Jump to content

பூக்கள்...!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

23131715_1732678090118389_20280877493974


பூக்கள்...!
-------------
பூக்கள்
மலர்கிறது
கார்த்திகைப் 
பூக்கள் மலர்கிறது!
காவிய நாயரைப்
போற்றிட மலர்கிறது
மானிட மனங்கள்
மலர்ந்திடுமா
தமிழ் மானிட 
மனங்கள் மலர்ந்திடுமா
மறவரைத் தொழிதிடவே
வல்லமை சூழுமன்றோ
வானில் உயர்ந்திடுமே
எம் தேசியக்கொடியது
வானில் உயர்ந்திடுமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான படம், படமே கார்த்திகையின்  கனதியை கண்முன் நிறுத்துகிறது......!

கவிதையும் அருமை....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

அருமையான படம், படமே கார்த்திகையின்  கனதியை கண்முன் நிறுத்துகிறது......!

கவிதையும் அருமை....!

இந்தப்படத்தை எனது நண்பரின் முகநூலில் கண்டபோது மனம் சிலவரிகளைத் தந்தது அதனை யாழிலே பதிவிட்டேன். 

படித்துப் பாராட்டிய  சுவியவர்களுக்கு நன்றிகள்.  பூக்களின் காட்சி யில் எம் வீரரின் முகம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலம் மறந்திடினும்...,

கார்த்திகைப்பூக்கலின் இதழ்கள்,..,

எமது கதை சொல்லும்!

 

விடியும் வரையாவது,

வெளிச்சத்தின் கீற்று,

தோன்றும் வரையாவது..

வரலாறு...

வாழ வேண்டும்!

 

கவிதை அருமை, நொச்சி! நன்றி!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, புங்கையூரன் said:

காலம் மறந்திடினும்...,

கார்த்திகைப்பூக்கலின் இதழ்கள்,..,

எமது கதை சொல்லும்!

 

விடியும் வரையாவது,

வெளிச்சத்தின் கீற்று,

தோன்றும் வரையாவது..

வரலாறு...

வாழ வேண்டும்!

 

கவிதை அருமை, நொச்சி! நன்றி!

 

நன்றி புங்கையார்!

தொடர்ச்சி அதைவிட அருமை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவைகள் பூக்களல்ல
மறவர்கள் சிவந்த கண்களின்
மஞ்சள் புன்னகைகள்
எழுதிச் செல்லும்விதியின் கை
இவரை மறைத்திடினும்
இவர் வீரத்தின் வரலாறு
எழுதி நிற்கிறது
இக் கார்த்திகைப் பூக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kavallur Kanmani said:

இவைகள் பூக்களல்ல
மறவர்கள் சிவந்த கண்களின்
மஞ்சள் புன்னகைகள்
எழுதிச் செல்லும்விதியின் கை
இவரை மறைத்திடினும்
இவர் வீரத்தின் வரலாறு
எழுதி நிற்கிறது
இக் கார்த்திகைப் பூக்கள்

கார்த்திகைப் பூக்கள்
கண் திறக்கையில்
எம் காவிய நாயகர்
முன்  வருகிறார்
காலங்கள் கடந்து
நாமும் செல்லலாம்
காலத்தை வென்று
வாழும் வீரரைக்
காந்தள் மலர்கள்
சூடிடிடும் உலகிலே...!

காவலுர் கண்மணியக்கா வருகைக்கும் வரிகளுக்கும்  நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாதம் கார்த்திகை பூக்கள் மாதம் மலரட்டும் கவிதைகள்கூட மாவீரர்கள் பெயரை சொல்லி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13.11.2017 at 5:50 AM, தமிழ் சிறி said:

Bild könnte enthalten: Blume

செம்மையில் எழுச்சியாய்
மஞ்சளுள் ஈகமாய்
மலரும் காந்தளே
காவிய நாயகர் 
முகம் காட்டி மலர்கிறாய்
 காலத்தை  வென்றவர்
கதைபேசி நிற்கிறாய்
உன்னைக் கையேந்திச்
செல்கின்றோம்
வல்லமைதாருமென்
அவர்களை வணங்கிடவே!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.