Jump to content

கேடலோனியர்கள்; குர்திஷ்களின் விடுதலைப் போராட்டம்!


Recommended Posts

கேடலோனியர்கள்; குர்திஷ்களின் விடுதலைப் போராட்டம்!

 

17CVCM-EDIT1-IRAQ-KURDS-POLITICS
17CHVCM-EDIT1-SPAIN-POLITICSCATALONIA-BA
 
 

சமீபத்தில் இராக்கில் உள்ள குர்திஷ் பிராந்திய அரசாங்கத்துக்குட்பட்ட பகுதியிலும் ஸ்பெயினில் உள்ள கேடலோனியா சுயாட்சி சமூகத்துக்குட்பட்ட பகுதியிலும் நடந்த கருத்துக்கேட்பு வாக்கெடுப்புகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. குர்திஸ்தான் தனி நாடு உருவாக வேண்டும் என்று குர்திஷ் மக்களும்; கேடலோனியா தனி நாடு உருவாக வேண்டும் என்று கேடலோனியா பிரதேச மக்களும் பெருமளவில் வாக்களித்திருக்கிறார்கள். எதிர்பார்த்தது போலவே, இந்த வாக்கெடுப்புகளை ஏற்க இராக்கும் ஸ்பெயினும் மறுத்துவிட்டன.

குர்திஷ்களும் கேடலோனியர்களும் இந்த உலகின் எதிரெதிர் துருவங்களில் வாழ்கின்ற இனங்கள் என்றாலும், அவர்களுடைய தலையெழுத்துகள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. ஒரு இனம், ஜனநாயகத் தின் தொட்டில் என தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் ஐரோப்பியக் கண்டத்தில் இருக்கிறது. மற்றொரு இனம், ஜனநாயகக் காற்று வீசாத பாலை எனக் கருதப்படும் மேற்காசியாவில் இருக்கிறது. கேடலோனியர்கள் ஆயிராமாண்டு காலமாக இருந்துவரும் தமது தாயகத்துக்கான சுயாட்சியை முன்பே வென்றெடுத்தார்கள். பெற்ற சுயாட்சி உரிமைகளை ஸ்பெயின் அரசு பறிக்க முயன்றபோது, சுதந்திரத்தை நோக்கி நகர்ந்தார்கள்.

 

சுதந்திர வேட்கை

குர்திஷ் மக்களின் நிலையோ படுமோசம். குர்திஸ்தான் என்றழைக்கப்படும் அவர்களது தாயகம் இராக், ஈரான், சிரியா, துருக்கி ஆகிய நான்கு நாடுகளால் துண்டாடப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. மேற்காசியாவின் சாம்ராஜ்ய மும்மூர்த்திகளான துருக்கியர்களும் அரேபியர்களும் பாரசீகர்களும் குர்திஷ்களின் இன அடையாளத்தைக்கூட ஏற்கத் தயாராக இல்லாமல், இனப் படுகொலைகளினூடாக வும் ஒடுக்குமுறைகளினூடாகவும் அந்த இனத்தை அழித்துவந்தனர். 90-களில் இராக்கில் அமெரிக்கா நுழைந்த பிறகு, அமெரிக்காவின் உள்ளூர் வியூகத்தின் ஒரு பகுதியாகவே இராக்கிலுள்ள குர்திஷ் மக்களுக்கு என ஒரு பிராந்திய அரசு அமைந்தது. இப்போது தனி நாடாவதற்கான வாக்கெடுப்பை நடத்தியது அந்த அரசுதான்.

இராக்கில் உள்ள குர்திஷ் மக்கள் செப்டம்பர் 25-ல் நடந்த வெகுசன வாக்கெடுப்பில் கலந்துகொண்டு தங்களுக்குத் தனிநாடு வேண்டும் என வாக்களித்தார்கள். பல முறை நடத்தத் திட்டமிடப்பட்டு, ஆனால் முடியாமலேயே போயிருந்த நிலையில், இந்த முறை அது வெற்றிகரமாக நடந்தது. கேடலோனியாவைப் பொறுத்தவரை அக்டோபர் 1-ல் நடைபெற்ற வாக்கெடுப்பைச் சட்டவிரோதம் என்று ஸ்பெயின் அரசு கூறினாலும், கேடலோனிய அரசுத் தலைவர் கார்லஸ் பியூஜ்டிமாண்டின் உள்ளிட்டோர் அதைப் பற்றிக் கவலைப் படாமல் வாக்கெடுப்பை நடத்தினார்கள். ஸ்பெயின் பிரதமர் மரியானா ரஜோயின் மிரட்டல்களும் அவரது அரசின் போலீஸ் தாக்குதல்களும் ஸ்பானிய ஆளும் தலைகளின் ஆணவப்போக்கும் கேடலோனியாவில் சுதந்திரம் குறித்து முடிவெடுக்காமல் குழம்பியிருந்த மக்களைக்கூட சுதந்திரத்துக்கு ஆதரவானவர்களாக மாற்றியது. வாக்களித்த 43% மக்களில் 92% பேர் சுதந்திரம் வேண்டும் என்றே தேர்வு செய்திருந்தார்கள்.

 

எதிர்விளைவுகள்

இவ்விரு நிகழ்வுகளும் உலக அரங்கில் கடுமை யான எதிர்விளைவுகளை உருவாக்கியுள்ளன. பெரிய நாடுகள் இதுவரை கேடலோனியாவையோ குர்திஸ் தானையோ அங்கீகரித்துவிடவில்லை. குறிப்பாக, குர்திஸ்தான் வாக்கெடுப்பை முழுமையாக நிராகரித் தார் அமெரிக்க அரசுச் செயலர் ரெக்ஸ் டில்லர்சன். இன்றைய உலக ஒழுங்கில் வல்லரசுகளின் போட்டிக்களத்தில் ஏதேனும் ஒரு அணியில் இருந்தால்தான், பிரிவினைப் போராட்டங்கள் வெற்றிபெறுகின்றன என்று பொதுவாகக் கருதப்படுகிறது. சமீபகாலத்தில் தனிநாடுகளாக ஆன தெற்கு சூடான், கோசாவா போன்றவைகூட அதற்கு எடுத்துக்காட்டுகளாகச் சொல்லப்படுகின்றன. எல்லா வல்லரசுகளும் ஒன்று திரண்டு எதிராக நின்றால், ஒரு விடுதலைப் போராட்டத் தைச் சுவடின்றி அழித்துவிட முடியும் என்று தமிழ் ஈழப் போராட்டத்தின் முடிவு காட்டுகிறது.

ஐரோப்பாவில் சுயநிர்ணய உரிமைகள் என்பது வரலாற்றுரீதியாக ஏற்கப்பட்டுவிட்ட ஒரு கோட்பாடு என்று கருதப்படுகிறது. ஆனால், ஆசியாவில் எந்த நாட்டிலும் அதற்கு ஏற்பு இல்லை என்பதும் வெளிப்படை. 90-களில் சோவியத் யூனியன், யூகோஸ்லேவியா, செக்கோஸ்லோவேகியா போன்ற கூட்டமைப்புகள் தகர்ந்து, பல நாடுகள் உருவாயின. அந்தச் சம்பவங்கள், ரஷ்யப் புரட்சியினூடாக விளதிமிர் லெனினும் முதல் உலகப் போருக்குப் பின் அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சனும் முன்வைத்த சுயநிர்ணய உரிமைக் கோட்பாடுகள் மேற்குலகில் சட்டபூர்வமாக ஏற்கப்பட்டிருப்பதன் அடையாளம் என்றும் கருதப்பட்டது.

மத்திய, கிழக்கு ஐரோப்பாவில் சோவியத் ஆதிக்கத்தை உடைப்பதற்கு சுயநிர்ணய உரிமை என்கிற ஆயுதத்தை எடுத்த எந்த மேற்கு, தெற்கு ஐரோப்பிய நாடும் தங்கள் நாட்டில் அதே கோரிக்கை எழுகிறபோது அதை ஏற்றுக்கொள்வதில்லை. பழைய சாம்ராஜ்யங்களோ புதிய வல்லரசுகளோ தங்களுடைய தேவைக் கும் நலனுக்கும் ஏற்பவே நாடுகளை உருவாக்கத் துணைபுரிகின்றன. இந்தப் பின்னணியில்தான் கேடலோனியாவில் வாக்கெடுப்பு, ஸ்பெயினில் விடுதலைக்குப் போராடும் பாஸ்க் இனத்தவர்க்கும், அருகே பிரிட்டனில் ஸ்காட்களுக்கும் உற்சாகத்தை அளித்தது. ஆனால், ஸ்பெயின் அரசின் மனநிலையையே பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற அரசுகள் பிரதிபலித்தன.

 

வல்லரசுகளுக்குச் சவால்

ஐரோப்பாவிலேயே இப்படி என்றால், குர்திஸ்தான் விவகாரத்தில் கேட்கவே வேண்டாம். உள்ளூர் தாதாக்களான இராக், ஈரான், சிரியா, துருக்கி போன்ற நாடு களுக்குள் ஆயிரம் போட்டியிருக்கலாம். ஆனால் குர்திஸ்தான் என்கிற ஒரு அரசு உருவாகிவிடக் கூடாது என்பதில் அவை ஒருமித்த கருத்தைக் கொண்டிருக்கின்றன. வாக்கெடுப்பு நடந்த நாள் முதலாகவே குர்திஸ்தான் பிராந்திய அரசாங்கத்தின் மீது அனைத்துவிதமான தடைகளையும் அவை போடத் தொடங்கின. இராக்கிய குர்து அரசின் தலைநகரமான எர்பிலுக்கு பயணியர் விமானப் போக்குவரத்தைத் தடைசெய்தது இராக். அங்கேயிருந்து வெளிவரும் எண்ணெய் குழாய்களை அடைக்கப்போவதாக மிரட்டியது துருக்கி. குர்துப் பகுதியுடனான எல்லையை மூடியது ஈரான்.

எல்லாவற்றுக்கும் மேலாக, சதாம் உசைனின் இராக்கில் இனப்படுகொலைக்கு உள்ளான குர்திஷ் மக்களுக்கு பிராந்திய அரசை ‘உருவாக்கித் தந்த’ அமெரிக்காவும் தன்னுடைய நிஜ முகத்தைக் காட்டிவிட்டது. மசூத் பர்சானி தலைமையிலான குர்திஷ் பிராந்திய அரசு அமெரிக்காவின் கைப்பாவை என்று சொல்லக்கூடிய அளவுக்கு அமெரிக்க நலன்களுக்கு ஒத்தாசை செய்துவந்தது. அமெரிக்கர்களால் நேரடியாக எதிர்கொள்ள முடியாத ஐஎஸ் பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டியதில் குர்திஷ்களின் பெஷ்மெர்கா படையினரின் பங்கு அதிகம். குர்திஷ் பகுதி தனிநாடாகச் செல்லவேண்டும் என்று அவர் உறுதியாக முடிவெடுத்தபோது. அவரைக் கைகழுவியது அமெரிக்கா.

அப்படியென்றால் கேடலோனிய, குர்திஷ் கனவுகள் என்ன ஆகும்? வல்லரசியவாதிகளின் முடிவு என்னவாக இருந்தாலும், மக்கள் முடிவெடுத்துவிட்டால், நீண்ட காலம் அதை மறுத்து நிராகரிக்கும் ஆற்றல் யாருக்குமே இல்லை என்பது வரலாறு. காலனிய சகாப்தத்தில் போடப்பட்ட எல்லைக் கோடுகளை மாற்றவிடக் கூடாது என்று வல்லரசுகள் விரும்புகின்றன. அதை மீறி சுதந்திரம் வேண்டுமானால், வல்லரசுப் போட்டிக்களத்தில் ஏதேனும் ஒரு அணியை அனுசரித்து சுதந்திர யாசகம் கேட்கவேண்டிய கட்டாயத்தை அவை உருவாக்கி வைத்திருந்தன. அந்த யதார்த்தத்தைப் புரிந்துகொண்டுள்ள அதே நேரத்தில், குர்திஸ்தான்களும் கேடலோனியாக்களும் சுயநிர்ணய உரிமையை வெல்வதற்கான வழியைக்கூட சுயமாக நிர்ணயித்துக்கொள்ளத் தொடங்கிவிட்டன என்பதுதான் இப்போது வந்திருக்கும் புதிய செய்தி. இது உலக, வட்டார வல்லரசுகளுக்கு விடப்பட்டுள்ள புதிய சவாலும்கூட!

http://tamil.thehindu.com/opinion/columns/article19875305.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.