Jump to content

7.3 ரிச்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் : 140 பேர் பலி, 1000 ற்கும் மேற்பட்டோர் காயம்


Recommended Posts

7.3 ரிச்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் : 140 பேர் பலி, 1000 ற்கும் மேற்பட்டோர் காயம்

 

 

ஈரான்-ஈராக் எல்லையில் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்குண்டு 140 உயிரிழந்துள்ள நிலையில் 1000 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

wire-1711028-1510535720-847_634x475.jpg

ஈரான் - ஈராக் எல்லையிலுள்ள ஹலாப்ஜா நகருக்கு அண்மையில் இன்று அதிகாலை 7.3 ரிச்டர் அளவிலான மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் இருந்து 350 கிலோ மீற்றர் தொலைவில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

wire-1711026-1510535718-39_634x476.jpg

இந்நிலநடுக்கத்தால் பாரிய கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இந்த இடிபாடுகளில் சிக்கி சுமார் 140 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1000 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

4647995800000578-5075297-image-a-65_1510

எனினும் இறந்தவர்களின் எண்ணிக்கை உயர்வடையும் சாத்தியங்கள் உள்ளதாக செய்திகய் தெரிவிக்கின்றன.

4647850000000578-5075297-image-m-63_1510

சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கமானது பாகிஸ்தான், ஈரான், குவைத், டுபாய், இஸ்ரேல் ஆகிய நாடுகளையும் அதிரவைத்துள்ளது. 

4647239700000578-5075297-image-a-28_1510

கடந்த 2003 ஆம் ஆண்டு ஈரானில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுமார் 26,000 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

464735F700000578-5075297-image-a-36_1510

46479F0C00000578-5075297-image-m-69_1510

46479B2800000578-5075297-image-m-71_1510

46479AD800000578-5075297-image-a-64_1510

4647B24300000578-5075297-image-a-72_1510

4647B23500000578-5075297-image-a-73_1510

4647B11300000578-5075297-image-a-56_1510

4647B0FB00000578-5075297-image-a-55_1510

http://www.virakesari.lk/article/26962

Link to comment
Share on other sites

இரான்-இராக் நிலநடுக்கத்தில் 400-க்கும் மேற்பட்டோர் பலி; ஆயிரக்கணக்கானோர் காயம்

இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இரான் மேற்கு மாகாணமான கெர்மான்ஷா பகுதியைச் சேர்ந்தவர்கள்.படத்தின் காப்புரிமைREUTERS/TASNIM NEWS AGENCY

இரான்-இராக் எல்லையின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளார்கள்.

அளவுகோலில் 7.3-ஆக பதிவாகி உள்ளது.

இரானை சேர்ந்த உதவி நிறுவனம் ஒன்று, 70,000 மக்களுக்கு தங்குமிடம் தேவைப்படுவதாக கூறியுள்ளது.

இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இரான் மேற்கு மாகாணமான கெர்மான்ஷா பகுதியை சேர்ந்தவர்கள்.

அந்தப் பகுதியில் மட்டும் 6,603 பேர் காயமடைந்துள்ளார்கள்.

இராக் தலைநகரம் பாக்தாத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதும் மக்கள் வீதிக்கு ஓடிவந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஈராக்கில் இறந்தவர்கள் ஏழு பேர்.

இந்தப் பகுதியில் உள்ள பள்ளிவாசல்கள் தொடர்ந்து பிரார்தனைகளை ஒலிப்பெருக்கி மூலம் ஒலிப்பரப்பி வருகிறது.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய பாக்தாத்தில் வசிக்கும், மூன்று குழந்தைகளுக்கு அம்மாவான மஜிதா அமீர், "நான் என் குழந்தைகளுடன் அமர்ந்து இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டு இருந்தேன். அந்தச் சமயத்தில், எங்களுடைய கட்டடம் காற்றில் ஆடத் தொடங்கியது" என்கிறார்.

மேலும், "நான் முதலில் சக்திவாய்ந்த வெடிகுண்டு காரணமாக கட்டடம் ஆடுகிறது என்று நினைத்தேன். ஆனால், சிறிது நேரத்தில் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் 'நிலநடுக்கம்' என்று கத்துவதை கேட்டேன்." என்று அப்போது நடந்த காட்சிகளை விளக்குகிறார் அவர்.

ஈரான் - ஈராக் எல்லையின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 348 பேர் உயிரிழந்துள்ளனர்.

அவசரகால அதிகாரி ஒருவர், ஈரானில் மட்டும் 3,950 பேர் காயமடைந்திருக்கிறார்கள் என்று தெரிவித்ததாக இர்னா செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரான் எல்லையிலிருந்து 15 கி.மீ தொலைவில் இருக்கும் சர்பொல்-ஏ-ஜகாப் நகரத்தில்தான் பலர் இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதாக, இரான் அவசரகால சேவையகத்தின் அதிகாரி பிர் ஹுசைன் கோலிவண்ட் கூறியதாக இரானிய அரசு தொலைக்காட்சி நிறுவனமான இரின்னில் செய்தி வெளியிட்டுள்ளது.

நகரத்தின் முக்கிய மருத்துவமனை, இந்த நிலநடுக்கத்தால் மோசமாக சேதமடைந்துள்ளது. இதனால், காயமடைந்த பல நூறு பேருக்கு அங்கு சிகிச்சை அளிக்க அந்த மருத்துவமனை சிரமப்படுவதாக, ஈரான் அரசு தொலைக்காட்சி கூறுகிறது.

ஒரு நிமிடத்திற்கு மேலாக:

இந்த நிலநடுக்கம் ஒரு நிமிடத்திற்கு மேல் நீடித்ததாக, இர்பில்லில் வசிக்கும் பிபிசியின் செய்தியாளர் ரமி ருஹாயெம் கூறுகிறார்.

"முதல் சில நொடிகளுக்கு எங்களால் இது என்ன என்று உணரமுடியவில்லை. இது மிதமான நிலநடுக்கம்தானா அல்லது கனவா...? என்ற குழப்பத்தில் இருந்தேன். ஆனால், சிறிது நேரத்தில் கட்டடம் கொஞ்சம் கொஞ்சமாக ஆடத் தொடங்கியது." என்கிறார்.

துருக்கி, இஸ்ரேல், குவைத் ஆகிய நாடுகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டு இருக்கிறது.

http://www.bbc.com/tamil/global-41968186

Link to comment
Share on other sites

ஈரான் நிலநடுக்கம்; பலியானோர் எண்ணிக்கை 450க் கடந்தது
 

image_cb17bb1af1.jpgஈரான் - ஈராக் எல்லைக்கு அண்மையில், இலங்கை நேரப்படி நேற்று முன்தினம் பின்னிரவு 11:48 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, குறைந்தது 450 பேர், ஈரானில் பலியானதோடு, 7,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால், ஈராக்கில் 6 பேர் உயிரிழந்தனர்.

ஈராக்கின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள குர்திஷ்தான் பிராந்தியத்தில் உள்ள, சுலைமனியா நகரத்தின் ஹலப்ஜா பகுதிக்கு அண்மையாக, இந்த நிலநடுக்கம் தாக்கியது என, ஐக்கிய அமெரிக்க நில அளவாய்த்துறை தெரிவித்தது.

7.3 றிக்டர் அளவில் இது தாக்கியது என, அத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஈராக்கிய அதிகாரிகள் இதை, 6.5 றிக்டர் எனக் குறிப்பிட்டனர். குறைந்தது 14 மாகாணங்கள், ஈரானில் பாதிக்கப்பட்டுள்ளன என அறிவிக்கப்படுகிறது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகள், மலைப்பாங்கான இடங்களாக இருப்பதால், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளோரை மீட்பதற்கான பணிகள், சிக்கலை எதிர்கொண்டுள்ளன என அறிவிக்கப்படுகிறது. இன்னும் ஏராளமானோர் இவ்வாறு சிக்கிக் கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் சில, மிகத்தொலைவான கிராமப் பகுதிகளாக இருக்கும் நிலையில், மீட்புப் பணியாளர்கள் தாமதமாகியே அனுப்பப்பட்டனர். எனவே, உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமென, உள்ளூர் அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக, ஈரானின் கேர்மன்ஷோ பகுதியிலுள்ள சர்போல்-ஈ ஸஹாப் பகுதி காணப்படுகிறது. இங்கு, 236க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இப்பகுதி, ஈராக்கிய எல்லைக்கு 15 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, மண்சரிவுகளும் ஏற்பட்ட நிலையில், மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் தாக்கிய அநேகமான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, நிலநடுக்கத்துக்குப் பின்னர் ஏற்படும் அதிர்வுகள் ஏற்படுமென்ற அச்சம் காணப்படுகிறது.

ஈரானிய அதிகாரிகளின் தகவலின்படி, அவ்வாறான குறைந்தது 118 அதிர்வுகள் பதிவாகியுள்ளன எனவும், இன்னும் ஏற்படுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் அறிவிக்கப்படுகிறது.

ஈரானிய செஞ்சிலுவைச் சங்கத்தின் அதிகாரியொருவர் கருத்துத் தெரிவிக்கும் போது, 70,000க்கும் மேற்பட்டோர், தற்காலிகக் கூடாரங்களில் காணப்படுகின்றனர் எனத் தெரிவித்தார்.

ஈராக்கின் குர்திஷ்தான் பிராந்தியத்தில், 6 பேர் கொல்லப்பட்டனர் எனத் தெரிவித்த சுகாதார அதிகாரிகள், குறைந்தது 68 பேர் காயமடைந்தனர் எனத் தெரிவித்தனர்.

அதிகமாகப் பாதிக்கப்பட்ட பகுதியாக, அப்பிராந்தியத்தின் டர்பன்டிகாம் மாவட்டம் அமைந்தது. இது, ஈரானிய எல்லைக்கு அருகில் காணப்படுகிறது. இங்கு, குறைந்தது 10 வீடுகள் இடிந்து வீழ்ந்ததோடு, அங்கு காணப்பட்ட ஒரேயொரு வைத்தியசாலையும், பலத்த சேதமடைந்தது.

ஈரானின் சோக வரலாறு

நிலநடுக்கம் அதிகமாக ஏற்படக்கூடிய எல்லைப் பகுதியில் ஈரான் அமைந்துள்ளதால், நிலநடுக்கங்கள் அதிகமாக ஏற்படக்கூடிய துரதிர்ஷ்டத்தை, அந்நாடு கொண்டுள்ளது.

ஈரானின் தலைநகர் தெஹ்ரானுக்கு 1,000 கிலோமீற்றர் தென்கிழக்காக உள்ள வரலாற்றுப் புகழ்மிக்க பாம் நகரத்தில், 2003ஆம் ஆண்டு டிசெம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட 6.6 றிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக, 31,000 பேர் உயிரிழந்திருந்தனர். இந்த நிலநடுக்கம், 1900ஆம் ஆண்டுக்குப் பின்னர் பதிவாக, அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய நிலநடுக்கங்களில் 8ஆவது நிலநடுக்கமாகும்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/ஈரான்-நிலநடுக்கம்-பலியானோர்-எண்ணிக்கை-450க்-கடந்தது/175-207121

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.