Jump to content

ஜிம்பாப்வே - வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி


Recommended Posts

முதல் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீசை 219 ரன்னில் சுருட்டியது ஜிம்பாப்வே

ஜிம்பாப்வேயிற்கு எதிரான முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 219 ரன்னில் சுருண்டது.

 
 
முதல் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீசை 219 ரன்னில் சுருட்டியது ஜிம்பாப்வே
 
ஜிம்பாப்வே - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புலவாயோவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி அந்த அணியின் பிராத்வைட், பொவேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பிராத்வைட் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கைல் கோப் 16 ரன்னில் ஏமாற்றம் அளித்தார்.

4-வது வீரராக களம் இறங்கிய ஷாய் ஹோப் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதற்கிடையில் பொவேல் 56 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த சேஸ் 31 ரன்னில் வெளியேறினார்.

201710212104039024_1_cremer001-s._L_styvpf.jpg

அடுத்தடுத்து வந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 219 ரன்னில் சுருண்டது. சாய் ஹோப் 90 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். 174 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்திருந்த வெஸ்ட் இண்டீஸ், அதன்பின் 46 ரன்னுக்குள் 7 விக்கெட்டுக்களை இழந்தது.

ஜிம்பாப்வே அணி சார்பில் கிரீமர் 4 விக்கெட்டும், வில்லியம்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் ஜிம்பாப்வே முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது.

 

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட்: ஜிம்பாப்வே 159 ரன்னில் சுருண்டு பரிதாபம்

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்டில் ஜிம்பாப்வே 49 ரன்னுக்குள் கடைசி 7 விக்கெட்டுக்களை இழந்து முதல் இன்னிங்சில் பரிதாபமாக 159 ரன்னில சுருண்டது.

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட்: ஜிம்பாப்வே 159 ரன்னில் சுருண்டு பரிதாபம்
 
ஜிம்பாப்வே - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் புலவாயோவில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் ஜிம்பாப்வேயின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணி 219 ரன்னில் சுருண்டது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஷாய் ஹோப் அதிகபட்சமாக 90 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். ஜிம்பாப்வே அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் கிரிமர் 4 விக்கெட்டும், வில்லியம்ஸ் 3 விக்கெட்டும் வீ்ழ்த்தினார்கள்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்திருந்தது. மசகட்சா ரன்ஏதும் எடுக்காமலும், மிர் 17 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடினார்கள். அணியின் ஸ்கோர் 44 ரன்னாக இருக்கும்போது மிர் 27 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து எர்வின் களம் இறங்கினார். இவர் மசகட்காவுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அணியின் ஸ்கோர் 91 ரன்னாக இருக்கும்போது மசகட்சா 42 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பிராண்டன் டெய்லர் 1 ரன்னிலும், வில்லியம்ஸ் 7 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிஷூ பந்தில் ஜிம்பாப்வே விக்கெட்டுக்கள் சீட்டுக்கட்டு போல் சரிந்தது. இதனால் ஜிம்பாப்வே அணி 159 ரன்னில் சுருண்டது. ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் என்ற நிலையில் இருந்த ஜிம்பாப்வே கடைசி 49 ரன்களுக்குள் 7 விக்கெட்டுக்களை இழந்து முதல் இன்னிங்சில் பரிதாபமாக 159 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளர் பிஷூ அபாரமாக பந்து வீசி ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். ஜிம்பாப்வே 159 ரன்னில் சுருண்டதால் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 60 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

60 ரன்கள் முன்னிலையுடன் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 25 ரன்கள் எடுப்பதற்குள் ஒரு விக்கெட்டை இழந்துள்ளது.

http://www.maalaimalar.com/

Link to comment
Share on other sites

117 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய அணி வெற்றி

02col131023740_5673646_25102017_AFF_CMY.

சிம்பாப்வேக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய அணி 117 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சிம்பாப்வே சென்றுள்ள மேற்கிற்திய அணி 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புலவாயோவில் 21-ம் திகதி தொடங்கியது.

03col131936666_5673774_25102017_AFF_CMY-நாணயச்சுழற்சியில் வென்ற மேற்கிந்திய அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. முதலில் ஆடிய மேற்கிந்திய அணி முதல் இன்னிங்சில் 219 சகல விக்கெட்டையும் இழந்தது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய சிம்பாப்வே அணி 159 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனை அடுத்து 2-வது இன்னிங்சை ஆடிய மேற்கிந்திய அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 88 ஓட்டங்கள் எடுத்து இருந்தது.

3-வது நாள் ஆட்டம் முடிவில் மேற்கிந்திய அணி 2-வது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 369 ஓட்டங்கள் எடுத்து வலுவான நிலையை எட்டியது. ரோஸ்டன் சேஸ் 91 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர். 4-வது நாள் ஆட்டத்தில் மேற்கிந்திய 2-வது இன்னிங்சில் 372 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டைமயும் இழந்தது. ரோஸ்டன் சேஸ் 95 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து 443 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிம்பாப்வே அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது.

சிம்பாப்வே அணியினர் நிதானமாக விளையாடினர். இருப்பினும் மேற்கிந்திய அணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்களை வீழ்த்தினர். சிம்பாப்வே அணி 316 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டையும் இழந்தது. சிம்பாப்வே அணியின் மசகாட்சா 57 ஓட்டங்களும், சலொமன் மைர் 47 ஓட்டங்களும், பிரண்டன் டெய்லர் 73 ஓட்டங்களும், சிகந்தர் ரசா 30 ஓட்டங்களும், கிரிஸ் போபு 33 ஓட்டங்களும் எடுத்தனர். மேற்கிந்திய அணி 117 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டும், இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டும் வீழ்த்திய மேற்கிந்திய தீவின் தேவேந்திர பிசூ ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதன்மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவு அணி 1-0 என முன்னிலை பெற்றது.

மேற்கிந்திய தீவு - சிம்பாப்வே இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி 29-ம் திகதி தொடங்குகிறது. 

http://www.thinakaran.lk/2017/10/26/விளையாட்டு/20740/117-ஓட்டங்கள்-வித்தியாசத்தில்-மேற்கிந்திய-அணி-வெற்றி

Link to comment
Share on other sites

ஜிம்பாப்வேயுடன் 2-வது டெஸ்ட் போட்டி: வெற்றியின் விளிம்பில் வெஸ்ட் இண்டீஸ்

ஜிம்பாப்வேயுடனான 2-வது டெஸ்டில் டவுரிச் மற்றும் ஹோல்டர் ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது.

 
ஜிம்பாப்வேயுடன் 2-வது டெஸ்ட் போட்டி: வெற்றியின் விளிம்பில் வெஸ்ட் இண்டீஸ்
 
ஜிம்பாப்வே - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் புலவாயோ குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி கேப்டன் க்ரிமர் பேட்டிங் தேர்வு செய்தார்.

முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி தனது முதல் இன்னிங்சில் 109.1 ஓவரில் 326 ரன்னில் ஆல் அவுட் ஆனது. மூர் 52 ரன்னிலும், மசகட்சா 147 ரன்னிலும், சிகந்தர் ரசா 80 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ரோச் 3 விக்கெட்டும், கேப்ரியல், பிஷூ தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

201711020116159114_1_n484x1yy._L_styvpf.jpg

இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பிராத்வொயிட்டும், பாவெலும் களமிறங்கினர். பாவெல் சிறப்பாக விளையாடி 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சீரான இடைவெளியில்
விக்கெட்டுகள் வீழ்ந்தன.

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்து தடுமாறியது. ஆனாலும் டவுரிச் மற்றும் ஹோல்டர் ஜோடி அபாரமாக விளையாடியது. இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்தது. இருவரும் அபாரமாக ஆடி சதமடித்தனர். டவுரிச் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்ததும், ஹோல்டரும் 110 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 448 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே தரப்பில் சிகந்தர் ரசா 5 விக்கெட்டும், கிசோரோ 3 விக்கெட்டும் வீழ்த்தினர். ஜிம்பாப்வேவை விட வெஸ்ட் இண்டீஸ் அணி 122 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதைத்தொடர்ந்து, ஜிம்பாப்வே அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவிலேயே பெவிலியனுக்கு திரும்பினர். அந்த அணி 46 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

இதையடுத்து ஆட வந்த பீட்டர் மூர் மற்றும் சிகந்தர் ரசா ஆகியோர் பொறுப்புடன் விளையாடினர். இறுதியில் 4-ம் நாள் ஆட்ட முடிவில் ஜிம்பாப்வே அணி 4 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமர் ரோச் 2 விக்கெட்டும், கேப்ரியல், பிஷு தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். வெஸ்ட் இண்டீசை விட 18 ரன்கள் அதிகம் எடுத்துள்ளது.

இன்று ஆட்டத்தின் கடைசி நாள் என்பதால், ஜிம்பாப்வே அணியின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற போராடும் என தெரிகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/11/02011605/1126371/Dowrich-Holder-take-West-Indies-to-brink-of-series.vpf

Link to comment
Share on other sites

2-வது டெஸ்ட் டிரா: 12 வருடத்திற்குப் பிறகு தோல்வியை தவிர்த்த ஜிம்பாப்வே

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது டெஸ்டை டிரா செய்ததன் மூலம், 12 வருடத்திற்குப் பிறகு முதன்முறையாக தோல்வியை தவிர்த்துள்ளது ஜிம்பாப்வே.

 
2-வது டெஸ்ட் டிரா: 12 வருடத்திற்குப் பிறகு தோல்வியை தவிர்த்த ஜிம்பாப்வே
 
ஜிம்பாப்வே - வெஸ்ட் இண்டீஸ் அணிளுக்கு இடையிலான முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் புலவாயோவில் கடந்த மாதம் (அக்டோபர்) 29-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 326 ரன்கள் சேர்த்தது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 448 ரன்கள் குவித்தது. ஒரு கட்டத்தில் 7 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்திருந்தது. 8-வது விக்கெட்டுக்கு டவ்ரிச் உடன் கேப்டன் ஹோல்டர் ஜோடி சேர்ந்தார். இருவரும் சதம் அடித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை சரிவில் இருந்து மீட்டனர். டவ்ரிச் 103 ரன்னும், ஹோல்டன் 110 ரன்களும் சேர்த்தனர். இந்த ஜோடி 212 ரன்கள் சேர்த்தது.

201711022040052302_1_9westIndies001-s._L_styvpf.jpg

இருவரின் ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 122 ரன்கள் முன்னிலைப் பெற்றது. 122 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஜிம்பாப்வே அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் ஜிம்பாப்வே 4 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்திருந்தது. மூர் 39 ரன்களுடனும், சிகந்தர் ரசா 58 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. மூர் 42 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். சிகந்தர் ரசா 89 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த வாலர் 15 ரன்னில் ஆட்டமிழந்தாலும், விக்கெட் கீப்பர் சகப்வா, கேப்டன் க்ரிமர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

இருவரின் ஆட்டத்தால் ஜிம்பாப்வே அணி 179 ரன்கள் முன்னிலைப் பெற்றது. ஐந்தாவது நாள் ஆட்டம் முடிவடைய நிலையில் இருந்ததால் ஜிம்பாப்வே அணி 144 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 301 ரன்கள் எடுத்திருக்கும்போது போட்டியை முடித்துக் கொள்ள இரண்டு அணி கேப்டன்களும் சம்மதம் தெரிவித்தனர். இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

201711022040052302_2_9westindes-s._L_styvpf.jpg

சபாக்வா 71 ரன்னுடனும், க்ரிமர் 28 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றிருந்ததால் 1-0 எனத் தொடரைக் கைப்பற்றியது. இந்த போட்டியை டிரா செய்ததன் மூலம் ஜிம்பாப்வே அணி 12 வருடத்திற்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் தோல்வியை தவிர்த்துள்ளது.

சிகந்தர் ரசா ஆட்ட நாயகன் விருதையும், வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளர் பிஷூ தொடர் நாயகன் விருதையும் பெற்றனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/11/02203953/1126551/ZIMvWI-2nd-Test--First-draw-in-12-years-for-Zimbabwe.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.