்த வாய்ப்­புத்­தான் தமிழ் மக்­கள் பேரவை.

2015ஆம் ஆண்டு நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் தோல்­வி­ய­டைந்த இந்த இரு தரப்­பு­க­ளுமே அதி­லி­ருந்து விரை­வாக மீள்­வ­தற்­காக தமிழ் மக்­கள் பேரவை, பொது மக்­கள் நலன் பேண் அமைப்பு என்ற போர்­வை­யைத் தம் மீது போர்த்­துக்­கொண்­டன. இப்­போது அந்­தப் போர்­வையை நீக்­கி­விட்டு உண்­மை­யான முகத்­தைக் காட்­டிக் கொண்­டுள்­ளன.

ஆக மொத்­தத்­தில், கட்­சி­கள் தங்­கள் நலனை மட்­டுமே முன்­னி­லைப்­ப­டுத்தி நடத்­தும் இந்த சுய­நல விளை­யாட்­டுக்கு மக்­கள் நலன் என்­கிற பெயர் சூட்­டப்­ப­டு­வ­து­தான் வேடிக்கை.இந்த இரண்டு தரப்­பு­க­ளுமே முத­லில் கூட்­ட­மைப்­பில் இருந்­த­வை­தான். அப்­போ­தும் மக்­கள் நலன்­தான் என்­றார்­கள், இப்­போது தனி­யாக ஒரு கூட்­ட­ணியை உரு­வாக்­கும்­போ­தும் மக்­கள் நலன்­தான் என்­கி­றார்­கள்.

“எத்­தனை காலம்­தான் ஏமாற்­று­வார் இந்த நாட்­டிலே?” என்­கிற வரி­கள்­தான் ஞாப­கத்துக்கு வரு­கின்­றன.

http://newuthayan.com/story/46448.html

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this