நவீனன்

டுபாயில் 6 இலங்கையர்களுக்கு 3 வருடச் சிறைத்தண்டனை!

Recommended Posts

டுபாயில் 6 இலங்கையர்களுக்கு 3 வருடச் சிறைத்தண்டனை!

 
டுபாயில் 6 இலங்கையர்களுக்கு  3 வருடச் சிறைத்தண்டனை!
 

டுபா­யில் பெரிய திருட்­டுச் சம்­ப­வத்­தில் ஈடு­பட்ட ஆறு இலங்­கை­யர்­க­ளுக்குத் தலா 3 வருட சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த மே 6ஆம் திகதி தாம் பணி­யாற்­றும் நிறு­வ­னத்துக்குச் சொந்­த­மான வாக­னத்­தில் கொண்டு செல்­லப்­பட்ட பணப் பொதி­க­ளில் இருந்து 1.198 மில்­லி­யன் டினார் பணத்தை இவர்­கள் திரு­டி­யுள்­ள­னர். 22 மற்­றும் 29 வய­துக்குட்­பட்ட காவ­லா­ளி­களே இவ்­வாறு திரு­டி­யுள்­ள­னர்.

ஆறு இலங்­கை­யர்­க­ளும் ஒன்­றா­கத் திட்­ட­மிட்­டுள்­ள­னர். வாக­னம் நிறுத்­தப்­பட்டபோது அவர்­கள் பணத்தைத் திரு­டி­யுள்­ள­னர். அவர்­க­ளில் ஒரு­வர் அந்­தப் பணத்தைப் பாது­காத்து வந்­துள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. பின்­னர் அவர்­கள் ஒரு குடி­யி­ருப்புக் கட்­ட­டத்­தைப் பெற்­றுக் கொண்­ட­னர்.

அங்கு ஒவ்­வொ­ரு­வ­ரும் ஒரு லட்­சத்து 60 ஆயி­ரம் டினார் பணத் தைப் பங்­கிட்­டுக் கொண்­ட­னர். மீத­மி­ருந்த பணத்தை ஏனைய செல­வீ­னங்­க­ளுக்­காகப் பயன்­ப­டுத்திக் கொண்­டுள்­ள­னர்.

பின்­னர் பிரித்­துக்­கொண்ட பணத்­தின் பெரும்­ப­குதிப் பணத்தை, பணப்பரி­மாற்ற நிலை­யங்­கள் மூலம் தங்­கள் வீடு­க­ளுக்கு அனுப்ப முடிவு செய்­துள்ள நிலை­யில் பொலி­ஸா­ரி­டம் சிக்­கி­யுள்­ள­னர்.

டுபாய் குற்­ற­வி­யல் நீதி­மன்­றத்­தில் 6 இலங்­கை­யர்­கள் தொடர்­பில் இடம்­பெற்ற வழக்கு விசா­ர­ணை­யில் குற்­றச்­சாட்டு உறு­தி­யா­கி­யுள்­ளது.

அதற்­க­மைய அனை­வ­ருக்­கும் தலா 3 வருடச் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள் ளது. சிறைத்­தண்­ட­னை­யின் பின்­னர் குற்­ற­வா­ளி­களை நாடு கடத்­து­மாறு நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

http://newuthayan.com/story/44522.html

Share this post


Link to post
Share on other sites

சவுதியென்றால் நிலை வேறு கழுத்து கப்சா தான் மூதேவிகளா ஒவ்வொரு பகுதியும் தனித்தனி பாதுகாப்பு என்ற படியால் களவு செய்ய முடியாது ஆனால் சிலர் தப்பியுள்ளான்கள் 

Share this post


Link to post
Share on other sites
சக்ர வியூகம் பற்றி சுபத்ராவின் வயிற்றில் இருந்த குழந்தை அபிமன்யு கேட்டுக்கொண்டிருந்தார். சக்ரவியூகத்தில் இருந்து தப்பிக்கும் வழியைக் கேட்பதற்குள் சுபத்ரா அயர்ந்து உறங்கி விட்டார்.
 
திருடுவது பற்றி இந்த அறுவரும் கேட்டு அறிந்தபின், அதிலுருந்து தப்பிக்கும் வழியைக் கேட்பதற்குள் இவர்களின் தாய்மார்களும் அயர்ந்து உறங்கி விட்டனரோ....! அந்தோ பரிதாபம்....!! :( 

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now