Jump to content

கறுப்பன் என்றொரு பூனைக்குட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பன் என்றொரு பூனைக்குட்டி

தமிழ்நதி -கனடா

IMG_20170830_085743-210x300.jpg

மூத்த மகனுடைய கையால் கொள்ளி வாங்குவதற்காக அருணாசலத்தார் நடுக்கூடத்தில் காத்துக் கிடந்தார். மகன் கந்தசாமி செய்தி கேட்ட அன்றிரவே அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுவிட்டார்.

வெள்ளைவேட்டி சால்வை, அருணாசலத்தாருடைய கறுப்பு நிறத்தை அடர் கறுப்பாக்கிக் காண்பித்தது. தலைமாட்டில் குத்துவிளக்கின் சுடர் காற்றின் திசைக்கேற்ப சாய்ந்து மாய்ந்து அழுதுகொண்டிருந்தது. நகரத்திற்குப் போகும்போது மட்டும் செருப்பு அணிந்துகொள்ளும் வழக்கமுள்ள அவருடைய கால்களில் வெள்ளைக் காலுறைகள் மாட்டப்பட்டு, இரண்டு பெருவிரல்களும் இழுத்துக் கட்டப்பட்டிருந்தன. ஆள் திடகாத்திரன்தான். இருந்துமென்ன… நெஞ்சுவலி சாய்த்துவிட்டது.

இரண்டு நாட்களுக்கு முன் விடிகாலையில் மருமகள் மனோகரியைக் கூப்பிட்டு நெஞ்சு வலி என்றார். வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற ஒரு மணி நேரத்திற்குள் குளிர்ந்து விறைத்துவிட்டது உடல். ஊருக்குள் ‘நல்ல சாவு’என்று கதைத்துக்கொண்டார்கள்.

அருணாசலத்தாரின் மனைவி இறந்து பதினான்கு ஆண்டுகளாகின்றன. மூன்று மகன்களில், மூத்தவரான கந்தசாமி அமெரிக்காவில் உணவகம் வைத்திருக்கிறார். அவர் வார்க்கும் தோசையை வெள்ளைக்காரர்கள் கூட ஆசை ஆசையாகச் சாப்பிடுகிறார்கள். இரண்டாவது மகன் கதிர்வேல் கொழும்பில் வீடுகளும் பார்களும் கார்களும் வைத்திருக்குமளவிற்கு வசதியானவர். தந்தையை வழியனுப்பி வைப்பதற்கு தாமதமாக வந்திறங்கி, முன்பே வந்துவிட்டவர்போல பாவனை பண்ணிக்கொண்டிருந்தார். உள்ளுரில் மரக்கறி வியாபாரம் செய்துவரும் மூன்றாவது மகன் கணேசனோடுதான் அருணாசலத்தார் கடைசிவரையில் இருந்தார். கணேசன், மனோகரியைத் திருமணம் செய்து கொண்டுவரும்வரையில் பெண் பிள்ளைகள் இல்லையே என்ற கவலை அருணாசலத்தாருக்குள் இருக்கவே செய்தது.

வெளிவாயிலிலிருந்து விறாந்தை வரை நீண்டு கிடந்தது பந்தல். பந்தலின் இருபுறமும் மர நிறத்தில் பிளாஸ்டிக் கதிரைகள். அதில் நான்கைந்து ஆண்கள் அமர்ந்து கதை பேசிக்கொண்டிருந்தார்கள். பெண்கள் விறாந்தையில் குழுமியிருந்தார்கள். காலையிலேயே நல்ல வெயில். அது தெரியாதபடிக்கு இருள், குளிர்ச்சி இரண்டும் கலந்த முகத்தை பந்தல் முற்றத்துக்குக் கொடுத்திருந்தது. இருந்திருந்தாற்போல வீசிய வெம்மை கலந்த காற்றில் பந்தல் கூரை படபடத்தது.

“ஓம்… இண்டிரவு அண்ணை வந்திடுவார். நாளைக்குக் காலமை பத்து மணிக்கெல்லாம் எடுத்திடுவம்” கதிர்வேல் யாரிடமோ சொல்வது கேட்டது. கேள்வியைக் கேட்டவருக்காக மட்டுமன்றி, எல்லோருக்குமாகச் சொல்வதான உரத்த தொனி. அதில் இலேசான கவலையும் கலந்திருந்தது. மதுபானச் சாலைகளின் பொறுப்பை அவருக்கு அவ்வளவு நம்பிக்கையில்லாத மைத்துனனிடம் கையளித்துவிட்டு வரவேண்டியிருந்ததால் உண்டான பதட்டம் அது.

“கள்ள நாய்” கதிர்வேல் தன்னை மறந்து உரக்கவே சொல்லிவிட்டார். பெண்கள் கூட்டத்தினுள்ளிருந்த கதிர்வேலின் மனைவி திரும்பி பார்த்தாள். அந்தக் ‘கள்ள நாய்’ யாரென்பது அவளுக்குத் தெரியும்.

ஆட்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள்.

பிணத்தைச் சுற்றிச் சொய்யிட்ட இலையான்களை கையிலிருந்த விசிறியால் விரட்டியபடி இருந்தார் நல்லம்மா ஆச்சி. உள்ளே வருபவர்களை மங்கிவிட்ட தன் கண்களால் உற்று நோக்குவார். வந்தவர் தனக்குத் தெரிந்தவரென்றால், கைகளுள் பாய்ந்து விழுவார்; நெஞ்சில் தலையால் முட்டி அழுவார்; ஆளடையாளந் தெரியாவிட்டால், அதிக நீளமில்லாத ஒப்பாரி என ஆளுக்கேற்றபடி அவருடைய அழுகையின் சுருதி மாறும்.

ராச வாழ்க்கையல்லோ

என்ரை அண்ணா-இப்ப

மோசம் போய் நிக்கிறமே….ய்ய்ய்…”

நல்லம்மா ஆச்சி அருணாசலத்தாரின் ஒன்றுவிட்ட தங்கச்சி. இளமையிலேயே புருசன் இறந்துவிட்டார். ஆச்சியின் இருப்பு மருமகளோடான சண்டையிலும் மகனோடான சமாதானத்திலும் கழிகிறது. தோன்றினால் இங்கே புறப்பட்டு வந்துவிடுவார். திரும்பிச் செல்ல மனதே வராது. மனோகரி அப்படி அக்கறையோடு கவனித்துக்கொள்வாள்.

பந்தல் குளுமையின்கீழ் பெட்டை நாய் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தது. அதன் பெயரே பெட்டை நாய்தான். பெடியன் நாய் வழக்கம்போல ஊரைச் சுற்றப் போய்விட்டது. கபிலன் என்ற பெயர்கொண்ட கடுவன் பூனை மட்டும் மதிலின் மீது படுத்திருந்து மதிலுக்கு அந்தப் பக்கம் பார்த்தபடி வாலால் யோசித்துக்கொண்டிருந்தது. கறுப்பும் சாம்பலும் கலந்த அதன் வால் பாம்பாய் ஒருகணம் நெளியக்கண்டு மிரண்டாள் மனோகரி.

மனோகரியின் கால்களை உரசி உரசி சொந்தங் கொண்டாடும் கறுப்புப்பூனை, அருணாசலத்தாரின் உடலை வீட்டுக்குக் கொண்டுவந்த அன்றிலிருந்து காணாமற் போய்விட்டது. பூனைகள் காணாமற் போவது வழமைதான். ஆனால், ஆச்சி சொன்ன விசயம் மனோகரிக்கு மிரட்சி அளித்தது.

“கறுப்புப் பூனையளின்ரை கண்ணுக்கு செத்தாக்களின்ரை ஆவி தெரியும் எண்டு சொல்லுவினம். அண்ணற்றை ஆவியைக் கண்டு அருண்டு அந்தப் பூனை எங்கையோ ஓடிப் போயிருக்கோணும்”

இறந்துபோன மாமனாருக்கும் பூனைக்கும் முடிச்சுப் போட்டது மனோகரிக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. அதனால், ஆச்சியின் பக்கம் செல்லாமல் சற்று ஒதுங்கியே இருந்தாள்.

 “சனிப்பிணம் தனியப் போகாது. ஞாயிற்றுக்கிழமை எடுக்கிறதுதான் நல்லது”ஆச்சியின் குரல் ஒலித்தது.

மாமனாரின் அறைக் கதவைப் பிடித்துக்கொண்டு கண்களில் நீர் முட்ட நின்றாள் மனோகரி.;  வெள்ளை வேட்டி விரிக்கப்பட்டிருந்த கட்டிலின் வெறுமை அவளைத் தாக்கியது. மாமனாருடைய சாய்வு நாற்காலி, அந்த அறையில் எவ்வளவு இடத்தைப் பிடித்துக்கொண்டிருந்தது என்பதை அதை அகற்றிய பிறகே உணரமுடிந்தது. அந்த நாற்காலியை வீட்டுக்குப் பின்புறத்தில் கொண்டுபோய்ப் போட்டிருக்கிறார்கள். அந்தியேட்டி முடிந்ததும் அது குப்பை மேட்டுக்கு அனுப்பப்பட்டுவிடும்.

“மருமோள்”

செடியிலிருந்து வீழும் மலர்போல அன்பின் வாசனையோடு அவளை வந்தடையும் அழைப்பை இனிக் கேட்கமுடியாது. பற்கடிப்பை மீறி விம்மல் வெடித்தது. மாமனாரிடத்தில் தந்தையின் முழுமையான அன்பை அனுபவித்தவள் அவள். அருணாசலத்தாரின் கோபத் தீ அவளைக் கண்டதும் படக்கென அணைந்துபோய்விடுவது கணேசனுக்குக் கூட ஆச்சரியந்தான்.

வாழைப் பழத்தில் சொருகப்பட்ட சாம்பிராணிக் குச்சியிலிருந்து எழுந்த புகை சுழன்று சுழன்று நாசியில் ஏறியது.

“நாளைக்குக் காலமை”கணேசன் அலைபேசியில் யாரிடமோ சொல்வது கேட்டது.

“சித்தி”

கண்களைத் துடைத்துக்கொண்டு நிமிர்ந்தாள் மனோகரி. கதிர்வேலின் மகள் ஆருத்ரா நின்றாள். பாட்டனாரைப் போல ஆருத்ரா நல்ல உயரம். மாநிறம். வட்ட முகமும் கண்களும் அவளுடைய தந்தை வழி பாட்டியினுடையதைப் போன்றன என்று குடும்பத்திலுள்ளவர்கள் சொல்வதுண்டு. அது ஆருத்ராவின் தாய்க்குப் பிடிப்பதில்லை. அவள் திருமணமாகி அந்த வீட்டுக்கு வந்தபோது மாமியார் உயிரோடிருந்தார். அவர்களுக்கிடையில் சண்டைகளும் மிகுந்திருந்தன.

“அழுகிறீங்களா?” கைகளைப் பிடித்துக்கொண்டாள் ஆருத்ரா.

“இல்லை” கண்களைத் துடைத்தாள் மனோகரி.

“சித்தப்பா சாப்பாடு வாங்கியந்திருக்கிறார். சாப்பிட வாங்கோ… அறைக்குள்ள… ” மெதுவாக அழைத்தாள் ஆருத்ரா. வீட்டில் பிணம் கிடக்கும்போது அடுப்பைப் பற்றவைக்கக் கூடாதென்பது சம்பிரதாயம். வயிறு இருக்கிறதே…!

மனோகரி ஆருத்ராவைப் பின்தொடர்ந்து அறைக்குள் போனாள்.

‘கறுப்பன் எங்கை இருக்கிறானோ…?’ கேள்வி அவளோடு கூடப் போனது.

சாப்பிட்ட சுவடில்லாமல் வாயைக் கழுவிக்கொண்டு முற்றத்துக்குப் போனாள் மனோகரி. பந்தலுள் இரண்டு ஆண்களோடு கணேசன் கதைத்துக்கொண்டிருந்தான். மற்றபடி மதியப்பொழுது தியங்கிக்  கிடந்தது. கபிலன், பிளாஸ்டிக் கதிரையொன்றில், புலியை நினைவூட்டும் தனது நீண்ட ஆகிருதியை நிறைத்து உறங்கிக்கொண்டிருந்தது. மனோகரியின் கண்கள் வளவெங்கும் துருவித் துருவித் தேடி ஏமாற்றத்தோடு வீட்டினுள் திரும்பின. கறுப்பனைக் காணவில்லை! மாமனார் இறந்து கிடக்கிறபோது இப்படி பூனையைத் தேடித் திரிவது அவளுக்கு குற்றவுணர்வாகத்தானிருந்தது. ஆனாலும், கறுப்பனின் நினைவை விலக்க முடியவில்லை.

00000000000000000000000000000000000000000

கறுப்பன் அந்த வீட்டுக்கு வந்து சேர்ந்த விதமே தனி. அன்று ஞாயிற்றுக்கிழமை. அப்போதுதான் மதியச் சாப்பாடு முடிந்திருந்தது. காகங்களும் கண் சொக்கி மிழற்றும் வெக்கை. மழைமேகங்களால் இருண்டு கிடந்த பின்மதியம். மாடிப் படி வழியே சாம்பல் நிறப் பூனையொன்று மெல்ல மெல்ல இறங்கி வர, இருண்ட வானத்திலிருந்து விழுந்ததென கன்னங்கரேலென்ற நிறத்தில் பூனைக்குட்டியொன்று மொட்டை மாடி வாசலில் அமர்ந்திருந்தது. உள்ளங்கைக்குள் அதன் உடல் முழுமையாக அடங்கிவிடும். அந்தளவு சிறியது. அதன் பாசிப் பச்சைக் கண்களில் பயம் அப்பிக் கிடந்தது.

 “இதெங்கை கிடந்து வெளிக்கிட்டு வருகுதுகள்?” கணேசன் கேட்டான்.

“ஆருக்குத் தெரியும்?” மனோகரி தாய்ப் பூனையைக் கடந்து குட்டியைத் தூக்கப்போனாள். இருளே வால் முளைத்து ஓடுவதுபோல அது பாய்ந்தோடி விட்டது. மொட்டைமாடிக்குப் போய்த் தேடினாள். அங்கும் காணவில்லை. மறைந்து தோன்றும் பூனையாயிருந்தது அந்தக் குட்டி.

அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை. ஏற்கெனவே ஒரு பூனையும் இரண்டு நாய்களும் இருந்தன. இருந்தாலும் கணேசனிடம் சொன்னாள்.

“குட்டியும் தாயும் இஞ்சை நிக்கட்டுமன்”

கணேசன் ஒன்றுஞ் சொல்லவில்லை. அந்தப் பூனைக்குட்டிக்கு மனோகரி ‘கறுப்பன்’என்று பெயர் வைத்தாள். அதன் தாய்க்குப் பெயர் தாய்ப்பூனை.

கறுப்பன் தாயோடு ஒட்டிக்கொண்டு திரியும். தட்டில் வைக்கப்பட்ட உணவை பயந்தபடியே சாப்பிடும். தாயும் மகனும் குட்டி ரெயில் பெட்டிகள் போல முன்னும் பின்னுமாக மதிலில் படுத்துக் கிடப்பார்கள். ஒரு இலை உதிரும் ஓசை, பறவைகளின் கீச்சொலி, உரத்த குரல் போதும் கறுப்பனைப் பயப்படுத்த. தாயின் வயிற்றுக்குள் மீண்டும் நுழைந்துவிடுவதென ஒடுங்கி நடுங்கும்.

“யாரோ நல்லாப் பயப்பிடுத்தியிருக்கினம்” மனோகரி சொல்வாள். வெட்டுண்ட அதன் வால் நுனி அதை உறுதிப்படுத்தியது. கறுப்பன் செல்லும் திசைக்கு எதிர்த்திசையில் அம்புக்குறிபோல அதன் வால் நீட்டிக்கொண்டிருக்கும்.

ஒருநாள் மாலையில் வெளியில் சென்ற கறுப்பனின் தாய் வீடு திரும்பவில்லை. கறுப்பன் வாசலைப் பார்த்துக்கொண்டே படுத்திருந்தது. இடையிடையே எழுந்து மதில் மீது ஏறும். அந்தப் பக்கம் பார்க்கும். பிறகு ஏமாற்றத்தோடு இறங்கிவரும். அதற்கென வைத்த சாப்பாடு தட்டில் காய்ந்துபோய்க் கிடந்தது.

ஏழெட்டு நாட்களாகியும் தாய்ப்பூனை திரும்பி வரவில்லை. கறுப்பன் பசி தாங்காமல் சாப்பிடத் தொடங்கியது. என்றாலும், தாயைத் தேடுவதை நிறுத்தவில்லை. தன் பச்சைக் கண்களால் வளவைத் துருவியபடி திரிந்தது. வெளியில் சென்று பழக்கமில்லாத பூனையது. கறுப்பன் போகுமிடமெல்லாம் தனிமையின் நிழல் நீண்டு நடந்தது.

“பூனையள் இப்பிடித்தான். பாசமோ நன்றி விசுவாசமோ இல்லாததுகள்” கணேசன் சொன்னான்.

“இல்லை. அது இவ்வளவு நாளும் குட்டியை விட்டிட்டு இராது. எங்கயாவது வாகனத்தில அடிபட்டுச் செத்திருக்கும்.” மனோகரி மறுத்தாள்.

‘ஐயோ செல்லமே! என்னிட்டை வா’ மனோகரி ஆதூரத்தோடு கைகளை நீட்டுவாள். கறுப்பனோ பயந்தடித்துக்கொண்டு ஓடியது. கபிலனோடு அது ஒட்டுவதில்லை. யானைகளில் தனியன் உண்டு; இது பூனைகளில் தனியன்.

கணேசன் வீட்டுக்குத் தாமதமாக வரத் தொடங்கியதிலிருந்துதான் கறுப்பன் அவளோடு ஒட்டத் தொடங்கியது. மரக்கறிச் சந்தை முடிந்ததும் எஞ்சிய காய்கறிகளைக் கொண்டுபோய் சாப்பாட்டுக் கடைகளுக்கு அரை விலைக்குக் கொடுத்துவிட்டுத் திரும்பி வர இரவு மணி பத்தாகிவிடும். அவன் வீடு திரும்பத் தாமதமாகும் இரவுகளில் மனோகரி வாசற்படியையொட்டி கதிரையைப் போட்டுக்கொண்டு அமர்ந்திருப்பாள். இருளின் அடர்த்தி கூடக் கூட கறுப்பனின் பயத்தின் அடர்த்தி குறையத் தொடங்கும். அது அவளது கால்களை உரசியபடி போகும் வரும். இப்போது தன்னைத் தூக்கி வைத்திருக்க அனுமதித்தது. ஆனால், ஒரு நிமிடந்தான். பிறகு, பின்னங்கால்களால் அவளுடைய கைகளைத் தள்ளும். அப்படித் தள்ளும்போது மறக்காமல் நகங்களைச் சுருக்கிக்கொள்ளும். அவளும் உடனே இறக்கி விட்டுவிடுவாள். தன் பிரியம் அதன் பயத்தை அதிகரித்துவிடக்கூடாதென்பதில் கவனமாக இருப்பாள்.  அதன் கன்னங்கரேலென்ற உடலுக்கு மற்றப் பூனைகளிடத்தில் இல்லாத பட்டு மென்மை இருந்தது. இறக்கி விட்டபிறகும் வளவளப்பு கைகளில் எஞ்சியிருக்கும்.

“ஏய் பட்டுக்குட்டீ!”

அருணாசலத்தாரின் கட்டில் அவரது அறையின் யன்னலோரத்தை ஒட்டிப் போடப்பட்டிருந்தது. அதன் வழியாக இந்தக் கொஞ்சலைக் காணவும் கேட்கவும் செய்வார்.

‘கடவுளே! நீ இவளுக்கு ஒரு பிள்ளையைக் குடுத்திருக்கலாம்’ பெருமூச்செறிவார்.

அருணாசலத்தாருக்கு நாய்களைப் பிடிப்பதுபோல பூனைகளைப் பிடிப்பதில்லை. இருந்தாலும், மனோகரியின் மனம் நொந்துபோகுமோவென்றெண்ணி பூனைகள் மீதான தனது அசூசையை வெளிக்காட்ட மாட்டார். ஆனால், கறுப்பனை அவருக்கு ஏனோ பிடித்திருந்தது. பழக்கதோசத்தினால் அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்துவிடும் அவர், வெளியில் வந்ததும் விழிப்பது கறுப்பனின் பச்சைக் கண்களில்தான். அது உயரமான விறாந்தைக் குந்திலிருந்தபடி அவரை உறுத்துப் பார்க்கும்.

“என்னடா கறுப்பா! நல்லா நித்திரை கொண்டியா?” கேட்பார்.

“மியாவ்”

“கொஞ்சம் பொறு… இப்ப உன்ரை அம்மா வந்து சாப்பாடு வைப்பா” கிழவர் பற்கள் உதிர்ந்துவிட்ட வாயால் சிரிப்பார்.

இரவு பன்னிரண்டு மணியளவில் வீடு அமளிப்பட்டது. கந்தசாமி தன் மனைவியோடு ஒரு வெள்ளைக்காரில் வந்திறங்கி தகப்பனை நோக்கி ஓடினார். உறவுப் பெண்களுக்கு மத்தியில் அப்போதுதான் உறங்கத் தொடங்கியிருந்த நல்லம்மா ஆச்சி கொண்டையை உதறி விட்டுக்கொண்டு அவ்விடத்திற்கு ஓட முயன்றார். முடியவில்லை. நடந்து போவதற்கிடையில் கந்தசாமியை ஆட்கள் சூழ்ந்துவிட்டார்கள்.

“என்ரை அப்பூ….” அழுகைச் சத்தம் ஐந்து நிமிடத்திற்கு மேல் நீடித்தது. பிறகு, மூக்கைச் சீறிக்கொண்டு குளிக்கப் போனார்.

“இந்த விளக்கங் கெட்ட கறுப்பனை இன்னுங் காணேல்லையே!” மனோகரி கணேசனிடம் அங்கலாய்த்தாள்.

“வந்திடும்”

“அது பசி தாங்காது”

“நாளைக்கு கன வேலை கிடக்கு” கணேசன் எரிச்சலோடு சொன்னான்.

‘அம்மாளாச்சி… திரும்பக் கொண்டுவந்து விட்டிடு’ கூடத்தில் பெண்கள் மத்தியில் படுத்திருந்த மனோகரி வேண்டினாள். ‘எங்கை ஆரிட்டைப் போய்ச் சாப்பாடு கேட்டு அடிவாங்குதோ…’ ஓசையெழுப்பாது விசும்பினாள்.

00000000000000000000000000000000000

நீட்டி நிமிர்ந்து படுத்திருந்த அருணாசலத்தாருக்கு மனோகரியின் விசும்பல் சத்தங் கேட்டிருக்கவேண்டும். படக்கென எழுந்து அமர்ந்தார். பெருவிரல் கால்கட்டை அவிழ்த்தார். கீழே விழுந்த சால்வையை எடுத்து தோளில் போட்டுக்கொண்டார். வெள்ளைக் காலுறைகள் சகிதம் கட்டிலிலிருந்து கீழிறங்கி மனோகரிக்குப் பக்கத்தில் கறுப்பனுடன் வந்து நின்றார். இப்போது அவருடைய கண்களும் பாசிப்பச்சை நிறத்திற்கு மாறியிருந்தன.

“மருமோள்….!” அந்த அழைப்பில் பழைய இனிமை இல்லை. கரகரவென்று… என்ன இது? குரலும் செத்துப்போகுமா?

மனோகரியின் இதயம் நெஞ்சுக் கூட்டை விட்டுக் குதித்து பந்தயக் குதிரை போல பாய்ந்தோடத் தொடங்கியது. வீரிட்டுக் கத்தினாள். அந்த வீறிடல் தொண்டைக்குள்ளேயே செத்து மடிந்தது.

விருக்கென்று எழுந்து மாமனாரின் உடல் கிடந்த இடத்தைப் பார்த்தாள். அவரில் ஒரு சலனமுமில்லை. குத்துவிளக்கின் சுடர் மட்டும் நடுங்கிக்கொண்டிருந்தது.

மனோகரிக்கு பயத்தில் மூச்சடைத்தது. பக்கத்தில் நல்லம்மா ஆச்சியும் மற்றவர்களும் ஆழ்ந்த உறக்கத்தில். நல்ல ஏற்ற இறக்கங்களோடு குறட்டைச் சத்தம் வேறு. ‘எல்லோரையும் உலுக்கி எழுப்பினாலென்ன…?’ அலைபேசியை அழுத்தி நேரத்தைப் பார்த்தாள். மணி மூன்றே கால்.

‘கனவா? காலடி ஓசையும் குரலும் அவ்வளவு துல்லியமாய்….’ குழம்பினாள்.

‘ஆச்சி சொன்னது உண்மையாக இருக்குமோ?’ அதன்பிறகு அவளால் உறங்கமுடியவில்லை! பயத்தோடு போர்வையை இழுத்து தலைமுதல் கால்வரை போர்த்திக்கொண்டாள்.

காலை எட்டு மணிக்கெல்லாhம் பறை அதிரத் தொடங்கிவிட்டது. அமுங்கியிருந்த துக்கத்தை அந்தச் சத்தம் அடித்துக் கிளப்பியது. நாய்கள் கிலி கொண்டு ஓடித் திரிந்தன. பெட்டை நாய் சாமியறையின் கட்டிலுக்கடியில் பதுங்கியது. விரட்ட விரட்ட கதவை விலக்கி அறைக்குள்ளேயே சுற்றிச் சுற்றி ஓடியது. வீட்டின் பின்புறம் ஜம்பு மரத்தின்கீழ் பாயத் தயாராக ஆயத்த நிலையில் நின்றது பெடியன் நாய். பிணத்தைத் தூக்கும் ஆரவாரமும் அழுகுரலும் அமளிதுமளிப்பட, சாமியறையிலிருந்து பிய்த்துக்கொண்டு வெளியேறிய பெட்டை நாய் பின்புறத்தில் வாலை நுழைத்தபடி பிரதான வீதியை நோக்கி ஓடியது. பெட்டியைத் தோளிலேற்றி சவ ஊர்வலம் தொடங்கவும் வெடிச் சத்தத்தால் வீதி அதிரத்தொடங்கியது. அப்போது பெடியன் நாய், எல்லோரையும் தாண்டிக்கொண்டு பிண ஊர்வலத்துக்கு முன்னால் ஓடுவதை மனோகரி கண்டாள். சனத்தைத் தாண்டி ஓடும் நாயை எப்படிக் கூப்பிடுவது? கூடியிருக்கும் சனங்கள் அவளைப் பற்றி என்ன நினைப்பார்கள்? தயங்கினாள். கபிலனையும் காணவில்லை. கூரையின் மேல் தாவியதோ? மதிலேறிப் பாய்ந்ததுவோ? கபிலனும் நாய்களும் மாயமாய் மறைந்தே போயின!

“ஐயோ… பூலோகம் போதாதென்றா… பரலோகம் போனாய் ஐயா” நல்லம்மா ஆச்சியின் ஒப்பாரி மனோகரியின் நெஞ்சைப் பிளந்தது. பெண்கள் அவளைக் கட்டிப்பிடித்துக்கொண்டு ஒப்பாரி வைத்தார்கள்.

“மாமா….!” இனிக் காணமாட்டோம் எனும் துக்கம் திடீரென பெருஞ்சூறையாய் தாக்க மனோகரி மண்ணில் புரண்டு அழத்தொடங்கினாள்.

அடுத்தநாள், விறாந்தையின் மூலையில் மேசையைக் கொண்டுவந்து போட்டு கதிர்வேலும் அவருடைய மகனும் செத்த வீட்டுக் ‘கணக்கு வழக்கு’ பார்த்துக்கொண்டிருந்தபோது, சொத்துப் பிரிப்புக் கதை தொடங்கியது. திட்டமிட்ட தற்செயல் அது!

கதிர்வேலும் கந்தசாமியின் மனைவியும் வார்த்தைகளாலே சாமியாடினார்கள். கணேசன் தன் இயல்பின்படி மௌனமாக அமர்ந்திருந்தான். கண்களில் கசப்பு.

இடைமறித்து ஆச்சி சொல்லும்வரையில் அப்படியொன்று இருக்குமென ஒருவருக்கும் தோன்றவில்லை.

“வீடும் காணியளும் ஆருக்கெண்டு அண்ணர் எழுதி வைச்சிருந்தாலும் வைச்சிருப்பார். எதுக்கும் தேடிப் பாருங்கோ”

சூடேறிக்கொண்டிருந்த குரல்களை இடைநிறுத்தியது ஆச்சியின் ஆலோசனை.

பெரியவரின் நீலநிற ட்றங்குப் பெட்டியினுள் இருந்த உயிலில், வயற் காணி மூத்த மகனாகிய கந்தசாமிக்கும், தோட்டக் காணி கதிர்வேலுக்கும், வீடு கடைசி மகனாகிய கணேசனுக்கும் என எழுதப்பட்டிருந்தது. வீடுதான் எல்லாவற்றிலும் பெறுமதியானது என்பதை எல்லோரும் அறிவார்கள். அருணாசலத்தார் தன் அறுபத்திரண்டாவது வயதில் சேமிப்பையெல்லாம் கொட்டிக் கட்டிய வீடு அது. வீடெனச் சொல்வது வசதி கருதியே; அளவிற் சிறிய அரண்மனை.

“அப்பூ” உயிலில் கணேசனின் கண்ணீர் விழுந்தது. மனோகரியும் கண்கலங்கினாள். அவளிடம் கூட மாமனார் இந்த விசயத்தைச் சொன்னதில்லை.

‘அமசடக்குக் கள்ளியள்’ மூத்தவரின் மனைவி முணுமுணுத்தது மனோகரியின் காதுகளில் விழவே செய்தது.

‘ஆண்டு அனுபவிக்க பிள்ளையளும் இல்லை’ எல்லோருக்கும் கேட்டது கதிர்வேலின் குமுறல்.

“நாங்கள் இந்தப் பட்டிக்காட்டிலை வந்து வயலும் தோட்டமுமா செய்யப்போறம்?” கதிர்வேல் எகிறிக் குதித்தார்.

திருமணஞ் செய்த நாளிலிருந்து கந்தசாமிக்கு சொந்த அபிப்பிராயங்கள் இருந்ததில்லை. மனைவியால் அறிவிக்கப்படும் முடிவுகளை ஆமோதிப்பார். இப்போதும் விட்டத்தின் உயரத்தைக் கணக்கிட முயலும் விட்டேத்தியான பார்வை.

“இந்தப் பட்டிக்காட்டிலை வந்து நீங்கள் இருக்கவும் போறதில்லைத்தானே?” நல்லம்மா ஆச்சி கோபத்தோடு கத்தினார்.

உயிலைக் கண்டெடுத்த இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே கணேசனின் சகோதரர்களும் மனைவிமாரும் கோபித்துக்கொண்டு போய்விட்டார்கள். மனோகரிக்கு ஒரே ஆறுதலாக இருந்த ஆருத்ராவும் போய்விட்டாள்.

நல்லம்மா ஆச்சிக்கு சந்தோசம்! உயில் தந்த மகிழ்ச்சியில் இன்னும் சில நாட்கள் மனோகரியோடு இருக்கலாம்.

ஆச்சி கூடவே இருப்பது பெரும் ஆறுதல்தான். ஆனாலும், ஆச்சியின் தொணதொணப்பைச் சமாளிக்க முடிந்த அளவு, மறதியைச் சமாளிக்க மனோகரியால் முடியவில்லை.

“பிள்ளை! தேத்தண்ணி வைக்கேல்லையா?”

“இப்பதானே குடிச்சம்”

“இவன் ராசதுரை செத்த வீட்டுக்கு வரேல்லை என்ன?”

“வந்து உங்களோடையும் கதைச்சிட்டுத்தானே போனவர்”

ஆனால், மருமகள் தனக்குச் செய்த கொடுமைகளையும், அதை மகன் தட்டிக் கேட்காததையும் மட்டும் நல்லம்மா ஆச்சி ஒருபோதும் மறந்ததில்லை!

அருணாசலத்தார் இறந்து போய் இருபத்து மூன்று நாட்களாகிவிட்டன. கறுப்பன் இன்னும் வரவில்லை! பெட்டை நாயும் பெடியன் நாயும் கபிலனும் செத்த வீட்டிலன்று இரவே திரும்பி வந்துவிட்டன.

வீடு திரும்பும் வழியை கறுப்பனுக்குக் காண்பிக்கும்படி மனோகரி தெய்வங்களைப் பிரார்த்தித்தாள். திரும்பி வந்தால் பாலாபிஷேகம் செய்வதாக அம்மனுக்கு நேர்த்தி வைத்தாள். எல்லாவற்றைப் பார்க்கிலும், பசியோடு அலைந்து திரிந்து அடிவாங்குமோ என்ற எண்ணமே அவளை துயருறப் பண்ணியது. நாளடைவில் அது இறந்துபோயிருந்தால் நல்லது என்று எண்ணத் தலைப்பட்டாள். அவளுடைய கவலையை யாரிடமும் பகிர்ந்துகொள்ளவும் முடியாது. ‘போயும் போயும் ஒரு பூனைக்குட்டிக்கா…’ சிரிப்பார்கள். தன்னை யாராலும் புரிந்துகொள்ள முடியாதென்பது மனோகரிக்குத் தெரியும்.

யன்னல் கம்பிகள் வழியே கண்களை ஓட்டினாள்.

 ‘எங்கையடா இருக்கிறாய்?’

“என்னத்தைப் பிள்ளை தேடுறாய்?” இரவுச் சாப்பாட்டை முடித்துவிட்டு சோபாவில் படுத்திருந்த ஆச்சி கேட்டார்.

“பூனை…”

“ப்… ஊனை” ஆச்சியின் பல்லில்லாத வாய்க்குள் பூனையால் நுழைய முடியவில்லை.

“கறுத்தப் பூனையள் ஆவியளோட நல்ல வாலாயம்” மீண்டும் ஆரம்பித்தார்.

“ஆச்சி கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்டியளா?” வழக்கமில்லாத வழக்கமாக சினந்தாள்.

“அது இப்ப சுடலைக்குள்ளை சுத்திக்கொண்டு திரியும். வாறதெண்டா அண்ணற்றை முப்பத்தொண்டுக் காரியம் முடிஞ்சவுடனை திரும்பி வந்திடோணும். இல்லையெண்டா அந்தப் பூனை ஒருநாளும் வராது” குடுகுடுப்பைக்காரன் குறி சொல்வதுபோல ஆச்சி சொன்னார்.

அவரது நெற்றியில் பூசப்பட்டிருந்த திருநீறு பெருகி சாம்பலாய் கொட்டியது. மனோகரி ஒருகணம் கண்களைக் கசக்கிவிட்டுப் பார்த்தாள். ஆச்சி ஈரக் கையால் பூசியிருப்பார் போல. திருநீறு வெண் பட்டையாக அப்பிக் கிடந்தது.

அயர்ச்சியோடு எழுந்து போட்டிகோவுக்குப் போனாள்.

வெளியிலும் புழுங்கியது. ஓரிலையும் அசையவில்லை. இருளைக் குடித்தாற்போல செடிகொடிகள் மயங்கி நின்றன.

திடீரென கறுப்பன் கத்தும் ஓசையை மனோகரி கேட்டாள். அதன் கத்தல் அவளுக்குத் தனியாகத் தெரியும். கபிலனுடையதைப் போல் தடித்த ஆம்பிளைத்தனமான குரல் இல்லை அது. தணிந்த, கெஞ்சுகிற குழந்தைக் குரல்.

நெஞ்சு பதைக்க முற்றத்துக்கு ஓடினாள்.

“பூஸ்…! பூஸ்!”

மல்லிகைச் செடி அசைந்ததை மனோகரி கண்டாள். இல்லை… யாரோ தட்டிவிட்டுக் கடந்து சென்றாற்போல மல்லிகைச் செடியின் ஒரு கிளை மட்டும் அசைந்தது. காற்று வீசவில்லை. ஏனைய செடிகளும் மரங்களும் கல்லாலானவை போல நிற்கின்றன. வயிற்றுக்குள் பயத்தின் அமிலம் சுரந்தது.

“பூஸ்…! பூஸ்…!” மீண்டும் கூப்பிட்டாள்.

வளவின் மூலையில் மண்டிக்கிடந்த இருளினுள், நாய்க்கூண்டருகில் இரண்டு ஒளிப்பொட்டுக்கள் மினுங்கின. கறுப்பனா? கறுப்பனென்றால் கூப்பிட்ட குரலுக்கு வராமல் ஏன் அங்கேயே நிற்கிறது? மனோகரியின் உடல் நடுங்கியது.

பூனையோ அரையடி உயரமும் வராது. ஒளிப்பொட்டுக்களோ நாய்க்கூண்டின் கூரையளவு உயரத்தில் நின்றன.

“பூஸ்!” வாயசைந்தது. குரல் எழும்பவில்லை!

சாமியறைக்குள் ஓடினாள். மாமனாரின் புகைப்படத்திற்கு முன்னால் போய் நின்று கண்ணீர் பெருக்கினாள்.

“உங்களுக்கு ஏதும் குறை வைச்சமா?”

மறுநாளும் கறுப்பனின் குரலை அவள் கேட்டாள். ஆனால், அதைப் பார்க்க முடியவில்லை.

அன்றிரவு கண் விழித்தபோது தொண்டை வரண்டிருந்தது. தலைமாட்டில் துளாவினாள். வெறுமையான தண்ணீர்ப் போத்தல் உருண்டது. கணேசன் முழுவதையும் குடித்துத் தீர்த்திருக்க வேண்டும். சமையலறைக்குள் போய் மின்விளக்கின் ஆளியைத் தட்டினாள். எரியவில்லை. மின்சாரம் போயிருந்தது. நிலவொளி யன்னல் வழியாக உள்ளிறங்கி சமையலறைத் தரையில் கீற்றுக் கோலம் போட்டிருந்தது. அந்த வெளிச்சம், பெரிய போத்தலிலிருந்து தண்ணீரை வார்க்கப் போதுமானது. தண்ணீரை எடுத்துக்கொண்டு படுக்கையறைக்குத் திரும்பும்போது உள்ளுணர்வின் உந்துதலால் திரும்பிப் பார்த்தாள்.

விறாந்தை சுவர்மீது படர்ந்திருப்பது என்ன? பார்த்துக்கொண்டிருக்கையிலேயே காற்றால் விரட்டப்படும் மேகங்கள்போல நிழலும் ஒளியும் குழம்பி பூனையுருவாய் நிலைகொண்டன. பாயத் தயாரான நிலையில் நின்றது பூனை!

மனோகரி ‘ஐயோ!’ என்று கத்தியபடி அறைக்குள் ஓடிப்போய்க் கதவைப் பூட்டிக்கொண்டாள். கணேசன் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தான். அவனை எழுப்ப மனதின்றி நடுங்கியபடி நெடுநேரம் அப்படியே அமர்ந்திருந்தாள்.

“கண் சிவந்து கிடக்கு. இரவு நித்திரை கொள்ளேல்லையா?” கேட்ட ஆச்சியை அவள் வெறித்துப் பார்த்தாள். இரவு கண்ட காட்சி தனது பிரமையே என நம்ப விரும்பினாள்.

முப்பத்தோராம் நாள் அந்தியேட்டிக் கிரியைக்கு வந்த கதிர்வேலும் மனைவியும் பங்காளி பகையாளி போல முகத்தைத் தூக்கிக் கொண்டு திரிந்தார்கள். ஆருத்ராவைக் கூட்டி வரவில்லை. மதியச் சாப்பாடு முடிந்தவுடனேயே கிளம்பியும் போய்விட்டார்கள். கந்தசாமி கொள்ளிக் கடமை முடிந்ததும் அமெரிக்காவுக்குத் திரும்பிப் போய்விட்டார்.

நல்லம்மா ஆச்சி உண்ட களைப்பில் உறங்கிக்கொண்டிருந்தார்.

அத்தனை பேர் வந்து சாப்பிட்டுப் போனபிறகும் சமையலறைக்குள் உணவுப் பண்டங்கள் குவிந்து கிடந்தன.

படையல் பெரிதே! என்னவெல்லாம் அருணாசலத்தாருக்குப் பிடிக்குமோ அத்தனையும்.

மதியமும் மாலையுமற்ற இடைப்பொழுதாகிய மூன்றரை மணிக்கு சற்றே உடலைச் சாய்க்கலாம் என்று அறைக்குள் போகக் காலெடுத்த மனோகரி மாடிப்படிகளில் நிழலொன்று நீண்டு வளர்ந்திருப்பதைக் கண்டாள். முதல்நாளிரவு கண்ட காட்சி தன் பிரமையிலிருந்து தோன்றியதல்ல என்று உணர்ந்ததும் அங்கிருந்து ஓடக் கால் பெயர்த்தாள். கறுப்பனின் தீனமான குரல் அவளை நிறுத்தியது. நெஞ்சை நகங்களால் கீறுவதுபோல அது மீண்டும் மீண்டும் கத்தியது. ‘என்ன ஆனாலும் ஆகட்டும்…’ துணிவைத் திரட்டிக்கொண்டு திரும்பினாள். முதன்முதலில் எங்கே தோன்றியதோ அதே இடத்தில் அவ்விதமே உடலைக் குறுக்கியபடி கறுப்பன் அமர்ந்திருக்கக் கண்டாள்.

‘இதுவும் பிரமைதான்’ நினைத்தாள்.

கறுப்பன் மனோகரியைத் தன் குழந்தைக் கண்களால் பார்த்தது.

“கடவுளே….!” மனோகரி தன்னை மறந்து உரத்துக் கத்தியபடி ஓடிச்சென்று அதைத் தூக்கினாள்.

கறுப்பனின் உடலில் உயிர் மீந்திருந்தது. அவ்வளவுதான். தன் சக்தியையெல்லாம் திரட்டிக்கொண்டு அங்கு வந்து சேர்ந்திருக்கவேண்டும். படிகள் தாண்டி இறங்கி வரக்கூட இயலவில்லை. வயிறு உடலோடு ஒட்டிப் போயிருந்தது. முதுகில் மயிர் பொசுங்கிய அடையாளம். காதடியில் பிய்ந்து உட்சதை செந்நிறத்தில் தெரிந்தது. விரட்டிய விலங்குகளால் ஏற்பட்டதோ? அலைந்த சுடலைகளின் காட்டுச் செடிகளால் உண்டான காயமோ? தடவிக் கொடுத்தாள்.

அவளிடமிருந்து இறங்க கறுப்பன் முற்படவில்லை!

 “அந்தரிச்சு வீட்டைச் சுத்திக்கொண்டு நிண்ட ஆவி போயிட்டுது. அதுதான் பூனை திரும்பி வந்திருக்கு.” நல்லம்மா ஆச்சி சொன்னார்.

மனோகரியிடம் பல கேள்விகள் இருந்தன. ஆனால், பதில்களால் அடைய முடியாத திருப்தியை கறுப்பனின் மீள்திரும்புகை அவளுக்கு அளித்தது.

“அப்பு செத்த அண்டைக்குக் காணாமப் போன பூனை அந்தியேட்டி அண்டைக்குத் திரும்பி வந்திருக்கு. பூனையென்ன கலண்டர் பாத்தா வந்திருக்கும்? ஆச்சி சொல்லுறதிலை ஏதோ இருக்கு” கணேசன் ஆமோதித்தான்.

 “மியாவ்” என்றபடி அவளைப் பார்த்தது கறுப்பன். அருணாசலத்தாரின் விழிகளின் சாயல், கறுப்பனின் விழிகளில் நொடிப்பொழுது பளிச்சிட்டு மறையக் கண்டு குழம்பிப்போய் நின்றாள் மனோகரி.

http://www.naduweb.net/கறுப்பன்-என்றொரு-பூனைக்க/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது மண்ணின் கிராமங்களில் நடை பெறும் மரணச்சடங்குகள் எமக்கு தெரிந்தவைதான். ஆனால் அதன் பின்னாலும், அதற்கு பின்னாலும் நடைபெறும் பல விடயங்கள் தண்ணீரில் தாண்ட கல் போல் அமுங்கியே போய் விடுகின்றன. கதையென்பதே சில பல சம்பவங்களின் தொகுப்பு தானே. வளர்ப்பு பிராணிகளுக்கும் வீட்டு உறவினர்களுக்கும் இடையே நடக்கும் சம்பவங்கள் அங்கங்கே உண்டுதான். அந்த பந்தத்தை அழகாக சொல்லிக் கொண்டு போயிருக்கும் கதாசிரியரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை......!

இணைப்புக்கு நன்றி கிருபன்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி!  

அழகான நடை ஊரோடும் உறவோடும் செல்லப்பராணிகளோடும் தமிழது வாழ்வு....... எவளவு அழகானது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.