Jump to content

சில நாவல்கள் (புதியவை\பழையவை) அறிமுகம்


Recommended Posts

இதில் சில நாவல்கள் அது பற்றிய சிறு குறிப்புகளையும் பகிர்கிறேன் விருப்பமுள்ள ஆர்வமுள்ளவர்கள் படித்து பயன்பெறுங்கள்

உப்பு நாய்கள்

கதை மாந்தர்கள் 
போதை கடத்தல் 
கொலை
பாலியல் வல்லுறவு
நண்பனின் அம்மாவோடு படுப்பது 
என லைவ் ஸரெயிலை படு இயல்பாக வாழ்வார்கள்.
சோலி சுருட்டல் இல்லாத மிடில்கிளாசை சேர்ந்த ஒருவன் இந்த புத்தகத்தை படித்தால் சென்னையின் மறுபக்கம் அவனை ஒரு உலுக்கு உலுக்கி விடும்.....
வட சென்னையை சேர்ந்தவர்களை சௌகார்பேட்டை சேட்டுகள் எப்படி குற்றபின்னனியில் use பண்ணுகிறார்கள்
சௌகார் பெண்ணை அடைய சென்னை பையங்கள் எவ்வளவு தூரம் போவர்கள் என கதை நெடுகிலும் பேசுது

வாசகனை சென்னையின் மோசமான பக்கத்துக்கு கொற கொற என இழுத்துச்செல்லுகிறது

முடிவு தான் பழைய கிரேக்க தேசத்து நாடகங்களின் சமாளிப்பாக இருக்கிறது

FB_IMG_1510225005481.jpg

நீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளியாக இருக்கலாம்; உயர் பொறுப்பில் இருக்கும் நிர்வாகியாக இருக்கலாம்; தொழிலாளியாகவும் இருக்கலாம். இந்தக் கதையில் வரும் பாத்திரங்களில் நிச்சயம் யாராவது ஒருவரில் உங்களைக் காண்பீர்கள்.
உங்கள் பணியிடம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்; எந்தத் துறையாகவும் இருக்கலாம். ஆனால், இந்தக் கதைக்களமான தொழிற்சாலையின் பிரச்னைகளும் நிகழ்வுகளும் நிச்சயம் உங்கள் பணியிடத்திலும் எதிர்ப்படக் கூடியவைதான்.
ஒரு தொழிற்சாலையில் புதிதாக அதிகாரியாகப் பதவியேற்ற ஒருவர், நலிந்து கிடக்கும் அதன் இக்கட்டான சூழலிலிருந்து, அந்த நிறுவனத்தை எப்படி மீட்டெடுக்கிறார்... மீண்டும் லாபம் ஈட்டித்தரும் தொழிற்சாலையாக அதை எப்படி மாற்றுகிறார்... இந்த மீட்புப் போராட்டத்தில் தொழிற்சாலைப் பணிகளிலேயே தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளும் அந்த அதிகாரி, தன் மனைவியுடன் இரவு உணவு வேளைகளில்கூட கலந்துகொள்ள முடியாத அளவுக்கு பணிச்சுமை அவரை எப்படி வாட்டியெடுக்கிறது... அதனால் மனைவியைப் பிரிந்து வாடும் அவர், எத்தகைய மனத் துயரங்களைக் கடக்க வேண்டியிருக்கிறது... இந்தச் சூழலில் இருந்துகொண்டு ஆலையை அவர் எப்படி நிர்வகிக்கிறார்... மனைவியுடன் எப்படி இணைகிறார்... தொழிற்சாலைக்கு ஈட்டிக்கொடுத்த லாபம் எப்படி அந்த அதிகாரியை உயர் பதவிக்கு இட்டுச் செல்கிறது... என்பதையெல்லாம் தன்னுடைய எளிய தமிழாக்கத்தில் அஞ்சனா தேவ் படம்பிடித்துக் காட்டுகிறார்.
இது ஆனந்த விகடன் இதழில் தொடராக வந்தபோது வாசகர்கள் இருகரம் நீட்டி வரவேற்றனர். இதில் இடம்பெறும் தொழிற்சாலைகள் தொடர்பான மிக நுணுக்கமான விவரங்களையும், நிர்வாகக் கலைகளையும்கூட ஆர்வத்தோடு படித்து உள்வாங்கிக் கொண்டார்கள். இந்த நூல், அந்தக் கதையை ஒரே மூச்சில் படிக்கும் வாய்ப்பைத் தருகிறது.

மூலம் _முகநூல்

FB_IMG_1510225662877.jpg

Link to comment
Share on other sites

எண்டமூரியின் சிறந்த நாவல் 
படிக்க கையில் எடுத்தால்
கீழே வைப்பது சிரமம் 

ஒரு பக்கம் பில்லி சூன்யம்
ஒருபக்கம் அலோபதி மருத்தும்
மறுபுறம் ஹிப்னாட்டிசம்

துளசியின் உடல் நலக்குறைவுக்கு
எது காரணம்
அவரவர் மனநிலை மற்றும்
அறிவு நிலைக்கு ஏற்ப 
எதையும் ஏற்றிக்கொள்ள வைக்கும்
எழுத்து நடை மற்றும் லாஜிக்

பில்லி சூனியத்தை பொய்யென சொல்லும்
தந்தை நம்பும் தாய்
ஒரு கட்டத்தில் இருவரின்
மனநிலையிலும் மாறுபாடு அடைவது
யதார்த்தம்

காத்ரா 
விஷாச்சி
காஷ்மோரோ
என்று எண்டமூரி
அதகளம் செய்து இருப்பார்

-அல்லயன்ஸ்

FB_IMG_1510321258938.jpg

என்னவோ தெரியவில்லை
ஜெயமோகனைப் படிக்கப் பிடிக்காது
ஆனால் ...,.
ஏழாம் உலகம்
பாலாவின் ' நான் கடவுளின்' மூலம்

வழக்கம் போல நாவலுக்கும்
படத்துக்கும் சம்மந்தம் இருக்காது

விளிம்பு நிலை மக்களைப்பற்றி
அவர்களின் வாழ்க்கை முறை
ஆசாபாசம் அன்பு பிணக்கு ....
யப்பா செமையா எழுதியிருப்பார்

அவனே 'உருப்படி'களை வைத்து
பிச்சை எடுப்பவன்
அவன் சொல்வான் " நம்மளையும்
விட்டா இதுங்களையெல்லாம் யார்
காப்பாத்துவாங்க " ன்னு
அந்த ஒரு இடம் போதும்
அவன் மீதும் அவன் தொழில் மீதும்
பொதுப் புத்தியில் உறைந்திருக்கும்
வெறுப்பை நீக்க

வட்டார வழக்கு மொழி தெரியாதவர்களுக்கு 
பின்னால டிக்ஸ்னரி இருக்கு 
உபயோகித்துக் கொள்ளுங்கள்

படிக்கிற காலத்திலேயே dictionary 
வச்சு படிச்சதில்லைன்னு.....
 யார்ப்பா அது  ??

- கிழக்குப் பதிப்பகம்

FB_IMG_1510321390901.jpg

மூலம்- Facebook

FB_IMG_1510321508819.jpg

கானகன் 
லக்ஷ்மி சரவணகுமார்
  
சமீபத்தில் வாசித்த மனதைவிட்டகலாத கதைகளம். 
ஒவ்வொரு காட்சிகளும் அச்சொட்டாக நினைவில் நிற்கின்றது இத்தனைக்கும் முதல் வாசிப்பு மட்டுமே.
ஒற்றைமூச்சில் வாசிக்காமல் நின்று நிதானமாக கற்பனைக்கு இடம்விட்டு வாசித்தல் சுகம். 

எழுத்தாளர் பெருங்காலம் என காலங்களை வரிசைப்படுத்தி அதில் சிறு பிரிவுகளை வகுத்து கதைசொல்கிறார்.

1.கதைகளம் அகமலை பகுதியில் வாழும் பழங்குடி மக்களின் குடியிருப்பு,மரபு,விலங்குகளுக்காகவும் பணம்படைத்தவர்களிடம் போராடுதல். இறுதியில் காட்டையும் வனவிலங்குகளையும் மீட்கின்றனரா இல்லயா.

2.மந்தைகளை சூரயாடி வந்த தாய்புலியை ஒரு தேர்ந்த கருமாண்டியான தங்கப்பன் சுட்டுதள்ளுகிறான். அநாதயாய் எஞ்சிய குட்டிகள் தங்கப்பனை என்ன செய்கின்றன?

  என்னளவில் வாசி கதைநாயகன் தங்கப்பன் வில்லன் சடையன் கௌரவ தோற்றம்.
கௌரவ தோற்றத்தில் வரும் சடையனின் காட்சிகள் ஒவ்வொன்றும் அதகளம்+ சென்டிமென்டல் டச். 
செல்லத்தாயியின் ரெண்டாவது குழந்தையை பார்க்க வரும் இடம், வாசியின் மேல் அளவு கடந்த ப்ரியமிருந்தும் அவனை கண்டதும் சந்திக்கமறுத்து தப்பிஓடும் கணங்கள். கையறுநிலையில் பளிச்சிதாயை வேண்டிநிற்கும் பழங்குடியினரை எதிர்பாராத விதமாக காட்டுயானைகளின் மீதுவந்து காப்பாற்றும் காட்சிகள் என விவரித்துக்கொண்டே போகலாம். மீதி வாசகர்களின் வாசிப்பிற்கு விடப்படுகின்றது ?

நிச்சயமாகக் கானகன் ஒரு சினிமா பார்த்த அனுபவத்தை தரும். காதாபாத்திரங்களிற்கேற்ப நடிகர்களை தேர்வு செய்யவேண்டியது நம் பொறுப்பு. தேர்வு சரியாயின் கானகன் கண்களுக்கு மட்டுமல்ல காட்சிக்கும் நல்ல விருந்து.

லசகுவின் ஏனைய புத்தகங்களுக்காகவும் காத்திருக்கிறேன்

Source - Facebook

Link to comment
Share on other sites

உடையார்-பாலகுமாரன்

நண்பர் பாலாவுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். உடையார் ஆறு பாகங்களையும் மொத்தமாக படிக்க கொடுத்ததோடு, திருப்பி கொடுக்க அவசரப்படுத்தவேயில்லை. மெதுவாகத்தான் படித்து முடித்தேன். அவர் கொடுக்கவில்லையென்றால் உடையாரை வாங்கி படித்திருப்பேனா என்பது சந்தேகம்தான். 

கல்லூரி பருவத்திலிருந்த பாலகுமாரன் பித்து அடுத்தடுத்த வருடங்களில் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்துபோனது. அது அசோகமித்திரன், ஜெயமோகன் எழுத்துக்கள் அறிமுகமானதால் இருக்கக்கூடும். மேலும் பாலாவின் மிகை உணர்ச்சி நடை அலுப்புத்தட்ட ஆரம்பித்தது (விக்ரமனின் “வானத்தை போல” என்ற ரசனை குறை சினிமாவை நினைவு கூர்கிறேன்). முன்பிருந்த மோகம் குறைந்துவிட்டாலும், இப்போதும் பாலாவின் புத்தகம் எங்கே பார்த்தாலும் எடுத்து பிரிக்கிறேன். சமீபத்தில் கூட ஒருநாள் முன்னிரவில் புத்தக அலாமாரியை மேய்ந்துகொண்டிருந்தபோது தலையணை பூக்கள் கடைசி அத்தியாயத்தை மறுபடி வாசித்தேன். தாயுமானவனின் “நெஞ்சுக்குள் நெருப்பு வைத்து...” அத்தியாயத்தையும், மெர்க்குரி பூக்களின் முதல் அத்தியாயம் முடிந்து, இரண்டாம் அத்தியாய ஆரம்பத்தையும் மறுபடி புரட்டினேன். திருப்பூந்துருத்தியை இன்னுமொரு முறை படிக்கவேண்டும்போலிருக்கிறது. “இனிது இனிது காதல் இனிது” நாணாவும், துர்காவும் மருதமலை கோவிலில் படித்துக்கொண்டிருந்தபோது ஏற்படுத்திய பரவசத்தை இப்போதும் நினைத்துக்கொள்கிறேன். 

உடையார் பல்சுவை மாத நாவலில் ஆரம்பித்தபோது படித்தது. அதன்பிறகு பாலாவை தொடர்வதை விட்டு எட்டு வருடங்களாகிறது. மேலும் புத்தக படிப்பு கென்யா வந்த இந்த ஐந்து வருடங்களில் மிக குறைந்திருந்தது. ஜெ-ன் வலையை தினமும் படிப்பதோடு சரி. முன்பிருந்த படிப்பு வேகம் இப்போதில்லை. கல்லூரியில் மோகமுள்ளை இரண்டே விடுமுறை நாட்களில் முடித்துவிட்டு, முடித்த அந்த பின்னிரவில் பாபு, யமுனாவோடு டீ சாப்பிட சைக்கிளில் லாலிரோடு பேக்கரி போனது இன்னும் பசுமையாய் ஞாபகமிருக்கிறது. 

உடையாரின் பின்னான பாலாவின் அர்ப்பணிப்பும், உழைப்பும் அசரவைக்கிறது. ஜெ-ன் வெண்முரசுக்கு முன்னால் இது ஒப்பிட முடியாதென்றாலும், உடையார் மிக குறிப்பிடத்தக்க ஒரு வரலாற்று நாவல். ஒரு தமிழக மன்னனை முழுமையாய் அறிந்துகொள்ளவும், அக்கால சோழர் பண்பாட்டையும், நாகரிகத்தையும் நம்முன் விரித்ததற்கும் (கொஞ்சம் புனைவு கலந்து), ஒரு கற்கோவிலின் பின்னான வரலாற்றை நுணுகிய அவதானிப்புகள், ஆராய்ச்சிகளோடு நமக்கு தந்ததற்கும் பாலாவை மனதால் அன்போடு கைபிடித்துக்கொள்கிறேன். எனக்கு கதை ஏன் அந்தணர்கள், வேளாளர்கள், வைசியர்கள், சிற்பிகள், மறவர்கள், கருமார்கள் இவர்களுக்கிடையேயான/இவ்வினங்களுக்கிடையேயான பூசல்களும், புரிதல்களும், சிக்கல்களுமாகவே நகர்கிறது என்று தோன்றியது. ஒருவேளை அக்காலம் இப்படித்தான் இருந்திருக்குமோ என்று நினைத்தேன். வரலாற்றை எழுதுவது எத்தனை கடினம் என்று இணையத்தில் “வரலாற்றை தேடி...” இணைய பக்கம் நடத்தும் நண்பர் பாலா சொல்லியிருக்கிறார். ஒருவரி விஷயத்திற்கே எத்தனை சரிபார்க்க வேண்டியிருக்கிறது?. உடையாருக்காக பாலா எவ்வளவு உழைத்திருப்பார்?. கோவிலின் விவரணைகளும், குறிப்புகளும், தஞ்சையின் மானசீக வரைபடமும் மிகச்சிறப்பாய் வந்திருக்கின்றன. நாவல் இன்னும் முழுமையாய் உள்போக தஞ்சை கோவிலை நாலைந்து முறையாவது சென்று உள்வாங்கி வரவேண்டுமென்று நினைக்கிறேன். நமது தென்னிந்திய கோவில்களை கட்டியவர்கள் சாதாரணமானவர்களல்ல. 

FB_IMG_1510421851220.jpg

வெண்ணிற ஆடை
சரவணசந்திரன்

எழுத்தாளர் நேரடியாக சந்தித்த சம்பவங்களை சட்டசிக்கல் ஏதும் வந்துவிடகூடாது என்பதற்காக சீட்டுகட்டை கலைத்து மாற்றி மாற்றி அடுக்கி (பெயர் ஊர் அனுபவங்கள்)எல்லாவற்றையும் வாழ்வியல் கதைகளாக கொடுத்திருக்கிறார். 
ஆம், என்னுரையில் சரவணன் சொன்னது போல புனைவு எனும் யந்திரத்தில் உண்மைகளை சொருகி சக்கைகளாக்கி மனித முகங்களில் அறைகிறார். காரணம் புனைவை எப்போதும் ஆதரித்து கொண்டாடும் சமூகம் நிஜத்தை அதன் போக்கிலே தரிசிக்க அஞ்சும் அல்லது விரும்பாது. 

கதையா, சிறுகதையா, நாவலா, வாழ்வியல் கதைகளா என்பதை வாசகர்கள் தேர்விற்கு விட்டுச்செல்கிறார்.

22 இலக்கமிடப்பட்ட சம்பவங்களை வெண்ணிற ஆடையில் தலைப்பின்றி கூறுகிறார். அவற்றை அழகான மலர்களாகவும் வண்ணங்களாகவும் அல்லது கறைகளாகவும் தீட்டவேண்டியது வாசகர் கடமை.

ஜான்வி முகம் சிதைந்த ஒரு பெண், உடலுறவிற்கு அழைக்கிறான் ஒருவன் இந்த முகத்தை எப்படி என ஜான்வி கேட்க துணிபோட்டு மூடிக்கொள் என்கிறான். அவனை பழிதீர்த்தாளா? சிறுக பணம்சேமித்து முகமாற்று அறுவைசிகிச்சை செய்து கொண்டாளா ?

மாரிமுத்து கதையின் ஆரம்பம் வக்கீல் வெடிமுத்து போன்று மனைவிக்கு அஞ்சிய கணவன். மாரிமுத்துவை மனைவி கொடுமைபடுத்தி அடிமையாக வைத்திருப்பதின் காரணம் என்ன?

நான் அவனில்லை பாணியில் மத்தியதர வர்க்க பெண்களிடம் சிலுமிசம் செய்யும் வாலிபன்

மனநலம் குன்றிய தாயையும் தமக்கையயும் தெருவில் விட்டுசெல்லும் மகள்  

கோமதி டீச்சர்

அரச மருத்துவமனையில் யாரோ ஒருவருக்கு சேவகம் செய்து கொண்டிருக்கும் அம்மாவை எங்களுடன் சேர்த்து வையுங்கள் என கோரிக்கை வைக்கும் 10வயதிற்கு மேற்பட்ட ரெண்டு பெண்குழந்தைகளும்  ஒரு சந்தோஷமான பெரிய குடும்பமும்.

தந்தையின் பாலியல் சீண்டல்களில் சிக்கிய இரண்டு மகள்கள்

முதல் தாரத்தின் மகனை அநாதை விடுதியில் சேர்க்க துடிக்கும் அப்பா, அவனை வளர்க்க விரும்பும் சித்தப்பா இறுதியில் மனநலம் பாதித்த சிறப்பு மகன் எப்படி இறந்தான்

கடுமையான ஆண்மை பாதிப்பு ஏற்பட்ட எழுச்சியே அடையாத ஆணுறுப்பை இரவு முழுதும் கணவன் அசந்து உறங்கும் வரை சுவைக்கும் மனைவி, குழந்தைபோல் கெஞ்சும் கணவன்.  

பாலாச்சுளைகளை கொடுத்து வாஞ்சையாக கன்னத்தை தடவிச் சிரித்த பாட்டி.
                      என 22 வாழ்வியல் சித்திரங்களை வெண்ணிற ஆடையில் தீட்டி வாழ்கை எவ்வளவு ஆழமான உண்மைகளை மறுத்தும் கடந்தும் செல்கிறது என புகட்டுகிறார்.

சரவணனின் முதல் புத்தகம் இதற்கு பிறகு மூன்று நாவல்களையும் எழுதிமகிழ்வித்திருக்கிறார் வரவிருக்கும் பார்பிக்காக வாழ்த்துகளும் மகிழ்ச்சியும்.

FB_IMG_1510422050038.jpg

Source -Face book

Link to comment
Share on other sites

#சர்ச்சைக்கு பெயர் போன நாவல் ....அது

இரண்டு வருடங்களுக்கு முன்பு பல தொலைக்காட்சி விவாதங்களில் நாவலை பற்றியும் நாவல் ஆசிரியர் பற்றியும் விமர்சனம் செய்யாத தொலைகாட்சிகளே  இல்லை என்றே கூட சொல்லலாம்......

சிலர் ஒரு படி மேலே போய் நாவலை தடை செய்யவும்...ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தியும் நீதிமன்றங்களில்  வழக்கும் தொடுத்திருந்தனர்........

குறிப்பாக மகளிர் அமைப்பினரும் போராடினார்கள்......

இப்படி ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்த நாவல் அது......

இத்தனை வருட இடைவெளி கழித்து ஒரு நண்பர் மூலம் எனக்கு கிடைத்தது....

நாவல்பெயரும் ....நாவலாசிரியர் பெயரும் மறந்திருக்கவில்லை ...மறக்கவும் இல்லை என்பதால்....ஏன் இத்தனை எதிரப்பு?

என்ன சொல்லபட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஆர்வம்....

96 பக்கம் உள்ளநாவலை  இரண்டு நாட்கள் ஆனது முழுவதும் படித்து முடிக்க...

கதை இது தான்.....

குழந்தை இல்லா தம்பதிகளை இச்சமுகம் பார்க்கும்  பார்வை .....

நடத்தும் விதம்......

குழந்தை...அது பெண்ணை மட்டும் சார்ந்தது அல்ல ..அது ஆனையும் சார்ந்தது...

பெண்ணை தாண்டி ஓர் ஆணின் மனநிலை எந்தமாதிரி சூழலில் பயணிக்கிறது என்பதையும்...வெளிச்சம் போட்டு காமிக்கிறது....

தாய்மை என்ற ஒன்றை அடைய இச்சமுகத்தின் ஒரு பகுதி எந்த மாதிரியான வழிமுறைகளை கடந்து வந்திருக்கிறது என்பதை கண் முன்னால் காணமுடிந்தது.....

பல உண்மைகள் ....அதிர்சியிலும் அதிர்சியே......

பண்பாட்டை உலகுக்கு எடுத்துரைத்த தமிழ் சமுகத்தின்  கருப்பு பக்கங்களை புரட்டி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது...

படித்து முடித்து முதல் பக்கத்தில் உள்ள நாவலாசிரியரின தொலைபேசியை தொடர்பு கொண்டேன் .....

பின்பு தான் தெரிந்தது ....சமுகத்தின் அவலங்களை தோலுரித்த நாவலாசிரியரை இச்சமுகம்  அடையாளத்தை அழித்து விட்டது என....

இனி ஒருபோதும் எழுதுவதில்லை என முடிவு எடுத்திருப்பதாகவும் தகவல்......

FB_IMG_1510584349220.jpg

#புக்_டைம்

#உறுபசி

எஸ் ரா வின் மிகச் சிறிய நாவல். நூற்று சொச்சம் பக்கங்கள். நாவலின் ஆரம்ப வரியிலிருந்து இறுதி வரை வறண்ட வெக்கை மிகுந்த ஒரு வெயிற்கால மதியத்தில் யாருமற்ற மணற்பரப்பில் வெறுமை பொங்க நடந்து செல்லும் உணர்வு வழிந்தபடியே இருக்கிறது.

சம்பத் என்னும் கதாபாத்திரத்தின் மரணத்தில் துவங்கும் கதை, அவன் பார்வையிலும் அவனைச் சுற்றியுள்ள சொற்ப மனிதர்களான அவன் நண்பர்கள் மாரியப்பன், அழகர், ராமதுரை, சம்பத்தின் மனைவி ஜெயந்தி, சம்பத்தின் காதலி யாழினி ஆகியோரின் பார்வையில் விரிகிறது.

சம்பத் எப்போதும் யதார்த்தத்திலிருந்து விலகியவனாகவே இருக்கிறான். சம்பத்தைப் பற்றி அவன் ஒவ்வொரு நண்பனுக்கும் கசப்பான நினைவுகளும் இனிமையான நினைவுகளும் கலந்தே இருக்கிறது. சம்பத் இறந்து விட்டதற்காக துக்கப் படுவதா அல்லது தங்கள் கசப்புகளுக்கு வடிகால் கிடைத்து விட்டதற்காக நிம்மதியடைவதா என்று தெரியாமல் அலைக்கழிகிறார்கள்.

இருந்தும் சம்பத்தின் மனைவிக்கு இறுதிச் சடங்குகளில் உதவுகிறார்கள். சம்பத் ஒவ்வொருவர் பார்வையிலும் விதம் விதமாக அவனுக்கேயுரிய நிலையில்லாக் குணத்துடன் வெளீப்பட்டபடியே இருக்கிறான். 

சம்பத் எப்போதும் பொதுத் தன்மைக்கு எதிராகச் சிந்திப்பவனாகவும் அடி மனதில் கொந்தளிப்புகள் கொண்டவனாகவும் வாழ்வில் ஸ்திரமாக எதிலும் நிலை கொள்ளாதவனாகவும் காற்றிலலையும் இறகைப் போல இலக்கின்றி நகர்ந்தபடியே இருக்கிறான். ஜெயந்தியுடனான அவன் திருமணம் கூடச் சட்டெனப் போகிற போக்கிலேயே நடந்தேறுகிறது.

சம்பத்தின் மனைவி ஜெயந்திக்கு அவனுடன் வாழ்ந்த வாழ்க்கையை என்னவாக உருவகிப்பது அதை எப்படி சீரணீப்பது அடுத்து என்ன செய்வது போன்ற பல கேள்விகள் தொக்கி நிற்கின்றன. அவனுடனான தன் வாழ்வு மகிழ்ச்சியானதாக இருந்ததா என்று அவளுக்கு சொல்லத் தெரியவில்லை.
நண்பர்கள் சம்பத்தின் இழப்பின் கனம் தாங்க முடியாமல் கானகத்தில் சிறிது ஆசுவாசம் தேடுகிறார்கள். 

கானகத்தைப் பற்றிய விவரிப்புகளில் எஸ் ராவின் விஸ்வரூபம் அப்பட்டமாக வெளிப்படுகிறது. எழுத்திலேயே காட்டின் வாசத்தையும் மழைப்பசை ஈரத்தையும் துல்லியமாய் உணர முடிகிறது.

முதல் சில அத்தியாயங்களுக்கு கதை வெவ்வேறு கதை மாந்தர்களின் பார்வையில் தாவுவதால் , சிறு குழப்பங்கள் ஏற்படுகின்றன. பின்னர் நாவலின் ஓட்டத்தைப் புரிந்து கொள்ள, கதையின் போக்கு புரிகிறது. யாருடைய பார்வையில் சொல்லப் படுகிறது என்பது சிற்சில வாக்கியங்களில் தெளிவாகி விடுகிறது.

மிகத் தீவிரமான கவனத்தையும் வாசிப்பையும் கோரும் இப்புத்தகம் வாசித்து முடித்ததும் வாழ்வின் மீது நாம் கொண்டிருக்கும் அவதானிப்புகளை ஒரு முறையேனும் திரும்பிப் பார்த்துக் கேள்வி கேட்க வைக்கும். நம்மைப் பற்றிய நம் அறிதலை மீண்டும் சோதித்துப் பார்க்கும்.

FB_IMG_1510584495347.jpg

மூலம்- முகநூல்

Link to comment
Share on other sites

மிகச்சாதாரண இளைஞனுக்கான அனுபவங்கள், ஒவ்வொருவருக்குமான பக்குவமான நினைவுகள் இவைதான் ராஜுமுருகனின் வட்டியும் முதலும்.. ஆனால் அந்த அனுபவங்களின்தன்மைகள் வித்தியாசமானவை.

உல்லாச பள்ளிப்பருவமாகட்டும், காதலும் கலகலப்பும் பொங்கிவழியும் விடலையாகட்டும், அசுரத்தனமான கொம்புகளுடன் சமூக அபத்தங்களை முட்ட நினைக்கும் இளமையாகட்டும் அத்தனை பருவங்களையும் அவைகளுக்கிடையில் முன்பின்னாக முட்டிமோதிக்கொள்ளும் நுன் உணர்வுகளையும், அது சூழ்ந்த மனிதர்களையும், அவர்களுடைய வாழ்க்கையின் நிதர்சனங்களையும்,  அவை நெய்யப்பட்டிருக்கும் சமூக, அரசியல், பொருளாதார பின்னனியில் ஜனரஞ்சகமாக எழுதுவது என்பது ராஜுமுருகனுக்கு சாத்ததியமாகிறது...

ஒவ்வொரு பகுதியையும் வாசிக்கும் போதே பல இடங்களில் சிரிக்கத் தோன்றுகிறது, பல இடங்களில் அழுகை முட்டுகிறது, பல இடங்களில் கோவம் பொங்கி வழிகிறது, பல இடங்களில் மனதின் பாரம் நெஞ்சை கனக்கச்செய்கிறது. இப்படி மனித உணர்வுகளோடு விளையாடி வாசகனின் வாழ்க்கையை புரட்டியெடுக்கிறது. 

இந்த இளமை மறையாத மனிதனுக்குள் இத்தனை அனுபவங்களா என்று என்னும்போது இருதியில் பிரம்மிக்கவைக்கிறது.

FB_IMG_1510665001972.jpg

ஒரு வனத்தை, அதன் அழகியலை.. அதன் பிரம்மாண்டத்தை கொஞ்சங்கொஞ்சமாய் அழித்து தன் வாழ்வியலை நிர்ணயிக்கும் மனிதன். இது அவனுடைய கதை என்பதைவிட, அந்த அடர் வனத்தின் அழுகுரல் என்பதே சாலச்சிறந்தது. “ஒரு காட்டை அழித்து கரும்பு ஆலையை உருவாக்குவது பற்றிய புத்தகம்“ என்ற ஒன்லைன் விளக்கத்தில் பெரிதாக பாதிப்பொன்றும் நமக்கு ஏற்படாதுதான். ஆனால் சிதம்பரம் என்ற அக்கதாப்பாத்திரம் அரிவாளையும் அலக்கையும் எடுத்துக்கொண்டு மெதுமெதுவாய் ஒவ்வொரு மரமாய்.. செடிகொடியாய்.. வெட்ட ஆரம்பிக்கும்போது, நம் மனக்கண்ணில் விஸ்தரிக்கும் அக்காட்சிகள் மிகப்பிரம்மாண்ட வடிவங்கொண்டு அமைகிறது. 

“கும்கி“ படத்தில் ஒரு வசனமுண்டு, “காட்டையெல்லாம் அழிச்சு வீடு கட்டிட்டு கடைசில கல்லு மண்ணைத் தான் திங்கப்போறீங்க“. அது எத்தனை உண்மை என்பதை வலியோடு உணரவைக்கிறது சாயாவனம். மரங்கள் மட்டுமன்றி அக்காடினை வாழ்வாதாரமாகக் கொண்டிருந்த விலங்குகளும் அழிந்துபோகின்றன. இறுதியாய் முற்றிலும் கருகி, அகற்றப்பட்ட அவ்வெற்றிடம் வாசிக்கும் நம் மனத்தையும் சூழ்ந்துகொள்கிறது.

ஒவ்வொரு முறையும் குற்ற உணர்ச்சியில் தலைதாழ்ந்து யோசிக்கும் சிதம்பரத்தின் பார்வை வழி, அழிந்து, கருகிக்கொண்டிருக்கும் மரங்கள் நமக்காய் ஏதோ சொல்லிச் சாகிறது. “நல்ல புளியா அனுப்புறேங்க“ என்ற சிதம்பரத்தின் பதிலுக்கு, “அதான் எல்லாத்தையும் கருக்கிட்டியே.. இனி எங்கயிருந்து அனுப்பப்போற?“ என்று கேட்டபடியே அவனைக் கடந்து போகும் பாட்டியை, அவனுடன் சேர்ந்து நாமும் கையாலாகாமல் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

பல வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட நூலெனினும் இன்றும் நம்மோடு அதிகம் பொறுந்திப்போவதற்கு நிச்சயம் பெருமைப்பட முடிவதில்லை. 

# ”சாயாவனம்” 
சா.கந்தசாமி
காலச்சுவடு பதிப்பகம்

FB_IMG_1510665145180.jpg

மூலம்- முகநூல்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

 

1) கறுப்புக் குதிரை - நரேன் ராஜகோபாலன் 
=====================================

கறுப்புப் பணம், பெரு வங்கிகள், மென்பொருள் துணை கொண்ட டிஜிட்டல் பரிமாற்றங்கள், பங்குச் சந்தை பரிமாற்றங்கள், ரொக்கமில்லாப் பொருளாதாரம் என பிரகாசமாக சுலபமான மொழியில் தருவதுதான் இந்த புத்தகத்தின் சிறப்பு. இவ்வகை நூல்கள் பொருளாதார நிபுணர்களுக்கு புரிபடும் என்ற நிலை மாற்றி, பாடம் சொல்லித் தருவது மாதிரி சொல்லித் தருகிறார்.அனுபவம் செறிந்து இருந்தாலே இது சாத்தியம். 500, 1000 ரூபாய் திடீரென ஒரு ராத்திரியில் மதிப்பிழந்த நிலையில் நம்மில் நிறையப் பேர் நிலைகுலைந்து போனோம். அதற்கான காரண, காரியங்கள் தெரியாது. எரிச்சலே மிஞ்சியது. இந்த சூழலில் இப்புத்தகத்தில் கறுப்புப் பணம், பண மதிப்பிழப்பு இவற்றின் ஆதி அந்தங்களை விரிவாக எடுத்து வைக்கிறார் நரேன். ஆனால், ஆவணக் கட்டுரைகளின் சாயல் துளியும் எட்டிவிடாமல் ‘துறுதுறு’வென இவைகளின் சாரம் மட்டுமே புரிகிறது.

2) 

இந்தபுத்தகம் தான், கி.ரா அவர்களின் படைப்புகளில் நான் முதலில் வாசித்து முடித்தது!!! என்னடா தலைப்பே, 'வயது வந்தவர்களுக்கு மட்டும்'னு இருக்கே, ஏதாச்சும் விவகாரம்னு நினைச்சுகிடாதீக!!! இந்த புத்தகத்தில் 53 சிறுகதைகள் மூலமாக நாட்டுபுற பாலியல் கதைகளை, அவருடைய வட்டார மொழியில் கூறியுள்ளார் நம் கரிசல் காட்டு எழுத்தாளர். இதில் சிலவற்றை நாம் பள்ளி பருவத்திலே கேட்டு ரசித்திருப்போம் நம் நண்பர்களுக்கு மத்தியில்!!! பாலியல் என்பது அவரவர் சார்ந்த நண்பர்கள் மத்தியில் இருக்கும் போது அது இன்பமாகத் தெரியும் ஆனால் அடுத்தவரிட்டத்தில் வரும்போது அது அருவருப்பாகாவும், அசிங்கமாகவும் தெரிகிறது இந்த நாகரிகம் அடைந்த உலகத்தில்!!! ஆனால் அது அப்படியில்லை, பாலியல் என்பது இந்த உலகத்தில் இருக்கும் அத்தனை உயிரினங்களும் ஈடுபடக் கூடியவை!!! பாலியல் என்பது திருமணம் என்று ஒன்று வந்ததிற்கு பிறகே, நம் வாழ்வில் அந்தரங்கமாக மாறியிருக்கிறது என்று ஆணித்தனமாக நிருப்பித்திருக்கிறார்!!! இந்த கதைகளில் பெரும்பாலும் 'அவனோட அது', 'இவளோட இது' என்றே சில வெளிப்படையாக சொல்ல முடியாத வார்த்தைகளை கையாண்டு இருப்பார்!!! எல்லாவற்றையும் தெரிந்து கொள்கிறவன், மேலும் மேலும் பகுத்தறிவாளன் ஆவானே தவிர கெட்டுப் போக மாட்டான் என்று இந்நூலில் வயதுக்கு வந்த இரண்டு சிறுவர்களுக்கு பாலியல் கதை சொல்லும் தாத்தாவாக வந்து அந்த கரிசல் காட்டுத் தாத்தாவான கி.ரா வே கதையை கூறுகிறார்!!!

*வாசிப்பு தொடரும்....

Source- face book

Link to comment
Share on other sites


3) 

 

நான்ரசித்த புத்தகங்கள் வரிசையில் இன்று....

மீண்டும் என்னுடைய எழுத்துலக நாயகன், எண்டமூரி வீரேந்திர நாத் எழுதிய

 "பணம் மைனஸ் பணம்"

 நாயகன் பாபு, நாயகி லட்சுமி.... இருவரும் கணவன் மனைவி.
யாரிடமும் திருடாமல், கொள்ளை அடிக்காமல் பணம் சம்பாதிக்க நாயகன் போடும் ஆட்டம் தான், 

 "பணம் மைனஸ் பணம்"

? மூன்று நிமிடத்தில்  ஒரு கடையில் இருந்து வரும் யார் என்றே தெரியாத ஒரு பெண்ணின் உள்ளாடையின் சைஸ் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற போட்டியில் நாயகன் வெற்றி பெரும் அந்த கட்டத்தில், எண்டமூரியின் அறிவு பயங்கரமாக ஜொலிக்கும்.

?நடிகர் சிரஞ்சீவியின் வீட்டில் பாபு சென்று சிரஞ்சீவியை சந்தித்து பேசும் அத்தியாயம்,
சிரஞ்சீவி பாபுவை அமரவைத்து, அவன் செய்த தவறுகளை சுட்டிக்காட்ட,பாபு செய்வதறியாது குறுகி நிற்கும் அந்த அத்தியாயம், இதையெல்லாம்  விவரிக்க வார்த்தை இல்லை.

?இன்னொரு அத்தியாயத்தில் பாபுவின் மனைவி, வீட்டில் கரண்ட் கட் ஆகிவிட பக்கத்து வீட்டு இளைஞனை அழைத்து சரி செய்யும் போது, இருவரும் பேசிக்கொண்டு இருப்பதை பாபு கேட்டு விட்டு வந்து,
நீ செய்தது தவறு என்று லட்சுமியிடம் அறிவுரை சொல்ல,
அதற்கு லட்சுமி ஒரு கடிதத்தை எடுத்து கொடுக்க, பாபு அதை படித்து விட்டு என்ன சொல்வது என்று தெரியாமல் திகைக்க, அவள் படுக்கை அறைக்கு அவனை அழைத்துச் சென்று விட்டு, அவன் செய்த தவறைப்பற்றி கிடுக்கிப்பிடி விசாரணை எல்லாம் நடத்தாமல் பிறகு அதைப்பற்றி எதுவும் பேசாமல் இருக்கும்போது, 

 " ப்பா.. என்ன பொண்ணுடா இவ! இவ்வளவு அறிவா! இப்படி ஒரு மனைவி நமக்கு அமையாதா" என்று கல்யாணம் ஆகாத ஒவ்வொரு இளைஞர்களும் நினைத்துக் கொள்வார்கள்.

?ஒரு வேடிக்கை என்னவென்றால் எண்டமூரி எழுதிய,

 "பணம்"
என்ற இந்த நாவலின் முந்தைய பாகத்தில் இருந்த நாயகன் காந்தி, இந்த கதையிலும்,
" நட்புக்காக " இரண்டு அத்தியாயங்களில் வருவார். காந்தியும் பாபுவும் பேசிக்கொள்ளும் அத்தியாயம் இரண்டு அறிவாளிகள் பக்கத்தில் இருந்து பேச நாம் அறுகில் இருந்து கேட்டுக்கொண்டு இருப்பது போல தோன்றும்.

?லாட்டரி சீட்டு வாங்குபவர்கள் , அதில் எப்படி வெற்றி பெறுவது என்ற" சாட்" ஒன்றை பாபு தயாரிப்பதை எல்லாம் எப்படி இந்த மனிதர் யோசிப்பார், எவ்வளவு பெரிய ஜீனியஸ் இந்த எழுத்தாளர் என்று எண்டமூரியை நினைத்து பெறுமை பட்டுக்கொண்டே தான் படிக்க வேண்டும்.

"ஐ லவ் எண்டமூரி வீரேந்திர நாத்"

#ஷம்சுதீன்

 

Source -Face book

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் புத்தகங்களின் அறிமுகம் நன்றாக உள்ளது அபராஜிதன்..... தொடருங்கள் .....! tw_blush:

Link to comment
Share on other sites

On 29/11/2017 at 8:57 PM, suvy said:

உங்களின் புத்தகங்களின் அறிமுகம் நன்றாக உள்ளது அபராஜிதன்..... தொடருங்கள் .....! tw_blush:

நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்:)

துணையெழுத்து

வாழ்விலே கொஞ்ச நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் சிறு சிறு கனவுகளிலும்,ஆதங்கம் ,பழைய நினைவுகளில் அலைபவர்களுக்கு எஸ்.ரா ஒரு கொடை...
           
இயல்பான சொற்களால் பழைய  நினைவுகளை கீறுவதில் கை தேர்ந்தவர்.
             
பசியின்இயலாமையை , அலைச்சலை , உணவின் எதிர்பார்ப்புகளை துணையெழுத்தில் பல இடத்தில் அறுவடை விதை போல எளிமையாக விதைத்துள்ளார்..
 
 ஏதோ ஒரு மலைக்கிராமத்தில் தன்னுடைய வாசகனை தேடிச்சென்று, பசிக்களைப்பில் அவரை அறியாமல் நாலைந்து ரொட்டிகளை அதிகமாக உண்ண தொடங்கி வாசகனின் மனைவியால் அவமானப்பட்ட கதை என்றாலும்..
        
காணமல் போய் திரும்பி வந்து தாய் பரிமாறும் போது சோற்றை பார்த்து குழுங்கி குழுங்கி அழுவது ஆகட்டும்..
              
பசியின் கொடுற நாக்கு தீண்டின எங்களைப் போன்றோருக்கு படிக்கும் போதே கனம் அதிகரிக்கும்..
              
1986 சிறிலங்காவில்  ஆரம்பித்த பொருளாதார தடைகளால் வீட்டிலே உணவு இல்லாமல் அம்மா இருக்கிற இலை குலைகளை வறுத்தும் சம்பல் செய்தும்  சாப்பாடு தருவா..
                
ஒரு நெருப்பு குச்சியைக்கூட பாவிக்க நிறைய யோசிப்பா..யாரவது வசதியான வீட்டை சோறு சாப்பிட்ட எனக்கு வாயூறும்.

சோறு எப்ப அம்மா சமைத்து தருவா என குசினியை குசினியை எட்டிப்பார்ப்பேன்..

இந்த இலை குலை எனக்கு வேண்டாம் என ஒருநாள் அழுது புரண்டு ஆர்ப்பாட்டம் பண்ணிய போது திடிர் என்று அம்மா எங்கெல்லாமோ அலைந்து உமி எல்லாம் அள்ளி வந்து அந்த உமிக்குள்ளே இருந்து அரிசியை பொறுக்கினா 

உமிக்குள்ளே அரிசி பொறுக்கும் போது அம்மா கண்கலங்கியதை நான் கண்டேன்
என்றாலும் சோத்தாசையில் முகத்தை சோகமாகவே வைத்திருந்தேன்.
 
அவ்வளவு உமிக்குள்ளேயும் கொஞ்ச அரிசிதான் அம்மாவால் பொறுக்க முடிந்தது அதை அம்மா சமைத்த பிறகு...
            
அம்மாவுக்கு என்று கொஞ்சமும் வைக்காமல் நான் அவ்வளவு சோற்றையும் சாப்பிட்டேன்.

எந்த குற்ற உணர்வும் எனக்கு வரவில்லை..

இது நடந்து பத்து பதிணைந்து வருசத்துக்கு பிறகு துணையெழுத்து படித்த போது தான் எனக்கு ஏதோ குற்ற உணர்வு வந்தது.அப்பொழுது அம்மாக்கு போன் எடுத்து sorry சொன்னேன்..

அம்மா சிரித்து விட்டு தனக்கு ஞாபகம் இல்லை என்றார்..என்றாலும் அம்மா அல்லவா.

நான் சொல்ல வந்தது பசி உடைய கொடுமை மட்டும் அல்ல ..எங்களை போல ஜென்மங்களுக்கு குற்ற உணர்வை ஏற்படுத்த கூட ஒரு எஸ்.ரா தேவைப்படுகிறார்.

FB_IMG_1512142986683.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துணை எழுத்து நானும் வாசித்திருக்கின்றேன். எஸ். ரா வின் கதைகளும் சரி எழுத்துக்களும் சரி இயல்பான, எளிமையான ஒட்டத்துடன் பயணிக்கும். வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசமும் அருமையான படைப்பு....! tw_blush:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நான் வாசித்த முதல் நாவல் அமரர் கல்கியின்  'பொன்னியின் செல்வன்'. அதனால்தான் என்னவோ அதன் பிறகு சரித்திர நாவல்களையே தேடி தேடி படிக்க விரும்பியது என் மனம்.அதன் பின் சுஜாதாவால் ஈர்க்கப்பட்டு வைரமுத்துவால்  ஈர்க்கப்பட்டு இப்படி பல பட்டுக்களை பார்த்துவிட்டேன் அதெல்லாம் வேறு கதை அவற்றையெல்லாம் பின்பு பார்ப்போம். அவ்வாறு சரித்திர கதைகளையும் சோழக்கதைகளையும் தேடி அலைந்த நாட்களில் ஏதோ ஒரு தளத்தில் இந்த 'சேரர் கோட்டை' என்ற நாவலின் பெயரை கண்டேன். சரி சேரர் கோட்டை என்று இருக்கிறதே சேரர்கள் பற்றிய கதை போல நமக்கு எதற்கு அது நாம் சோழக் காதலர் அல்லவா என்று விட்டு விட்டேன்…சில காலம் கழித்து வேறு ஒரு தளத்தில் இந்த நாவலின் பெயரை சோழ சரித்திர நாவல்கள் பட்டியலில் பார்க்க நேர்ந்தது. அடடா இந்த நாவல் சோழம் பற்றியதா என்று ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி கொண்டேன். கூகுலில் இந்த நாவல் பற்றி தேடினேன். அறிந்தேன். பின்பு இந்த நாவலை ஆரம்பித்தேன். முதலில் இந்த நாவலை எழுதிய திரு கோகுல் சேஷாத்ரி அவர்களின் புகைப்படத்தை பார்க்க நேரிட்ட பொழுது..அடடா இளம் வயதினர் போலவே…பிஞ்சு ருசி கொடுக்குமா என்று தயங்கினேன்..வாசிக்க ஆரம்பித்த பின்பு தான் தெரிந்தது இது பிஞ்சு இல்லை..பிஞ்சு போன்று தோற்றம் அளிக்கும் நன்கு கனிந்து நிற்கும் கனி என்று. 

நான் வாசித்த அநேக சரித்திர நாவல்களின் தொடக்கம் ஒரு பயணத்தை நோக்கி கதை மாந்தர்கள் செல்வதாகவே அமைந்து இருக்கும்..இந்நாவலும் அதற்கு விதி விளக்கல்ல.. ராஜராஜரின் தளபதிகளான பரமன் மழபடியாரும் கம்பன் மணியனாரும் மேற்கொள்ளும் விறுவிறுப்பான பயணத்தை கொண்டே இந்நாவலும் தொடங்குகிறது.

இந்நாவல் கலமறுத்தல் பற்றியும் காந்தளூர் போர் பற்றியும்..வர்மக்கலைகள் பற்றியும் விரிவாக விளக்குகிறது…ராஜராஜர் தன் தமையனை கொன்ற சேர நாட்டு முன் குடுமி அந்தணர்களை பழி வாங்கும் பொருட்டு கடிகையை நேரடியே தாக்காமல்..தன் இரு தளபதிகளை கலமறுக்கும் போட்டிக்கு தயார்ப்படுத்தி..அந்த போட்டியில் வெற்றி கண்டு அந்த கடிகையை கை பற்ற திட்டம் வகுக்கிறார்.. 

 இதில் நிறைய கிளைக் கதைகளும்..முன் கதைகளும் நிரம்பி கிடக்கின்றன… காந்தளூர் கடிகைத்தலைவர் திருநாராயாண பட்டாதிரியின் காதல், அவரின் துரோகம், அவர்கள் குடும்ப வரலாறு…சோழர்களுக்கும் முன்குடுமி அந்தணர்களுக்கும்உள்ள முற்பகை முதலியன கதைகளாக விரிகின்றன…

கலமறுத்தல் நடந்ததா..? நம் தளபதிகள் வெற்றிபெற்றனரா? இரண்டு பேருமே வென்றனரா? அல்லது ஒருத்தர் வென்றாரா? அல்லது இரண்டு பேரும் தோற்றனரா? ராஜராஜர் பழி வாங்கினாரா? நாராயண பாட்டாதிரி என்ன ஆனார்? என்பன போன்ற கேள்விகளுக்கு விடையாய் இந்நாவலின் கடைசி பக்கங்கள் அமைந்திருக்கும்…

இறுதியில் ஆசிரியர் இந்த நாவலின் தொடர்ச்சி ஆகிய உதயபானு வெகு விரைவில் வெளி வரும் என்று கூறியிருக்கிறார். நானும் அவரிடம் முகப்புத்தகத்தில் பேச நேர்ந்த பொழுது இதை பற்றி எதார்த்தமாக ஒரு ரசிகனின் அவா ஓடு முறையிட்டேன்…கடவுள் ஆசியால் கண்டிப்பாய் எழுதுவோம் என்று கூறினார்…கொஞ்சம் சீக்கிரம் தான் ஆசியை குடும் அய்யா கடவுளே…

 

 

அணிலாடும்ம் முன்றில் 

நா.முத்துக்குமார் இந்த கவி இன்று நம்மிடம் இல்லை , ஆனாலும் அவர்  பொக்கிஷம் இந்த புத்தகம். இந்த புத்தகம் வாசிக்கும் பொழுது ஒரு சொட்டு கண்ணீர் கூட யாராலும் சிந்தாமல் இருக்க முடியாது. அப்படி இருந்தால் அவர்கள் மனிதராக இருக்க முடியாது.

இந்த உலகத்தில் இறைவன் என்று ஒருவன் இருக்கிறான் என்று  நான் நம்புவதற்கு  சில காரணங்களில் இருக்கிறது,அதில் ஒன்று  அவன் நமக்கு கொடுத்த உறவினர்கள் என்ற பொக்கிஷம்.

அப்பா,அம்மா,பாட்டி ,தாத்தா,மகன்/மகள்,மனைவி,தாய்மாமன்,அண்ணன் ,அண்ணி,தம்பி,அக்கா சித்தப்பா என நம்மக்கு எதனை உறவுகள், இதில் எத்தனை  உறவுகள் நம்முடன் இருக்கிறார்கள் அல்லது  நம் நினைவில் இருக்கிறார்கள். இந்த புத்தகத்தை வாசிக்கும் பொழுது பல உறவுகள் என் கண்முன்னே வந்து சென்றது. இதில் எத்தனை உறவுகள் நம்முடன் இருக்கிறார்கள் அல்லது சண்டைகள் வந்து நாம்  எத்தனை உறவுகளை இழந்து உள்ளோம்.

இந்த உலகத்தில் பாட்டி ,தாத்தா இல்லாதவர்கள் மிகவும் சொற்பம், அவர்களின் அன்பை யாராலும் இது கொடுக்க முடியாது. குழந்தைகளுக்கு தாத்தா பாட்டி பாசமேதகைய முக்கியம் என்பது இந்த புத்தகம் மற்றும் அனுபவம் மூலம் எனக்கு தெரியும். 

இந்த புத்தகத்தில் என்னை மிகவும் கவர்ந்தது எழுத்து நடை, நான் இந்த புத்தகத்தை படித்தது அதிகாலை 2.30 முதல் 4.30 வரை, நான் இது வரை வாசித்த புத்தகங்களிலே இந்த புத்தகம் கொடுத்த அனுபவத்தை எந்த ஒரு வாசிப்பும் கொடுத்தது இல்லை. 

நா.முத்துக்குமாருக்கு இதனை சொந்தம், அதன் மூலம் கிடைத்த சந்தோசம் மிகவும் ,அதிகம்  நீ அனுபவித்து விட்டாய்  நீ வாழ்ந்தது போதும் என இறைவன் வேகமாய் அழைத்து விட்டான் போலும், அவர் பிரிந்தாலும் இந்த புத்தகம் என்றும் அவர் பெயரை உரக்க சொல்லும்.

Kindle இல் 17 ரூபாய்க்கு இந்த புத்தகம் கிடைக்கிறது. அனந்த விகடன் பிரசுரம் மூலம் வாங்கி படித்தும் மகிழலாம்.

 

 

Source face book 

Link to comment
Share on other sites

  • 1 month later...

யாமம் - புத்தக விமர்சனம் 

என் வாழ்வில் ஒரு முக்கியமான இடம் Connemara Public library , அதிக நண்பர்கள் இல்லாமையால் இதை நாடினேன் , மாதம் இரு முறை கண்டிப்பாக செல்வேன் . அடிக்கடி வந்தமையால் " நாவல் " என்ற section எனக்கோ அத்துப்பிடி . Connemara வில் reference section என்ற தனி section உண்டு , அதில் " நாவல் " களில்                   " சுஜாதா " , " ரமணி சந்திரன் " மட்டுமே உண்டு !! திடீர் என்று ஒரு நாள் 
S.Ramakrishnan பெயரில் புத்தங்கள் அடுக்கப்பட்டது !!! Reference Section என்றாலே நல்ல புத்தங்கள் மட்டுமே இருக்கும் !!! யாரது என்று Google Search செய்தேன் , இவரோ புத்தங்களுக்கே வாழ்ந்திருக்கார் , இவரின் நான் படித்த முதல் புத்தகம் " உறுபசி " அது என்னை "யாமம்" அளவுக்கு ஈர்க்கவில்லை!!! 

"யாமம்" - Story telling with Information and facts regarding the journal of the story , endra முறையில் எழுதப்பட்டது . கதை 1800- 1950 பிதைக்கப்படும் கதையாக இருக்கிறது . 
 
கதையின் கரு - வாசன திரவியமான அத்தர் வணிகத்தை எளிமையான தமிழில் மன உணர்ச்சிகளுடன் தந்திருக்கிறார் . 

பரம்பரை தொழிலான அத்தரை , 5 தலைமுறைகளைத் தாண்டி வைத்திருக்கிறார் அப்துல் கரீம். இவருக்கோ ஒரே கவலை , தனக்கு குழந்தை இல்லை . தன் மனைவி ரஹ்மானி மீது வருத்தப்படுகிறார் . அத்தர் வணிகத்தை காப்பாத்த 2 வது கல்யாணம் வகிதாவை செய்கிறார் . குழந்தையில்லாமையால் 3 வது சுரையாவை கல்யாணம் செய்கிறார் . இது ஒரு கதை .

வீட்டை விட்டு சாமியார் ஆவதே பாக்கியம் என்று நினைத்து நீல்கண்டம் என்ற நாயை தொடர்ந்து வருகிறது பண்டாரம். இது ஒரு கதை.

லண்டனுக்கு படிக்க செல்வதால் கல்யாணமான  அண்ணன் பத்ரகிரி வீட்டில் தன் மனைவி தையல் நாயகியைத் தங்க வைக்கிறான் திருச்சிற்றம்பலம் . இது ஒரு கதை .

இதை தவறு Krishnaswamy எனும் தனி நபரைப் பற்றிய கதை !!! 

ஒவ்வொரு கதைக்கும் இருக்கும் ஒரே தொடர்பு அத்தர் மட்டும. கதைகள் ஏற்படுத்தும் பாதிப்போ பல. பண்டாரம் ஏற்படுத்தும் பாதிப்பு என்று நினைத்தாலும் வலிக்க கூடியது . அவசியம் படிக்க வேண்டிய நாவல் . எஸ். ராமகிருஷ்ணன் ஐயா எழுதிய இந்த நாவல் ஒரு பொக்கிஷம் .

உயிர்மை பதிப்பகம் - ₹220

My rating 4/5.

Via face book

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

FB_IMG_1510584349220.jpg

 

"மாதொருபாகன் " பெருமாள்முருகன் எழுதியது நான் பாரிஸில் வாங்கி வாசித்தேன். நான் நினைக்கிறேன் அது மறுபதிப்புபோல் பலசம்பவங்கள் தவிர்க்கப் பட்டிருக்கு என்று. புத்தக அடடையும் கருப்பில் நவீன ஓவியத்துடன் இருக்கு. நீங்கள் போட்ட அட்டைபோல் சிகப்பு அல்ல......!  tw_blush:

தொடருங்கள் ....!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.