Jump to content

ஸ்லீப்பர் செல்' தீபாவளி!


Recommended Posts

ஸ்லீப்பர் செல்' தீபாவளி!
 
 
 
E_1507806278.jpeg
 

விடிந்தால் தீபாவளி; கையில், மொபைல் போனுடன், ஆழ்ந்த, 'ஸ்லீப்'பில் இருந்த தாண்டவராயனை, அதிரடியாக எழுப்பினாள், மனைவி அலமேலு...
''உங்களுக்கென்ன பெரிய, 'ஸ்லீப்பர் செல்'லுன்னு நெனைப்பா... கையில செல்லை பிடிச்சு, குறட்டை விட்டு தூங்கினுக்கிறீங்க... ராத்திரி, பிரேக்கிங் நியூஸ்ல, அந்த ரிசாட்காரங்களுக்கு ஒரு ஆளு குறையுதுன்னு சொன்னாங்கல்ல... பொழைக்கத் தெரிஞ்ச ஜன்மமாயிருந்தா, எப்படா விடியும்ன்னு தூங்காம காத்திருந்து, விடிஞ்சதும் ஓடிப் போய் ஆதரவு கொடுத்து, தலைவர் தர்றத வாங்கிக்கினு வரும்...'' என்று அர்ச்சித்தவள், ''சட்டுபுட்டுன்னு தலைக்கு ஊத்துகினு, தீபாவளி பலகாரம் சாப்பிட்டுட்டு, ரிசார்ட்டுக்கு ஓடப்பாருங்க. உங்களுக்கு முன் பக்கிரிசாமி போயிடப் போறாரு,'' ஊசி பட்டாசாக அலமேலு வெடிக்க, ராக்கெட் வேகத்தில் எழுந்தார், தாண்டவராயன்.


தனி ஒரு ஆசாமியாய் தானுண்டு, தன் கட்சி உண்டு என்று, தாண்டவராயன் சமூகத் தொண்டு புரிய வந்து, ஏழு ஆண்டுகளாகிறது. வேறு ஒரு பலமான கட்சி ஒதுக்கிய தொகுதியில், தனக்கென ஒரு சின்னம் வாங்கி வேஸ்ட் செய்யாமல், அந்த கட்சி சின்னத்திலேயே போட்டியிட்டதால், அரசியல் அந்தஸ்தை பெற்றிருந்தார்.
ஆனாலும், 'தொகுதி பக்கம் தலை வைத்து படுத்தாயா...' என்று யாரும் கேட்டுவிடாத வகையில், எந்நேரமும், எல்லார் பார்வையில் படும்படி சுற்றித் திரிந்தும், அவருடைய சுற்றங்களும், நட்புகளும், அவரை அரசியல்வாதியாக அங்கீகரிக்கவில்லை.


இது, அவரை விட, அவர் மனைவி அலுமேலுவை தான், பெரிதும் கவலைக்குள்ளாக்கியிருந்தது. அவளின் இந்த விசாரத்தைப் போக்கும் மருந்தாக, 'ரிசார்ட் அரசியல்' கலாசாரம் உருவெடுத்திருந்தது.
எதிர் கட்சிகளும், எதிர் அணியும் சமாதானம் ஆகிவிடுவரோ என்ற நிலையில், தங்களுக்கு பிடித்த சில தொகுதி தொண்டர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு மாதக்கணக்கில் ஓய்வும், உற்சாகமும் அளிக்கும், பொதுநல தொண்டாக, 'ரிசார்ட் அரசியலை' செய்து கொண்டிருந்தனர், சில தலைவர்கள்.


இப்படி ஒரு ஓய்வும், உற்சாகமும், தங்களுக்கு கிட்டவில்லையே என்று ஏங்கியவர்களில் தாண்டவராயனும் ஒருவர். ஆனால், இயல்பாகவே அவரிடமிருந்த அடக்க குணமும், அரசியலுக்கு தேவையான ஆர்பாட்டம், அலட்டலும் இல்லாததால், 'ஸ்லீப்பர் செல்' என்ற குறைந்தபட்ச அந்தஸ்து கூட, அவருக்கு கிட்டவில்லை.
இந்நிலையில், 'ரிசார்ட்' அரசியல் செய்யும் கட்சித் தலைவர், நேற்று இரவு, 'டிவி'யில் தோன்றி, பேட்டி அளித்தார்...
'அனைவருக்கும் என் தீபாவளி வாழ்த்துகள்; ஆட்சியை காப்பாற்றவும், எங்களோடு ரிசார்ட்டில் தீபாவளி கொண்டாடவும், ஒரே ஒருவர் தேவைப்படுகிறார். நாளை, எங்களோடு கை கோர்க்க வரும் அந்த நபருக்கு, தீபாவளி சிறப்பு பரிசாக, பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. யார் முதலில் வருகிறாரோ, அவருக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும். இந்த அரிய வாய்ப்பை நழுவ விட வேண்டாம்...' என்று அறிவித்தார்.
அதைப் பார்த்த சம்பந்தப்பட்ட அனைவரின் வாயிலும், தீபாவளி அல்வா ஊறியது. அலமேலுவுக்கு, தன் கணவரை, 'ஸ்லீப்பர் செல்' ஆக்கிவிடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.



அலமேலுவுக்கு பயந்து, 'மடமட'வென்று கங்கா ஸ்நானம், இத்யாதி சமாசாரங்களை முடித்தாலும், ரிசார்ட்டுக்கு போவதில் தாண்டவராயனுக்கு கொஞ்சம் பயமாய் இருந்தது. அதனால், சட்டென்று கிளம்பாமல், தயங்கி நின்றார்.
''ஏன் மிரண்டு போய் நிக்குறீங்க... உங்களுக்கு முன் பக்கிரிசாமி போயிடப்போறாரு... நம்ப நல்ல நேரம், இப்போ, அவங்க, நம்ம ஊர் ரிசார்ட்டுல இருக்காங்க. சீக்கிரம் கிளம்புங்க,'' என்று அவசரப்படுத்தினாள், அலமேலு.
''அலமேலு... நான் கொஞ்சம் மதிப்பா அரசியல்ல காலம் தள்ளிட்டிருக்கேன்; இப்போ, நான் ரிசார்ட் போறத யாராவது பாத்தா, கேவலமா நினைக்க மாட்டாங்களா...'' என்று கெஞ்சும் குரலில் கேட்டார்.


''யோவ்... என்ன பெரிசா மானம், அவமானம்ன்னு பேசுறே... பக்கிரிசாமி பொண்டாட்டி, என் கண் முன், ஆடி கார்ல வந்து இறங்கி, நகையும், நட்டுமா அள்ளிட்டு போறத பாத்தா, எனக்கும் தான் உன் பொண்டாட்டின்னு சொல்ல, மானம் போவுது. நேத்து அரசியலுக்கு வந்தவன் கூட, நாலு தலைமுறைக்கு சொத்து சேத்து வச்சுருக்கான். உனக்கு ஒரு துப்பு இல்ல; இப்போ, ஒரு, 'சான்ஸ்' வந்திருக்கு; அதையும் வுட்டுட்டு நிக்கப்போறயா...'' என்று அணுகுண்டு பட்டாசாக வெடித்தாள், அலமேலு.
''இல்ல... விடிஞ்சு போச்சு; யாராவது என்னை பாத்துடப் போறாங்களேன்னு தான்...'' என்று, பம்மினார்.
சில நொடிகள் யோசித்தவள், ''இந்த முகரக்கட்டைய யாரும் பாக்கக்கூடாதுன்னு தானே பயப்படுறே... இரு வர்றேன்...'' என்று சொல்லி, வேகமாக உள்ளே சென்றாள்.


பின், அதே வேகத்தில் திரும்பியவளின் கையில், கிண்ணத்தில், தீபாவளி லேகியம் இருந்தது.
''அலமேலு... நான், ஏற்கனவே லேகியம் சாப்பிட்டாச்சு...''என்றார், பரிதாபமாக!
அதை, காதில் வாங்காமல், லேகியத்தை கையில் வழித்தெடுத்தாள், அலமேலு.
''லேகியம் சாப்பிட்டா, தைரியம் வரும்ன்னு நேத்து,'டிவி'யில், 'தீபாவளி தின்பண்டம்' நிகழ்ச்சியில், சமையல் மாமி சொன்னத கேட்டு, இத்தனை லேகியத்தை எடுத்து உருட்டறயே... இவ்வளவையும் தின்னா, போற வழியில வயிறு கடமுடான்னு பேஜாராயிடும்...'' என்று, கூறி, ஒரு அடி பின்னால் நகர்ந்தார், தாண்டவராயன்.
''அடச்சீ... இது, நீ துண்றதுக்கு இல்ல... உன் மூஞ்சிய காட்டு,'' என்று கூறி, சுவற்றில் பசையை அப்புவது போல், தாண்டவராயனின் முகத்தில், லேகியத்தை அப்பினாள்.


இந்த திடீர் தாக்குதலை எதிர்பாராததால், ''எரியுதே... எரியுதே...'' என்று கத்தினார்.
''சும்மா கத்தாத... உன்னை மாதிரி அரசியல்ல நுழைஞ்சவ னெல்லாம், ஊர் பூரா சொத்து சேர்த்து வைச்சிருக்கிறதைப் பாத்தா, எனக்குக் கூடத் தான் வயிறு எரியுது; கொஞ்ச நேரமானா எரிச்சல் நின்னுடும். இப்ப, உன்னை எவனாலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. அப்படியே, ரிசார்ட் போய், தலைவரை பாக்கறதுக்கு முன், மறக்காம கழுவிடு...''
போருக்கு செல்லும் கணவருக்கு, புறநானுாற்று வீரமங்கை, வீர திலகம் இட்டு அனுப்புவது போல், தாண்டவராயனுக்கு லேகிய பூச்சு பூசி அனுப்பினாள்,
அலமேலு.

நமுத்துப்போன பட்டாசு திரி மாதிரி, மெதுவாக ரிசார்ட்டை நோக்கி காரில் பயணித்தவரின் மனதில், அதுவரை, அவருக்கே தெரியாமல் பதுங்கியிருந்த அல்ப ஆசைகள், 'ஸ்லீப்பர் செல்'லாகத் தலைக்காட்ட துவங்கின. 'வருங்கால அரசியலில், அந்தஸ்தான இடம் கிடைப்பது, ஒரு பக்கமிருந்தாலும், அலமேலுவின் டார்ச்சரிலிருந்து தப்பிக்க, தலைவர் தரப்போகும் தீபாவளி சிறப்பு பரிசு தான், இப்போதைக்கு தேவை. ஊரெல்லாம் வதந்தி பேசுவது போல், அது, ஒரு அரை கிலோ தங்கமாக இருந்தால் கூட போதும்; அலமேலுவின் நச்சு இருக்காது...' என்று எண்ணியதும், அவருக்குள் உற்சாகம் ஊற்றெடுத்தது.

லேகியம் பூசிய முகத்துடன், ரிசார்ட்டில் நுழைந்தவர், ஆர்வக் கோளாறால், அலமேலு சொன்னதை மறந்து, முகத்தை கழுவாமல் தலைவரின் அறைக்கு ஓடினார்.
முதலில் வரப்போகும், 'ஸ்லீப்பர் செல்' யாராக இருக்கும் என்ற ஆவலுடன் உட்கார்ந்திருந்த தலைவரை நெருங்கி, தான் கொண்டு போன சால்வையை போர்த்த முற்பட்டார்.
''இதெல்லாம் எதுக்கு தம்பி... நாமதான், இத்தனை நாளா, ஒண்ணுக்குள்ள ஒண்ணா இங்கேயே கிடக்கோமே... ஏதோ புதுசா வந்தவர் போல, சால்வையெல்லாம் போத்த வர்றீங்க... நான் ஒரே ஒரு ஆசாமிக்காக காத்துட்டு இருக்கேன்; தயவு செஞ்சி, 'டிஸ்டர்ப்' செய்யாம, போய் அந்த பியூட்டி பார்லர்ல உட்காருங்க...'' என்று தலைவர் சொன்னதும், ''தலைவர் தான் சொல்றாரு இல்ல... வாங்க,'' என்று அடியாட்கள் இரண்டு பேர், அவரை அலேக்காக தூக்கி, அங்கிருந்த பெரிய பார்லரில் உள்ளே தள்ளி, கதவை சாத்தினர்.


அங்கே, நூற்றுக்கும் அதிகமானோர், முகத்தில் கருப்பு களிம்பை பூசியபடி, 'டிவி' பார்ப்பதும், பேசுவதுமாக உட்கார்ந்திருந்தனர். அவர்களை யார், எவர் என்று அடையாளம் காண முடியவில்லை. அதேபோன்று, அலமேலு இட்டு அனுப்பிய லேகியம், தாண்டவராயனையும், அவர்களுக்கு இனம் காட்ட முடியாதபடி செய்திருந்தது.
'திருதிரு'வென்று தாண்டவராயன் முழிப்பதை யாரும் கண்டுகொள்ளாமல், 'டிவி'யில் லைவ்வாக காட்டிய எதையோ ஆவலோடு பார்த்தபடி இருந்தனர்.
அடுத்த சில நொடிகளில், தடாலென்று, 'வெற்றி... நம் அணிக்கு மாபெரும் வெற்றி...' என்று கூவியபடியே, எல்லார் வாயிலும் லட்டை திணித்தனர், சிலர்.
சுதாரித்து, 'டிவி' யை பார்த்த தாண்டவராயன் திடுக்கிட்டார்.
பக்கிரிசாமி மிக பவ்யமாக, தலைவர் அறையில் நுழைவதையும், தலைவருக்கு, சால்வை போத்துவதையும், அவரை, தலைவர் ஆலிங்கனம் செய்வதையும், 'டிவி' திரை, பிரேக்கிங் நியூஸ் மியூசிக்குடன், திரும்பத் திரும்ப காட்டியது. அதைப் பார்த்த தாண்டவராயனுக்கு தலை சுற்றியது.


''ஆட்சியைக் காப்பாற்ற தேவையான ஒரே ஒருவரும், தீபாவளி பரிசாக வந்து விட்டார். இனி, யார் வந்தாலும், வராவிட்டாலும், கவலையில்லை. ஆட்சியை காப்பாற்ற வந்த தங்கமகனுக்கு, எத்தனை தங்கம் கொடுத்தாலும் தகும்,'' என்று, பூடகமாக தலைவரின் பாராட்டுகள் பாதாளம் வரை பாய்ந்தன.
எப்படியும், இந்த தீபாவளி திருநாளில், யாரோ ஒரு, 'ஸ்லீப்பர் செல்' தங்கள் அணிக்கு வந்து சேர்ந்து விடுவர் என்ற நம்பிக்கையோடு, அப்படி சேர்ந்தால், அன்றே வெற்றி விழா கொண்டாட திட்டம் போட்டிருந்தார், தலைவர்.


அதன் காரணமாக, மாதக்கணக்காக ரிசார்ட்டில் இருக்கும், 'ஸ்லீப்பர் செல்'களின் முகம் பிரகாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக, எல்லாருக்கும் பேஷியல் செய்துவிட நினைத்தது தலைவரின் பிசகல்ல. அதேநேரம், பேசியல் களிம்புகளோடு அனைவரும் இருக்கும் போது, தாண்டவராயனும் லேகிய முகத்துடன், ரிசார்ட் வந்தது தான், விதியின் விளையாட்டு!


நூறோடு நூற்று ஒன்றாக, தாண்டவராயனை இந்தக்கூட்டத்தில் சேர்த்து விட்டு, பக்கிரிசாமி பரிசை தட்டிச் சென்றதும், விதியின் செயலே!
இந்நிகழ்ச்சியை, வீட்டில், 'லைவ்'வாக பார்த்துக் கொண்டிருந்த அலமேலு, ஒன்றும் புரியாமல், மயங்கி விழுந்ததும், விதி செய்த சதியே!

http://www.dinamalar.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.