Jump to content

புதிய ஆய்வு: உடலுறவினால் மாரடைப்பு ஏற்படுகிறதா?


Recommended Posts

புதிய ஆய்வு: உடலுறவினால் மாரடைப்பு ஏற்படுகிறதா?

 
உடலுறவினால் மாரடைப்பு ஏற்படுகிறதா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஉடலுறவினால் மாரடைப்பு ஏற்படுகிறதா?

உடலுறவு கொள்ளும் போது ஏற்படும் திடீர் மாரடைப்பு பெண்களை விட ஆண்களுக்குத்தான் பெரும்பாலும் ஏற்படுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது.

ஆனால், உடலுறவினால் அரிதாகவே மாரடைப்பு ஏற்படுகிறது.

துல்லியமாக 4557 மாரடைப்புகளை ஆராய்ந்ததில், 34 மட்டுமே உடலுறவின் போதும், உடலுறவுக்கு பிந்தைய ஒரு மணி நேரத்திலும் ஏற்பட்டு இருக்கிறது. அதில் பாதிக்கப்பட்டவர்களில் 32 பேர் ஆண்கள்.

மாரடைப்புக்கும் உடலுறவுக்கும் சம்பந்தம் உள்ளது. உடலுறவு மாரடைப்பிற்கு முக்கிய காரணி என்று சொல்லும் முதல் ஆய்வு இதுதான் என்கிறார் சிடார்ஸ் சினாய் இதய கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த சுமீத் சக்.

இந்த ஆய்வறிக்கை, அமெரிக்க இதய கழகம் ஒருங்கிணைத்த சந்திப்பில் சமர்பிக்கப்பட்டது.

இதயம் முறையாக செயல்படாதபோது மாரடைப்பு ஏற்படுகிறது. இதயம் துடிப்பது உடனே நிற்கிறது. இதனால் சுயநினைவை இழக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், அவர்கள் சுவாச இயக்கமும் நிற்கிறது. 'கார்டியோபல்மனரி ரிஸாசிடேஷன் சிகிச்சை' அளிக்காதபோது, அவர்கள் இறக்கவும் நேரிடுகிறது.

இதய இயக்க கோளாறு:

இதய இயக்க கோளாறிலிருந்து (Heart attack) இது முற்றிலுமாக வேறுபடுகிறது. ஹார்ட் அட்டாக், இதயத்துக்குச் செல்லும் ரத்தம் நிற்பதால் ஏற்படுகிறது.

உடலுறவால் ஹார்ட் அட்டாக் ஏற்படுவது முன்பே அறிந்த ஒன்று. ஆனால், மாரடைப்புக்கும் உடலுறவுக்கும் உள்ள தொடர்பு முன்பு அறியாத ஒன்று.

மருத்துவர் சுமீத் மற்றும் கலிஃபோர்னியாவில் உள்ள அவருடைய சகாக்களும், 2002 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் மாரடைப்புக்கு உள்ளான போர்ட்லாண்ட் மற்றும் ஒரிகன் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களின் மருத்துவ பதிவுகளை ஆய்வு செய்தனர்.

இதில், உடலுறவினால் ஏற்படும் மாரடைப்புகள் 1 சதவீதத்துக்கும் குறைவானதாக இருந்து இருக்கிறது. அப்படி மாரடைப்புக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்கள். அதுவும் குறிப்பாக நடுத்தர வயதுகாரர்கள், ஆஃப்ரிக்கன்- அமெரிக்கன்கள் மற்றும் முன்பே இதய நோய் உள்ளவர்கள்.

சுமீத்,"இந்த கண்டுப்பிடிப்புகள்,கார்டியோபல்மனரி ரிஸாசிடேஷன் சிகிச்சையின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு உணர்த்த பயன்படும்." என்கிறார்.

ஹார்ட் அட்டாக் அல்லது இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், குறைந்தது ஆறு வாரங்களுக்கு உடலுறவில் ஈடுப்படகூடாது என்று பிரிட்டிஷ் இதய அறக்கட்டளை வலியுறுத்துகிறது.

http://www.bbc.com/tamil/science-41976051

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய ஆய்வு.

13 hours ago, நவீனன் said:

உடலுறவு கொள்ளும் போது ஏற்படும் திடீர் மாரடைப்பு பெண்களை விட ஆண்களுக்குத்தான் பெரும்பாலும் ஏற்படுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது.

நாள்முழுக்க படபடத்து....அந்தரப்பட்டு....அவசரப்பட்டு வேலை செய்து போட்டு ஒரு கொஞ்ச நேரமாவது எல்லாத்தையும் மறந்து சந்தோசமாய் இருப்பம் எண்டு பாத்தால்.......
அதுக்கும் அறப்படிச்சவங்கள் வைக்கிறாங்கள் ஆப்பு.tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நவீனன் said:

புதிய ஆய்வு: உடலுறவினால் மாரடைப்பு ஏற்படுகிறதா?

 
உடலுறவினால் மாரடைப்பு ஏற்படுகிறதா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஉடலுறவினால் மாரடைப்பு ஏற்படுகிறதா?

மேலே உள்ள படத்தில...எது ஆண்....என்று கண்டு பிடியுங்கள் ..பார்க்கலாம்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

 

male மேல் நோக்கி, female கீழ் நோக்கி:grin: அப்பாடா எனக்கு அட்டாக் வராது. வாழ்க்கை தண்ணியா போகேக்க வெருட்டுறாங்கய்யா

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

இளநரை, வழுக்கைத்தலை இருக்கும் ஆண்களுக்கு இதய நோய் ஏற்படலாம்

ஆண்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

நாற்பது வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு இதய நோய் ஏற்பட உடல் பருமனைவிட ஆபத்து காரணியாக இருப்பது, இளம் வயதிலேயே முடி நரைத்தல் மற்றும் வழுக்கை விழுதல் தான் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இந்தியாவில் 2000 இளம் ஆண்களை வைத்து ஆய்வு செய்ததில் இது தெரிய வந்துள்ளது. தலைமுடி அதிகம் இருப்பவர்களை விட, இளநரை அல்லது வழுக்கை தலை விழுந்த ஆண்களுக்கு இதய நோய்கள் அதிகம் வந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மற்ற ஆபத்து காரணிகளும் முக்கியம் என பிரிட்டிஷ் இதய அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

"இளநிரை, வழக்கைத் தலை பிரச்சனை உள்ள ஆண்களை கண்டுகொண்டால், இதய நோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளவர்களை கண்டுகொள்ள முடியும்" என பிபிசியிடம் பேசிய பிரிட்டிஷ் இதய அறக்கட்டளையின் இணை மருத்துவ இயக்குனர் மைக் நாப்டன் கூறினார்.

"சிலவற்றை மக்களால் மாற்ற முடியாது. எனினும், அதிக கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தம் போன்ற ஆபத்து காரணிகளை குறைக்கும் வகையில் நம் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளலாம். இவை பரீசிலிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயங்கள்" என்றும் மைக் தெரிவித்தார்.

இளநரை

கொல்கத்தாவில் நடைபெற உள்ள 69-ஆவது சிஎஸ்ஐ வருடாந்திர மாநாட்டில் இந்த ஆய்வு வழங்கப்பட உள்ளது.

இதய நோய் இருந்த நாற்பது வயதுக்குட்பட்ட ஆண்கள் 790 பேரும், அதே வயதிலிருக்கும் நல்ல உடல்நலத்துடன் இருந்த 1,270 ஆண்களும் இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இவர்களின் தலை வழுக்கை அளவின் குறிப்பை வைத்து அவர்களின் மருத்துவ வரலாறுகள் எடுக்கப்பட்டன. பெரும்பாலான ஆண்களுக்கு ஏற்படும் தலைமுடி உதிர்தல் மற்றும் நரைத்தல் போன்ற விஷயங்களும் கணக்கெடுக்கப்பட்டன.

இதன் கண்டுபிடிப்புகளை, இதய நோய் வர அதிக வாய்ப்புள்ள அறிகுறிகளுடன் தொடர்புபடுத்தி பார்த்தனர்.

பின்னர், இளநிரை இருப்பவர்களுக்கு இதய நோய் வர அதிக வாய்ப்புள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதே போல, 2013 ஆம் ஆண்டில் ஜப்பானில் 37 ஆயிரம் நபர்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் வழுக்கைத் தலை இருக்கும் ஆண்களுக்கு இதய நோய் வர 32 சதவீதம் வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள வழிகள்

காய்கள்படத்தின் காப்புரிமைPA
  • நாள் ஒன்றுக்கு பழம் மற்றும் காய்களை ஐந்து பகுதிகளாக சாப்பிட வேண்டும்
  • புகை பிடிப்பதை நிறுத்த வேண்டும்
  • சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்
  • உடல்எடையை கட்டுப்படுத்தல்
  • நார் சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளலாம்
  • அதிக கொழுப்புள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்
  • உணவில் உப்பின் அளவை குறைக்க வேண்டும்
  • மீன் சாப்பிடலாம்
  • மது அருந்துவதை குறைக்க வேண்டும்

http://www.bbc.com/tamil/india-42214773

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.