Jump to content

ஒருமித்த நாடு என்ற விடயத்தை முன்வைத்து அனைத்தையும் குழப்பிவிட்டனர்


Recommended Posts

ஒருமித்த நாடு என்ற விடயத்தை முன்வைத்து அனைத்தையும் குழப்பிவிட்டனர்

 

சிரால் லக்­தி­லக்க கேசரி  நாளி­த­ழுக்கு விசேட  செவ்வி  

நேர்­காணல்-: ரொபட் அன்­டனி
(படப்பிடிப்பு: ஜோய் ஜெயக்குமார்)

பிர­பா­க­ர­னை­விட சிறந்த யுத்த தள­பதி இல்லை. அவரே தோற்­க­டிக்­கப்­பட்­டு­விட்டார். இதனை நான் கூறி­யதும் தமிழ் மக்கள் கவ­லைப்­ப­டு­வார்கள். ஆனால் இதுதான் உண்­மை­யாகும். யதார்த்­தத்தை ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும்.

புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்­டு­வரும் முயற்­சியில் அர­சாங்கம் ஈடு­பட்­டுள்ள நிலையில் கடந்த 20 வருடங்­க­ளாக அதி­காரப் பகிர்­வுக்­காக மற்றும் ஐக்­கிய இலங்கை என்ற விட­யங்­க­ளுக்­காக குரல் கொடுத்­து­வரும் ஆனால் பெரும்­பான்­மை­யான சிங்­கள மக்கள் சமஷ்டி அல்­லது ஐக்­கிய என்ற முறையை ஏற்­க­வில்லை என்ற யதார்த்­தத்தை வலி­யு­றுத்­து­கின்ற ஜனா­தி­ப­தியின் இணைப்புச் செய­லாளர் சிரால் லக்­தி­லக்­க­வுடன் இவ்­வாரம் உரை­யா­டு­வ­தற்­காக அமர்ந்தேன்.   

நல்­லி­ணக்க செயற்­பா­டுகள், வடக்கு அர­சியல் நிலைமை, வட மாகாண சபை மற்றும் புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­காரம் என்­பன தொடர்பில் பல்­வேறு விட­யங்­களை சிரால் லக்­தி­லக்க பகிர்ந்­து­கொண்டார். அவர் வீர­கே­சரி நாளி­த­ழுக்கு வழங்­கிய விசேட செவ்­வியின் விபரம் பின்­வ­ரு­மாறு,

 

கேள்வி :அர­சாங்­கத்தின் நல்­லி­ண க்க செயற்­பா­டுகள் எந்த மட்­டத்­தி­லுள்­ளன?

பதில்:நான் நீண்­ட­காலம் நல்­லி­ணக்கம் தொடர்­பாக பணி­யாற்­றி­யி­ருக்­கின்றேன். அது தொடர்­பாக கற்­றி­ருக்­கின்றேன். அந்த வகையில் இன்னும் செய்ய வேண்­டிய விட­யங்கள் பல உள்­ளன. ஆனால் இந்த அர­சாங்கம் பல பணி­களை முன்­னெ­டுத்­தி­ருக்­கின்­ற­து­ என்­ப­தனை ஏற்­க­வேண்டும். முதலில் நாம் நல்­லி­ணக்கம் என்றால் என்ன என்று பார்க்க வேண்டும். நல்­லி­ணக்கம் என்­பது நான்கு கார­ணி­களை அடிப்­ப­டை­யாகக் கொண்­டது. முத­லா­வ­தாக உண்­மையை அறிந்து கொள்ளும் உரி­மையை குறிப்­பி­டலாம். பாதிக்­கப்­பட்ட ஒரு­வ­ருக்கு என்ன நடந்­தது என்பதை தெரிந்து கொள்­வ­தற்­கான உரிமை அவ­ரது உற­வி­னர்­க­ளுக்கு உண்டு.இரண்­டா­வ­தாக நட்­ட­ஈட்டு செயற்­பாட்டை குறிப்­பிட வேண்டும். யாருக்­கா­வது பாதிப்பு ஏற்­பட்­டி­ருந்தால் நட்­ட­ஈடு வழங்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அது அர­சாங்­கத்தின் கட­மை­யாகும். மூன்­றா­வ­தாக நீதிக்­கான உரிமை என்ற விடயம் காணப்­ப­டு­கி­றது. அதா­வது பாதிக்­கப்­பட்­ட­வ­ருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்­ப­தனை இது குறிக்­கி­றது. சட்­ட­ரீ­தி­யாக நீதி வழங்க வேண்டும் என்­ப­தையே இது கோடிட்டு காட்­டு­கி­றது. நான்­கா­வதும் இறு­தி­யு­மான கார­ணி­யா­னது மீள் நிக­ழாமை என்ற விட­யத்­தினை குறிக்­கி­றது. அதா­வது யுத்­தங்கள், மோதல்கள் மீண்டும் இடம்­பெறா வண்ணம் அர­சி­ய­ல­மைப்பு பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும் என்­பதை இந்த காரணி எடுத்துக் காட்­டு­கின்­றது.

இந்த கார­ணியின் கீழ்தான் தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்கும் பணிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. இந்த நான்கு கார­ணி­க­ளையும் நாம் பார்க்­கும்­போது இவை இல­கு­வா­ன­வை­யல்ல. சிங்­கள மற்றும் தமிழ் மக்­க­ளுக்கு மத்­தியில் நம்­பிக்­கை­யின்மை ஏற்­பட்­டுள்ள சூழலில் பிரி­வி­னை­வாதம் தொடர்பில் பாத­க­மான கருத்து உள்ள நிலையில் இந்த விட­யங்­களை ஒரே நாளில் கைச்­சாத்­திட்டு கொண்­டு­வர முடி­யாது. அவை படிப்­ப­டி­யாக முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். தற்­போது காணாமல் போனோர் குறித்த அலு­வ­லகம் அமைக்­கப்­ப­ட­வுள்­ளது. அதற்­கான உறுப்­பி­னர்கள் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளனர். இவை மெது­வா­கத்தான் நடை­பெறும். இது நடந்து விட்டால் நட்­ட­ஈடு வழங்க முடியும். நீதி என்ற கார­ணியே இலங்­கையில் சிக்­க­லுக்­கு­ரிய விட­ய­மாக உள்­ளது. இதன்­ கீ­ழேயே நீதி­மன்ற விட­யங்கள் வரு­கின்­றன. கலப்பு நீதி­மன்­றத்­துக்கு அனு­மதி வழங்­கப்­பட முடி­யாது என்­பதில் ஜனா­தி­பதி உறு­தி­யாக இருக்­கின்றார். இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் அவ்­வாறு செய்­யவும் முடி­யாது. அதனால் நாங்கள் எமது நீதி­மன்ற தொகு­திக்­குள்­ளேயே அவற்­றுக்­கான ஏற்­பா­டு­களை முன்­னெ­டுக்க எதிர்­பார்க்­கின்றோம். இறுதி கார­ணி­யான மீள்­நி­கழாமை தொடர்பில் தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றது.

நீண்­ட­காலம் யுத்தம் நடைபெற்ற நாட்டில் இனங்­களை ஒன்­றி­ணைப்­பது என்­பது இல­கு­வான விட­ய­மல்ல. அவை நிதா­ன­மாக முன்­னெ­டுக்­கப்­ப­ட ­வேண்டும். அந்­த­வ­கையில் கடந்த சனிக்­கி­ழமை வடக்கில் ஜனா­தி­ப­திக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­பட்ட ஆர்ப்­பாட்­டத்தை ஏற்­றுக்­கொள்­ளவே முடி­யாது. அது கவலைக்­கு­ரிய விட­ய­மாகும். தமிழ் சமூ­கத்தில் அடை­யாள அர­சியல் செய்­யப்­ப­டு­வதே தற்­போ­தைய பிரச்­சி­னை­க­ளுக்கு கார­ண­மாகும். மாறாக வடக்கில் சமூக நல மற்றும் வர்க்க அர­சியல் செய்­யப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். தமிழ் அர­சியல் சமூகம் இது­வரை சமூக நல மற்றும் வர்க்க அர­சியல் செய்­யாமல் அடை­யாள அர­சி­ய­லையே செய்து கொண்­டி­ருக்­கின்­றது.

கடந்த காலங்­களில் காணி விடு­விப்பு தொடர்பில் பாரி­ய­ளவில் குரல் கொடுத்து வந்­தனர். தற்­போது காணிகள் மிக வேகமாக விடு­விக்­கப்­பட்டு வரு­கின்­றன. ஆனால் கடந்த வரு­டத்தில் இந்த காணிப் பிரச்­சி­னையே மிகப் பெரிய பிரச்­சி­னை­யாக இருந்­தது. அது­மட்­டு­மின்றி எப்­போது மயி­லிட்டி துறை­முகம் விடு­விக்­கப்­படும் என கேட்டுக் கொண்டே இருந்­தனர். தற்­போது மயி­லிட்­டித்­து­றை­முகம் விடு­விக்­கப்­பட்­டுள்­ளது. அதே­போன்று தொடர்ந்து காணிகள் விடு­விக்­கப்­படும். இவ்­வாறு நிலை­மைகள் முன்­னேறும். அதனை தவிர்த்து வடக்கு அர­சி­யல்­வா­திகள் செய்யும் இந்த வேலைகள் கவ­லைக்­கு­ரி­ய­வை­யாகும்.

அங்கு சில­ருக்கு பாரா­ளு­மன்றம் செல்­வ­த­ற்­கான ஒரு வழியை உரு­வாக்கிக் கொள்­வதே தேவைப்­ப­டு­கி­றது. மாறாக தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்க்கும் நோக்கம் அங்கு இல்லை. பிரச்­சி­னைகள் அனைத்து இடங்­க­ளிலும் இருக்­கின்­றன. அந்த பிரச்­சி­னை­களை பயன்­ப­டுத்தி தமது தனிப்­பட்ட தேவை­களை நிறை­வேற்ற முற்­ப­டு­வது முறை­யல்ல. அது தெற்­கிலும் உள்­ளது. வடக்­கிலும் உள்­ளது. நீண்­ட­காலப் பிரச்­சி­னை­யொன்றை தீர்க்­கும்­போது தூர நோக்கு அவ­சி­ய­மா­கி­றது.

 

கேள்வி: படிப்­ப­டி­யாக நல்­லி­ணக்­கத்தை முன்­னெ­டுப்­ப­தாக கூறு­கின்­றீர்கள். இந்த விட­யத்தில் அவ­ச­ரப்­பட முடி­யாது என்­பது உங்கள் கருத்­தாக உள்­ளது. யுத்தம் முடி­வ­டைந்து எட்டு வரு­டங்கள் கடந்து விட்­டன. பாதிக்­கப்­பட்ட மக்கள் வீதி­க­ளில் உள்­ளனர். எனவே பாதிக்­கப்­பட்ட மக்கள் தரப்­பி­லி­ருந்து இந்த விட­யத்தை நீங்கள் பார்க்­கின்­றீர்­களா?

 

பதில்: அவ்­வாறு பார்க்­கும்­போது பிரச்­சி­னை­யொன்று உள்­ளது என்­பதை ஏற்­கிறோம். அவ்­வாறு எந்தப் பிரச்­சி­னையும் இல்லை என்­பதை நான் கூற­வில்லை. என்னைப் பொறுத்­த­வ­ரையில் இதற்­கான செயற்­பாட்டு ரீதி­யான அர­சியல் தலை­யீ­டு­களை வடக்கு அர­சி­யல்­வா­திகள் செய்­வ­தில்லை என்­பதை தெளிவாக கூறு­கிறேன். மயி­லிட்டித் துறைமுகத்தை பெற்றுக் கொடுக்­கு­மாறு வடக்கு அர­சி­யல்­வா­திகள் ஆர்ப்­பாட்டம் செய்­தனர். ஆனால் நாங்கள் இங்­கி­ருந்து அதற்­காக அழுத்தம் பிர­யோ­கித்தோம். இங்கு தீர்வை நோக்கிப் பய­ணிப்­பது அவ­சி­ய­மா­கி­றது. ஆர்ப்­பாட்டம் செய்­யக்­கூ­டாது என்று நான் கூற­வ­ர­வில்லை. ஆனால் தீர்வை நோக்கிப் பய­ணிக்க வேண்டும் என்­பது எனது வாத­மாகும். எந்­த­வொரு கட்­டத்­திலும் இதற்­கான முயற்­சியை வடக்கு அர­சி­யல்­வா­திகள் முன்­னெ­டுப்­ப­தாக தெரி­ய­வில்லை. இந்தப் பிரச்­சி­னையை வைத்துக்கொண்­டி­ருக்­கவே அவர்கள் எதிர்­பார்க்­கின்­றனர்.

 

கேள்வி:வடக்கு முத­ல­மைச்­சரின் கருத்­துக்கள் தெற்கில் கடும் விமர்­ச­னத்­துக்கு உட்­ப­டு­கின்­றதே?

 

பதில்: அன்று விக்­னேஸ்­வரன் வட­மா­காண சபை முத­ல­மைச்­ச­ரா­கி­ய­போது நான் மிகவும் மகிழ்ச்­சி­ய­டைந்தேன். நீண்­ட­கால பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்கு அவர் சிறந்த கார­ணி­யாக இருப்பார் என எதிர்­பார்த்தோம். ஆனால் அவர் இன்று பாரிய இன­வாத குகைக்குள் சிக்­கி­யுள்ளார். நாங்கள் தெற்கு மக்­களை ஒரு இணக்­கப்­பாட்­டிற்கு கொண்டு வர முயற்­சிக்­கின்றோம். அவ்­வாறு சிங்கள் மக்கள் மத்­தியில் கட்­டி­யெ­ழுப்­பப்­பட்டு வந்த நம்­பிக்­கையும் தற்­போது சிதை­வ­டைந்து வரு­கி­றது. இதுதான் கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும். இங்கு நாம் மாகாண சபை குறித்து பேசும்­போது ஒரு­சில விட­யங்­களை ஆராய வேண்­டி­யுள்­ளது. அதா­வது தமிழ் மக்­களின் சுய­நிர்­ணய உரிமை என்றால் என்ன? நாங்கள் சுய­நிர்­ணய உரி­மையை ஏற்றுக்கொள்­கிறோம். சுய­நிர்­ணய உரிமை என்­பது தமிழ் மக்­களின் அர­சியல் சமத்­துவம் மற்றும் அர­சியல் சுதந்­தி­ரத்தை குறிக்­கின்­றது. எனவே முன்­வைக்­கப்­படும் தீர்­வா­னது இந்த சுய­நிர்­ணய உரி­மையை உறு­திப்­ப­டுத்­து­வ­தாக அமைய வேண்டும். மாகாண சபை முறை­மை­யினை எடுத்து பார்க்­கும்­போது அது எத்­தனை வீதம் இந்த சுய­நிர்­ணய உரி­மையை உறு­திப்­ப­டுத்­து­கி­ன்­றது என்­பதை பார்க்க வேண்டும். அதி­லுள்ள ஏற்­பா­டு­களில் குறை­பா­டுகள் இருக்­கலாம். முதலில் நாம் கஷ்­டப்­பட்டு பெற்றுக் கொண்ட மாகாண சபை முறை­மையை பாது­காத்துக் கொள்வோம். ஆனால் வட மாகாண சபை இந்த மாகாண சபை முறை­மையை பாது­காத்துக் கொள்ள முயற்­சிப்­ப­தாக தெரி­ய­வில்லை. மாகாண சபை முறைமையை வெள்ளை யானை என தெற்­கிலும் கூறு­கின்­றனர். அதனை நிரூ­பிக்கும் வகையில் வடக்கின் செயற்­பா­டுகள் உள்­ளன. அது கவ­லைக்­கு­ரி­யது.

 

கேள்வி:உங்­களின் இந்த எடு­கோளை நீங்கள் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­டனும் ஒப்­பி­டு­கின்­றீர்­களா?

 

பதில்: இல்லை, நான் வடக்கு மாகாண சபை அர­சி­யல்­வா­திகள் குறித்து பேசு­கிறேன். அதி­காரப் பகிர்வு என்­பது செயற்­பாட்டு ரீதி­யா­னது என்ற விட­யத்தை நாங்கள் தெற்­கிற்கும் நிரூ­பிக்க வேண்­டி­யி­ருக்­கின்­றது. நாங்கள் அதி­காரப் பகிர்­வுக்கு சார்­பாக நிற்­கிறோம். ஆனால் அதற்கு வட மாகாண சபை­யி­லி­ருந்து எமக்கு எந்த ஒத்­து­ழைப்பும் கிடைப்­ப­தில்லை. வடக்கு மாகாண சபை­யா­னது தெற்கில் இன­வா­தத்தை உற்­பத்தி செய்­கி­றது. தெற்கு இன­வா­திகள் வடக்கில் இன­வா­தத்தை உற்­பத்தி செய்­கின்­றனர். எனவே அழி­வுக்கு இரண்டு தரப்­பி­னரும் பொறுப்­புக்­கூற வேண்டும்.

 

கேள்வி: பல்­வேறு அர­சியல் ரீதி­யான விமர்­ச­னங்­க­ளுக்கு மத்­தியில் தீர்வைப் பெறு­வ­தற்­காக சம்­பந்தன் விட்டுக் கொடுப்­புடன் செயற்­ப­டு­கிறார். அதனை எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள்?

 

பதில்: அது ஒரு முக்­கி­ய­மான விடயம். சம்­பந்­தனின் கரங்­களை எம்மால் பலப்­ப­டுத்த முடி­யா­விடின் 70 வரு­டங்­களின் பின்னர் எமக்கு கிடைத்த இந்த பொன்­னான வாய்ப்பை பயன்­ப­டுத்த முடி­யாமல் போய்­விடும். மாவை சேனா­தி­ராஜா, சுமந்­திரன் உள்­ளிட்ட பலரும் தூர நோக்­குடன் இணைந்து செயற்­ப­டு­கின்­றனர். அதா­வது சிக்­கலை உணர்ந்து செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றனர். அவர்கள் தெற்கு அர­சி­யல்­வா­தி­களை விட சிறந்த நோக்­கத்­துடன் செயற்­ப­டு­கின்­றனர் என்று கூறலாம். இந்த விட்டுக் கொடுப்பை இந்த பொது­வான நோக்­கத்தை தெற்கு ஏற்றுக்கொள்ள வேண்டும். தெற்கு சம்­பந்தன் உள்­ளிட்­ட­வர்­களை பலப்­ப­டுத்­தா­விடின் வடக்கு இன­வா­திகள் அவர்­களை விரட்­டி­வி­டு­வார்கள். அது தற்­போது படிப்­ப­டி­யாக இடம்­பெ­று­வதை காண்­கிறோம். ஐக்­கிய இலங்­கையை விரும்­பு­கின்ற எங்­களைப் போன்­ற­வர்­க­ளுக்­குத்தான் சம்­பந்தன் போன்ற தலை­வர்­களின் அருமை தெரியும். சம்­பந்தன் ஒரு சுவி­ஷே­ச­மான தலைவர்.

கேள்வி: வடக்கு மாகாண சபையை பலப்­ப­டுத்தும் செயற்­பாட்டில் அர­சி­யல்­வா­திகள் ஈடு­ப­ட­வில்லை என குற்றம் சாட்­டு­கின்­றீர்கள். ஆனால் மத்­திய அர­சாங்­கத்­தினால் மாகாண சபை­க­ளுக்­கு­ரிய முக்­கிய அதி­கா­ரங்கள் இது­வரை கொடுக்­கப்­ப­ட­வில்­லையே?

 

பதில்: இருக்­கின்ற அதி­கா­ரங்­களை பயன்­ப­டுத்த சொல்­லுங்கள். நான் இந்த வட மாகாண சபையின் செயற்­பாடு தொடர்பில் ஒரு அறிக்கை தயா­ரித்தேன். வடக்கு முத­ல­மைச்­ச­ருக்கும் செய­லா­ள­ருக்­கு­மி­டையில் முறுகல் ஏற்­பட்­ட­போது நான் அங்கு சென்று ஒரு அறிக்கை தயா­ரித்தேன். அந்த அறிக்­கையை நான் விக்­னேஸ்­வ­ர­னுக்கும் கொடுத்தேன். முன்­னைய அர­சாங்­கத்­துக்கும் கொடுத்தேன். அதில் தற்­போது இருக்­கின்ற அதி­கா­ரங்­களில் செய்ய முடி­யு­மான பணிகள் தொடர்­பாக சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றோம். மாகாண சபைக்கு நிதி­யொ­துக்­கப்­படும் போது முதலில் மக்கள் தொகை மற்றும் இறு­தி­யாக வறுமை நிலை என்ற கார­ணிகள் கவ­னத்திற் கொள்­ளப்­படும். மக்கள் தொகையை பார்க்­கும்­போது மேல் மாகா­ணத்­துக்குதான் அதிக நிதி­யொ­துக்­கப்டும். வறுமை என்­பது இறுதிக் கார­ணி­யாக இருப்­பதால் வடக்கு போன்ற மாகாண சபை­க­ளுக்கு நிதி குறை­வா­கவே கிடைக்கும். இதனை நிதி ஆணைக்­குழு மற்றும் ஜனா­தி­ப­தியை சந்­தித்து வடக்கு மாகாண சபையை மாற்­றி­ய­மைக்­கலாம். அதனை அவர்கள் செய்­யா­ம­லேயே இருக்­கின்­றார்கள்.

ஒத்­தி­சைவு பட்­டியல் மூலம் ஒரு சட்­டத்தை இயற்றி மருத்­துவ ஆய்­வு­கூட பரி­சோ­த­கர்­க­ளுக்­கான பயிற்­சியை வடக்கு மாகாண சபை செய்­யலாம். இது தொடர்­பாக ஜனா­தி­ப­தி­யுடன் பேச்சு நடத்­தினால் அவர் அதனை செய்­து­கொ­டுப்பார். ஆனால் வடக்கு மாகாண சபை அதனை செய்­ய­வில்லை. ஓய்­வு­பெற்ற உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ர­ச­ருக்கு இவை தெரி­யாதா? இவை எமது அறிக்­கையில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன.

வடக்கு மாகாண சபையின் வரு­மானம் எவ்­வ­ளவு என்­பது இது­வரை மதிப்­பி­டப்­ப­ட­வில்லை. அவ்­வாறு பல பணி­களை செய்­யலாம். இருக்­கின்ற அதி­கா­ரங்­களை கொண்டு எத­னையும் செய்­யாத இவர்கள் அதி­கா­ரங்­களை கேட்­கின்­றனர். இன்று வடக்கில் மீண்டும் குல­வாதம் அபி­வி­ருத்­தியில் சிக்­கல்­களை செய்ய முயற்­சிக்­கின்­றது. 21 ஆம் நூற்­றாண்டில் இவை ஏற்­பு­டை­யதல்ல. வடக்கு அர­சி­ய­லுக்கு நோக்கம் ஒன்று இல்லை. பழைய பாடல்­க­ளையே பாடி­வ­ரு­கின்­றனர்.

தலை­வர்கள் என்­ப­வர்கள் மக்­க­ளுக்கு அன்பு செலுத்­த­வேண்டும். எதிர்­காலம் குறித்து சிந்­திக்­க­வேண்டும். செயற்­பாட்டு ரீதி­யாக செயற்­ப­ட­வேண்டும். என்­னதான் செய்­தாலும் அர­சாங்­கத்­துடன் யுத்தம் செய்து வெற்­றி­பெற முடி­யாது. பிர­பா­க­ர­னை­விட சிறந்த யுத்த தள­பதி இல்லை. அவரே தோற்­க­டிக்­கப்­பட்­டு­விட்டார். இதனை நான் கூறி­யதும் தமிழ் மக்கள் கவ­லைப்­ப­டு­வார்கள். ஆனால் இதுதான் உண்­மை­யாகும். யதார்த்­தத்தை ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும்.

21 ஆம் நூற்­றாண்டில் தேசிய அர­சாங்­கங்கள் பல­மாக உள்­ளன. அர­சாங்­கங்கள் ஏனைய அர­சாங்­கங்­க­ளுக்கு உதவி செய்யும். இது கழகம் போன்று செயற்­ப­டு­கின்­றது. இலங்கை பிள­வு­பட இந்­தியா இட­ம­ளிக்­காது. அதே­போன்று ஏனைய நாடு­களும் இட­ம­ளிக்­காது. தமிழ் மக்­க­ளுக்கு தனி­நாடு இல்லை என்­பது எமக்கு கவ­லைதான். அது உங்­களின் சர்­வ­தேச தலை­வர்­களின் தவ­றாகும். தற்­போது அதனை செய்ய முடி­யாது. எனவே இரண்டு இனங்­களும் சமா­தானமாக ஒன்­றித்துப் போவதே மேலா­ன­தாகும்.

 

கேள்வி: சம்­பந்­தனின் போக்கு அவ்­வா­று­தானே உள்­ளது?

பதில்:ஆம், சம்­பந்­தனின் போக்கு அவ்­வா­றுதான் உள்­ளது. எனக்கு அவரை பிடிக்கும். செயற்­பாட்டு தலை­வ­ராக அவர் இருக்­கின்றார்.

கேள்வி: அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்தில் ஒரு­மித்த நாடு என்ற விடயம் வந்­துள்­ளது. அதனை எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள்?

பதில்: நான் சொற்­பி­ர­யோ­கங்­களை எதிர்க்­கின்றேன். இதனை செய்த யாராக இருந்­தாலும் அவர்கள் இந்தத் துறையில் ஆழ­மான தெளிவின்றி இதனை செய்­துள்­ளனர் என்றே கூற­வேண்டும். ஞான­மற்ற ஒரு செயற்­பாட்டை முன்­னெ­டுத்­துள்­ளனர். அதி­காரப் பகிர்வு என்று வரும்­போது கட்­ட­மைப்பு மற்றும் அவற்­றுக்­கான பணிகள் ஒன்­றுக்­கொன்று தொடர்­பு­ப­டு­கின்­றன. சில கட்­ட­மைப்­புகள் கொள்­கையில் ஒற்­றை­யாட்­சி­யா­கவும் செயற்­பாட்டில் சமஷ்­டி­யா­கவும் இருக்கும். இந்­தி­யா­விலும் தென்­னா­பி­ரிக்­கா­விலும் காணப்­படும் முறை­மைகள் கட்­ட­மைப்பு ரீதியில் சமஷ்­டி­யாக இருந்­தாலும் செயற்­பாட்டு ரீதியில் ஒற்­றை­யாட்­சி­யா­கவே உள்­ளன. ஜப்பான் மற்றும் நோர்வே நாடு­களை எடுத்தால் கட்­ட­மைப்பில் ஒற்­றை­யாட்­சி­யா­கவும் செயற்­பாட்டில் சமஷ்­டி­யா­கவும் உள்­ளன.

சிங்­கள சமூகம் பிரி­வி­னைக்கு பயம். எனவே சிங்­கள சமூ­கத்தின் நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்­ப ­வேண்டும். தற்­போது மாகாண சபை கட்­ட­மைப்பு போது­மா­னது என்­பதே எனது நிலைப்­பா­டாகும். மாகாண சபை செயற்­பாட்டில் சிக்­கல்கள் உள்­ளன. ஒத்­தி­சைவு பட்­டி­யலில் உள்ள விட­யங்­களை குறைக்­கலாம். அவுஸ்­தி­ரே­லி­யா­வி­லி­ருந்து உதா­ர­ணங்­களை எடுக்­கலாம். ஆளுநரின் அதிகாரங்களை குறைக்கலாம். உதாரணமாக முதலமைச்சர் நிதியத்தை உருவாக்க இடமளிக்கவேண்டும். ஆளுநர் நிதியத்தை நீக்கலாம்.

காணி அதிகாரங்கள் விடயத்தில் காணி ஆணைக்குழுவை கொண்டு அதிகாரங்களை கொடுக்கலாம். ஐந்து வருடங்கள் இவ்வாறு செய்துபார்ப்போம். கட்டம் கட்டமாக செய்யலாம். சமூக பரிணாமம் என்பது இதுதான். நான் கூறுவது தமிழ் மக்களுக்கு பிடிக்காது.

 

கேள்வி:அப்படியாயின் ஒருமித்த நாடு என்ற பரிந்துரை?

பதில்:என்ன நடக்கப்போகின்றது என்று தெரியவில்லை. இரண்டு பக்கத்தையும் ஏமாற்ற பார்க்கின்றனர். எவ்வாறு இதனை ஏற்றனர் என்று தெரியவில்லை. தற்போது ஒற்றையாட்சி என்பது ஏக்கிய என்பதாகும். ஒருமித்த என்பது ஐக்கியம் என்பதாகும். நான் அதற்கு விருப்பம். ஆனால் பெரும்பான்மை மக்கள் ஏற்கமாட்டார்கள். நீதிமன்றத்துக்கு சென்றதும் இது தள்ளுபடியாகும். சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. இது எவ்வாறு சாத்தியம்? செய்தவரையே கேட்கவேண்டும். ஒற்றையாட்சி முறைமைக்குள் உச்சபட்ச அதிகாரப் பகிர்வுக்கு செல்லவேண்டும். அதனை தவிர்த்து தற்போது செய்துள்ள காரணத்தினால் எதுவும் நடக்காமல் போய்விடும். மக்கள் விரும்பமாட்டார்கள். ஒற்றையாட்சியின் கீழ் அதியுச்ச அதிகாரப் பகிர்வே முக்கியமானது.

நான் அதிகாரப் பகிர்வுக்கு சார்பானவன். இதனால் கடுமையான அனுபவங்கள் எனக்கு உள்ளன. தமிழ் இளைஞர்களுக்காக நீதிமன்றத்தில் வாதாடியுள்ளேன். எனவே தமிழ் தரப்பின் தவறுகளை சுட்டிக்காட்ட எங்களுக்கு உரிமை உள்ளது. நாம் எப்படியாவது தீர்வை முன்வைப்போம். அதிகாரப் பகிர்வுக்கு செல்வோம். வடக்கு மிதவாத தலைவர்களுக்காக இதனை செய்யவேண்டும்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-10-21#page-4

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.