Jump to content

ஐ.நா. உடன்பாட்டை மீறும் இலங்கை இராணுவம்!


Recommended Posts

ஐ.நா. உடன்பாட்டை மீறும் இலங்கை இராணுவம்!

 
ஐ.நா. உடன்பாட்டை மீறும்  இலங்கை இராணுவம்!
 

இலங்கை இரா­ணு­வம் ஐ.நா. உடன்­பாட்டை மீறிச் செயற்­ப­டு­வ­தாக மனித உரி­மை­கள் கண்­கா­ணிப்­ப­கம் குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளது.

நியூ­யோர்க்கைத் தலை­மை­ய­க­மாகக் கொண்ட மனித உரி­மை­கள் கண்­கா­ணிப்­ப­கம், ஐக்­கிய நாடு­க­ளின் 77 ஆவது செயற்­குழுக் கூட்­டத்­தில் இலங்­கை­யில் போரின்­போது மாண­வர்­க­ளின் உரி­மை­கள் மீறும் வகை­யில் அவர்­க­ளின் கல்வி வச­தி­களை இரா­ணு­வத்­தி­னர் பயன்­ப­டுத்­தி­யமை தொடர்­பில் பிரே­ரணை முன்­வைத்­துள்­ளது.

2010ஆம் ஆண்­டில் மேற்­கொள்­ளப்­பட்ட கண்­கா­ணிப்­புக்­க­ளின் அடிப்­ப­டை­யில் இந்­தப் ­பி­ரே­ரணை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

வவு­னியாவில் உள்ள தமிழ் பாட­சாலை மற்­றும் ஓமந்­தை­யில் உள்ள மத்­திய கல்­லூரி ஆகி­ய­வற்றைப் படை­யி­னர் தமது நட­வ­டிக்­கை­ளுக்­காகப் பயன்­ப­டுத்­தி­னர் என்று குற்­றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

இரா­ணுவ நட­வ­டிக்­கை­க­ளி­னால் சேத­ம­டைந்­துள்ள பாட­சா­லை­க­ளின் சொத்­துக்­களை மீளத்­தி­ருத்த வேண்­டும் என்று கண்­கா­ணிப்­ப­கம் கோரி­யுள்­ளது.

2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வரை ஐக்­கிய நாடு­க­ளின் அமைதி காப்புப் படை­யில் 21 அதி­கா­ரி­க­ளும் 456 வீரர்­க­ளும் பணி­யாற்றி வரு­கின்­ற­னர்.

இவர்­கள் பணி­யாற்­றும் மத்­திய ஆபி­ரிக்கக் குடி­ய­ரசு, லெப­னான், தென்­சூ­டான் ஆகிய நாடு­க­ளில் பாட­சாலைப் பாது­காப்பு வல­யங்­கள் உள்­ளன.

அந்த நாடு­க­ளில் ஆசி­ரி­யர்­கள், மாண­வர்­கள் மற்­றும் பாட­சா­லை­க­ளுக்குப் போர்க்­கா­லத்­தி­லும் உரிய பாது­காப்பு உத்­த­ர­வா­தம் கிடைத்­துள்­ளது.

இலங்­கை­யில் அது கிடைக்­க­வில்லை. ஐக்­கிய நாடு­க­ளின் அமை­திப் படை­க­ளில் அங்­கத்­து­வம் வகிக்­கும் இலங்­கைப் படை­யி­னர், ஐக்­கிய நாடு­க­ளின் கொள்­கை­யான, பாட­சா­லை­கள், இரா­ணுவ நட­வ­டிக்­கை­க­ளுக்கு பயன்­ப­டுத்­தப்­ப­டக்­கூ­டாது என்­ப­தற்கு உடன்­பட்­டுள்­ளார்­கள் என்­ப­தை­யும் கண்­கா­ணிப்­ப­கம் சுட்­டிக்­காட்­டியுள்ளது.

http://newuthayan.com/story/39532.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.