Jump to content

காணாமல்போனோர் சான்றிதழைபெற அதிகமானோர் அஞ்சுகின்றனர்


Recommended Posts

காணாமல்போனோர் சான்றிதழைபெற அதிகமானோர் அஞ்சுகின்றனர்

 

நேர்­காணல் : எம்.எம்.மின்ஹாஜ்

ஜனா­தி­பதி மக்கள் சேவை இன்று வவு­னி­யாவில் ஜனா­தி­பதி,  பிர­தமர் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெறுகின்றது. இங்கு இல­வ­ச­மாக அடை­யாள அட்டை, பிறப்புச் சான்­றிதழ், விவாக சான்­றிதழ், சாரதி அனு­மதிப்பத்­திரம், இல­வச மூக்குக் கண்­ணாடி, காணி உறு­தி­ப் பத்­திரம் திருமணப் பதிவு போன்ற சேவைகளை பெற்றுக் கொள்ளலாம் 

 

காணாமல்போனோர் தொடர்­பான சான்­றி­தழைப் பெற்று கொள்­வ­தற்கு பெரும்பாலானோர் அஞ்­சு­கின்­றனர். அவர்­களை அடை­யாளம் கண்டு விடு­வார்­களோ என்று அஞ்­சு­கின்­றனர். எனவே அந்த சந்­தேகம் நீங்கிய பின்னர் அதனை பெற்­றுக்­கொள்ள முன்­வ­ரு­வார்கள் என நம்­பு­கின்றோம். அவர்கள் முன்வந்தால் ஜனா­தி­பதி மக்கள் சேவை நிகழ்ச்சித் திட்­டத்தினூடாக வழங்க தயா­ராக உள்ளோம் என உள்­நாட்டு அலு­வல்­கள்­ அ­மைச்சர் வஜிர அபே­வர்­தன கேச­ரிக்கு வழங்­கிய செவ்­வியில் தெரி­வித்தார். அவர் கேச­ரிக்கு வழங்­கிய செவ்வியின் வடிவம் வருமாறு, 

கேள்வி:ஜனா­தி­பதி மக்கள் சேவை தொடர்பில் சற்று விளக்க முடி­யுமா?

பதில்:நாட்டில் உள்ள 332 பிர­தேச செய­ல­கத்தை இலக்­காகக் கொண்டே இந்த திட்­டத்தை ஆரம்­பித்­துள்ளோம். நட­மாடும் சேவையின் ஊடாக மக்­களின் பிரச்­சினை களைத் தீர்ப்­பதே எமது நோக்­க­மாகும். அடை­யாள அட்டை, பிறப்பு சான்­றிதழ், விவாகச் சான்­றிதழ், சாரதி அனு­மதிப் பத்­திரம், கண்­ணாடி, காணி உறு­திப்பத்­திரம் போன்ற சேவைகளை இல­வ­ச­மாக பெற்­றுக்­கொள்ள முடியும். இதன்போது பதிவுத் திருமணம் செய்து வைக்­கப்­படும். ஒரு சிலர் விவாகம் நடந்து பிள்­ளை­க  ளும் பெற்­றுள்­ளனர். எனினும் அவர்கள் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக பதிவுத் திருமணம்  செய்து கொள்ளவில்லை.பிறப்பு சான்­றி­தழில் உள்ள குறை­பா­டு­களே இதற்கு பிர­தான கார­ண­மாக கரு­தப்­ப­டு­கின்­றன. இதன்­படி விவாகம் நடக்கும் போது அந்த இடத்­தி­லேயே புதி­தாக அனு­மான சான்­றிதழ் வழங்­குவோம். இதன்­போது குறித்த சான்­றி­தழை வைத்து அவ­ருக்கு பிறப்பு சான்­றி­த­ழையும் அடை­யாள அட்­டை­யையும் பெற்­றுக்­கொள்ள முடியும். இதனால் பலரை சமூ­க­ம­யப்­ப­டுத்த முடியும். ஏழை பணக்­காரன் என்று இல்­லாமல் அனை­வ­ருக்கு சேவை வழங்­கப்­படும். இதன்­மூலம் அர­சி­யல்­வா­தி­களின் வீட்­டிற்கு வருகை தரு­வோரின் எண்­ணிக்கை குறை­வ­டையும். மேலும் கொழும்­புக்கு வருகை தரும் எண்­ணிக்­கையும் குறை­வ­டையும். அத்­துடன் பிர­தேச செய­ல­கங்­களில் வரி­சையில் நிற்கும் எண்­ணிக்­கையும் குறை­வ­டையும். குரு­ணாகல் மாவட்­டத்தில் மாத்­திரம் அடை­யாள அட்டை இல்­லா­த­வர்கள் 80 ஆயிரம் பேர் இருந்­துள்­ளனர். அத்­துடன் சாரதி அனு­மதிப் பத்­திரம் இல்­லா­த­வர்கள் 40 ஆயிரம் பேர் வரை உள்­ளனர். மேலும் காணி அனு­மதிப் பத்­திரம் இல்­லா­த­வர்கள் ஒரு இலட்சம் பேர் வரை உள்­ளனர். 

இந்த திட்­டத்தை முதலில் பொல­ன்ன­று­வையில் ஆரம்­பித்தோம். 80 ஆயிரம் பிரச்­சி­னை­களை இனங்­கண்டோம்.70 ஆயி ரம் பிரச்­சி­னை­களை தீர்த்தோம். இரண்­டா­வ­தாக காலி மாவட்­டத்­திலும் செயற்­ப­டுத்­தினோம். ஜனா­தி­பதி அலு­வ­லகம் , பிர­தமர் அலு­வ­லகம் உள்­ளிட்ட 53 அமைச்­சுகள் குறித்த வேலைத்­திட்டத்தில் பங்கேற்கின்றன. காலி மாவட்­டத்­திற்கு 22 தடவை சென்று பிரச்­சி­னை­களை இனங்­கண்டோம். இதன்­போது அடை­யாள அட்டை இல்­லா­த­வர்கள் 18 ஆயிரம் பேர் இருந்­தனர். இவர்­க­ளுக்கு அடை­யாள அட்டை வழங்க முடிந்­தது. அத்­துடன் இதன்­மூலம் கிடைக்­கா­து­வி­ருந்த இலா­பங்­களும் அர­சாங்­கத்­தினால் பெற்­றுக்­கொள்ள முடிந்­தது. உதா­ர­ண­மாக சாரதி அனு­மதிப் பத்­திரம் இல்­லாமல் வாகனம் ஓட்­டி­ய­வர்கள் 10 ஆயிரம் பேர் வரை இருந்­தனர். அன்றே அவர்­க­ளுக்­கான அனைத்து காரி­யங்­க­ளையும் முன்‍­னெ­டுத்தோம். 

இத­னை­ய­டுத்து குரு­ணாகல், வவு­னியா, மன்னார், முல்­லை­தீவு மற்றும் கிளி­நொச்சி ஆகிய மாவட்­டங்­களில் ஜனா­தி­பதி மக்கள் சேவையை ஆரம்­பிக்­க­வுள்ளோம். கடந்த மாதங்­களில் அனர்த்­தங்­கள ஏற்­பட்­ட­தனால் தாமதம் ஏற்­பட்­டது.

குரு­ணாகலில் 16 இலட்சம் மக்கள் வாழ்­கின்­றனர். 17 முறை குரு­ணாக­லுக்கு சென்றோம். அரச ஊழி­யர்­கள் அனை­வ­ரையும் அழைத்து தெளி­வு­ப­டுத்தி உரிய வகையில் காரி­யங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­தினோம்.அத்­துடன் தற்­போது வவு­னி­யாவில் அனைத்து பணி­களும் நிறைவு செய்­துள்ளோம். வவுனியாவில் ஒரு இலட்­சத்து 94 ஆயிரம் மக்கள் வாழ்­கின்­றனர். இது யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட பகு­தி­யாகும். இதன்­போது 53 அமைச்­சு­களும் நான்கு முறை வவு­னியா மாவட்­டத்­திற்கு சென்­றன. இதன்­படி இறுதி நிகழ்வு இன்­றைய தினம் நடக்­க­வுள்­ளது. வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரியில் நடைபெறும் இந்த நிகழ்­விலும் 53 அமைச்­சு­களும் கலந்து கொள்­ள­வுள்­ளன. ஜனா­தி­பதி அலு­வ­லகம், பிர­தமர் அலு­வ­லகம் உள்­ளிட்ட அனைத்து அரச நிறு­வ­னங்­களின் பங்­க­ளிப்­புடன் இந்­ நி­கழ்வு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. காலை 8 மணிக்கு ஆரம்­பமாகும் இந் நிகழ்வு இரவு 11 மணிவரை இடம்பெறும். இசை நிகழ்ச்­சியும் நடக்கும்.

அதே­போன்று மன்­னாரில் குறித்த நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.முல்­லை­த்தீவில் 6 பிர­தேச செய­லகத்­திலும் கிளி­நொச்­சியில் 4 பிர­தேச செய­லகத்­திலும் நட­வ­டிக்கை ஆரம்­பிக்­கப்­பட்டு முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இதற்­கான ஏற்­பா­டு­களை நாம் செயற்­ப­டுத்தி வரு­கின்றோம்.

பிறப்பில் இருந்து இறப்பு வரை தேவை­யான உறுதி சான்­றி­தழ்­களை வழங்கும் அமைச்சு என்ற வகையில் எனது அமைச்­சுக்கு பாரிய பொறுப்­புகள் உள்­ளன. இதன்­படி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன குறி த்த பொறுப்பை எனது அமைச்­சிடம் ஒப்படைத்துள்ளார். 

இது தொடர்­பான அறிக்­கை ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் அனுப்பி வைக்­கப்­ப­டு­கின்­றது. வவு­னி­யாவில் இன்று நடை­பெ­ற­வுள்ள நிகழ்­விற்கு 10 ஆயிரம் பேரை அழைத்­துள்ளோம். இவர்­க­ளுக்­கான பஸ் சேவைகள் அனைத்தும் இல­வ­ச­மாக வழங்­கப்­படும். அனைத்து ஏற்­பா­டு­க­ளையும் அந்த இடத்­தி­லேயே வழங்­குவோம். வவு­னியாவில் இந் நிகழ்வு நிறை­வ­டைந்த பின்னர் அனைத்து மாவட்­டங்­க­ளிலும் செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்போம்.

கேள்வி: இந்த திட்டம் எவ்­வ­ளவு காலம் நீடிக்கும்?

பதில்:- 2020 ஆம் ஆண்­டுக்குள் மக்­களின் பிரச்­சினை முடிக்க திட்­ட­மிட்­டுள்ளோம். இதன் இறுதி தேசிய நிகழ்வு அனைத்து மாவட்­டங்­க­ளிலும் முடிந்த பின்னர் நடத்­தப்­படும்.‍ இந்த வரு­டத்தில் குரு­ணாகல், மன்னார், கிளி­நொச்சி, முல்­லை­த்தீவு ஆகிய மாவட்­டங்­க­ளுக்­கான பணி­களை நிறைவு செய்­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்ளோம்.

கேள்வி: இங்கு சாரதி அனு­மதிப் பத்­திரம் எப்­படி வழங்­கப்­படும்?

பதில்:ஜனா­தி­பதி மக்கள் சேவையின் ஊடாக மருத்­துவ சான்­றி­தழை இல­வ­ச­மாக பெற்­றுக்­கொ­டுப்போம். அத்­துடன் பரீட்­சையும் எழுத முடியும். இதுவும் இல­வ­ச­மாகும். எனினும் சாரதி அனு­மதிப் பத்­திரம் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான பணத்தை பய­னா­ளிகள் வழங்க வேண்டும்.

அடை­யாள அட்டை பெற்ற கையோடு அவர்கள் அடிப்­படை தகைமை உடை­ய­வர்­க­ளாக மாறு­கின்­றார்கள். இதன்­படி அவ­ருக்கு ஏனை­ய­வற்றை எமக்கு இல­வ­ச­மாக அந்த இடத்­தி­லேயே வழங்க முடியும்.

கேள்வி: - இலத்­தி­ர­னியல் அடை­யாள அட்­டையா இங்கு வழங்­கப்­படும்?

பதில்:இலத்­தி­ர­னியல் அடை­யாள அட்டை இன்னும் நடை­மு­றைக்கு வர­வில்லை. தற்­போ­தைக்கு அமைச்­ச­ர­வைக்கு சமர்ப்­பித்­துள்ளோம். அதில் திருத்­தங்கள் செய்த பின்னர் அமு­லுக்கு வரும்.

கேள்வி:இதற்கு அர­சாங்­கத்­திற்கு எவ்­வா­றான செல­வுகள் ஏற்­படும்?

பதில்: இந்த விட­யத்தில் நாங்கள் அரச ஊழி­யர்­க­ளுக்கே நன்றி கூற வேண்டும். இந்த அனைத்து காரி­யங்­க­ளையும் சனிக்­கி­ழமை என்று பாராமல் விடு­மு­றையிலும் இங்கு வந்து கடமையாற்றுகின்றனர். இந்த காரி­யங்­களை கிழமை நாட்­களில் முன்­னெ­டுக்க முடி­யாது. கொழும்பில் வேலைகள் இருக்கும். ஆகையால் குறிப்­பிட்டு செல­வு­களை கூற முடி­யாது. இதற்கு தனியார் துறை­யி­னரும் எமக்கு ஒத்­து­ழைப்­பு­களை வழங்­கு­கின்­றனர்.

கேள்வி:மக்­க­ளிடம் அடை­யாள அட்டை இல்­லாமை போன்ற பிரச்­சி­னைகள் எழு­வ­தற்கு பிர­தேச செய­லகங்­களின் கவ­ன­யீ­னமே காரணம் என்­ப­தனை நீங்கள் ஒப்பு கொள்­கின்­றீரா?

பதில்:- நிச்­சய­மாக இல்லை. அரச ஊழி­யர்கள் சட்ட விதி­மு­றை­களின் பிர­காரம் செயற்­பட வேண்­டி­யுள்­ளது. அடுத்தடுத்து வறு­மையும் இதில் பாதிப்பு செலுத்­து­கின்­றது. ஏனெனில் அடை­யாள அட்டை பெற வேண்­டு­மாயின் புகைப்­படம் எடுத்து கிராம உத்­தி­யோ­கத்­தரை சந்­திக்க வேண்டும். அதன்­பின்னர் பிறப்பு சான்­றிழை பெற பதி­வாளர் காரி­யா­ல­யத்­திற்கு செல்ல வேண்டும். பொலி­ஸ் நிலையத்துக்கும் செல்ல வேண்டும். இதிலும் அவ­ச­ர­மாக பெற வேண்­டு­மாயின் அவர் கொழும்­புக்கு வர வேண்டும். இதற்கு அவ­ருக்கு மூவா­யி­ரத்­திற்கும் மேல் செலா­வாகும். அதற்கு பதி­லாக இரவில் பாண் சாப்­பிட்டு விட்டு உறங்­கினால் நன்­றாக இருக்கும். ஆகவே அரச ஊழி­யர்­களின் குறை­பா­டாக கருத முடி­யாது. அரச பொறி­மு­றையில் காணப்­படும் சில சிக்­கல்­களே கார­ண­மாகும். அத்­துடன் தற்­போது உள்ள சட்­டங்கள் அனைத்து திருத்­தப்­ப­டாமல் பழைய முறை­மையின் கீழேயே உள்­ளன. உதா­ர­ணத்­திற்கு காணி பிரச்­சி­னை­களை குறிப்பிட முடியும்.

கேள்வி: -ஆர்.பிரே­ம­தாஸ காலத்­திலும் இவ்­வா­றான செயற்­பா­டுகள் முன்னெடுக் கப்பட்டதே? 

பதில்: ஆம். எனினும் தற்­போது அதனை விட நவீன உல­கிற்கு பொருந்தும் வகையில் முன்­னெ­டுத்து வரு­கின்றோம். இதன்­ மூலம் பொது மக்­களின் சுமையை பெரு­ம­ளவில் குறைத்­துக்­கொள்ள முடியும்.

கேள்வி:-இவ்­வாறு அர­ச ­ஊ­ழி­யர்­களை அழைத்துச் செல்வதால் கூடுதல் செலவு ஏற்படுமல்லவா. இதற்கு மாற்­று ­வ­ழிகள் எதுவும் உள்­ளதா?

பதில்:- ஆம். இது தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கின்றோம். இதன்­படி எதிர்­வரும் காலங்­களில் பிர­தேச மட்­டத்தில் இவ்­வா­றான வச­தி­களை ஏற்­ப­டுத்தி கொடுக்­க­வுள்ளோம்.

கேள்வி:- யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்டு முகாம்­களில் உள்ள மக்­க­ளுக்கு எப்­படி இதனால் உத­வி­களை பெற்­று­க்கொள்ள முடியும்?

பதில்: நான் வவு­னியா மாவட்­டத்தின் பிர­தேச செய­லாளர் பிரிவு ஆறுக்கும் சென் றேன். ஆறு நாட்கள் இருந்தேன். மாந்­தீவு சென்றேன். அங்கு கிராம சேவகர் பிரி­வுகள் 22 உள்­ளன. 12 கிராம சேவை உத்­தி­யோ­கத்­தர்­களே உள்­ளனர். ஏனை­ய­வற்­றுக்கு கிராம சேவை உத்­தி­யோ­கத்­தர்கள் கிடை­யாது. அங்கு சென்று பிரச்­சி­னை­களை நேர­டி­யாக பார்த்தேன். அங்கு நான் அவர்­க­ளுக்கு பல விட­யத்தை எடுத்து கூறினேன். மறு­ப­டியும் கூறு­கின்றேன். வடக்கில் வாழும் மக்­க­ளுக்கு மாத்­திரம் குறித்த பிரச்­சினை இல்லை. யுத்­த­த் தினால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் என்ற வகை யில் அவர்­க­ளது பிரச்­சினை வித்­தி­யா­ச­மா­னது. எனினும் முல்­லை­தீவு , மாந்­தீவில் உள்ள பிரச்­சினை தெற்­கிலும் உள்­ளது. காலி, பொலன்­ன­றுவை ஆகிய பகு­தி­க­ளிலும் குறித்த பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. 

அத்­துடன் அங்கு ஒரு மண்­ட­பத்தில் நடந்த நிகழ்வில் யுத்­தத்தில் தங்­களின் உற­வினர்களை இழந்­த­வர்கள் எவ­ரா­வது உள்­ள­னரா? என கேட்டேன். அதற்கு அனை­வரும் கை உயர்த்­தினர். இதன்­போது நான் நீங்கள் எதற்கும் கவ­லை­ப்பட வேண்டாம் என கூறினேன். தெற்­கிலும் பிரச்­சினை ஏற்­பட்­டது. 1987,88 ஆண்டுகளில் பிரச்­சினை ஏற்­பட்­டது. 10 ஆயிரம் பேர­ளவில் கொல்­லப்­பட்­டனர். இதன்­போது தமி­ழர்கள் சிங்­க­ள­வர்­களை கொல்­ல­வில்லை. சிங்­க­ள­வர்­களே சிங்­க­ள­வர்­களை கொன்­றனர். பாரா­ளு­மன்­றத்­திற்கு சிங்­க­ள­வர்­களே குண்டு வைத்­தனர்.எனினும் நாம் அவர்­களை பழி­வாங்­க­வில்லை. இதனை சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் நினைவு கூரு­கின்­றனர். அவர்­க­ளுக்கு நினைவு கூரு­வ­தற்கு விஹார மா­தேவி பூங்­காவை வழங்­கி­யுள்ளோம். சந்­தேகம், அவ­நம்­பிக்கை ஏற்­பட்­டதால் யுத்தம் ஏற்­பட்­டது. ஆகையால் இவை அனைத்தையும் மறந்து விடுங்கள். நாம் அனை­வரும் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டுவோம்.

இந்த வேலைத்­திட்­டத்­திற்கு வடக்கு முத­ல­மைச்சர் உட்­பட மக்கள் பிர­தி­நி­திகள் எமக்கு பூரண ஒத்­து­ழைப்பு வழங்­கு­கின்­றனர். அவர்­க­ளுக்கு முக்கிய பிரச்­சினை உள்­ளமை உண்­மை­யாகும். கிழக்­கிலும் முன்­னெ­டுப்போம். இதன்­போது நீங்கள் கூறிய பிரச்­சி­னைகள் தீரும்.

கேள்வி: -என்­றாலும் வடக்கில் எதிர்ப்­புகள் வெளி­கி­ழம்­பிய வண்ணம் உள்­ள­னவே?

பதில்: எமது வேலைத்­திட்­டத்­திற்கு வடக்கில் எதிர்ப்­புகள் வெளி­யி­ட­வில்லை. அனை­வரும் ஆத­ரவு வழங்­கினர். வடக்கு மக்கள் பிர­தி­நி­திகள் அனை­வரும் பங்­கு­கொள்­கின்­றனர். அவர்­களே அனைத்­தையும் செய்து வரு­கின்­றனர். நாம் ஒத்­து­ழைப்பு மாத்­தி­ரமே வழங்­கு­கின்றோம்.

கேள்வி:-விஹா­ர­மா­தேவி பூங்­காவை வழங்­கி­ய­தனை போன்று யுத்­த­த்தினால் உயி­ரி­ழந்­த­வர்­களை நினைவு கூரவும் இடம் ஒதுக்­கு­வீர்­களா?

பதில்:உயி­ரி­ழந்­த­வர்­களை கட்­டாயம் நினைவு கூர வேண்டும். மரி­யாதை செலு த்த வேண்டும். உயி­ரி­ழந்­த­வர்­களை நினைவு கூராமல் இருக்க முடி­யாது. பெளத்த தர்­மத்­திலும் இது பற்றி சொல்­லப்­பட்­டுள்­ளது.

கேள்வி:-விடு­தலைப் புலி­களின் மாவீரர் தினம் கொண்­டா­டப்­பட்டு வரு­கின்­றதே. இதற்கு எதிர்ப்பு வெளி­வந்த வண்ணம் உள்­ள­னவே?

பதில்:- விடு­தலைப் புலிகள் என்­பது இங்­குள்ள பிரச்­சினை கிடை­யாது. இதில் உயி­ரி­ழந்­த­வர்­களை நினைவு கூருவதில் பிரச்­சி­னை­யில்லை. இது மனித உரி­மை­களில் ஒன்­றாகும்.

கேள்வி:காணாமல் போனோர் சான்­றி தழ் பெற்­றுக்­கொ­டுப்­பது தொடர் பாக அண்­மையில் சட்டம் நிறை­வேற்­றப்­பட்­டது. இதற்கு இங்கு வச­திகள் செய்து கொடுக்­கப்­படுமா? 

பதில்: காணாமல் போனோருக்கான சான்­றிதழை பெற்­றுக்­கொள்­வ­தற்கு வவு­னி­யாவில் பலர் முன்­வந்­தனர். எனினும் பெரும்­பாலானோர் காணாமல் போனோர் தொடர்­பான சான்­றி­தழை பெற்று கொள்­வ­தற்கு அஞ்­சு­கின்­றனர். அவர்­களை அடை­யாளம் கண்டு விடு­வார்­களோ என்று அஞ்­சு­கின்­றனர். எனவே அந்த சந்­தேக நீங்­கிய பின்னர் அதனை பெற்­றுக்­கொள்ள முன்­வ­ரு­வார்கள் என நம்­பு­கின்றோம். முன்­வந்தால் நாம் வழங்­குவோம். அதனை நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­கின்றோம்.

கேள்வி:-காணி உறு­தியும் வழங்­கப்­ப­டுமா?

பதில்:- ஜனா­தி­பதி தலை­மையில் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு அதற்கு தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டு வருகின்றன. வவு­னி­யாவில் எட்­டா­யிரம் பேருக்கு காணி உறு­திப்­பத்­திரம் வழங்­கி­யுள்ளோம். கட­வு­ச்சீட்டும் வழங்க முடியும்.

கேள்வி:-மட்­ட­க்க­ளப்­பிலும் முன்­னெ­டுக்­கப்­ப­டுமா?

பதில்:- ஆம், ஜனா­தி­பதி அறி­வித்தல் வந்த பிறகு முன்­னெ­டுப்போம். எனினும் கொழும்பு மாவட்­டத்­தி­லேயே முக்­கிய பிரச்­சினை உள்­ளது. மட்­ட­க்குளி கிராம சேவகர் பிரிவில் 12 குடும்­பங்கள் வசிக்­கின்­றன. இதன்­கா­ர­ண­மாக எல்லை நிர்­ண­யத்­திலும் சிக்கல் நிலை ஏற்­பட்­டது. ‍இதன்­படி ஐந்து வரு­டத்­திற்கு ஒரு முறை எல்­லை ­நிர்­ணயம் செய்ய திட்­ட­மிட்­டுள்ளோம். 2007 ஆம் ஆண்­டுக்கு பின்னர் எல்லை நிர்­ணயம் செய்­யப்­ப­ட­வில்லை. 2012 செய்­யப்­பட்­டாலும் அதனை உரிய முறையில் செய்­ய­வில்லை. இதன்­கா­ர­ண­மா­கவே உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லுக்கு தாமதம் ஏற்­பட்­டது.

மட்­ட­க்குளி போன்று திம்­பி­ரி­கஸ்­யாய, நுவ­ரெ­லியா, அம்­ப­க­முவ பகு­தி­க­ளிலும் பிர ச்­சினை உள்­ளது. அத்­துடன் யுத்­தத்தின் பின்னர் வெள்­ள­வத்தை, மட்­ட­க்குளி, கொட்­டாஞ்­சேனை ஆகிய பகு­தி­களில் பலர் வந்து குடி­யே­றினர். இதனால் குடும்­பங்­களும் அதி­க­ரித்­துள்­ளன. இதன்­படி அவர்­க­ளது மனித உரிமை கேள்விக்குறி­யா­கி­யுள்­ளது. இதன் படி எல்­லை­ நிர்­ணயக் குழுவை நிய­மித்­துள் ளோம். இரு­வ­ரு­டங்­களில் குறித்த பிரச்­சி­னையை தீர்க்க முடியும் என நம்­பு­கின்றேன்.  

கேள்வி: -தொல்­பொ­ரு­ள் சார்ந்த இடங் கள் அழிக்­கப்­பட்டு வரு­கின்­றதே. இது  தொடர்பாக என்ன கூற விரும்­பு­கின்­றீர்கள்? 

பதில்: - இது வடக்கில் மட்­டு­மல்ல. தெற்­கிலும் நடக்­கின்­றன. உலகில் 660 உலக மர­பு ரிமை இடங்கள் உள்­ளன. இலங்­கையிலும் சிகி­ரியா, காலி கோட்டை போன்ற பகுதிகளை குறிப்­பி­டலாம். எனி னும் கடந்த காலங்­களில் காலி கோட்டை அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி தனியார் கட்­ட­டங்கள் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளன. இதற்கு எவரும் பொலிஸ் நிலையத்தில் முறைப்­பாடு செய்­ய­வில்லை. எனினும் அதனை நாம் உடைத்­தெ­றிவோம். இந்த பிரச்­சினை தீர்க்க நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்றோம்.  

கேள்வி: உள்ளூராட்சி மன்றத் தேர் தலில் ஐ.தே.க வெற்றி பெறுமா?

பதில்:- உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அனைத்து மன்ற ங்களையும் வெற்றிகொள்ளும். 2002 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைத்த போது அத்தனகல தொகுதியுடன் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களையும் வெற்றிக்கொண்டோம். அது போலவே இம் முறையும் அனைத்து உள்ளூராட்சி மன்றங் களையும் வெற்றிகொள்வோம். 

கேள்வி:நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்து பயணிக்குமா ?

பதில்:- 1952 ஆம் ஆண்டில் காணப்பட்ட யுகம் மீண்டும் தோற்றம் பெற்றுள்ளது. இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து புரிந்

துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டு செயற்பட்டு வருகின்றது. இதன்படி தொட ர்ந்து தேசிய அரசாங்கம் பயணிக்கும். அதில் சந்தேகம் கிடையாது.

கேள்வி:உள்ளூராட்சி மன்றத் தேர்த லில் பெரும்பான்மையை எவருக்கும் பெற முடியாது. கூட்டாட்சியே நடக்கும் என்று கூறுகின்றனரே அது உண்மையா? 

பதில்:-உள்ளூராட்சி மன்றத் தேர்த லில் எந்த கட்சிக்கும் அதிக பெரும் பான்மை பெற முடியாது. ஏனைய கட்சிகளுடன் இணைந்து கொண்டு ஆட்சி  அமைக்கும் வகையிலேயே தேர்தல் முறைமை உருவாக் கப்பட்டுள்ளது.  

கேள்வி:- சைட்டம் மற்றும் பிணைமுறி மோசடிகள் தேர்தலில் ஐ.தே.க வுக்கு பாதி ப்பை ஏற்படுத்துமா?  

பதில்:சைட்டம் மற்றும் பிணை முறி மோசடிகள் எமக்கு எந்தவொரு பாதிப்பும் கிடையாது.

அத்துடன் மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் முன்னேற்றகரமான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன்படி 2014 ஆம் ஆண்டுக்கு முன்னர் நடந்த பல்வேறு மோசடிகள் குறித்து முன்னாள் நிதி அமைச்சர் என்ற வகையில் மஹிந்த ராஜபக் ஷவையும் சட்டத்தின் முன் கொண்டு வருவோம் என்றார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-10-21#page-5

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆஹா.... "கொல்லைப்புறம்". 😂 சிரித்து வயிறு நோகுது.  
    • அங்கே என்ன நடந்தது? 1. "ரேடாரில் மாட்டாமல் தாழப் பறக்கும் நுட்பத்தை முதலில் பயன்படுத்தியது இஸ்ரேல்" என்று நான் எழுதினேன் (கவனியுங்கள்: அமெரிக்கா அல்ல, இஸ்ரேல்). 2. நீங்கள் வந்து "ஜப்பான் காரர் இதை பேர்ள் ஹாபரில் செய்து விட்டார்கள், சொம்பு, முட்டு, பொங்கல், அவியல்" என்று குதித்தீர்கள். ஆதாரம் கேட்டேன், மௌனமாகப் போய் விட்டீர்கள் (ஏனெனின், ஜப்பான் காரன் கூட தான் இதைச் செய்ததாக எங்கும் சொல்லி நான் அறியவில்லை). 3. பின்னர் நான் ரேடாரில் ஜப்பான் விமானங்கள் தெரிந்தமை, ஏன் அமெரிக்கா தவற விட்டது என்று வரலாற்று நூல்களில் இருந்த தகவல்களைச் சொன்னேன். 4. இன்னொரு உறவு, விமானங்கள் ரேடாரில் தெரிந்ததை உறுதிப் படுத்தும் ஒரு ஆதாரப் பதிவை இணைத்தார் (கவனியுங்கள்: நீங்கள் எதுவும் இணைக்கவில்லை😎!) அதே ஆதாரத்தை , தாழப் பறந்து வந்து ஜப்பானியர் தாக்கியதன் ஆதாரமாக எனக்கு நீங்கள் சிவப்பெழுத்தில் கோடிட்டுக் காட்டியிருந்தீர்கள் (மீண்டும் கவனியுங்கள்: "ஆங்கிலம் ஒரு மொழியேயொழிய, அது அறிவல்ல!" - எங்கேயோ கேட்ட குரல்😎!) எனவே, இது வரை ஜப்பானியர் தாழப் பறந்து வந்து ரேடாரில் இருந்து தப்பினர் என்பதற்கு ஒரு ஆதாரமும் நீங்கள் தரவில்லை (இல்லாத ஆதாரத்தை எப்படித் தருவதாம்😂?).   இனி உங்கள் பிரச்சினைக்கு வருவோம்: நீங்கள் உட்பட யாழில் ஓரிருவரின் பிரச்சினை "மேற்கு எதிர்ப்பு" என்ற ஒரு உணர்ச்சி. அந்த உணர்ச்சிக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம், அதை மறுக்க யாருக்கும் உரிமையில்லை. ஆனால், அந்த உணர்ச்சி மட்டுமே உலகத்தை, சம்பவங்களைப் புரிந்து கொள்ளப் போதாது. அப்படி உணர்ச்சி மட்டும் வைத்து "நாசா சந்திரனுக்குப் போகவில்லை" என்று கூட வாதாடும் நிலை இருக்கிறது பாருங்கள்? அந்த முட்டாள் தனத்தைத் தான் நான் சவாலுக்குட் படுத்துகிறேன். இனியும், தவறாமல் செய்வேன் - நீங்கள் சொம்போடு குறுக்கே மறுக்கே ஓடினாலும், நான் நிறுத்தாமல் செய்வேன்! ஏன் இப்படி சவலுக்குட்படுத்துவது முக்கியம்? இந்த மேற்கு எதிர்ப்பு உணர்ச்சி மயப் பட்டு, பொய்த்தகவல்களை உங்கள் போன்றோர் பரப்புவதால் மேற்கிற்கு ஒரு கீறலும் விழாது. ஆனால், எங்கள் தமிழ் சமுதாயத்தில், குறிப்பாக புலத் தமிழ் சமுதாயத்தில், இதனால் ஒரு முட்டாள் பரம்பரை உருவாகி வரும் ஆபத்து இருக்கிறது. எனவே, உங்கள் போன்றோரை அடிக்கடி இப்படிச் சவாலுக்குட்படுத்துதல் அவசியம். உங்களுக்கு முடிந்தால், இந்த சவால்களை ஆதாரங்களை இணைத்து எதிர் கொள்ளலாம். இல்லையேல் சொம்போடு நின்று விடலாம், இரண்டும் எனக்கு சௌகரியமே!
    • Respondents were asked if they think Israel should respond to the Iranian attack on Saturday night, to which 52% answered that it is better not to respond to end the current round of conflict. In comparison,  48% answered that Israel should respond, even if it means that the price would be an extension of the current conflict.   இதில் யாருக்கு விளக்கமில்லை?? இன்னுமொன்று புரிகிறதா? கூட்டுநாடுகள் இல்லையென்றால் இஸ்ரேல் பாடு அதோகதிதான்!!
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" - பாடல் - 2 / second poem of my own eulogy / உயிர் எழுத்து வரிசையில்     "அன்னையின் தாலாட்டில் அப்பாவின் பாசத்தில் அக்காவின் கண்காணிப்பில் அண்ணையின் வழிகாட்டலில் அனைவரையும் அணைத்து தம்பியின் நண்பனாக அத்தியடியில் மலர்ந்து மணம் வீசியவனே!"   "ஆசை அடக்கி எளிமையாக வாழ்ந்தவனே ஆடை அணிகளை அளவோடு உடுத்து ஆரவாரம் செய்யாமல் அடக்கமாக இருந்தவனே ஆனந்த கண்ணீரை எதற்காக பறித்தாய்?"   "இறைவனை அன்பில் சிரிப்பில் காண்பவனே இல்லாளை ஈன்றவளை காண போனாயோ ? இன்பம் துன்பம் சமனாக கருத்துபவனே இடுகாடு போய் உறங்குவது எனோ ?"   "ஈன இரக்கமின்றி கொரோனா வாட்டி ஈரக்கண் பலரை நனைக்கும் வேளையில் ஈறிலியை நியாயம் கேட்கப் போனாயோ ஈன்ற பிள்ளைகளின் ஞாபகம் இல்லையோ?"   "உடன்பிறப்பாய் மகனாய் மருமகனாய் தந்தையாய் உறவாய் எத்தனை பரிணாமம் நீர்கொண்டீர் ? உதிரியாய் உன்நினைவுகள் நாம் கொண்டோம் உன்உயிர் என்றும் வாழ்திடும் திண்ணம்!"   "ஊடல் கொண்டு சென்ற மனைவியால் ஊன்றுகோல் தொலைத்து அவதி பட்டவனே ஊமையாய் இன்று உறங்கி கிடைப்பதேனோ ஊழித்தீயாய் கொழுந்துவிட்டு எரிந்தது எனோ ?"   "எல்லாமும் நீயாய் எவருக்கும் நண்பனாய் எதிரியையும் அணைக்கும் நட்பு கொண்டவனே எதிர்மறை எண்ணம் எப்படி வந்தது எரிவனம் போக எப்படி துணிந்தாய்?"   "ஏக்கம் கொண்டு நாம் தவிக்கிறோம் ஏங்கி கேட்கிறோம் எழுந்து வாராயோ ஏராள பேரர்கள் உனக்காக காத்திருக்கினம் ஏமாற்றாமல் பதில் ஒன்று சொல்லாயோ?"   "ஐங்கரனை விலத்தி உண்மையை நாடி ஐயம் தெளிந்து மகிழ்ச்சியில் மிதந்தவனே ஐதிகம் கொண்டாலும் சிந்தித்து ஆற்றுபவனே ஐயனே உன்னை நாம் என்றும் மறவோம்!"   "ஒள்ளியனை என்றும் எங்கும் மதித்து ஒழுங்காக தினம் செயல்கள் செய்து ஒப்பில்லா தாய் தந்தையரை மதித்தவனே ஒதுங்கி தனித்து சென்றது எனோ ?"   "ஓலாட்டு நீபாடியது இன்னும் மறக்கவில்லை ஓலம்பாட என்னை வைத்தது எனோ? ஓசை இல்லாமல் மௌனம் சாதித்து ஓய்ந்தது சரியோ? உண்மையை சொல்லு?"   "ஔவை வாக்கை மருந்தாக கொண்டு ஔதாரியமாக வாழ என்றும் முயற்சித்தவனே ஔரசனே தமிழ் தாயின் புதல்வனே? ஔடதம் உண்டோ உன் பிரிதலுக்கு ?"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈறிலி - கடவுள் எரிவனம் - சுடுகாடு ஐதிகம் - தொன்று தொட்டு வரும் நம்பிக்கை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன், மேன்மையானவன் ஓலாட்டு - தாலாட்டு ஔதாரியம் - பெருந்தன்மை ஔரசன் - உரிமை மகன் ஔடதம் - மருந்து     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.