• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

இந்தியில் பேசக் கூறி தமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக்காவல் படை தாக்குதல்

Recommended Posts

இந்தியில் பேசக் கூறி தமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக்காவல் படை தாக்குதல்

 
 

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடலோர காவல் படையினர் மீனவர்களை இந்தியில் பேச சொல்லி தாக்குதல் நடத்தியிருப்பது மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 நேற்று காலை ராமேஸ்வரத்திலிருந்து ஜெபமாலைபிச்சை என்பவருக்கு சொந்தமான படகில் அந்தோணிபிச்சை, சூசையா, நிஷாந்த், சாண்ட்ரோ, தேவராஜன், ஜான்சன் ஆகிய 6  மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இவர்கள் பாரம்பரியமாக மீன் பிடிக்கும் பகுதியில் மீன்பிடிக்க வலைகளை பாய்ச்சிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் கடலில் பாய்ச்சியிருந்த வலைகளை அறுத்து சேதப்படுத்தியதுடன் மீனவர்களின் படகுகளையும் விரட்டியடித்தனர்.

 

இந்திய கடற்படையினரின் தாக்குதலில் காயமடைந்த மீனவர்கள்

நேற்று பகல் 3 மணி அளவில் இந்திய கடல் பகுதியில் சென்னையில் இருந்து வந்த கடலோர காவல் படைக்கு சொந்தமான ராணி அபாக்கா என்ற கப்பலில் இருந்த வீரர்கள் ஜெபமாலைபிச்சையின் படகினை நிறுத்துமாறு கூறியுள்ளனர். மீனவர்கள் கடலில் பாய்ச்சியிருந்த வலைகளை எடுப்பதற்காக படகை நிறுதாமல் சென்றதால் ஆத்திரம் அடைந்த கடலோர காவல் படையினர் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் மீனவர் அந்தோணிபிச்சையின் இடது முழங்கையில் குண்டு பாய்ந்து வெளியேறி சென்றது. மற்றொரு மீனவரான ஜான்சனின் கைகளிலும் குண்டு காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் கப்பலில் இருந்து சிறிய படகில் வந்த கடலோர காவல் படை வீரர்கள் மீனவர்களின் படகில் ஏறி அதிலிருந்த மீனவர்களை தலை கீழாக நிற்க வைத்து துணிகள் சுற்றிய இரும்பு கம்பிகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு மீனவர்கள் தமிழில் பதில் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் இந்தியில் பேச சொல்லியும், தாக்குதல் பற்றி செய்தியாளர்களிடம் ஏன் சொன்னீர்கள்? என கேட்டும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை என்ற பெயரில் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இதன் பின் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இருட்டி விட்டதால் மீண்டும் பிரச்சனை ஏதும் வரக் கூடும் என கருதி கடலிலேயே இரவு முழுவதும் இருந்து விட்டு இன்று காலை கரைக்கு திரும்பினர். இதையடுத்து காயம் அடைந்த மீனவர்கள் இருவரும் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 

 

 

இந்திய மீனவர்களை பாதுகாக்க வேண்டிய இந்திய கடலோர காவல் படையை சேர்ந்தவர்களே மீனவர்களை சுட்டதுடன் விசாரணை என்ற பெயரில் தமிழில் பேச கூடாது என அடித்து துன்புறுத்தியிருப்பது மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://www.vikatan.com/news/tamilnadu/107715-indian-coast-guard-soldiers-attacked-fishermen-to-speak-in-hindi.html

Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: மன்னிப்புக் கேட்டது கடலோரக் காவல் படை

 

 
fisher

ராமநாதபுரம்: தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டதற்கு கடலோரக் காவல் படை மன்னிப்புக் கோரியது.

ராமநாதபுரத்தில் உள்ள மண்டபம் முகாமில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்ற மீனவப் பிரதிநிதிகளிடம், கடலோரக் காவல்படை அதிகாரிகள் மன்னிப்புக் கேட்டதாகவும், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்று கடலோரக் காவல்படையினர் கூறி வந்த நிலையில், மீனவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது மன்னிப்புக் கேட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற சம்பவம் இனி நடைபெறாது எனவும், கடலோரக் காவல்படை உறுதி அளித்துள்ளது. மேலும், மீனவர்களுடன் நட்பை ஏற்படுத்த மாதந்தோறும் ஆய்வுக் கூட்டத்தை நடத்தவும் கடலோரக் காவல்படை முடிவு செய்துள்ளது.

கடலோரக் காவல்படை மன்னிப்புக் கேட்டாலும், திட்டமிட்டபடி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பேச்சுவார்த்தையில் பங்கேற்ற மீனவப் பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.
 

சம்பவத்தின் பின்னணி: 
ராமேசுவரம் மீனவர்கள் மீது இந்தியக் கடலோர காவல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், தங்களை ஹிந்தியில் பேசச்சொல்லி தாக்கியதாக கரை திரும்பிய மீனவர்கள் செவ்வாய்க்கிழமை புகார் தெரிவித்தனர்.

இன்று வேலைநிறுத்தம்: ராமேசுவரம் மீனவர்கள் மீது இந்தியக் கடலோர காவல் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டை கண்டித்து, ராமேசுவரம் துறைமுகத்தில் அனைத்து மீனவ சங்கக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

அதில், தூப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடலோர காவல் படையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்வதுடன், கைது நடவடிக்கை எடுக்க வேண்டும், இச்சம்பவத்தைக் கண்டித்து புதன்கிழமை அடையாள வேலைநிறுத்தப் போராட்டமும், அதனையடுத்து வியாழக்கிழமை ராமேசுவரம் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

கொலை வழக்குப் பதிவு: முன்னதாக, மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது தொடர்பாக, இந்தியக் கடலோர காவல் படை மீது, மண்டபம் கடலோர காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் காவல் துறையினர் கொலை முயற்சி, காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

http://www.dinamani.com/tamilnadu/2017/nov/15/மீனவர்கள்-மீது-துப்பாக்கிச்-சூடு-மன்னிப்புக்-கேட்டது-கடலோரக்-காவல்-படை-2808464.html

Share this post


Link to post
Share on other sites

தமிழருக்கு எங்கும் பாதுகாப்பில்லை.

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, nunavilan said:

தமிழருக்கு எங்கும் பாதுகாப்பில்லை.

சோரம் போன தமிழர்களுக்கு எங்கும் மரியாதையும் பாதுகாப்பும் அந்தஸ்தும் இருக்கும். இதை கண்கூடாக பார்க்கலாம்.
தமிழ்...தனித்தமிழ் என்று கூட்டம்,கொண்டாட்டங்களில் சொல்லிப்பாருங்கள்.... எம்மவர்களே நாய்க்கும் மதிக்க மாட்டார்கள்.

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this