Jump to content

ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரம்: தெஹிவளை பகுதியிலேயே ஐந்து பேரை கடத்தினோம்


Recommended Posts

ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரம்: தெஹிவளை பகுதியிலேயே ஐந்து பேரை கடத்தினோம்

 

முதலாம், இரண்டாம் சந்தேக நபர்களின் கீழ் சேவையாற்றிய மூவர் சி.ஐ.டி.க்கு வாக்குமூலம் 

(எம்.எப்.எம்.பஸீர்)

தெஹிவளை பகுதியில் வைத்தே கடந்த 2008.09.17 அன்று ஐந்து பேரை தாம் உள்ளிட்டோரே கடத்தியதா கவும், லெப்டினன்ட் கொமாண்டர் ஹெட்டி ஆராச்சி யின் தலைமையிலேயே அந்த நடவடிக்கை இடம்பெற்ற தாகவும் கடற்படை வீரர்கள் இருவர் குற்றப் புலனாய் வுப் பிரிவுக்கு வாக்கு மூலம் அளித்துள்ளனர்.  

அத்துடன் இவ்வாறு கடத்தப்பட்டோரை கன்சைட் நிலத்தடி இரகசிய வதை முகாமின் பொறுப்பாளராக அப் போது இருந்த லெப்டினன்ட் கொமாண்டர் தரத்தினை உடைய தற்போது கொமாண்டராக பதவி உயர்த்தப் பட்டுள்ள சுமித் ரணசிங்கவிடம் ஒப்படைத்ததாகவும் அவர்கள் அவ்வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளனர்.  

இதனைவிட கடத்தப்பட்ட பலர் குறித்த கன்சைட் இரகசிய வதை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தொடர்பிலும் மற்றொரு கடற்படை வீரர் சி.ஐ.டி. விசேட விசாரணையாளர் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா தலைமையிலான அகுழுவினரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா நேற்று கோட்டை நீதிவானுக்கு அறிவித்து அறிக்கை சமர்பித்தார். 

இதனைவிட விசாரணைக்கு தேவையான பல இரகசிய ஆவணங்களுட்டவற்றை கடற்படை தொடர்ந்து குற்றப் புலனயவுப் பிரிவுக்கு வழங்க மறுத்துவருவதாக விசாரணை அதிகாரி நிசாந்த சில்வா சுட்டிக்காட்டியதையடுத்து, குற்றவியல் சட்டத்தின் 124 ஆவது அத்தியாயத்துக்கு அமைவாக அந்த அத்தனை ஆவணங்களையும் சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்க நீதிவான் லங்கா ஜயரத்ன கடற்படை தளபதிக்கு கட்டளையிட்டார்.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு நேற்று கோட்டை நீதிவான் லங்க அஜயரத்ன முன்னிலையில் மீளவும் விசாரணைக்கு வந்தது.

இதன்போதே விசாரணை அதிகாரியான பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வாவின் கோரிக்கையை ஏற்று இந்த கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அத்துடன் இந்த விவகாரத்தில் தற்போது கைது செய்யப்படுவதற்காக தேடப்ப்ட்டு வரும் கடற்படையின் லெப்டினன்ட் கொமாண்டர் ஹெட்டி ஆரச்சியைக் கைது செய்ய பகிரங்க பிடியாணையும் நீதிம்னறினால் நேற்று பிறப்பிக்கப்பட்டது.

முன்னாள் கடற்­படை தள­பதி, வசந்த கரண்­ணா­கொட தனது பாது­க­ப்பு உத்­தி­யோ­கத்­த­ராக இருந்த லெப்­டினன்ட் கொமாண்டர் சம்பத் முன­சிங்­க­வுக்கு எதி­ராக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் செய்த முறைப்­பாட்­டுக்கு அமை­வாக குற்றப் புல­னாய்வுப் பிரிவு முன்­னெ­டுத்த மேல­திக விசா­ர­ணை­க­ளி­லேயே இந்த கடத்தல் விவ­காரம் அம்­ப­லத்­துக்கு வந்­ததிருந்தது.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோனின் உத்­தர­வுக்கு அமை­வாக குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி சென­வி­ரட்­னவின் ஆலோ­ச­னைக்கு அமைய புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் நாக­ஹ­முல்­லவின் வழி­காட்­டலின் கீழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சானி அபேசேகரவின் நேரடி கட்டுப்பாட்டில் புல­னாய்வு பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிஸாந்த டீ சில்வா தலை­மையில் முன்­னெ­டுக்­கப்­படும் இரு­வேறு விசா­ர­ணை­களில் இந்த பிர­தான கடத்­தல்கள் தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன.

கொழும்பு, கொட்­டாஞ்­சேனை, தெஹி­வளை, வத்­தளை மற்றும் கட்­டு­நா­யக்க உள்­ளிட்ட பல பிர­தே­சங்­களில் பல்­வேறு உத்­தி­களை கையாண்டு இந்த கடத்­தல்கள் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக தெஹி­வ­ளையில் 2008.09.17 அன்று பெர்­னாண்டோ மாவத்­தையில் உள்ள அலி ஹாஜியார் அன்வர் என்­ப­வ­ரது வீட்டில் வைத்து அவரும் ரஜீவ நாக­நாதன், பிரதீப் விஸ்­வ­நாதன், தில­கேஸ்­வரன் ராம­லிங்கம், மொஹம்மட் திலான், மொஹம்மட் சாஜித் ஆகிய ஐந்து மாண­வர்­களும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர். இத­னை­விட கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த கஸ்­தூரி ஆரச்­சி­லாகே ஜோன் ரீட், அரிப்பு பிர­தே­சத்தைச் சேர்ந்த அமலன் லியோன் மற்றும் ரொஷான் லியோன், கொட்­டாஞ்­சே­னையை சேர்ந்த அன்­டனி கஸ்­தூரி ஆராச்சி, திரு­கோ­ண­ம­லையை சேர்ந்த தியாக­ராஜா கஜன் உள்­ளிட்­டோரும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

இவ்வாறு கடத்தப்பட்ட அனைவரும் திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள இரகசிய வதை முகாமான கன்சைட் எனும் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையை குற்றப் புலனாய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இந்த விடயம் சர்வதேச அளவில் அவதானிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், சிறப்பு புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளராக கடமையாற்றியிருந்த லெப்டினன்ட் கொமாண்டர் சம்பத் முனசிங்க, கன்சைட் நிலத்தடி இரகசிய வதை முகாமின் பொறுப்பாளராக அப்போது இருந்த லெப்டினன் கொமாண்டர் தரத்தினை உடைய தற்போது கொமான்டர் ராக பதவி உயர்த்தப்பட்டுள்ள சுமித் ரணசிங்க, கடற்படை சிப்பாய் லக்ஷ்மன் உதயகுமார, நலின் பிரசன்ன விக்ரமசூரிய, தம்மிக தர்மதாஸ , கித்சிரி மற்றும் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராகவும் கடற்படை ஊடகப் பேச்சாளராகவும் அப்போது பதவி வகித்த கொமாண்டர் டி.கே.பி. தஸநாயக்க ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சம்பத் முனசிங்க பிணையில் உள்ள நிலையில் ஏனையோர் தொடர்ந்து விளக்கமறியலில் இருந்து வருகின்றனர்.

நேற்றைய விசாரணைகள் ஆரம்பமான போது சந்தேக நபர்களில் தஸாநாயக்க தவிர ஏனையோர் மன்றில் ஆஜர்செய்யப்பட்டனர்.

இதன்போது மன்றில் ஆஜராகியிருந்த குற்றப் புலனயவுப் பிரிவின் விசாரணை அதிகாரி நிசாந்த சில்வா, மேலதிக விசாரணை அறிக்கை ஊடாக மன்றுக்கு விசாரணை நிலைமையை தெளிவுபடுத்தினார்.

கனம் நீதிவான் அவர்களே, கடற்படையிடம் விசாரணைகளுக்காக நாம் கோரியிருந்த ஆவணங்கள் எதுவும் எமக்கு இன்னும் கிடைக்கவில்லை. குற்றப் புலனயவுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கையொப்பத்துடன் இந்த கோரிக்கைகள் விடுக்கப்பட்டும் இதுவரை பதிலில்லை. அதனால் இந்த விசாரணைகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலவுகிறது. அதனால் அந்த ஆவணங்களை எமக்கு ஒப்படைக்க கடற்படை தளபதிக்கு கட்டளையிடுமாறு கோருகின்றோம்.

இதனைவிட, திருகோணமலை கடற்படை முகாமுக்கு சென்று, ஏற்கனவே நீதிமன்றுக்கு அறிவித்ததன் பிரகாரம் நாம் விசாரணைகளை நடத்தினோம். இதன்போது கன்சைட் எனும் நிலத்தடி வதை கூடங்களையும் நாம் மேற்பார்வை செய்து புகைப்படங்களும் எடுத்துள்ளோம். இதன்போது நாம் 19 கடற்படையினரிடம் வாக்கு மூலம் பதிவு செய்தோம். இவர்கள் முதலாம் இரண்டாம் சந்தேக நபர்களின் கீழ் சேவையாற்றியவர்களாப்வர். 2 ஆம் சந்தேக நபரின் கீழ் சேவையாற்றிய தர்ஷன எனும் கடற்படை வீரர் வழங்கிய வாக்கு மூலத்தில் கடத்தப்பட்டவர்கள் கன்சைட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், இரவு நேரத்தில் தான் அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனைவிட முதலாம் சந்தேக நபரின் கீழ் சேவையாற்றிய சந்ரகுமார மற்றும் சுசந்த எனும் இரு கடற்படை வீரர்கள் வழங்கிய வாக்கு மூலத்தில், 2008.09.17 அன்று தெஹிவளையில் வைத்து ஐந்து பேரை தாங்கள் கடத்தியதாக குறிப்பிட்டனர். லெப்டினன்ட் கொமாண்டர் ஹெட்டி ஆராச்சியின் கீழ் இந்த கடத்தல்கள் இடம்பெற்றதாகவும் அதன்பின்னர் அவர்கள் இரண்டாவது சந்தேக நபரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர்கள் வாக்கு மூலத்தில் வெளிப்படுத்தினர்.

 இதனைவிட, அமலன் லியோன், ரொஷான் லியோன் மற்றும் அலி அன்வர் ஹாஜியார் ஆகியோர் கோட்டையில் உள்ள பிட்டு பம்பு எனும் இடத்தில் இரகசிய சிறைக் கூடத்தில் தடுத்து வைக்கப்ப்ட்டு பின்னர் அவர்களும் இரண்டாம் சந்தேக நபரிடம் கையளிக்கப்பட்டதாகவும் அந்த அவர்கள் வககு மூலத்தில் தெரிவித்துள்ளனர்.

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எந்த பயங்கரவாத செயற்பாடுகளுடனும் தொடர்பு அற்றவர்கள். இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் 16 நிறுவனக்களிடம் நாம் இது தொடர்பில் அறிக்கை கோரிய நிலையில், அதில் 15 நிறுவங்கள் இவர்களுக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என உறுதி செய்துள்ளன. கடற்படை மட்டும் இன்னும் அது தொடர்பிலான அறிக்கையை தரவில்லை.

இவர்கள் தடுத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கன்சைட் சிறை, வர்த்தமானியூடாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறையல்ல. அது ஒரு வதைக் கூடம் என்பதை அங்கு சென்று பார்க்கும் போது நாம் தெரிந்துகொண்டோம்.

 இதனைவிட நாம் கடற்படையிடம் கோரிய ஒரு அறிக்கை தான், கப்பம் கோரல், கடத்தல் தொடர்பில் சந்தேக நபர்கள் சிலரை 8 நாட்கள் தடுத்து வைத்து அப்போது கடற்படை புலனாய்வு பிரதானி ஆனத்த குருகே நடாத்திய விசாரணையின் அறிக்கை. இந்த அறிக்கை தற்போது திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது. அதனை எமக்கு வழங்க உத்தரவிட வேண்டும். என கோரினார்.

 இதனையடுத்தே ஆவணங்கள் அறிக்கைகளை சி.ஐ.டி.க்கு கையளிக்க நீதிவான் கடற்படை தளபதிக்கு கட்டளையிட்டு வழக்கை எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதிக்கு ஒத்தி வைத்தார். அதுவரை சந்தேக நபர்களில் முதலாமவர் தவிர ஏனைய அறுவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-10-21#page-1

Link to comment
Share on other sites

தஸ­நா­யக்க தொடர்ந்து வெலி­சறை கடற்­படை வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெறு­வது ஏன்?

 

அறிக்கை சமர்­ப்பிக்குமாறு சிறைச்­சாலை பிரதான வைத்­திய அத்­தி­யட்­ச­கருக்கு நீதி­மன்றம் உத்­த­ரவு

(எம்.எப்.எம்.பஸீர்)

பதி­னொரு பேர் காணாமல் ஆக்­கப்­பட்­டமை தொடர்பில் கைது செய்­யப்பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்பட்­டுள்ள முன்னாள் கடற்­படை ஊடகப் பேச்­சாளர் கொமாண்டர் டி.கே.பி. தஸ­நா­யக்க, தொடர்ச்­சி­யாக வெலி­சறை கடற்­படை வைத்­தி­ய­சா­லையில் தங்­கியி­ருந்து சிகிச்சை பெறு­வ­தற்­கான காரணம் உள்­ளிட்ட விரி­வான அறிக்­கையை மன்­றுக்கு சமர்­ப்பிக்­கு­மாறு கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன சிறைச்­சாலை வைத்­தி­ய­சா­லையின் அத்­தி­யட்­ச­கருக்கு நேற்று உத்­த­ரவு பிறப்­பித்தார்.

கடத்தல் மற்றும் காணாமல் ஆக்­கப்­பட்ட விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு வந்த போது, 7 ஆவது சந்­தேகநப­ரான டி.கே.பி.தஸ­நா­யக்க மன்றில் ஆஜர்செய்­யப்­பட்­டி­ருக்­க­வில்லை. அவர் அவ்­வாறு ஆஜர்செய்­யப்­ப­டா­மைக்­கான காரணம் அறிக்கை ஊடாக நீதி­மன்றுக்கு சமர்­ப்பிக்­கப்­ப­ட­வில்லை.

இது தொடர்பில் சிறைச்­சாலை அதி­கா­ரி­களை கடு­மை­யாக எச்­ச­ரித்த நீதிவான் அடுத்த தவ­ணையின் போது தஸ­நா­யக்­கவை கண்­டிப்­பாக மன்றில் ஆஜர்செய்ய வேண்டும் எனவும் நேற்று மன்றில் ஆஜ­ராக்­கா­மைக்­கான கார­ணத்­தையும் பிரத்­தி­யேக அறிக்கை ஊடாக மன்­றுக்கு அறி­விக்க வேண்டும் எனவும் உத்­தரவிட்டார்.

இவ் வழக்கின்போது விசா­ரணை அதி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த சில்­வா, பாதிக்­கப்பட்ட தரப்பு சட்­டத்­த­ரணி அச்­சலா சென­வி­ரத்­னவும் தஸ­நா­யக்க வெலி­சறை கடற்­படை வைத்­தி­ய­சா­லையில் தொடர்ந்தும் தங்­கி­யி­ருப்­பது தொடர்பில் ஆட்­சே­பம் தெரி­வித்து நீதி­வானின் கவ­னத்­துக்கு கொண்டு வந்­தனர்.

இதன்­போது கருத்து தெரி­வித்த நீதி வான், தஸ­நா­யக்­க­வுக்கு எந்த நோயும் இல்லை என சட்ட வைத்­திய அதி­கா­ரியின் அறிக்கை உள்ள நிலையில், அவர் தொடர்ச்­சி­யாக கடற்­படை வைத்­தி­ய­சா­லையில் தங்­க­வைக்­கப்பட்­டி­ருப்­பது தொடர்பில் தமக்கும் தெளி­வில்­லாமல் இருப்­ப­தாக கூறினார். இதுதொடர்பில் முடி­வொன்­றினை எடுப்­ப­தாக அறிவித்த நீதிவான், தஸநாயக்க கடற்படை வைத்தியசாலையில் தங்கவைக்கப்பட்டிருப்பதற்கான காரணம் அடங்கிய அறிக்கையை மன்றுக்கு சமர்ப் பிக்க சிறைச்சாலை வைத்தியசாலை அத்தி யட்சகருக்கு உத்தரவிட்டார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-10-21#page-2

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.