Jump to content

யாழ்.வைத்தியசாலை படுகொலையின் 30 ஆம் ஆண்டு நினைவு தினம்


Recommended Posts

யாழ்.வைத்தியசாலை படுகொலையின் 30 ஆம் ஆண்டு நினைவு தினம்

 

யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற படுகொலையின் 30 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21, ஆம் மற்றும் 22 ஆம் திகதிகளில் வைத்தியசாலை வளாகத்துக்குள் நுழைந்த இந்திய படையினரால் 21 பேர்  சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

இந்த நினைவேந்தல் நிகழ்வுகளே இன்று இடம்பெற்றுள்ளன.

யாழ்.வைத்தியசாலை படுகொலையின் 29 ஆம் ஆண்டு நினைவு தினம்

https://news.ibctamil.com/ta/internal-affairs/29th-of-the-massacre-of-the-teaching-hospital

Link to comment
Share on other sites

மறக்க முடியாத யாழ்ப்பாண மருத்துவமனைப் படுகொலைகள்

 
மறக்க முடியாத யாழ்ப்பாண  மருத்துவமனைப் படுகொலைகள்
32
SHARES
 

1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி கைச்­சாத்­தி­டப்­பட்ட இந்­திய– இலங்கை ஒப்­பந்­தத்­தின் பின்­னர், இந்­திய அரசு இலங்கை இரா­ணு­வத்­தி­ட­ம் இருந்து ஈழத் தமி­ழர்­க­ளைப் பாது­காப்­ப­தற்­காக ஆயி­ரக் கணக்­கான இந்­திய இரா­ணு­வத்­தி­னரை அமை­திப்­ப­டை­யாக தமி­ழர்­க­ளின் தாய­கப் பிர­தே­ச­மான வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு அனுப்பி வைத்­தி­ருந்­தது.

தமிழ் மக்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் இந்­திய அமை­தி­காக்­கும் படை­யி­னரை ஆக்­கி­ர­மிப்­புப் படை­யி­ன­ரா­கவே கண்­டு­ கொண்­டனர்.

இரண்­டரை மாதம் கழிந்த நிலை­யில் விடு­த­லைப் புலி­க­ளு ­டன் ‘ஒப்­ப­ரே­சன் பவன்’ என்ற இரா­ணுவ நட­வ­டிக்­கையை அந்த ஆண்டு ஒக்­ரோ­பர் மாதம் 10ஆம் திக­தி­யன்று, மேற்கொண்டு பெரும் போரை நடத்­தி­ இருந்­த­னர்.

இந்­திய இரா­ணு­வத்­தி­ன­ரின் கொடிய செயற்­பா­டு­கள் ஈழத் தமி­ழி­னத்தை அழித்­துத் துவம்­சம் செய்த மகா­கொ­டூர வர­லா­றாக ஆகி, இன்று முப்­பது ஆண்­டு­களை நிறைவு செய்­தி­ருக்­கின்­றது.

இந்­திய அமை­திப்­ப­டை­யா­னது 1990ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கையை விட்டு சொந்த நாட்­டுக்­குத் திரும்­பிச் செல்­லும் வ­ரை­யில் ஈழத் தமி­ழர்­கள் மீது புரிந்த தாக்­கு­தல்­கள் மனி­தா­பி­மா­ன­மற்ற, அவர்கள் வெட்­கித் தலை­கு­னிய வைக்­கும் அள­வுக்கு கொடூ­ர­மா­ன­வை­யாக அமைந்­தி­ருந்­தன.

ஈழத் தமி­ழர்­கள் மீதான படு­கொ­லை­கள் குறித்து
ஓய்­வு­பெற்ற இந்­திய  இரா­ணுவ அதி­காரி விமர்­சிப்பு

சில வரு­டங்­க­ளுக்கு முன்­னர் இந்­திய இரா­ணுவ புல­னாய்­வுப் பிரி­வின் முன்­னாள் தலை­மை­ய­தி­கா­ரி­யான கேணல் ஆர்.ஹரி­க­ரன், இந்­திய அர­சும் இரா­ணு­வத் தலை­மை­யும் ஈழத் தமி­ழர்­கள் மீதான படு­கொ­லைச் சம்­ப­வங்­க­ளில் பெரும் தவறு இழைத்­து­ விட்­ட­தா­கத் தெரி­வித்­தி­ருந்­தார்.

இலங்­கை­யில் இந்­திய அமை­தி­காக்­கும் படை­யி­னர் பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­பட்டு முப்­பது ஆண்­டு­க­ளுக்­குப் பின்­னர் தற்­போது இந்­தி­யப் படை­க­ளால் இழைக்­கப்­பட்ட அத்­து­மீ­றல்­கள் குறித்த நினை­வு­களை இரை­மீட்­டல் பொருத்­த­மா­னது.

இந்­தி­யப் படை­க­ளின் நட­வ­டிக்­கை­க­ளின் போது, பல அப்­பா­விப் பொது­மக்­கள் படு­கொலை செய்­யப்­பட்­ட­னர். யாழ்ப்­பாண போதனா மருத்­து­வ­ம­னை­யில் இடம்­பெற்ற படு­கொ­லை­கள், வல்­வெட்­டித்­து­றை­யில் இடம்­பெற்ற பதுங்­கித் தாக்­கு­த­லின்­போது பொது­மக்­கள் படு­கொலை செய்­யப்­பட்­டமை, கோண்­டா­வில் வடக்கு அன்­னங்­கை­யில் நடை­பெற்ற பொது­மக்­கள் மீதான படு­கொ­லைச் சம்­ப­வங்­கள் போன்­றவை மிக மோச­மான மனித உரிமை மீறல்­க­ளா­கும்.

இந்த மனித உரிமை மீறல்­கள் தொடர்­பில் உண்­மை­யான விசா­ரணை மேற்­கொண்டு குற்­ற­வா­ளி­க­ளுக்­குத் தண்­டனை வழங்­கு­வ­தில் இந்­திய அரசு தவ­றி­விட்­டது.

தற்­போது உள்­ள­து­போன்று 1987 –1989 காலப்­ப­கு­தி­யில் மனித உரிமை விவ­கா­ரம் என்­பது உல­கில் பெரிய அள­வா­கப் பேசப்­பட்ட விவ­கா­ர­மல்ல.

இதற்கு இந்­தி­யா­வும் விதி­வி­லக் கல்ல. மனித உரிமை மீறல் குற்­றச்­சாட்­டுக்­களை ஆராய்­வ­தற்­காக தற்­போது இந்­திய இரா­ணு­வத்­தில் பொறி­முறை ஒன்று உரு­ வாக்­கப்­பட்­டுள்­ளது என்­றும் கேணல் ஆர்.ஹரி­க­ரன் இந்­திய அமை­திப் படை­யி­ன­ரின் அத்­து­மீ­றல் சம்­ப­வங்­கள் குறித்து தெரி­வித்­தி­ருந்­தார்.

இந்­திய அமை­திப் படை­யி­னர் ஈழத்­தில் புரிந்த படு­கொ­லை­க­ளில் முக்கியமான ஒன்­றாக யாழ்ப் பா­ணம் போதனா மருத்­து­வ­
ம­னை­யில் 1987ஆம் ஆண்டு ஒக்­ரோ­பர் மாதம் 21ஆம் மற்றும் 22 ஆம் திக­தி­க­ளில் இடம்­பெற்ற படு­கொ­லை­க­ளைக் குறிப்­பி­ட­லாம்.

விடு­த­லைப் புலி­க­ளு­ட­னான போரை இந்­திய அமை­திப்­டை­யி­னர் மேற்­கொண்­டி­ருந்த வேளை­யில் அவர்­கள் புலி­க­ளது வெற்­றி­க­ர­மான தாக்­கு­தல்­க­ளில் பெரும் இழப்­புக்­க­ளைச் சந்­தித்­துக் கொண்­டி­ருந்­த­னர்.

மருத்­து­வ­ம­னை­யில் நிகழ்த்­தப்­பட்ட படு­கொ­லை­கள் 
போர்க்­குற்­றங்­களே

மருத்­து­வ­ம­னை­கள், ஆல­யங்­கள், பொது­மக்­கள் குடி­யி­ ருப்­புக் கள் மீது திட்­ட­மிட்டு நடத்­தப்­ப­டு­கின்ற தாக்­கு­தல்­கள், போர்க்­குற்­றங்­கள் என பன்­னாட்­டுச் சட்­டங்­கள் கூறு­கின்­றன.

இந்த வகை­யில் 1987 ஆம் ஆண்டு ஒக்­ரோ­பர் மாதம் 21ஆம் மற்றும் 22ஆம் திக­தி­க­ளில் யாழ்.போதனா மருத்­து­வ­ம­னை­யில் வைத்து இந்­திய அமை­திப்­ப­டை­யி­னர் நடத்­திய படு­கொ­லை­கள் மிகப் பெரிய போர்க்­குற்­ற­மா­கும்.

இந்­திய அர­சா­னது இந்­திய அமை­திப் படை­யி­னர் மேற்­கொண்ட போர்க் குற்­றங்­களை 30 ஆண்­டு­க­ளா­கி­யும் ஏற்­றுக் கொள்­ள­வில்லை.

தமிழ்த் தலை­வர்­கள் இன்­று­ வ­ரை­யில் இந்­திய அர­சி­டம் இந்­தி­யப் படை­யி­ன­ரது அந்­தப் படு­கொ­லை­கள் பற்றி மூச்­சு­விட்­ட ­தில்லை.

வரு­டா­வ­ரு­டம் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைச் சமூ­க­மா­னது, இந்­தப் படு­ கொ­லை­க­ளின் நினைவு நாளன்று குறித்த படு­கொ­லை­க­ளில் கொல்­லப்­பட்­டோரை நினைவு கூர்ந்து வரு­வ­து­டன், வெளி­யு­ல­கத்­துக்­கும் நினைவு நிகழ்வு மூலம் வெளிப்­ப­டுத்­தி­யும் வரு­கின்­றது.

1987ஆம் ஆண்டு ஒக்­ரோ­பர் மாதம் 21ஆம் திகதி பிற்­ப­கல் வேளை­யில் யாழ்.போதனா மருத்­து­வ­ம­னைக்­குள் இந்­திய சீக்­கிய மற்­றும் தமிழ் நாட்டு றெஜி­மன்ட் படை­யி­னர் பல நூற்­றுக்­க­ணக்­கில் உள்­நு­ழை­கின்­ற­னர்.

மருத்­து­வ­ம­னை­யில் உள்ள மருத்­து­வர் விடு­தி­கள், கீழ்ப்­ப­கு­தி ­யில் அமைந்­தி­ருந்த எக்ஸ்ரே கதிர் இயக்­கப்­ப­குதி, தாதிய உத்­தி­யோ­கத்­தர் அலு­வ­ல­கம், மேற்­பார்­வை­யா­ளர் அலு­வ­ல­கம் அரு­கி­லுள்ள பழைய ஆண்­கள் எலும்பு முறிவு விடுதி, பழைய ஒன்­ப­தாம் இலக்க விடுதி என்­ப­வற்றை இந்­தி­யப் படை­யி­னர் ஆக்­கி­ர­மித்­துக் கொண்டு அங்கு உயிர்ப் பாது­காப்­புத் தேடி அப்­ப­கு­தி­க­ளுக்­குள் தங்­கி­யி­ருந்த மருத்­து­வர்­கள், ஊழி­யர்­கள், நோயா­ளர்­கள் மீது ஈவு இரக்­க­மின்றி கண்­மூ­டித்­த­ன­மான துப்­பாக்­கிச் சூட்டைத் தொடர்ச்­சி­யாக மேற்­கொண்டு முப்­ப­துக்­கும் மேற்­பட்­ப­ட­வர்­க­ளின் உயிர்­க­ளைக் காவு­கொண்­டி­ருந்­த­னர்.

இந்­தி­யப் படை­யி­ன­ரது கோரத் தாண்­ட­வம்

குறிப்­பிட்ட பகுதி முழு­வ­தி­லும் இந்­தி­யப் படை­யி­ன­ரின் கோர­வெ­றித் தாண்­ட­வம் அரங்­கே­றிக் கொண்­டி­ருந்­தது. அன்­றி­ரவு வரை­யில் மருத்­து­வக் கலா­நிதி கே.பரி­மே­ல­ழ­கர், மருத்துவக் க­லா­நிதி கணே­ச­லிங்­கம், தலைமைத் தாதிய உத்­தி­யோ­கத்­தர் திரு­மதி பா.வடி­வேல், இரு மேற்­பார்­வை­யா­ளர்­கள் 18 பேர் உட்­பட 30 இற்­குட்­பட்­ட­வர்­கள் கொல்­லப்­பட்­டும், பலர் படு­கா­யங்­க­ளுக்­குள்­ளா­கி­யும் இருந்­த­னர்.

பல நோயா­ளர்­கள், பொது­மக்­கள் படு­கா­யங்­க­ளுக்­குள்­ளாகி உயி­ருக்­குப் போரா­டிக் கொண்­டி­ருந்­த­னர். இவர்­க­ளில் பலர் அந்த வேளை­யில் தேவைப்­பட்ட மருத்­துவ சிகிச்­சை­யின்றி உயி­ரி­ழந்த சம்­ப­வங்­க­ளு­முண்டு.

அன்­றி­ரவு நிசப்­த­மாக இருந்த மருத்­து­வ­ம­னை­யில் இந்­தி­யப் படை­யி­ன­ரின் வெறி அடங்­காது அவர்­கள் மம­தை­யு­டன் காணப்­பட்­டது மட்­டு­மல்­லா­மல், தமி­ழர்­க­ளைக் கொன்­றொ­ழித்த மகிழ்ச்­சி­யை­யும் கொண்­டா­டத் தவ­ற­வில்லை.

அடுத்த நாளான 22ஆம் திகதி காலை வேளை­யில் இந்­திய இரா­ணு­வத்­தி­னர் தமது இரண்­டாம் கட்ட மனித சங்­கா­ரத்தை நடத்தி முடித்­த­னர்.

குழந்­தை­கள் மருத்துவ நிபு­ண­ரான சிவ­பா­த­சுந்­த­ரம் மருத்­து­வ­ம­னைக்­குள் வந்­த­வு­டன் ஏனைய இரு பெண் தாதிய உத்­தி­யோ­கத்­தர்­கள் முதல்­நாள் நடை­பெற்ற சம்­ப­வங்­களை தெரி­வித்­த­தை­ய­டுத்து வெள்­ளைக் கொடி­க­ளைக் கையில் ஏந்­திப் பிடித்­த­வாறு இரா­ணு­வத்­தி­னர் நிலை­கொண்­டி­ருந்த பழைய ஒன்­ப­தாம் இலக்க விடு­திப் பகு­தியை நோக்­கிச் சென்று கொண்­டி­ருக்­கை­யில் இந்­தி­யப் படை­யைச் சேர்ந்த சிப்­பாய் ஒரு­வன் மருத்துவ நிபு­ணரை நோக்கி துப்­பாக்­கியை நீட்டி சுடு­வ­தற்குத் தயாரானான்.

தானொரு மருத்­து­வர் என உரத்­துக் கூறி­ய­வாறு கைகளை உயர்த்­தி­ய­வாறு குறித்த தாதிய உத்­தி­யோ­கத்­தர்­க­ளு­டன் முன்­னோக் கிச் சென்று கொண்­டி­ருக்­கை­யில் குறித்த இரா­ணு­வச் சிப்­பாய் ஈவு இரக்­க­மின்றி அவர்­க­ளைச் சுட்­டுக் கொன்­றான்.

தீபா­வ­ளிப் பண்­டிகை நாளன்று 
70 பேருக்­கும் மேற்­பட்­டோர் சாவு

ஒக்­ரோ­பர் 21 மற்­றும் 22 ஆம் நாள் சம்­ப­வங்­க­ளில் மருத்­து­வர்­கள், தாதி­யர்­கள், மேற்­பார்­வை­யா­ளர்­கள், சிற்­றூ­ழி­யர்­கள் 21பேர் உட்­பட 70 இற்­கும் மேற்­பட்­ட­வர்­களை இந்­தி­யப் படை­யி­னர் இந்து மக்­க­ளி­னது தீபா­வ­ளிப் பண்­டிகை நாளில் கொன்று குவித்­தி­ருந்­த­னர்.

இறந்­த­வர்­க­ளது உட­லங்­களை உற­வி­னர்­க­ளி­டம் வழங்­காது மருத்­து­வ­மனை வளா­கத்­துக்­குள் 22 ஆம் திக­தி­யன்று ஒன்­றா­கக் குவித்து தீயிட்டு எரித்தமையானது தமி­ழர்­களை பெரும் வேத­னை­ய­டை­யச் செய்­தி­ருந்­தது. ஈழத் தமி­ழர்­கள் மத்­தி­யில் இருக்­கின்ற அறி­ஞர்­கள், புல­மை­யா­ளர்­கள், கல்­வி­மான்­கள் போன்­றோரை அழிக் கவேண்­டும் என்ற இந்­தி­யப் படை­யி­ன­ரி­னது திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­காக அவர்­கள் முத­லில் தெரிவு செய்த இட­மாக யாழ். போதனா மருத்­து­வ­மனை அமைந்­தி­ருந்­தது.

இந்­தி­யப் படை­கள் தமி­ழி­னத்­தின் மீது­ போரை அறிவித்துக் கொண்டு பல நூற்­றுக்­க­ணக்­கான நோயா­ளர்­கள், உத்­தி­யோ­கத்­தர், பொது­மக்­கள் கூடி­யி­ருந்த, பிணி தீர்க்­கும் அளப்­ப­ரிய சேவை செய்து வந்த போதனா மருத்­து­வ­மனை வளா கத்துள் மேற்­கொண்ட படு­கொ­லை­யா­னது இந்­திய அர­சக்கு தலைக்­கு­னிவை ஏற்­ப­டுத்­திய கறை படிந்­த­தொரு நிகழ்­வா­கும்.

ஆங்­கி­லே­யப் படை­க­ளுக்கு பெரும் அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்­தி­யது இந்­தி­யா­வில் யூலி­யன்­வாலா படு­கொலை. அதே­போன்ற வியட் நா­மில் அமெ­ரிக்­கர்­க­ளுக்கு பெரும் அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்­தி­யது அவர்­கள் அங்கு மைலா­யில் செய்த படு­கொ­லைச் சம்­ப­வ­மா­கும்.

அது போன்று இந்­தி­யா­வுக்கு மிகப் பெரும் அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது வல்­வெட்­டித்­து­றை­யில் நடை­பெற்ற படு­கொலை என அப்­போ­தைய ஜன­தாக் கட்­சித் தலை­வர்­க­ளில் ஒரு­வ­ரான ஜோர்ஜ் பெர்­னாண்­டஸ் குறிப்பிட்டதுடன் அது இந்தியாவின் ஒரு மைலாய் படுகொலை என விமர்­சித்­தி­ருந்­தமை யும் கு றிப்­பி­டத்தக்­கது.

 

படு­கொ­லை­கள் குறித்து மௌனம் காத்த இந்­திய அரசு

 

யாழ்.போதனா மருத்­து­வ­மனைக் குள் இந்­தி­யப் படை­யி­ன­ரால் அரங்­கேற்­றப்­பட்ட படு­கொலை மிகப் பெரிய போர்க்­குற்­றம் எனத் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தும், இந்­திய அரசு அது பற்றி எந்­த­வித கருத்து வெளிப்­பாட்­டை­யும் தெரி­விக்­க­வில்லை.

ஒவ்­வொரு வரு­ட­மும் நினைவு கூரப்­ப­டு­கின்ற யாழ்­போ­தனா மருத்­து­வ­மனை படு­கொ­லைச் சம்­ப­வம் குறித்து காந்­தீ­யம் பற்றி வாய்­கி­ழி­யப் பேசு­கின்ற இந்­தி­யத் தரப்­புக்­கள் எது­வும் வாய்­தி­றந்­த­தில்லை.

குறித்த யாழ்.போதனா மருத்­து­வ­மனை படு­கொ­லையை மேற்­கொண்ட இந்­திய இரா­ணு­வத்­தி­ன­ரின் செயற்­பாட்டை இன்­று­வரை எந்­த­வொரு இந்­தி­யத் தரப்­பி­ன­ரும் கண்­டித்­த­தில்லை.

ஈழத் தமி­ழர்­க­ளின் போர்க்­கால வர­லாற்­றின் வரி­சை­யில் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் நடந்­தே­றிய படு­கொ­லை­கள் மனி­தா­பி­மா­னத்­திற்­கப்­பால், காந்­திய தேசத்­தி­னால் திட்­ட­மிட்டே நடத்­தப்­பட்­டது என்­ப­தில் எந்­தச் சந்­தே­க­மும் இல்லை.

இதை உறு­திப்­ப­டுத்­தும் வகை­யில் நினை­வ­ழி­யாத பெரும் நிகழ்வை வரு­டா­வ­ரு­டம் குறித்த தினத்­தன்று யாழ்.போதனா மருத்­து­வ­ம­னைச் சமூ­கம் நடத்தி, குறித்த படு­கொ­லைச் சம்­ப­வத்­தில் அநி­யா­ய­மா­கக் கொல்­லப்­பட்ட ஆத்­மாக்­க­ளது ஆன்ம ஈடேற்­றத்­துக்­காக நினை­வஞ்­சலி செலுத்தி வரு­வது இங்கு குறிப்­பிட்­டுக் காட்­டப்­பட வேண்­டிய ஒன்­றா­கும்.

6b00c_jaffnahospital87-2.jpg 

http://newuthayan.com/story/38970.html

Link to comment
Share on other sites

இந்திய இராணுவத்தின் படுகொலை : 30 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று

 
இந்திய இராணுவத்தின் படுகொலை : 30 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று
 
 

இந்திய இராணுவத்தினரால், யாழ் போதனா வைத்தியசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட உறவுகளின் 30ஆம் ஆண்டு நினைவுதினம் யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று நினைவுகூறப்பட்டது.

இதன்போது, மருத்துவப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி நினைவுச்சுடர் ஏற்றினார். தொடர்ந்து வைத்தியசாலை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் ஆகியோர் உயிரிழந்தவர்களின் திருவுருவப் படத்துக்கு மலர் மாலை அணிவித்து, தீபமேற்றி, மலரஞ்சலி செலுத்தினர்.

1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் முதலாம் திகதி இந்தியப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், வைத்தியசாலையில் கடமையாற்றிக் கொண்டிருந்த மூன்று வைத்தியர்கள், இரண்டு தாதிமார்கள், ஊழியர்கள் மற்றும் நோயாளார் உட்பட மொத்தம் 68 பேர் கொல்லப்பட்டனர்.

20171021_102121.jpg20171021_1017120.jpg625.0.560.320.160.600.053.800.700.160.9020171021_101647.jpg

 

http://newuthayan.com/story/39059.html

Link to comment
Share on other sites

சவச்சாலையாகிய யாழ் மருத்துவமனை!!! 30 வருடங்கள் கடந்து போயின…

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

FB_IMG_1508563503388-800x528.jpg

1987 ஒக்டோபர் 21, ஈழத் தமிழ் மக்களின் படுகொலை வரலாற்றில் மறக்க முடியாத ஒருநாள். இந்தியப் படைகள் யாழ் மருத்துவமனையில் படுகொலை புரிந்த நாள். இந்திய அமைதிப் படைகள் மேற்கொண்ட படுகொலைகளில் ஒன்றான யாழ் போதனா வைத்தியசாலைப் படுகொலைகள் அல்லது யாழ் வைத்தியசாலைப் படுகொலைகள் நிகழ்ந்து 30 வருடங்கள் கடந்துவிட்டன.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்தியப் படைகள் அமைதிகாக்கும் படைகள் என்ற பெயரில் இலங்கைக்கு வந்தனர். அமைதியை ஏற்படுத்தவே இந்தியப் படைகள் வருகின்றன என்று ஈழத் தமிழர்களும் நம்பியிருந்தனர். தமிழ் மக்கள்மீது தமது தீர்வை திணிப்பதன் ஊடாக தமது அரசியல் பிராந்திய நலன்களை இந்தியா சாதிக்க நினைத்தது. இந்திய இலங்கை உடன்படிக்கையின்படி ஏற்படுத்தப்பட்ட 13ஆவது அரசியல் திருத்தம் தமிழ் மக்கள் தரப்பால் புறக்கணிக்கப்பட்டது.

இந்த நிலையில் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் இலங்கை இந்திய ஒப்பந்ததத்தை பாதுகாக்கவும் இந்தியப் படைகள் தமிழ் விடுதலைப் புலிப் போராளிகளுக்கு எதிராக யுத்தத்தை தொடங்கினர். 1987 ஒக்டோபர் மாதம் இந்தியப் படைகள் யுத்தம் தொடங்கிய மாதம். விடுதலைப் புலிகள் இயக்கத்திடமிருந்து யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற யுத்தம் செய்வதாக இந்தியா கூறியது. இதன்படி இலங்கை அரசுகள் தமிழ் மக்கள்மீது எவ்வாறு இனப்படுகொலைகளை புரிந்ததோ அவ்வாறே இந்திய அரசும் ஈழத் தமிழர்கள்மீது இனப் படுகொலைகளைப் புரிந்தது. அத்தகைய இனப்படுகொலைகளில் ஒன்றே யாழ் போதனா வைத்தியசாலை இனப்படுகொலையும்.

யாழ்ப்பாண நகரில் அமைந்துள்ள யாழ் வைத்தியசாலை வடக்கிழக்கு மக்களின் வைத்திய தேவையை நிவர்த்தி செய்யும் மையமாகும். இந்தியப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் போர் மூண்ட அன்றைய நாட்களில் மக்கள் வீடுகளுக்குள்ளும் பதுங்குகுழிகளுக்குள்ளும் பதுங்கி இருந்தனர். போரில் காயமடைந்த மக்கள் வைத்தியசாலைக்கு மருத்துவத்திற்காக கொண்டு வரப்பட்டனர். அத்துடன் இந்தியப் படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் பிணங்களும் வைத்தியசாலையில் நிறைந்து கிடந்தன. 1987 அக்டோபர் 21 தீபாவளி நாள். விடுமுறை நாளன்று அனர்த்த காலத்தில் மருத்துசேவைக்கு வந்த வைத்திய சேவையாளர்களே இந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்.

யாழ் கோட்டையை ஆக்கிரமித்திருந்த இந்தியப் படைகள், அன்றைய தினம் காலையிலேயே அங்கிருந்து பீரங்கிக் தாக்குதல்களை நடத்தத் தொடங்கினர். அத்துடன் ஹெலிகப்டர்களும் தாக்குதலில் ஈடுபட்டன. யாழ் நகரமே போர்க் கோலம் பூண்டிருந்தது. இந்தியப் படைகளின் ஏவுகணை ஒன்று காலை வேளையில் வெளிநோயளர் பிரிவில் வந்து வீழ்ந்து வெடித்தது. அத்துடன் ஏழாம் கூடத்தில் விழுந்த எறிகணையினால் ஏழுபேர் கொல்லப்பட்டார்கள். அத்துடன் மருத்துவமனைமீது துப்பாக்கிச் கூடுகளும் நடாத்தப்பட்டன.

மருத்துவமனைக்குள் விடுதலைப் புலிகள் நடமாடுவதாக சொல்லிக் கொண்ட இந்தியப் படைகள் மருத்துவமனைக்குள் நுழைந்து எல்லோரையும் உள்ளே செல்லுமாறு கூறினர். மேற்பார்வையாளர் அலுவலகம் முதல் மருத்துவனை வளாகமெங்கும் சராமாரியாக துப்பாக்கிச் கூடு நடாத்தினர். கண்டவர்களை எல்லாம் சுட்டு வீழ்த்தினர். ஒரு இந்தியப் படை சிப்பாய் நோயாளி ஒருவரை நோக்கி கிறினைட்டை கழற்றி எறிந்தார். அதில் பலர் கொல்லப்பட்டனர்.

மருத்துவமனையில் இருந்த சில நோயாளிகள் இறந்தவர்களைப் போல தரையில் வீழ்ந்து கிடந்தமையால் உயிர் தப்பினர். இரவு முழுவதும் துப்பாக்கிச் சூடுகளும் எறிகணை வீச்சும் மருத்துவமனையை அதிரச் செய்தது. மறுநாள் 22 ஆம் திகதி காலை டொக்டர் சிவபாதசுந்தரம் என்பவருடன் மூன்று தாதிமார் கைகளை உயர்த்தியபடி நாம் மருத்துவர்கள் தாதியர்கள் நாம் சரணடைகிறோம் என்று சொல்லிக் கொண்டு மருத்துவமனை வாசலால் வந்தனர்.

அவர்கள்மீதும் இந்தியப் படைகள் சுப்பாக்கிச் சூடுகளை நடத்தினர். சிவபாதசுந்தரம் டொக்டர் அவ்விடத்தில் கொல்லப்பட்டார். இதைப்போலவே டொக்டர் கணேசரத்தினமும் வாசலில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இத் தாக்குதல்களில் மருத்துவர்கள், தாதியர்கள், பணியாளர்கள் மற்றும் நோயாளிகள் என 70 பேர் வரையில் கொன்று வீசப்பட்டனர். விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் நடந்த சண்டையின் இடையே சிக்கிய மக்களே உயிரிழந்தனர் என்று இந்திய இராணுவத்துக்குப் பொறுப்பான லெப். செனரல் டெப்பிந்தர் சிங் தமது படுகொலை நடவடிக்கையை மூடி மறைத்தார்.

காலம் காலமாக ஈழத் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த இலங்கை அரசே இந்தப் படுகொலையை இனப்படுகொலை என்று கூறியது. மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் என 2008இல் இலங்கை அரசு கூறியது.(ஆனால் அதே ஆண்டிலும் தனது இனப்படுகொலையை இலங்கை அரசு நடத்திக்கொண்டிருந்தது) விடுதலைப் புலிகள் இயக்கமும் மனித உரிமைக் குழுக்களும் இதனை இனப்படுகொலை என்றே குறிப்பிடுகின்றன. இந்தியப் படைகள் ஈழத்தில் செய்த ஏனைய படுகொலைகள், பாலியல் வன்புணர்வுகள் என்பனவும் மானுடத்திற்கு எதிரான குற்றங்களாகவே நடந்தேறியுள்ளன.

ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால், உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுப்பது, கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது, இனவேறுபாட்டைக் காரணங்காட்டி குழந்தைப் பிறப்பை தடுப்பது, குழந்தைகளை இடம் பெயரச் செய்வது, வேறு எவ்வகையிலாயினும் இனவேறுபாடு காட்டுவது போன்றவை குற்றமுறை செயல்களாக, இனப்படுகொலைக் குற்றங்களாக சர்வதேச தடைச்சட்டத்தின்படிக் குற்றச்செயலாகும் என என 1948 இல் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் சபை தடைசெய்யப்பட்ட, தண்டனைக்குரிய மற்றும் குற்றமுறை செயலாக ஐ நா சட்ட விதி 2ஐ எழுதியது. இதன்படி இது ஒரு இனப்படுகொலைச் செயலாகும்.

துப்பாக்கிளும் போரும் தவிர்க்கப்படவேண்டிய இடங்களில் வைத்திய சாலை முதன்மையானது. வைத்தியசாலை வளாகத்தில் இதற்கான அறிவிப்பு பலகைகள் மற்றும் ஆயுதத் தடைக் குறியிடுகள் வைக்கப்பட்டிருக்கும். உயிரை காக்க வேண்டிய வைத்தியசாலையை உயிரை அழித்தனர் இந்தியப் படைகள். அமைதி காப்பதற்காக வந்ததாக கூறிய படைகள் உயிர்களை பாதுகாக்க வேண்டிய அமைதி வலயமாக மதிக்க வேண்டிய வைத்தியசாலையை போர்க்களமாக்கினர்.

வைத்தியசாலைகளை போர்த் தவிர்ப்பு வலயமாக மதிக்க வேண்டிய போர் தர்மத்தை ஈழத்தில் மீறியவர்களில் இந்தியப் படைகளும் அடங்குகின்றனர். இவர்களுக்கு முன்னதாக தமிழீழ விடுதலை இயக்கம் என்ற ரெலோ அமைப்பினர் தமது உட்கட்சி முரண்பாட்டில் தாஸ் உட்பட்ட போராளிகளை வைத்தியசாலை வளாகத்தில் சுட்டுக்கொன்றனர். பின்னர் இலங்கை அரசுகள் வைத்தியசாலைகள்மீது பல தாக்குதல்களை நடாத்தி மக்களை இனப்படுகொலை செய்தது. ஈழத் தமிழ் இனப்படுகொலை விடயத்தில் இந்தியா இலங்கையை ஊக்குவித்தது. அதைப்போலவே வைத்தியசாலைகள்மீது தாக்குதலை நடத்தும் விடயத்திலும் இந்தியாவே இலங்கைப் படைகளுக்கு முன்னோடி.

சந்திரிக்கா அரசாங்கத்தில் கிளிநொச்சி வைத்தியசாலை மீது நடாத்தப்பட்ட விமானத் தாக்குதலை எவரும் மறக்க முடியாது. பிறந்து சில நிமிடங்களேயான பச்சிளங் குழந்தைகள் கூட மண்ணில் புதைந்தனர். குழந்தையை பெற்றெடுக்க வைத்தியசாலை வந்த தாய்மாரும் குழந்தைகளும் ஒன்றாக விமானக் குண்டுகளினால் மண்ணில் புதைக்கப்பட்டனர். நூற்றுக் கணக்கானவர்கள் கொல்லப்பட்ட அந்த தாக்குதலை எவரலாறும் மறக்க இயலாது. ஈழத்தில் வைத்தியசாலைமீது நடந்த மற்றொரு இனப்படுகொலை தாக்குதல் அது.

இதைப்போல மகிந்த ராஜபக்சவின் காலத்தில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைமீதும் கொடும் எறிகணைத் தாக்குதல் நடாத்தப்பட்டு பலர் கொல்லப்பட்டார்கள். ஒரு நேர்காணலின் அப்போது இராணுவத்தளபதியாக இருந்த சரத்பொன்சேகா புதுக்குடியிருப்பு வைத்தியசாலைமீது ஒரே ஒரு எறிகணைதான் எறிந்ததாக சொன்னார். எத்தனை அதிர்ச்சிகரமான ஒப்புதல்? போரால் காயமடைந்தவர்களும் இறந்தவர்களும் பரவியிருந்த புதுக்குடியிருப்பு வைத்தியசாலையை இலங்கைப் படைகள் பிண வைத்தியசாலையாக மாற்றினர்.

மிகவும் மனித உரிமை மீறல் கொண்ட மனி குலத்திற்கு விரோதமான இப் படுகொலைகளுக்காக இதுவரையில் இந்தியா மன்னிப்பு கேட்கவில்லை. அத்துடன் இப் படுகொலைகளை தாம் புரிந்ததாக ஒப்புக்கொள்ளவுமில்லை.. ஈழத் தமிழ் மக்கள் இலங்கை அரசின் இனப்படுகொலை நடவடிக்கைகளினால் அழிக்கப்பட்டமைக்கான நீதி கோரும் காலத்தில், இந்திய அரசு ஈழத்தில் மேற்கொண்ட படுகொலை நடவடிக்கைகளுக்கு என்ன நீதி கிடைத்தது என்பதையும் மதிப்பிடுவது இன்றைய நாட்களில் அவசியமானது.
.
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

http://globaltamilnews.net/archives/46238

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவினால் படுகொலைசெய்யப்பட்ட  எங்கள் உறவுகளுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.