Jump to content

அதிக சிக்சர்கள்; கெய்ல், தோனி கிளப்பில் இணைந்தார் டிவில்லியர்ஸ்: சுவையான தகவல்கள்


Recommended Posts

அதிக சிக்சர்கள்; கெய்ல், தோனி கிளப்பில் இணைந்தார் டிவில்லியர்ஸ்: சுவையான தகவல்கள்

 

 
de

வங்கதேசத்துக்கு எதிராக 2-வது ஒருநாள் போட்டியில் 104 பந்துகளில் 176 ரன்கள் விளாசி மைதானம் நெடுக வங்கதேச பீல்டர்களை அலைய வைத்த டிவில்லியர்ஸ் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர்கள் பட்டியலில் உயர்மட்ட கிளப்பில் இடம்பிடித்தார்.

ஒருநாள் போட்டிகளில் ஷாகித் அஃப்ரீடி 351 சிக்சர்களுடன் முதலிடம் வகிக்க, ஜெயசூரியா 270, கெய்ல் 252, தோனி 213, டிவில்லியர்ஸ் 201 என்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

தென் ஆப்பிரிக்க அணிக்காக ஒருநாள் போட்டியில் முதல் இரட்டைச் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டிவில்லியர்ஸ் நேற்று 176 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருக்கு முன்னே கேரி கர்ஸ்டன் 188 ரன்களுடன் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கர் எடுக்கும் அதிகபட்ச ரன்கள் இடத்தில் முதலிடம் வகிக்கிறார். டுபிளெசிஸ் 185 ரன்கள் எடுத்து 2-ம் இடத்திலும் டி காக் 178 ரன்கள் எடுத்து 3ம் இடத்திலும் உள்ளனர், டிவில்லியர்ஸ் தற்போது 176 ரன்களுடன் 4-ம் இடத்திலும் கிப்ஸ் 175 ரன்களுடன் 5-ம் இடத்திலும் உள்ளனர்.

டிவில்லியர்ஸ் நேற்று அடித்த சதம் அவரது 25-வது ஒருநாள் சதமாகும். 25 அல்லது அதற்கும் அதிகமான ஒருநாள் சதங்களை எடுத்த 7வது பேட்ஸ்மென் ஆனார் டிவில்லியர்ஸ். ஹஷிம் ஆம்லாவுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்க அணியில் இவர் 25 சதங்களுடன் 2-ம் இடத்தில் உள்ளார். அவரது 25 ஒருநாள் சதங்களும் 100 ரன்கள் என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுக்கப்பட்டது. இதில் 6 சதங்களை 70-க்கும் குறைவான பந்துகளில் அடித்துள்ளார் டிவில்லியர்ஸ்.

அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் நீங்கலாக பழைய ஐசிசி அனைத்து முழு உறுப்பு நாடுகளுக்கு எதிராகவும் டிவில்லியர்ஸ் சதம் கண்டுள்ளார். இந்தவகையில் பாண்டிங், சச்சின், ஆம்லா, விராட் கோலி, ராஸ் டெய்லர், ஆகியோருடன் டிவில்லியர்ஸ் இணைந்தார்.

ஏப்ரல் 2011க்குப் பிறகு வங்கதேச அணி நேற்றுதான் எதிரணிக்கு 350 ரன்களை வாரி வழங்கியது.

ஹஷிம் ஆம்லா, டிவில்லியர்ஸ் 12 சதக்கூட்டணி அமைத்துள்ளனர். இந்த வகையில் தென் ஆப்பிரிக்காவின் சிறந்தக் கூட்டணியாகத் திகழ்கிறார்கள். ஹர்ஷல் கிப்ஸ், கிரேம் ஸ்மித் 11 முறை சதக்கூட்டணி அமைத்துள்ளனர், அதனை டிவில்லியர்ஸ், ஆம்லா தற்போது கடந்துள்ளனர்.

http://tamil.thehindu.com/sports/article19882178.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.