Jump to content

திடிரென வந்து விழுந்த பேரிடி


Recommended Posts

திடிரென வந்து விழுந்த பேரிடி

 

அரசாங்கம் இந்த அழுத்தங்களிலிருந்து விடுபடுவதற்காகவும் பொறுப்புக்கூறல் பொறிமுறை அழுத்தத்திலிருந்து விலகிச் செல்வதற்காகவும் இந்த அரசியலமைப்பினை உருவாக்கும் பணியை முன்னெடுத்து வருகிறது. அதாவது அரசியலமைப்பை உருவாக்கி அதனூடாக ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைத்து விட்டால் அதனை சர்வதேசத்திற்கு காட்டி பொறுப்புக்கூறல் பொறிமுறையிலிருந்து ஏதோ ஒரு வகையில் விடுதலை பெறலாம் என அரசாங்கம் எண்ணுகிறது. இந்தப் பின்னணியிலேயே அரசாங்கம் பாரிய சிரத்தை யெடுத்து அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலிலேயே அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் அறிவிப்பு வெ ளியாகியுள்ளதுடன் அது அரசியலமைப்பை தயாரிக்கும் முயற்சியில் கடும் அதிர்ச்சியையும் நெருக்கடியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்ற நிலையிலும் அதனூடாக நீண்டகாலமாக புரையோடிப்போயிருக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுத்திட்டம் ஒன்று கிடைக்கும் என்ற நம்பிக்கை மேலோங்கியுள்ள சூழலிலும் அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

கடந்த இரண்டரை வருடங்களாக புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகள் மும்முரமாக இடம்பெற்றுவருகின்ற நிலையில் நாட்டின் பௌத்த பீடங்கள் அவ்வப்போது விமர்சனங்களை முன்வைத்து வந்தன. தற்போது திடீரென இலங்கைக்கு புதிய அரசியலமைப்பு தேவையில்லை. இருக்கின்ற அரசியலமைப்பே போதுமானது. எனவே புதிய அரசியலமைப்பை உருவாக்க முன்னெடுக்கும் முயற்சிகளை உடனடியாக அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்கள் அறிவித்திருக்கின்றன.

தற்போது முன்னெடுக்கப்படும் புதிய அரசியலமைப்பினூடாக நாட்டில் பிளவு ஏற்படும் அபாயம் இருக்கின்றது. எனவே அரசாங்கம் இந்த செயற்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும். அத்துடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடாது என்றும் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்கள் மிகவும் திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றன.

புதிய அரசியலமைப்பு மற்றும் முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக கடந்த புதன்கிழமை கண்டி தலதா மாளிகையில் கூடிய அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் நிர்வாகக் குழுக்கள் இந்த முடிவை எடுத்ததுடன் அரசாங்கத்திடம் இது குறித்த கோரிக்கையையும் விடுத்துள்ளன.

 நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு அவசியமில்லை. எமக்கு புதிய அரசியலமைப்பு தேவையில்லை. இருக்கின்ற அரசியலமைப்பே போதுமானது. அரசாங்கத்தின் இந்த அரசியலமைப்பை தயாரிக்கும் முயற்சியை முழு இலங்கையினதும் தேரர்கள் எதிர்க்கின்றனர். அரசாங்கத்திற்கு எமது எதிர்ப்பை நாங்கள் வெளியிடுகின்றோம். உடனடியாக இந்த செயற்பாடுகளை நிறுத்துங்கள் என்று மல்வத்து பீடத்தின் தேரர் விமலதர்ம தேரர் குறித்த கலந்துரையாடலின் பின்னர் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் தற்போதைய அரசியலமைப் பின் மூலம் மாகாணங்களுக்கு அதிகாரங் கள் இருக்கின்றன. எனவே அது போதுமானது. தற்போது மாகாணங்களுக்கு அதிகாரத்தை அதிகளவில் பகிர்ந்து கொடுக்க செய்யும் ஒரு தந்திர நடவடிக்கையே புதிய அரசியலமைப்பு முயற்சியாகும். இதன் மூலம் நாட்டுக்க எந்த பலனும் இல்லை. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன மேற்கொண்ட செயற்பாட்டினால் எமது நாடு மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. அத்துடன் ஜனாதிபதியின் அதிகாரங்களும் அவ்வாறே இருக்க வேண்டும். அவற்றில் மாற்றங்கள் செய்யப்படக்கூடாது என்றும் மல்வத்து பீடத்தின் தேரர் விமலதர்ம தேரர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

அத்துடன் அஸ்கிரிய பீடத்தின் பிரதிநிதி மெதகம தம்மானந்த தேரரும் கடும் விமர்சனங்களுடனேயே புதிய அரசியலமைப்பு தயாரிப்பு முயற்சியை எதிர்த்துள்ளார். புதிய அரசியலமைப்போ அல்லது அரசியல் திருத்தமோ தற்போது முன்வைக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. அது நாட்டு மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தும். தற்போது முன்னெடுக்கப்படுகின்ற பேச்சுவார்த்தைகளே எம் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தியுள்ளன என்று அஸ்கிரிய பீடத்தின் பிரதிநிதி மெதகம தம்மானந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்பின் புதிய ஏற்பாடுகள் மூலம் நாட்டுக்கு பாதகம் ஏற்படும். நாடு பல பிரிவுகளாக பிரியும். எனவே தற்போது இருக்கின்ற அரசியலமைப்பு போதுமானது. அதனையே தொடர்ந்து பேணுவோம். புதிய அரசியலமைப்பு தேவைப்பட்டால் அதனை புதிய பிரவேசத்தில் எதிர்காலத்தில் பார்க்கலாம். அதுவரை தற்போது முன்னெடுக்கப்படும் பணிகளை நிறுத்திவிடுங்கள் என்று வலியுறுத்துகின்றோம் எனவும்

மெதகம தம்மானந்த தேரர் எடுத்துரைத்திருக்கின்றார்.

உண்மையில் அஸ்கிரிய, மற்றும் மல்வத்து பீடங்களின் இந்த அறிவிப்பு அரசாங்கத்திற்கும் புதிய அரசியலமைப்பை விரும்புகின்ற தரப்பினருக்கும் புதிய அரசியலமைப்பின் ஊடாக அரசியல் தீர்வுத்திட்டமொன்றை எதிர்பார்த்திருக்கின்ற தரப்பினருக்கும் பாரிய அதிர்ச்சியையும் பேரிடியையும் ஏற்படுத்தியிருக்கின்றது என்றே கூறவேண்டும்.

இது தொடர்பில் பரிசீலிப்பதற்கும் இடமில்லாமல் உடனடியாக முழுமையாக அனைத்து விடயங்களையும் நிறுத்துமாறு கோரப்பட்டிருக்கின்றமையே அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கின்றது. அரசாங்கம் பல்வேறு முட்டுக்கட்டைகளுக்கும் தடைகளுக்கும் சிக்கல்களுக்கும் மத்தியிலேயே புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகளை முன்னெடுத்து வரும் நிலையில் தற்போது இந்த அறிவிப்பு இடம்பெற்றிருக்கின்றது. இது அரசியல் களத்திலும் இராஜதந்திர களத்திலும் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது என்றால் அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

குறிப்பாக அரசாங்கமானது சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் இந்த அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றது. அதாவது சர்வதேச சமூகமானது பொறுப்புக்கூறல் பொறிமுறையில் இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு யுத்தகாலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கவேண்டும் என்ற அழுத்தத்தை பிரயோகித்து வருகின்றது.

ஆனால் பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுப்பதில் அரசாங்கம் தயக்கத்தைக் காட்டியே வருகின்றது. காரணம் பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுத்தால் அதனூடாக இராணுவத்தினர் விசாரணைக்குட்படுத்தப்படும் நிலைமை ஏற்படும் என்பதால் அதனை அரசாங்கம் முன்னெடுப்பதில் தயக்கம் காட்டி வருகின்றது. காரணம் பொறுப்புக்கூறல் பொறிமுறையினூடாக இராணுவத்தினர் விசாரணைக்குட்படுத்தப்பட்டால் அது தென்னிலங்கையில் பாரிய சிக்கல்களை ஏற்படுத்தி அரசாங்கத்தின் இருப்பையே கேள்விக்குறியாக்கிவிடும் என அரசாங்கம் அஞ்சுகிறது.

அதனால் அரசாங்கம் பொறுப்புக்கூறல் பொறிமுறையை சர்வதேச சமூகத்தின் பார்வையிலிருந்து மறக்கடிப்பதற்காகவும் அதனை மறைத்து வைப்பதற்காகவும் இந்த அரசியலமைப்பு உருவாக்க முயற்சியை ஒரு பிம்பமாக காட்டி வருகிறது. இவ்வாறு புதிய அரசியலமைப்பினை முன்னெடுப்பதன் மூலமாகவும் அதனூடாக தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு தீர்வை பெற்றுக் கொடுப்பதனூடாகவும் பொறுப்புக் கூறல் பொறிமுறை விவகாரத்தை மறக்கடிக்கச் செய்யலாம் என அரசாங்கம் கணக்கப்போடுவதாக தெரிகிறது.

இந்நிலையில் அவ்வாறான நோக்கத்தில் ஈடுபட்டுள்ள அரசாங்கம் புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் பணிகளில் மும்முரமாக செயற்பட்டு வருகிறது. கடுமையான விமர்சனங்கள் மற்றும் சிக்கல்களுக்கு மத்தியில் அரசாங்கம் ஏன் இவ்வாறு அரசியலமைப்பை தயாரிக்கும் பணியில் ஈடுபடுகின்றது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஜெனிவா மனித உரிமைப் பேரவையிலும் அரசாங்கத்திற்கு பொறுப்புக்கூறல் பொறிமுறை விடயத்தில் கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன.

அதுமட்டுமின்றி 2019 ஆம் ஆண்டுக்குள் எப்படியாவது பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுத்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அரசாங்கத்திற்கு காலக்கெடு விதித்திருக்கிறது. எனவே அரசாங்கம் இந்த அழுத்தங்களிலிருந்து விடுபடுவதற்காகவும் பொறுப்புக்கூறல் பொறிமுறை அழுத்தத்திலிருந்து விலகிச் செல்வதற்காகவும் இந்த அரசியலமைப்பினை உருவாக்கும் பணியை முன்னெடுத்து வருகிறது.

அதாவது அரசியலமைப்பை உருவாக்கி அதனூடாக ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைத்து விட்டால் அதனை சர்வதேசத்திற்கு காட்டி பொறுப்புக்கூறல் பொறிமுறையிலிருந்து ஏதோ ஒரு வகையில் விடுதலை பெறலாம் என அரசாங்கம் எண்ணுகிறது. இந்தப் பின்னணியிலேயே அரசாங்கம் பாரிய சிரத்தையெடுத்து அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

 இந்த சூழலிலேயே அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களில் அறிவிப்பு வெளியாகியுள்ளதுடன் அது அரசியலமைப்பை தயாரிக்கும் முயற்சியில் கடும் அதிர்ச்சியையும் நெருக்கடியையும் ஏற்படுத்தியிருக்கிறது. உடனடியாகவே இந்த நிலையை சுதாகரித்துக் கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிலைமையை ஆராய்ந்து நேற்று முன்தினம் அறிவிப்பொன்றை வெளியிட்டார்.

அதாவது மல்வத்து, அஸ்கிரிய பீடங்களினது மகாநாயக்கர்கள் பங்கேற்காத கூட்டத்திலேயே புதிய அரசியலமைப்பொன்றோ அல்லது தற்போதைய அரசியலமைப்பில் திருத்தமொன்றோ அவசியம் கிடையாது என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் அறிவித்திருக்கின்றார்.அரசாங்கத்துக்கு மக்கள் ஆணையொன்றை வழங்கியிருக்கின்றார்கள். அந்த ஆணையை நிறைவேற்ற வேண்டாம் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான நடவடிக்கைகளை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது தொடர்பில் எதிர்வரும் வாரத்தில் விவாதமொன்று நடைபெறவிருக்கின்றது. அதன்போது நாம் வெளிவந்துள்ள இடைக்கால அறிக்கை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துகொள்வதற்கு எதிர்பார்க்கின்றோம் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதாவது புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகள் எங்கே முடங்கி விடுமா என்ற அச்சம் பிரதமருக்கு அதிகமாக இருப்பதை காண முடிகிறது. ஜனாதிபதியும் இந்த விடயத்தில் மிகவும் உறுதியாக இருப்பதை காண முடிகிறது. அதாவது புதிய அரசியலமைப்பினை உருவாக்குவது தொடர்பில் பொய் பிரசாரம் செய்யப்படுவதாக ஜனாதிபதி அறிவித்திருக்கிறார். எந்தப் பிரச்சினை வந்தாலும் அதனை எதிர்கொண்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என ஜனாதிபதியும் அறிவித்திருக்கிறார்.

இந் நிலையில் ஜனாதிபதியினதும் பிரதமரினதும் இந்த நோக்கங்கள் வரவேற்கத்தக்கதாக அமைந்திருக்கின்றன. ஆனால் இனவாதிகளினதும் கடும் போக்குவாதிகளினதும் செயற்பாடுகளுக்கு அஞ்சி ஜனாதிபதியும் பிரதமரும் அரசியலமைப்பை தயாரிக்கும் நோக்கினை கைவிட்டு விடுவார்களோ என்ற நோக்கும் தமிழ் பேசும் மக்களுக்கு ஏற்பட்டு இருக்கின்றது.

என்றுமில்லாதவாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் அரசாங்கத்திற்கு ஆதரவை நல்கி வருகிறார். அதாவது புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுத்திட்டம் ஒன்றை பெற்றுக்கொள்ள முடியும் என்று சம்பந்தன் நம்பிக்கை கொண்டுள்ளார். அதனால் எதிர்க்கட்சித் தலைவரும் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிவருகின்றார்.

உலகில் எந்தவொரு எதிர்க்கட்சித் தலைவரும் இவ்வாறு அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கமாட்டார்கள் என்று கூட்டு எதிரணி விமர்சிக்கும் அளவுக்கு சம்பந்தனின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஏன் இவ்வாறானதொரு விட்டுக்கொடுப்புடன் செயற்படுகின்றார் என்பதனை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும். அதனை புரிந்துகொண்டு தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினையை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதாவது இந்தளவு தூரம் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் இறங்கி வந்துள்ள நிலையில் அதனை ஒரு சிறந்த வாய்ப்பாக பயன்படுத்தி அரசாங்கம் விரைந்து இனப்பிரச்சினைக்கு தீர்வை கண்டுவிட வேண்டும். மாறாக வரலாற்றில் நடந்ததைப் போன்று மீண்டும் தமிழ் மக்கள் ஏமாற்றமடைவதற்கு இடமளிக்க கூடாது. மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் தேரர்கள் புதிய அரசியலமைப்பை எதிர்த்துள்ள நிலையில் புதிய அரசியலமைப்பின் அவசியம் மற்றும் அதனூடாக தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்தல் என்பன எந்தளவுதூரம் முக்கியமானவை என்பதை அந்த தேரர்களுக்கு எடுத்துக்கூற வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஜனாதிபதியும் பிரதமரும் இந்த விடயத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியது அவசியமாகிறது.

குறிப்பாக பிரச்சினையை தீர்ப்பதற்கு கிடைத்துள்ள தற்போதைய அரிதான சந்தர்ப்பத்தை உரிய முறையில் பயன்படுத்தி நீண்டகாலப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது எந்தளவு தூரம் அவசியம் என்பதை ஜனாதிபதியும் பிரதமரும் அஸ்கிரிய மற்றும் மல்வத்து தேரர்களுக்கு எடுத்துக்கூற வேண்டியது அவசியமாகும். இவ்வாறு தேரர்களுக்கு விடயங்களை எடுத்துக் கூறுவதன் மூலமே இனவாதிகளின் செயற்பாட்டை முடக்க முடியும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது பேரிடியைக் கொடுத்திருக்கும் பீடங்களைச் சேர்ந்த தேரர்களின் அறிவிப்பு தொடர்பில் அரசாங்கம் உரிய முறையில் செயற்பட்டு தேரர்களுக்கு விளக்கமளித்து நிலைமையை சீர் செய்வார்கள் என தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர். 

ரொபட் அன்டனி

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-10-21#page-3

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தான் சமாதானத்துக்கு தடையாக உள்ளனர் என்று சொல்லியே, புலிகளை அளிக்க சர்வதேச உதவிகளை கேட்டு வாங்கிய சிங்களம், இன்று  நிர்வாணமாக நிற்பதனை, வெளிக் காட்டிய வகையில், ராஜதந்திரத்தினை காண்பித்த சம்பந்தருக்கு ஒரு பாராட்டு.

இது சுஜ நிர்ணய தேர்தலில் முடிய வேண்டும் என்பதே அடுத்த நிலை. 

அந்த நிலை வந்தால், புலிகளால், மகிந்தர் என்ன தீர்க்க தரிசன காரணத்துக்காகக் ஜனாதிபதி ஆக்கப் பட்டாரோ, அது நிறைவேறும்.

அதே வேளை இன்னும் 3 வருடங்களில், யாழ்ப்பாண ராஜதானி மன்னன் சங்கிலியன், போர்த்துகேயரிடம் வீழ்ந்த, சுதந்திரத்தினை இழந்த, 1520 ம் ஆண்டின்   500 ஆண்டு நிறைவு வருகின்றது.

500 ஆண்டுகள் அடிமைத்தனம்.

என்று தான் அந்த மண்ணுக்கு சுதந்திரம் வருமோ?
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.