Jump to content

டெங்குவே உன்னைச்சுற்றி


Recommended Posts

டெங்குவே உன்னைச்சுற்றி

நாளும் நாளும் உயிர்களை பறித்து
கோர ஆட்டம் போடும் டெங்குவே!
உன் கொட்டத்தை அடக்கி,
மக்கள் உயிரைக் காத்திட மனிதரில்லை.
உன்னை வைத்து அரசியல் நடத்த 
ஆயிரம் பேர் கிளம்பியுள்ளார்கள்.
கேட்க யாருமில்லை என்பதால்
நீயும் ஆவேசமாய் உயிர்களை
பறித்தெடுக்கும் வெறியாட்டத்தை தொடர்கிறாய்.
ஆயிரம் கேள்விகள்,குற்றச்சாட்டுகளை
மாறி மாறி எதிர் எதிராக தொடுத்து,
அட்டகாசம் புரியும் கேடு கெட்ட மனிதர்களால்
நாளும் நாளும் வேதனைக்குள் தத்தளிக்கும்
மக்களை காத்திட யார் வருவார்.
உன்னிடமிருந்து மக்களை காத்திட
எவருமே உள்ளத்தால் நினைக்கவில்லை.
உன்னை வைத்து தமக்கு இலாபம் ஈட்ட
எண்ணில்லாதோர் முளைத்துவிட்டார்கள்.
மருத்துவமனைக்கு செல்லல்,ஆறுதல் கூறல்
வீதிக்குப்பைகளை துப்புரவு செய்தல், 
தொலைக்காட்சிகளில் விவாதங்கள் என
ஆயிரம் நாடகங்கள் அரங்கேறுகின்றன.
ஆனால் உயிர்களோ தொடர்ந்து பறிக்கப்படுகின்றன.
இதுவும் போதாது என இன்னுமொரு கொடுமை.
ஏழைமக்களுக்கு இலகுவாக கிடைக்கும்
சித்தமருந்தாம் நிலவேம்பு குடிநீரும் ஆகாது என
விளக்கம் சொல்ல பலர் புறப்பட்டு விட்டார்கள்.
உண்மையிலேயே உன்னிடமிருந்து 
மக்களை காக்க நினைப்பவர்கள்
செய்யவேண்டியது என்ன என சிந்தித்தார்களா?
தமது அனைத்து வழமையான நிகழ்ச்;சிகளை
சில நாட்கள் நிறுத்திவிட்டு,
டெங்கு ஒழிப்புக்கான பரப்புரைகளை ஒளிபரப்ப
தொலைக்காட்சிகள் தயாரா?
தங்கள் அரசியல் கூத்துகளை ஒதுக்கிவிட்டு
மக்கள் உயிர்களை பாதுகாக்கும் வேலையில்
முழுமையாக இறங்கி வேலை செய்ய
அரசியல்வாதிகள் முன்வருவார்களா?
சமூகசெயற்பாடுகளில் ஈடுபடுவதாக சொல்லும்
திரைப்படத்துறையினர் இதற்காக நேரம் ஒதுக்குவார்களா?
இத்தனையும் நடந்தால் மக்கள் உயிர் காக்கப்படும்?
நடக்குமா இது?


மந்தாகினி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையிலும் டெங்கு பரவிக்கொண்டே வருகிறது டெங்குக்கு கவிதை சூப்பரு தொடர்ட்டும் 

Link to comment
Share on other sites

நன்றி.

டெங்குவால் மக்கள் சாவுக்கு பலியாகிக்கொண்டிருக்க அதனையிட்டு கவலைப்படாமல் ஆளுக்காள் நாடகம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.மிகவும் வேதனையாக இருந்தது.அதனால்தான் இந்த வரிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சமூக பிரக்ஞை உள்ள கவிதை மந்தாகினி....!  tw_blush:

டாங்கிலிருந்து ஒழுகும் நீர் கிடங்கில் தேங்கி டெங்குவை வளர்கிறது......!

Link to comment
Share on other sites

நன்றி.உண்மைதான். தடுப்பு வழிகளை கையாளவும் எவருமில்லை. படையாக உலா வந்து மாறி மாறி விமர்சித்துகொண்டருக்கும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் களத்தில் இறங்கி துப்புரவு பணியில் ஈடுபடலாமே.தொலைக்காட்சிகள் இது தொடர்பான விழிப்புணர்ச்சி பரப்புரையில்ஈடுபடலாமே. அதனை விடுத்து அவர் அரசியல் வந்தால் என்ன என்ற ஆய்விலும்,திரைப்பட ஆய்விலும் காலத்தை வீணடிக்கிறார்கள். சாவுகள் அதிகரிக்கின்றன. மிகவும் வேதனையாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/19/2017 at 2:19 PM, manthahini said:

நன்றி.

டெங்குவால் மக்கள் சாவுக்கு பலியாகிக்கொண்டிருக்க அதனையிட்டு கவலைப்படாமல் ஆளுக்காள் நாடகம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.மிகவும் வேதனையாக இருந்தது.அதனால்தான் இந்த வரிகள்.

ம்ம் உன்மைதான் இலங்கையில் தற்போது மழை ஆரம்பமாகிவிட்டது மாலை நேரம் மழை கொட்டுகிறது இதனால் இன்னும் பரவும்  அபாயம் உள்ளது  அரசாங்கத்தால் புகை மட்டும் விசிரப்படுகிறது  கட்டுப்படுத்த முடியாதுள்ளது எல்லா இடங்களும் தண்ணிராக உள்ளதால் :104_point_left: 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.