Jump to content

அஷ்வின், ஜடேஜாவின் ‘ஓய்வு’ தற்காலிகமா... நிரந்தரமா?


Recommended Posts

அஷ்வின், ஜடேஜாவின் ‘ஓய்வு’ தற்காலிகமா... நிரந்தரமா?

 
Chennai: 

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அஷ்வின், ஜடேஜா இல்லை. “இலங்கை தொடருக்கு ஓய்வுன்னு சொன்னாங்க.. இன்னுமா ரெஸ்ட் எடுக்குறாங்க...?” என்று ரசிகர்களுக்கு டவுட்! இந்தச் சந்தேகம் நியாயமானதே. டெஸ்ட் கிரிக்கெட்டின் தலைசிறந்த பெளலர்களில் இருவருக்கு, ஒருநாள் போட்டி அணியில் இடமில்லை எனும்போது, அதுவும் தொடர்ந்து 3 தொடர்களில் எனும்போது சந்தேகம் எழுவது சகஜமே. உண்மையில் இது ஓய்வுதானா? இல்லை, இளம் இந்திய அணியை உருவாக்கும் முயற்சியில்  கழட்டிவிடப்பட்டார்களா? 2016-ம் ஆண்டு நடந்த இந்தியா – நியூசிலாந்து தொடருக்குப் பிறகான பெர்ஃபாமன்ஸ்களை வைத்து, ஒரு பார்வை…..

ஒருநாள்

 

சாம்பியன்ஸ் டிராஃபிக்குப் பின், இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவர் M.S.K.பிரசாத், இந்திய அணியின் தேர்வுமுறைகள் குறித்துப் பேசியிருந்தார். 2019 உலகக்கோப்பையைக் குறிவைத்தே ஒவ்வொரு தொடருக்கான அணியும் தேர்வு செய்யப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார். பயிற்சியாளர் கும்ப்ளேவின் இடத்தை ரவி சாஸ்திரி நிரப்பியதும், ‘மிஷன் 2019’-ஐ ஸ்டார்ட் செய்தது கோலி – சாஸ்திரி கூட்டணி. “எப்பேர்ப்பட்ட ஆளா வேணாலும் இருக்கட்டும். ஃபிட்னெஸ் இருந்தாதான் டீம்ல இருக்க முடியும்” என்பதுதான் கோலியின் மிகப்பெரிய கண்டிஷன். இந்தக் கண்டிஷன் அவருக்கும் பொருந்தும். அதனால்தான் யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோருக்குத் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஆனால், அது பெரிய அளவில் கேள்வி எழுப்பப்படவில்லை. அஷ்வினும், ஜட்டுவும் தேர்வாகாதது கிரிக்கெட் ரசிகர்களைப் புருவம் உயர்த்தவைத்துள்ளது.

கோலியின் ஸ்பெஷல் பிளான்

இந்திய அணி வெறும் உலகக்கோப்பையை மட்டும் டார்கெட்டாக வைத்துச் செயல்படவில்லை. எப்படி 1990-களின் பிற்பகுதியிலிருந்து ஆஸ்திரேலிய அணி கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தியதோ, அதுபோன்று ஒரு அசைக்க முடியாத இமேஜை இந்திய அணிக்கு ஏற்படுத்தியாக வேண்டும் என்று செயல்பட்டுவருகின்றனர். அதற்கு கோலி வகுத்த திட்டம், Unique teams. ஒவ்வொரு வகையான போட்டிகளுக்கும், ஒவ்வொரு கேப்டன் வைத்து சில அணிகள் செயல்படும். ஆனால், கோலி ஒவ்வொரு ஃபார்மட்டுக்கும் தனி அணி அமைப்பதில் தீர்க்கமாக இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளுக்கு என்று ஸ்பெஷலிஸ்டுகள் உள்ளடக்கிய ஒரு அணி. ஷார்டர் ஃபார்மட்டில் அதற்கேற்ப  விளையாடும் அணி. கோலியின் இந்தப் பிளான்தான் அஷ்வினையும், ஜடேஜாவையும் வெளியே அமர்த்தியிருக்கிறது.

அஷ்வின்

விராட் சில விஷயங்களில் மிகத் தெளிவு. “எந்த வீரராக இருந்தாலும், அந்த ஃபார்மட்டுக்கு ஏற்ப விளையாட வேண்டும். சில வீரர்கள் ஃபார்மட் மாறும்போது அதற்கேற்ப தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர் தொடங்கும் முன் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறியிருந்தார். ஒவ்வொரு ஃபார்மட்டுக்கும் ஸ்பெஷலிஸ்ட் வீரர்கள் இருக்கும்பட்சத்தில், ஆட்டத்தின் போக்கு எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்பது அவரது கருத்து. அதுதான் ஃபார்மில் இல்லாத காலங்களிலும், ரஹானேவைக் காட்டிலும் தவானுக்கு ஒருநாள் அணியில் வாய்ப்புகள் கிடைக்கக் காரணம். ‘டெஸ்ட் ஸ்பெஷலிஸ்டா’ன ரஹானே, ஒருநாள் போட்டியிலும் தன் ஸ்லோ கேமை ஆடுவது கோலிக்குப் பிடிக்கவில்லை. ஸோ... அவரது டீஃபால்ட் சாய்ஸ் எல்லாத் தொடர்களிலும் தவானாகவே இருந்தது.

இப்படி பிளான் செய்துதான் இரு வேறு அணிகளை ‘டிசைன்’ செய்தார் விராட். டெஸ்டுக்கு ஓப்பனர்களாக, விஜய் – ராகுல். ஒருநாள் போட்டிகளுக்கு தவான் – ரோஹித். மிடில் ஆர்டருக்கு புஜாரா, ரஹானே. அங்கு ஜாதவ், மனீஷ். கீப்பிங்குக்கு சஹாவும், தோனியும். ஸ்பின் ஆப்ஷன்களாக, அஷ்வின் ஜடேஜா. ஒருநாள் போட்டிகளுக்கு அக்சர், சாஹல், குல்தீப் கூட்டணி. உமேஷும், இசாந்தும் டெஸ்ட் பவுலர்கள், புவியும், பூம்ராவும் ODI ஸ்பெஷலிஸ்ட் என வகுத்துவிட்டார் கோலி. பாண்டியா மட்டும் அவருக்கு அனைத்து ஃபார்மட்டிலும் தேவை. அவரைப் பொறுத்தமட்டில் 3 ஃபார்மட்டிலும், அந்த போட்டியின் தன்மையைப் பொறுத்து ஆடக்கூடிய ஒரே ஆள் அவர் மட்டுமே. அதனால், அவரையும் பாண்டியாவையும் தவிர்த்து மற்ற 9 வீரர்களும் வேறுபடுவார்கள்.

ஜடேஜா

சாம்பியன்ஸ் டிராஃபி ஃபைனலை வென்று, தன் முதல் கோப்பையைத் தூக்க முடியாததால், அடுத்தகட்ட பாய்ச்சலை புலிப்பாய்ச்சலாக  மாற்ற  விரும்புகிறார் கோலி. ஒருநாள் போட்டிகளில் டெஸ்ட் போல் ஆடும் வீரரோ, டெஸ்ட் போட்டிகளில், ‘கன்சிஸ்டன்சி’ இல்லாத வீரரோ அவருக்கு வேண்டியதில்லை. பெர்ஃபார்ம் பண்ணலையா உடனே தூக்கிடு. கோலியின் இந்த அணுகுமுறைதான் அஷ்வினுக்கும், ஜடேஜாவுக்கும் தரப்பட்ட ஓய்வின் பின்னனி.

அஷ்வின், ஜடேஜா ODI பெர்ஃபாமன்ஸ் எப்படி?

அஷ்வினும், ஜடேஜாவும் டெஸ்ட் போட்டிகளில் ரவுண்டு கட்டி அடித்தாலும், ஒருநாள் போட்டிகளில் அவர்களது பந்துவீச்சு எடுபடவில்லை. இந்தியத் துணைக் கண்டத்தைத் தாண்டி, அவர்களது செயல்பாடு சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ரன் குவிப்பைத் தடுக்கத் தவறியது மட்டுமின்றி, விக்கெட் வீழ்த்தவும் இருவரும் தவறிவிட்டனர். சமீப காலங்களில், அவர்களின் செயல்பாடுகளே அவர்களுக்கான இடத்தைப் பறித்தது.

ஸ்பின்

சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் அவர்கள் இருவரும் இணைந்து வீழ்த்திய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 5. 5 போட்டிகளில் ஆடிய ஜடேஜா 4 விக்கெட்டுகளும், 3 போட்டிகளில் ஆடிய அஷ்வின் 1 விக்கெட் மட்டுமே எடுத்தனர். அவர்களின் எகானமியும் 5.75-க்கு மேல். ஆட்டத்தின் முக்கியமான மிடில் ஓவர்களில், இவர்கள் விக்கெட் வீழ்த்தத் தவறியதே லீகில் இலங்கையுடனும், ஃபைனலில் பாகிஸ்தானுடனும் இந்தியா தோற்கக் காரணம். ‘இங்கிலாந்து மைதானங்களில் சுழற்பந்து வீச்சாளர்களிடம் அதிகம் எதிர்பார்க்கக்கூடாது’ என்ற பேச்சு எழும். ஆனால், அனுபவம் கொண்ட இரு முன்னனி பவுலர்களால் 10 ஓவர்களுக்கு 1 விக்கெட் வீதம் கூடவா எடுத்திட முடியாது? அத்தொடரில் இருவரும் இணைந்து 71 ஓவர்கள் பந்துவீசி, ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினர். ‘பார்ட் டைம்’ பவுலரான கேதார் ஜாதவ் கூட, சாம்பியன்ஸ் டிராஃபியில் 12 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

கோலிக்குப் பிரச்சனையே இதுதான். அவரைப் பொறுத்தவரையில் விக்கெட் எடுக்க வேண்டும். ரன் கட்டுப்படுத்துவது குறித்தெல்லாம் அவருக்குக் கவலை இல்லை. “எவ்வளவு வேண்டுமானாலும் ரன் கொடு. ஆனால் விக்கெட் எடு” – இதுதான் கோலியின் தேவை. இந்த விஷயத்தில் அஷ்வின், ஜடேஜா இருவருமே ஃப்ளாப். சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பான இங்கிலாந்து தொடரிலும்கூட அவர்களின் செயல்பாடு சுமார்தான். இருவரும் இணைந்து 57 ஓவர்களில் 345 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தனர். சமீப காலங்களில் பும்ரா, புவி இருவரின் அசாத்திய எழுச்சியால் இருவரின் மோசமான ODI ஃபார்மும் அவ்வளவாகப் பேசப்படாமல் இருந்தது. ஆனால், சாம்பியன்ஸ் டிராபி கோப்பையைக் கைவிட்டது, கோலியை அவர்களைத் தாண்டி யோசிக்க வைத்துவிட்டது.

அஷ்வின்

ஐ.பி.எல் தொடரின் ‘விக்கெட் டேக்கிங்’ பவுலர்களான சாஹலுக்கும், குல்தீப்புக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அக்சரும், ஜடேஜாவின் இடத்துக்கான மாற்றாகத் தெரிய, அஷ்வின், ஜடேஜா இருவருக்குமே ‘ஓய்வு’ என்ற பெயரில் கல்தா கொடுத்தது நிர்வாகம். அக்ஷர், குல்தீப், சாஹல் ஆகியோரின் செயல்பாடு திருப்தியளிக்கவும், ஆஸி தொடரிலும்  அஷ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வளித்தனர். இப்போது தொடர்ந்து மூன்றாவது தொடரிலும் இருவரும் அவுட்.

லெக் ஸ்பின்னர்களின் எழுச்சி

இன்றைய தேதிக்கு லெக் ஸ்பின்னர்கள்தான் ஒவ்வொரு அணிக்கும் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் ட்ரம்ப் கார்ட். மைதானம் சுழலுக்கு ஒத்துழைப்புக் கொடுத்தால்தான் ஆஃப் ஸ்பின்னர்களால் தங்களது முழு திறனையும் வெளிக்காட்ட முடியும். அதனால்தான் இந்திய துணைக்கண்டத்துக்கு வெளியே அஷ்வின், ஜடேஜா அகியோரால் விக்கெட் வேட்டை நடத்த முடியவில்லை. ஆனால், லெக் ஸ்பின்னர்களுக்கு அப்படியில்லை. பந்தை விரல்களால் அல்லாமல், மணிக்கட்டின் மூலம் சுழலச் செய்யும் அவர்களால், சுழலுக்கு ஒத்துழைப்புத் தராத ஆடுகளங்களிலும் எப்படியேனும் சிறப்பாகச் செயல்பட முடியும். ஆகவே, சுழலுக்குப் பெரிய அளவில் ஒத்துழைப்புத் தராத இங்கிலாந்து மைதானத்தில் நடக்கும் 2019 உலகக்கோப்பைக்கு லெக் ஸ்பின்னர்களோடு களமிறங்க முடிவெடுத்துவிட்டார் கேப்டன் விராட்.

அஷ்வின்

சாஹல், குல்தீப் இருவரும் கடந்த இரு தொடர்களிலும் கோலியின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துவிட்டனர். இந்த இரு தொடர்களில், சாஹல் 8 போட்டிகளில்  11 விக்கெட்டுகளும், குல்தீப் 6 போட்டிகளில் 10 விக்கெட்டுகளும் அள்ளினர். இந்த இரு தொடரிலும் இணைந்து 6 போட்டிகளில் ஆடிய அக்ஷரும் தன் பங்குக்கு 9 விக்கெட்டுகள் வீழ்த்தினார். நியூசிலாந்து தொடரில் மட்டும் ஆடிய அமித் மிஷ்ரா 5 போட்டிகளில் 15 விக்கெட்டுகள் அள்ளி தொடர் நாயகனாக, அந்த அனுபவ வீரர்கள் இல்லாமலேயே சுழலில் அசத்தத் தொடங்கிவிட்டது இந்தியா.

“இந்தப் பசங்க இந்தியாலையும், இலங்கையிலும்தான நல்லா அடியிருக்காங்க. வெளியூர்ல ஆடணும்ல..?” என்று கேட்கலாம். உள்ளூர், வெளியூர் என அனைத்து ஏரியாக்களிலும் இந்த இளம் படையிடம் தோற்கிறது அஷ்வின், ஜடேஜா இணையின் டேட்டா. இங்கிலாந்து தொடரில் இருவரும் இணைந்து ஓவருக்கு 6.05 ரன் வீதம் கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தினர். வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் இரு ஆஃப் ஸ்பின்னர்களும் சேர்ந்து 39 ஓவர்கள் பந்துவீசி 4 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தனர். அங்கு, அதே வெஸ்ட் இண்டீஸ் மண்னில், அதே 39 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் அள்ளினார் குல்தீப் யாதவ். ஸோ…லெக் ஸ்பின் வெளிநாட்டு மண்ணிலும் எடுபட்டிருக்கிறது.

அஷ்வின் – ஜடேஜா VS குல்தீப் – சாஹல்

2016 நியூசிலாந்து தொடரிலிருந்து, இதுவரை இந்தியா 6 ஒருநாள் தொடர்களில் விளையாடியுள்ளது. இந்தத் தொடர்களில் அஷ்வின் 8 போட்டிகளிலும், ஜடேஜா 10 போட்டிகளிலும் விளையாடி தலா 8 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர். இவர்கள் இருவர் மூலம் 167 ஓவர்களில் இந்தியாவுக்கு 16 விக்கெட்டுகள் கிடைத்துள்ளது. அதாவது, கிட்டத்தட்ட 63 பந்துகளுக்கு 1 விக்கெட். சாஹல், குல்தீப் இருவரும் அவர்களைப் போலவே முறையே 8 மற்றும் 10 போட்டிகளில் விளையாடியுள்ளனர். ஆனால், இவர்கள் இருவரும் இணைந்து 164.4 ஓவர்களில் 29 விக்கெட்டுகளை அள்ளியுள்ளனர். ஒரு விக்கெட் வீழ்த்த இந்த இணைக்கு சராசரியாகத் தேவைப்பட்டது 34 பந்துகளே.

அஷ்வின்

விக்கெட் வீழ்ச்சியில் மட்டுமல்ல, எகானமி ரேட்டிலும் லெக் ஸ்பின் இணையே பெஸ்ட். இவர்களின் எகானமி 4.85. அஷ்வின், ஜடேஜா இணையின் எகானமி 5.46. இந்த 6 தொடர்களில் இந்திய ஸ்பின்னர்கள் வீழ்த்திய மொத்த விக்கெட்டுகள் 89. அவற்றுள் இந்த அனுபவ இணையின் பங்களிப்பு 17.98 சதவிகிதம் மட்டுமே. குல்தீப், சாஹல் இணைந்து 32.58 சதவிகித விக்கெட் வீழ்சிக்குக் காரணமாக இருந்துள்ளனர். எந்த வகையில் பார்த்தாலும், அஷ்வின், ஜடேஜா இருவரின் பெர்ஃபாமன்ஸை விடவும் குல்தீப், சாஹலின் லெக் ஸ்பின் இணையின் செயல்பாடு இரட்டிப்பாகவே இருக்கிறது.

அதனால், இந்தத் தொடருக்கும் லெக் ஸ்பின்னர்களுடனேயே களம்காண கோலி முடிவெடுத்துவிட்டார். இது வெறுமனே இந்தத் தொடருக்கான முடிவு மட்டுமல்ல. M.S.K.பிரசாத் சொல்லியதுபோல இவை அனைத்துமே உலகக்கோப்பைக்கு தயாராவதற்காக எடுக்கப்படும் முடிவுகள். உலகக்கோப்பைக்கு எந்த அணி செல்ல வேண்டும் என்பதில் கோலி கிட்டத்தட்ட இப்போதே முடிவெடுத்துவிட்டார். கோலி, தவான், ரோஹித், தோனி, பாண்டியா, பூம்ரா, புவி ஆகிய ஏழு பேரும் இங்கிலாந்து உலகக்கோப்பையின் முதல் போட்டியில் நிச்சயம் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார்கள். ‘பார்ட் டைம்’ பவுலராக நம்பிக்கை தருவதால், ஜாதவுக்கு வாய்ப்புகள் அதிகம். இங்கிலாந்தில் 1 ஸ்பின்னரை மட்டுமே களமிறக்குவார்கள் என்பதால் ஷமிக்கு இடம் உறுதி. அந்த ஸ்பின்னருக்கான இடம், சாஹல், குல்தீப் இருவரில் ஒருவருக்குத்தான். எனவே அஷ்வின், ஜடேஜா ஆகியோரின் உலகக்கோப்பைக் கனவு கலைந்துவிட்டது என்பது அறிவிக்கப்படாத உண்மை.

 

கோலி தனது மிஷனில் ஷார்ப். அதனால் இந்த மூன்று இளம் ஸ்பின்னர்களில் இருவர்தான் இங்கிலாந்து பயணிக்கப் போகின்றனர். ஜடேஜாவும், அஷ்வினும் இப்போதிலிருந்து டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்கள். இனி இந்தியாவின் நீல வண்ண உடையில் அவர்களைப் பார்ப்பது மிகவும் கடினம். இனி ஐ.பி.எல் மட்டுமே அவர்கள் விளையாடும் ஷார்ட் ஃபார்மட் போட்டியாக இருக்கலாம்!

http://www.vikatan.com/news/sports/105129-is-ashwin-and-jadejas-chance-of-playing-2019-world-cup-coming-to-an-end.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.