Jump to content

ஐ.நா.வின் விசேட அறிக்கையாளருடன் அமைச்சர்களான ஹக்கீம்,ரிஷாட் சந்திப்பு


Recommended Posts

ஐ.நா.வின் விசேட அறிக்கையாளருடன் அமைச்சர்களான ஹக்கீம்,ரிஷாட் சந்திப்பு

15-54ff11b780c58222974e33b8de122706a32af392.jpg

 

முஸ்லிம்களின் அபிலாஷைகளடங்கிய அறிக்கையும் கையளிப்பு

(ஆர்.ராம்,எம்.எம்.மின்ஹாஜ்)

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள உண்மை,நீதி,இழப்பீடு மற்றும் மீள்நிக ழாமை உத்தரவாதங்கள் பற்றிய ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பப்லோ டீ கிரீபினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிர ஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான  குழுவினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலை  வரும் அமைச்சருமான  ரிஷாட் பதியூர்தீன் தலைமையிலான குழுவினரும் சந்தித்துள்ளனர். 

அத்துடன் குறித்த இரு தரப்பினரும் முஸ்லிம்களின் அபிலாஷைகளையும், பிரச்சினைகளையும் தெளிவு படுத்தும் வகையிலான இரு அறிக்கைகளையும் தனித்தனியாக ஐ.நா விசேட அறிக்கையாளரிடத்தில் கையளித்தனர்.

கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் வதிவிடப்பிரதிநிதியின் அலுவலத்தில் நேற்று வெ ள்ளிக்கிழமை நடைபெற்ற இச்சந்திப்பு குறித்து மேலும் தெரியவருவதாவது,

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அக்கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்

இதன்போது ஐ.நா. சபையின் நிலைமாறு கால நீதி தொடர்பான அறிக்கையில் இலங்கை முஸ்லிம்களுடைய கரிசனைகள், வகிபாகம் என்பன தொடர்பில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் மு.கா.தலைவர் சுட்டிக்காட்டி எடுத்துரைத்தார். யுத்தத்தின் போது நிகழ்ந்த அசம்பாவிதங்கள், வடகிழக்கில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள், இனவாதிகளால் மேற்கொள்ளப்படும் முஸ்லிம் விரோத செயல்பாடுகள் ஆகியன தொடர்பிலும் வரிவாக எடுத்துக்கூறியுள்ளார்.

அதனையடுத்து முஸ்லிம்களின் அபிலாஷைகள், முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பிலான அறிக்கையொன்றையும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஐ.நா. சபையின் விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீபிடம் கையளித்தார்.

இதேவேளை இச்சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கரஸின் தலைவர் ரிஷாட் பதியூர்தீன் தலைமையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் கட்சியின் தவிசாளர், பிரதி அமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான நவவி, அப்துல்லாஹ் மஹ்ரூப், கட்சியின் அரசியல் விவகார சட்டப் பணிப்பாளர் ருஸ்தி ஹபீப் ஆகியோர் பங்கேற்றனர்.

இதன்போது முஸ்லிம்கள் தற்போது இந்த அரசின் நடவடிக்கைகள் தொடர்பில் மிகவும் கவலையடைந்து வருகின்றனர். மீள்குடியேற்றம், காணிப் பிரச்சினை, யுத்த காலத்தில் நடந்த இழப்புகளுக்கான நஷ்டஈடு வழங்கப்படாமை போன்ற இன்னோரன்ன பிரச்சினைகளை இந்த சமூகம் நீண்டகாலமாக எதிர்நோக்கி வருகின்ற போதும்,இன்னும் அவைதீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டே வருகின்றது.

அரசாங்கம் மேற்கொண்டு வரும்தேர்தல் முறை மாற்றம் மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் உட்பட இன்னும் பல மறுசீரமைப்புக்களில்,முஸ்லிம்சமூகத்தின் அபிலாஷைகளும், கோரிக்கைகளும் உள்வாங்கப்படாத நிலையே இருக்கின்றது.

எந்தவொரு அரசியல் மாற்றத்திலும் இந்நாட்டில் வாழும் சிறுபான்மை இனமான முஸ்லிம் சமூகமும் புறக்கணிக்கப்படாது கருத்திற்கெடுக்கப்பட வேண்டும் என்பதை சர்வதேச சமூகம், உறுதிப்படுத்த வேண்டும். ஐ.நா.வும் இந்த விடயங்களில் கரிசனை காட்ட வேண்டும்.

சகல நடவடிக்கைகளிலும் முஸ்லிம் சமூகமும் மூன்றாம் தரப்பாகப் பங்கேற்று, நாட்டின் முஸ்லிம் சனத்தொகை விகிதாசாரத்துக்கு ஏற்ப அவர்களது பங்கினை பெறுவதற்கு உரியநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

எந்தவொரு காலத்திலும் முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் பிரிவினையையோ, பிளவினையோ விரும்பாது, அனைத்து சமூகங்களுடனும் ஐக்கியமாகவும், ஒருமைப்பாடாகவும் வாழ்ந்து வருகின்றது.

எனினும்,அண்மைய காலங்களில் இனவாதப் பேச்சுக்களும், செயற்பாடுகளும் முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து மேற்கொள்ளப்படுவதுடன், அவர்கள கொச்சைப்படுத்தப்பட்டும், தூஷிக்கப்பட்டும் வருகின்றனர்.

எனவே,இந்த நாட்டில் வெறுப்பூட்டும் பேச்சுக்களையும், செயல்பாடுகளையும் நிறுத்துவதற்கு ஐ.நா. காத்திரமான பணிகளை ஆற்றி, இன ஐக்கியம் வலுப்பெற உதவ வேண்டும் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்தச் சந்திப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனையடுத்து அமைச்சர் ரிஷாட்டும் முஸ்லிம் மக்களின் நிலைமைகளை தெளி வுபடுத்தும் விரிவான அறிக்கையொன்றையும் ஐ.நா.விசேட அறிக்கையாளரிடத்தில் கையித்திருந்தார். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-10-21

Link to comment
Share on other sites

மைத்­திரி ஆட்­சி­யி­லும் முஸ்­லிம்­கள் மீதான இன­வெ­றுப்பு பரப்­புரை

 
மைத்­திரி ஆட்­சி­யி­லும்  முஸ்­லிம்­கள் மீதான  இன­வெ­றுப்பு பரப்­புரை
 
 

முஸ்­லிம் சமூ­கத்தைக் குறி­வைத்து அண்­மைக் காலங்­க­ளில் இன­வா­தப் பேச்­சுக்­கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­து­டன், அவர்­கள் கொச்­சைப்­ப­டுத்­தப்­பட்டு தூசிக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர்.

இந்­தச் செயற்­பா­டு­களை நிறுத்­து­வ­தற்கு ஐ.நா. காத்­தி­ர­மான பணி­களை முன்­னெ­டுத்து இன ஐக்­கி­யம் வலுப்­பெற உத­வ­வேண்­டும் இவ்­வாறு அமைச்­சர் ரிசாத் பதி­யு­தீன், ஐ.நாவின் சிறப்பு அறிக்­கை­யா­ளர் பப்லோ கி­ரிப்­பி­டம் வேண்­டு­கோள் விடுத்­தார்.

இலங்­கைக்­குப் பய­ணம் மேற்­கொண்­டுள்ள ஐ.நா. சிறப்பு அறிக்­கை­யா­ளரை, சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ர­ஸின் தலை­வர் ரவூப் ஹக்­கீம், அகில இலங்கை மக்­கள் காங்­கி­ர­ஸின் தலை­வர் ரிசாத் பதி­யு­தீன் இரு­வ­ரும் தனித் தனி­யா­கச் சந்­தித்­துப் பேச்சு நடத்­தி­னர்.

முஸ்­லிம் சமூ­கத்­தின் வேண­வாக்­கள், பிரச்­சி­னை­க­ளைத் தெளி­வு­ப­டுத்­தும் வகை­யில் இரு­வ­ரும் தனித் தனி­யான அறிக்­கை­யை­யும் சமர்ப்­பித்­த­னர்.

ஐ.நா. சபை­யின் நிலை­மாறு கால நீதி தொடர்­பான அறிக்­கை­யில் இலங்கை முஸ்­லிம்­க­ளு­டைய கரி­ச­னை­கள், வகி­பா­கம் என்­பன தொடர்­பில் சேர்த்­துக் கொள்­ளப்­பட வேண்­டிய விட­யங்­கள் குறித்து ஹக்­கீம் சந்­திப்­பில் எடுத்­து­ரைத்­தார்.

போரின் போது முஸ்­லிம் சமூ­கத்­தின் மீது மேற்­கொள்­ளப்­பட்ட வன்­மு­றை­கள், வடக்கு – கிழக்கு காணி ஆக்­கி­ர­மிப்பு, இன­வா­தி­க­ளால் முஸ்­லிம்­களை வெறு­ப் பேற்­றும் பரப்­புரை உள்­ளிட்ட விட­யங்­க­ளை­யும் அவர் சுட்­டிக்­காட்­டி­ யுள்­ளார்.

அமைச்­சர் ரிசாத் பதி­யு­தீன் சந்­திப்­பின்­போது, முஸ்­லிம்­கள் இந்த அர­சின் நட­வ­டிக்­கை­கள் தொடர்­பில் கவ­லை­ய­டை­கின்­ற­னர். போர்க்­கால இழப்­பீ­டு­கள் வழங்­கப்­ப­ட­வில்லை.

முஸ்­லிம்­க­ளின் மீள்­கு­டி­ யேற்­றம் முழு­மை­ய­டை­ய­ வில்லை என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­தில் முஸ்­லிம் சமூ­கத்­தின் கோரிக்கை புறக்­க­ணிக்­கப்­ப­டு­வ­தாக அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்.

முஸ்­லிம்­க­ளின் சனத்­தொகை விகி­தா­சா­ரத்­துக்கு ஏற்ப அவர்­க­ளுக்கு உரிய இடம் எல்லா விட­யங்­க­ளி­லும் வழங்­கப்­பட வேண்­டும் என்று அவர் கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

http://newuthayan.com/story/39218.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.