Jump to content

தங்கைக்கு.... வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

தங்கைக்கு
- வ.ஐ.ச.ஜெயபாலன்
.
எண்ணில் நினைவெல்லாம்
இன்னுமுன் சிரித்த முகம்.
பின்னே உன் பாதக் கொலுசின்
பாடல் மட்டும் ஒலிக்கவில்லை.
.
வாழ்வே பொய் என்பவளின்
மரணம் எங்கண் மெய்யாகும்.
முந்திவிட்டாய் போய்வா
விடுதலையாம் சிறகசைத்து
.
பெண்ணின் கசந்த விதியே
வசந்தத்தும் இலையுதிரவைக்கும் 
மங்கையரின் பாழ் விதியே
காடெரிந்த நாட்களிலும் தீ புகுந்து
குட்டிகட்க்காய் இரைதேடும்
அகதிப் பெண் புலிஒன்றை
கண்ணாடி கூண்டுள் வீழ்த்திவிட்டாய். 
வாழிய வல் விதியே
,

தங்கச்சி என் நினைவில் இருக்கும்
உன் முதல் வார்த்தை புன்சிரிப்பு.
என் காதுள் உறைந்த இறுதி வார்த்தை
உன் இயலாத பெண்ணுக்கான
அழுகையாய் இருந்தது,
எங்கும் மனிதர்கள் இருக்கின்றோம்.
இருக்கிறது தமிழ்நாடு.
எதற்கும் இனிமேல் அழாமல் போய்வாடி?
.
இதோ தாய்மண்ணால் வனைந்து 
நீ உடுத்த ஆடை கிடக்கிறது.
கலங்காதே
மின்னில் எரித்து
வங்கக் கடலில் எறிந்தால்
ஈழக்கரை சேர்ந்துவிடும்.
,
போய்வா

Link to comment
Share on other sites

துயரிடையும் நன்றி. நுணாவிலான் , புங்கையூரான் இணையவன், யாழ்கவி அனைவரது ஆதரவுக்கும் என் நன்றிகள்.  அன்பான

 நல்வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்புச்   சகோதரியை  இழந்த... துன்பத்தில், இருக்கும் ஜெயபாலன் அண்ணா அவர்களுக்கு,
எமது ஆழ்ந்த அனுதாபங்களை,  தெரிவித்துக் கொள்கின்றோம்.
சகோதரியின் ஆத்ம  சாந்திக்காக....  இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு.....கடந்த சில வாரங்களுக்கு முன் ல.சிறி இணையத்தில் அறிவிப்பு பார்த்தாக நினைவு.சகோதரியின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்! :(

November 14, 

 
Image may contain: plant and flower
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் துயரில் நாங்களும் பங்கெடுத்துக்கொள்கின்றோம். தங்கையின் ஆன்ம சாந்திக்காகப் பிராத்திக்கிறோம். மனஉணர்வுகளை கவிதையாக வடித்துள்ளீர்கள். ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.