Jump to content

கேரளா vs தமிழகம்’... பெண்களைச் சீண்டுகிறதா ‘நீயா நானா’?’ - இயக்குநர் பதில்!


Recommended Posts

கேரளா vs தமிழகம்’... பெண்களைச் சீண்டுகிறதா ‘நீயா நானா’?’ - இயக்குநர் பதில்!

 
 

விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் 'நீயா நானா?' நிகழ்ச்சியில் எத்தனையோ நல்ல விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், நாளை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின் தலைப்பு, பெண்களிடையே கொதிப்பை உண்டாக்கியிருக்கிறது. 'தமிழ்நாட்டுப் பெண்கள் அழகா? கேரளப் பெண்கள் அழகா?' என்பதுதான் நாளைய நிகழ்ச்சியின் விவாதம். 

''அழகு என்பதை எதைவைத்துத் தீர்மானிக்கிறார்கள்? அழகான ஆடை, அணிகலன்கள் அணிந்தவர்கள் மட்டுமா அழகு? ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் ஒவ்வொரு பருவத்தில் அழகுதான். பல் தோன்றாத வயதில் எச்சில் வடியச் சிரிக்கும் குழந்தையும் அழகுதான். பல் எல்லாம் விழுந்து பொக்கை வாயாகச் சிரிக்கும் கிழவியும் அழகுதான். ஒவ்வொரு தந்தைக்கும் மகள் அழகு. ஒவ்வொரு கணவருக்கும் மனைவி அழகு. ஒவ்வொரு அண்ணனுக்கும் தங்கை அழகுதானே? அவர்கள் தமிழ்நாடாக இருந்தால் என்ன? கேரளாவாக இருந்தால் என்ன?'' என்று கோபமும் ஆதங்கமுமாக தங்கள் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள் பெண்கள். இதுகுறித்து சில பெண்களிடம் பேசினோம். 

 

செல்வி (மனிதி அமைப்பினைச் சேர்ந்தவர்) : 

பெண் செல்வி ''இந்த மாதிரியான தலைப்பே தவறானது. ஒரு பெண்ணையோ, ஆணையோ அழகுனு ஒப்பிட்டுப் பார்க்கிறதே தவறான விஷயம். பெண்ணுக்குச் சமைக்கத் தெரியும் என்பதையே பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் முன்னிறுத்தி காட்டுறாங்க. ஆனால், பல்வேறு துறைகளில் பெண்கள் சாதிச்சுக்கிட்டுதான் இருக்காங்க. அதெல்லாம் சரியாகப் பதிவாவதே இல்லை. இதுபோன்ற அழகு விஷயங்களைப் பார்க்கும் டீன்ஏஜ் பெண்கள், தங்களை மீண்டும் மீண்டும் அலங்கரித்துகொள்ள வேண்டும் என்ற மனநிலையால் தூண்டப்படுவார்கள். ஒரு நல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சி, பெண்களின் திறமைகளை முன்னேற்றுவதாக இருக்கணும். இவங்களோ நிகழ்ச்சி நல்லா ரீச் ஆகணும்னு பெண்களை வியாபாரப் பொருளாகப் பயன்படுத்தறாங்க. விளம்பரத்தைப் பார்த்ததும், நாங்க அழகுனு பேசுறது மட்டுமே தப்புனு சொல்லை. தமிழ்நாடு, கேரளானு பிரிக்கிறதும் தப்புதான். பெண்கள் எல்லோருமே ஒண்ணுதான். கேரளாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே உணவுப் பழக்கங்களிலிருந்து நிறைய வித்தியாசங்கள் இருக்கே. அதைப் பற்றி பேசலாமே. ஏன் அழகை முன்னிலைப்படுத்தறாங்க.'' 

சூர்யா, இயற்கை அங்காடி உரிமையாளர்: சூர்யா

''டி.ஆர்.பியை அதிகப்படுத்துவதற்காக எந்தத் தலைப்பையும் எடுக்கலாம்... எப்படியும் பேசலாம்னு நினைக்கறாங்க. இதெல்லாம் பெரிய முட்டாள்தனம். 'நீயா நானா?' நிகழ்ச்சியில் எப்பவுமே காரசாரமா பேசிட்டு, கடைசியில் அறிவுரை சொல்வாங்க. அதேமாதிரி இந்த நிகழ்ச்சியிலும் பெண்களுக்கே அறிவுரைச் சொல்வாங்கன்னு நினைக்கிறேன். அறிவுரை சொல்லும் நீங்க ஏன் ஆடை, அணிகலன்கள், அழகு குறித்து பேசவைக்கறீங்க? இஷ்டத்துக்குப் பேசவிட்டுட்டு அப்புறம் அறிவுரை சொன்னால் சரியாப்போயிடுமா?'' 

திலகவதி, சட்டக் கல்லூரி மாணவி: 

திலகவதி

 

''இப்படி ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்ததே தப்பு. இதுக்கு எதிராக வழக்குத் தொடரலாம்னு இருக்கோம். பெண்களை எதைவெச்சு அழகுனு தீர்மானிக்கறாங்கன்னே தெரியலை. நாட்டில் எத்தனையோ பிரச்னைகள் இருக்கு. அதைப் பற்றி பேசாமல், அழகு என்கிற வார்த்தைக்குள் பெண்களை அடைக்கப் பார்க்கிறதை கண்டிப்பா ஏற்றுக்கொள்ள முடியாது.'' 

 

 

இது குறித்து நீயா நானா நிகழ்ச்சியின் இணை இயக்குநர் திலீபனிடம் பேசிய போது,

"நாங்க நீயா நானாவில் பல பிரிவுகளுக்குக் கீழ் நிகழ்ச்சி பண்ணிட்டு இருக்கோம். அதுல ஒண்ணுதான் கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கலகலப்பான உரையாடல். நீயா நானா தலைப்புகளை மக்கள்கிட்ட இருந்துதான் எடுக்குறோம். மக்கள் ஒரு படத்தைப் பற்றி விவாதிக்குறாங்கனா அந்தப் படத்துல ஒரு விஷயம் இருக்கும். மக்கள் எந்த விஷயங்கள் பற்றி விவாதிக்குறாங்களோ அந்த விஷயத்தைதான் நாங்க தொலைக்காட்சி நிகழ்ச்சியா விவாதிக்கிறோம். அப்படிதான் நீட் தேர்வுக்கு தொடர்பாகவும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பல விவாதங்களை நடத்தியிருக்கோம். அழகோட வெவ்வேறு பரிமாறல் இல்லாம நம்முடைய வாழ்க்கை முழுமையடையாது. அழகை எளிமையா வர்ணிச்சிட முடியாது. அதுக்கும் சில வரைமுறைகள் இருக்கு. இந்த நிகழ்ச்சியும் அழகு ரசனை சார்ந்த ஒன்றுதான்' என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/105541-kerala-vs-tamilnadu-controversial-topic-in-neeya-naana-director-answers.html

 

Link to comment
Share on other sites

‘நீயா நானா’ நிகழ்ச்சி ஒளிபரப்புக்கு தடை: பெண்ணியவாதிகள் கூச்சலிடுவது ஏன்?- ஆண்டனி காட்டம்

 

 
antonyjpg

ஆண்டனி | கோப்புப் படம்.

கல்லூரி பெண்கள் தங்கள் உளவியல் பற்றி பேசுவதைக் கேட்க கூட பொறுமையில்லாமல் பெண்ணியவாதிகள் கூச்சலிடுவது ஏன்? என்று 'நீயா நானா' நிகழ்ச்சியின் இயக்குநரும், தயாரிபாளருமான ஆண்டனி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

வாரம்தோறும் ஞாயிறு அன்று விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. நீயா நானா நிகழ்ச்சியில் யார் அழகு? கேரளத்துப் பெண்களா? தமிழ்நாட்டுப் பெண்களா? என்ற தலைப்பில் இன்று விவாதம் நடைபெறுவதாக இருந்தது. இந்தத் தலைப்பு சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையானது. பெண்களை காட்சிப் பொருளாகப் பார்ப்பது மட்டுமின்றி, அதை வைத்து விவாதம் நடத்துவதற்கு பலதரப்பினரிடமிருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. பெண்கள், பொதுமக்கள் என எல்லா தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்தன.

இந்நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று மனிதி பெண்ணிய அமைப்பினர் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். அழகு தொடர்பான நீயா நானா ஒளிபரப்பு நிறுத்தி வைக்கப்பட்டதாக காவல் ஆணையர் அலுவலகம் சார்பில் அதிகாரபூர்வ தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து இன்றைய நீயா நானா நிகழ்ச்சி நிறுத்திவைக்கப்பட்டு, ஏற்கெனவே ஒளிபரப்பான நிகழ்ச்சியே மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக நீயா நானா நிகழ்ச்சியின் இயக்குநரும், தயாரிப்பாளருமான ஆண்டனி தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''இன்றைய நீயா நானாவின் தலைப்பு கல்லூரி கேம்பஸ் உரையாடல். அது கேரள பெண்கள் vs தமிழ் பெண்களின் அழகு பற்றி பேசியது. புதிய தலைமுறையைச் சார்ந்த உளவியல் தலைப்புகள், தமிழ் சூழலில் அவர்களின் உலகமான விஜய்-அஜித், மீம் கிரியேட்டர்கள், பெருகும் ஆண் பையன்களின் மேக்கப், காதலில் சுயமரியாதை போன்ற பல தலைப்புகளில் பேசியுள்ளோம்.

அந்த வடிவத்தில் எடுக்கப்பட்ட தலைப்பே இன்றைய நீயா நானா. இதில் கேரள பெண்களும், தமிழ் பெண்களும் தங்களின் உடையழகு பற்றியும், நகையழகு பற்றியும், ஆளுமையின் அழகு பற்றியும், அகமும் புறமும் சார்ந்து பேசினர். அவர்களின் குரல் இந்த முறை இடதுசாரி பெண்ணியவாதிகளால் நெறிக்கப்பட்டது. பெண்ணின் அழகைப் பற்றி பேசவே கூடாது என்று காவல்துறை வாயிலாக தடை வாங்கியுள்ளனர் இடதுசாரி பெண்ணியவாதிகள்.

கல்லூரி பெண்கள் தங்கள் உளவியல் பற்றி பேசுவதைக் கேட்க கூட பொறுமையில்லாமல் இவர்கள் கூச்சலிடுவது ஏன்? ஒரு நிகழ்ச்சி வருவதற்கு முன்பே தடை விதிக்க கோரும் மத அடிப்படைவாதிகளுக்கும், சாதிய அடிப்படைவாதிகளுக்கும், இடதுசாரி அடிப்படைவாதிகளுக்கும் என்ன வித்தியாசம்?'' என்று ஆண்டனி கேள்வி எழுப்பினார்.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article19901381.ece?homepage=true

Link to comment
Share on other sites

யார் அழகு? தமிழ் ஆண்களா, மலையாள ஆண்களா?

 

"ஒர் ஆணை எது அழகாக்குகிறது?" என் பெண் தோழிகளுடன் ஒரு குளிர்கால மாலையில் தேனீர் அருந்த அமர்ந்தபோது எங்களுக்குள் விவாதமாக எழுந்த கேள்வி இது.

யார் அழகு? தமிழ் ஆண்களா, மலையாள ஆண்களா?

அவர் மிகவும் உயரமானவராகவோ, மிகவும் மெலிந்தவராகவோ இருக்கக் கூடாது என்றாள், உயரம் குறைவாகவும், கொஞ்சம் பருமனுடனும் இருக்கும் என் தோழி ஒருத்தி. "கொஞ்சம் குண்டாக இருந்தால் கூடத் தவறில்லை. அப்போதுதான் அவரின் உடல் மெலிவுடன் பொருந்த நான் பட்டினி கிடைக்க வேண்டிய அவசியம் இருக்காது," என்று அவள் சொன்னாள்.

"பருமனாகவும் தொப்பையாகவும் இருப்பவர்களை நான் கையாள விரும்பவில்லை. அவர்கள் கிட்டத்தட்ட அசிங்கமானவர்கள். அதேபோல், உடல் ரோமங்கள் அதிகம் இருப்பவர்களும் எனக்கு வேண்டாம்," என்றாள் இன்னொருத்தி.

டைட்டானிக் படத்தில் லியானர்டோ டி கேப்ரியோ வரையும் ஓவியத்தைப்போல நகங்களை அழகுபடுத்தியிருக்கும் ஆண்தான் எனக்கு வேண்டும் என்று அவள் தன் விருப்பங்களில் விவரனைகளைத் தொடர்ந்தாள்.

சுருண்ட முடிகளை விரும்பிய தோழி ஒருத்தியும் அங்கு இருந்தாள். கறுப்பும் செந்நிறமும் கலந்த சுருண்ட முடி ஆண்தான் அவளது விருப்பமாக இருந்தது.

"அவர் கண்ணாடி அணிந்திருந்தால் இன்னும் நல்லது. அது கேக் மீது வைக்கப்படும் செர்ரிப்பழம் போன்றது," என்றாள் அவள்.

ஆறடி உயரம், வெளுத்த அல்லது மாநிறத் தோற்றம், கருத்த கேசம், வலுவான கைகள் போன்ற வழக்கமான விருப்புகள் அவர்கள் யாரின் பட்டியலிலும் இல்லை என்பது எனக்கு கொஞ்சம் குழப்பமாக இருந்தது.

யார் அழகு? தமிழ் ஆண்களா, மலையாள ஆண்களா?படத்தின் காப்புரிமைDIVYA ARYA

அப்போது திரைப்படக் கதாநாயகர்களின் தோற்றங்கள் என் மனக்கண்ணில் தோன்றிக்கொண்டிருந்தது.

சொல்லப்போனால், அவர்கள் ஒரே ஒரு நாயகனை எதிர்பார்த்துக்கொண்டிருக்கவில்லை. அங்கு நாயகர்கள் பல விதமானவர்களாக, வழக்கமான பழைய வர்ணனைகளுக்குள் சிக்காதவர்களாக இருந்தார்கள்.

"கேரளப் பெண்கள் அழகா? தமிழகப் பெண்கள் அழகா?" என்ற தலைப்பை ஒரு தமிழ் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிக்கு தேர்ந்தெடுத்திருந்தது பற்றி அவர்களின் பேச்சு ஆரம்பித்தது ஒன்றும் வியப்பாக இல்லை.

ஆனால், அவர்களின் விவாதத்தில் எனக்கு உடன்பாடில்லை. காரணம் அந்த் தொலைக்காட்சி நிகழ்ச்சி விவாதம் செய்வதையேதான் அவர்களும் செய்தனர். இரண்டு மாநிலங்களையும் சேர்ந்த பெண்களின் உடல் தோற்றத்தைப் பற்றிய விவாதம் அது.

உடல் தோற்றம் என்ற அளவில் சுருக்கி பெண்களை ஒரே வரையறைக்குள் அடைக்க முடியாது.

ஒரு மாநிலத்தில் இருக்கும் எல்லாப் பெண்களும் ஒரே மாதிரியான தோற்றத்தில் இருக்க முடியாது. என் பக்கத்து வீட்டுப் பெண் அவளது உடைகள் மூலம் அவளை வெளிப்படுத்திக்கொள்ளும் விதமே என்னிடம் இருந்து வேறுபடுகிறது.

யார் அழகு? தமிழ் ஆண்களா, மலையாள ஆண்களா?

அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியோ ஒரு சமூக வலைதள வாக்கெடுப்பு நடத்தி இதை மேலும் ஒரு படி கொண்டு சென்றது.

அந்த விவாத நிகழ்ச்சி பெண்களை காட்சிப்பொருளாக்குவதாக போராட்டங்களும் விமர்சனங்களும் எழுந்தன.

கடைசியில் அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புவதில் இருந்து பின் வாங்கிய அந்த தொலைக்காட்சி, அந்த நிகழ்ச்சியின் முன்னோட்டங்களையும் இணையத்தில் இருந்து நீக்கியது.

என் பெண் தோழிகளின் அந்த தேனீர் விருந்து, பழைய சிந்தனைகளை நிலைநாட்டி, அழகு என்னும் வரையறைக்குள் பெண்களை அடைத்து, ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி இருந்துவிட முடியாது என்பதற்கான கொண்டாட்டமே.

ஆனால், அவர்கள் ஏன் ஆண்களை காட்சிப்பொருளாக்கி அவர்களின் உடல் தோற்றம் குறித்து விவாதிக்கிறார்கள் என்று நான் அவர்களை கேட்டேன்.

அவர்களின் நகைச்சுவைத் திறன், கல்வி, அரசியல் நம்பிக்கைகள் போன்ற ஆளுமை குறித்த விடயங்களை ஏன் நீங்கள் விவாதிக்கவில்லை என்று நான் கேட்டேன்.

யார் அழகு? தமிழ் ஆண்களா, மலையாள ஆண்களா?படத்தின் காப்புரிமைTWITTER

"அதுவும் ஒரு நபரின் அழகைப் பற்றிய விவாதம் தானே?" என்றும் நான் கேட்டேன்.

ஆனால் எனக்கு நகைச்சுவை உணர்வு இல்லை என்று அவர்கள் அனைவரும் கூறினார்கள்.

அதுதான் பிரச்னை என்று நான் கூறினேன். புறத் தோற்றத்தின் அடிப்படையில், முதல் பார்வையில், அழகான ஆண்களை எனக்கும் பிடிக்கும்.

ஆனால் , ஆணோ பெண்ணோ ஒரு நபரை நகைச்சுவைக்காகவேனும் அழகு என்னும் வரையறைக்குள் அடைத்தால் நாம் அதை இயல்பாக எடுத்துக்கொள்கிறோம்.

அதனால்தான் பல பெண்களும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஒப்புக்கொண்டனர். அது யாரையும் காயப்படுத்தாத ஜனரஞ்சகமான நகைச்சுவை என்று கருதி அந்த தொலைக்காட்சியும் அந்நிகழ்ச்சியை நடத்த முடிவெடுத்துள்ளது.

ஆனால் அத்தைகைய யாரையும் காயப்படுத்தாத நகைச்சுவைகள் தேவையற்ற, உடல் நலத்திற்கு எதிரான உணவு முறை, மன அழுத்தம், தாழ்வு மனப்பான்மை, எடை குறைப்பு அறுவைசிகிச்சை ஆகியவற்றுக்கு வழிவகுப்பதில்லையா?

http://www.bbc.com/tamil/india-41739485

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.