Jump to content

19 வயது மாணவன் பிரித்தானியாவின் இளம் கோடீஸ்வரரானார்..


Recommended Posts

19 வயது மாணவன் பிரித்தானியாவின் இளம் கோடீஸ்வரரானார்..

Akshay-Ruparelia.jpg
ரியல் எஸ்டேட் வியாபாரம் மூலம் அதிக லாபம் ஈட்டியதால் 19 வயது இளைஞர்,   இங்கிலாந்தின் இளம் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.

லண்டனை சேர்ந்தவர் 19 வயதான இந்திய வம்சாவளியான அக்ஷய் ரூபரேலியா பாடசாலையில் கல்வி பயின்று வருகின்ற நிலையில் தற்போது இவர் இங்கிலாந்தில் உள்ள இளம் வயது கோடீசுவரர்களில் ஒருவர் ஆகியுள்ளார்.   பாடசாலையில் கல்வி கற்றுக் கோண்டே  இணையம் மூலம் இவர்  ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வருகின்றார். இதன்மூலம்  அவர் ஒரு வருடத்தில் 100 மில்லியன் பவுண்ட்ஸ்  பெறுமதியான வியாபாரம் செய்து  1.3  மில்லியன் பவுண்ட்ஸ்   லாபம் ஈட்டியுள்ளார்.

கடந்த 16 மாதங்களுக்கு முன்பு உறவினர்களிடம் 7 ஆயிரம் பவுண்ட்ஸ் கடன் பெற்று தனது    வியாபாரத்தை ஆரம்பத்திருந்த இவரிடம் தற்போது 12 பேர் வேலை செய்கின்றனர்.

காது கேளாத இவரது தாய் மற்றும் தந்தையும்    தங்களது மகன் குறித்து பெருமைப்படுகின்றனர். பொருளாதாரம் மற்றும் கணக்கு பாடம் பயில ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இவருக்கு இடம் வழங்க முடிவு செய்துள்ளது.  எனினும்  அதில் சேர்ந்து படிப்பது குறித்து அவர் முடிவு செய்யவில்லை எனவும்  தனது வியாபாரத்தை மேலும் வளர்க்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
தற்போது இவரது ரியல் எஸ்டேட் நிறுவனம் இங்கிலாந்தில் உள்ள பெரிய கம்பெனிகளில் 18-வது இடம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/archives/45732

Link to comment
Share on other sites

இந்தியாவுக்கு தப்பி ஓட்டம் எண்டு செய்தி வந்திடப்போகுது..  tw_astonished: :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, இசைக்கலைஞன் said:

இந்தியாவுக்கு தப்பி ஓட்டம் எண்டு செய்தி வந்திடப்போகுது..  tw_astonished: :D:

உங்கள் ஆருடம் பலிக்குமா என்பது தெரியவில்லை.

இந்த செய்தியில் பல வெளிப்படையான ஓட்டைகளும், கணக்கிலேயே கூட ஓட்டைகளும் உள்ளது.

UK இல் உள்ள கம்பெனி பதிவக (Companies House) தரவுகளின் படி செய்தியில் பல முரண்பாடுகளும் உள்ளது.

இலாபமான 1.3 மில்லியன் இட்கு , எந்தவூர் செலவுமில்லாமல்,  ஆகக்குறைந்தது  13000 அசையா நில சொத்துக்கள் விற்கப்பட்டிருக்க வேண்டும்.  

எந்தவொரு செலவுகளையும் கருத்தில் எடுக்காமல், 100 மில்லியன் அசையா நில சொத்துக்கள்  விற்பனையில் 1.3 மில்லியன் செய்தியில்  சொல்வதின் படி இலாபமாயின், 1.3% தரகு கட்டணமாகும்.

UK இல் சராசரி அசையா நில சொத்தின் விலையான £200, 000 க்கு, £2, 600 தரகு கட்டணமாகும்.

இவ்வாறு பல இடங்களில் இடிக்கிறது இந்த செய்தி.  

இசை, நீங்கள் சொல்வதையே, இந்த செய்தியின் கருத்திட்டவைகளில் ஒருவரும் கூறியுள்ளார்.

http://www.dailymail.co.uk/news/article-4982920/Teenager-set-12m-estate-agency-sixth-form.html#comments

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.