Jump to content

திரைப் பார்வை: அவன் வீட்டில் கல்லெறியுங்கள்! - ராமலீலா (மலையாளம்)


Recommended Posts

திரைப் பார்வை: அவன் வீட்டில் கல்லெறியுங்கள்! - ராமலீலா (மலையாளம்)

 
20chrcjrama%20leela

‘ராமலீலா’ படத்தில் தீலிப், ப்ரயாகா மார்டின்

பி

ரபல நடிகை மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்டு, தற்போது பிணையில் வெளியே வந்திருக்கும் மலையாள நடிகர் திலீப். சிறைக்குச் செல்வதற்கு முன் இவர் நடித்த படம் ‘ராமலீலா’. அக்டோபர் 13 அன்று வெளியான ‘ராமலீலா’, நல்ல விமர்சனங்களைப் பெற்று சிறப்பான வசூலையும் குவித்து வருகிறது. அருண் கோபி இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருப்பவர் சச்சி.

கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலக்கப்பட்டதால், காங்கிரஸ் கட்சியில் சேரும் ராமன் உண்ணி (திலீப்) அக்கட்சியின் இடைத்தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார். கம்யூனிஸ்ட் கட்சியின் வெளிப்படையான எதிர்ப்பையும் காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் வாய்ப்பைப் பறிகொடுத்தவர்களின் மறைமுக எதிர்ப்பையும் மீறி, அதிக ஆதரவாளர்களைப் பெற்று வெற்றிவாய்ப்பை நோக்கி நகர்கிறான். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர், பொது இடத்தில் சுட்டுக் கொல்லப்படுகிறார். கொலைப்பழி ராமன் மீது விழுகிறது. அதிலிருந்து ராமன் மீண்டானா, உண்மையான கொலையாளி யார், தேர்தல் முடிவு என்ன ஆகிய கேள்விகளுக்கான பதில்களைத் தேடிப் புறப்படுகிறது திரைக்கதை.

கேரளத்தில் கம்யூனிஸ்ட்- காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான தொன்றுதொட்டுத் தொடரும் அரசியல் பகை, அந்தந்தக் கட்சிகளுக்குள் நிலவும் உட்கட்சிப் பூசல்களின் முகம், அரசியல் போட்டியில் விரவிக் கிடக்கும் வன்மம் பழிவாங்கும் உணர்ச்சியாக நிறம் மாறுவதைப் படத்தின் முதல் பாதி மிகத் துல்லியமாகத் தேர்ந்த திரைமொழியுடன் பதிவு செய்தபடி நகர்கிறது. குறிப்பாகக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் புறக்கணிப்பும் வெறுப்பும் மிரட்டல்களும் கட்சியின் இறுக்கமான கட்டமைப்பைப் பற்றிய விமர்சனமாகப் பதிவாகின்றன. அதேநேரம் படத்தின் முடிவு கம்யூனிஸ்ட் கட்சியினரைப் பெருமைப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

ராமன், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவுடன் கம்யூனிஸ்ட் கட்சியினர் கும்பலாக வந்து அவனது வீட்டுக்குள் கற்களை எறிகின்றனர். அப்போது ஒரு மூத்த உறுப்பினர் “சகாவு ராகினி (ராமனின் அம்மா) வீட்டில் கல்லெறியாதீர்கள்” என்று சொன்னவுடன் அனைவரும் நிறுத்திவிடுகின்றனர். அப்போது வெளியே வரும் ராகினி (ராதிகா) “இது வர்க்க வஞ்சகன் ராமனின் வீடு; கல்லெறிவதை நிறுத்தாதீர்கள” என்கிறார். கம்யூனிஸ்ட் கட்சியினரின் தீவிர கொள்கைப் பிடிப்பை இப்படி ஒரு தாய்க் கதாபாத்திரத்தின் மூலம் பதிவுசெய்திருப்பது படத்தின் சிறப்பான அம்சங்களில் ஒன்று. அம்மாவும் மகனும் தேர்தல் களத்தில் அரசியல் எதிரிகளாக நிறுத்தப்படுவதும் திரைக்கதையின் சுவாரசியமான திருப்பம்.

முதல் பாதியில் அரசியல் படமாக இருக்கும் ராமலீலா, இரண்டாம் பாதியில் மர்மப் படமாக மாறிவிடுகிறது. மர்மப் படம் என்கிற அளவில் திருப்பங்களும் சுவாரசியமும் நிறைந்திருக்கின்றன. என்றாலும் முதல் பாதியில் கேரள அரசியலை அவ்வளவு விரிவாகப் பதிவுசெய்தது எதற்காக என்று தோன்றிக்கொண்டே இருக்கிறது. ஆனால், படத்தின் இறுதியில் வரும் எதிர்பாராத் திருப்பம் அவ்வளவு நீண்ட அரசியல் கள விவரிப்பை நியாயப்படுத்துகிறது. படத்தின் சில திருப்பங்கள் ஊகிக்கக்கூடியவையாக இருப்பதும் சில தர்க்கப்பூர்வமான கேள்விகள் எழுவதும் குறிப்பிடத்தக்க குறைகள்.

அரசியல் தந்திரம், தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் சாதுர்யம் மிக்க கதாபாத்திரத்தில் திலீப் அசத்தியுள்ளார். மகன் மீது கொலைப் பழி விழுவதைத் தாங்கிக்கொள்ள முடியாவிட்டாலும், கட்சிக்குக் கட்டுப்பட்டு அவனுக்கு எதிராக இருக்க வேண்டிய தர்மசங்கடத்தைக் கச்சிதமாக வெளிப்படுத்துகிறார் ராதிகா. திலீப்பின் தேர்தல் உதவியாளராக இருந்து அவருடன் கொலைக் குற்றச்சாட்டில் அகப்பட்டுக்கொள்பவராக வரும் கலாபவன் ஷாஜன் இரண்டாம் பாதியில் நகைச்சுவைக்கு உத்தரவாதம் தருகிறார்.

பெரிதும் இரு துருவமயப்பட்ட கேரள அரசியல் அனலின் பின்னணியில், ஆர்வத்தைக் கூட்டும் மர்மமும் திருப்பங்களும் ஊகிக்க முடியாத முடிவும் கொண்ட சுவாரசியமான த்ரில்லர் படம் ‘ராமலீலா’.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19882174.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எதையும் கணித ரீதியில் சொன்னால் இலகுவாய் புரியும்🤣
    • 52 வீதமான மக்கள் போரை விரும்பவில்லை என்று எனக்கு விளங்குகிறது. 74 வீதமான மக்கள் போரை வீரும்பவில்லை என்று உங்களுக்கும் கபிதானுக்கும் விளங்குகிறது.  🙂
    • ஆஹா.... "கொல்லைப்புறம்". 😂 சிரித்து வயிறு நோகுது.  
    • அங்கே என்ன நடந்தது? 1. "ரேடாரில் மாட்டாமல் தாழப் பறக்கும் நுட்பத்தை முதலில் பயன்படுத்தியது இஸ்ரேல்" என்று நான் எழுதினேன் (கவனியுங்கள்: அமெரிக்கா அல்ல, இஸ்ரேல்). 2. நீங்கள் வந்து "ஜப்பான் காரர் இதை பேர்ள் ஹாபரில் செய்து விட்டார்கள், சொம்பு, முட்டு, பொங்கல், அவியல்" என்று குதித்தீர்கள். ஆதாரம் கேட்டேன், மௌனமாகப் போய் விட்டீர்கள் (ஏனெனின், ஜப்பான் காரன் கூட தான் இதைச் செய்ததாக எங்கும் சொல்லி நான் அறியவில்லை). 3. பின்னர் நான் ரேடாரில் ஜப்பான் விமானங்கள் தெரிந்தமை, ஏன் அமெரிக்கா தவற விட்டது என்று வரலாற்று நூல்களில் இருந்த தகவல்களைச் சொன்னேன். 4. இன்னொரு உறவு, விமானங்கள் ரேடாரில் தெரிந்ததை உறுதிப் படுத்தும் ஒரு ஆதாரப் பதிவை இணைத்தார் (கவனியுங்கள்: நீங்கள் எதுவும் இணைக்கவில்லை😎!) அதே ஆதாரத்தை , தாழப் பறந்து வந்து ஜப்பானியர் தாக்கியதன் ஆதாரமாக எனக்கு நீங்கள் சிவப்பெழுத்தில் கோடிட்டுக் காட்டியிருந்தீர்கள் (மீண்டும் கவனியுங்கள்: "ஆங்கிலம் ஒரு மொழியேயொழிய, அது அறிவல்ல!" - எங்கேயோ கேட்ட குரல்😎!) எனவே, இது வரை ஜப்பானியர் தாழப் பறந்து வந்து ரேடாரில் இருந்து தப்பினர் என்பதற்கு ஒரு ஆதாரமும் நீங்கள் தரவில்லை (இல்லாத ஆதாரத்தை எப்படித் தருவதாம்😂?).   இனி உங்கள் பிரச்சினைக்கு வருவோம்: நீங்கள் உட்பட யாழில் ஓரிருவரின் பிரச்சினை "மேற்கு எதிர்ப்பு" என்ற ஒரு உணர்ச்சி. அந்த உணர்ச்சிக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம், அதை மறுக்க யாருக்கும் உரிமையில்லை. ஆனால், அந்த உணர்ச்சி மட்டுமே உலகத்தை, சம்பவங்களைப் புரிந்து கொள்ளப் போதாது. அப்படி உணர்ச்சி மட்டும் வைத்து "நாசா சந்திரனுக்குப் போகவில்லை" என்று கூட வாதாடும் நிலை இருக்கிறது பாருங்கள்? அந்த முட்டாள் தனத்தைத் தான் நான் சவாலுக்குட் படுத்துகிறேன். இனியும், தவறாமல் செய்வேன் - நீங்கள் சொம்போடு குறுக்கே மறுக்கே ஓடினாலும், நான் நிறுத்தாமல் செய்வேன்! ஏன் இப்படி சவலுக்குட்படுத்துவது முக்கியம்? இந்த மேற்கு எதிர்ப்பு உணர்ச்சி மயப் பட்டு, பொய்த்தகவல்களை உங்கள் போன்றோர் பரப்புவதால் மேற்கிற்கு ஒரு கீறலும் விழாது. ஆனால், எங்கள் தமிழ் சமுதாயத்தில், குறிப்பாக புலத் தமிழ் சமுதாயத்தில், இதனால் ஒரு முட்டாள் பரம்பரை உருவாகி வரும் ஆபத்து இருக்கிறது. எனவே, உங்கள் போன்றோரை அடிக்கடி இப்படிச் சவாலுக்குட்படுத்துதல் அவசியம். உங்களுக்கு முடிந்தால், இந்த சவால்களை ஆதாரங்களை இணைத்து எதிர் கொள்ளலாம். இல்லையேல் சொம்போடு நின்று விடலாம், இரண்டும் எனக்கு சௌகரியமே!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.