• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

2 தடவைகள் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தாயின் கணவன் : இன்று தீர்ப்பு

Recommended Posts

2 தடவைகள் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தாயின் கணவன் : இன்று தீர்ப்பு

 

வவுனியா - மறவன்குளம் பகுதியில் 16 வயதிற்கு குறைந்த சிறுமி ஒருவரை  பாலியல் வன்புனர்வு புரிந்த குற்றத்திற்காக 55வயதுடைய சிறிய தந்தைக்கு 20 வருட கடூழியச்சிறைத் தண்டனையை வழங்கி  வவுனியா மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2003ஆம் ஆண்டு மறவன்குளம் பகுதியில் தனிமையிலிருந்த 16 வயதிற்கு குறைந்த சிறுமியை தாயின் இரண்டாவது கணவனான  55 வயதுடைய வைரமுத்து சிவலிங்கம் இரண்டு தடவைகள்  பாலியல் வண்புனர்வுக்குட்படுத்தியுள்ளார்.

Local_News__6_.jpg

இதையடுத்து குறித்த நபரை வவுனியா பொலிஸார் கைது செய்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

கடந்த வருடம் அக்டோம்பர் மாதம் 26ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குறித்த எதிரிக்கு எதிரான குற்றப்பகிர்வுப்பத்திரம் வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று விளக்கம் முடிவுறுத்தப்பட்டு இன்றைய தினம் தீர்ப்பிற்கு திகதி குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் வழக்கு விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் சந்தேக நபர்  இரண்டு தடவைகள் சிறுமியை பாலியல் வண்புனர்வுக்குட்படுத்தியமையால்  குற்றவாளியாக அடையாளப்படுத்தி, எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் முதலாவது குற்றச்சாட்டிற்கு 10வருட கடூழியச்சிறைத் தண்டனையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு இலட்சம் ரூபா நஷ்டஈடாக செலுத்துமாறும் அதைச் செலுத்தத்தவறினால் மேலும் இரண்டு வருடம் கடூழிறச்சிறையும் அனுபவிக்கவேண்டும் எனவும் தண்டப்பணமாக 10000 ரூபாவினையும் செலுத்தமாறும் அதைச் செலுத்தத்தவறினால் ஒரு மாதம் சாதாரண சிறையையும் அனுபவிக்க நேரிடும் எனவும்

இரண்டாவது குற்றச்சாட்டுக்கு 10வருட கடூழியச்சிறை தண்டனையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு இலட்சம் ரூபா நஷ்ட ஈடாக செலுத்துமாறும் அதைச் செலுத்தத்தவறினால்  இரண்டு வருடம் கடூழியச்சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டும் எனவும் தண்டப்பணமாக 10000ரூபாவினைச் செலுத்துமாறும் அதை செலுத்தத்தவறினால் ஒரு மாதம் சாதாரண சிறை தண்டனையும் அனுபவிக்க நேரிடும் எனவும் இந்த இரண்டு தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தனது தீர்ப்பில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/27032

Share this post


Link to post
Share on other sites

ஏக காலத்தில் தண்டனையை அனுபவிக்க விடாமல் தனி தனியாக அனுபவிக்க விட்டிருக்க வேண்டும்

Share this post


Link to post
Share on other sites

 மறுமணம் செய்யும் அன்னையர் தங்கள் பெண்பிள்ளைகளின்  பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியம். சிறுபிள்ளைகளை துஸ்பிரயோகம் செய்யும் மிருகங்களுடன் வாழும் வாழ்க்கை எந்த விதத்தில் அந்தப்பெண்ணுக்கு கௌரவமாய், பாதுகாப்பாய், வளமாய்  அமையும். என்ன கஸ்ரமானாலும் தன் பிள்ளைகளுக்காகவே வாழ்ந்திருக்கலாம்.

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this