Jump to content

கேளடி கண்மணி!


Recommended Posts

 
 
 
 
கேளடி கண்மணி!
 
 
 
 
 
 
 
 
 
E_1509074818.jpeg
 

''பாரதி... நான் இவ்வளவு சொல்றேன், ஏன் காது கொடுத்து கேக்க மாட்டேங்குற...'' என்றார், அப்பா ராகவன் சலிப்பாக!
''நீங்கதாம்பா என்னோட உணர்வுகள புரிஞ்சுக்க மாட்டேங்குறீங்க...''
''ஏண்டி... கல்யாணமாகி, ஆறு மாசம்கூட ஆகல; அதுக்குள்ள இப்படி பிடிவாதமா வந்து நிக்குற...'' என்றாள் ஆற்றாமையுடன், அம்மா.


''ஓ... அதுதான் உன் பிரச்னையா... உன் மக, வாழாவெட்டியா வந்து உட்கார்ந்துடுவாளோ, அக்கம்பக்கம் உள்ளவங்களுக்கு பதில் சொல்லணுமே... இதுதானே உன் பயம்...'' என்றாள், பாரதி.
''அம்மா சொல்றத விடு. விஜய் நல்ல பையன்; எந்த கெட்ட பழக்க வழக்கமும் கிடையாது. கல்யாணமான இந்த குறுகிய காலத்துல, அவரை, நீ முழுசா புரிஞ்சுக்கலயோன்னு தான் தோணுது,''என்றார், ராகவன்.
''அப்பா... நீங்க போன தலைமுறை ஆளு; உங்களால சில விஷயத்த புரிஞ்சுக்க முடியாது. எங்க ரெண்டு பேரோட கருத்தும் ஒருநாள் கூட ஒத்துப்போனதே கிடையாது. நான் சொல்ற எதையும் அவன் புரிஞ்சுக்கிறது இல்ல,'' என்று குற்றப் பத்திரிகை வாசித்தாள்.


''அப்படியே இருந்தாலும், கடைசியில, நீ நினைச்சபடி தானேம்மா நடக்குது...''
''ஒவ்வொரு முறையும் சண்டைப் போட்டுத் தான் காரியத்த சாதிக்க வேண்டியிருக்கு... என்னால, அவனோட போராட முடியாது. அவன், எனக்கு, 'செட்'டாக மாட்டான்; என்னோட நிம்மதியே போச்சு... விவாகரத்து செய்யலாம்ன்னு இருக்கேன்...'' என்று அவள் கூறியதும், அப்பாவும், அம்மாவும் ஆடிப் போயினர்.
அன்று மாலை, பாரதிக்கு தெரியாமல் மாப்பிள்ளையை பார்க்க கிளம்பினர், ராகவன் தம்பதி.


''மாப்பிள்ள... பாரதி ஏதோ சிறுபிள்ளைத்தனமா பேசுறா... எதையும் மனசுல வைச்சுக்காதீங்க,'' என்றார், ராகவன்.
''மாமா... எனக்கு உங்க ரெண்டு பேர் மீதும் ரொம்ப மரியாதை இருக்கு. ஆனா, உங்க மகளைப்பத்தி இப்படி சொல்றேன்னு வருத்தப்படாதீங்க... அவ, சராசரி பொண்ணு இல்ல; அவளுக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கு. அதுக்கு, என்னால ஈடு கொடுக்க முடியல. 24 மணி நேரமும் அவ கட்டுப்பாட்டுலேயே நான் இருக்கணும்ன்னு நினைக்குறா... ஆபீசுக்கு போனா, எங்கே இருக்கேன், என்ன செய்யறேன், எப்ப சாப்பிடுறேன், யார் கூட சாப்பிடுறேன்ன்னு எல்லாமே அவளுக்கு உடனுக்குடன், 'மெசேஜ்' அனுப்பணும். அப்படி அனுப்பினாலும் அதுலயும் குத்தம் கண்டுபிடிச்சு, ஒரே சண்டை. பிரண்ட்ஸ் கூட வெளியே போகக்கூடாது; லேட்டா வந்தா சண்டை. எனக்கு இந்த வாழ்க்கை மூச்சு முட்டுது. நான் எந்த தப்பான முடிவுக்கும் போக மாட்டேன்; அவளா வழிக்கு வரட்டும்ன்னு காத்திருக்கேன். இந்த பிரிவு கூட, அவளை யோசிக்க வச்சா நல்லது,'' என்று தன் எண்ணத்தை கூற, அவன் நிலைமை இருவருக்கும் புரிந்தது.


எதையும் புரிந்து கொள்ள மறுக்கும் மகளை, எப்படி மாற்றுவது என்ற கவலையுடன் வீடு வந்து சேர்ந்தனர், பாரதியின் பெற்றோர்.
''பாரதி... எனக்கு ஆபீசில், முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு. அதனால, லீவுக்கு நானும், உங்கம்மாவும் கிராமத்துக்கு வரல; நீ மட்டும் பாட்டி வீட்டுக்கு போயிட்டு வா,'' என்றார் ராகவன்.
சந்தோஷமாக ஒத்துக் கொண்டாள், பாரதி. மனம் சலிப்பாக இருப்பதற்கு மாற்று, தாத்தா - பாட்டி வீட்டுக்கு போவது தான் என்று தோன்றியது. அது, அவளுக்கு பிடித்தமான இடமும் கூட!
பாரதி, சென்னையில் பிறந்து, வளர்ந்தவள் என்றாலும், அவளது பெற்றோரின் பூர்வீகம், தென்காசி அருகே உள்ள இயற்கை அழகு கொஞ்சும் இலஞ்சி. தாத்தாவுக்கும், ஆச்சிக்கும் தங்கள் ஒரே பேத்தியான பாரதி மீது கொள்ளை பிரியம்.
பாரதியை வரவேற்க, வண்டி கட்டி, தென்காசி ரயில்வே ஸ்டேஷனுக்கே வந்து விட்டார், தாத்தா. பாரதியை பார்த்ததும், ஆச்சிக்கு சந்தோஷம் தாங்கவில்லை.


''வாடி பாரதி... மாப்பிள்ளையையும் கூட்டிட்டு வந்திருக்கலாம்; கல்யாணமான புதுசுல விருந்துக்கு வந்ததோட சரி...'' என்றாள்.
''சரி கிழவி... பேசிக்கிட்டே இருக்காம, முதல்ல அவளுக்கு குடிக்க ஏதுன்னாச்சும் கொடு,'' என்றார், தாத்தா.
''பல்லு விளக்கிட்டு வா; காபி கலந்து தாரேன். உனக்கு பிடிக்குமேன்னு, திரட்டுபால் கிளறி வைச்சிருக்கேன். அங்க தான் வேலை வேலைன்னு அலையற... இங்க, நல்லா ரெஸ்ட் எடு; ஒரு வேலையும் செய்யக்கூடாது,'' என்ற ஆச்சியின் அன்பு, பாரதியை நெகிழ வைத்தது.
அரண்மனை மாதிரி பெரிய வீடும், தோட்டமும், எப்போதுமே அவளுக்கு ரொம்ப பிடிக்கும். இரவு சாப்பிட்டதும், திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, 'ஜிலுஜிலு'வென வீசிய காற்று, கண்ணைச் சொக்க, தூங்குவதற்காக, எழுந்து உள்ளே சென்றாள்.
தேக்கு கட்டிலும், இலவசம் பஞ்சு மெத்தையும் இதமான தூக்கத்தை தர, ரொம்ப நாளைக்கு பின், நிம்மதியாக தூங்கினாள், பாரதி.


காலையில் மெதுவாக எழுந்தவள், பல் துலக்கி, பாட்டி கொடுத்த காபியுடன், வீட்டுக்கு பின்புறம் இருந்த தோட்டத்து மேடையில் அமர்ந்தாள்.
''ஆச்சி... தாத்தாவ எங்க காணோம்?''
''அவரு வயக்காட்டுக்கு போயிருக்காரு...''
''காலை சாப்பாடு...''
''வழக்கமா வேலைக்காரி செவ்வந்தி கொண்டு போய் கொடுத்துட்டு வருவா...'' என்றவள், ''இன்னைக்கு நீ வந்திருக்கிறதுனால, பலகாரம் சாப்பிட வந்திடுறதா சொல்லிட்டு போனாரு...'' என்றாள்.
''காலையில என்ன ஆச்சி ஒரே சத்தம்... தாத்தாவுக்கும், உனக்கும் சண்டையா...'' என்று கேட்டாள்.
''அதை விடு கண்ணு... வழக்கமா நடக்கிற விஷயந்தான்; நான் ஏனைன்னா அவரு கோனைம்பாரு... சண்டையில்லாத புருஷன், பொண்டாட்டி யாரு இருக்கா சொல்லு...''
அவர்கள் பேசுவதை கேட்டபடி உள்ளே நுழைந்த தாத்தா, ''அம்மாடி... இந்த கிழவிக்கு திமிரு ரொம்ப ஜாஸ்தியாப் போச்சு... இவக் கூட எப்பப்பாரு ஒரே அக்கப்போர் தான்; பேசாம, இந்தக் கிழவிய ரத்து செய்துட்டு, செவ்வந்திய உனக்கு சின்ன ஆச்சியா கொண்டாந்துரலாம்ன்னு பாக்கேன்...'' என்று கூறி, 'இடிஇடி'யென சிரித்தார்.
''கிழவனுக்கு ஆசையப் பாரு... கை, கால் விழுந்தா, செவ்வந்தியா உன்னை கவனிக்கப் போறா... நான் தானேய்யா கவனிக்கணும்...'' என்றாள், ஆச்சி.

 


''சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்டி...'' என்று மனைவியை கொஞ்சியவர், ''பதனி வித்து வந்தாங்க; உனக்கு பிடிக்குமேன்னு தூக்குல வாங்கியாந்திருக்கேன்; அதோட, செவ்வாழை இளநீர், ஒரு குலை கொண்டு வந்து போடச் சொல்லியிருக்கேன்; பாரதிக்கு வெட்டிக் கொடு,'' என்றார், தாத்தா.
இருவரின் குறும்பான பேச்சை ரசித்தபடி எழுந்தாள், பாரதி. அவர்கள் வெளியே சண்டை போடுவது போல் தெரிந்தாலும், இருவருக்குள்ளும் பாச பிணைப்பு இருப்பது புரிந்தது.
பலகாரம் சாப்பிட்டு முடித்த தாத்தா, ''மதியத்துக்கு சாப்பாட்டை செவ்வந்திகிட்ட கொடுத்தனுப்பு; புள்ள இருக்குறதனால, சாயந்திரம் வெள்ளனவே வந்துடுறேன்...'' என்றார்.
''மறுபடி செவ்வந்தியா... ஆச்சி ஜாக்கிரதை!'' கலகலவென சிரித்தாள், பாரதி.
தாத்தா போன பின், பாட்டியும், பேத்தியும் ஓய்வாக உட்கார்ந்தனர்.
''பாரதி... நாம ரெண்டு பேரும் பல்லாங்குழி விளையாடுவோமா... அப்படியே கடலை அவிச்சு வைச்சிருக்கேன்; தட்டுல போட்டு எடுத்துட்டு வா...''
''அதெல்லாம் இருக்கட்டும் ஆச்சி... தாத்தா பாட்டுக்கு வயக்காட்டுலேயே கிடக்காரு... உனக்கு வீட்டுல தனியா போரடிக்காதா...''


''ஆம்பளைங்க கொஞ்சம் வெளியில போயிட்டு வந்தாத்தான், நமக்கும் கொஞ்சம் விட்டாத்தியா இருக்கும்; பொழுதன்னைக்கும் ஒருத்தர் மூஞ்சிய ஒருத்தர் பாத்துக்கிட்டு இருந்தா, அலுப்புத்தான் வரும்...''
''ஆச்சி... அந்த செவ்வந்திக்கு நீ ரொம்ப இடம் கொடுக்குற...''
''தாத்தா பேசுனத கேட்டு பயந்துட்டியா... அது சும்மா கிண்டலுக்கு... அவருக்கு எம்மேல ரொம்ப பிரியம், மரியாதை!''
''அதுதான் பாத்தேனே... உனக்கு பிடிக்குமேன்னு தூக்குல பதனிய வாங்கிட்டு வந்தாரே... விஜய்யும் அப்படித்தான் ஆச்சி... சண்டை போட்டாலும், எனக்கு பிடிச்ச சாக்லேட், ஐஸ்கிரீம் வாங்கிட்டு வருவான்... கோபப்பட்டாலும் பாத்து பாத்து செய்வான்...'' முதல் முறையாக தன்னை மறந்து, விஜய்யை பற்றி பேசினாள்.
''புருஷன், பொண்டாட்டி உறவுங்குறது அதுதாண்டி... சண்டை, சச்சரவு மாதிரிதான் அன்பும், அரவணைப்பும் இருக்கும். எனக்கும், உங்க தாத்தாவுக்கும் எந்த விஷயத்திலும் ஒத்த கருத்து கிடையாது. நான் சொல்றது, அவருக்கு சரின்னு பட்டாலும், அதை ஒத்துக்க மாட்டாரு; பொதுவா, ஆம்பளைங்க அவ்வளவு ஈசியா நாம் சொல்றத ஏத்துக்க மாட்டாங்க...''
''ஈகோ ஆச்சி...''

 


''அது எதுவோ... முதல்ல ஏத்துக்காத மாதிரி கத்திட்டு, அப்புறம் சரிம்பாங்க... நாம, அதையெல்லாம் அலசி ஆராய்ஞ்சுட்டு இருக்க கூடாது. அதப்போல, நீ செவ்வந்திய பத்தி யோசிக்க தேவையில்ல. அவரு எத்தனை பொம்பளைங்க கிட்ட சிரிச்சு பேசினாலும், அவருடைய அன்பு, மரியாதை எல்லாம் எம்மேல தான் இருக்கும். அவங்க நம்ம மீது வச்சுருக்கிற அன்பையும், மரியாதையையும் வெளிக்கொண்டு வர்றது நம்ம கையில இருக்கு. இப்ப, உனக்கு அது புரியாது; வயசாகி, கை, கால் தளரும் போது தான், வாழ்க்கைத்துணையோட அருமை புரியும்,'' என்றவள், ''என்ன பாரதிம்மா... ஆச்சி பேசியே கொல்றேன்னு நினைக்கிறயா...'' என்றாள்.
''இல்ல ஆச்சி... நீங்க, ஒரு அனுபவ பெட்டகம்; அதுலேயிருந்து நாங்க எடுத்துக்க வேண்டிய பொக்கிஷம், நிறைய இருக்கு,'' என்ற பாரதி, முதல் முறையாக யோசிக்க ஆரம்பித்தாள்.

http://www.dinamalar.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா யோசித்து அவனுக்கு விடுதலை கொடு தாயே , அவன் பிழைச்சுப் போகட்டும்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ஆறு மாத்தில் எங்கே புரிய போகிறது     வாழ்கை ..tw_blush:

..போக போக தெரியும்  ... பூவின் வாசம் புரியும்    ..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.