Jump to content

ஜனா­தி­ப­தியின் வடக்கு விஜ­யமும் நீதி கோரிய கறுப்­புக்­கொடி போராட்­டமும்


Recommended Posts

ஜனா­தி­ப­தியின் வடக்கு விஜ­யமும் நீதி கோரிய கறுப்­புக்­கொடி போராட்­டமும்

 

ஆட்சி மாற்றம் ஏற்­பட்ட பின்னர் அர­சியல் கைதிகள் பல தட­வைகள் போராட்­டங்­களை முன்­னெ­டுத்து இருந்­தனர். அவர்­க­ளுக்கு ஆத­ர­வாக சிறைச்­சா­லை­க­ளுக்கு வெளி­யிலும் தமிழ் மக்கள் போராட்­டங்­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர். இருப்­பினும் வழங்­கப்­பட்ட வாக்­கு­று­திகள் எவையும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. இந்­நி­லையில், அர­சியல் கைதிகள் விவ­காரம் கடந்த சில வாரங்­க­ளாக மீண்டும் சூடு­பி­டிக்கத் தொடங்­கி­யுள்­ளது. அனு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் உண்­ணா­வி­ரதம் இருக்கும் தமிழ் அர­சியல் கைதிகள் மூவர் தமது வழக்கு விசா­ர­ணை­களை வவு­னியா மேல் நீதி­மன்றில் இருந்து அனு­ரா­த­பு­ரத்­திற்கு மாற்­று­வ­தற்கு எதிர்ப்பு தெரி­வித்து கடந்த மூன்று வாரங்­க­ளாக உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ளனர். ஏற்­க­னவே பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் கடந்த 8 வரு­டங்­க­ளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்­டுள்ள நிலையில் அவர்கள் உடல், உள ரீதி­யாக கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். தற்­போ­தைய உணவு ஒறுப்பு போராட்­டமும் அவர்­களின் உடல்­நி­லையை மேலும் மோச­மாக்­கி­யுள்­ளது. இந்த நிலை­யி­லேயே வடக்கு- கிழக்கு உள்­ளிட்ட பல்­வேறு பகு­தி­க­ளிலும் அவர்­க­ளது கோரிக்­கையை நிறை­வேற்ற வலி­யு­றுத்­தியும், அர­சியல் கைதி­களை விடு­தலை செய்ய வலி­யு­றுத்­தியும் மக்­களின் தன்­னெ­ழுச்­சி­யுடன் கூடிய ஜன­நா­யக ரீதி­யான போராட்­டங்கள் தீவிரம் அடைந்­துள்­ளன. யாழ். பல்­க­லைக்­க­ழக சமூ­கமும் அர­சியல் கைதி­க­ளுக்­காக ஜன­நா­யக போராட்­டங்­களில் இறங்­கி­யுள்­ளது. மைத்­திரி,- ரணில் அர­சாங்கம் மீதும், அந்த அர­சாங்­கத்­திற்கு முண்டு கொடுத்து செயற்­படும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தலைமை மீதும் அதி­ருப்தி கொண்­ட­வர்­க­ளாக பொது அமைப்­புக்­களும், பல்­க­லைக்­க­ழக சமூ­கமும் மக்­களும் தாமா­கவே வீதியில் இறங்கி போராட முன்­வந்­துள்­ளனர். இந்த நிலை­யி­லேயே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேனவின் வடக்­கிற்­கான விஜயம் அமைந்­தி­ருந்­தது.

யாழ். இந்துக் கல்­லூ­ரியில் கடந்த சனிக்­கிழமை தேசிய தமிழ் தின விழாவும், பாட­சா­லை­களின் கலா­சார விழாவும் நடை­பெற்­றன. இதில் பிர­தம அதி­தி­யாக ஜனா­தி­பதி கலந்து கொண்­ட­துடன், அச்­சு­வேலி- நிலா­வரைப் பகு­தியில் விவ­சாய உற்­பத்­தி­களை அதி­கரிப்­பது தொடர்பில் மத்­திய- மாகாண விவ­சாய அமைச்­சுக்கள் இணைந்து ஏற்­பாடு செய்த நிகழ்­விலும் கலந்து கொண்­டி­ருந்தார். அதன் பின் கிளி­நொ­ச்சிக்கு சென்று அங்கு நிறு­வப்­பட்­டி­ருந்த பொரு­ளா­தார மத்­திய நிலை­யத்­தையும் திறந்து வைத்தார். கிளி­நொச்­சியில் தொடர் போராட்­டத்தில் ஈடு­பட்டு வரும் காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வு­க­ளு­டனும் சந்­திப்பை மேற்­கொண்டார். ஜனா­தி­பதி வடக்­கிற்கு வர­வுள்ளார் என்ற செய்தி வெளி­வந்­ததில் இருந்து அர­சியல் கைதி­களின் நியா­ய­மான கோரிக்­கைக்கு பதில் இல்­லா­விடின் எதிர்ப்பு ஆர்ப்­பாட்டம் நடத்­தப்­படும் என பூரண கத­வ­டைப்பு போராட்­டத்­திற்­கான ஏற்­பா­டுகள் நடை­பெற்ற போதே தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. கடந்த சில வாரங்­க­ளாக அர­சியல் கைதி­களின் கோரிக்­கையை நிறை­வேற்றக் கோரியும், அர­சியல் கைதி­களை விடு­தலை செய்ய வலி­யு­றுத்­தியும் பல்­வேறு ஆர்ப்­பாட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்தன. அதன் தொடர்ச்­சி­யாக கடந்த வாரம் வெள்­ளிக்­கி­ழமை வடக்கில் பூரண கத­வ­டைப்பு போராட்­டமும் இடம்­பெற்­றி­ருந்­தது. தமிழ் மக்கள் பேரவை, தமிழ் தேசிய மக்கள் முன்­னணனி, ஈழ­மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­னணி (ஈ.பி­.ஆர்.­எல்.எப்.), புதிய மாக்­சிச லெனின் கட்சி உள்­ளிட்ட கட்­சி­களும் பொது அமைப்­புக்­களும் அர­சியல் கைதி­களின் விடு­த­லையை வலி­யு­றுத்தும் அமைப்­புக்­களும் என 20 இற்கும் மேற்­பட்ட அமைப்­புக்­களின் இணைந்து இந்த பூரண கத­வ­டைப்பு போராட்­டத்­திற்கு அழைப்பு விடுத்­தி­ருந்­தன. தமிழ் மக்கள் அனை­வரும் ஒன்­றி­ணைந்து ஒரு­மித்த குரலாய் அர­சியல் கைதி­க­ளுக்­காக தடை­களை தகர்த்து முழு­மை­யான ஆத­ரவை வழங்­கி­ய­மையால் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும் விரும்­பியோ, விரும்­பா­மலோ பூரண கத­வ­டைப்­புக்கு ஆத­ரவு வழங்க வேண்­டிய நிர்ப்­பந்தம் ஏற்­பட்­டி­ருந்­தது.

இந்த பூரண கத­வ­டைப்­புக்கு அர­சிற்கும், சர்­வ­தேச சமூ­கத்­திற்கும், தமிழ் தலை­மை­க­ளுக்கும் ஒரு­மித்த குரலாய் அர­சியல் கைதி­களின் விடு­த­லையின் அவ­சி­யத்தை வலி­யு­றுத்­தி­யி­ருந்­தனர். கத­வ­டைப்பு போராட்டம் நடை­பெற்ற தினத்தில் யாழில் ஆளுநர் அலு­வ­லகம் முற்­று­கை­யி­டப்­பட்டு ஏ9 வீதியில் பாரிய ஆர்ப்­பாட்டம் ஒன்றும் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தது. கிளி­நொச்­சியில் பொது அமைப்­புக்­களின் ஏற்­பாட்டில் ஒரு ஆர்ப்­பாட்­டமும், வவு­னி­யாவில் காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் உற­வு­களால் அர­சியல் கைதி­க­ளுக்­காக அடை­யாள உணவு தவிர்ப்பு போராட்­டமும், சில பொது அமைப்­புக்­களின் ஏற்­பாட்டில் விசேட பூஜை வழி­பாடும் இடம்­பெற்­றி­ருந்­தன. ஆனாலும் அர­சாங்கம் குறித்த போராட்­டங்கள் தொடர்பில் கரி­சனை கொள்­ள­வில்லை. மக்­களின் மனங்­களை புரிந்து கொள்­ள­வில்லை. இதனால் தொடர் போராட்­டங்­களில் ஈடு­பட வேண்­டிய நிர்ப்­பந்தம் தமிழ் மக்­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருந்­தது.

ஜனா­தி­பதி யாழ் இந்து கல்­லூ­ரிக்கு வந்த போது கே.கே.எஸ். வீதியில் கறுப்புக் கொடி­களை ஏந்தி ஈழ­மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­னணியின் தலை­வரும், முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சுரேஷ் பிரேமச்­சந்­திரன், தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம், தமிழ் தேசிய மக்கள் முன்­னணியின் செய­லாளர் செல்­வ­ராஜா கஜேந்­திரன், வட­மா­காண சபை உறுப்­பினர் எம்.கே.சிவா­ஜி­லிங்கம் உள்­ளிட்ட அர­சியல் பிர­மு­கர்­களும் அவர்­க­ளது ஆத­ர­வா­ளர்கள், அர­சியல் கைதி­களின் உற­வி­னர்கள், அவர்­க­ளது விடு­த­லையை வலி­யு­றுத்தும் அமைப்­புக்கள், பொது­மக்கள் என பலரும் இணைந்து கறுப்புக்கொடி­களை ஏந்தி போராட்­டத்தில் ஈடு­பட்­டனர்.

அவ் வீதி வழி­யாக வாக­னத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரிபால சிறி­சேன வந்த போது அவர்கள் 'மைத்­தி­ரியே வெளி­யேறு, அர­சியல் கைதி­க­ளுக்கு தீர்வைத் தா' என கோஷ­மிட்டு கறுப்புக் கொடி­களை காட்­டினர். இதன்­போது தனது வாக­னத்தை நிறுத்தி, வாக­னத்தில் இருந்து இறங்கிச் சென்ற மைத்­திரி தனக்கு எதி­ராக போராட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டினார். போராட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்­களின் கோரிக்கை தொடர்பில் கேட்­ட­றிந்தார். இது அவ­ரது துணிச்­ச­லையும் அவ­ரது அர­சியல் சாணக்­கி­யத்­தையும் வெளிப்­ப­டுத்­து­கின்­றது என்­பது உண்­மையே. ஆனாலும், அர­சியல் கைதிகள் விவ­காரம் குறித்து தொடர் போராட்­டங்கள் நடை­பெற்று வரும் நிலையில் தீர்வு கிடைக்­கா­மையால் மைத்­தி­ரிக்கு எதி­ரா­கவும் ஆர்ப்­பாட்டம் நடத்­த­ப்படும் என்­பது முன்­னரே தெரி­ய­வந்­தி­ருந்­தது. இதனை ஜனா­தி­பதி நாட்டின் புல­னாய்­வுத்­துறை ஊடா­கவும், அர­சியல் பிர­மு­கர்கள் ஊடா­கவும் முன்னரே அறிந்தும் இருந்தார். வட­மா­காண சபை உறுப்­பினர் சிவா­ஜி­லிங்கம் வட­மா­காண ஆளுநரி­டமும் ஆர்ப்­பாட்டம் இடம்­பெ­று­வது தொடர்பில் முன்­னரே தெரி­வித்தும் இருந்தார். இருப்­பினும் எது­வுமே தெரி­யா­தவர் போல் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்­க­ளுடன் சந்­தித்து அனை­வ­ரதும் கவ­னத்தை ஈர்க்கும் வகையில் அவர் செயற்­பட்­டி­ருந்தார். இதன் மூலம் போராடும் மக்­களை சந்­தித்து அவர்­க­ளது பிரச்­சினையை தீர்க்க நட­வ­டிக்கை எடுப்­ப­தான ஒரு தோற்­றப்­பாட்டை அவர் சர்­வ­தேச சமூ­கத்­திற்கும் காட்­டி­யுள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலத்தை ஜனா­தி­பதி பேச அழைத்த போதும் அவர் செல்­ல­வில்லை. இது குறித்து அக் கட்­சியின் செய­லாளர் செல்­வ­ராஜா கஜேந்­திரன் தெரி­விக்­கையில், அர­சியல் கைதிகள் விடயம் ஜனா­தி­ப­திக்கு தெரிந்த விடயம். அதை அவர் செய்ய தவ­றி­யுள்ள நிலையில் அவ­ருடன் பேச வேண்­டிய அவ­சியம் இல்லை. சர்வ­தேச சமூ­கத்தை ஏமாற்­று­வ­தற்­காக அவர் அந்த இடத்தில் இறங்கி வந்தார். போராட்­டத்தில் ஈடு­படுகின்ற தரப்­புக்­க­ளுக்கு ஜன­நா­யக உரி­மையை கொடுத்­துள்­ள­துடன், அவர்­க­ளுடன் பேசிக் கொண்­டி­ருக்­கின்றேன் என்ற தோற்­றப்­பாட்டை காட்­டவும் தமிழ் மக்­களை ஏமாற்­றவும் அவர் முற்­பட்­டுள்ளார் என அவர் தெரி­வித்­துள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­கது. ஆனாலும், வட­மா­காண சபை உறுப்­பினர் சிவா­ஜி­லிங்கத்தின் ஏற்­பாட்டில் யாழ். பல்­க­லைக்­க­ழக சமூ­கமும், அர­சியல் கைதி­களின் உற­வி­னர்­களும் கடந்த வியா­ழக்­கி­ழமை கொழும்பில் ஜனா­தி­ப­தியைச் சந்­தித்து பேசி­யி­ருந்­தனர். அந்த சந்­திப்பில் தமக்கு திருப்­தி­யில்லை என பல்­க­லைக்­க­ழக சமூகம் தெரி­வித்­துள்­ள­துடன், அர­சியல் கைதி­களின் உற­வி­னர்­களும் ஏமாற்­றத்­துடன் திரும்­பி­யி­ருந்­தனர்.

ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந்­திப்பின் போது, நீதி­ய­மைச்­சரும், சட்­டமா அதி­பரும் நாட்டில் இல்லை. அவர்கள் வந்­ததும் கதைத்து நல்­ல­தொரு முடிவை தெரி­விக்­கின்றேன் எனக் கூறி­யுள்ளார். பாரா­ளு­மன்­றத்தில் அர­சியல் கைதிகள் விவ­காரம் பேசப்­பட்ட நிலையில், இந்தச் சந்­திப்பை காரணம் காட்டி பதில் அளிக்கும் விட­யத்தில் இருந்து அர­சாங்கம் நழு­வி­யுள்­ளது. ஆக, ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந்­திப்பு என்­பது வெறும் கண்­து­டைப்­பாகவே இருந்­தி­ருக்­கின்­றது. இதன் மூலம் எந்த முன்­னேற்­றமும் ஏற்­ப­ட­வில்லை. ஆனால் அர­சியல் கைதிகள் தொடர் போராட்­டத்தால் உடல், உள பாதிப்­புக்கு உள்­ளாகி வரு­கின்­றனர். இதனை அனைத்து தரப்­புக்­களும் புரிந்து கொண்டு தனிப்­பட்ட நிகழ்ச்சி நிரல்­களை விடுத்து ஆக்­க­பூர்­வ­மாக செயற்­பட முன்­வ­ர­வேண்டும்.

இந்­துக்­கல்­லூ­ரியில் உரை­யாற்­றிய ஜனா­தி­பதி, நான் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வந்த போது எனக்கு எதி­ராக கறுப்­புக்­கொடி காட்டி போராட்­டத்தில் ஈடு­பட்டு இருந்­தனர். நான் எனது வாக­னத்தை விட்டு இறங்கி அவர்­க­ளிடம் சென்று அவர்­களின் பிரச்­ச­ினையைக் கேட்டேன். அவர்கள் தமது கோரிக்­கையை என்­னிடம் கூறி­னார்கள். அதன் போது நான் அவர்­க­ளிடம் பேச்­சு­வார்த்­தைக்கு வரு­மாறு அழைத்தேன். அவர்கள் அதற்கு வர தயா­ராக இல்லை. தமது கோரிக்­கையை உடனே நிறை­வேற்­றுங்கள் என என்­னிடம் கோரு­கின்­றார்கள். எந்த பிரச்­சி­னை­யாக இருந்­தாலும், பேசித்தான் தீர்க்க முடியும். வன்­மு­றையால் தீர்க்க முடி­யாது. இங்கு கறுப்புக் கொடி உயர்த்த தேவை­யில்லை. சமா­தா­னத்­திற்­காக வெள்ளைக் கொடி­களே உயர்த்­தப்­பட வேண்டும் என்றார். அர­சியல் கைதிகள் விடயம் தொடர்பில் ஜனா­தி­ப­தியால் ஏற்­கனவே வழங்­கிய வாக்­கு­று­திகள் காற்றில் பறக்­க­வி­டப்­பட்ட நிலை­யிலும், எதிர்­க்கட்சித் தலைவர் ஜனா­தி­ப­திக்கு விரைந்து நட­வ­டிக்கை எடுக்க கோரி கடிதம் அனுப்­பிய நிலை­யிலும் உரிய தீர்­வுகள் எட்­டப்­ப­டா­மையே இந்தப் போராட்­டத்­திற்கு காரணம். ஆகவே, பேச்­சு­வார்த்தை புதி­தாக நடத்­து­வ­தற்கு இந்த விட­யத்தில் எதுவும் இல்லை. ஏற்­க­னவே வழங்­கிய வாக்­கு­று­தி­க­ளையும் பேச்­சு­வார்த்­தையில் கூறிய விட­யங்­க­ளையும் நிறை­வேற்­றினால் போது­மா­னது. ஆக பேச்­சு­வார்த்­தைக்கு அழைத்­த­மை­யா­னது சர்­வ­தே­சத்தை கவரும் ஒரு செயற்­பா­டா­கவே பார்க்க முடி­கி­றது. இத­னையே கடந்த வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற பல்­கலை மாண­வர்­க­ளு­ட­னான சந்­திப்பும் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

அத்­துடன் கறுப்புக் கொடி­க­ளுக்கு பதி­லாக வெள்ளைக் கொடி­களை ஏந்­து­மாறும் கோரி­யி­ருக்­கின்றார். 2009 ஆம் ஆண்டு முள்­ளி­வாய்கால் பேர­வ­லத்தின் போது வெள்ளைக் கொடி­களை ஏந்­தி­ய­வாறு இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைந்த போரா­ளிகள், பொது மக்­க­ளுக்கு நடந்­த­தை தமிழ் தேசிய இனம் இன்னும் மறந்து விட­வில்லை. அப்­போது பதில் பாது­காப்பு அமைச்­ச­ரா­கவும் தற்­போ­தைய ஜனா­தி­பதி இருந்­தி­ருந்தார். அது குறித்து இன்று வரை ஒரு நீதி கிடைக்­காத நிலையில் மீண்டும் வெள்ளைக் கொடி மேல் எவ்­வா­றான ஒரு நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்ப முடியும். தென்­னி­லங்கை ஆட்­சி­யா­ளர்கள் தமிழ் தேசிய இனம் வெள்ளைக் கொடி ஏந்­திய போதும், கறுப்பு கொடி ஏந்­திய போது ஒரே வித­மா­கவே பார்த்­தி­ருக்­கின்­றது. இதுவே கடந்த கால வர­லாறு. அதில் இருந்து மைத்­தி­ரியின் மன­நிலை மாறி­விட்­டது என்று கருதக் கூடிய வகையில் அவர் தனது அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி எதையும் உளப்­பூர்­வ­மாக செய்­ய­வில்லை.

கிளி­நொச்­சிக்கு சென்ற ஜனா­தி­பதி கடந்த 8 மாதங்­க­ளுக்கு மேலாக உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்­களை சந்­தித்து 'உங்­களை பேசு­வ­தற்கு கொழும்பு அழைத்துச் செல்­கின்றேன். வாகன வச­தியும், பாது­காப்பும் தரு­கின்றேன். இர­க­சிய முகாம்­களில் காணாமல் போன­வர்­களை தேடுங்கள் எனத் தெரி­வித்­துள்ளார். கடந்த 8 வரு­டங்­களாக அந்த மக்கள் போராடி வரும் நிலையில் ஜனா­தி­ப­தியை முன்­னரும் பல­த­டவை சந்­தித்து பேசி­யி­ருந்­தனர். காணாமல் ஆக்­கப்­பட்­டோரால் ஜனா­தி­ப­திக்கு 7000 இற்கும் மேற்­பட்ட கடி­தங்­களும் நீதி கோரி அனுப்பப்­பட்­டன. அது குறித்து ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கையை எடுக்­காது, மீண்டும் கொழும்புக்கு பேச அழைப்பது என்பதும், மக்களையே தேடச் சொல்வது என்பதும் வெறும் காலம் கடத்தும் செயற்பாடே. மக்களை அழைத்து பேசி காலத்தை இழுதடிக்கவும், நீண்டு கொண்டிருக்கும் போராட்டங்களை தீர்வு இன்றி முடிவுக்கு கொண்டு வரவும் புதிய உத்தியை அரசாங்கம் கையாள முனைவதாகவே தெரிகிறது.

இந்த நாட்டில் இனப்பிரச்சினை கொழுந்து விட்டு எரிந்தமைக்கு தென்னிலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்களே காரணம். அவர்கள் தமிழ் தேசிய இனத்தை அடக்குவதிலும், ஒடுக்குவதிலும் கவனம் செலுத்தியதுடன் அவர்களது நியாயமான கோரிக்கைகளை கண்டு கொள்ளாத நிலையும் காணப்பட்டது. தமிழ் மக்களின் ஆதரவுடன் உருவாகிய மைத்திரி,- ரணில் கூட்டரசாங்கம் கூட தமிழ் மக்களின் மனநிலையை புரிந்து கொண்டதாக தெரியவில்லை. இது தமிழ் மக்களின் மனங்களில் இந்த அரசாங்கத்திற்கு எதிராகவும் விரக்தி நிலையை உருவாக்கியிருக்கிறது. இந்த நாட்டின் தேசிய இனங்களில் ஒன்றாகிய தமிழ் மக்களின் மனநிலையை புரிந்து உண்மையான மனச்சாட்சியுடனும், இதய சுத்தியுடனும் தமிழ் மக்களின் பிரச்சினையை அணுகுவதற்கு தென்னிலங்கை முன்வர வேண்டும். அதுவே இந்த நாட்டில் வெள்ளைப் புறாக்கள் பறப்பதற்கான சூழலை உருவாக்கும். அதன் மூலமே கறுப்புக் கொடிகளை ஏந்தும் தமிழ் மக்களின் கையில், அவர்களின் விருப்பத்துடன் சிங்கக் கொடிகளை ஏந்த வைக்க முடியும்.  

ருத்­திரன்-

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-10-21#page-8

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.