Jump to content

ஹோட்டல் லிப்ட் இயங்காமையால் முகூர்த்த நேரம் கடந்த நிலையில் மணமகளை கரம்பிடித்த மணமகன்!- 5 நட்சத்திர ஹோட்டலின் நிர்வாகத்திடம் 50 இலட்சம் ரூபா நஷ்டஈடு கோருகிறார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(ரெ.கிறிஷ்­ணகாந்)

தனது திரு­மண ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டி­ருந்த கொழும்­பி­லுள்ள ஐந்து நட்­சத்­திர ஹோட்டல் ஒன்றில் மின்­னு­யர்த்­தி­யினுள் (லிப்ட்) வெகு­நே­ர­மாக தான் சிக்­குண்­டதால் திரு­ம­ணத்­துக்­கான முகூர்த்த நேரம் கடந்த நிலையில் சம்­பி­ர­தா­யங்கள் எத­னையும் மேற்­கொள்­ளாது பதிவுத் திரு­மணம் செய்து கொள்ளும் அள­வுக்கு குறித்த 5 நட்­சத்­திர ஹோட்டல் நிர்­வா­கத்தால் தான் அசெ­ள­க­ரி­யத்­துக்கு உள்­ளா­ன­தாக மண­ம­க­னான சட்­டத்­த­ரணி வருண நாண­யக்­கார அந்த ஹோட்­ட­லுக்கு எதி­ராக நட்­ட­ஈ­டு­கோரி வழக்குத் தாக்கல் செய்­துள்ளார்.

married.jpgஇந்­நி­லையில், திரு­மண தினத்­தன்று மின்­னு­யர்த்­தியில் சிக்­குண்டு தான் அசெ­ள­க­ரி­யத்­துக்­குள்­ளா­ன­மைக்கு நட்­ட­ஈ­டாக குறித்த ஹோட்­ட­லிடம் 50 இலட்சம் ரூபா நட்­ட­ஈ­டு­கோரி அந்த நட்­சத்­திர ஹோட்­ட­லுக்கு எதி­ராக தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கு கொழும்பு மாவட்ட நீதி­பதி ஜயகி அல்விஸ் முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட வேளையில் வாதி­யான சட்­டத்­த­ர­ணி­யான வருண நாண­யக்­கார சாட்­சி­ய­ம­ளித்தார்.

நுகே­கொடை உட­ஹ­முல்ல பிர­தே­சத்தைச் சேர்ந்த சட்­ட­த­ர­ணி­யான வருண நாண­யக்­கார 2015 ஆம் ஆண்டு ஒக்­டோபர் 22 ஆம் திகதி தனது திரு­மண தினத்­தன்று திரு­மண ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டி­ருந்த ஹோட்­டலின் கீழ் தளத்­தி­லி­ருந்து 10 மாடியை நோக்கி மின்­னு­யர்த்­தியின் மூலம் தனது தாய், தந்­தை­யுடன் சென்று கொண்­டி­ருந்­த­போது 1 ஆம் மற்றும் 5 ஆம் மாடி­க­ளுக்கு இடையில் குறித்த மின்­னு­யர்த்தி பாரிய சத்­தத்­துடன் சடு­தி­யாக நின்­றுள்­ளது.

அதன்­போது சுமார் 10 நிமி­டங்­க­ளுக்கு தாம் மின்­னு­யர்த்­தி­யினுள் சிக்­குண்­ட­துடன் மின்­துண்­டிப்பால் ஏற்­பட்ட இருளைப் போக்க கைத்­தொ­லை­பேசி வெளிச்­சத்தைப் பயன்­ப­டுத்திக் கொண்­ட­தா­கவும் உள்­ளி­ருந்த ஒலி­வாங்கி மூலம் உத­வி­கோரி அழைத்­த­போதும் எவரும் பதி­ல­ளிக்­க­வில்லை என அவர் தெரி­வித்­துள்ளார்.

அத­னை­ய­டுத்து சுமார் 10 நிமி­டங்­களின் பின்னர் மின்­னு­யர்த்தி செயற்­பட்டு மேல் நோக்கி பய­ணித்து 10 ஆவது மாடியை அடைந்த போது இறங்­கு­வ­தற்கு முயற்­சிக்­கையில் மின்­னு­யர்த்தி தரை­யி­லி­ருந்து 1 அடி உய­ரத்தில் நிறுத்­தப்­பட்­டதால் வய­தான தனது தாய் தந்தை மிகவும் சிர­மத்­துடன் மின்­னு­யர்த்­தி­யி­லி­ருந்து இறங்­கி­ய­தாகத் தெரி­வித்­துள்ளார்.

அதன்­போது மண­மகன் கோலத்­தி­லி­ருந்த தனது திரு­மண ஆடை வியர்­வையில் நனைந்­தி­ருந்த நிலையில் கடும் அசெ­ள­க­ரி­யங்­க­ளுக்கு மத்­தியில் சுப நேரத்தில் நிகழ்த்­து­வ­தற்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த சடங்­கு­களை மேற்­கொள்­ளா­மலும் வாக்­கு­றுதி அளிக்­கா­மலும் பதி­வாளர் முன்­னி­லையில் கையொப்­ப­மிட்டு தான் திரு­மணம் செய்து கொண்­ட­தாக சட்­டத்­த­ரணி வருண நாண­யக்­கார மன்றில் தெரி­வித்தார்.

இந்நிலையில் இவ்வழக்கை கொழும்பு மாவட்ட நீதிபதி ஜயகி அல்விஸ் எதிர்வரும் டிசம்பர் 5 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்

http://metronews.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிழை தான்.

50 கேட்டது பிழை தான்.

100 ஆவது கேட்டிருக்கோணும்.

இலண்டணில இந்த லிப்ட் விசயத்தில மாட்டி, சத்தம் போட்டும், லிப்டில இருந்த போன் அடித்தும், மோபைலில அடித்தும் ரிசப்சன் கவுண்டரில இருந்த பரதேசிகள் வராததால், நேர பயர் பிரிகேட்டுக்கு அடிக்க... அவையள் வந்து முன்கதவை உடைக்க... ரிசப்சனுக்கு கீழ படுத்துக்கிடந்தவர் அடிச்சுப் பிடிச்சு எழும்பி...

பயர் கெல்போட நாங்களும் 35 நிமிசத்துக்குப் பிறகு வெளியவர, அவர் கேட்டாரே ஒரு கேள்வி....

சனி இரவு, தண்ணிய லைட்டாப் போட்டுட்டன்.... கொஞ்சம் பலமா கத்தியிருந்தா, என்ற வேலை பிரச்சணை இல்லாம தப்பீயிருக்கும்.

இப்ப பயர் அனுப்பப் போற 1000 பவுண் பைனில தொங்குதாம்..? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லிப்ட் மக்கர் பண்ணினா நீ என்ன செய்திருக்கணும். இதையே சாட்டா வைச்சி திருமணத்தை நிறுத்தியிருக்கணும். எல்லாம் முடிச்சிட்டு இப்பவந்து ஆச்சு மூச்சின்னா நம்மாளை காமடி பீசுன்னா நினைப்பானுக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு எதுவும் claim பண்ண முடியாது என நினக்கின்றேன்.
இது frustration of contract எனப்படும். எதிர்பாரமல் (unforeseen) ஏற்பட்ட நிகழ்வு என்பதால் இது ஹோட்டலின் தவறல்ல.

ஆகவே எதுவும் செய்ய முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

ஆகவே எதுவும் செய்ய முடியாது. 

கல்யாணம் முடிஞ்சு போச்சு தானே..............:unsure::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, colomban said:

இவருக்கு எதுவும் claim பண்ண முடியாது என நினக்கின்றேன்.
இது frustration of contract எனப்படும். எதிர்பாரமல் (unforeseen) ஏற்பட்ட நிகழ்வு என்பதால் இது ஹோட்டலின் தவறல்ல.

ஆகவே எதுவும் செய்ய முடியாது. 

அப்படி இல்லை.

வெளியே இருந்து வரும் மின் தடைப்படடால், அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. அதுவே வலுவான காரணமாகும்.

ஆனால் மின் தூக்கி பழுதடைந்தால், claim காசு கொடுக்க வேண்டும். பராமரித்து, பாவிக்க கூடிய நிலையில் வைப்பது அவர்களின் கடமை.

அது பாவிக்க கூடிய நிலையில் இருக்கும் என்ற அடிப்படையில் தான் அந்த ஹோட்டல் ஹால் பதிவு நடந்தது.

உண்மையில், இந்த விசயத்தினை, சமாதானமாக தீர்வு காணாமல், நீதிமன்று போக வைத்த, நிர்வாகத்தினை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

PR disastar என்பார்கள்.

அண்மையில், UBER டாக்ஸி கொம்பனி, CEO, வழக்கு போடுறன், அடியடா, பிடியாடா என்று, லண்டன் மாநகர் மேயர் அலுவலகத்துடன், தமது நிறுவன டாக்ஸி லைசென்ஸ் இம்மாத இறுதியுடன் கான்சல் பண்ணி விட்டார்கள் என, கொளுவினார். 

நிலைமையினை புரிந்த தலைமையகம், அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டு, புது ஆளை போட, அவரோ..... பேச்சுவார்த்தை, பேச்சுவார்த்தை என்று போய், இப்போதைக்கு லைசென்ஸ் கான்சல் இல்லை என்று ஆக்கி விட்டார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, colomban said:

இவருக்கு எதுவும் claim பண்ண முடியாது என நினக்கின்றேன்.
இது frustration of contract எனப்படும். எதிர்பாரமல் (unforeseen) ஏற்பட்ட நிகழ்வு என்பதால் இது ஹோட்டலின் தவறல்ல.

ஆகவே எதுவும் செய்ய முடியாது. 

ஒரு இடத்துக்கு ஐந்து நட்சத்திரம் குடுக்கப்படுது என்றால் அவர்களிடம் தடையில்லா மின் வழங்கும் சொந்த மின்பிறப்பாக்கி இருக்கணும் என்ற சட்ட திட்டம் ஒன்றும் சொரிலன்காவில் இல்லையா ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.