Jump to content

விவேக் குவித்த சொத்துகள்; மலைத்து போன வருமான வரித்துறை..!


Recommended Posts

விவேக் குவித்த சொத்துகள்; மலைத்து போன வருமான வரித்துறை..!

 

சிகலாவின் அண்ணி இளவரசியின் மகன் விவேக் குவித்துள்ள சொத்துகள்; கறுப்புப்பணம் வெள்ளையாக்கப்பட்டது போன்றவை குறித்து சோதனையில் ஈடுபட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திகைத்துப்போனதாகக் கூறப்படுகிறது.

விவேக்

 

விவேக்கின் அலுவலகம் மற்றும் வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் வளாகத்தில் உள்ள ஜாஸ் சினிமாஸ் வளாகத்தில் அதிகாரிகள் நடத்திவரும் சோதனையின்போது, தோண்டத்தோண்ட சொத்துகள் வாங்கிக் குவித்துள்ள விவரங்கள்; பினாமிகளின் பட்டியல் கிடைத்துள்ளன. அதை வைத்துக்கொண்டு விவேக்கிடம் கடந்த இரண்டு நாள்களாக துருவித்துருவி வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சசிகலாவின் அண்ணன் ஜெயராமன் - இளவரசி தம்பதியின் மகன் விவேக். மன்னார்குடி வகையறாக்களில் சில ஆண்டுகளிலேயே பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபர் என்று இவர் தன் 25 வயதிலேயே உச்சஸ்தானத்திற்கு சென்றார். 2015-ம் ஆண்டு வேளச்சேரி பீனிக்ஸ் மால் வணிக வளாகத்தில் உள்ள 11 தியேட்டர்களை ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் கையகப்படுத்தியது. அப்போதே இதுபற்றி தி.மு.க தலைவர் கருணாநிதி பல கேள்விகளை எழுப்பி அறிக்கை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில், ''இந்த சொத்துக்களை வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டவர்கள், ஏற்கனவே லஞ்ச ஊழல் வழக்கில் தண்டனை பெற்றுள்ள நிலையில், இந்தப் புதிய சொத்துக்குவிப்பு குறித்து என்ன பதில் என்று நாடே எதிர்பார்க்கிறது'' என கேள்வி எழுப்பியிருந்தார்.

விவேக் சசிகலா

‘அந்தத் தியேட்டர்களை ஆயிரம் கோடி ரூபாய்க்கு விவேக் வாங்கி விட்டார்' என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால், அந்தத் தியேட்டர்களை விலைகொடுத்து வாங்கவில்லை; ஐந்தாண்டுகளுக்கு குத்தகைக்கு மட்டுமே அவர் எடுத்துள்ளதாக அறிக்கைகள் வெளியாகின. இந்தத் தியேட்டர்கள் மட்டுமல்லாது விவேக்கின் கட்டுப்பாட்டில் மொத்தம் 136 தியேட்டர்கள் உள்ளதாகவும் புகார் எழுந்தது. இதுபற்றியெல்லாம் வருமான வரித்துறைக்கு புகார்கள் சென்றன. மேலும், ஜாஸ் சினிமா என்ற நிறுவனம் பல முன்னணி நடிகர்களின் படத்தை விநியோகித்துள்ளது. தமிழ் திரைத்துரையில் ஜாஸ் சினிமா முக்கிய நிறுவனமாக உள்ளது. திரைப்பட விநியோகத்தில் நடந்த போலியான பரிவர்த்தனைகள் குறித்தும் வருமான வரித்துறைக்கு புகார் சென்று இருந்தது.

இப்போது நடக்கும் வருமான வரித்துறை சோதனையில் ஜாஸ் சினிமா, 136 திரையரங்குகள் பற்றி எல்லாம் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். 'ஐந்தாண்டுக்கு பீனிக்ஸ் சிட்டியில் தியேட்டர்களை குத்தகைக்கு எடுக்க விவேக்கிற்கு பணம் எப்படி வந்தது? அவரின் வியாபாரக் கூட்டாளிகள் யார்?' என்று அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு விவேக், 'லக்ஸ் திரையரங்கத்தில் உள்ள புரஜக்டர், ஃபர்னிச்சர், ஏர் கண்டிஷனர்கள் போன்றவற்றை அடமானம் வைத்து 42.50 கோடி ரூபாய் கடன் வாங்கித்தான், அந்த தியேட்டர்களை குத்தகைக்கு வாங்கினேன்' என்று சொல்லி இருக்கிறார். வங்கியில் கடன் வாங்கியது குறித்த ஆவணங்களையும் காட்டி இருக்கிறார். இந்தப் பதிலை கேட்டவுடன் வருமான வரித்துறை அதிகாரிகள் சிரித்துவிட்டார்களாம். வேளச்சேரி பீனிக்ஸ் மால்  தியேட்டர்களின் வியாபார மதிப்பு என்ன? என்று கணக்குப் போட்டுக்காட்டி இருக்கிறார் வருமான வரித்துறை அதிகாரி ஒருவர்.

வேளச்சேரியில் உள்ள தியேட்டர்கள் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் வெள்ளையாக்கப்பட்டிருப்பது வருமான வரித்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், பினாமிகள் பெயரில் வாங்கிக் குவிக்கப்பட்டுள்ள சொத்துகளின் பட்டியலும், வருமான வரித்துறையின் சோதனையில் சிக்கியிருக்கிறது.

ஜாஸ்

மேலும், விவேக்கின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்திய சோதனையில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் குறித்த விவரங்கள் கிடைத்துள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. '2015-ம் ஆண்டே இந்த ஜாஸ் சினிமாஸ் பிரச்னை எழுந்தது. எதிர்க்கட்சிகள் அப்போதே இப்பிரச்னையை எழுப்பி அறிக்கைகள் வெளியிட்டன. ஆனால், அப்போது மௌனமாக இருந்த வருமான வரித்துறை மற்றும் மத்திய புலனாய்வுத்துறை இப்போது சுறுசுறுப்படைந்திருப்பது ஏன்?-' என்று விவேக்கிற்கு நெருக்கமானவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

பல மாதங்களாக கண்காணித்து ஆய்வு செய்த பின்னர், தகவல்களை சேகரித்துதான் தற்போது கறுப்புப் பண மீட்பு சோதனையில் ஈடுபட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் சொல்கிறார்கள்.

 

எப்படியோ, வரி ஏய்ப்பு மற்றம் கறுப்புப் பணம் வைத்திருப்போருக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுத்தால் சரி....!

http://www.vikatan.com/news/coverstory/107426-sasikalas-niece-viveks-house-and-properties-has-been-raided-by-income-tax-department-for-the-second-day.html

Link to comment
Share on other sites

விவேக்கை வளைக்கும் 'அந்த' 3 லாக்கர்கள்!  - ஜாஸ் சினிமாஸ் ஊழியர்களோடு கைகோத்த ஐ.டி 

 

ஜெயா டி.வி

Chennai: 

சிகலா உறவினர்களை மையப்படுத்தி இரண்டாவது நாளாக நீடிக்கும் வருமான வரித்துறை சோதனை, மன்னார்குடி குடும்ப உறவுகளை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. ' விவேக்கின் மாமனார் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணமும் ஜாஸ் சினிமாஸ் அலுவலகத்தில் உள்ள லாக்கர்களும் விவேக் ஜெயராமனுக்குக் கூடுதல் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது' என்கின்றனர் வருமான வரித்துறை வட்டாரத்தில். 

 

சென்னை நுங்கம்பாக்கம், ஆயக்கர் பவனில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் கடந்த சில நாள்களாக வழக்கத்துக்கு மாறான சுறுசுறுப்புடன் வலம் வந்து கொண்டிருந்தனர் அதிகாரிகள். ' இந்தமுறை எந்த இடத்தை நோக்கி தேடுதல் வேட்டை நடக்கப் போகிறது?' என்பதை மிகுந்த ரகசியமாகவே வைத்திருந்தார்கள். வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவின் இயக்குநர் ஜெனரல், இயக்குநர், கூடுதல் இயக்குநர்கள் என நான்கு பேர் மட்டுமே, நாள்தோறும் கூடிப் பேசியுள்ளனர். தேடுதலுக்கான நாள் குறித்தவுடன், 'எவ்வளவு செலவீனம்?' என்ற விவரங்களைப் பட்டியலிட்டு, வழக்கமாகச் செல்லும் டிராவல் வாகனங்களைத் தவிர்த்துள்ளனர். வேறு ஒரு நிறுவனத்திலிருந்து கார்களை வரவழைத்துள்ளனர். சென்னை, கோவை, நீலகிரி, தஞ்சை, நாகை, பாண்டிசேரி என சசிகலா குடும்ப உறவுகளின் வியாபாரம் நீளும் இடங்களை எல்லாம் துருவி ஆராய்ந்துள்ளனர். தினகரன் தரப்பில் இந்தச் சோதனைகளைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதேநேரம், ஜெயா டி.வி சி.இ.ஓ விவேக் ஜெயராமன் தரப்பில் சற்று கவலையில் ஆழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர் கார்டன் நிர்வாகிகள். 

விவேக் ஜெயராமன்" சசிகலா அண்ணன் ஜெயராமனின் மனைவி இளவரசியின் வாரிசுகளைக் குறிவைத்துத்தான் இந்த ரெய்டு நீண்டு கொண்டிருக்கிறது. விவேக் ஜெயராமன், கிருஷ்ணபிரியா, ஷகிலா ஆகியோரது வீடுகளில் இன்னும் தேடுதல் வேட்டை முடியவில்லை. சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுதலையாகி, கார்டன் வந்த நேரத்தில்தான் ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார் விவேக். இந்த நிறுவனத்துக்காக பிரபல தியேட்டர்கள் மிரட்டி வாங்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. தி.மு.க தலைவர் கருணாநிதி, விவேக்கின் பெயரைக் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆட்சியிலிருந்து ஜெயலலிதா ஆசியுடன் இந்தத் தியேட்டர்கள் வாங்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. நேற்று வேளச்சேரியில் உள்ள ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்துக்கு அதிகாரிகள் வந்தபோது, விவேக் தரப்பில் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அங்கிருந்த மூன்று லாக்கர்களைத் திறக்க முடியாமல் அதிகாரிகள் திணறியுள்ளனர்.

அப்போது அங்கிருந்த வருமான வரித்துறை அதிகாரி ஒருவர், ஜாஸ் சினிமாஸில் வேலை பார்க்கும் மூன்று உதவியாளர்கள் பெயரைக் கூறியிருக்கிறார். ' அவர்களை அழைத்து விசாரியுங்கள். உடனே திறந்துவிடலாம்' எனக் கூற, விவேக் தரப்பில் அதிர்ந்து போய்விட்டனர். பின்னர் அங்கு சேகரிக்கப்பட்ட ஆவணங்களைப் பற்றி மகாலிங்கபுரத்தில் உள்ள விவேக்கின் வீட்டில் இருந்த அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறி, சரிபார்த்துள்ளனர். இந்த ஆவண சரிபார்ப்பு நடவடிக்கையை அதிர்ச்சியோடு கவனித்தார் விவேக். ' இன்று மாலைக்குள் ரெய்டை நடத்திவிட்டுக் கிளம்பிவிடுவார்கள்' என்றுதான் நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். இரண்டாவது நாளாக, விவேக்கின் வர்த்தகத் தொடர்புகளை அதிகாரிகள் துருவிக் கொண்டிருப்பதை சரியான ஒன்றாக அவர் பார்க்கவில்லை. ரெய்டு முடிவில், விவேக் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் பரவியுள்ளது" என விவரித்த கார்டன் நிர்வாகி ஒருவர், 

ஜாஸ் சினிமாஸ்

" விவேக் தரப்புக்குக் கூடுதல் தலைவலியைக் கொடுத்திருக்கிறது அவரது மாமனாரும் பர்னிச்சர் தொழிலில் கோலோச்சி வரும் பாஸ்கர் வீட்டில் நடந்து வரும் சோதனைகள். அவர் வீட்டிலிருந்து 2 கோடிக்கும் அதிகமான பணமும் தங்க, வைர நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து கேட்டபோது, ' ஐந்து நாள்களுக்கு முன்புதான் பாஸ்கரின் தம்பி மகன் திருமணம் நடந்தது. அதற்காக வந்த பணம், நகை' எனக் கூறியும் அதிகாரிகள் கேட்கவில்லை. ' இது மொய்ப்பணம்தான்' எனக் கூறி தப்பித்துவிடலாம். ஆனால், ' இந்தப் பணம், நகைகளைக் காட்சிப்படுத்தினால் பெரும் அவமானமாகிப் போய்விடும்' எனக் கருதுகிறார் விவேக். ரெய்டு நடவடிக்கையின்போது அவரிடம் பேசிய வருமான வரித்துறை அதிகாரி ஒருவர், ' சோதனை சம்பந்தமாக மீடியாக்களிடம் பேசக் கூடாது. எந்த அறிக்கையும் வெளியிடக் கூடாது' என அறிவுறுத்தியிருக்கிறார். இதில், இளவரசியின் மகள்கள் கிருஷ்ணபிரியா, ஷகிலா வீடுகளில் பெரிதாக ஒன்றும் சிக்கவில்லை. திவாகரனின் பண்ணை வீடு, தினகரன் ஆதரவாளர்களின் வர்த்தகத் தொடர்புகள், கோவை, நீலகிரியில் உள்ள சொத்துகள், மன்னார்குடியில் வாங்கிக் குவிக்கப்பட்ட நிலங்கள், ஜாஸ் சினிமாஸ், ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆர், மிடாஸ் சாராய ஆலை என சசிகலா குடும்பத்தின் கைகளில் நிறைந்திருக்கும் அனைத்து வர்த்தக நிறுவனங்களிலும் சல்லடை போட்டு சலித்துக் கொண்டிருக்கின்றனர். இன்று மாலை 5 மணிக்குள் ரெய்டு முடியும் என நம்பிக்கொண்டிருக்கிறார் விவேக் ஜெயராமன்" என்றார் விரிவாக. 

 

" மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் நேரடி வரிகள் வாரியத்தின் கண்காணிப்பின்கீழ் சோதனை நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இது நேற்று திட்டமிடப்பட்ட ஒன்று அல்ல. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கிவிட்டது புலனாய்வுப் பிரிவு. ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட காலங்களில், சசிகலா குடும்பத்தினரின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் தென்பட்டது. அந்தநேரத்தில்தான், எங்கள் கண்காணிப்பு தீவிரமடைந்தது. கார்டனில் இருந்து கொண்டு செல்லப்பட்ட சொத்து ஆவணங்கள், நகைகள் உள்ளிட்டவை எங்கு சென்றன என்பதை நாங்கள் அறிவோம். சசிகலா தரப்பினரின் ஒவ்வொரு பரிவர்த்தனைகளையும் தீவிரமாகக் கண்காணித்து வந்தோம். நீண்டநாள் உழைப்பின் பலனை அறுவடை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் நேற்று முகூர்த்தம் குறித்தோம். ஆய்வில் கிடைத்த தகவல்களை உரிய நேரத்தில் தெரியப்படுத்துவோம்" என்கிறார் வருமான வரித்துறை அதிகாரி ஒருவர். 

http://www.vikatan.com/news/tamilnadu/107388-it-join-hands-with-employees-of-jazz-cinemas-to-trap-vivek.html?artfrm=related_article

Link to comment
Share on other sites

சரிதான்.. வருமான வரித்துறை நித்தாவில் இருந்தபோது இந்த விவேக் எல்லாம் பண்ணிட்டார். இப்போ நான் எப்பிடி கர்ப்பம் தரித்தேன் எண்டு வருமானவரித்துறை தேடுது.. tw_anguished: tw_love:

Link to comment
Share on other sites

'ஆபரேஷன் சசிகலா ஃபேமிலி!' முடிவுக்குவருகிறதா சசிகலா சாம்ராஜ்ஜியம்?!

 

சசிகலா

டெங்கு, மழை என அடுத்தடுத்து தமிழகத்தைப் புரட்டிப்போட்ட சமூகப் பிரச்னைகளை 9-ம் தேதி அதிகாலை முதல் பின்னுக்குத்தள்ளிவிட்டது, வருமான வரித்துறையினர் ரெய்டு.  வருமான வரித்துறை ரெய்டு என்பது தமிழகத்திற்கு புதிதல்ல. ஆனால்,  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தொடர்பான இடங்களில் இரண்டு நாளாகத் தொடரும் ரெய்டு, ஆச்சர்யமும் அதிர்ச்சியுமானது. ஆம்,  2000 அதிகாரிகள் 189 இடங்கள் என்பது தமிழகத்துக்கு மட்டுமல்ல; வருமான வரித்துறைக்கும் இதுதான் முதல்முறை என்கிறார்கள்.

 

'தமிழக அரசியலில் கடந்த ஒரு வருடமாக நடந்துவரும் விஷயங்கள், ஒரு பரபரப்பு சினிமாவுக்கே உரிய அம்சங்கள். விறுவிறுப்பான  இந்தப் படத்தின் இறுதிக் காட்சியாகத்தான் இப்போது சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் புகுந்திருக்கிறது வருமானவரித்துறை எனக் கூறுகின்றனர். ரெய்டுமூலம் சசிகலா குடும்பத்தினர் மீதான தாக்குதலின் முக்கிய கட்டத்தை பா.ஜ.க எட்டியுள்ளது என்கிறார்கள், அரசியல் நோக்கர்கள்.

சசிகலா குடும்பத்தை ஏன் குறிவைக்கிறது டெல்லி மேலிடம்..? கொஞ்சம் ஃப்ளாஷ்பேக் போவோம்....

ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் பொறுப்பேற்று ஜெயலலிதா என்ற ஆளுமையின் இடத்தை இட்டுநிரப்புபவராக ஒரே நாளில் அவதாரம் எடுத்தார் சசிகலா.  

கட்சியின் சூத்ரதாரியாக இருப்பார் எனக் கருதப்பட்ட அவர், பொதுச்செயலாளராக ஆனது வரை பிரச்னை இல்லை. முதல்வராகும் ஆசை முளைத்தபோதுதான் பிரச்னைகளும் முளைத்தன. ஜெயலலிதாவின் தோழி என்ற முறையில், அவரைப்பற்றி மத்திய அரசுக்குச் சென்ற தகவல்கள் அவ்வளவாக ரசிக்கும்படி இல்லை. அதனால், கட்சிப்பொறுப்போடு அவரது ஆசையைக் கட்டுப்படுத்திக்கொள்ளும்படி டெல்லி மேலிடம் சொன்னது என்கிறார்கள். ஆனால், தான் முதல்வராவதில் உறுதியாக நின்றார் சசிகலா. சசிகலாவின் முதல்வர் ஆசைக்கு ஓ.பி.எஸ் பலி கொடுக்கப்பட்டார். முதல்வர் கனவு இத்தனை சீக்கிரம் கலைந்துபோனதில் அதிருப்தி அடைந்த அவர், ஜெயலிதாவின் சமாதியில் தியானத்தில் அமர்ந்தார். அதனால், அ.தி.மு.க இரு அணிகளாக உடைய நேர்ந்தது.

சசிகலா

ஓ.பன்னீர்செல்வத்தின் தனி ஆர்வத்தனத்துக்குப் பின்னணியாக பா.ஜ.க இருந்ததாக வெளிப்படையாகப் பேசப்பட்ட அதேநேரம், ஓ.பி.எஸ் அணிக்கு எம்.எல்.ஏ-க்கள் எம்.பி-க்கள் தாவ ஆரம்பித்தனர். எம்.எல்.ஏ-க்கள் தங்கள் அணியிலிருந்து கழன்றுகொண்டிருக்கும் விபரீதத்தை உணர்ந்து, கூவத்துாரில் அவர்களைக் குடிவைத்தார் சசிகலா.

பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தை தூசுதட்டி வைத்துவிட்டு, கவர்னர் அலுவலகம் நோக்கி  கூவத்துாரிலிருந்து அவரும் அவரது அணியின் எம்.எல்.ஏ-க்களும் படையெடுத்துச் சென்றும் பலன் ஒன்றுமில்லை. சட்டப்படி தனக்குள்ள போதிய ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் பட்டியலை நேரில்  தந்தும் மத்திய அரசிடமிருந்து சாதகமான பதில் கிடைக்காததால், கவர்னர் அந்த மனுக்களைக் கிடப்பில் போட்டார். பதவியேற்க சசிகலாவுக்கு அழைப்பு விடுக்காத கவர்னர் மீது வழக்குப் போடலாம் என  பா.ஜ.க-வின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி ஆதரவுக் குரல்கொடுத்தும் கவர்னர் அசைந்துகொடுக்கவில்லை. 

ஆத்திரம் அதிகமான ஒருநாளில், 'எதற்கும் ஒரு எல்லை இருக்கிறது' என சசிகலா குரலை உயர்த்திப்பேச, அன்றுதான் அவருக்குப் பிரச்னை எழத் துவங்கியது. இரண்டொரு நாளில் சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீடு மீதான தீர்ப்பு வரும் என அறிவித்தது உச்ச நீதிமன்றம். 

சொன்னபடியே தீர்ப்பு வந்தது. அ.தி.மு.க-வின் தலைமைப்பொறுப்பில் தன் குடும்பம் வரக்கூடாது என்பதில் மத்திய அரசு காட்டும் முனைப்பைப் புரிந்துகொண்டு, முன்னைவிடவும் ஆவேசமாக ஜெயலலிதாவின் சமாதியில் சாபம் விட்டபடி சிறைக்குப் போனார் சசிகலா. முன்னதாக, அக்கா மகன் டி.டி.வி தினகரனை துணைப் பொதுச்செயலாராகவும், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் சட்டமன்றக்குழு தலைவராக எடப்பாடி பழனிசாமியையும் அறிவித்தார். சிகலா சிறை சென்ற பிறகு, எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவி ஏற்றார்.

ஜெயலலிதாவின் மறைவினால், ஆர்.கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட, இரு அணிகளும் களத்தில் இறங்கின. சசிகலா ஓ.பி.எஸ்-க்கு தந்த அதிர்ச்சியைப்போன்று தினகரன், 'நான்தான் ஆர்.கே நகர் வேட்பாளர்' என அறிவித்து எடப்பாடிக்கு கிலி கொடுத்தார். ஆனாலும், ஆர்.கே. நகரில் பிரசாரம் செய்தார் முதல்வர்.  இரட்டை இலை சின்னத்தை தமக்கு ஒதுக்கும்படி ஓ.பி.எஸ் அணியும், தமக்குத்தான் ஒதுக்க வேண்டும் என்று சசிகலா அணியும் கேட்க, அ.தி.மு.க-வின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.  

எடப்பாடி பழனிசாமி

இரு அணிகளுக்கும் புதிய நாமகரணத்தைச் சூட்டி, ஆளுக்கொரு சின்னத்தை அளித்தது தேர்தல் ஆணையம்.  ஓ.பி.எஸ் அணிக்கு இரட்டை மின்விளக்கு அளிக்கப்பட்டது, தினகரனுக்கு தொப்பியைக் கொடுத்தது தேர்தல் ஆணையம். ஓ.பி.எஸ் அணிக்கு  இரட்டை இலையை நினைவுபடுத்தும் இரட்டை மின்விளக்கு சின்னத்தை அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. பா.ஜ.க இந்தப் பிளவின்  பின்னணியாக இருப்பது பட்டவர்த்தனமாகத் தெரிவதாக அரசியல் விமர்சகர்கள் கூறினர். எப்படியும் வெற்றிபெற்றே தீர வேண்டும் என்ற நோக்கத்தில், தினகரன் அணியினர் பண்ணத்தை வாரி இறைத்தனர். அதனால், தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன்பு, இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்துசெய்தது. 

அடுத்த சில நாட்களில், இரட்டை இலையை மீட்க தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் கைது செய்யப்பட்டார். தினகரன் சிறையில் இருந்த நாட்களில், ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இரு அணிகளும் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் வெளிப்படையாகத் தெரியத்துவங்கின. 

இந்தக் காலகட்டத்தில், எடப்பாடி அணி கொஞ்சம் கொஞ்சமாக தினகரன் எதிர்ப்பு அணியாக மாறத்துவங்கியது. இதன் பின்னணியிலும் பா.ஜ.க இருப்பதாகச் சொல்லப்பட்டது. இரு அணிகளின் தலைவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிவந்த அதேவேளை, தினகரனுக்கு எதிராக வெளிப்படையான போரைத் துவக்கியது பழனிசாமி தரப்பு. 

ஓ.பி.எஸ் -இ.பி.எஸ் இருவரும் ஒரேநாளில் தனித்தனியே மோடியை சந்தித்துப் பேசினர். அடுத்த சில நாட்களில், ஓ,பி.எஸ் அணியின் 2 கோரிக்கைகைளை அவசர அவசரமாக எடப்பாடி தரப்பு ஒப்புக்கொள்ள,  இரு அணிகளும் இணைந்தன. ஓ.பி.எஸ் துணை முதல்வரானார். அரசியலமைப்பை கேலிக்குரியதாக்கும் வகையில் ஓ.பி.எஸ் துணை முதல்வராக பதவியேற்றபோது, அவரது கையை எடப்பாடியின் கையோடு இணைத்துவைத்து 'வெற்றிப்புன்னகை' புரிந்தார் கவர்னர் வித்யாசாகர் ராவ். ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் இருவரும் சசிகலா குடும்பத்தினரை எதிர்த்து அரசியல் செய்துவந்த வேளையில்தான் இப்போது அதரடி ரெய்டு அரங்கேறியிருக்கிறது. 

சசிகலா

சசிகலா குடும்பம் வளைக்கப்படக் காரணம் என்ன..?

இதுபற்றி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், தமிழக அரசியல் களத்தை உற்று நோக்கிவரும் ஒருவரிடம் பேசினோம். பெயர் குறிப்பிட விரும்பாத அவர், ' சசிகலா  முதல்வர் ஆவதைக்கெடுத்தது முதல் இன்றைக்கு நடந்துவரும் ரெய்டு வரை முழுக்கமுழுக்க பா.ஜ.க-வின் கடைக்கண் பார்வையில்தான் நடக்கிறது. முழுக்கமுழுக்க சசிகலா குடும்பத்தினரை குறிவைத்தே நடத்தப்படும் இந்த வருமான வரித்துறை ரெய்டு, பா.ஜ.க தமிழகத்தில் காலுான்றுவதற்கான 'ஆபரேஷன் சசிகலா ஃபேமிலி' என்றுதான் சொல்ல வேண்டும். திராவிட அரசியலில் ஊறிய தமிழகத்தில், கடந்த காலத்தில் மக்கள் அபிமானம் பெற்ற தலைவர்கள் தலைமை வகித்தும்கூட தேசிய கட்சியான காங்கிரஸ்,  மீண்டும் ஆட்சிக்கு வரமுடியவில்லை. திராவிடக் கட்சிகளைச் சார்ந்தே தேர்தலை எதிர்நோக்கவேண்டியிருந்தது.  இந்த நிலையில்தான்  தமிழகத்தின் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதி உடல்நலம் குன்றினார். ஜெயலலிதா மறைந்தார்.

தமிழகத்தின் அரசியல் களத்தில் ஏற்பட்ட இந்த வெற்றிடத்தை இட்டு நிரப்ப, மத்திய ஆட்சி அதிகாரத்தில் உள்ள பா.ஜ.க பயன்படுத்திக்கொள்ள நினைத்தது. கடந்த காலத்தில் திராவிடக்கட்சிகளுடன் கூட்டு வைத்தாலும், பா.ஜ.க-வின் வாக்குவங்கி என்பது தமிழகத்தில் குறைந்த அளவில்தான் இருக்கிறது. இதனால்தான், மோடி தமிழகத்தில் காலூன்ற இது சரியான தருணம் எனக் காய் நகர்த்தத் துவங்கினார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க உடைந்து சிதறும் என கணக்குப் போட்டது டெல்லி மேலிடம். இந்த வெற்றிடத்தை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு, தமிழகத்தில் வலுவுடன் காலுான்ற நினைத்தது பா.ஜ.க. ஆனால், சசிகலா வெற்றிகரமாக அதன் தலைமைப் பதவிக்கு வந்ததுடன், ஜெயலலிதா போன்று கட்சியின் பெரும்பான்மை நிர்வாகிகளால் கொண்டாடப்பட்டதில் ஏமாற்றமடைந்தது. இதன்பின்னரே, சசிகலாவுக்கு எதிராக காய்நகர்த்தலைத் தொடங்கியது டெல்லி மேலிடம். 

ஜெயலலிதா காலத்திலேயே  கட்சியில் மறைமுகமான தலைமையாக இருந்த சசிகலா  மற்றும் அவரது குடும்பத்தினர், எதிர்காலத்தில்  அ.தி.மு.க-வை வலுவாக வைத்துக்கொள்வார்கள் என்ற  தகவல்களை உளவுத்துறைமூலம் திரட்டிய டெல்லித் தலைமை, இப்படி ஓர் குடும்பம் அ.தி.மு.க-வில் தலையெடுப்பது தங்கள் நோக்கத்திற்கு இடையூறாக இருக்கும் எனக் கருதியது. முதல்வர் பொறுப்பேற்ற தினம், சசிகலாவின் காலில் விழுந்து ஆசிபெற்ற ஓ.பி.எஸ், ஒன்றரை மாதத்தில் அந்தக் குடும்பம் கட்சியிலிருந்து வெளியேற வேண்டும் என கலகக்குரல்  எழுப்பி வெளியேறியதன் பின்னணி இதுவே என்கிறார்கள். 

தினகரன்

ஆனால், எதிர்பார்த்தபடி ஓ.பி.எஸ் அணிக்கு எம்.எல்.ஏ-க்கள் வராததில் ஏமாற்றமடைந்த பா.ஜ.க, ஆர்.கே நகர் தேர்தல் ரத்து, இரட்டை இலை முடக்கம்,  தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் தினகரன் கைது என அடுத்தடுத்து தன் அதிரடிகளைத் தொடர்ந்தது என்கிறார்கள். இந்த நேரத்தில், தினகரனுடன் முரண்பட்ட எடப்பாடி பழனிசாமி, அவருக்கு எதிராகச் செயல்பட ஆரம்பித்தார். தினகரனுக்கு எதிராக வெளிப்படையாக அரசியல் செய்யத் துவங்கிய பின்னர், தங்கள் பாதுகாப்புக்காக மத்திய அரசுடன் கூடுதல் இணக்கம்காட்டியது எடப்பாடி தரப்பு. 

ஆர்.கே நகர் தேர்தல் மற்றும் அடுத்தடுத்து தேர்தல் கமிஷனில் தினகரனுக்கு ஆதரவாகக் குவிந்த ஆவணங்கள், தமிழகம் முழுவதும் வியாபித்திருக்கும் அவர்களது ஆதிக்கம் போன்றவை, சசிகலா குடும்பத்தின் ஆளுமையை மேலிடத்துக்கு  இன்னும் ஒரு முறை அழுத்தமாக உணர்த்தியது.  அதன்பின்னரே இரு அணிகளையும் இணைத்து, சசிகலாவுக்கு எதிராக தன் அடுத்த ஆட்டத்தைத் துவக்கியது பா.ஜ.க. அ.தி.மு. க-வின் ஆயுளைக் கூட்டும் அதிகார பலமும் பொருளாதார பலமும்கொண்ட ஒரு குடும்பம் உயிர்ப்போடு அரசியலில் இருப்பது  தமிழக பா.ஜ.க-வின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்பதாலேயே உச்சகட்டமாக, சசிகலா குடும்பத்தினரின் பொருளாதார சக்திமீது  பா.ஜ.க இப்போது தன் போரைத் துவக்கியிருக்கிறது என்கிறார்கள்.

இந்த ரெய்டு  சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள், நெருங்கிய வட்டத்தைச் சேர்ந்தவர்களை அவர் மற்றும் தினகரனிடமிருந்து தள்ளிவைக்கும் முயற்சி. ரெய்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தொடுக்கப்படும் வழக்குகளில், ரெய்டுக்கு ஆளானவர்கள் இனி சட்டரீதியாகப் போராடவேண்டியநிலை ஏற்படும், எனவே, அரசியலில் கவனம் செலுத்தாமல்போகலாம் அல்லது முற்றாக, அரசியல் களத்திலிருந்து ஒதுங்கிவிடலாம் எனக் கணக்குப்போடுகிறது பா.ஜ.க. சசிகலா குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களது ஆதிக்கம் அ.தி.மு.க-விலிருந்தும் அரசியலிலிருந்தும் முற்றாக நகர்த்தப்பட்ட பின், தமிழக அரசியலில் தீவிர கவனம் எடுப்பது மோடியின் திட்டம்.  இந்தச் சுமுகமான சூழல் உருவாவதற்குத்தான் தமிழகத்தில் உள்ளாட்சித்தேர்தல் தள்ளிப்போடப்பட்டிருக்கிறது.  அநேகமாக பிப்ரவரி மாதத்துக்குள் தன் ஆபரேஷனை முடிக்கத் திட்டமிட்டுள்ளது பா.ஜ.க. அதன்பிறகே உள்ளாட்சித்தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளிவரும்.

கருணாநிதி

பா.ஜ.க-வின் ஆபரேஷனின் முதற்பகுதி இது. உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் தேர்தல் உடன்பாடு கண்டு, உள்ளாட்சியில் கணிசமான இடங்களைக் கைப்பற்றி, தமிழகத்தில் கட்சி வலுவாக காலுான்றிய பின், அது அ.தி.மு.க-வில் மற்றுமொரு ஆபரேஷனைத் துவக்கலாம்” என அதிர்ச்சியாக முடித்தவர், “அதேசமயம் தமிழகத்தில் வலுவாகக் காலுான்றும் இந்த முயற்சியில் தி.மு.க பெரிய அளவில் டஃப் கொடுப்பதாக இருக்கக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையாகத்தான், சாதுர்யமாக கருணாநிதியைப் பார்க்கும் விசிட்டை வைத்துக்கொண்டார் மோடி. தி.மு.க-வுடன் பா.ஜ.க நெருங்குவதைப்போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினால், தி.மு.க-வுடன் தோழமையுடன் உள்ள பா.ஜ.க-வுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட கட்சிகள் தி.மு.க-விடமிருந்து தீண்டாமையைக் கடைபிடிக்கும்.  அதனால், தி.மு.க  அடுத்த தேர்தலில் தனிமைப்படுத்தப்பட்டுவிடும் என்பதுதான் அவரது கணக்கு” என்றார். 

பா.ஜ.க-வின் இந்த ரெய்டுகுறித்து அ.தி.மு.க எம்.பி., மைத்ரேயனிடம் பேசினோம்..” அ.தி.மு.க ரெய்டு என்பது அரசியல் நோக்கம் கொண்டது என்பதே அபத்தம்.  2000-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், 180-க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர்ந்து இரண்டு நாள்கள் ரெய்டு என்பது தமிழகத்துக்குப் புதியது. இத்தகையதொரு ஏற்பாட்டை வருமான வரித்துறை ஓரிருநாளில் திட்டமிட முடியாது. இரு மாதங்களுக்கு முன்பே இது திட்டமிடப்பட்டது.  தகுந்த ஆவணங்கள் இன்றி வருமான வரித்துறை இப்படி ஒரு செயலில் இறங்க முடியாது. வருமான வரித்துறையின் செயலை அரசியலா, இல்லையா என்பதைவிட, சரியா தவறா என்று பார்க்க வேண்டும். சசிகலா தினகரன் குடும்பத்தினர் பற்றி தமிழகத்தில் அனைவருக்கும் நன்கு தெரியும். கடந்த காலத்தில் அவர்கள் மீதான வழக்குகள்குறித்தும் மக்கள் நன்கு அறிவார்கள். அதனால், இது முற்றிலும் அரசியல் காரணங்களுக்காகச் செய்யப்படவில்லை. ஆவணங்களின் அடிப்படையில் நடக்கும் ஒன்று” என முடித்தார். 

 

'ஆஃப் கி பார் மோடி சர்க்கார்' என தமிழகச் சுவர்களில் எழுதும் நாள் வெகுதொலைவில் இல்லை போல!

http://www.vikatan.com/news/tamilnadu/107443-bjps-operation-sasikala-familyis-it-final-operation-for-sasikala-family.html

Link to comment
Share on other sites

 தோண்ட,தோண்ட,வெளிப்படும்,,'மெகா' மோசடி.. பூதம்!

சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவர்களது நண்பர்களின் வீடுகள், அலுவலகங்களில் நடந்து வரும், வருமான வரித்துறை சோதனையில், தோண்ட தோண்ட வெளிப்படும் பூதமாக, 'மெகா' மோசடிகள் அம்பலமாகி வருகின்றன. இரண்டாவது நாளாக, 100 இடங்களில் நீடித்த சோதனையில், இதுவரை, 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான,பினாமி சொத்து பத்திரங்கள் மற்றும் முறைகேடான முதலீட்டு ஆவணங்கள் சிக்கியுள்ளன. ஒட்டுமொத்த தமிழகத்தையும், சசி குடும்பம் கபளீகரம் செய்த பின்னணி விவகாரங்கள், விசாரணையில் வெளிவர துவங்கி உள்ளன.

 

 தோண்ட,தோண்ட,வெளிப்படும்,,'மெகா' மோசடி.. பூதம்!

இதற்கிடையில், மூன்றாவது நாளாக, இன்றும் சளைக்காமல் சல்லடை போட, வருமான வரித்துறை முடிவு செய்துள்ளதால், பொறியில் மாட்டிய எலி போல, மன்னார்குடி கும்பல் கதி கலங்கி நிற்கிறது.

ஜெயலலிதாவின் தோழியாவதற்கு முன், 'வீடியோ கேசட்' விற்பனை செய்த சசிகலா; போக வேண்டிய இடங்களுக்கு, பொடி நடையாக சென்று வந்த தினகரன், ஒரு சில ஆண்டுகளில், மதுபான ஆலை, தேயிலை எஸ்டேட், சினிமா கம்பெனி, 'டிவி' நிறுவனம் என, பெரும் பண முதலைகளாக உருவெடுத்துள்ளனர். அதன் பலனாக, தமிழகத்தின் பல பகுதிகளில், நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும், சசிகலா குடும்பத்தினர், சொந்தக்காரர்களாகி உள்ளனர்.
 

ஆட்டம்


ஜெ., முதல்வராக இருந்ததால், அவரது நிழலில், இதுவரை தப்பித்து வந்தனர். ஜெ., மறைந்ததாலும், சசிகலா சிறைக்கு சென்றதாலும், அவரது குடும்பத்தினரின் ஆட்டம் சரியத் துவங்கியது. இந்த நேரம் பார்த்து, ஆட்சியும், கட்சியும், தங்களை கை கழுவியதால், சொத்துக்களையும், தங்களையும் பாதுகாத்துக் கொள்ள, ஆதரவாளர் கூட்டத்தை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கினர்.

இதற்கிடையில், வருமான வரித்துறை வளையத்தில், தங்கள் குடும்பம் சிக்கி இருப்பதை உணர்ந்த சசி குடும்பம், இரட்டை இலையை, லஞ்சம் கொடுத்தாவது பெற்று, இழந்த அரசியல் செல்வாக்கை பெற, காய் நகர்த்தியது. அதிலும் வழக்கு வரவே, தினகரன் சிக்கலில் மாட்டினார்.இந்த சூழலில், அவர்கள்

பயந்தபடியே, வருமான வரித்துறையினர், நேற்று முன்தினம், சசி சொந்தங்களை சல்லடை போடத் துவங்கினர்.
 

அதிரடி


சென்னையில் தினகரன், நடராஜன், விவேக், கிருஷ்ணபிரியா வீடுகள், ஜெயா, 'டிவி' மற்றும் 'நமது எம்.ஜி.ஆர்.,' அலுவலகங்கள் மற்றும் வேளச்சேரி, 'பீனிக்ஸ் மாலில்' உள்ள, 'ஜாஸ் சினிமாஸ்' மற்றும், 'மிடாஸ்' மதுபான ஆலை உள்ளிட்ட, 111 இடங்களில், அதிகாரிகள் படை, அதிரடியாக புகுந்தது.மேலும், மன்னார்குடியில் திவாகரன், தஞ்சையில் நடராஜன் வீடு, நீலகிரியில் கோடநாடு எஸ்டேட், குன்னுார் கர்சன் எஸ்டேட், புதுச்சேரியில் லட்சுமி நகைக்கடை, தினகரன் பண்ணைத் தோட்டம் மற்றும் பெங்களூரு, ஐதராபாத், டில்லி என, மொத்தம், 187 இடங்களில் சோதனை நடந்தது.

அதில், 900 அதிகாரிகள் ஈடுபட்டனர். இரண்டாவது நாளான, நேற்று காலை, 140 இடங்களில் சோதனை நீடித்தது; மாலையில், 100 இடங்களாக குறைந்தது. அதில், முறை கேடான பரிவர்த்தனைகள் நடந்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன.

இது குறித்து, தமிழக வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

சசிகலா, இளவரசி உள்ளிட்டோரின் போலி நிறுவனங்களை, மத்திய கம்பெனி விவகார அமைச்சகம் முடக்கியுள்ளது. மேலும், சில போலி நிறுவனங்களையும், அவர்கள் நடத்தி வந்துள்ளனர். அந்த, 10 போலி நிறுவனங்கள் தொடர்பான சோதனையில், முறைகேடான பணப் பரிவர்த்தனை ஆவணங்கள் சிக்கி உள்ளன.இதேபோல், பல கோடி ரூபாய்க்கு, தமிழகத்தின் பல பகுதிகளில், வாங்கி குவிக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களும் சிக்கின. தற்போது, ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ஆவணங்களின் மதிப்பு, 1,000 கோடி ரூபாய் மதிப்புடையவை.

இது தவிர, நாளை, 70க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை தொடர்கிறது. அந்த சோதனைகள் முடிந்த பின் தான், அனைத்து ஆவணங்களையும் சரிபார்க்க வேண்டும். அதன் பிறகே, வரி ஏய்ப்பு மற்றும் முறைகேடான வங்கி பரிவர்த்தனை, போலி நிறுவனங்கள் மூலம் நடந்த முறைகேடுகளின் முழு அளவு தெரிய வரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
 

தினகரன், 'கப்சிப்!'


தன் உற்றார், உறவினர் வீடுகளில் சோதனை நடப்பது தெரிந்ததும், தினகரன், நேற்று
முன்தினம் கொதித்து எழுந்தார். 'இதற்கு காரணமானவர்களை, சும்மா விட மாட்டேன்' என, கொக்கரித்தார்.வரித்துறை சோதனையில், கிருஷ்ணபிரியா, பாஸ்கரன், திவாகரன்

 

போன்றவர்களுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து, கத்தை கத்தையாக முறைகேடான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட தகவல், நேற்று அவருக்கு தெரிய வந்தது. அதனால், நேற்று தினகரன் வாய் திறக்காமல் அமைதியானார்.அதேபோல், தேனி மாவட்டம், கம்பத்தில் உள்ள, தங்கதமிழ்ச்செல்வன் உதவியாளர் வீட்டிலும், நேற்று வரித்துறை சோதனை நடந்தது; அதனால், தினகரன் ஆதரவாளான அவரும், நேற்று வாயை மூடினார்.
 

எத்தனை பேர்?


வருமான வரித்துறை வரலாற்றில், ஒரு குடும்பத்தை மையமாக வைத்து நடந்த, மிகப்பெரிய சோதனையாக, சசி கும்பல் மீதான நடவடிக்கை கருதப்படுகிறது. 187 இடங்களில் சோதனை நடந்ததால், ஒரு இடத்திற்கு, 10 பேர் என, உத்தேசமாக கணக்கிட்டு, 1,800 அதிகாரிகள், சோதனைக்கு சென்றதாக தகவல் வெளியானது. 'அது, தவறான தகவல்; முதல் நாள் சோதனையில், 1,000க்கும் குறைவான அலுவலர்கள் தான் ஈடுபடுத்தப்பட்டனர்' என, வரித்துறையினர் தெரிவித்தனர்.
 

கசிந்தது ரகசியம்!


முன்னாள் தலைமை செயலர், ராமமோகன ராவ் வீட்டில் சோதனைக்கு போன போது, மத்திய படையுடன் சென்ற வரித்துறையினர், தமிழகம் முழுவதும், நேற்று சோதனை நடத்துவதற்கு, போலீஸ் பாதுகாப்பை தான் நாடினர்.மத்திய அரசுக்கு கடிதம் எழுதி, தமிழ்நாடு முழுவதும் நடக்கும் சோதனைக்கு, தேவையான மத்திய வீரர்களை பெறுவதற்கு, கால அவகாசம் கிடைக்காததால், தமிழக போலீசாரின் உதவியை நாடினர்.

இது தொடர்பாக, தமிழக டி.ஜி.பி.,யுடன் பேசி, பாதுகாப்பு கேட்டுள்ளனர். அப்போது, 'ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும்' என்று, வரித்துறை கூறியுள்ளது. ஆனாலும், எப்படியோ, தினகரன் தரப்புக்கு ரகசியம் கசிந்துள்ளது. சில இடங் களில், போலீசார் முறையாக ஒத்துழைக்க வில்லை என்கின்றனர், வரித்துறையினர்.
 

மன்னார்குடி ஜாதகம்!


சசிகலாவின் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், வேலையாட்கள் என, ஒருவர் விடாமல், மன்னார்குடி கும்பலின் முழு ஜாதகத்தையும், வருமான வரித்துறையினர் கையில் வைத்தபடி, சோதனை நடத்தி வருகின்றனர். தமிழக போலீசாருக்கு கூட, இவ்வளவு தகவல்கள் தெரியுமா என, வியக்கும் அளவுக்கு, சசி சொந்தபந்தங்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களை, வரித் துறையினர் சல்லடை போட்டு தேடி வரு கின்றனர். இதற்கு, அ.தி.மு.க.,வில், சில முக்கிய புள்ளிகள் உதவியதாக தெரிகிறது.

- நமது சிறப்பு நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1893929

Link to comment
Share on other sites

அலர்ட் ஐ.டி... அசால்ட் தினகரன்!

 
 

 

நான்கு மாநிலங்கள்... ஆறு மாவட்டங்கள்... 187 இடங்கள்... 1,850 அதிகாரிகள்... 350 கார்கள்... ஆவேசமாகப் போர் தொடுப்பதுபோல, சசிகலா குடும்பத்தினர்மீது மெகா ரெய்டை நடத்தியுள்ளது வருமான வரித் துறை. இந்த ரெய்டு சுனாமியில், சசிகலா குடும்பத்தினரின் தொழில் கூட்டாளிகள், வழக்கறிஞர்கள், ஆடிட்டர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் சுருட்டி அள்ளப்பட்டுள்ளனர்.

2016 ஏப்ரலில் கரூர் அன்புநாதன் வீட்டில் தொடங்கிய ரெய்டு நத்தம் விசுவநாதன், சேகர் ரெட்டி, ராம மோகன ராவ், அமைச்சர் விஜயபாஸ்கர் வரை வந்து நின்றது.  இப்படி நடந்த ரெய்டுகள் அனைத்தும் அ.தி.மு.க-வைக் குறிவைத்து நடத்தப்பட்டவை. இதையெல்லாம் தூக்கிச்சாப்பிடும் அளவுக்குச் சூறாவளியாக இருந்தன சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் நடத்தப்பட்ட ரெய்டு. ‘‘ஒரே நேரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களைக் குறி வைத்து 187 இடங்களில் ரெய்டு நடத்தியது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை’’ என்கிறார்கள் வருமானவரித் துறையினர். 

 p2.jpg

எடப்பாடியின் ரகசியக் கூட்டம்!

பிப்ரவரி 14-ம் தேதி, சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்ற நிமிடத்திலிருந்து, சசிகலாவின் உறவினர்களைக் கட்சியிலிருந்தும், அரசியலிலிருந்தும் ஓரம்கட்ட வேலைகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இந்தநேரத்தில், சசிகலா உறவுக் குடும்பங்களின் பணப் பரிவர்த்தனைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன. குறிப்பாக, ஜெயா தொலைக்காட்சி, நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் ஆகியவற்றுடன் பணப் பரிவர்த்தனை வைத்துள்ள நிறுவனங்கள் கண்காணிக்கப்பட்டன. சசிகலா குடும்பத்துடன் நெருக்கமானவர்கள், கடந்த ஆறு மாதங்களாகக் கண்காணிப்பில் இருந்தனர்.

பிரதமர் மோடி, நவம்பர் 6-ம் தேதி சென்னை வந்துசென்றார். அதற்கு மறுநாள், 7-ம் தேதி இரவு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், சில சீனியர் அமைச்சர்களும், சென்னையில் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவின் மகளுக்குச் சொந்தமான ரிசார்ட் அருகில் ரகசியச் சந்திப்பு ஒன்றை நடத்தினர். பிறகு இரண்டு நாள்களில் நூல்பிடித்ததுபோல் ரெய்டு நடைபெற்றுள்ளது.

ஓ.பி.எஸ் ஆதரவாளரின் நிறுவன கார்கள்!

தமிழகத்தில் நடத்தப்பட்ட ரெய்டுகளுக்கு, ‘ஃபாஸ்ட் டிராக்’ நிறுவனத்தின் 350 கார்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த நிறுவனம், ரெட்சன் அம்பிகாபதி என்பவருக்குச் சொந்தமானது.  முன்பு ம.தி.மு.க-வில் இருந்தவர் இப்போது ஓ.பி.எஸ் அணியில் இருக்கிறார். இவரிடம் சொல்லி, ரெய்டுக்காக 350 கார்கள் மொத்தமாக புக் செய்யப்பட்டன. முதல்நாள் இரவே கார்கள், குறிப்பிட்ட ‘பாயின்ட்’களில் நிறுத்தப்பட்டன. ‘ஸ்ரீனி வெட்ஸ் மகி’ என்று திருமண ஸ்டிக்கர்கள் காரில் ஒட்டப்பட்டன. “ஏதோ பெரிய வீட்டுக் கல்யாணம் போல...” என டிரைவர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். மறுநாள் காலை அதிகாரிகளுடன், சம்பந்தப்பட்ட ஸ்பாட்களுக்குப் போனபிறகுதான், அவர்களுக்கே விஷயம் தெரிந்தது.

p2a.jpg

ரெய்டு சுனாமியின் சுவாரஸ்யங்கள்!

சென்னையில் ஜெயா தொலைக்காட்சி அலுவலகத்துக்கு காலை 5.30 மணிக்கு வருமானவரித் துறை அதிகாரிகள் வந்தனர். 6 மணிக்கு ஜெயா தொலைக்காட்சி எடிட்டர் கணேசன் வந்தார். அதன்பிறகு, காலை ஷிப்ட் ஊழியர்கள் வந்தனர். கேட்டை இழுத்துப் பூட்டச் சொன்ன அதிகாரிகள், ‘ஊழியர்களைத் தவிர வேறு யாரும் உள்ளே வரக்கூடாது’ என்றனர். அதுபோல், வெளியில் செல்ல யாரையும் அனுமதிக்கவில்லை. மொத்தமாக அந்த அலுவலகத்தைப் புரட்டிப்போட்டுச் சோதனை நடத்தினர். ‘செய்திகளில் ரெய்டு பற்றிய பேட்டிகள், விவாதம், நிருபர்களின் நேரடி ரிப்போர்ட் ஒளிபரப்பக்கூடாது’ என்று தடைவிதித்தனர். இதற்குக் கண்டனம் எழுந்ததால், மாலை 5 மணிக்குப் பிறகு, செய்திகளை ஒளிபரப்பிக்கொள்ள அனுமதி கொடுத்தனர். ஊழியர்கள் இரண்டு பேர் வீட்டிலும் ரெய்டு நடைபெற்றது.  

‘நமது எம்.ஜி.ஆர்’ அலுவலகத்துக்குச் சென்ற வருமானவரித் துறையினர், இரவுப் பணியில் இருந்த ஊழியர்களைக்கூட வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. தினகரனின் அடையாறு இல்லத்தில் ரெய்டு நடக்கவில்லை. அதனால், கோ பூஜை நடத்துவதும் பேட்டி கொடுப்பதுமாக கூலாக இருந்தார் தினகரன்.

நடராசன் மாயம்! 

இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியாவின் வீடு, மகன் விவேக் ஜெயராமன் வீடு, அண்ணா நகரில் உள்ள விவேக்கின் மாமனார் கட்டை பாஸ்கரன் வீடு, நீலாங்கரை மற்றும் தி.நகரில் உள்ள டாக்டர் சிவக்குமார்-பிரபாவதி வீடு, அடையாறில் உள்ள ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் வீடு, மிடாஸ் மோகன் வீடு, நீலாங்கரையில் உள்ள பாஸ்கரன் வீடு, டாக்டர் வெங்கடேஷ் வீடு, சௌகார்பேட்டை மற்றும் தி.நகரில் உள்ள மூன்று நகைக்கடைகள், படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலை, வேளச்சேரி ஜாஸ் சினிமாஸ் ஆகிய இடங்களில் ரெய்டுகள் நடைபெற்றன.

பெசன்ட் நகர் கபிலர் தெருவில் சசிகலாவின் கணவர் நடராசன் வீடு உள்ளது. அதற்குப் பின்னால், அவருடைய தம்பி ராமச்சந்திரனின் வீடு உள்ளது. இந்த இரண்டு இடங்களிலும் ரெய்டு நடத்தவில்லை. மாறாக, தஞ்சையில் உள்ள நடராசனின் வீட்டில் சோதனை நடத்தினர். இத்தனை பரபரப்புகளுக்கு மத்தியில் நடராசன் எங்கிருக்கிறார் என்பது கடைசிவரை யாருக்கும் தெரியவில்லை.

p2b.jpg

டிஜிட்டல் லாக்கர்!

புதுச்சேரி ஆரோவில்லை அடுத்த பொம்மையார் பாளையத்தில் சுமார் ஏழு ஏக்கர் பரப்பளவில் தினகரனுக்குச் சொந்தமான பண்ணைவீடு இருக்கிறது. ஐந்து சொகுசுப் படுக்கையறைகள் கொண்ட இந்த வீட்டில், துணை ஆணையர் வீரமணி தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர், காலை ஏழு மணிக்கு அதிரடியாக நுழைந்து ரெய்டு நடத்தினர். பண்ணை வீட்டின் காவலாளி கர்ணாவைத் தனியறைக்கு அழைத்துச்சென்ற அதிகாரிகள், ‘வீட்டுக்கு யார் யார் வருவார்கள்? தினகரன் வரும்போது அவருடன் வருபவர்கள் யார்? அப்போது ஏதேனும் பணப்பரிமாற்றம் செய்யப்படுமா?’ என்பது போன்ற பல கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள். அந்த வீட்டில் இரண்டு பாதாள அறைகள் கட்டப்பட்டு, அதில் டிஜிட்டல் லாக் செட் செய்யப்பட்டிருந்தது. இந்த அறைகளைத் திறக்க அதிகாரிகள் மாலை ஐந்து மணி வரை போராடிவிட்டு, இறுதியில் தினகரனிடமே பேசி ஒத்துழைப்புக் கேட்டனர். 

உஷாரான சிவக்குமார் குடும்பம்

திருச்சி கே.கே.நகரில் டாக்டர் சிவக்குமார் வீடு உள்ளது. வருமானவரித் துறை துணை ஆணையர் கணேஷ் தலைமையிலான குழு, வீட்டுக்குச் சென்றபோது, சிவக்குமாரின் தந்தை சத்தியமூர்த்தி வீட்டைப் பூட்டிவிட்டு சென்னை சென்றிருந்தார். அதிகாரிகள் பூட்டை உடைத்துச் சோதனை நடத்த முடிவு செய்தனர். பல இடங்களில் தேடி, பூட்டை உடைக்கும் நபர் ஒருவரை அழைத்துவந்தனர். ஆனால், ‘‘வீட்டின் உரிமையாளர் இல்லாமல் பூட்டை உடைக்கமாட்டேன்’’ எனக் கறாராகக் கூற, அதிகாரிகளே பூட்டை உடைத்தனர். திருச்சி ராஜா காலனி 3-வது தெருவிலுள்ள இன்ஜினீயர் கலியபெருமாளின் வீட்டிலும் சோதனைகள் போடப்பட்டன.

கொடநாடு கொதித்தது!

ஜெயலலிதா, சசிகலாவின் கோடைவாசஸ்தலம், கொடநாடு எஸ்டேட், கர்சன் எஸ்டேட் மற்றும் இந்த இரண்டு எஸ்டேட்களின் கணக்குகள் உள்ள பாங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளை ஆகியவற்றில் ரெய்டுகள் நடந்தன. கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் விசாரணை நடத்தப்பட்டது.

கொடநாடு எஸ்டேட்டில் ஃபர்னிச்சர்கள், ரகசிய அறைகள் அமைத்துக் கொடுத்தவர், சஜீவன். இவர் நடத்திவரும் ‘நீல்கிரிஸ் ஃபர்னிச்சர்’ கடையிலும் சோதனை நடைபெற்றன. சுற்றுலாத் துறை அமைச்சராக மில்லர் இருந்தபோது, சசிகலாவின் அறிமுகம் சஜீவனுக்குக் கிடைத்தது. கடந்த சட்டசபைத் தேர்தலில், கூடலூர் தொகுதிக்கு இன்சார்ஜாகவும் இவர் நியமிக்கப்பட்டார். கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கிலும், இவர் விசாரணை வளையத்துக்குள் வந்தார்.

p2c.jpg

மன்னார்குடி கிடுகிடுங்க!

திவாகரனின் சுந்தரக்கோட்டை பண்ணை வீடு, மன்னார்குடியில் உள்ள வீடு, அங்கிருக்கும் தினகரன் வீடு உள்ளிட்ட 12 இடங்கள் வளைக்கப்பட்டன. செல்போன் வைத்துக்கொள்ளும் வழக்கம் திவாகரனுக்குக் கிடையாது. தன்னுடன் இருப்பவர்களின் செல்போன்களிலிருந்துதான் கட்சி மற்றும் ஆட்சி தொடர்பான விஷயங்களைப் பேசுவாராம். அவர்கள் அத்தனை பேரும் குறி வைக்கப்பட்டார்கள்.

அவர்களில் முக்கியமானவர் செல்வம். இவரின் அப்பாவும் திவாகரனும் நண்பர்கள். திவாகரனின் பண்ணை வீட்டிலேயே இருப்பார் செல்வம். திவாகரன் எங்கு சென்றாலும், காரின் பின்சீட்டில் இவர் இருப்பார். பின்சீட்டில் இல்லையென்றால், திவாகரனுக்கான வேலையாக எங்காவது அவர்  சென்றிருப்பார். செல்வம், ஃபிளக்ஸ் தொழில் நடத்தி வருகிறார்.

ஒருமுறை, அமைச்சர் ஆர்.காமராஜின் வார்டில் அ.தி.மு.க-வை ஜெயிக்கவிடாத தி.மு.க கவுன்சிலரான ராசுப்பிள்ளை, திவாகரனுடனான நட்பு காரணமாக ,அ.தி.மு.க-வுக்குத் தாவினார். திவாகரனுடன் இணைந்தபிறகு, அமைச்சரின் வார்டில் அவர் அ.தி.மு.க கவுன்சிலராக ஆனார். இவர், திவாகரனுக்குச் சொந்தமான ரிஷியூர் நிலங்களைக் கவனித்துவருகிறார். அதனால், ரெய்டில் சிக்கினார்.

தேனிக்காரரான சுஜெய், மன்னார்குடியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவருடைய செல்போன் எண்ணுக்கே வி.வி.ஐ.பி-க்கள் திவாகரனைத் தொடர்புகொள்வார்களாம். இவர், திவாகரனுக்குச் சொந்தமான பஸ்களைக் கவனித்து வருகிறார்.

p2e.jpg

திவாகரனின் கல்லூரி நிர்வாகத்தை முழுமையாகக் கவனித்து வருபவர், விநாயகம். இவர் வீட்டில் சோதனையிட்ட வருமானவரித் துறையினர், கல்லூரிக்கு அழைத்துவந்து ஒவ்வொரு அறையாகச் சோதனையிட்டுள்ளனர்.

திவாகரனின் தீவிர ஆதரவாளர் எஸ்.காமராஜ். இவர்தான் இப்போது தினகரன் அணியின் திருவாரூர் மாவட்டச் செயலாளர். திவாகரனுக்கு இப்போது லெஃப்ட், ரைட் இரண்டுமே இவர்தான். சென்னையிலிருந்து காமராஜ் வந்தபிறகுதான், இவர் வீட்டில் சோதனை நடத்தியிருக்கிறார்கள்.

ரெய்டில் சிக்கிய நடேசன், வேளாண்மைத் துறையில் இணை இயக்குநர் பொறுப்பிலிருந்து ஓய்வுபெற்றவர். திவாகரனுக்கு நெருக்கமான இவர், திருத்துறைப்பூண்டி தி.மு.க எம்.எல்.ஏ ஆடலரசனின் சித்தப்பா. நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். சினிமா விநியோகஸ்தர். அஜித் நடித்த ‘விவேகம்’ படத்துக்கு மத்திய மண்டல விநியோகஸ்தராக இருந்தவர். திவாகரனின் தொழில் நண்பரான இவரது வீட்டிலும் சோதனை நடந்தது.

எடப்பாடி அணியில் இருக்கும் உணவு அமைச்சர் ஆர்.காமராஜின் நெருங்கிய உறவினரான வழக்கறிஞர் உதயகுமார் வீட்டிலும், அமைச்சரின் தீவிர ஆதரவாளரான பொன் வாசுகிராமன் வீட்டிலும் சோதனை நடந்தது, லோக்கல் அ.தி.மு.க-வினரை மிரளவைத்தது.

கோவையில் குறிவைக்கப்பட்ட ஆறுமுகசாமி!

கோவையில், ஒருகாலத்தில் செல்வாக்காக வலம்வந்த சசிகலாவின் உறவினர் ராவணன் வீட்டுப்பக்கம் வருமானவரித் துறையினர் எட்டிப் பார்க்கவில்லை. இங்கு, மெயின் டார்கெட், தொழிலதிபர் ஆறுமுகசாமிதான். மணல் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்த இவரது வீடு, சிறுமுகையில் உள்ள இவருக்குச் சொந்தமான பள்ளி, கோவை ராம்நகர் மற்றும் அவிநாசி சாலையில் உள்ள செந்தில் குரூப்ஸ் அலுவலகங்கள், இவருக்குச் சொந்தமான செந்தில், குமரன் தியேட்டர்கள் என இவர் சம்பந்தப்பட்ட இடங்களில் ரெய்டுகள் நடத்தப்பட்டன.

நகைக்கடையில் சீக்ரெட் ரெய்டு!

புதுச்சேரி ஓஷன் ஸ்பிரே ஹோட்டல் உரிமையாளர் நவீன் பாலாஜிக்குச் சொந்தமான சிதம்பரம் லஷ்மி ஜுவல்லரியிலும் தினகரனின் ஜோதிடர் என்று சொல்லப்படும் கடலூர் சந்திரசேகர் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது.

தப்பாத செந்தில்!

சசிகலாவின் ஆஸ்தான வழக்கறிஞர் நாமக்கல் செந்தில். சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜரானது முதல் இவர் சசிகலா குடும்பத்துக்கு மிக நெருக்கமானார். சிறையில் சசிகலாவைச் சந்திப்பதும், பரோலில் வந்திருந்தபோது அவருடன் சட்ட ஆலோசனைகள் செய்ததும் இவர்தான். நாமக்கல், சென்னையில் உள்ள இவரது வீடுகள் மற்றும் பெங்களூருவில் செந்தில் குரூப் நிறுவனங்களில் ரெய்டுகள் நடந்தன.

பெங்களூரில் உள்ள கர்நாடக மாநில அ.தி.மு.க செயலாளர் புகழேந்தி வசிக்கிறார். கல்வி நிறுவனங்கள், ஃபர்னிச்சர் கடைகள் நடத்திவருகிறார். தினகரனின் தீவிர ஆதரவாளரான இவருடைய வீடு மற்றும் அலுவலகங்களும் தப்பவில்லை.

p2d.jpg

ரெய்டில் என்ன கிடைத்தது?

வருமானவரித் துறை அதிகாரிகள் வட்டத்தில் விசாரித்தபோது, ‘‘சில இடங்களில் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் ரெய்டுகள் நடந்தன. ரெய்டில் சிக்கிய பொருள்கள், ஆவணங்கள் மற்றும் பணத்துக்குச் சரியாகக் கணக்குக் காண்பித்துவிட்டால், எல்லாவற்றையும் திரும்பக் கொடுத்துவிடுவோம். இல்லையென்றால், உரிய துறைகள் மூலம் வழக்குத் தொடர்வோம்’’ என்றனர்.

திட்டமிட்டு ஸ்கெட்ச் போட்டு அலர்ட்டாக வருமானவரித் துறை ரெய்டு நடத்தியபோதும், எதற்கும் அசராமல் அசால்டாக இருந்தார் தினகரன்.

- ஜூ.வி டீம்
அட்டை ஓவியம் : ஹாசிப்கான்


பிரசாதத்தைத் தடுத்த போலீஸ்!

ஜெ
யா டி.வி-யின் தலைமைப் பதவியில் முன்பு இருந்த தினகரனின் மனைவி அனுராதாவுக்கு ஆன்மீகப்பற்று அதிகம். தினகரன் வீட்டுக்கு அருகில் மாடுகளை வளர்க்கும் குடும்பம் ஒன்று வசிக்கிறது. அவர்களிடம் உள்ள மாடு மற்றும் கன்றுகுட்டியை வியாழன், வெள்ளிக் கிழமைகளில் தங்கள் வீட்டுக்கு வரவழைத்து கோ பூஜையை நடத்துவது அனுராதாவின் வழக்கம். இப்படி 20 வருடங்களாக கோ பூஜை நடக்கிறது. ரெய்டு நடந்த வியாழக்கிழமை காலை பூஜை செய்ய ஆரம்பித்திருக்கிறார் அனுராதா. அப்போது, பத்து போலீஸார் சகிதம் வருமானவரித் துறை அதிகாரி ஒருவர் வீட்டுக்குள் நுழைந்தார். அவரை ஹாலில் உட்காரச் சொல்லிய அனுராதா, ‘‘பூஜையை முடித்துவிட்டு வருகிறேன்’’ என்றார். பூஜை முடிந்தவுடன் சர்க்கரைப் பொங்கலை மாட்டுக்குப் பரிமாற உதவியாளர் கொண்டுபோனபோது போலீஸார், ‘‘வீட்டிலிருந்து எந்தப் பொருளும் வெளியே போகக்கூடாது’’ எனச் சொல்லி தடுத்து நிறுத்தினார்கள். வந்த வருமானவரித் துறை அதிகாரியும் சொல்லிக்கொள்ளாமல் எஸ்கேப் ஆனார். ஆனால், போலீஸார் மட்டும் நின்றிருந்தார்கள். அவர்களைப் பார்த்து தினகரன், ‘‘என்னை ஹவுஸ் அரெஸ்ட் செய்கிறீர்களா? யாருக்குப் பாதுகாப்பாக வந்தீர்களோ.. அவர் போய்விட்டார். நீங்கள் ஏன் நிற்கிறீர்கள்?’’ எனக் கேட்க... வேறுவழியில்லாமல் போலீஸாரும் கிளம்பிப்போனார்கள்

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

சசிகலா, தினகரன் தொடர்புடைய இடங்களில் 3-வது நாளாக தொடர்கிறது வருமான வரி சோதனை: 40 இடங்களில் அதிகாரிகள் ஆய்வு

 

 
jayajpg

சசிகலா உறவினர் வீடுகள் உட்பட 40 இடங்களில் மூன்றாவது நாளாக வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

சசிகலா உறவினர் வீடுகளில் வருமானவரித் துறையினர் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) ஆபரேஷன் கிளீன் பிளாக்மணி' என்ற பெயரில் தொடங்கினர். 1800 அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த சோதனை, சென்னை, திருச்சி, தஞ்சாவூர், மன்னார்குடி உள்பட தமிழகத்தில் 187 இடங்களில் சோதனை நடைபெற்றது. 215 சொத்துகள், 350 நபர்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு சோதனை நடைபெற்றதாக வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 

இதைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும் (வெள்ளிக்கிழமை) சோதனை தொடர்ந்தது. இரண்டாவது நாளில் 40 இடங்களில் சோதனை முடிந்து, 147 இடங்களில் சோதனை தொடர்ந்தது. இதற்காக, டெல்லி, கொச்சி, ஹைதராபாத் போன்ற இடங்களிலிருந்து கூடுதல் வருமான வரித்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு இந்த சோதனை நடைபெற்றது.

இந்நிலையில் மூன்றாவது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஜெயா டிவி அலுவலகம், அதன் இயக்குநர் விவேக் ஜெயராமன் வீடு, தி.நகரில் உள்ள விவேக் ஜெயராமன் சகோதரி வீடு, திருத்துறைப்பூண்டி, புதுச்சேரியில் உள்ள நகைக்கடை உள்ளிட்ட 40 இடங்களில் தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது. மன்னார்குடியில் திவாகரனின் கல்லூரி உட்பட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த சோதனையின்போது ஆவணங்கள் ஆய்வு செய்யப்படுவதுடன், அதுகுறித்த விவரங்களை பதிவு செய்யும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://tamil.thehindu.com/tamilnadu/article20178367.ece?homepage=true

Link to comment
Share on other sites

அரசியல்வாதி என்றால் பிளாட்பாரத்தில் தான் இருக்க வேண்டுமா?- வருமான வரி சோதனைகள் குறித்து டிடிவி தினகரன் ஆவேசம்

 

 
dinakaran12jpg

செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன்

அரசியல்வாதி என்றால் பிளாட்பாரத்தில் தான் இருக்க வேண்டுமா? 1800 அதிகாரிகளை வைத்த வருமான வரித்துறை சோதனை நடத்துவது எதற்காக. இந்த சோதனைகளின் பின்னணியில் அரசின் பலம் இருக்கிறது என டிடிவி தினகரன் ஆவேசமாக பேட்டியளித்தார்.

சசிகலா உறவினர் வீடுகள் உட்பட 40 இடங்களில் மூன்றாவது நாளாக வருமான வரித்துறையினர் இன்று (சனிக்கிழமை) சோதனை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் தினகரன் கூறியதாவது:

‘‘வருமான வரி சோதனை அரசியல் உள்நோக்கத்துடன் நடைபெறுகிறது. அதிமுகவை கைபற்ற வேண்டும் என்று நினைக்கும் தற்போதைய ஆட்சியாள்களின் தூண்டுதலின் பேரில்தான் இந்த சோதனை நடைபெறுகிறது. இதுபோன்ற அச்சுறுத்தல்களை கண்டு அஞ்சமாட்டோம். தொண்டர்கள், மக்கள் என் பக்கம் உள்ளனர்.

20 ஆண்டுகளுக்கு முன் இதுபோன்ற சோதனைகள் நடந்தன. அப்போதும் நாங்கள் அஞ்சவில்லை. தற்போது நடைபெறும் வருமான வரித்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம்.

1800 அதிகாரிகளை வைத்த வருமான வரித்துறை சோதனை நடத்துகின்றனர். இதற்காக 350 கார்களை பயன்படுத்தியுள்ளனர். வருவமான வரி சோதனை நடத்தும் முறை, குறிப்பிட்ட நபர்களை குறி வைத்து நடத்தப்படும் வருமான வரி சோதனையை தான் எதிர்க்கிறோம். அதனால் தான் அரசியல் உள்நோக்கத்துடன் வருமான வரி சேதானை நடைபெறுவதாக கூறுகிறோம். இதை உறுதிபடுத்தி ஆதரவு தெரிவித்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சேகர் ரெட்டியை வளர்த்தவர்கள், பொதுப்பணித்துறைக்கு பொறுப்பு வகிப்பவர்கள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற வில்லை. ஆனால், தங்க தமிழ்ச்செல்வனின் உதவியாளர் வீட்டில் கூட வருமான வரி சோதனை நடைபெறுகிறது. 15 கிலோ தங்கமும், 5.5 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுவது தகவல் தான்.

இது கணக்கில் காட்டப்பட்ட பணமாக கூட இருக்கலாம். இதுபற்றி வருமான வரித்துறை அதிகாரபூர்வமாக அறிவித்தால் மட்டுமே தெரிய வரும். எனது பண்ணை வீட்டில் பாதாள அறை எதுவும் இல்லை. எம்பியாக இருந்து பென்ஷன் வாங்குபவரிடம் இவ்வளவு சொத்துக்களா என கேள்வி எழுப்புகின்றனர். அரசியல்வாதி என்றால் பிளாட்பாரத்தில் தான் இருக்க வேண்டுமா?

அரசியலை விட்டு எங்களை ஒதுக்க வேண்டும் நினைப்பவர்களின் சதி நிறைவேறாது. சிறிய கட்சி என்று எங்களை கேலி செய்கின்றனர். தேர்தல் வந்தால் தெரியும் எங்களின் பலம்’’ எனக் கூறினார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article20185087.ece?homepage=true

Link to comment
Share on other sites

 

‘அந்த 48 மணி நேரம்..?’ - சசிகலா குடும்பம் ரெய்டு ரிப்போர்ட்!

சென்னைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி திடீர் திருப்பமாக தி.மு.க தலைவர் கருணாநிதியைச் சந்தித்த பரபரப்பு அடங்கும் முன், அடுத்த பரபரப்புக்குத் திரி கிள்ளிவிட்டது வருமான வரித்துறை! நவம்பர் 9 ஆம் தேதி காலை 6 மணிக்கு 187 இடங்களில் தொடங்கிய சோதனையில், 40 இடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் 48 மணி நேரங்களைத் தாண்டியும் சோதனை தொடர்ந்து வருகிறது. இரண்டு நாட்களைத்தாண்டி நடக்கும் இந்தச் சோதனை தமிழக அரசியல் களத்தில், மட்டுமல்ல... தேசிய அளவிலும் மிகுந்த பரபரப்பை உருவாக்கியிருக்கிறது. ''187 இடங்கள், 1,800 அதிகாரிகள் என்று இந்தியாவிலேயே இது மிகப்பெரிய தேடுதல் வேட்டை'' என்கிறார்கள் சீனியர் வருமான வரித்துறை அதிகாரிகள்.

தினகரன்

 

ஒரே நேரத்தில், இத்தனை அதிகாரிகள் வேறு இடங்களில் ஏற்கெனவே சோதனை நடத்தியிருந்தாலும் ஒரு குடும்பத்தைச் சார்ந்தவர்களைச் சுற்றி நடைபெற்றுவரும் மெகா சோதனை இது என்பதால், நாடு முழுக்க பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது. இதுதொடர்பான விறுவிறு அரசியல் விமர்சனங்களும் எழுந்துள்ளன. சசிகலா குடும்பம், அவரது உறவினர்கள், உதவியாளர்கள், நண்பர்கள், நெருக்கமானவர்கள்,  அவர்களது நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் என்று அனைவருமே கடந்த 48 மணி நேரத்துக்கு மேல் சங்கிலித் தொடர் போல சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 'வீட்டுக் காவல்' போலவே வைக்கப்பட்டுள்ளனர்.

நவம்பர் 9 ஆம் தேதி காலை 6 மணி முதல் 11-ம் தேதி அதிகாலை 6 மணி வரையிலான 48 மணி நேர வருமான வரிச்சோதனையின் முக்கிய ஹைலைட் விஷயங்கள் இங்கே...

* சென்னை, தஞ்சை, மன்னார்குடி, திருச்சி, நாமக்கல், கோவை, கோடநாடு, புதுச்சேரி, டெல்லி உள்ளிட்ட இடங்களிலும் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு, தெலங்கானா மாநிலத்தில் ஐதராபாத் என நாடு முழுக்க மொத்தம் 187 இடங்களில் வருமான வரித்துறையின் அதிரடி சோதனை 9 ஆம் தேதி அதிகாலை 6 மணிக்குத் தொடங்கியது. டி.டி.வி.தினகரன் வீட்டுக்கு வருமானவரித்துறை சோதனை இருப்பதாக சொல்லி அதற்கான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் வருமானவரித்துறை செய்திருந்தது. ஆனால், என்ன நினைத்தார்களோ திடீரென்று 9 ஆம் தேதி அந்த முடிவை மாற்றிவிட்டார்கள். டி.டி.வி.தினகரன் வீட்டுக்குச் சென்ற வருமான வரித்துறை அதிகாரி ஒருவர், போன வேகத்திலேயே திரும்பிப் போய்விட்டார்.

ஜாஸ்

* முதல்நாளில் சுமார் 15 மணி நேரங்களில், 40 இடங்களில் தங்களது சோதனையை முடித்துக் கொண்டனர் வருமான வரித்துறையினர். 2-வது நாளாக நேற்று 147 இடங்களில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டது. டி.டி.வி தினகரனின் சகோதரர் பாஸ்கரனின் சென்னை நீலாங்கரை பங்களாவில், கணக்கில் காட்டப்படாத 7 கிலோ தங்க நகைகளும் சில ஆவணங்களும் சிக்கியதாக 2-வது நாள் சோதனை முடிவில், வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு சசிகலாவின் உறவினர்கள், தங்களிடம் இருந்த கறுப்புப் பணத்தை மாற்றுவதற்கு 60 போலி நிறுவனங்களைத் தொடங்கியிருப்பது இந்த 2 நாள் சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த நிறுவனத்தின் கணக்குகள் மூலம் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற உதவிய வங்கி அதிகாரிகள் யார் யார் என்பதும் ஆய்வு செய்யப்படுகிறது. தனியார் மற்றும் மத்திய அரசுக்குச் சொந்தமான வங்கி அதிகாரிகள் 100 பேர்வரை இதில் சிக்குவார்கள் என்கிறார்கள். போலி நிறுவனம் தொடங்க உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் பட்டியலையும் தயாரித்து வருகிறார்கள். 

விவேக் சசிகலா

* சசிகலாவின் அண்ணன் (ஜெயராமன் - இளவரசியின் தம்பதியரின் மகன்) மகன் விவேக் வீடு, அண்ணாநகரில் உள்ள விவேக்கின் மாமனார் பாஸ்கர் வீடு ஆகியவையும் இந்தச் சோதனையில் சிக்கியிருக்கிறது. 2-வது நாளாக இங்கு சோதனை நடந்தது. வீட்டில் கைப்பற்றப்பட்ட தங்க நகைகள் குறித்து  பாஸ்கரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விளக்கம் கேட்டனர். அப்போது, 'அந்த நகைகளில், 100 பவுன் கொளத்தூரில் வசிக்கும் தனது உறவினருக்குரியது என்றும் கடந்த வாரம் கொளத்தூரில் பெய்த மழையையடுத்து நகையைப் பாதுகாப்பாக வைக்க இங்கு எடுத்து வந்ததாகவும்' பாஸ்கர் கூறியுள்ளார். 'அந்த நகை சித்ரா என்பவருக்கு உரியது; அதைக் கொடுத்து விடுங்கள்' என்று திரும்பத்திரும்ப பாஸ்கர் கேட்டுக் கொண்டிருந்தார். 'முழு விசாரணை முடித்த பிறகு அதுபற்றி முடிவு எடுக்கலாம்' என்று வருமான வரித்துறை அதிகாரிகள் கூறிவிட்டனர். இதற்கிடையில், பாஸ்கர் வீட்டுக்கு வந்த சித்ரா மற்றும் அவரது உறவினர்கள், 'அந்த 100 பவுன் நகையைத் தாருங்கள்' என்று வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கேட்டனர். அவர்கள் அதுபற்றி கண்டுகொள்ளவே இல்லை. இந்தப் பிரச்னை குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் செய்தனர். ஆனாலும் அவர்கள்  ஒரு பதிலும் சொல்லவில்லை. இதனால், சோகமாக இருந்த சித்ரா மற்றும் அவரது உறவினர்கள்  வெறுங்கையோடு வீடு திரும்பினார்கள்.

* சென்னை வேளச்சேரியில் உள்ள ஜாஸ் சினிமா அலுவலகத்தில் 3-வது நாளாக சோதனை நடக்கிறது. தாம்பரம் அடுத்த படப்பை மிடாஸ் ஆலையிலும் ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டி.வி., நமது எம்.ஜி. ஆர் நாளிதழ் ஆகிய நிறுவனங்களிலும் தி.நகரில் விவேக் சகோதரி கிருஷ்ணப்பிரியா வீட்டிலும் சோதனை நீடிக்கிறது. ஜாஸ் சினிமா, மிடாஸ் ஆலை, ஜெயா  டிவி, நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் ஆகிய அனைத்தும் விவேக் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. அதாவது, இளவரசி குடும்பத்தின் கட்டுப்பாட்டில்தான் இந்த நிறுவனங்கள் அனைத்தும் இயங்கிவருகின்றன. இதுவரை இதுமாதிரியான வருமான வரித்துறை சோதனையை நேரில் எதிர்க்கொள்ளாத விவேக், கிருஷ்ணப்பிரியா, ஷகிலா ஆகியோர் இந்த இரண்டு நாள் சோதனையில், விழிபிதுங்கி நிற்கிறார்கள். வருமானவரித்துறையினரின் தொடர்ச்சியான கேள்விகளுக்குப் பதில் அளிக்கமுடியாமல் திணறிவரும் விவேக், ஒருகட்டத்தில் ரொம்பவும் சோர்ந்துவிட்டாராம்.  27-வயதில், மிகவும் குறுகிய காலத்தில் அதாவது 2015-ம் ஆண்டுக்குப் பிறகு விவேக்-கின் தொழில் வளர்ச்சி அசுரவேகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதுபோலவே இப்போது, அசுர சக்தியுடன் வருமானவரித்துறையும் சோதனையில் ஈடுபட்டுள்ளது.

Jaya_tv_12499.jpg

* இந்த ரெய்டு குறித்து டி.டி.வி.தினகரன் இன்று கூறுகையில், ''இதுபோன்ற ரெய்டுகளை 1996-ம் ஆண்டிலேயே நாங்கள் பார்த்துவிட்டோம். ஆனால், எங்களோடு பேசியவர்கள், தெரிந்தவர்கள், பழகியவர்கள் என்று குறிவைத்து இந்த ரெய்டு நடந்துள்ளது. இந்த கட்சியை காப்பாற நாங்கள் போராடுகிறோம். அம்மா வழியில் தொடர்து செயல்படுவோம். முன்னாள் எம்.எல்.ஏ தங்கதமிழ்செல்வன் உதவியாளர், பெங்களூரு புகழேந்தி ஆகியோர் விடுகளில் ரெய்டு செய்துள்ளார்கள். அதானால்தான் உள்நோக்கம் இருக்கிறது என்று நாங்கள் மட்டுமல்ல, எங்களின் எதிர்முகாமில் இருக்கும் கட்சிகள் கூட இந்த ரெய்டை கண்டித்துள்ளன. எங்களுக்கு போதிய மன வலிமை இருக்கிறது. இந்த ரெய்டு நடவடிக்கைகளை எதிர்கொள்வோம். இப்படி எல்லாம் எங்களை மிரட்ட முடியாது. இப்படியே அரசியல் இருக்காது. காலம் மாறும். தேர்தல் வரும். அப்போது யார் டெப்பாசிட் வாங்குகிறார்கள். யார் யார் எங்கே இருப்பார்கள் என்று தெரியும். அன்று எங்கள் வலிமையை காட்டுவோம். ரெய்டுக்கு எங்கள் குடும்பத்தினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். சட்டத்தை நாங்கள் மதிக்கிறோம்'' என்றார்.

 

'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும்' என்று அடிக்கடி ஜெயலலிதா சொல்வார். இப்போது, ஜெயலலிதா இல்லை. அவரோடு 33 ஆண்டுகாலம் வாழ்ந்த சசிகலா ஜெயிலில் இருக்கிறார்.  சசிகலா-வின் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் வருமான வரித்துறை சுற்றி வளைத்திருக்கிறது..!

http://www.vikatan.com/news/coverstory/107497-48-hours-it-raid-report-over-sasikalas-family.html

Link to comment
Share on other sites

வருமான வரித்துறை வலையில் சிக்கிஇருக்கும், சசிகலா கும்பல் மீதான பிடி, இறுகி வருகிறது. சோதனைக்குச் சென்ற இடங்களிலெல்லாம், நகைக் குவியல்களும், சொத்துக்கள் வாங்கி குவித்ததற்கான ஆவணங்களும், எக்கச்சக்கமாக அள்ளப்படு கின்றன. சங்கிலி தொடர் போல அடுத்தடுத்து தோண்ட வேண்டியிருப்பதால், நான்காவது நாளாக, இன்றும், 120 இடங்களில் சோதனை தொடரவுள்ளது. வங்கிப் பரிவர்த்தனைகளில் முறைகேடுகள் கண்டறியப்பட்டதாலும், போலி நிறுவனங்கள் பெயரில், வெளிநாடுகளில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதாலும்,
மத்திய அமலாக்கத் துறையும், சி.பி.ஐ.,யும், விசாரணைக்கு ஆயத்தமாகி வருகின்றன.

 

 சசி, கும்பல், மீதான, பிடி,இறுகுகிறது!

சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவருக்கு நெருக்க மானவர்கள், தமிழகத்தில், 25 ஆண்டுகளுக்கும் மேலாக, அரசு மற்றும் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அதனால், அவர்கள் நிழல் பட்டவர்கள் கூட, கடவுளின் வரம் பெற்றவர் போல, திடீர் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். சொத்துக்களின் அளவும், மதிப்பும் உயர உயர, சசிகலா குடும்பத்தில் உள்ள ஆண்கள், பெண்கள் என, அனைவரும், தொழிலதிபர் களாக வலம் வரத் துவங்கினர்.
 

சாம்ராஜ்யம்


அதற்கு ஒரே ஒரு உதாரணமாக, சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகன், விவேக்; 25
வயதிற்குள், 1,000 கோடி ரூபாய் பெறுமானமுள்ள, 11 திரையரங்குகள் உடைய, 'ஜாஸ் சினிமாஸ்' சாம்ராஜ்ஜியத்திற்கு மன்னனாக திகழ்கிறார்.இக்குடும்பத்தினர், கால் வைக்காத துறைகளே இல்லை; தொலைக் காட்சி, நாளிதழ், ரியல் எஸ்டேட், மதுபான ஆலை, காபி தோட்டங்கள், தேயிலை எஸ்டேட்கள், ஆயத்த ஆடை தயாரிப்பு, ஏற்றுமதி தொழில், சினிமா என எல்லாவற்றிலும், கோடிகளை அள்ளிக் கொட்டி கோலோச்சுகின்றனர்.

இந்நிலையில், மணல் கான்ட்ராக்டர், சேகர் ரெட்டி, அமைச்சர் விஜய பாஸ்கரை தொடர்ந்து, சசி கும்பல் குறித்த விபரங்களை, வருமான வரித்துறை திரட்டியது. தகுந்த ஆதாரங்கள் சிக்கியதும், 9ம் தேதி காலை, சென்னை, மன்னார்குடி, தஞ்சை, திருச்சி, ஈரோடு, கோவை, நெல்லை, ஈரோடு, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் டில்லி என, 200க்கும் மேற்பட்ட இடங்களில், அதிரடி சோதனையை துவங்கியது.

சென்னையில், தினகரன் வீடு, அவரது தம்பி பாஸ்கரனின், நீலாங்கரை வீடு, மகாலிங்கபுரத்தில், ஜெயா, 'டிவி' மேலாண் இயக்குனர் மற்றும் ஜாஸ் சினிமாஸ் நிர்வாகி, விவேக் வீடு, தி.நகரில் உள்ள அவரது சகோதரி, கிருஷ்ணபிரியா வீடு...அண்ணா நகரில் உள்ள விவேக் மாமனார், பாஸ்கர் வீடு, பெசன்ட் நகரில் உள்ள நடாஜன் வீடு, மயிலாப்பூரில் உள்ள அவரது சகோதரர்,
ராமச்சந்திரன் வீடு மற்றும் ஜெயா, 'டிவி' அலுவலகத்திலும், விரிவான சோதனைகள் துவங்கின.
 

போலி


மேலும், மன்னார்குடியில், திவாகரன் வீடு, தஞ்சையில் உள்ள சசிகலா அண்ணன் மகன், மகாதேவன் வீடு, நடராஜனின் உறவினர், ராஜேந்திரன் வீடு, கந்தர்வகோட்டையில் திவாகரனுக்கு சொந்தமான கல்லுாரி, கடலுார் ஜோதிடர், சந்திரசேகர் வீடு...நாமக்கல்லில், சசி வக்கீல் செந்தில், கோவை தொழில் அதிபர், ஆறுமுக சாமி, நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட், புதுச்சேரியில் உள்ள தினகரனின் பண்ணைத் தோட்டம் என, முதல் நாள் சோதனை நீண்டது.

இரண்டாவது நாள் சோதனையில், சசி குடும்பத்தினர், 10க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் பெயரில் மேற்கொண்ட, பல முறைகேடான பரிவர்த்தனைகள், பினாமி பெயர்களில் வாங்கிக் குவித்த சொத்துக்கள் என, 1,000 கோடி ரூபாய்க்கு அதிகமான ஆவணங்கள் சிக்கின. அவை தொடர்பாக, 3 வது நாளாக, நேற்றும், விவேக், கிருஷ்ணபிரியா, திவாகரன் வீடுகள், கோவை, மன்னார்குடி, தஞ்சை என, 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை தொடர்ந்தது. இதில், மேலும் பல நுாறு கோடி ரூபாய்க்கான ஆவணங்களும், பணமும் கைப்பற்றப்பட்டு உள்ளன.
 

நகை குவியல்


இச்சோதனையின், மூன்றாவது நாள் முடிவில், நேற்று பல வங்கிகளில் நடந்த முறைகேடான
பரிவர்த்தனைகள் கண்டுபிடிக்கப்பட்டன. தஞ்சை, சென்னை வங்கிகளின், 'லாக்கர்'களில் இருந்தும், பாஸ்கரன் வீட்டில் இருந்தும், தங்க நகை குவியல்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை தொடர்ந்து, இவர்களின் குடும்பத்தினர் செய்த, அதிக பரிவர்த்தனைகள் காரணமாக, 30க்கும்

மேற்பட்ட வங்கிக் கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டு உள்ளன.
 

ஆளை விழுங்கிய சுறா


ஜாஸ் ஆங்கில திரைப்படத்தில் சுறா மீன், அப்படியே ஆளை விழுங்குவதைப் போல், ஒரு பிரபல நிறுவனத்திற்கு நெருக்கடி கொடுத்து, ஜாஸ் திரையரங்க வளாகத்தை கையகப் படுத்திய தகவல், 2015ல் வெளியானது. இந்த பரிவர்த்தனை தொடர்பாகவும், வேறு சில திரையரங்குகள் வாங்கியது தொடர்பாகவும், வரித்துறையினரிடம் ஆவணங்கள் சிக்கியுள்ளன. அது குறித்து, விவேக்கிடம், வருமான வரி கூடுதல் ஆணையர், ஜெயராகவன் தலைமையிலான அதிகாரிகள், துருவி துருவி விசாரித்து வருகின்றனர். மேலும், சோதனை நடந்த வீடுகள், அவர்களது வங்கி லாக்கர்களில், கிலோ கணக்கில் தங்கம், வைர நகைகள் சிக்கியுள்ளன.

அவற்றுக்கெல்லாம் ஆவணங்களையும், வருமான ஆதாரத்தையும் கேட்டு, வரித் துறையினர் பிடியை இறுக்கி வருகின்றனர். சொத்து ஆவணங்கள், நகை முறைகேடுகள் அதிகரிப்பதால், சோதனையை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
 

120 இடங்களில் சோதனை


இது குறித்து, வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:சோதனையை ஓரிரு நாளில் முடித்து விடலாம் என, நினைத்து தான், ஆயிரம் அதிகாரிகளுடன் களத்தில் இறங்கி னோம். ஆனால், ஒரு இடத்தில் சோதனை செய்ய சென்றால், அங்கு கிடைக்கும் ஆதாரத்தை வைத்து, அடுத்த இடத்தை தோண்ட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அதனால், மேலும் பல இடங்களில் சோதனை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது சென்னையில், 60 இடங்கள் உட்பட 120 இடங்களில் சோதனை நடக்கிறது.எனவே, நாங்கள் ஏற்கனவே திட்டமிட்ட இடங்களுடன், புதுப்புது இடங்களிலும் சோதனை தொடர்கிறது. சோதனை குறித்த விபரங்களை, தினசரி மாலையில், மத்திய நேரடி வரி வாரியத்திற்கு அனுப்புகிறோம். இந்த சோதனை, நான்காவது நாளாக, நாளையும் தொடரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
 

அடுத்தடுத்து, 'ஷாக்'


இதற்கிடையில், வருமான வரித்துறை சோதனையில், சசிகலா மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள், பினாமி பெயர்களில், பல கோடி ரூபாய்க்கு, சொத்துக்கள் வாங்கி குவித்திருப்பது தெரிய வந்துள்ளதால், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையும் களமிறங்க தயாராகி வருகிறது.சசிகலா குடும்பத்தினர், பினாமி பெயர்களில், வௌிநாடுகளிலும் சொத்து வாங்கி குவித்து இருப்பது தெரிய வந்துள்ளது. அதற்காக, சட்ட விரோத பண பரிமாற்றத்திலும் ஈடுபட்டுள்ளனர். இதனால், வருமான வரித்துறையினருடன், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையும் கைகோர்க்க உள்ளன.
 

இது குறித்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது:


வரி ஏய்ப்பு செய்தவர், சட்டவிரோத பண பரிமாற்றம் மற்றும் பணம் பதுக்கல், லஞ்சப் பணத்தில் வாங்கிய சொத்துகள் குறித்து, அமலாக்கத்துறை, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். அந்த வகையில், சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்ட, சினிமா பட அதிபர், மதன், அரசு மணல் கான்ட்ராக்டர், சேகர் ரெட்டி உள்ளிட்டோரை, அமலாக்கத்துறை மற்றும், சி.பி.ஐ., கைது செய்தது. அந்த வகையில், சசிகலா மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் வீடு மற்றும் அலுவலங்களில் சிக்கிய ஆவணங்கள் குறித்தும், வௌிநாட்டு முதலீடுகள் குறித்தும் விசாரிக்க உள்ளோம். குற்றம் செய்தது தெரிய வந்தால், கைது செய்வோம். அவர்களின் சொத்துக்களையும் முடக்குவோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
 

ஜோதிடர் வீட்டில்பத்திரங்கள் சிக்கின


கடலுார், திருப்பாதிரிப்புலியூர், சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர், பிரபல ஜோதிடர் சந்திரசேகர். இவரின் வீடு மற்றும் அலுவலகம், அருகருகில் அமைந்து உள்ளன. இவர், பங்குச் சந்தை வணிகம், ஜோதிடம், நில வணிகம் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகளுக்கு மட்டும், சந்திரசேகர் ஜோதிடம் பார்ப்பார். அமைச்சர் ஒருவரின் வாயிலாக, தினகரனின் அறிமுகம் கிடைத்தது. அவர் கூறிய பல விஷயங்கள், தினகரனுக்கு பலித்ததால், ஆஸ்தான ஜோதிடராக மாறினார்.

இருவருக்கும் இடையில், பண பரிவர்த்தனைகள் இருந்தன. ஜோதிடரின் வீடு மற்றும் அலுவலகத்தில், வருமான வரித்துறை அதிகாரிகள், நேற்று மூன்றாவது நாளாக, சோதனை நடத்தினர். அப்போது, பங்குச் சந்தையில் முதலீடு செய்த, பல பத்திரங்கள் மற்றும், 'சிடி'க்களை, அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.அதில், பிரபல நகை கடை அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் சிக்குவர் என தெரிகிறது.
 

மனைவிக்கு பிறந்தநாள்:

விவேக்

 

மனைவி கீர்த்தனாவிற்கு, நேற்று பிறந்த நாள். ஆனால், அதை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. அவரை, வீட்டில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்க வில்லை. அவரது பெற்றோர் வீட்டில் சோதனை முடிந்ததால், மகளை வாழ்த்த, பெற்றோர் வந்தனர். ஆனால், கீர்த்த னாவை பார்க்க, அவர்களை அனுமதிக்க வில்லை.
 

பைக்கில் போய் சோதனை:



வருமான வரித்துறை அதிகாரிகள், முதல் இரு தினங்களில், கார்களில் சோதனைக்குச் சென்றனர். பின், சென்னை, தலைமையகத் திற்கும், சோதனை நடந்த இடத்திற்கும், அடிக்கடி செல்ல வேண்டி இருந்ததாலும், கால விரயத்தை தவிர்ப்பதற்காகவும், இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துகின்றனர்.
 

'சிடி' சிக்கியதா:


சென்னை, அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றது தொடர்பாக, 'சிடி' சிக்கியதாக தகவல் வெளியானது. அதற்காக தான் சோதனை நடந்தது என்றும் தகவல் பரவியது. அதை, வரித்துறையினர் மறுத்தனர்.
 

புகழேந்திக்கு, 'சம்மன்:


'கர்நாடக மாநில, அ.தி.மு.க., பிரமுகரான புகழேந்திக்கு, நாளை ஆஜராகும்படி, 'சம்மன்' அனுப்பியுள்ளதாக தெரிகிறது. அதேபோல், விவேக், கிருஷ்ணபிரியா ஆகியோருக்கும், சம்மன் அனுப்ப, வரித்துறை முடிவெடுத்துள்ளது.
 

நகைக்காக நாடகமா:


சென்னை, அண்ணா நகரில், விவேக்கின் மாமனார், பாஸ்கர் வீடு உள்ளது. அங்கு, ஏராளமான நகைகளை, வருமான வரித் துறையினர் பறிமுதல் செய்தனர். அவை, தன் உறவினர்களுடைய நகைகள் என, பாஸ்கர் தரப்பு விளக்கம் அளித்தது. அதற்கேற்ப, வீட்டு வாசலில், அவரது உறவுக்கார பெண்கள் கூடி, வரித்துறையினரிடம், நகைகளை தரும்படி கேட்டு, தகராறு செய்துள்ளனர். நகைக்காக, அவர்கள் நாடகம் ஆடுவதை உணர்ந்த வரித்துறையினர், அதை காதில் வாங்க மறுத்து விட்டனர்.
 

அறையை பூட்டி'சீல்' வைப்பு


நாமக்கல்லில், சசிகலா வழக்கறிஞர் உட்பட, ஐந்து பேரின் வீடு, அலுவலகங்களில், மூன்றாம் நாளாக, நேற்றும் சோதனை நடத்தினர்.ஜெ., சொத்து குவிப்பு வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் செந்தில், அவரது ஜூனியர், பாண்டியன், டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர், பாலுசாமி, நண்பர் பிரகாசம், எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த தொழிலதிபர், சுப்ரமணியம் ஆகியோர் வீடுகளில், மூன்றாவது நாளாக, நேற்றும் வருமான வரித்துறையினர் சோதனையை தொடர்ந்தனர்.அதில், செந்தில் வீட்டில் ஒரு அறை பூட்டப்பட்டிருந்தாகவும், அதற்கு, வருமான வரித்துறையினர், 'சீல்' வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கோவை, நீலகிரியில் ரகசிய ஆவணங்கள்

கோவையில், சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமான, மணல் குவாரி கான்ட்ராக்டர், ஆறுமுகசாமி, மர வியாபாரி, சஜீவன் வீடு மற்றும் அலுவலகங்களில், வருமான வரி அதிகாரிகள், மூன்றாவது நாளாக, நேற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.நீலகிரி மாவட்டம், கோடநாடு பங்களாவில், மரச்சாமான் வேலை களை செய்த, மர வியாபாரி, சஜீவனுக்கு சொந்தமான, போத்தனுார், லாயர்ஸ் காலனி வீடு மற்றும் கடை; ஆர்.எஸ்.புரத்திலுள்ள கடை மற்றும் அலுவலகங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

போத்தனுார் வீட்டில் மட்டும், மூன்றாவது நாளாக, நேற்றும் சோதனை தொடர்ந்தது. கோடநாடு பங்களாவின் கட்டுமான பணிகளை செய்த ஆறுமுகசாமிக்கு, ரேஸ் கோர்சில் உள்ள வீடு, ராம்நகர் கட்டுமான அலுவலகம், அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்திலும், வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். வீடு, கட்டுமான அலுவலகத்தில், இரண்டு நாட்களாக நடந்த சோதனை முடிந்த நிலையில், அவினாசி சாலை, 'செந்தில் டவர்சில்' மட்டும், மூன்றாவது நாளாக, நேற்றும் சோதனை நீடித்தது. சோதனையில், ரகசிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக, வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 

50 போலி கம்பெனிகள்5,000 ஆவணங்கள்


வருமான வரித் துறையினர் கூறியதாவது:

சசிகலா கும்பலுக்கு சொந்தமான, 50 போலி கம்பெனிகள் மூலமாக, பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு நிறுவனத்தின் பெயரிலும், ஏராளமான சொத்து ஆவணங்கள் கிடைத்துள்ளன. நிலம், கட்டடம், சினிமா என, எல்லா துறைகளிலும், போலி கம்பெனிகள் பெயரில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, 5,௦௦௦த்துக்கும் மேற்பட்ட ஆவணங்கள் சிக்கியுள்ளன. ஆவண குவியலை பார்த்தால், மலைப்பாக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது சிறப்பு நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1894789

Link to comment
Share on other sites

நான்காவது நாளாகத் தொடரும் வருமானவரிச் சோதனை

 

நான்காம் நாளாக இன்று சசிகலா தொடர்பானவர்களின் நிறுவனங்களிலும் வீடுகளிலும் தொடர் சோதனை நடைபெற்று வருகிறது.

கொடநாடு

 

சசிகலா மற்றும் தினகரன் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளிலும், அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களிலும், நான்காம் நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். சசிகலாவின் சகோதரர் திவாகரனின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் என கிட்டத்தட்ட 180 இடங்களுக்கும் மேல் நேற்று சோதனை நடந்தது. திவாகரன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான நிறுவனங்கள், அங்கு பணியாற்றும் மேலாளர், ஊழியர்களின் வீடுகள் எனத் தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், திருச்சி, கோவை, தஞ்சை என மொத்தம் 105  இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இது தவிர ஹைதராபாத், பெங்களூரு, டெல்லி என 82 இடங்களில் நடைபெற்றது. மொத்தம் 187 இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது. நான்காவது நாளாக இன்று சென்னை, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் சோதனை நடைபெற்றுவருகிறது.

 

தற்போது கொடநாடு பங்களாவில், ஜெயா டிவி அலுவலகத்தில், கிருஷ்ணப்பிரியா வீட்டில், சி.இ.ஓ விவேக் ஆகியோரின் வீட்டில் தொடர் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், ‘நமது எம்.ஜி.ஆர்’ அலுவலகத்தில் சோதனை நிறைவுபெற்றதாகக் கூறப்படுகிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/107564-it-raids-continues-for-the-fourth-day.html

Link to comment
Share on other sites

சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில், நேற்று நான்காவது நாளாக, 'ரெய்டு' நடந்தது. இதில், கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில், சசிகலா கும்பலின் சொத்துக்களை, பினாமி சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யவும், கோடிக்கணக்கில் புழங்கிய வங்கி கணக்குகளை முடக்கவும், வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக, திவாகரன், விவேக் உட்பட, 20 பேருக்கு விரைவில், சம்மன் அனுப்பப்பட உள்ளது. சோதனை தொடர்வதால், சசி ஆதரவாளர்கள் உதறல் அடைந்துள்ளனர்.

 

பினாமி,சட்டத்தின்,கீழ்,சசிகலா,கும்பல்,சொத்துக்கள், பறிமுதல்?!

கறுப்பு பண புழக்கத்தை கட்டுப்படுத்துவதற் காக, மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சட்டவிரோதமாக பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்ட, 2.17 லட்சம் போலி நிறுவனங்களின் அங்கீகாரத்தை, மத்திய கம்பெனிகள் விவகாரத்துறை அமைச்சகம் ரத்து செய்தது. இதில், சசிகுலா குடும்பத்திற்கு சொந்தமான, நான்கு நிறுவனங்களும் இடம் பெற்றிருந்தன.

இந்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் சிக்கி, சசிகலா சிறையில் இருந்தாலும், அவர்களது குடும்பத்தினர் குவித்து உள்ள சொத்துக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது.
அதனால், வருமான வரித்துறையின் கண் காணிப்பில், மன்னார்குடி கும்பல் மொத்தமும் இருந்தது. அத்துடன், போலி நிறுவனங்கள் மூலம், சசி கும்பல் பல கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை செய்ததையும், வரித்துறை மோப்பம் பிடித்தது.

அதைத் தொடர்ந்து, நவ., 9ல், தினகரன், திவாகரன், சிறையில் இருக்கும் இளவரசியின் வாரிசான, 'ஜாஸ் சினிமாஸ்' சாம்ராஜ்ஜியத்தின் தலைமை நிர்வாகி விவேக், அவரது சகோதரி கிருஷ்ணபிரியா...சசிகலாவின் கணவர் நடராஜனின்,அவரது சகோதரர் ராமச்சந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், ஜெயா, 'டிவி' மற்றும் நமது எம்.ஜி.ஆர்., அலுவலகம், பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள கட்டுமான நிறுவனம் என, தமிழகம் முழுவதும், 187 இடங்களில் சோதனை துவங்கியது.

பின், அது, 215 ஆக உயர்ந்தது. இந்த சோதனை நேற்று முன்தினம் பல இடங்களில் முடிந்தது.
ஆனாலும், சோதனையின் போது, தோண்ட தோண்ட, மோசடி ஆவணங்கள் சிக்கியபடி இருந்ததால், சென்னையில் நேற்று, விவேக், கிருஷ்ணபிரியா, திவாகரன் வீடுகள், ஜெயா, 'டிவி' அலுவலகம் உட்பட, 60 இடங்கள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில், 'மிடாஸ்' மதுபான ஆலை, நீலகிரி கர்சன் எஸ்டேட் என, 120

இடங்களில், நான்காவது நாளாக சோதனை தொடர்ந்தது.திவாகரன், விவேக் உள்ளிட் டோரிடம், பல மணி நேரம் விசாரணையும் நடத்தப்பட்டது.

இந்த நடவடிக்கைகளில், பினாமி பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் மற்றும் போலி நிறு வனங்களின் முறைகேடான வங்கிக் கணக்கு கள், கிலோ கணக்கில் தங்க நகைகள் சிக்கி உள்ளன. இதனால், இன்று 5 -வது நாளாகவும் சோதனை தொடர உள்ளது.
 

ரூ.1000 கோடி ஆவணம் பறிமுதல்


இதுவரை நடந்த சோதனைகளில், 1,000கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்துக்கள் மற்றும் முறைகேடான பரிவர்த்தனைகள் குறித்த விபரங்கள் சிக்கி உள்ளன. அவற்றை, பினாமி பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யவும், கோடிகளில் புழங்கிய சசி கும்பலின் வங்கி கணக்குகள் அனைத்தையும் முடக்கவும், வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளர். அதற்காக, வங்கி அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகின்றனர்.இதுவரை சிக்கிய ஆவணங்களை மதிப்பீடு செய்யும் பணியும் துவங்கி உள்ளது.

இந்த சோதனை தொடர்பாக, திவாகரன், விவேக், கிருஷ்ணபிரியா, நாமக்கல் செந்தில், கோவை ஆறுமுகசாமி உள்பட, 20க்கும் மேற்பட்டோருக்கு, சம்மன் அனுப்ப முடிவெடுக்கப்பட்டு உள்ளது. அவர்கள், இந்த வாரத்தில் விசாரணைக்கு அழைக்கப்படுவர் என, தெரிகிறது.

'வாக்குமூலத்தில் பகீர்' சென்னையில், வருமான வரித்துறை அதிகாரிகள், நேற்று கூறியதாவது:நவ., 9 முதல் நடந்து வரும் சோதனைகளில், நாங்கள் எதிர்பார்த்தபடியே, போலி நிறுவனங்கள் குறித்த விபரங்கள் சிக்கி உள்ளன. அவற்றின் வழியே செய்யப்பட்ட, சொத்து முதலீடுகள் தொடர்பான ஆவணங்களும் கிடைத்தன. அவற்றை மதிப்பிட்டு வருகிறோம். சோதனையில், 200க்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளனர்.

அவர்களில், பெரும்பாலானவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது.அதில், அடுத்தடுத்து பல பகீர் தகவல்கள் கிடைக்கின் றன. எனவே, மீண்டும் புது இடத்தில், சோதனை நடத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. சோதனையில் சிக்கியவர்கள் அனைவருக்கும், சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்தால் காலவிரயம் ஏற்படும்.

அதனால், திவாகரன், விவேக், கிருஷ்ணபிரியா, செந்தில் உள்ளிட்ட முக்கியமானவர்களுக்கு மட்டும் சம்மன் அனுப்பப்படும். தேவைப் பட்டால், மேலும் சிலரை விசாரிப்போம். எங்கள் நோக்கம், பணம், நகைகள் அல்ல; மோசடி நிறுவனங்கள் மற்றும் பினாமி சொத்துக்கள் மட்டுமே.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கோடநாட்டில் விசாரணை இல்லை :நீலகிரி

 

மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில், வருமான வரிதுறை சோதனை நடப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகின்றன. அது குறித்து, சென்னை தலைமையக அதிகாரிகள் கூறுகை யில், 'நாங்கள் கோடநாடு எஸ்டேட்டுக் குள் செல்லவில்லை. அங்கு சோதனை நடப்பதாக கூறப்படுவது தவறு' என்றனர்.
 

வரித்துறை விசாரணையில் சிக்கிய சசி கும்பலின் 43 நிறுவனங்கள்


சசி கும்பலுக்கு சொந்தமான, நான்கு நிறுவனங் களின் செயல்பாடு ஏற்கனவே, மத்திய அரசால் முடக்கப்பட்ட நிலையில், அந்த கும்பலால் நிர்வகிக்கப்படும், மேலும், 43 நிறுவனங்கள், வருமான வரித்துறையினரின், விசாரணை வளையத்தில் சிக்கியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
 

விசாரணையில் சிக்கியுள்ள சசி கும்பலின் நிறுவனங்கள் விபரம்:


ஜெ., பார்ம் அவுஸ், ஜெ.எஸ்.ஹவுசிங் டெவலப்மென்ட், ஜெ., ரியல் எஸ்டேட், ஜெயா கான்ட்ராக்டர்ஸ் அண்ட் பில்டர்ஸ், ஜே.எஸ்.லீசிங் அண்ட் மெயின்டனென்ஸ், மெட்டல் கிங், சூப்பர் டூப்பர், 'டிவி' - ஆஞ்சநேயா பிரின்டர்ஸ், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், சிக்னோரா பிசினஸ் என்டர்பிரைசஸ், லெக்ஸ் பிராபர்டி டெவலப்மென்ட்,

ரிவர்வே அக்ரோ புராடக்ட்ஸ்.மெடோ அக்ரோ பார்ம்ஸ், இந்தோ தோஹா கெமிக்கல்ஸ், ஏ.பி.அட்வர்டைசிங் சர்வீசஸ், விக்னேஸ்வரா பில்டர்ஸ், லட்சுமி கன்ஸ்டிரக் ஷன்ஸ், கோபால் புரமோட்டர்ஸ், சக்தி கன்ஸ்டிரக் ஷன்ஸ், நமச்சிவாய ஹவுசிங், அய்யப்பா பிராபர்டி டெவலப்மென்ட்ஸ், சீ இன்கிளேவ், நவசக்தி கான்ட்ராக்டர்ஸ், ஓஷியானிக் கன்ஸ்டிரக் ஷன்ஸ்,

கிரீன் கார்டன் அபார்ட்மென்ட்ஸ், மார்பிள் மார்வல்ஸ்.வினோத் வீடியோ விஷன், பேக்ஸ் யூனிவர்சல், பிரெஷ் மஷ்ரூம்ஸ், கோடநாடு டீ எஸ்டேட், வோர்ல்ட் ராக் நிறுவனம், மிடாஸ், கியுரியோ ஆட்டோ மார்க், சிக்நெட் எக்ஸ்போர்ட்ஸ், பேன்சி ஸ்டீல்ஸ், காட்டேஜ் பீல்டு ரிசார்ட்ஸ், ஸ்ரீஜெயா பைனான்ஸ் அண்ட் இன்வஸ்ட்மென்ட்ஸ்.

ஸ்ரீஹரி சந்தனா எஸ்டேட்ஸ், ஜாஸ் சினிமாஸ் மற்றும் கசானா பின்வெஸ்ட் என, மொத்தம், 43 நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்களை, வருமான வரித்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.மேற்கண்ட நிறுவனங்களில், பல நிறுவனங்கள், செயல்படாமல் இருப்பதும் தெரிய வந்துள்ளது. எனினும், அவற்றின் வழியாக பணப்பரிவர்த்தனைகள் மற்றும் சொத்து முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதால், அவை விசாரணை வளையத்திற் குள் வந்துள்ளன.
- நமது சிறப்பு நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1895358

Link to comment
Share on other sites

கொடநாடு எஸ்டேட்டில் இன்று ஐந்தாவது நாளாகத் தொடரும் சோதனை

 

ஐந்தாம் நாளாக இன்று, சசிகலா உறவினர்களின் நிறுவனங்களிலும் வீடுகளிலும் தொடர் சோதனை நடைபெற்றுவருகிறது.

கொடநாடு

 

சசிகலா மற்றும் தினகரன் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளிலும், அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களிலும், ஐந்தாம் நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். சசிகலாவின் சகோதரர் திவாகரனின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் என கிட்டத்தட்ட 180 இடங்களுக்கும் மேல் நேற்று சோதனை நடந்தது. திவாகரன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான நிறுவனங்கள், அங்கு பணியாற்றும் மேலாளர், ஊழியர்களின் வீடுகள் என தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், திருச்சி, கோவை, தஞ்சை என மொத்தம் 105  இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இது தவிர ஹைதராபாத், பெங்களூரு, டெல்லி ஆகிய  82 இடங்களில் நடைபெற்றது. மொத்தம் 187 இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது. ஐந்தாவது நாளாக இன்று சென்னை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் சோதனை நடைபெற்றுவருகிறது.

 

தற்போது, கொடநாடு எஸ்டேட்டில் சோதனையும், அதன் மேலாளர் நடராஜனிடம் விசாரணையும் நடைபெற்றுவருகிறது. மேலும், கர்சன் எஸ்டேட்டிலும் தற்போது சோதனை நடைபெறுகிறது. நான்கு நாள்களாக புதுச்சேரி லக்ஷ்மி ஜுவல்லர்ஸ் நகைக்கடையில் நடைபெற்று வந்த சோதனை நிறைவுபெற்றது.

http://www.vikatan.com/news/tamilnadu/107616-it-raid-continues-for-the-fifth-day.html

Link to comment
Share on other sites

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ரூ.280 கோடிக்கு புதிய 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிய சசிகலா குடும்பத்தினர்: வருமானவரித் துறை தகவல்

 

 
13CHRGNKPRIYAHOUSE

சென்னை தி.நகரில் உள்ள கிருஷ்ணபிரியா வீட்டில் 4-வது நாளாக நேற்று வருமானவரி சோதனை நடக்க, போலீஸார், ஊழியர்கள் வெளியே அமர்ந்திருக்கின்றனர்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது சசிகலா குடும்பத்தினரால் ரூ.280 கோடிக்கு புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டிருப்பதாக வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர். விவேக், கிருஷ்ணபிரியா வீடுகளில் 4 நாட்களாக நடத்தப்பட்ட சோதனை நிறைவடைந்தது.

சசிகலா, திவாகரன், டிடிவி தினகரன், விவேக், கிருஷ்ணபிரியா உட்பட அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் என பலரது வீடுகளில் கடந்த 9-ம் தேதி முதல் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களில் மொத்தம் 187 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. 3 நாளில் 167 இடங்களில் சோதனை நடத்தி முடிக்கப்பட்டது. 4-வது நாளான நேற்று 20 இடங்களில் சோதனை தொடர்ந்து நடத்தப்பட்டது. சென்னையில் ஜெயா டிவி அலுவலகம், ஜெயா டிவியின் முதன்மை நிர்வாக அதிகாரியான விவேக்கின் கோடம்பாக்கம் வீடு, கிண்டியில் உள்ள ஜாஸ் சினிமாஸ் நிர்வாக அலுவலகம், இளவரசி மகள் கிருஷ்ணபிரியாவின் தி.நகர் வீடு, படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலை ஆகிய இடங்களில் நேற்று 4-வது நாளாக சோதனை நடைபெற்றது.

இது தொடர்பாக வருமான வரித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது;

கடந்த 4 நாட்களாக நடந்த சோதனையில் ஆயிரக்கணக்கான சொத்து ஆவணங்கள் சிக்கியுள்ளன. போலி நிறுவனங்கள் நடத்தியதற்கான ஆவணங்கள், பணப் பரிமாற்றம் செய்ததற்கான தகவல்கள், பென்டிரைவ், ஹார்டுடிஸ்க், வங்கி ஆவணங்கள் உட்பட பலவற்றை பறிமுதல் செய்துள்ளோம்.

கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு, புதிய 2000, 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன. பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக 50 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த 50 நாட்கள் இடைவெளியில் சசிகலா குடும்பத்தினர், அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் மொத்தம் ரூ.280 கோடிக்கு புதிய 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றி இருப்பது தெரியவந்துள்ளது. இதற்கான சில ஆவணங்களையும் கைப்பற்றி இருக்கிறோம். இதில், புதுச்சேரியில் உள்ள நகைக்கடை மூலம் மட்டுமே ரூ.168 கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றியுள்ளனர்.

சோதனையில் கிடைத்த ஆவணங்களை ஆய்வு செய்யும் பணி முழுமையாக முடியவில்லை. அந்தப் பணி முடிந்த பின்னரே மொத்த விவரமும் தெரியவரும். திவாகரன், விவேக், கிருஷ்ணபிரியா ஆகியோர் தொடர்புடைய இடங்களில் இருந்துதான் அதிகமான ஆவணங்களை வருமான வரித் துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். இவர்களின் வீடுகளில் கடந்த 9-ம் தேதி முதல் நேற்று வரை 4 நாட்கள் சோதனை நடத்தப்பட்டது. இங்கு நடத்தப்பட்ட சோதனை நேற்று மாலையுடன் முடிவடைந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜெயா டிவி அலுவலகம், கோடநாடு எஸ்டேட் உள்ளிட்ட சில இடங்களில் 5-வது நாளாக இன்றும் தொடர்ந்து சோதனை நடத்தப்படும் என வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித் தனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/article20377841.ece?homepage=true

Link to comment
Share on other sites

விவேக், மருத்துவர் சிவக்குமார், ஜெ. உதவியாளர் பூங்குன்றன் ஆகிய மூவரிடமும் ஒரே இடத்தில் விசாரணை..!

ஜெயா டி.வி சி.இ.ஓ விவேக், மருத்துவர் சிவக்குமார், ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் ஆகிய மூவரையும் ஒரே இடத்தில்வைத்து வருமான வரித்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். 

8e823d83-9625-413e-8_17474.jpg

 


ஜெயா டி.வி, ஜாஸ் சினிமா உள்ளிட்ட சசிகலாவுக்குத் தொடர்புடைய 180-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். ஐந்து நாள்களாக நீடித்த இந்தச் சோதனை மதியம் 3 மணியளவில் நிறைவடைந்தது. சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜெயா டிவி-யின் சி.இ.ஓ-வும் சசிகலாவின் அண்ணன் ஜெயராமன்-இளவரசி தம்பதியின் மகன் விவேக்கை, அவரது மகாபலிபுரம் இல்லத்திலிருந்து வருமான வரித்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது, விவேக்வுடன் சேர்த்து, மருத்துவர் சிவக்குமார், ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் ஆகிய மூன்று பேரையும் நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்திவருகின்றனர். 

 

 

https://www.vikatan.com/news/tamilnadu/107680-jaya-tv-ceo-vivek-take-away-investigation-by-it-officers.html

Link to comment
Share on other sites

சோதனை நிறைவு: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விவேக் ஜெயராமன்! அடுத்தது என்ன?

 
vivek_jayaraman

 

சென்னை: சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் நடந்த வருமான வரி சோதனைகள் நிறைவடைந்த நிலையில் சசிகலாவின் அண்ணன் மகனும், ஜெயா டிவி, ஜாஸ் சினிமாஸ் நிர்வாக இயக்குனருமான விவேக் ஜெயராமனை வருமான வரித்துறை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளது.

கடந்த ஒன்பதாம் தேதி துவங்கி இன்று வரை கடந்த ஐந்து நாட்களாக சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள்,பணியாளர்கள் வீடுகள் , ஜெயா டிவி, ஜாஸ் சினிமாஸ் அலுவலகங்கள், கல்லூரிகள் உட்பட 150-க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர் வருமான வரி சோதனைகள் நடந்தன.

வருமான வரித்துறை வரலாற்றிலேயே இல்லாத அளவாக 1500-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இப்பணியில்  ஈடுபடுத்தப்பட்டனர். சோதனை முடிவில் பணப்பரிமாற்றம் தொடர்பான ஏராளமான ஆவணங்கள், பணம் மற்றும் தங்கக் நகைகள் கைப்பற்றப்பட்டதாகவும், பலரிடம் இருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.  

அத்துடன் சோதனையினை பொறுத்து பலரிடம் விசாரணை நடத்த சம்மன்கள் அனுப்பப்படும் என்றும் கூறப்பட்டது. முதல்கட்டமாக அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளரான சசிகலாவின் உறவினர் மருத்துவர் சிவகுமார் வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று காலை ஆஜர் ஆனார். பின்னர் சசிகலாவின் சகோதரர் திவாகரன், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆகியோருக்கும் நேரில் ஆஜராக சம்மன்கள் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் திடீர் திருப்பமாக சசிகலாவின் அண்ணன் மகனும், ஜெயா டிவி, ஜாஸ் சினிமாஸ் நிர்வாக இயக்குனருமான விவேக் ஜெயராமன் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு அவர்களால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக அடுத்தது என்ன நடக்குமோ என்ற பரபரப்பு சசிகலா வட்டாரத்தில் நிலவுகிறது.

http://www.dinamani.com/tamilnadu/2017/nov/13/சோதனை-நிறைவு-விசாரணைக்கு-அழைத்துச்-செல்லப்பட்ட-விவேக்-ஜெயராமன்-அடுத்தது-என்ன-2807119.html

Link to comment
Share on other sites

சசி குடும்பத்தினரிடம் கணக்கில் வராத ரூ. 1430 கோடி : வருமான வரித்துறை

 
 
கணக்கில், வராத, ரூ. 1430 கோடி,வருமான வரித்துறை
Colors:
  •  
  •  
  •  
  •  
 
 

 

சென்னை: சென்னை: சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில், இன்றுடன் 'ரெய்டு' ( 5வது நாள்) நடந்து முடிந்தது. இதில், கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில், சசிகலா கும்பலிடமிருந்து ரூ. 1,430 மதிப்பிலான ஆணவங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சொத்து குவிப்பு வழக்கில் சிக்கி, சசிகலா சசி கும்பல் பல கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை செய்ததையும், வரித்துறை மோப்பம் பிடித்தது. நவ., 9ல், தினகரன், திவாகரன், சிறையில் இருக்கும் இளவரசியின் வாரிசான, 'ஜாஸ் சினிமாஸ்' சாம்ராஜ்ஜியத்தின் தலைமை நிர்வாகி விவேக், அவரது சகோதரி கிருஷ்ணபிரியா...சசிகலாவின் கணவர் நடராஜனின்,அவரது சகோதரர் ராமச்சந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், ஜெயா, 'டிவி' மற்றும் நமது எம்.ஜி.ஆர்., அலுவலகம், பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள கட்டுமான நிறுவனம் என, தமிழகம் முழுவதும், 187 இடங்களில் சோதனை துவங்கியது.


இந்நிலையில் இதுவரை நடந்த சோதனைகளில், கணக்கி்ல் வராத ரூ. 1,430 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் முறைகேடான பரிவர்த்தனைகள் குறித்த ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும்
ரூ. 5 கோடியில் தங்க ஆபரணங்கள், உறவினர்கள், நண்பர்களிடமிருந்து ரூ.6 கோடி ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. 7 கோடியில் 18 நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

முன்னதாக இன்று விவேக், டாக்டர் சிவக்குமார், பூங்குன்றன் ஆகியோரிடம் வருமான வரித்துறையினர் விசாரித்தனர். விசாரணையின் அடிப்படையில் ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் 5 மணி நேர விசாரணைக்கு பின்னர் விவேக் வீட்டிற்கு புறப்பட்டார்.


 

 

15 வங்கி லாக்கர்கள் முடக்கம்


சசிகலா குடும்பத்தினர்களின் 15 வங்கி லாக்கர்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே 51 வங்கி லாக்கர்களுக்கு சீல் வைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1895989

Link to comment
Share on other sites

 
 
துவங்கியது!  சசி கும்பல் விசாரணை...

 

  • gallerye_231121316_1896050.jpg

 

வருமான வரி சோதனையில் சிக்கிய சசி கும்பலிடம், கிடுக்கிப்பிடி விசாரணை, நேற்று துவங்கியது. ஜெ., உதவியாளர், பூங்குன்றன், பெங்களூரு புகழேந்தி, 'மிடாஸ்' மதுபான ஆலை இயக்குனர், சிவக்குமார் மற்றும், 'ஜாஸ் சினிமாஸ்' தலைமை அதிகாரி, விவேக் ஆகியோர் அடுத்தடுத்து, நேற்று விசாரணைக்கு ஆஜராகினர்.

 

துவங்கியது!  சசி கும்பல் விசாரணை...

ஐந்து நாட்கள் விடாமல் நடந்த தேடுதலில், 100க்கும் மேற்பட்ட இடங்களில், மூட்டை மூட்டையாக சிக்கிய, சொத்து மற்றும் பணப் பரிவர்த்தனை ஆவணங்களை, அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதில், கல்லுாரி மாணவர்கள், வேலையாட்கள் பெயர்களில், கோடிக்கணக்கில் பணம், 'டிபாசிட்' செய்யப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.சசிகலா மற்றும் அவர்களது குடும்பத்தினர், 25 ஆண்டுகளாக, தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில், சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர்.
போலி நிறுவனங்கள் துவங்கி, லஞ்சம் மற்றும் ஊழல் பணத்தை பதுக்கி, பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்கி உள்ளனர். அதற்கான ஆதாரங்களை சேகரித்த, வருமான வரித்துறையினர், நவ., 9 காலையில், சென்னை, மன்னார்குடி, திருச்சி, தஞ்சை, கோவை, நெல்லை, பெங்களூரு, புதுச்சேரி, ஐதராபாத் என, 187 இடங்களில், 'ஆபரேஷன் கிளீன் மணி' என்ற, அதிரடி சோதனையை துவக்கினர்.

ஆயிரம் ஊழியர்கள்:


அதில், வரலாறு காணாத வகையில், ஆயிரம் ஊழியர்கள், அதிகாரிகள், ஒரே நேரத்தில் களமிறக்கப்பட்டனர்.சென்னையில், ஜெயா, 'டிவி' மற்றும் வேளச்சேரி, 'பீனிக்ஸ் மாலில்' உள்ள ஜாஸ் திரையரங்கங்கள் மற்றும் அவற்றின் தலைமை அதிகாரி விவேக்கின் மகாலிங்கபுரம் வீடு, அவரது சகோதரியும், இளவரசியின் மகளுமான கிருஷ்ணபிரியாவின் தி.நகர் வீடு, நமது எம்.ஜி.ஆர்., அலுவலகம், தினகரன் வீடு என, 111 இடங்களில் சோதனை நடந்தது.

அதேபோல, மன்னார்குடியில் திவாகரன் வீடு, தஞ்சையில் நடராஜன் வீடு, நாமக்கலில் வக்கீல் செந்தில் வீடு மற்றும் நீலகிரி மாவட்டம், கர்சன் எஸ்டேட் ஆகிய இடங்களிலும் சோதனை நடந்தது.இதில், சில இடங்களில் நடந்த சோதனை, நான்கு நாள் நீடித்தது.
 

வைரம் சிக்கியது


ஆனால், விவேக் வீடு, கிருஷ்ணபிரியா வீடு, ஜெயா, 'டிவி', காஞ்சி மாவட்டம், படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலை உள்ளிட்ட சில இடங்களில் மட்டும், ஐந்தாவது நாளாக நேற்றும் விசாரணை தொடர்ந்தது.
இந்த சோதனையில், சில இடங்களில், தங்கம், வைரம் நகைகள் சிக்கின. எனினும், வருமான வரித்துறையினர், 'நாங்கள், போலி நிறுவனங்கள் பெயரில் முதலீடு செய்த பணம், அதன் வாயிலாக, சசி கும்பல், பினாமிகள் பெயரில் வாங்கிக் குவித்த சொத்துகள் மற்றும்முறைகேடான பணப் பரிவர்த்தனையை தான் முக்கியமாக விசாரிக்கிறோம்' என்றனர்.
அவர்கள் குறிவைத்த படியே, ஐந்து நாள் சோதனையில், ஏராளமான, போலி நிறுவனங்களின் பணப் பரிவர்த்தனை ஆவணங்கள் மற்றும் வாங்கி குவித்த சொத்துக்களின் ஆவணங்களை கைப்பற்றினர். அவை அனைத்தும், சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, மூட்டை மூட்டையாக குவித்து வைக்கப்பட்டு உள்ளன. அவற்றை மதிப்பிடும் பணிகளில், 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

விவேக் உள்பட நால்வரிடம்...


இந்நிலையில், சோதனைக்கு உள்ளான, 20 முக்கிய நபர்களுக்கு, விசாரணைக்கு ஆஜராகும்படி, 'சம்மன்' அனுப்பப்பட்டது. அதில், முதல் கட்டமாக, நேற்று மிடாஸ் ஆலை சிவகுமார், பெங்களூரு புகழேந்தி, ஜெ., உதவியாளர், பூங்குன்றன் ஆகியோர், சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, வருமான வரி விசாரணைக்கு, அடுத்தடுத்து ஆஜராகினர்.
அவர்களை தொடர்ந்து, மாலை, 6:00 மணி அளவில், இளவரசி மகன் விவேக், வரித்துறை அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.அப்போது, மீண்டும் சிவகுமார், பூங்குன்றன் ஆகியோரை அழைத்து வந்தனர். அவர்களையும், விவேக்குடன் சேர்த்து வைத்து, ஒரே அறையில், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

 


அதில், எந்தெந்த போலி நிறுவனங்கள் பெயரில், எங்கெங்கு யார் பெயரில் முதலீடுகள்
செய்யப்பட்டுள்ளன; போயஸ் இல்லத்தில் மிரட்டி எழுதி வாங்கப்பட்ட சொத்துகள் போன்றவற்றை விசாரித்தனர். இந்த சோதனை, இரவு, 10:00 மணி வரைநீடித்தது.
 

மாணவர்கள் கணக்கில்...


தற்கிடையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, மன்னார்குடியில், செங்கமலத்தாயார் கல்லுாரியில் படித்த மாணவர்கள் கணக்கில், பல கோடி ரூபாய், 'டிபாசிட்' செய்யப்பட்டதாக கிடைத்த தகவல் குறித்தும், திவாகரனிடம் விசாரிக்க உள்ளனர். இதேபோல், உதவியாளர்கள், வேலையாட்கள், டிரைவர்கள் பெயரில், கோடிக்கணக்கில் பினாமி சொத்துக்களை வாங்கி குவித்துள்ளது குறித்தும், விசாரணை துவங்கியுள்ளது.
இது தொடர்பாக, கிருஷ்ணபிரியா, கலியபெருமாள், பாஸ்கரன், பிரபா, அனுராதா, டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரிடம், இன்று விசாரணை நடக்கவுள்ளது. அதன்பின், முழு விபரங்கள் வெளியாகும்.
 

மிடாஸில் தொடரும் சோதனை


தமிழகம் முழுவதும் நடந்த வரித்துறை சோதனை முடிந்தாலும், மிடாஸ் மதுபான ஆலையில், நேற்று இரவுக்குப் பிறகும் சோதனை தொடர்ந்தது. ஜெயா, 'டிவி' அலுவலகத்திலும், நேற்றிரவு வரை சோதனை நீடித்தது. அங்கு, முக்கிய ஆவணங்கள் இருக்கக்கூடும் என்பதால், தொடர் விசாரணை நடைபெறுகிறது.

வாக்குமூலம் சரிபார்ப்பு


சென்னை, அலுவலகத்தில் ஆஜரான விவேக் உள்ளிட்ட நான்கு பேர், அவரவர் வீடுகளில் வாக்குமூலம் அளித்திருந்தனர். அதை, உயர் அதிகாரிகள், நேற்று சரிபார்த்தனர். வரி ஏய்ப்பு மற்றும் மோசடியின் மதிப்பை உறுதிப்படுத்தவே, இந்த குறுக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

வடிவேலு போல போஸ்



சென்னை, வரித்துறை அலுவலகத்தில், நேற்று ஆஜரான பூங்குன்றன், சிவகுமார் போன்றோர், முகம் காட்டாமல் வந்து சென்றனர். ஆனால், கர்நாடக சிறையில், ஜெ., மற்றும் சசிக்கு உதவி செய்த, பெங்களூரு புகழேந்தி, வடிவேலு பாணியில் போஸ் கொடுத்தார். சிரித்த முகத்துடன், 'என்னிடம் ஒன்றும் இல்லை' என, பேட்டி அளித்தார். மற்றவர்களிடம், அதிகமாக இருப்பதை சூசகமாக உணர்த்தி சென்றார்.
 

ஒரு நிறுவனம்: 10 வங்கி கணக்கு


வரித்துறையினர், சசி கும்பலின், 50 நிறுவனங்களில் நடந்த பரிவர்த்தனைகளை ஆராய்ந்து வருகின்றனர். அதில், சில நிறுவனங்களில் நடந்த பணப்புழக்கம், பெரும் புதிராக உள்ளது. ஒரு சில நிறுவனங்கள், 10க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வாயிலாக, பரிவர்த்தனை மேற்கொண்டி ருந்ததும் தெரிய வந்துள்ளது.- நமது சிறப்பு நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1896050

Link to comment
Share on other sites

கொடநாட்டில் ஆறாம் நாள் சோதனை: மேலாளரிடம் தொடரும் விசாரணை

 
 

ஆறாம் நாளாக இன்று, கொடநாடு எஸ்டேட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.

கொடநாடு

 

சசிகலா மற்றும் தினகரன் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளிலும், அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களிலும், ஐந்து நாள்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சசிகலாவின் சகோதரர் திவாகரனின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் கிட்டத்தட்ட 180 இடங்களுக்கும் மேல் சோதனை தொடங்கியது. திவாகரன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான நிறுவனங்கள், அங்கு பணியாற்றும் மேலாளர், ஊழியர்களின் வீடுகள் என தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், திருச்சி, கோவை, தஞ்சை என மொத்தம் 105  இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இது தவிர ஹைதராபாத், பெங்களூரு, டெல்லி ஆகிய  82 இடங்களில் நடைபெற்றது. மொத்தம் 187 இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது. 

 

இன்று ஆறாவது நாளாக கொடநாடு எஸ்டேட்டில் சோதனையும், அதன் மேலாளர் நடராஜனிடம் விசாரணையும் நடைபெற்றுவருகிறது. மேலும், கொடநாடு எஸ்டேட்டில் கிடைத்த ஆவணங்களைக்கொண்டு கர்சன் எஸ்டேட்டிலும் தற்போது சோதனை நடைபெறுகிறது. 

https://www.vikatan.com/news/tamilnadu/107716-it-raids-continues-for-the-sixth-day-at-kodanadu.html

Link to comment
Share on other sites

சசிகலா உறவினருக்குச் சொந்தமான கர்ஸன் எஸ்டேட்டில் ஜெ.வின் திராட்சை தோட்ட பத்திரம் பதுக்கல்?- உதகையில் மட்டும் விசாரணை தொடர்வதால் சந்தேகம்

 

 
14cbssIT%202

வருமான வரித் துறை சோதனை நடந்துவரும் நிலையிலும், கர்ஸன் எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்புப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணி.   -  படம்: ஆர்.டி.சிவசங்கர்

சசிகலா உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோரிடம் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரி சோதனை முடிவடைந்துவிட்ட நிலையில், அவர்களுக்கு சொந்தமான கர்ஸன் எஸ்டேட்டில் மட்டும் நேற்றும் சோதனை தொடர்ந்தது. அங்கு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஹைதராபாத் திராட்சை தோட்ட சொத்து பத்திரம் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

நீலகிரி மாவட்டம் கோடநாடு அருகே கர்ஸன் எஸ்டேட் கிரீன் டீ தொழிற்சாலையில், கடந்த 9-ம் தேதி முதல் 5-வது நாளாக நேற்றும் சோதனை தொடர்ந்தது. தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் வாங்கப்பட்ட சொத்து ஆவணங்கள் உட்பட முக்கிய ஆவணங்கள் பதுக்கப்பட்டிருக்கலாம் என்பதாலேயே, கர்ஸன் எஸ்டேட்டில் சோதனை தொடர்வதாகக் கூறப்படுகிறது.

 

கூட்டுறவு வங்கியில் டெபாசிட்?

பண மதிப்பு நீக்க நடவடிக்கையின்போது கணக்கில் வராத கோடிக்கணக்கான பணம் கோடநாடு எஸ்டேட்டில் இருந்ததாகவும், அந்த பணத்தை மாவட்டச் செயலாளர், வட்டச் செயலாளர்கள் உட்பட கட்சியினர் அனைவருக்கும் குறிப்பிட்ட தொகை பிரித்து கொடுத்து, தமிழகத்திலுள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் செய்து, வெள்ளையாக மாற்றப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், கர்ஸன் எஸ்டேட் சொத்து பத்திரம் பாங்க் ஆஃப் இந்தியாவில் இருப்பதாகவும், கர்ஸன் எஸ்டேட் மூலதனம் குறித்தும் இந்த எஸ்டேட்டில் உயர் ரக கிரீன் டீ உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால், தேயிலையை சந்தைப்படுத்த எந்தெந்த நாடுகளில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்தும் எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் விசாரணை நடந்து வருகிறது.

 

ஜெ. சொத்து மாற்றமா?

இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு சொந்தமாக ஹைதராபாத்தில் உள்ள திராட்சை தோட்டம், அவர் இறந்த பின்னர் சசிகலா குடும்பத்தினர் பெயருக்கு மாற்றப்பட்டதாக எழுந்த சந்தேகத்தின்பேரில், அந்த ஆவணங்கள் கர்ஸன் எஸ்டேட்டில் பதுக்கப்பட்டிருக்கலாம் என்பதால்தான் சோதனை தொடர்வதாகக் கூறப்படுகிறது.

 

இன்றும் சோதனை

சசிகலாவின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பலரிடம் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை முடிவடைந்துவிட்ட நிலையில், கர்ஸன் எஸ்டேட்டில் மட்டும் நேற்றும் சோதனை தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. வருமான வரித் துறையின் இந்த சோதனை இன்றும் (நவ.14) தொடரும் என்று தெரிகிறது.

http://tamil.thehindu.com/tamilnadu/article20442610.ece?homepage=true

Link to comment
Share on other sites

’என் கடமையைச் செய்தேன்; விசாரணைக்கு மீண்டும் அழைப்பார்கள்!’ - விவேக் ஜெயராமன் பளீச்

 
 

ஜெயா டி.வி, ஜாஸ் சினிமாஸ் உள்ளிட்ட சசிகலாவுக்குத் தொடர்புடைய 180-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். ஐந்து நாள்களாக நீடித்த இந்தச் சோதனை, நேற்று மதியம் 3 மணியளவில் நிறைவடைந்தது.

vivek

 

சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்பட்ட நிலையில், ஜெயா டிவி-யின் சி.இ.ஓ-வும் சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மகனுமான விவேக்கை, வருமான வரித்துறையினர் விசாரணைக்கு அழைத்துச்சென்றனர். 

vivek
 

நேற்று நடந்த விசாரணை தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த விவேக், '’ஐந்து நாள்களாக வருமான வரிச்சோதனை நடந்தது. 2015-ம் ஆண்டு முதல் ஜாஸ் சினிமாஸ் சி.இ.ஒ-வாக இருக்கிறேன். ஜெயா டிவியையும் இரண்டு ஆண்டுகளாக நிர்வகித்துவருகிறேன். எனவே, ஜெயா டி.வி, ஜாஸ் சினிமாஸ் தொடர்பான கேள்விகள் கேட்டனர். ஆவணங்களைச் சரிபார்த்தனர். இந்நிறுவனங்களின் கணக்குவழக்குகளைப் பற்றி கேள்வியெழுப்பினர். பின்னர், என் மனைவியின் நகைகள் பற்றி கேட்டனர். அவை, திருமணத்தின்போது வாங்கிய நகைகள். மீண்டும் என்னை விசாரணைக்கு அழைப்பார்கள். முழு ஒத்துழைப்புடன் பதிலளிக்கத் தயார். வருமான வரித்துறை அதிகாரிகளின் கடமையைச் செய்தார்கள். வரி கட்டவேண்டியது என் கடமை. அதை நான் செய்துகொண்டுதான் இருக்கிறேன். இது, சாதாரண சோதனைதான். இதைப் பெரிதுபடுத்த வேண்டாம். மீண்டும் விசாரணைக்கு அழைத்தால், முழு ஒத்துழைப்பு அளிப்பேன்’' என்றார் ரிலாக்ஸாக.

https://www.vikatan.com/news/tamilnadu/107723-vivek-jayaraman-speaks-about-it-raid.html

Link to comment
Share on other sites

ராமாவரம் டைரி முதல் விவேக் ஜெயராமன் வரை... சோதனையில் என்னவெல்லாம் நடந்தது? #VikatanExclusive

 
 

வருமான வரித்துறை சோதனை

Chennai: 

சசிகலா குடும்பத்தினரின் வீடு, அலுவலகங்களில் நடந்த வருமான வரிச் சோதனை எப்படி நடந்தது என்பதுகுறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. சோதனையில், ராமாவரம் வீட்டிலிருந்து கிடைத்த டைரி, விவேக் ஜெயராமன் வீட்டில் கிடைத்த ஆவணங்கள் ஆகியவை, சசிகலா குடும்பத்தினருக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கிக்குவித்த தமிழக அரசியல்வாதிகள், தொழிலதிபர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துவருகிறது, வருமான வரித்துறை. அவர்கள், எந்த நேரத்திலும் சோதனை நடத்தப்படும் என்ற பீதியில் உள்ளனர். இந்தச் சோதனை, குறிப்பாக, சசிகலாவின் சகோதரர் திவாகரன், இளவரசியின் மகன் விவேக், மகள் கிருஷ்ணப்ரியா, டாக்டர் சிவக்குமார், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் மற்றும் மிடாஸ் நிறுவனம், கொடநாடு எஸ்டேட் ஆகியவற்றில் நடத்தப்பட்ட சோதனை, மன்னார்குடி உறவுகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.

சென்னையில் உள்ள விவேக் வீடு, ஜெயா டி.வி. அலுவலகம், ஜாஸ் சினிமாஸ், நமது எம்.ஜி.ஆர். அலுவலகம் மற்றும் தி.நகரில் உள்ள கிருஷ்ணப்ரியா வீடு ஆகியவற்றில் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக, வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல்செய்த ஆவணங்கள், நகைகள், பணம், டைரிகள் ஆகியவற்றின் அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடந்துவருகிறது.

வருமான வரி சோதனை

விசாரணையில், டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரும் கர்நாடக மாநில அ.தி.மு.க செயலாளருமான புகழேந்தி, டாக்டர் சிவக்குமார், பூங்குன்றன், விவேக் ஆகியோரிடம் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அப்போது, வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் அவர்கள் பதிலளித்துள்ளனர். ஆனால், அந்தப் பதில்களை வீடியோவாகப் பதிவுசெய்த வருமான வரித்துறை அதிகாரிகள், அடுத்த விசாரணைக்குத் தயாராகிவருகின்றனர்.

இதற்கிடையில், திவாகரனிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பிய வருமான வரித்துறை, அவரிடம் துருவித் துருவி கேள்விகளை கேட்கவும் முடிவுசெய்துள்ளது. திவாகரனின் வீடு, அலுவலகம், கல்லூரி ஆகியவற்றிலிருந்து பறிமுதல்செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலேயே கேள்விகள் அமைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சூழ்நிலையில், 187 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கிடைத்த ஆவணங்கள், நகைகள், பணம் ஆகியவற்றை மதிப்பீடு செய்யும் பணியிலும் வருமான வரித்துறை ஈடுபட்டுள்ளது. அதன் மதிப்பு, 1000 கோடிக்கு மேல் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், வருமான வரித்துறை சார்பில் பறிமுதல்செய்யப்பட்ட விவரங்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.

 சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். "கறுப்புப்பணத்தை ஒழிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, பெரும்பாலான பணப் பரிவர்த்தனைகள் கணக்கில் வரத்தொடங்கிவிட்டன. பணமதிப்பு சமயத்தில் முதலீடு செய்யப்பட்ட விவரங்கள், பழைய ரூபாய் நோட்டுக்கள் மாற்றிய விவரங்கள் என அனைத்தையும் ஆராய்ந்து, அதற்குரிய ஆவணங்கள் அடிப்படையில் சோதனை நடந்துவருகிறது.

வருமான வரி சோதனை

சசிகலா குடும்பத்தினர் மீது எங்களுக்கு ஆரம்பம் முதலே சந்தேகம் இருந்துவந்தது. பண மதிப்பிழப்பு சமயத்தில், அந்த குடும்பத்தினர் மற்றும் அவர்களுடைய உறவினர்கள், நெருக்கமானவர்கள் எங்களின் சந்தேக வளையத்தில் இருந்தனர். அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணித்து வந்தோம். வருமான வரிச் சோதனை நடத்துவதற்கு சில நாள்களுக்கு முன்பு, எங்களின் ரகசியக் கூட்டம் நடந்தது. அதில், சோதனைகுறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. சோதனைக்குச் செல்லும் அதிகாரிகளின் பட்டியல், எந்தெந்த இடங்களில் சோதனை நடத்த வேண்டும் என்ற விவரங்கள் ஆலோசிக்கப்பட்டன. அதன்பிறகு, சோதனைக்குச் செல்லும் அதிகாரிகள் பட்டியல் தயாரானது. இது, வழக்கமான நிகழ்வு என்றாலும், சமீபத்தில் சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள் வீடு, அலுவலகங்களில் நடந்த சோதனையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

அதாவது, சோதனையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு சில தகவல்கள் முன்கூட்டியே கொடுக்கப்பட்டன. சென்னையில் வசிக்கும் சசிகலாவுக்கு நெருக்கமான ஒருவரது வீட்டில் சோதனை நடந்தபோது, அங்குள்ள லாக்கர், ரகசிய அறை, ஃபைல்கள் விவரங்கள் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு போன்மூலம் தெரிவிக்கப்பட்டது. அந்த வீட்டில்கிடைத்த ஆவணம் ஒன்றில், பணப் பரிவர்த்தனை, பினாமி சொத்து விவரங்கள் போன்ற ரகசிய விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. அதன் தொடர்ச்சியாக, கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் ஒருவர் வீட்டில் சோதனையில் ஈடுபட்டோம். நாங்கள் தேடிவந்த ஆவணம் அந்த வீட்டில் கிடைத்தது. அதுபோல, ராமாவரத்தில் உள்ள சசிகலாவுக்கு நெருக்கமான ஒருவர் வீட்டில் சோதனையில் ஈடுபட்டபோது, டைரி ஒன்று கிடைத்தது. அந்த டைரியில், யாருக்கெல்லாம் பணம் கொடுக்கப்பட்டது என்ற விவரங்கள் இருந்தன. அந்தப் பட்டியலில் உள்ளவர்கள் வீட்டுக்குச் சென்றபோது, கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதைப் பறிமுதல்செய்த அதிகாரிகள், சம்பந்தப்பட்டவர்களிடம் முதல்கட்ட விசாரணையை முடித்துவிட்டு, சம்மன் கொடுத்துவிட்டு வந்துள்ளோம்.

வருமான வரி சோதனை

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா, தினகரன் ஆகியோரை அடுத்து, திவாகரனின் மகன் ஜெயானந்த், இளவரசியின் மகன் விவேக், மகள் கிருஷ்ணப்ரியா ஆகியோரை மையப்படுத்தித்தான் அ.தி.மு.க உள்விவகாரங்கள் நடந்தன. கூவத்தூரில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களை சிறைபிடித்து வைத்த சமயத்தில், அவர்களுக்குத் தங்கம் கொடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. அதன் பின்புலத்தில் மன்னார்குடி உறவுகள் சிலர் உள்ளனர். அவர்களும் எங்களுடைய சந்தேக வளையத்தில் உள்ளனர்.

விவேக் வீடு, அலுவலகம் ஆகியவற்றிலிருந்து கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில், அவரிடம் முதல்கட்ட விசாரணை நடத்திமுடித்துள்ளோம். நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். இருப்பினும், அவரது விளக்கத்தில் எங்களுக்கு திருப்தியில்லை. இதனால் மீண்டும் அவரிடம் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அதுபோல, கிருஷ்ணப்ரியாவிடமும் விசாரணை நடத்த முடிவுசெய்துள்ளோம். எங்களின் சந்தேக வளைத்தில் 900 பேர் உள்ளனர். தேவைப்பட்டால், அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிப்போம். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தச் சோதனையைத் திசை திருப்புகின்றனர். ஆனால், எங்களைப் பொறுத்தவரை வரி ஏய்ப்பு செய்தவர்களிடம் சோதனை நடத்துவதாகக் கருதுகிறோம். அரசியல் தலையீடு எதுவுமில்லை. வரி ஏய்ப்பு செய்யவில்லை என்றால், சோதனை வளையத்தில் சிக்கியவர்கள் ஏன் பயப்படவேண்டும் என்றனர்.

 

பெயரைக் குறிப்பிட விரும்பாத வருமான வரித்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள், நெருக்கமானவர்கள், நண்பர்கள் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்துவதற்கு முன், வருமான வரித்துறைக்கு ஒரு ஃபைல் கிடைத்தது. அதில், எங்கெல்லாம் பினாமி சொத்துக்கள் உள்ளன. போலி கம்பெனிகள், வங்கிக் கணக்குகள் என முழு விவரங்களும் ப்ளூ பிரின்ட் போல அந்த ஃபைலில் குறிப்பிடப்பட்டிருந்தன. அதன்அடிப்படையில்தான் இந்தச் சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம். மன்னார்குடி குடும்ப உறவுகளின் வீடுகளிலிருந்து கிடைத்த ஆவணங்கள், அடுத்தடுத்த சோதனையை நடத்த வழிவகுத்தது. அதனால்தான் 5 நாள்கள் சோதனை நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டது" என்றார் சுருக்கமாக. 

https://www.vikatan.com/news/tamilnadu/107756-from-ramavaram-diary-to-vivek-jayaramanoutcomes-of-it-raids.html

Link to comment
Share on other sites

சொத்து குவிப்பு வழக்கு நடக்கும் போதே வாங்கிய, ‛தைரியம்'

 
 
 
 
Advertisement
 
சொத்து குவிப்பு  வழக்கு, Property accumulation case,கர்சன் எஸ்டேட்,Curzon estate ,ஜெயலலிதா,Jayalalitha, சசிகலா கும்பல்,Sasikala gang, கோடநாடு, Kotanatu, பெங்களூரு நீதிமன்றம், Bengaluru court,இளவரசி , ilavarasi,

 

கோவை: கோடநாடு எஸ்டேட் உட்பட, பல்வேறு சொத்துக்கள் தொடர்பாக, கர்நாடக மாநிலம் பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தபோதே, கர்சன் எஸ்டேட்டை ஜெயலலிதா மற்றும் சசி கும்பல் சேர்ந்து தைரியமாக வாங்கியுள்ளது.

 

திவாகரன் மூலம்

இது தொடர்பாக, கோடநாடு வட்டாரங்கள் கூறியதாவது: ஜெயலலிதா, சசிகலாவின் சொத்து குவிப்பு வழக்கு, பெங்களுரூ நீதிமன்றத்தில் நடந்து வந்தபோது, சென்னையில் இருவருக்குள்ளும், 2011ல் திடீரென கருத்து வேறுபாடு எழுந்தது. அப்போது, சசிகலா வெளியேற்றப்பட்டார். ஒரு மாதம், அவர், ஜெயலலிதாவுடன் தொடர்பில் இல்லாமல் இருந்தார். அப்போது, கோடநாடு எஸ்டேட்டிற்குள்ளும் சேர்க்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில், கர்சன் எஸ்டேட் ஏலம் தொடர்பான விளம்பரம் வந்தபோது, தாங்களும் கோத்தகிரி உட்பட நீலகிரி பகுதியில் எஸ்டேட் வாங்க வேண்டும் என, சசிகலா குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். அதை, திவாகரன் மூலமாக வாங்க, அப்போதே முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதை தவிர, தாய்சோலையில் உள்ள, 1,200 ஏக்கர் பரப்பிலான ஒரு எஸ்டேட்; எடக்காடு பகுதியில் உள்ள, 750 ஏக்கர் பரப்பிலான ஒரு எஸ்டேட் ஆகியவற்றை வாங்கவும், சசிகலாவின் குடும்பத்தினர் முயற்சி மேற்கொண்டனர். 

 

சுமூகம்

ஆனால், கர்சன் எஸ்டேட் மட்டுமே வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டது. மற்ற எஸ்டேட்களை, சில பிரச்னைகள் காரணமாக, அதன் நிர்வாகங்கள் விற்பனை செய்ய முன் வரவில்லை. இந்த சூழ்நிலையில், ஜெ., - சசிக்குள் திடீரென பிரச்னைகள் சுமுகமாக முடிந்தன. அதனால், கோடநாடு எஸ்டேட்டை போலவே, சசிகலா, இளவரசி ஆகியோர் சேர்ந்து, ஜெயலலிதாவையும் இணைத்து, கர்சன் எஸ்டேட்டை, 2012ல் வாங்கினர். அதில், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிலரையும் இயக்குனர்களாக சேர்த்தனர். இவ்வாறுஅவர்கள் தெரிவித்தனர்.
கர்நாடகாவில் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை நடந்து வரும் வேளையிலும், அதை பொருட்படுத்தாமல், மீண்டும் சொத்து சேர்ப்பதிலேயே, இவர்கள் குறியாக இருந்தது, கர்சன் எஸ்டேட்டை வாங்கியதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1896699

Link to comment
Share on other sites

சோதனையில் ஈடுபட்டது 1,800 அதிகாரிகளா.. உண்மை நிலவரம் என்ன?

 

 
raid


சென்னை: தமிழகம், கர்நாடகா, புதுவையில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனை தமிழகத்தையே பரபரப்பாக்கியது.

பல இடங்களில் நேற்றுடன் சோதனை நிறைவடைந்த நிலையில், ஒரு சில இடங்களில் 6வது நாளாக இன்றும் சோதனை நடந்து வருகிறது.

இந்த நிலையில், நவம்பர் 9ம் தேதி அதாவது கடந்த வாரம் வியாழக்கிழமை அதிகாலை தொடங்கிய சோதனை, நேற்று வரை நீடித்தது. 

சோதனை தொடங்கியது முதல், பல தகவல்கள் உடனுக்குடன் வெளியாகின. உண்மையில் வெளியான தகவல்களுக்கும், நிதர்சனமான உண்மைக்கும் எந்த அளவுக்கு இடைவெளி இருக்கிறது என்பதை விரிவாகப் பார்க்கலாம்..

அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலர் சசிகலா என்ற ஒரே ஒரு மையப் புள்ளியை அடிப்படையாக வைத்து அவருடைய உறவினர்கள், நண்பர்களின் வீடு, அலுவலகம், அவர்களுக்கு உதவியவர்கள் என 187 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள், முடக்கப்பட்ட வங்கிக் கணக்கு என எத்தனையோ தகவல்கள் வெளியாகின. தமிழகம் மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் 187இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 1,800 வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அனைத்துப் புள்ளி விவரங்களும் அதையே மேற்கோள் காட்டின.

ஆனால், உண்மையில் இந்த அதிரடி சோதனையில் 1,800 அதிகாரிகள் ஈடுபடவில்லை என்றும், அவ்வளவு ஏன், இதில் பாதி அதிகாரிகள் கூட சோதனையில் ஈடுபடவில்லை என்றும் கூறுகிறார்கள். உண்மையான எண்ணிக்கை வெறும் 600 முதல் 650 அதிகாரிகள்தான் என்கிறது உண்மை நிலவரம்.

அடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் உண்மையே. ஆனால், புதுச்சேரியின் ஆரோவில்லில் உள்ள டிடிவி தினகரனின் வீட்டில் பாதாள அறைகள் இருந்ததாக வெளியானது உண்மையான தகவல் இல்லை என்றும் மறுக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனையில் முக்கியப் பங்காற்றிய அதிகாரி ஒருவர் கூறுகையில், "பொதுவாக ஒரு சோதனைக்கு இரண்டு அதிகாரிகளும், இரண்டு சாட்சிகளும் அனுப்பி வைக்கப்படுவார்கள். அதே போல 187 இடங்களில் சோதனை நடந்தது மட்டும்தான் உண்மை. இதில் 600 முதல் 650 பேர் தான் ஈடுபட்டனர். ஊடகங்களில் வெளியானது போல 1,800 பேர் அல்ல" என்கிறார்.

இதில், சிரிப்பாக சிரிக்கும் ஒரு தகவலையும் அதிகாரி பகிர்ந்து கொண்டார். அதாவது, கொடநாடு எஸ்டேட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையே செய்யவில்லை. ஆனால், கொடநாடு எஸ்டேட்டில் தொடர்ந்து சோதனை என்று ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது என்றார்.

நூறு கோடிக்கும் மேற்பட்ட மதிப்பு கொண்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது உண்மை. வருமான வரித்துறை சோதனை நடத்திய இடங்களின் 3 உரிமையாளர்கள் மற்றும் இருவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். அதாவது, இளவரசியின் மகன் விவேக், சசிகலாவின் சகோதரர் சுந்தரவதனம், அதிமுக கர்நாடக மாநில செயலர் புகழேந்தி, பூங்குன்றம் மற்றும் மருத்துவர் சிவக்குமார் ஆகியோரிடம் வருமான வரித்துறையினர் நேற்று விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், ஜாஸ் சினிமா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் 3 பேர் வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகியுள்ளனர்.

http://www.dinamani.com/tamilnadu/2017/nov/14/சோதனையில்-ஈடுபட்டது-1800-அதிகாரிகளா-உண்மை-நிலவரம்-என்ன-2807768.html

Link to comment
Share on other sites

சசி,கும்பல்,கொள்ளைக்கு,தலைமை,வகித்தது,திவாகரன்?

கோடி கோடியாய், சசி கும்பல் அடித்த கொள்ளைக்கு, சசிகலாவின் தம்பி, திவாகரன்,
மூளையாகவும், தலைமையாகவும் இருந்துள்ள தகவல், வருமான வரித்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. கோடிகளை கொட்டி, பல காற்றாலைகளை வாங்கி குவித்ததும், விசாரணையில் அம்பலம் ஆகியுள்ளது. முறைகேடுகளை மறைக்க துவக்கப்பட்ட, போலி கம்பெனிகளில், இளவரசியின் வாரிசுகள், விவேக், ஷகிலா, கிருஷ்ணபிரியா ஆகியோருக்கு, முக்கிய பங்கு இருப்பதை கண்டுபிடித்த வரித்துறை அதிகாரிகள், சசி குடும்பத்தினர் வீடுகளில் கிடைத்த, வைரக் குவியலை மதிப்பிட முடியாமல் திணறுகின்றனர்.

 

சசி,கும்பல்,கொள்ளைக்கு,தலைமை,வகித்தது,திவாகரன்?

தமிழகம் முழுவதும், சசிகலாவின் சொந்தங்கள், துாரத்து உறவுகள், பினாமிகள், போலி நிறுவனங்கள் என, 200க்கும் மேற்பட்ட இடங்களில், ஒரே நேரத்தில், நவ., 9ல், அதிரடி சோதனை துவங்கியது.
 

அதிகாரமிக்க தலைவர்


இச்சோதனை குறித்து, வருமான வரித்துறை புலனாய்வு அதிகாரிகள், நேற்று கூறியதாவது:
சசி கும்பல், மோசடி வழியில் சம்பாதித்த பணம் மற்றும் சொத்துகளை, எங்கு முதலீடு செய்வது; யாருக்கு, அதை பிரித்து தருவது என்பது போன்ற முக்கிய முடிவுகளை, சசிகலாவின் தம்பி திவாகரன் தான் எடுத்துள்ளார்.

அவர் தான், 'ஜாஸ் சினிமாஸ்' மற்றும் சில நிறுவனங்களை, விவேக் பொறுப்பில் விடுவது என்ற, முடிவையும் எடுத்து உள்ளார். அவரே, மிகப்பெரிய சசி குடும்பத்தின், சர்வ அதிகார மிக்க தலைவராக செயல்பட்டுள்ளார். அவரது ஆலோசனைப்படியே, குவித்த பணத்தில் கணிசமான தொகையை, காற்றாலைகளில் முதலீடு செய்துள்ளனர். ஒரு காற்றாலையாக வாங்காமல், காற்றாலைகள் இணைந்த

பெரிய குழுமத்தையே, மொத்தமாக விலைக்கு வாங்கியுள்ளனர். அதற்கு, இத்துறையில் பிரபலமாக உள்ள, 'விண்ட் மில்' சுப்ரமணியன் உதவியிருக்கிறார்.

இதுபோல்,பல நிறுவனங்களை,சமீப காலத்தில் வாங்கியுள்ளனர். அவற்றுக்காக, பல நுாறு கோடி ரூபாய் விலையாக கொடுத்ததற்கான ஆதாரங்களும் சிக்கியுள்ளன.விவேக்கின் சகோதரியர், கிருஷ்ணபிரியா, ஷகிலாவுக்கு, போலி நிறுவனங்களை கையாளும் முக்கிய பொறுப்பை, திவாகரன் தந்துள்ளார். அதனால் தான், விவேக், கிருஷ்ணபிரியா ஆகியோரது வீடுகளில், மற்ற இடங்களை விட,அதிக நேரம் சோதனையிட வேண்டிய நிலை ஏற்பட்டது.
 

மர்மம் வெளிவரும்


சோதனையின் போது, வங்கிகளில், 15 'லாக்கர் களில்' முக்கியமான ஆவணங்கள் வைத்து இருந்தது தெரிய வந்தது. அவற்றை திறந்து சோதனையிடும் போது, மேலும் பல நுாறு கோடிகளுக்கான மர்மம் வெளிவரும். இவர் களின் வீடுகளில் கிடைத்த வைர குவியலை, எங்களால் மதிப்பிடமுடியவில்லை. அதனால், அவற்றை மதிப்பிட, நம்பகமான மதிப்பீட்டாளர் களை, தேடி வருகிறோம்.

இந்த விவகாரத்தில், 300 பேர், 400 பேருக்கு, 'சம்மன்'அனுப்பியதாக கூறபடுவதில் உண்மை இல்லை.பினாமி சொத்து, போலி பரிவர்த்தனை ஆகியவற்றை குறிவைத்தே, இந்த சோதனை களை நடத்தினோம்.அதில், ஒட்டுமொத்த வருமான வரி வட்டாரமே அதிரும் அளவுக்கு, மிகப்பெரிய பலன் கிடைத்து உள்ளது. ஆவணங்களை மதிப்பிடுவதற்கே, அதிக நாட்கள் தேவை.ஒவ்வொரு ஆவணத்தையும் ஆராயத் துவங்கினால், ஒன்றில் இருந்து இன்னொன்று என, நுாறு தொடர்புகள் வருகின்றன.

அவற்றை விசாரித்து முடிப்பது என்பது, எங்களுக்கு மிகப்பெரிய சவால். இதில், தொடர்புடைய எந்த நபரையும், சாதாரணமாக கருத முடியாது; எதுவும் அவரிடம் இருக்காது என, எளிதில் விட்டு விட முடியாது. அதனால், மிகவும் சிரத்தையுடன், ஆழமான விசாரணை யில் இறங்க உள்ளோம்.முதல் தகவல் அறிக்கை பதியும்போது, முழு விபரமும் வெளியாகும்.அத்துடன், 'சத்யம் சினிமாஸ்'

 

வசமிருந்த 'லுாக்ஸ்' திரையரங்குகளை, விவேக்கின் 'ஜாஸ் சினிமாஸ்' வாங்கியது தொடர்பான இருதரப்பு ஆவணங்களையும் கேட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
 

துப்பாக்கி கிடைத்ததா?


சென்னை, மகாலிங்கபுரத்தில் உள்ள, விவேக் வீட்டில், துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதாக, நேற்று தகவல் வெளியானது. அது குறித்து, அதிகாரிகள் கூறும்போது, 'துப்பாக்கி எதையும், நாங்கள் பறிமுதல் செய்யவில்லை. அப்படி பறிமுதல் செய்வதாக இருந்தால், அதை, காவல் துறை தான் செய்ய முடியும்' என்றனர். விவேக்குக்கு, மிக குறைந்த கால அவகாசத் தில், சென்னை போலீசார், துப்பாக்கி உரிமம் வழங்கியுள்ளனர்.
 

தங்கம் தந்த சுரானா!



* சசிகலா கும்பல், ஊழல் பணத்தை, முதலீடு செய்ய முடியாமல் திணறியுள்ளது. அப்போது, சென்னையைச் சேர்ந்த தங்க நகை வியாபாரி சுரானா, அவர்களுக்கு உதவியுள்ளார். கோடிக் கணக்கில் பணம் பெற்று, தங்க நகைகளை, முறைகேடாக வாங்கி கொடுத்து உள்ளார். சென்னை, சவுகார்பேட்டை யில் உள்ள, அவரது வீடு மற்றும் பாரிமுனையில் உள்ள அவரது நிறுவனத்தில், 2016ல் வருமான வரித்துறை சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது

*மன்னார்குடியில் உள்ள, திவாகரனுக்கு சொந்தமான செங்கமல தாயார் கல்லுாரியில்,
சில ஆவணங்கள் கிடைத்தன. அங்கு, மாணவியர் விடுதியில், 65 லட்சம் ரூபாய் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது.
 

'மிடாஸில்' சிக்கியது என்ன?


காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையில், சசிகலா கும்பலுக்கு சொந்தமான, 'மிடாஸ்' மதுபான ஆலை உள்ளது.அங்கு,5 நாட்கள் தொடர் சோதனை நடந்தது. அதில், அவர்கள், கோடிக் கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததற்கான, ஆவணங்கள் சிக்கியுள்ளன. அது தவிர, வருவாயை குறைத்துக் காட்டியதற்கான, முக்கிய ஆவணங்களும் சிக்கியுள்ளன.

-நமது சிறப்பு நிருபர்-

http://www.dinamalar.com/news_detail.asp?id=1896866

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.