Jump to content

பொறுப்புக்கூறல் விடயங்களை துரிதப் படுத்துவதற்கு ஜனாதிபதி இணக்கம்


Recommended Posts

பொறுப்புக்கூறல் விடயங்களை துரிதப் படுத்துவதற்கு ஜனாதிபதி இணக்கம்

05-ee86e16c44ad113a4f93982c07a5df54429681db.jpg

 

சம்பந்தனிடத்தில் ஐ.நா.அறிக்கையாளர் எடுத்துரைப்பு: அக்கறை தொடரும் எனவும் உறுதி

(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

பொறுப்புக்கூறல் விடயங்களை காலதமதமின்றி துரி தமாக முன்னெடுக்க வேண்டுமென்ற விடயத்திற்கு ஜனா திபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார் என்று ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பப்லோ டீ கிரீப் எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்ட  மைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் எடுத்துக் கூறியுள்ளதுடன் தமிழர் விடயத்தில் தமது அக்கறை தொடரும் எனவும் உறுதியளித்துள்ளார். 

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள உண்மை, நீதி, இழப் பீடு மற்றும் மீள்நிகழாமை உத்தரவாதங்கள் பற்றிய ஐக் கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பப்லோ டீ கிரீப் நேற்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தார்.

ஜயம்பதி, சுமந்திரனுடன் எம்.பிக்களுடன் சந்திப்பு

இதன்போது புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் செயற்பாட்டில் முக்கிய பங்களிப்புச் செய்கின்ற வழிநடத்தல் குழு உறுப்பினர்களான கலாநிதி.ஜயம்பதி விக்கிரமரட்ன மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகிய எம்.பிக்களுடன் குழு அறையில் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டார்.

இதன்போது புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகள், தற்போது வெளியாகியுள்ள இடைக்கால அறிக்கை, உபகுழுக்களின் அறிக்கைகள், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் முகங்கொடுக்கும் சவால்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாகவும் அரசியல் கட்சிகள் மற்றும் ஏனைய தரப்புக்களின் நிலைப்பாடுகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டதாக தெரியவருகின்றது.

எதிர்க்கட்சித்தலைவருடனான சந்திப்பு

இதனையடுத்து எதிர்க்கட்சித்தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பப்லோ டீ கிரீபுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றது.

இச்சந்திப்பு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவிக்கையில்,

இலங்கைக்கு வந்துள்ள ஐ.நா. அறிக்கையாளருக்கும் எனக்கும் இடையில் பிரத்தியேக சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போது புதிய அரசியல் சாசன உருவாக்கம் தொடர்பாகவும் தற்போது அந்த முயற்சியில் காணப்படுகின்ற நிலைமைகள் தொடர்பாகவும் குறிப்பிட்டேன்.

நிலைமாறு கால நீதிப்பொறிமுறையை அமுல்படுத்தல், மீள நிகழாமையை உறுதி செய்தல், காணாமல்போனவர்களுக்கான அலுவலகத்தை அமைக்கவேண்டியதன் அவசியம், காணாமல் போனவர்கள் தொடர்பான உண்மையை கண்டறிதல், பயங்கரவாத தடைச்சட்டத்தின் பாரதூரமான நிலைமை, அச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டியதன் அவசியம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக விரிவாக எடுத்துரைத்தேன்.

காணி விடுவிப்பு தொடர்பாக காணப்படும் தமதங்கள், மக்கள் மீள்குடியேற்றம், உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடுத்தப்படவேண்டியதன் அவசியம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் நான் எடுத்துரைத்தேன்.

மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அதில் காணப்படுகின்ற தாமதங்களையும் சுட்டிக்காட்டினேன்.

இந்த விடயங்களை உள்ளீர்த்துக் கொண்ட ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பப்லோ டீ கிரீப், நான் குறிப்பிட்ட விடயங்கள் அனைத்தையும் பற்றி தாம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும், நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னதாக அது தொடர்பில் தான் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி பல்வேறு விடயங்கள் குறித்து வெளிப்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அதுமட்டுமன்றி தமிழ் மக்களின் விடயங்களில் தங்களின் அக்கறை தொடர்ந்தும் நீடிக்கும் என உறுதிபடத் தெரிவித்த அவர் நான்(சம்பந்தன்), குறிப்பிட்ட வியடங்களில் காணப்படும் காலதமதங்கள் தொடர்பில் தான் (ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பப்லோ டீ கிரீப் ) ஜனாதிபதியைச் சந்தித்து கலந்துரையாடிய போது சுட்டிக்காட்டிய தருணத்தில் அந்த விடயங்களை துரிதமாக முன்னெடுப்பதற்கு அவர் இணங்கியுள்ளார் என்று ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பப்லோ டீ கிரீப் என்னிடத்தில் குறிப்பிட்டார் என்றார்.

சபாநயகருடன் சந்திப்பு

இதனையடுத்து ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பப்லோ டீ கிரீப்புக்கும் சபாநயகர் கரு ஜயசூரியவுக்கும் இடையிலான சந்திப்பொன்றும் பாராளுமன்றத்தில் உள்ள சபாநாயகர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது பாரர்ளுமன்ற ஜனநாயகம் உள்ளிட்ட நாட்டின் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியதாக தெரியவருகின்றது.

த.தே.கூவுடன் இன்று சந்திப்பு

இதேவேளை ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பப்லோ டீ கிரீப்புக்கும், பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான உத்தியோகபூர்வமான சந்திப்பு இன்று சனிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-10-21#page-1

Link to comment
Share on other sites

ஐ.நா விசேட நிபுணர் பப்லோ டி க்ரீப் – சம்பந்தன் சந்திப்பு

ஐ.நா விசேட நிபுணர் பப்லோ டி க்ரீப் – சம்பந்தன் சந்திப்பு

இலங்கை வந்துள்ள ஐ.நாவின் உண்மை, நீதி, நஷ்டஈடு, மற்றும் மீள் நிகழாமையை உறுதி செய்வதற்கான விசேட நிபுணர் பப்லோ டி க்ரீப் அவர்களுக்கும் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் அவர்களுக்கும் இடையில் இன்று கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர், மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் போன்ற விடயங்கள் தொடர்பில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை விசேட நிபுணரின் கவனத்திற்கு இரா. சம்பந்தன் அவர்கள் கொண்டு வந்தார்.
இக்கலந்துரையாடலில் காணி விடுவிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த இரா. சம்பந்தன் அவர்கள் “எமது மக்கள் தமது காணிகள் தொடர்பில் வெறும் உணர்ச்சிக்கும் அப்பாலான இணைப்பினை கொண்டுள்ளார்கள், இந்த மக்கள் சில பிரதேசங்களில் கடந்த 300 நாட்களுக்கும் அதிகமாக தமது காணிகளை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என தெரிவித்தார்.
மேலும் இவர்கள் மழையிலும் வெயிலிலுமாக பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தமது காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என இந்த போராட்டங்களில் மிகவும் தீர்மானமாக உள்ளார்கள் எனவும் தெரிவித்தார். மேலும், இந்த விடயமானது மக்களின் உணர்வுகளோடும் அவர்களது உரிமைகளோடும் சம்பந்தப்பட்ட விடயம் என்பதனை அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்திய இரா. சம்பந்தன் உண்மையான புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டுமெனில் இந்த யதார்த்தம் புரிந்துகொள்ளப்பட வேண்டும் எனவும், எனவே இந்த விடயங்கள் மேலும் தாமதமின்றி முடிவிற்கு கொண்டு வரப்படவேண்டும் எனவும் தெரிவித்தார்.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கருத்து தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர், “ஒரு தாய் தனது மகனை படையினரிடமோ அல்லது பொலிஸாரிடமோ கையளித்திருந்தால் அவருக்கு என்ன நடந்தது என்பதனை அறிந்து கொள்ளும் உரிமை உள்ளது அந்த உரிமையை மறுக்க முடியாது எனவும் வலியுறுத்தினார். காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் செயலாக்கம் தொடர்பில் காணப்படும் தாமதம் குறித்து தமது கரிசனையை வெளிப்படுத்திய இரா. சம்பந்தன் அவர்கள் இந்த அலுவலகம் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் நிறுவப்படவேண்டும் எனவும் தெரிவித்தார்.
அரசியல் கைதிகள் தொடர்பில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் அவர்கள், “இவர்கள் களவு செய்த காரணத்தினாலோ அல்லது தமது நன்மைக்காக சூறையாடிய காரணத்தினாலோ காவலில் இருக்கவில்லை. இந்த ஒவ்வொருவரினதும் வழக்குகள் அரசியல் பரிணாமத்தினை கொண்டுள்ளது. ஆகவே இவை அந்த அடிப்படையில் நோக்கப்பட்டு முடிவிற்கு கொண்டு வரப்படவேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் பயங்கரவாத தடைச்சட்டமானது மிக கேடானதும் இந்நாட்டு சட்ட புத்தகங்களில் இருந்து நீக்கப்பட வேண்டிய ஒன்றும் என அரசாங்கமானது ஒப்புக்கொண்டுள்ள போது, எந்த அடிப்படையில் அதே சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இவர்களை தொடர்ந்தும் சிறையில் வைத்திருக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.
இந்த விடயங்களில் தவறிழைக்க முடியாது என தெரிவித்த இரா. சம்பந்தன் அவர்கள் அவ்வாறு தவறிழைக்கின்ற பட்சத்தில் அது நல்லிணக்க படிமுறைகளிலே பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தும் எனவும் வலியுறுத்தினார். மேலும் ஒரு சிலர் நல்லிணக்க மற்றும் அரசியல் தீர்வு முயற்சிகளை குழப்புவதற்கு தயாராக உள்ள நிலையில் இந்த விடயங்கள் அவர்களுக்கு சாதகமாக இருப்பதனை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
இலங்கை மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை அரசு கொடுத்த வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றுவதனை ஐ.நா.உறுதி செய்யவேண்டும் என விசேட நிபுணரை வலியுறுத்திய இரா. சம்பந்தன் அவர்கள் இந்த வாக்குறுதிகள் இலங்கை நாட்டினதும் அதன் மக்களின் நன்மையினையும் கருத்திற்கொண்டு இலங்கை அரசாங்கத்தினால் தன்னார்வமாக கொடுக்கப்பட்டவை என்பதனை சுட்டிக்காட்டிய அதேவேளை அவற்றினை இலங்கை அரசு மதித்து நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் இவை வெறுமனே எழுத்துருவில் மாத்திரம் இருக்க கூடாது எனவும் தெரிவித்தார்.
மேலும் தனது விஜயத்தின் முடிவில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் தனது கருத்தினை தெரிவிக்கவுள்ளதாக கூறிய விசேட நிபுணர் இலங்கையில் நிலையான சமாதானத்தினை ஏற்படுத்தும் நோக்கிலும் அரசியல் தீர்வினை அடையும் வகையிலும் தனதும் ஐ.நாவினதும் தொடர்ச்சியான பங்களிப்பு இருக்கும் என்பதனையும் இச்சந்திப்பில் வலியுறுத்தினார். -(3)

http://www.samakalam.com/

Link to comment
Share on other sites

நிலை­யான சமா­தானம், தீர்­வுக்கு ஐ.நாவின் பங்­க­ளிப்பு தொடரும்

WEEKLYMAINCity1-04c9051befd0d3ff6cb3fa4ca0f6140105489d7d.jpg

 

 எதிர்க் கட்சித் தலை­வ­ரிடம் ஐ. நா. அறிக்­கை­யாளர் பப்லோ உறுதி
    (ஆர்.ராம்)

இலங்­கையில் நிலை­யான சமா­தா­னத்­தினை ஏற்­ப­டுத்தும் நோக்­கிலும் அர­சியல் தீர்­வினை அடையும் வகை­யிலும் தனதும் ஐ.நாவி­னதும் தொடர்ச்­சி­யான பங்­க­ளிப்பு இருக்கும் என ஐக்­கிய நாடு­களின் விசேட அறிக்­கை­யாளர் பப்லோ டீ கிரிப் எதிர்க் கட்­சித்­ த­லை­வரும் (௧௦ ஆம் பக்கம் பார்க்க)

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் தலை­வ­ரு­மான சம்­பந்­த­னி­டத்தில் உறு­தி­ப­டத்­தெ­ரிவி த்துள்ளார். இலங்­கைக்கு விஜயம் செய்­துள்ள உண்மை, நீதி, இழப்­பீடு மற்றும் மீள்­நி­க­ழாமை உத்­த­ர­வா­தங்கள் பற்­றிய ஐக்­கிய நாடு­களின் விசேட அறிக்­கை­யாளர் பப்லோ டீ கிரீப்­பிற்கும் எதிர்க் கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­த­னுக்கும் இடை­யி­லான உத்­தி­யோக பூர்வ சந்­திப்பு நேற்று சனிக்­கி­ழமை கொழும்பு தாஜ் சமுத்­திரா ஹோட்­டலில் நடை­பெற்­றது.

காணி விடு­விப்பு, காணாமல் ஆக்­கப்­பட்டோர், மற்றும் தமிழ் அர­சியல் கைதிகள் போன்ற விட­யங்கள் தொடர்பில் தமிழ் மக்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னை­களை விசேட நிபு­ணரின் கவ­னத்­திற்கு இரா. சம்­பந்தன் கொண்டு வந்தார். 

இக்­க­லந்­து­ரை­யா­டலில் காணி விடு­விப்பு தொடர்பில் கருத்து தெரி­வித்த இரா. சம்­பந்தன் "எமது மக்கள் தமது காணிகள் தொடர்பில் வெறும் உணர்ச்­சிக்கும் அப்­பா­லான இணைப்­பினை கொண்­டுள்­ளார்கள், இந்த மக்கள் சில பிர­தே­சங்­களில் கடந்த 300 நாட்­க­ளுக்கும் அதி­க­மாக தமது காணி­களை விடு­விக்­கக்­கோரி ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்டு வரு­கி­றார்கள் என தெரி­வித்தார்.

மேலும் இவர்கள் மழை­யிலும் வெயி­லி­லு­மாக பல்­வேறு இன்­னல்­க­ளுக்கு மத்­தியில் தமது காணிகள் விடு­விக்­கப்­பட வேண்டும் என இந்த போராட்­டங்­களில் மிகவும் தீர்­மா­ன­மாக உள்­ளார்கள். மேலும், இந்த விட­ய­மா­னது மக்­களின் உணர்­வு­க­ளோடும் அவர்­க­ளது உரி­மை­க­ளோடும் சம்­பந்­தப்­பட்ட விடயம் என்­ப­தனை அர­சாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும் என வலி­யு­றுத்­திய இரா. சம்­பந்தன் உண்­மை­யான புரிந்­து­ணர்வை ஏற்­ப­டுத்த வேண்­டு­மெனில் இந்த யதார்த்தம் புரிந்­து­கொள்­ளப்­பட வேண்டும் எனவும், எனவே இந்த விட­யங்கள் மேலும் தாம­த­மின்றி முடி­விற்கு கொண்டு வரப்­ப­ட­வேண்டும் எனவும் தெரி­வித்தார்.

காணாமல் ஆக்­கப்­பட்டோர் தொடர்பில் கருத்து தெரி­வித்த தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர், "ஒரு தாய் தனது மகனை படை­யி­ன­ரி­டமோ அல்­லது பொலி­ஸா­ரி­டமோ கைய­ளித்­தி­ருந்தால் அவ­ருக்கு என்ன நடந்­தது என்­ப­தனை அறிந்து கொள்ளும் உரிமை உள்­ளது. அந்த உரி­மையை மறுக்க முடி­யாது எனவும் வலி­யு­றுத்­தினார். காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான அலு­வ­ல­கத்தின் செய­லாக்கம் தொடர்பில் காணப்­படும் தாமதம் குறித்து தமது கரி­ச­னையை வெளிப்­ப­டுத்­திய அவர் இந்த அலு­வ­லகம் வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளிலும் நிறு­வப்­ப­ட­வேண்டும் எனவும் கேட்டுக் கெொண்டார்

அர­சியல் கைதிகள் தொடர்பில் பேசிய எதிர்க்­கட்சி தலைவர் அவர்கள், "இவர்கள் களவு செய்த கார­ணத்­தி­னாலோ அல்­லது தமது நன்­மைக்­காக சூறை­யா­டிய கார­ணத்­தி­னாலோ காவலில் இருக்­க­வில்லை. இந்த ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் வழக்­குகள் அர­சியல் பரி­ணா­மத்­தினை கொண்­டுள்­ளது. ஆகவே இவை அந்த அடிப்­ப­டையில் நோக்­கப்­பட்டு முடி­விற்கு கொண்டு வரப்­ப­ட­வேண்டும் எனவும் தெரி­வித்தார். மேலும் பயங்­க­ர­வாத தடைச்­சட்­ட­மா­னது மிக கேடா­னதும் இந்­நாட்டு சட்ட புத்­த­கங்­களில் இருந்து நீக்­கப்­பட வேண்­டிய ஒன்றும் என அர­சாங்­க­மா­னது ஒப்­புக்­கொண்­டுள்ள போது, எந்த அடிப்­ப­டையில் அதே சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்ட இவர்­களை தொடர்ந்தும் சிறையில் வைத்­தி­ருக்க முடியும் எனவும் கேள்வி எழுப்­பினார்.

இந்த விட­யங்­களில் தவ­றி­ழைக்க முடி­யாது என தெரி­வித்த இரா. சம்­பந்தன் அவ்­வாறு தவ­றி­ழைக்­கின்ற பட்­சத்தில் அது நல்­லி­ணக்க படி­மு­றை­க­ளிலே பாரிய தாக்­கத்­தினை ஏற்­ப­டுத்தும் எனவும் வலி­யு­றுத்­தினார். மேலும் ஒரு சிலர் நல்­லி­ணக்க மற்றும் அர­சியல் தீர்வு முயற்­சி­களை குழப்­பு­வ­தற்கு தயா­ராக உள்ள நிலையில் இந்த விட­யங்கள் அவர்­க­ளுக்கு சாத­க­மாக இருப்­ப­தனை அனு­ம­திக்க முடி­யாது எனவும் குறிப்­பிட்டார் .

இலங்கை மக்­க­ளுக்கும் சர்­வ­தேச சமூ­கத்­திற்கும் இலங்கை அரசு கொடுத்த வாக்­கு­று­தி­களை அர­சாங்கம் நிறை­வேற்­று­வ­தனை ஐ.நா.உறுதி செய்­ய­வேண்டும் என விசேட நிபு­ணரை வலி­யு­றுத்­திய இரா. சம்­பந்தன் அவர்கள் இந்த வாக்­கு­று­திகள் இலங்கை நாட்­டி­னதும் அதன் மக்­களின் நன்­மை­யி­னையும் கருத்­திற்­கொண்டு இலங்கை அர­சாங்­கத்­தினால் தன்­னார்­வ­மாக கொடுக்­கப்­பட்­டவை என்­ப­தனை சுட்­டிக்­காட்­டிய அதே­வேளை அவற்­றினை இலங்கை அரசு மதித்து நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் எனவும் இவை வெறுமனே எழுத்துருவில் மாத்திரம் இருக்க கூடாது எனவும் தெரிவித்தார்.

மேலும் தனது விஜயத்தின் முடிவில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் தனது கருத்தினை தெரிவிக்கவுள்ளதாக கூறிய விசேட நிபுணர் இலங்கையில் நிலையான சமாதானத்தினை ஏற்படுத்தும் நோக்கிலும் அரசியல் தீர்வினை அடையும் வகையிலும் தனதும் ஐ.நாவினதும் தொடர்ச்சியான பங்களிப்பு இருக்கும் என்பதனையும் இச்சந்திப்பில் குறிப்பிட்டார் .   

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2017-10-22#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.