Jump to content

வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசர் ஸ்ரீபவன்?

Recommended Posts

 வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசர் ஸ்ரீபவன்?

Unknown.jpg
 
வடமாகாண சபைக்கான அடுத்த தேர்தல் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுமாறு முன்னாள் பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு வார இறுதி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த அழைப்பினை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
வடமாகாணத்தின் தற்போதைய முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் நிலவி வரும் கருத்து முரண்பாடுகள் காரணமாக, அடுத்த தேர்தலில் ஸ்ரீபவனை களமிறக்குவதற்கு முயற்சிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
அண்மையில் முன்னாள் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
 
தேர்தலில் போட்டியிடுமாறு விடுக்கப்பட்ட அழைப்பிற்கு ஸ்ரீபவன் இதுவரையில் தமது உறுதியான பதில் எதனையும் அளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
 
தற்போதைய முதலமைச்சர் விக்னேஸ்வரன், எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் புதிய கூட்டமைப்பு ஒன்றை அமைத்து போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக குறித்த ஊடகத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
 
பிரதம நீதியரசர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டதன் பின்னர் ஸ்ரீபவன் தற்போது சில தனியார் நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் சிங்களத்துக்குக்  கழுவிவிட்டு தமது இறுதிக்காலத்தில் குடாநாட்டுப்பக்கம் வருகினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Elugnajiru said:

எல்லோரும் சிங்களத்துக்குக்  கழுவிவிட்டு தமது இறுதிக்காலத்தில் குடாநாட்டுப்பக்கம் வருகினம்

இஞ்சை புலம்பெயர்தேசங்களிலை இருக்கிற எங்கடை ஆக்களும்....இளந்தாரி வயசிலை செய்யிற நாதாரி வேலையெல்லாத்தையும் செய்து போட்டு இப்ப கோயில்வழியை நிண்டு அன்னதானம் குடுக்கிறதும்....அங்கப்பிரதட்சணம் செய்யுறதுமாய் திரியினம்.

செய்யுறதையும் செய்து போட்டு கடைசிகாலத்துக்கு புண்ணியம் தேடீனமாம்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

பிரதம நீதியரசர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டதன் பின்னர் ஸ்ரீபவன் தற்போது சில தனியார் நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆள் இன்னமும் காசு தேடுவதில் குறியா இருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாரப்பா, விக்கியரை வெருட்ட, புதுக்கரடி விடுறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

இஞ்சை புலம்பெயர்தேசங்களிலை இருக்கிற எங்கடை ஆக்களும்....இளந்தாரி வயசிலை செய்யிற நாதாரி வேலையெல்லாத்தையும் செய்து போட்டு இப்ப கோயில்வழியை நிண்டு அன்னதானம் குடுக்கிறதும்....அங்கப்பிரதட்சணம் செய்யுறதுமாய் திரியினம்.

செய்யுறதையும் செய்து போட்டு கடைசிகாலத்துக்கு புண்ணியம் தேடீனமாம்.:cool:

அப்படி போடுங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாயையும், கண்ணையும் மூடிக்கொண்டு அவர்ளுக்குப்பின்னால் போனால், அவர்கள் காட்டுபவர்களுக்குஎல்லாம்   கும்பிடு போட்டால் உண்டு, இல்லை தமிழ் மக்களுக்கு ஏதும் நன்மை செய்ய வெளிக்கிட்டாரோ நாறடிக்கப்படுவார். முதல்வர் விக்கியின் நிலையை எண்ணிப்பார்த்தால் மானமுள்ள எவனும் இவர்களோடு சங்காத்தம் வைக்க மாட்டார்கள். இதற்கு தன்சுய  பெருமையோடு  முன்னாள் நீதியரசராக இருப்பதே    கவுரவம்.  முதலமைச்சர் பதவிக்கு மாவையரே பொருத்தமானவர் என்று முழங்கிச்சினம் இப்ப ஆள் தேடுகினம். முதல்வர் தோக்கப்போறார் என்று சவால் விட்டினம் இப்போ   அவர்களுக்கே அந்தப் பயம் வந்திட்டுது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.