Jump to content

Laxmi short film


Recommended Posts

'லட்சுமி' குறும்படம் மீதான கடும் விமர்சனங்கள் - குறுகிய கண்ணோட்டத்தின் வெளிப்பாடா?

 
'லட்சுமி' குறும்படம் மீதான கடும் விமர்சனங்கள் - குறுகிய கண்ணோட்டத்தின் வெளிப்பாடா?படத்தின் காப்புரிமைYOUTUBE

அன்றாட வாழ்க்கையில் அழுத்தத்துக்கு ஆளாகும் திருமணமான ஒரு பெண், திடீரென அறிமுகமாகும் ஆண் ஒருவருடன் நெருங்கிப் பழகி, அந்த நட்பினால் அவர் எவ்வளவு தூரம் செல்கிறார், பின்னர் அவர் என்ன முடிவெடுக்கிறார் என்பது அண்மையில் சமூகவலைத்தளமான யு டியூப்பில் வெளியாகி மிகவும் வைரலான லட்சுமி குறும்படத்தின் கதையாகும்.

கே. எம். சர்ஜூனின் இயக்கத்தில் வெளிவந்த இந்த குறும்படத்தில், பாரதியார் பாடல் பயன்படுத்தப்பட்டிருப்பதும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

இந்த குறும்படம் உண்டாக்கிய தாக்கம் குறித்தும், சமூகவலைதளத்தில் இது குறித்து எழுந்த விமர்சனங்கள் குறித்தும் கருத்து கேட்டபோது, கருத்துக்கூற இயக்குநர் கே. எம். சர்ஜூன் மறுத்துவிட்டார்.

லட்சுமி குறும்படம்படத்தின் காப்புரிமைLAKSHMI SHORT FILM

இந்த குறும்படத்தில் லட்சுமி கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள லட்சுமிபிரியா, பிபிசி தமிழிடம் கூறுகையில், ''இந்த குறும்படம் குறித்து வரவேற்பு அல்லது விமர்சனம் என்று எந்த கருத்தை தெரிவிப்பவராக இருந்தாலும், அனைவரையும் இந்த குறும்படம் பார்க்க வைத்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ளமுடிகிறது'' என்று தெரிவித்தார்.

''ஒரு இயக்குநர் மற்றும் எழுத்தாளரின் எண்ணத்தை திரையில் வெளிப்படுத்தும் கருவியாகத்தான் நான் செயல்பட்டேன். மேலும், இந்த குறும்படத்தை தவறாக புரிந்து கொண்டவர்கள்தான் விமர்சனங்களை தெரிவிக்கின்றனர். படத்தின் காலவரிசையை பலரும் தவறாக புரிந்து கொண்டனர்'' என்று அவர் தெரிவித்தார்.

'விமர்சிப்பவர்கள் நாகரீகமாக கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்'

சமூகத்தின் பார்வையில் ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என்ற நிலை இன்னமும் மாறவில்லை. இந்த படம் என்றில்லை பல விஷயங்களிலும் பெண்ணுக்கு சமஉரிமை இன்னமும் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்ட லட்சுமிபிரியா, ''இந்த படத்தின் கரு குறித்து பல விமர்சனங்கள் இருந்தாலும், எனது பங்களிப்பு குறித்து பொதுவாக பாராட்டுக்களே கிடைத்துள்ளது'' என்று கூறினார்.

லட்சுமி கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நடிகை லட்சுமிபிரியா Image captionலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை லட்சுமிபிரியா

''இந்த குறும்படத்தை விமர்சனம் செய்பவர்கள் முழுமையாக படத்தை பார்த்துவிட்டு , அவர்களின் கருத்து எதுவாக இருந்தாலும், அதனை நாகரீமாகவும், மரியாதையாகவும் கூறவேண்டும். அதுவே மதிக்கத்தக்கதாக இருக்கும்'' என்று கூறிய லட்சுமிபிரியா, சமூகவலைத்தளங்களில் தன் மீதும், குறும்படத்தின் இயக்குநர் மீதும் சிலர் வசைக்கருத்துக்களுடன் கூடிய விமர்சனங்களை பதிவிடுவதாக குறிப்பிட்டார்.

'லட்சுமி செய்தது சரியா?'

சமூகவலைத்தளத்தில் இந்த குறும்படம் பற்றி எழுந்த விமர்சனங்கள் குறித்து கட்டுரை எழுதியவரும், பத்திரிக்கையாளருமான சௌமியா ராஜேந்திரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், ''இந்தப் படம் ஒரு சாதாரண பெண்ணின் கதை. இது நடக்காத ஒரு சம்பவம் இல்லை. சமூகத்தில் நடக்கும் ஒன்றுதான். புரட்சிகரமான கதையாக இதை பார்க்கத் தேவையில்லை'' என்று தெரிவித்தார்.

பாரதியின் புதுமைப்பெண் இது அல்ல என்று விமர்சிப்பவர்கள் பாரதியின் புதுமைப் பெண்ணையும் ஆதரிப்பவர்கள் இல்லை என்று குறிப்பிட்ட சௌமியா, ''ஆணாதிக்க சமூகத்தின் ஒரு எதிர்வினையாகதான் இதை பார்க்கிறேன்'' என்று தெரிவித்தார்.

''லட்சுமி செய்தது சரி என்று நான் வாதாடவில்லை. லட்சுமி ஒரு புனைவு காதாபாத்திரம்தான். ஒரு பெண் புனைவு கதாப்பாத்திரம் திரையில் செய்யும் ஒரு விஷயத்தைகூட சிலரால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. இது ஏன்?'''' என்று வினவினார்.

ஆணுக்கு ஒரு நீதி? பெண்ணுக்கு ஒரு நீதியா?

''திரிஷா அல்லது நயன்தாரா என்று படத்தின் தலைப்பு கூட வருகிறது. திரையில் ஆண்கள் இரண்டு கதாநாயகிகளுடன் காதல் செய்வதை நாம் ஏற்றுக் கொண்டு ரசித்திருக்கிறோம் ஆனால், ஒரு பெண் குறும்படத்தில் இவ்வாறு நடித்தது ஏன் இந்த அளவுக்கு விமர்சிக்கப்படுகிறது?'' என்றும் சௌமியா கேள்வி எழுப்பினார்.

பத்திரிக்கையாளர் சௌமியா ராஜேந்திரன்படத்தின் காப்புரிமைFACEBOOK Image captionபத்திரிக்கையாளர் சௌமியா ராஜேந்திரன்

இதனை பெண்ணியம் என்று லட்சுமியோ அல்லது குறும்பட இயக்குநர் அளித்த குறிப்பிலோ எங்குமே கூறவில்லை. இது போன்ற படங்கள் வருவதே அரிது . அதனால், இது போன்ற படங்களை , பார்வையாளர்கள் பெண்ணிய பகுப்பாய்வு செய்யலாம் என்றும் கூறினார்.

''லட்சுமியோ அல்லது அந்த குறும்படத்தின் இயக்குநரோ பெண்ணிய ஆதரவாளர் என்று கூறுவதே தவறு. ஆனால், ஒரு ஆண் செய்யும் ஒன்றை எவ்வாறு வரவேற்கிறோமோ அதனை பெண் செய்யும்போது எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பதில்தான் பெண்ணியம் என்ற அம்சமே வருகிறது'' என்று கூறிய செளமியா, ஆண் செய்யும் ஒன்றை பெண் செய்யும்போது ஏன் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதை சிந்திப்பதுதான் பெண்ணியம் என்றும் குறிப்பிட்டார்.

இந்த படத்தில் உள்ள சில அம்சங்களை நான் ஆதரிக்கவில்லை. பெண் சுதந்திரம் என்றவுடன் பாரதியை மேற்கோள் காட்ட தேவையில்லை. அந்த பெண்ணின் பயணம் அவராகவே எடுத்த முடிவாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், இந்த அளவு விமர்சனங்கள் தேவையற்றது'' என்று செளமியா ராஜேந்திரன் குறிப்பிட்டார்.

ஓரிரு சம்பவங்களை மிகைப்படுத்துவதா?

லட்சுமி குறும்படம் குறித்த விமர்சனங்கள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் பேச்சாளரான நாராயணன் ''தேசத்தின் கலாசாரத்தை பாதிக்கும் எந்தவொரு சர்ச்சைக்குரிய விஷயமானாலும், அது பல்வேறு விமர்சனங்களை எதிர்கொள்ளத்தான் செய்கிறது'' என்று கூறினார்.

'' இதுபோன்ற குறும்படம் எடுப்பவர்கள், கேலிச்சித்திரம் வரைபவர்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து, அது சமுதாயத்தில் எவ்வித தாக்கத்தை உண்டாக்கும் என்று உணர்ந்து செயல்படவேண்டும்'' என்று அவர் தெரிவித்தார்.

நாராயணன் Image captionநாராயணன்

அங்கொன்றும், இங்கொன்றும் நடக்கும் ஓரிரு சம்பவங்களை மிகைப்படுத்தி அதனை திரைப்படம், குறும்படம் அல்லது நாவல்களில் கூறுவது உறுதியாக சமூகத்தில் சில சிக்கல்களை உருவாக்கும். இதை தவிர்ப்பது நல்லது என்று நாராயணன் மேலும் கூறினார்.

நம் சமூகம் ஆணாதிக்க சமூகமாக இருப்பது நிச்சயம் களையப்பட வேண்டும் என்று கூறிய நாராயணன், ''ஒரு குறும்படம் தவறாக தெரிந்தாலும் அதனை விமர்சனம் செய்வதற்கு ஓர் எல்லை உண்டு என்பது உண்மைதான்'' என்றும் குறிப்பிட்டார்.

'நாள் முழுக்க ஒரு படம் குறித்து பேசி நேரத்தை வீணாக்குவதா?'

லட்சுமி குறும்படம் குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்கள் குறித்து பேசிய நடிகர் எஸ்.வி. சேகர் ''இந்த குறும்படத்தை நான் பார்த்தேன். குறும்படத்துக்கு உரிய அம்சத்துடன் கருத்தை மிகவும் சுருக்கமாகவும், நன்றாகவும் இதில் கூறியிருக்கிறார்கள். இதில் எப்படி சர்ச்சை வந்தது?'' என்று வினவினார்.

எஸ்.வி. சேகர் Image captionஎஸ்.வி. சேகர்

பாரதியின் கவிதைகள் இதில் பயன்படுத்தப்பட்டிருப்பது சர்ச்சைக்குள்ளானது குறித்து பேசிய அவர், படத்தில் எதை சேர்க்க வேண்டும், எதை சேர்க்கக்கூடாது என்பது இயக்குநர் முடிவு சார்ந்த விஷயம் என்று குறிப்பிட்டார்.

''ஆண்கள் இருதார மணம் செய்வது போன்ற திரைப்படங்கள் முன்பு வெளிவந்தபோது ஏன் அதிகமாக விமர்சிக்கப்படவில்லை என்று கேட்டதற்கு ''தற்போது சமூகவலைத்தளங்கள் மிக தீவிரமாக உள்ளதுதான் முக்கிய காரணம். அதே சமயம், சமூகத்தில் ஆணாதிக்க மனப்பான்மை முழுமையாக அகலவில்லை. அதற்கு காலம் ஆகும்'' என்று எஸ்.வி. சேகர் தெரிவித்தார்.

''எந்தப் படம் சர்ச்சையை நோக்கிப் போகிறதோ அது வெற்றிப்படம்தான் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், என்னைப் பொறுத்தவரை இது ஒரு தரமான குறும்படம். ஒரு படத்தை பார்த்தால் அதை பற்றியே நாள் முழுக்க பேசி நேரத்தை வீணாக்க கூடாது. அந்த அளவுக்கு என்னிடம் நேரம் இல்லை'' என்று எஸ்.வி. சேகர் தெரிவித்தார்.

'இயக்குநரே இந்த வெற்றியை எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்'

''இந்த குறும்படத்தில் வருவது மிகவும் சாதாரண விஷயம்தான். ஆனால், தமிழ் சமூகம் எப்போதுமே நடைமுறையில் இருப்பதையும், வெளியேயும் வெவ்வேறாக காட்டிக் கொள்வது வழக்கம். மேலும். மீம்கள் உருவாக்குபவர்கள் இந்த குறும்படம் குறித்து அதிகமாக கிண்டலடிக்க ஆரம்பித்தனர். இதனாலே இது இந்த அளவுக்கு வைரலானது'' என்று எழுத்தாளரும், வலைப்பூ பதிவருமான அராத்து பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

''இந்த குறும்படம் இந்த அளவுக்கு வெற்றி பெறும் என்று அந்த இயக்குநரே எதிர்ப்பார்த்திருக்க மாட்டார். அதனால், இதனை ஒரு முன்மாதிரியாக கொண்டு இதைவிட கலாசார அதிர்ச்சிகள் சார்ந்த படங்கள் மேலும் வரக்கூடும்'' என்று அவர் தெரிவித்தார்.

எழுத்தாளருமான, பிளாக்கருமான அராத்துபடத்தின் காப்புரிமைFACEBOOK Image captionஎழுத்தாளருமான, பிளாக்கருமான அராத்து

''இந்த குறும்படத்தில் வரும் லட்சுமி ஒரு சாதாரண அச்சகத்தில் வேலை பார்ப்பதாக சித்தரிக்கப்படுகிறது. ஆனால், அவரது உடல் மொழி, மற்றும் அவர் அணிந்திருக்கும் ஆடை போன்றவை அவ்வாறு இருக்காது. மேலும் இந்த குறும்படத்தில் வரும் வேலையில்லாத ஓவியருக்கு இவ்வளவு பெரிய வீடு இருக்க வாய்ப்பில்லை'' என்று அராத்து கூறினார்.

இந்த குறும்படத்தில் நாடகத்தன்மை அதிகமாக உள்ளது. இதுவே கேலி, கிண்டலுக்கு வழிவகுத்தது என்று அராத்து மேலும் தெரிவித்தார்.

''திருமணத்தை மீறி ஒரு பெண் வேறொரு உறவு வைத்திருக்கிறாள் என்பதை எந்த ஜோடனையும் இன்றி கூறியிருந்தாலோ அல்லது அவளது கணவருக்கு வேறு ஏதோ தீவிர பிரச்சனை இருக்கிறது, அதனால் அந்த பந்தத்தில் இருந்து அவள் வெளியேறுகிறாள் என்று கூறப்பட்டிருந்தாலோ இந்த அளவு விமர்சிக்கப்பட்டிருக்காது'' என்று அராத்து குறிப்பிட்டார்.

ஜிமிக்கி கம்மல் நடனம் - லட்சுமி குறும்படம் - ஒரு ஒப்பீடு

இந்த குறும்படம் இந்த அளவுக்கு புகழ் பெற்றது ஏன் என்று கேட்டதற்கு பதிலளித்த அராத்து, ''தமிழ் சமூகத்தில் அந்த நேரத்தில் பேச வேறு விஷயம் கிடைக்காததுதான் காரணமா அல்லது எதையும் கிண்டல் செய்யும் மனப்பான்மையால் இது பிரபலம் அடைந்ததா என்று தெரியவில்லை என்று அராத்து கூறினார்.

லட்சுமி குறும்படம்படத்தின் காப்புரிமைLAKSMI SHORT FILM

''ஜிமிக்கி கம்மல் நடனம் எப்படி யாரும் எதிர்பாராமல் அந்த நேரத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி பிரபலமானதோ, அது போன்றே லட்சுமியும் ஹிட்டானது. இந்த குறும்படம் குறித்த ஆக்கப்பூர்வமான கருத்துக்களால் இது பிரபலம் ஆகவில்லை. இது குறித்த மிகுதியான கிண்டல்களால்தான் பிரபலமானது'' என்றும் அவர் தெரிவித்தார்.

திருமண பந்தத்தை மீறி வேறொரு உறவை நாடிச் செல்லும் ஒருவர் , ஆணாக இருந்தால் ஒருவகை நிலைப்பாடு, பெண்ணாக இருந்தால் வேறொரு நிலைப்பாடு என்ற சமூகத்தின் பார்வை மாறவேண்டும் என்பதே சமூக பார்வையாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் கருத்தாக உள்ளது.

http://www.bbc.com/tamil/arts-and-culture-41970674

Link to comment
Share on other sites

வாதம் விவாதம்: லட்சுமி படம் குறித்து மக்கள் இதைத்தான் சொல்கிறார்கள்!

 
வாதம் விவாதம்படத்தின் காப்புரிமைYOUTUBE

திருமண பந்தத்தை தாண்டிய உறவை நாடிச்செல்லும் நாயகி குறித்து சமூக வலைதளங்களில் வைராலான குறும்படம் `லட்சுமி`.

இந்த படம் வெளியானது முதல் நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் பல விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த திரைப்படத்தில், தனிமனித சுதந்திரம் ஊக்குவிக்கப்படுகிறதா? அல்லது, ஒழுக்கம் என்பது பெண்களுக்கு மட்டுமே பொருத்திப் பார்க்கப்படுகிறதா? என்று பிபிசி தமிழின் வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

அதற்கு பிபிசி தமிழ் நேயர்கள் அளித்த கருத்துக்கள் இதோ.

தங்கம் சி புதியவன் இவ்வாறாக பதிவிட்டு இருக்கிறார், "மெல்லச் சிரி தாரகையே வேறொருவன் வாழ்வில் ஒளிர்ந்ததன்றி வேறொரு குற்றமும் உன் கணக்கில் சேராது. கிரகணம் நோக்கி முன்னேறு மறக்காதே கண்மனியே நீ மிளிர்ந்த இந்நாளை மனதில் கொண்டு கும்மியடி.. ஒரு வாரமா மண்டைக்குள்ள போட்டு கொடஞ்சுக்கிட்ருந்துச்சு இந்தப் படத்த பத்தி என்ன எழுதறதுனு அவர்கள் சென்னதைத் தவிர வேற எந்தக் கருத்தும் பொருத்தமா இருக்காது. நம்ம மனசுல உள்ள உணர்வுகள வெளிய அப்பட்டமா சொன்னா இந்த உலகம் வித்தியாசமா தான் பார்க்கும் ஏன்னா இந்த உலகம் வச்சுருக்கிற போலி ஒழுக்க மதிப்பீடுகள் அவ்வளவு கேவலமானது." என்று பதிவிட்டு இருக்கிறார்.

குலாம் மொய்தீன், "பெண்களை இயந்திர வாழ்க்கைக்கு உட்படுத்தாமல், அவர்களுக்குரிய ஆசாபாசங்களை வழங்குவது ஒரு ஆணின் கடமை என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதையே இக்குறும்படம் சுட்டிக்காட்டுகிறது. இக்கடமையிலிருந்து ஆண் தவறினால், தவறான வாழ்க்கை அமைய தற்போதைய காலகட்டத்தில் நிறைய வழிகள் உண்டு. எனவே, இப்படம் ஆண்களுக்கான அறிவுறையாகவே எடுத்துக்கொள்ளவேண்டும்." என்கிறார்.

ஆனந்தன் மகேந்திரன் இவ்வாறாக தன் கருத்தை தெரிவித்து இருக்கிறார், "கணவருக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு தன் மீது தனிப்பட்ட அக்கறை இல்லை என்பதற்காக யாரோ ஒரு வழிப்போக்கனிடம் உறவு வைத்துக் கொள்வது என்பது மிகவும் கேவலமான சமூக அவலம் தனக்கு ஒரு பையன் இருக்கின்றான் என்பதை மறந்து விட்டு செய்யும் மிகப்பெரும் தவறு இதே மாதிரி ஒரு ஆங்கில படம் addiction என்று நினைக்கிறேன் அந்த கதாநாயகி ஒரு முறை சஞ்சலப்பட்டதின் விளைவு பல பேர் அவளுடன் மிரட்டி உறவு வைத்துக் கொள்வார்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யவும் வாய்ப்பு உள்ளது இந்த மாதிரி ஆட்களை நம்பி சென்றால்."

பவதரஹன் சின்னராசா, "எனது பார்வையில் லக்ஷ்மி .... அவளுக்கும் அவளின் கணவன் எனப்படுபவருக்கும் என்ன உளத்தாக்கமோ அறியவில்லை .பேசி தீர்க்கும் அளவிற்கு அவர்களுக்கு புரிந்துணர்வு இருந்திருந்தாலும் இந்த அளவு அவர்கள் போயிருக்க வேண்டியதும் இல்லை.

எல்லோரும் கூறுவது போல நடுத்தர வர்க்கம் என்ன செய்வது என்பதெல்லாம் இயலாமையின் வெளிப்பாடு .இப்படத்தில் அவளுடைய காட்சி கணவனுக்கு மாற்றப்பட்டிருந்தால் இவ்வளவு தூரம் நம்மவர் பேசியிருப்பாரோ என்னவோ ? பெண்கள் நாட்டின் கண்கள் என்பது பல பெண்களுக்கு வீட்டின் விளக்கு அணைந்த அறையிலே விழி திறக்க படுவதும் உண்மையே.

லக்ஷ்மியும் பயணப்பட வாகனம் இல்லாத போது கணவனுக்கு தொலை பேசி அழைப்பு விடுத்தும் அவன் அடுத்த நாளைக்குரிய உணவை கேட்கும் போது அவளுக்கும் எரிச்சல் தொற்றிகொள்ளத்தான் செய்கிறது . தெரியாத கதிருடன் எப்படி போகலாம் என்பதை விட தெரிந்த கணவனையே நினைத்து கோவம் வருகிறது எனக்கு .அவளும் அவனுடன் கலவி கொள்ளவும் போகவில்லை .காரணம் முன் கூட்டியே கணவன் , குழந்தை இருப்பதை மறைமுகமாக சொல்லிவிடுகிறாள்.

கதிரும் அவளை ரசிப்பில் ஊற வைத்து அவளும் அதன் நீழ்ச்சியில் கலவி கொள்கிறாள் மறு நாள் இனி வேண்டாம் என்றே பேருந்தில் பயணப்படுகிறாள் ! இதில் தெரியாத ஒருவனுடன் ......என்ற கேள்வி எல்லாம் என்பது , கணவனின் பெயர் தெரியாத ஒரு பெண்ணின் அழைப்பையே நினைத்து பார்க்க தோணுகிறது . இன்னொருவனுடன் தொடர்பு என்பது உரியவனின் தொடர்பு சீரற்று இருப்பதுவும் உண்மையே.

எம் சமுதாயத்தில் பெண்களுக்கும் இடம் கொடுப்போம் என்பது என்னால் ஏற்க முடியாத ஒன்று காரணம் இடம் கொடுக்க நாம் யாரும் ஒன்றும் அல்ல .லட்சுமி செய்தது சரியா தவறா என்ற வாதத்தை விடுத்து ..லஷ்மிக்கான சமுதாய பூட்டையும் அவளின் கணவனின் பிழையான போக்கையும் எப்படி துடைக்க போகின்றோம் என்பதே நிதர்சனம் !" என்று தன் கருத்தை பதிவிட்டு இருக்கிறார்.

மதன் சிவாவின் கருத்து இது :"ஆண்கள் மட்டும் என்ன செய்தாலும் பரவாயில்லை..... ஒழுக்கம் இரு பக்கமும் அவசியம் தான்.... பெண்ணின் உணர்வு மிக அருமையாக வொளிகாட்டபட்டுள்ளது.... புரிதலின் அவசியத்தை எடுத்துகாட்டிய படம்...."

நடராஜ் பார்த்திபன் இவ்வாறாக பதிவிட்டு இருக்கிறார், " இன்னொரு பொண்ணு கூட தொடர்புல இருந்த அவன கண்ணுக்கு தெரியல.. அவள் இன்னொருத்தன் கூட போனத தப்புன்னு சொல்லறாங்க.. அவங்ககிட்ட ஒன்னு கேட்டுக்கறேன்.. தப்புன்னு சொன்னா இரண்டு பேர் மேலயும் தப்பு இருக்கு.. கடைசியா ஒன்னு... பொம்பளைங்க என்ன தேவைப்படும் போது உங்க ஆசைய மட்டும் தீர்த்துகற கருவியா...?"

சாதிக்கின் கருத்து, "மனைவி செய்தாலும் கணவன் செய்தாலும் தப்பு தப்பு தான் கணவன் தவறு செய்தால் மனைவி திருத்த வேண்டும் மனைவி நீ தவறு செய்வதால் நானும் செய்வேன் என்று செய்தால் எப்படி குடும்பம் ஓடும் கணவனும் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்ய வேண்டும் அவளை வேலை செய்யும் இயந்திரமாகவும் காம பசிக்கு உணவாக மட்டும் எடுத்துக்கொள்ள கூடாது அவளை இன்ப படுத்த அன்போடு அரவனைத்தால் அதுவே சிறப்பான வாழ்க்கை."

வாதம் விவாதம்
 
 

இதனை ஆண்கள் பெண்கள் தாண்டி இளம் பருவ தம்பி தங்கையரும் பார்க்கின்றனர். மிகவும் தவறான முன்னுதாரணம். வருங்கால இளைஞர்களுக்கு நீங்கள் கற்று தருவது இது தானா... கண்டிக்கத்தக்கது.. ஆண் பெண் சுதந்திரம் கலாச்சாரத்தை கெடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.


  •  
 

தனி மனித சதந்திரம்னு சொல்லிட்டு தவறு செய்வதை ஏற்றுகொள்ளமுடியாது.ஒழுக்கம் இரண்டுபேருக்குமே பொருந்தும்...


  •  
 

நாம் செய்யும் தவறை சரியென எடுத்து கொள்ளும் முட்டாள்தனத்தை காட்டுகிறது


  •  
 

'ஒரே கடல்' படம் பாத்தவங்க இந்த படத்த பெருசா எடுத்துக்க மாட்டாங்க


  •  
 

Thani manitha sudhanthiram sari ana ithu pengala avamanam paduthura mathiri irruku


  •  
 

ஒரு பெண் தன் சூழலால் தடம் மாறுகிறாள் என்பதை வடிவமைப்பில் அவசரப்பட்டு சித்தரித்து அவமானப்படுத்தி விட்டார்கள்.


  •  
 

கற்பென்பதை ஆணுக்கும்,பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம் எனபாரதி பாடினான்.முறை தவறிய உறவு இரு குடும்ப அங்கத்தினர்க்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.கணவன் மனைவி பேசித்தீர்ப்பதே சரி.இல்லையெனில் விலகி வேறுவாழ்க்கை அமைத்துக்கொள்ளலாம்.காமம் தாண்டி வேறு உள்ளது.

http://www.bbc.com/tamil/india-41976401

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குறும்படம் ஒரு நீண்ட விவாதம்

எல்.ஜே. வயலட்

20-1.jpg

எழுத்தாளர் எடுவர்டோ கலியானோ சிறிது காலம் சில சுரங்கத் தொழிலாளர்களிடையே வாழ்ந்து வந்தார், விடைபெறும் சமயத்தில், எப்போதும் கடலையே பார்த்திராத பார்க்கப் போகாதவர்களான அவர்கள் கடலைப் பற்றி சொல்லுமாறு அவரிடம் கேட்கிறார்கள். அவர்களிடம் கடலைக் கொண்டுவரும் கடமையே ‘ஒரு கதைசொல்லியாக தன் முதல் சோதனை, (எழுத்து) பின்தொடர ஏதோ மதிப்புள்ள தேடலே என்று ஏற்கவைத்தது’ என்று கலியானோ சொல்கிறார்.

கடல் இல்லை, என்றாலும் சில அலைகளை மட்டும் ஏற்படுத்திய, லக்ஷ்மி படத்தைப் பார்த்திராத ஒருவருக்கு லக்ஷ்மி படத்தைப் பற்றி என்ன சொல்வது? அல்லது லக்ஷ்மி ஏற்படுத்திய இந்தக் குறுகிய நேர சமூக ஊடகப் பதற்றத்தை எப்படி விளக்குவது?

இந்தக் கட்டுரை வரும்போது லக்ஷ்மி ஏற்படுத்திய சமூக ஊடக அலைகள் மறக்கப்பட்டிருக்கும். அது ஏற்படுத்திய பதற்றங் களைத் தவிர்த்துவிட்டால் லக்ஷ்மியை எடுத்து உரையாடவேண்டிய எவ்வித அவசியமும் தோன்றவில்லை. சில நீண்ட பட்டியல்களில் உரையாடல்களில் அதை இன்னுமொரு உதாரணமாக மட்டுமே சேர்த்துக்கொள்ளலாம். அப்போதும் அதன் மதிப்பை அது வைரலாக இருந்த அரைமாத காலகட்டத்தை ஒட்டியே கணக்கிடமுடியும்.

இந்தப் படத்தின் கதையை ஏறக்குறைய இப்படிச் சொல்லலாம்: இயந்திர வாழ்க்கையில் சிக்கியிருக்கும் ஒரு மத்திய வர்க்கத்துப் பெண். மோசமான, திருப்தியற்ற பாலியல் வாழ்க்கை. அவள் கணவனுக்கு இன்னொரு பெண்ணோடு உறவிருக்கிறது என்று அவள் எண்ணிக்கொள்ளும்படி ஒரு தொலைபேசி அழைப்பு. பின், அவள் தினம் ரயிலில் பார்க்கும் கதிர் என்ற ஆண் மேல் மையலுறுகிறாள். அவர்கள் இருவரும் ஒரு பஸ் ஸ்டாண்டில் தனித்திருக்க நேர்கையில் அவன் தனது கொடூரமான ஓவியங்களைக் காட்டியும் பாரதியார் பாடல்களுக்கு அர்த்தம் கேட்டும் அவளை இம்சிக்கிறான். அப்படியும் அவள் கணவனின் எரிச்சலூட்டும் நடத்தையால் அவனோடு வீட்டுக்குச் செல்ல முடிவெடுக்கிறாள். அங்கே ஒரே இரவில் படம் வரைகிறார்கள், சிற்பம் செய்கிறார்கள், காதலும் செய்கிறார்கள் என நாம் கற்பனை செய்துகொள்ளலாம். மறுநாள் முதல், தொடர்ந்து பஸ்ஸிலேயே செல்ல லக்ஷ்மி எடுக்கும் முடிவு கதிரை தொடர்ந்து சந்திக்கவா அல்லது தவிர்க்கவா என்பது அவரவர் மனநிலையைப் பொறுத்தது.

லக்ஷ்மி - கதிர் சந்திப்பு என்பது ஃப்ளாஷ்பேக். தன் கணவன் இன்னொரு பெண்ணோடு தொடர்பிலிருக் கிறானோ எனச் சந்தேகப்படும் அன்று லக்ஷ்மி தன் செயலை நினைத்துப் பார்க்கிறாள். மறுநாளிலிருந்து பேருந்தில் செல்ல முடிவெடுக்கிறாள் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இந்தப் பார்வை எனக்கு முதலில் தோன்றவில்லை; இப்படி யோசித்தவர்கள் வைரல் பதற்றக் காலகட்டம் முடிந்தபின்னரே இதை முன்வைத்தனர். முன்னமே சொன்ன சிலரின் குரல் பெரிதாகக் கவனிக்கப்படாததால் இது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. இதன்படி பார்த்தால் சண்டையிடுவதற்காச் சிலர் தங்கள் நிலைப்பாடுகளை இடம் மாற்றிக்கொண்டு தொடரவேண்டியிருந்திருக்கும். எப்படிப் பார்த்தாலும் இதைப் புதுமையானதொரு கதை என்று சொல்லமுடியாது. எண்ணற்ற இரண்டாந்தர பிட்டுப் படங்கள் என அழைக்கப்படும் படங்களில் பிட்டை இணைக்கும் கதை இதுதானென்று சொல்லிவிடமுடியும்.

“ஏண்டா டேய் பெண் விடுதலை என்றால் பாரதியைத் தான் சொல்வீர்களா? பாரதி இதைத்தான் பெண் விடுதலை என்றானா? உங்கள் திராவிட வேசிகளின் தந்தை ராமசாமி நாயக்கன்தான் இந்தமாதிரி பெண் விடுதலையின் தந்தை. இந்த நாய் நாயக்கனின் முதலாளி களாகிய இலுமினாட்டிகள் இந்தப் படத்திற்கு விருது கொடுப்பது ஒன்றும் ஆச்சரியமில்லை,” - தொல்காப்பியன் ராக்கி

“கட்டுனவள காதலிங்கடா இல்லனா கண்டவன காதலிப்பா அவ’ணு சொல்லுற ஒரு இறைவி காவியம்!” - சுவா தீ

பெரும்பாலான குறும்படங்களுக்கு நான்கு விருதுகள் எப்படியாவது கிடைத்துவிடுவதை நவீன தொல் காப்பியருக்கு விளக்குவதையோ, லக்ஷ்மி பார்த்து முடித்திருக்கும் நிலையில் சட்டென இறைவியை ஞாபகப்படுத்தினால் ஒருத்திக்கு ஏற்படும் துன்பங்களையோ விடுத்து, இவற்றை லக்ஷ்மிக்கு நிகழ்ந்த பல எதிர்வினைகளின் இரு எடுத்துக்காட்டுகளாகக் கொள்ளலாம். இவ்வாறு பலதரப்பட்ட எதிர்வினைகள் இப்படத்திற்கு ஃபேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் யூட்யூபின் கருத்துகள் பகுதியிலும் எழுதப்பட்டிருக்கின்றன. லக்ஷ்மி படத்திற்கான எதிர்வினைகள் பெரும்பாலும் சமூக ஊடகங்களின் அடிப்படைப் பண்பால் தூண்டப்படுபவை. முதலில் பெரும்பாலும் ‘ஓ மை தமிழ் கலாச்சாரம்’ என்பதுபோன்ற ‘ஆண் தவறுசெய்தா பெண் திருத்தணும், அவளும் செய்யக்கூடாது’ எதிர்வினைகள். பாரதி இதைத்தான் சொன்னானா என்ற பொங்கல்கள், சிறப்புப் பட்டிமன்றம் பாணியில் பாரதி புதுமைப்பெண் என்று இதைச் சொல்லவில்லை. இதைப் பார்த்தால் பாரதி என்ன சொல்வான் தெரியுமா என்ற பதிலில்லாக் கேள்விகள். உண்மையில் பாரதி பாடலும் பாடப்புத்தகங்களில் இடம்பெற்றதாலோ என்னவோ புனிதத்தன்மை அடைந்திருக்கும் பாரதியும் இப்படம் வைரலாக ஒரு முக்கியக் காரணமாகியிருக்கிறார். இவையே மூலங்கள்.

 

பின் இவற்றுக்கு எதிராக வரும், ‘என்னாங்கடா உங்க கலாச்சாரம், பெண்ணை மதிக்காத, பெண்ணின் முடிவுகளைக் கட்டுப்படுத்தும் கலாச்சாரம்’ வகை எதிர்வினைகள். பின் அவற்றைப் பார்த்துவரும், ‘இதானாட உங்க எதிர்க்கலாச்சாரம். இந்தப் படமும் அந்த கலாச்சாரமேதான்,’ வகை எதிர்வினைகள். பின் இவற்றிற்கு வரும், ‘இருந்தாலும் அந்த படம் இந்த மாதிரி பதற்றத்தை உண்டாக்கியிருக்குல்ல,’ எனத் தொடர்ந்துகொண்டேயிருக்கும் எதிரெதிர்வினைகள். இப்படம் பற்றிய இருவேறு யூடியூப் விமர்சனங்களில் ஒன்று “எல்லோரும் இந்தப் படத்தைத் திட்டுறாங்க ஆனால்...” என்றும் “எல்லோரும் இந்தப் படத்தைப் பாராட்டுறாங்க ஆனால்...” என்றும் தொடங்குகின்றன. இவை நமது சமூக வலைதளப் பயன்பாட்டு முறைகள், நபர்கள் பின்பற்றும் பக்கங்கள் போன்றவற்றைச் சார்ந்தது. டிவிட்டரில் மட்டுமே இருக்கும் எனக்கு ட்ரெண்டிங்கில் காணக்கிடைத்ததெல்லாம் முதல்நிலைப் பதற்றங்களே, எனவே படம் எனக்கு என்ன தோன்றவைத்தது என்பதைத் தாண்டி இந்த எதிர்வினைப் பதற்றங்களை ரசிக்கும் மனநிலையே மேலிருந்தது.

யூடியூபிலேயே வெறுமனே ‘தமிழ் படம்’ என்று தேடினால் வரக்கூடிய முதல் அல்லது எண்ணற்ற மறைக்கப்பட்ட பெண் மார்புகளைக் காட்சிப்படமாகக் கொண்ட காட்சிகள்/குறும்படங்களில் ஒன்றைப் பார்க்கத் தொடங்கி அப்படியே தொடர்ந்து பக்கத்தில் காண்பிக்கும் ஐந்து படங்களைப் பார்த்தால் இரண்டிலாவது இந்தக் கதையை நினைவுபடுத்தும் எதனையோ, அல்லது இதே கதையையோ வேறு வேறு வடிவங்களில் பார்க்கமுடியும். ஆனால் அவை எதுவும் ஏற்படுத்தாத ஒரு கலாச்சாரப் பதற்றத்தை லக்ஷ்மி ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு லக்ஷ்மி இந்த எண்ணற்ற பிட்டுப் படங்களை ஒத்துப்போகும் இடங்கள், விலகிச்செல்லும் இடங்கள் இரண்டையுமே காரணமாகச் சொல்லலாம். அதே கதையை இன்னும் இயல்பான அல்லது உண்மையான ஒரு பின்னணியில் கௌதம் மேனன் படங்களோடு ஒப்பிடக்கூடிய அழகிய லோடும் ஒளிப்பதிவுத் தரத்தோடும் மெய்ன்ஸ்டிரீம் தொடர்புகளுடைய யூடியூப் சேனலில் எதிர்கொள்வதால் வரும் பதற்றம் இது.

பெரும்பாலான பிட்டுப் படங்களின் நோக்கம், பார்க்கும் ஆண் பார்வையாளனைக் கிளர்ச்சியுறச் செய்வது தான் என்றாலும், பெரும்பாலானவை ஏதேனும் ஒரு கருத்து சொல்லி முடியும். கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் எதிர் கொண்டு மனம்திருந்துவதில் முடியலாம். இது கிட்டத்தட்டகிளர்ச்சியுற்றுச் சுயமைதுனம் செய்து முடித்துப் பதற்றத்திலிருக்கும் ஆண் மனதிற்குச் சொல்லப்படும் ஆறுதல். இது ஒரு கற்பனையே. இதில் சாதகமாக நடக்க இருக்கும் வாய்ப்புகளை எண்ணிக் கிளர்ச்சியுறலாம்; ஆனால் எதிராகத் திரும்பும் வாய்ப்புகளை எண்ணிப் பதற்றமடையத் தேவை யில்லை. லக்ஷ்மி இந்த ஆறுதலை அளிக்கவில்லை என்று புரிந்துகொண்டதால் வந்த பதற்றமெனவும் இதைச் சொல்லலாம்.

லக்ஷ்மி, வழமையான கலாச்சார மதிப்பீடுகளைக் கேள்வி கேட்பதாகக் கற்பனை செய்துகொள்ளமுடியாது. இந்த முதல்நிலைப் பதற்றத்தை எதிர்கொள்பவர்களின் முக்கியமான வாதங்களில் ஒன்று, எத்தனையோ படங்களில் ஒரு ஆண் இதைச் செய்வதைப் பார்த்த நாம் இதற்கு ஏன் பதற்றமாகிறோம் என்பது. இந்த வைரல் பதற்றத்தை விளக்கக்கூடிய வாதம்தான். இதற்கான பதிலை நாம் தேடவேண்டிய அவசியமில்லை.

லக்ஷ்மியின் கதையை எப்படிப் புரிந்து கொண்டாலும் அந்த ‘தவறு’க்கான காரணத்தைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது, அந்தக் காரணம் லக்ஷ்மிக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கிறது. கலைஞர்கள் என்றொரு தெய்வீகப் பிறவிகளின் அதிமானுடத் தன்மையைப் போற்றினாலும் இந்த ஆண்களையும் லக்ஷ்மி முழுமை யாக ஆற்றுப்படுத்தவில்லை. அது அவர்களின் கவரும் ஆற்றல்களை, விடுதலையளிக்கும் சக்தியை முழுமையாக அங்கீகரிக்கவில்லை. கதிர் காண்பித்த அந்த ஓவியமோ (மனசாட்சியே இல்லாமல் அதை எல்லாம் முதல் சந்திப்பில் ஒருவன் காண்பிப்பானா என்ன?) அல்லது அவனது அன்பான மரியாதையான நடத்தையோ அல்ல, லக்ஷ்மி அவனோடு செல்ல அதற்கு எதிர் நிலையாகச் செயல்படும் கணவன் ஏற்படுத்தும் எரிச்சல் தேவைப்படுகிறது. எனவே இவர்களும் இப்படத்தை முடிந்தவரை மெல்லிய நிராகரிப்போடு கடந்துவிடவே விரும்புகிறார்கள்.

நாம் பார்த்த எத்தனை திரைப் படங்களில் ஒரு பெண்ணின் பாலியல் இயல்பாகப் பேசப்பட்டிருக்கிறது? நீண்ட நாட்கள் முன் ஒரு ஃபேஸ்புக் பதிவில் போகன் சங்கர் சொல்லியிருந்ததுபோல தமிழிலும் தமிழ்ப்பெண்களுக்கு க்ளிட்டோரிஸே இல்லை. எத்தனை திரைப்படங்களில் மேரிட்டல் ரேப் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. சமீபத்தில் பார்த்த ‘அனு’ என்றொரு கேரள குறும்படம், ஒரு லெஸ்பியன் பெண்ணைப் பற்றியது (அதிலும் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது; அது வேறொரு கட்டுரைக்கானது). கேரளத்தாரின் வழக்கப்படியே நான்கு நிமிடப் படத்திற்கு மூன்று நிமிடங்கள் பெயர் ஓடியது. முழுக்க ஆண் பெயர்கள் எழுதியவர், இசை, இயக்குநர், படப்பிடிப்பு என. இதைத் தாண்டி ஒருத்தி என்னவிதமான மனநிலையோடு அந்தப் படத்தைப் பார்க்கமுடியும். இதுபோன்றதொரு சூழலில் இதுபோன்றதொரு படத்தை எடுத்துக்கொண்டு பெண்களைப் பற்றியோ, பெண் விடுதலை பற்றியோ பேசவேண்டுமென்ற எதிர்பார்ப்பு மிக அபத்தமானது.

லக்ஷ்மியை லக்ஷ்மியின் கதையாகப் புரிந்துகொண்டு ஆராயமுடியாது. இது லக்ஷ்மியை உருவாக்கிய, எதிர்வினையாற்றிய ஆண்களின் கதை மட்டுமே. நம்மைச் சுற்றியிருக்கும் சமூக ஊடகங்களின் மங்கலான கண்ணாடிகளில் சில பிம்பங்களைக் கணநேரம் பார்க்க உதவிய சிறுவெளிச்சம். வெளிச்சங்களுக்கும் பார்வைகளுக்கும் திசையும் நோக்கங்களும் இருக்கின்றன.

http://www.kalachuvadu.com/current/issue-216/ஒரு-குறும்படம்-ஒரு-நீண்ட-விவாதம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.