Jump to content

இலங்கையில் மாஸ் காட்டும் மெர்சல் கட்- அவுட்: செலவு எத்தனை லட்சம் தெரியுமா?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் மாஸ் காட்டும் மெர்சல் கட்- அவுட்: செலவு எத்தனை லட்சம் தெரியுமா?

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் படம் மெர்சல். தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் இப்படத்திற்கு கேளிக்கை வரி, சென்சார் பிரச்சனை, விலங்கு நல வாரியம் நோட்டீஸ் என ஒரு பக்கம் பல பிரச்சனைகள் இருந்தாலும், ரசிகர்களின் ஆரவாரம் மறுபக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

மெர்சல் வெளியாகவுள்ள தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது.

இலங்கையில் மாஸ் காட்டும் மெர்சல் கட்- அவுட்: செலவு எத்தனை லட்சம் தெரியுமா?

இந்நிலையில் மெர்சல் படத்தை வரவேற்பதில் தமிழகத்திற்கு இணையான அளவிற்கு இலங்கை ரசிகர்களும் முனைப்பு காட்டி வருகின்றனர். அங்கு ஒரு லட்சம் மதிப்பில், 80 அடியில் விஜய்க்கு கட்- அவுட் வைத்துள்ளனர். மேலும் பல இடங்களில் சிறிய அளவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட் அவுட் வைக்க 2 லட்சத்திற்கும் மேல் செலவு செய்துள்ளார்களாம் இலங்கை ரசிகர்கள்.

இலங்கையில் மாஸ் காட்டும் மெர்சல் கட்- அவுட்: செலவு எத்தனை லட்சம் தெரியுமா?

https://news.ibctamil.com/ta/internal-affairs/mersal-cut-out-of-vijay-film-at-srilanka

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுடன் சம்பந்தப்பட்ட நாடுகளை தவிர்த்து மற்றைய நாடுகளில் இந்த சினிமா கட் அவுட் கலாச்சாரம் இல்லை. கோவில்களில்  பால் ஊத்துவதும் இல்லை கட் அவுட்டுக்கு பால் ஊத்துறதுமில்லை.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பன்றியோட சேந்தாச்சு...!

இனிப் பவி தின்ன வேண்டியது தான்..!:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கொஞ்சநாளில்....  தமது ரசிகரின் படம் வெற்றி பெற,
அலகு குத்தி காவடி எடுப்பதும், ஆடு போன்றவற்றை திரையரங்கு வாசலில்...பலி கொடுப்பதும்,  நடக்கத்தான் போகின்றது.
போராட்டம் நடந்த மண்ணில்... இப்படிச்  செய்வது, சரியல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Personen, die sitzen

வீரம் விளைந்த... வல்வெட்டித்துறை மண்ணில்,    மெர்சல் படத்திற்கு  கட் அவுட் கட்டுகின்றார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Personen, die sitzen

வல்வெட்டித்துறை சந்தியில் கட்டப்பட்ட விஜய்யின் கட்டவுட் இனம்தெரியாத நபர்களால் நேற்று இரவு கிழிக்கப்பட்டுள்ளது...

வீரம் விளைந்த... வல்வெட்டித்துறை மண்ணில்,    மெர்சல் படத்திற்கு  கட் அவுட் கட்டுகின்றார்கள். 

Image may contain: people standing, sky, basketball court and outdoor

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழரசு said:

Image may contain: people standing, sky, basketball court and outdoor

வல்வெட்டித்துறை.... கடல் காத்துக்கு, கட் அவுட் கிழிந்து விட்டது  போலுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இளம் சமுதாயத்தை கஞ்சா, வாள்வெட்டு, குழுச்சண்டை,  சினிமா பைத்தியம் என்று பிஸியாய் வைத்திருந்தால் நாட்டில் நடக்கும் அனிஞாயங்களைப்பற்றி கவனிக்கவோ, சிந்திக்கவோ,அதற்கு எதிராக செயற்படவோ மாட்டாது. தாம் நினைத்ததை சாதிக்க நன்றாக செயற்படுகிறது சிங்களம்.  இதுகள் படிப்பறிவு, வேலைவெட்டியில்லாமல் அலைந்து அழிய வேண்டியதுதான். தன் மானமிழந்த தமிழர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, sky and outdoor

யாழ் நகரில் வைக்கப்பட்ட 35 அடி உயரமான நடிகர் விஜய் காட்அவுட் எரிப்பு

ஈழத்தில் சினிமா நடிகர்களின் காட்அவுட் காலாச்சாரம் தொடர்ந்து அழிக்கப்படும் தமிழ் தேசிய உணர்வாளர்கள் தெரிவிப்பு ....

படம் பார் வீட்டு செல் மகிழ்சியாக இருஆனால் காட்அவுட் காலாச்சாரம் வேண்டாம்.

FB

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

வல்வெட்டித்துறை.... கடல் காத்துக்கு, கட் அவுட் கிழிந்து விட்டது  போலுள்ளது.

வல்வெட்டித்துறை மக்களின் போராட்டத்துக்கு வெற்றி; நகரசபையினால் அகற்றப்பட்டது விஜய் கட் அவுட்

IMG_8450.jpg

வல்வெட்டித்துறை சந்தியில் நேற்று முன்தினம் தனிப்பட்ட சிலரினால் அமைக்கப்பட்ட நடிகர் விஜயின் கட் அவுட்பிரதேச பிரதேச மக்களினால் வல்வெட்டித்துறை நகரசபையில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் படி பொலிசாரின் உதவியுடன் மேற்கொண்ட நடவடிக்கை மூலம் அகற்றப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இந்த கட் அவுட் அமைக்கப்பட்ட போதும் அன்று இரவே இனம் தெரியாத சிலரினால் கிழிக்கப்பட்டிருந்தது. ஆனால் கிழிக்கப்பட்ட அந்த கட் அவுட்டுக்கு அருகிளேயே மீண்டும் நேற்று ஓர் புதிய கட் அவுட் முளைத்திருந்தது.

இந்த விடையத்திற்கு பல தரப்புகளில் இருந்தும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், நேரடியாகவும் பலத்த எதிர்ப்பு உருவாகியிருந்தது. இதற்கு ஒரு படி மேலே சென்று சில சமூக நலன் விரும்பிகளால் வல்வெட்டித்துறை நகரசபையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து நகர சபையினரால் அனுமதி பெறப்படாமல் பொது இடத்தில் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளதாக, வல்வெட்டித்துறை பொலிசாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து நேற்றய தினம் இரவு 11.45 மணியளவில் சம்பவ இடத்திற்கு சென்ற பிரதேச பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர், அக் கட் அவுட்களை நிறுவிய நபர்களை அழைத்து, உடனடியாக அவர்கள் மூலமாகவே அவற்றினை அகற்றியதோடு, அவர்களை எச்சரித்து விட்டு சென்றனர். இச் சம்பவம் குறித்து அப்பிரதேசவாசிகள் கருத்து தெருவிற்கும் போது, “எங்கள் ஊரின் புனிதத்தன்மையை அறியாத சில அறிவானவர்கள் மேற்கொண்ட இச்செயலினால் இன்று ஒட்டுமொத்த வல்வெட்டித்துறை சமூகமும் தலைகுனிவினை சந்தித்திருந்தது. ஆனால் இன்று மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த செயலினால் “எத்தனை இடர்கள் எம் பாதையில் தோன்றினாலும், அவற்றினை உடைத்து என்றும் நான் எமக்கான தனித்துவத்தினை காப்போம்” என்பது உறுதியாகியுள்ளது. மேலும் இவ் விடையமானது எம் எதிர்காலச் சந்ததியினருக்கு ஓர் சிறந்த பாடமாக அமைந்துள்ளது. எதிர்காலத்தில் இவ்வாறான அசம்பாவிதங்கள் ஏற்படாது என நம்புவோமாக. எம் மண்ணின் தனித்துவத்தை மீட்பதற்காக குரல் கொடுத்த அனைத்து முகநூல் நட்புக்களுக்கும், சமூக சிந்தனையாளர்களுக்கும், நகரசபை, பிரதேச பொலிசார் மற்றும் இவ் கட் அவுட் அகற்றலுக்கு பின்னால் இருந்து செயற்பட்ட அனைவருக்கு நன்றியினை தெரிவிக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

http://valvainews.org/?p=60661

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

உச்சக்கட்டம்  இதுதான் போல்:rolleyes:

கட்டவுட்டோடை சாதியும் அடங்கியிருக்கு போலை..:cool:

வல்வைசகாரா தனது முகப்புத்தகத்தில் இதுபற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ஏனோ இங்கு அதை இங்கு பகிரவில்லை:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

கட்டவுட்டோடை சாதியும் அடங்கியிருக்கு போலை..:cool:

வல்வைசகாரா தனது முகப்புத்தகத்தில் இதுபற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ஏனோ இங்கு அதை இங்கு பகிரவில்லை:unsure:

ம்ம் நானும் வாசித்தேன் இதில் யாழ்ப்பாணத்துக்கும் மட்டக்களப்புக்கும் போட்டி முகநூலில் நல்லா போட்டு கத்தி கிளிச்சதலா இனி கடைசி கட்டவுட் இதுதான் என அறிவித்துள்ளார்கள் மண்ட காஞ்சதுகளிடம் கதைக்க இயலாது   வல்வையிலும் வைத்துள்ளதாக எழுதினார் ஆனால் இங்கு இணைக்கவில்லை 

28 minutes ago, Paanch said:

மனித உருவத்தில் பிறந்துள்ள ஒரு அசிங்கம்.

இது தான் இப்ப உள்ள ஈழம் இது போல் நிறைய திரியுது  ( வட கிழக்கு) இதை புரிந்து கொள்ள மறுக்கின்றனர் இதையெல்லாம் நீங்க ஏன் திருத்த இயலானது என   கேட்கலாம் இதெல்லாம் திருந்தாது நான் கூட புதிய படங்கள் மிக தரமானவையாக இருந்தால் பார்ப்பவன் தான் ஆனால் அடிமை இல்லை இப்படி  இறுதியாக பார்த்தது பாகுபலி  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ம்ம் நானும் வாசித்தேன் இதில் யாழ்ப்பாணத்துக்கும் மட்டக்களப்புக்கும் போட்டி முகநூலில் நல்லா போட்டு கத்தி கிளிச்சதலா இனி கடைசி கட்டவுட் இதுதான் என அறிவித்துள்ளார்கள் மண்ட காஞ்சதுகளிடம் கதைக்க இயலாது   வல்வையிலும் வைத்துள்ளதாக எழுதினார் ஆனால் இங்கு இணைக்கவில்லை 

இது தான் இப்ப உள்ள ஈழம் இது போல் நிறைய திரியுது  ( வட கிழக்கு) இதை புரிந்து கொள்ள மறுக்கின்றனர் இதையெல்லாம் நீங்க ஏன் திருத்த இயலானது என   கேட்கலாம் இதெல்லாம் திருந்தாது நான் கூட புதிய படங்கள் மிக தரமானவையாக இருந்தால் பார்ப்பவன் தான் ஆனால் அடிமை இல்லை இப்படி  இறுதியாக பார்த்தது பாகுபலி  

முதலில் பார்த்து ரசித்துவிட்டு போவது வேறு பொன்னான இளவயதை யாரோ ஒரு கூத்தாடிக்கு தாரைவார்த்து குடுப்பது போதைவஸ்த்துவுக்கு அடிமையான நிலைக்கு ஒப்பானது புலம்பெயர் நாடுகளிலும் இந்தப்படம் ஓடும் ஆகக்கூடுதலா தியேட்டரில் ஒரு கத்து கத்துவார்கள் அவ்வளவுடன் சரி .

மேலே அந்த பொடி அப்படி கதைப்பதுக்கு புலம்பெயர் நான் உள்ளடங்கலாக காரணம் உதவிதான் என்று பணத்தை அனுப்பினோம் அறிவை குடுக்க பின் நின்றுவிட்டம் அவர் அனேகமா 95க்கு பிறகு யாழில் பிறந்தாதாய் இருக்கும் அவருக்கு நிகழ்கால எங்கள் நாயகர்கள் யார் என்று தெரியாமலே வளர்ந்து உள்ளது பார்த்து இருந்தால் அதன் வாய் இப்படி பேசாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

அது அனேகமா 95க்கு பிறகு யாழில் பிறந்தாதாய் இருக்கும் அதுக்கு நிகழ்கால எங்கள் நாயகர்கள் யார் என்று தெரியாமலே வளர்ந்து உள்ளது பார்த்து இருந்தால் அதன் வாய் இப்படி பேசாது .

அப்படித்தான் நானும் நினைக்கின்றேன் பெருமாள். 

3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 வல்வையிலும் வைத்துள்ளதாக எழுதினார் ஆனால் இங்கு இணைக்கவில்லை 

வல்வெட்டித்துறை மக்களின் போராட்டத்துக்கு வெற்றி; நகரசபையினால் அகற்றப்பட்டது விஜய் கட் அவுட்

IMG_8450.jpg

வல்வெட்டித்துறை சந்தியில் நேற்று முன்தினம் தனிப்பட்ட சிலரினால் அமைக்கப்பட்ட நடிகர் விஜயின் கட் அவுட்பிரதேச பிரதேச மக்களினால் வல்வெட்டித்துறை நகரசபையில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் படி பொலிசாரின் உதவியுடன் மேற்கொண்ட நடவடிக்கை மூலம் அகற்றப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இந்த கட் அவுட் அமைக்கப்பட்ட போதும் அன்று இரவே இனம் தெரியாத சிலரினால் கிழிக்கப்பட்டிருந்தது. ஆனால் கிழிக்கப்பட்ட அந்த கட் அவுட்டுக்கு அருகிளேயே மீண்டும் நேற்று ஓர் புதிய கட் அவுட் முளைத்திருந்தது.

இந்த விடையத்திற்கு பல தரப்புகளில் இருந்தும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், நேரடியாகவும் பலத்த எதிர்ப்பு உருவாகியிருந்தது. இதற்கு ஒரு படி மேலே சென்று சில சமூக நலன் விரும்பிகளால் வல்வெட்டித்துறை நகரசபையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து நகர சபையினரால் அனுமதி பெறப்படாமல் பொது இடத்தில் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளதாக, வல்வெட்டித்துறை பொலிசாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து நேற்றய தினம் இரவு 11.45 மணியளவில் சம்பவ இடத்திற்கு சென்ற பிரதேச பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர், அக் கட் அவுட்களை நிறுவிய நபர்களை அழைத்து, உடனடியாக அவர்கள் மூலமாகவே அவற்றினை அகற்றியதோடு, அவர்களை எச்சரித்து விட்டு சென்றனர். இச் சம்பவம் குறித்து அப்பிரதேசவாசிகள் கருத்து தெருவிற்கும் போது, “எங்கள் ஊரின் புனிதத்தன்மையை அறியாத சில அறிவானவர்கள் மேற்கொண்ட இச்செயலினால் இன்று ஒட்டுமொத்த வல்வெட்டித்துறை சமூகமும் தலைகுனிவினை சந்தித்திருந்தது. ஆனால் இன்று மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த செயலினால் “எத்தனை இடர்கள் எம் பாதையில் தோன்றினாலும், அவற்றினை உடைத்து என்றும் நான் எமக்கான தனித்துவத்தினை காப்போம்” என்பது உறுதியாகியுள்ளது. மேலும் இவ் விடையமானது எம் எதிர்காலச் சந்ததியினருக்கு ஓர் சிறந்த பாடமாக அமைந்துள்ளது. எதிர்காலத்தில் இவ்வாறான அசம்பாவிதங்கள் ஏற்படாது என நம்புவோமாக. எம் மண்ணின் தனித்துவத்தை மீட்பதற்காக குரல் கொடுத்த அனைத்து முகநூல் நட்புக்களுக்கும், சமூக சிந்தனையாளர்களுக்கும், நகரசபை, பிரதேச பொலிசார் மற்றும் இவ் கட் அவுட் அகற்றலுக்கு பின்னால் இருந்து செயற்பட்ட அனைவருக்கு நன்றியினை தெரிவிக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

http://valvainews.org/?p=60661

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ம்ம் நானும் வாசித்தேன் இதில் யாழ்ப்பாணத்துக்கும் மட்டக்களப்புக்கும் போட்டி முகநூலில் நல்லா போட்டு கத்தி கிளிச்சதலா இனி கடைசி கட்டவுட் இதுதான் என அறிவித்துள்ளார்கள் மண்ட காஞ்சதுகளிடம் கதைக்க இயலாது   வல்வையிலும் வைத்துள்ளதாக எழுதினார் ஆனால் இங்கு இணைக்கவில்லை 

இது தான் இப்ப உள்ள ஈழம் இது போல் நிறைய திரியுது  ( வட கிழக்கு) இதை புரிந்து கொள்ள மறுக்கின்றனர் இதையெல்லாம் நீங்க ஏன் திருத்த இயலானது என   கேட்கலாம் இதெல்லாம் திருந்தாது நான் கூட புதிய படங்கள் மிக தரமானவையாக இருந்தால் பார்ப்பவன் தான் ஆனால் அடிமை இல்லை இப்படி  இறுதியாக பார்த்தது பாகுபலி  

உங்களால் ஒரு மயிரும் புடுங்க முடியாது.

மட்டக்களப்பு மாவட்டம்.

DMW_wmNXkAAPYbl.jpg

Link to comment
Share on other sites

ரசிகர்கள் தமக்கு பிடித்த நடிகர்களை கொண்டாடுவதில் தவறில்லை. ஆனால் அக் கொண்டாட்டங்கள் ரசிகனின் அரசியல் சுற்றாடலை ஆக்கிரமித்துதவிடக் கூடாது. திரையரங்கில் வருபவனே நடிகன். தூரதிஸ்டவசமாக தமிழகத்தில் நடிகன் திரையரங்கில் இருந்து வெளியே வந்து அரசியல் அதிகார கதிரைநோக்கி நகர்கின்றான். அல்லது அரசியலில் கணிசமான அளவு தாக்கத்தை செய்யுமளவுக்கு நகர்கின்றான். அல்லது ரசிகனை நடிகன் அரசியல் சுற்றாடலில் இருந்து பிரித்து தனது அடிமையாக்குகின்றான். நடிகனுக்கு கூலியும் கொடுத்து அந் நடிகனை அதிகாரக் கதிரைநோக்கி காவிச்செல்லும் வேலையை ரசிகன் செய்ய முற்படுகின்றான். முதலில் நடிகன் கட்டவுட்ஆகத்தான் திரையரங்கை விட்டு வெளியே வருகின்றான். பின் அவருக்கு பால் பழ அபிசேகம் செய்து மொட்டை போட்டு கடவுளுக்கு நிகரான ஒரு உணர்வை கொடுத்துவிடுகின்றார்கள். எனவே திரையரங்கை விட்டு நடிகனை வெளியே வரமல் பார்த்துக்கொள்வது கடமையாகின்றது. ஏற்கனவே ஐம்பது நூறு கோடி என்று படத்துக்கு சம்பளம் வாங்கும் நடிகனுக்கு உங்கள் அன்பையும் உழைப்பையும் நன்றியையும் பணமாகக் கொடுத்துவிட்டீர்கள். ஒரு படத்துக்கு நடிகன் வாங்கும் சம்பளம் ஆயிரம் தினக் கூலிகளின் ஆயுள்கால வருமானமாகும். இதற்கு மேல் கட்டவுட்டுகள் பால் அபிசேகங்கள் தேவையில்லை. குறிப்பாக போர்தின்று மிச்சம் விட்ட பூமியில் (ஈழத்தில்) ரசனை தனது எல்லைகளை மீறுவது என்பது காயத்துக்கு மருந்தாகமுடியாது.

தமிழகத்தில் தல தளபதி ரசிகர் முரண்பாடு என்பது அவ்வப்போது கைகலப்போடு முடிந்துவிடும் ஆனால் ஈழத்தில் இந்தப் பிரச்சனை வந்தால் வாள்வெட்டு துப்பாக்கிச் சூடு அவலச்சாவுகள் என்பதுவரை செல்லும். மனநிலை வேறானாது. கோபத்தின் எல்லைகள் வேறானது. இந்தக் கோபத்துக்கு சாம்பிராணி போட பல பிசாசுகள் ஏற்கனவே இருக்கின்றது. அதனால் தளபதியும் தலையும் திரையை கிழித்துக்கொண்டு வெளியில் கட்டவுட்டாக வராமல் இருந்தால் மிக நல்லது. 

இறுதியாக...

சினிமா எம்மை பயன்படுத்துகின்றது. இது தவிக்க முடியாத உணர்வுரீதியான வியாபாரம். நம் சினிமாவை பயன்படுத்தவேணும். சினிமாவை தமிழ்த்தேசீயத்தின் ஐக்கியப்பாடாக தீவிரத்தன்மையோடு அணுகமுற்பட வேணும், ரசிக்க முற்பட வேணும். அவர்கள் எமது ரசனைக்கு தீனிபோட்டால் தான் வியாபாரம் செய்ய முடியும்.இந்த பண்ட மாற்றில் கொடுப்பவன் திணிப்பவனாகின்றான். அந்த நிலை மாறி கேட்பதை கொடுக்க வைக்க வேண்டும். கொஞ்சமாக கொடுத்தாலும் அதை வேறு தளத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். ரசனை சார்ந்த எமது உணர்வுகளை புத்திசாலித்தனமாக மாற்றிக்கொள்ளவும் அதை தமிழ் தேசியம் சார்ந்தும் பயன்படுத்தவும் முனைவோம். 

உதாரணமாக 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழரசு said:

Image may contain: one or more people, sky and outdoor

Ähnliches Foto  Bildergebnis für கற்பூரம்

விஜய் ரசிகர்கள்... "கட் அவுட்டுக்கு"   கற்பூரம்  கொழுத்தும்  போது... எரிந்துள்ளது  போலுள்ளது. :grin: :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

உங்களால் ஒரு மயிரும் புடுங்க முடியாது.

மட்டக்களப்பு மாவட்டம்.

DMW_wmNXkAAPYbl.jpg

நாங்க ஏன் புடுங்க போவான் இது அந்த  தியட்டர் உரிமையாளரால் கூட செய்திருப்பதாக தகவல் இருந்தாலும் அவர்கள் போஸ்டர் ஒட்டும் கூட்டம் முதல் ச்கலதுக்கும் ஆட்கள் வைத்திருக்கிறார்கள்  இதைப்பற்றி விமர்சனம் வந்த போது அந்த தியட்டர் முதலாளி இதுதான் இறுதியாக இருக்கும் கட்டவுட்டு என்று சொன்னதாக கேள்வி பெரிய இடத்தில் எல்லாம்  மோத இயலாதுங்க   இதுதான் இன்றைஅய் வடகிழக்கு (ஈழம் ) அணம் சகலதையும் ஆட்டிப்படைக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்துமாதம் சுமந்து பெற்ற   தாய், இரத்தத்தை வேர்வையாக்கி வளர்த்த  தகப்பனுக்கு கடைசி காலத்தில சரியாய் கஞ்சி ஊத்துதுகளோ இல்லையோ இதுகளுக்கு தாராளமாய் பால் ஊத்துங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் டிசைன் அப்பிடி.. !

இனி ஈழத்தமிழர்கள் யாரும் தமிழ்நாடு தமிழர்களை மட்டுமே குறை சொல்லப்படாது, சொல்லிபுட்டேன்..! mad-no-smiley-emoticon.gif

Link to comment
Share on other sites

தமிழ் சினிமாவினால் மட்டும் எங்க கலாச்சாரம் சீரழிகிறதா என்ன?  2_3 மணித்தியாலங்கள் ஓடும் அதும் வருடத்தில் இரண்டு மூன்று தடவை வெளியாகும் (பொங்கல், தீபாவளி) படங்களை மட்டும் பார்த்துதான் எங்க இளைய தலைமுறையினர் சீரழிகின்ற அளவிற்கா எங்கள் வளர்ப்பு முறை இருக்கிறது. அப்படியானால் முதலில் சீர்படுத்த வேண்டியது வேறு ஏதோ இருக்கிறது

கஞ்சா கடத்தப்படுகிறது இளைய தலைமுறையினர் சீரழிகின்றனர் அதற்கு கேரளாவிலிருந்து தங்குதடையின்றி கடத்தப்படும் கஞ்சாகடத்தலை முடக்கி பின்னணியில் இருக்கும் அரசியல் வாதியை கைதுசெய்து சட்டத்திற்குமுன் நிறுத்தணும்

குழு சண்டை வாள்வெட்டில் ஈடுபடுவோர்க்கு எதிராக கடும் தண்டனை வழங்ககூடியளவுக்கு சட்டம் கொண்டுவரப்படணும்\ மாற்றங்கள் செய்யபடனும் (புலிகள் இருந்தபோது இப்படியானவை எப்படி கட்டுப்படுத்த பட்டண என்று பார்த்தால் தெரிந்துகொள்ளலாம்)

கட்டவுட் கலாச்சாரம் இலகுவில் பிரதேசசபை நகர சபையினால் கட்டுபாடுகள் கொண்டு வரமுடியும் கட்டவுட் அளவு மற்றும் வைக்க படும் இடங்கள் தொடர்பில் கடும் கட்டுபாடுகளை விதிக்கமுடியும். பெருந்தெருக்கள் அடங்கிய பகுதிகளில் போக்குவரத்தை தொந்தரவு செய்யும் என கட்டவுட் மற்றும் விளம்பர தட்டிகளிற்கு அனுமதி முற்றாக மறுக்கலாம் 

நான் கடவுள் தவிர வேறு படங்களில் கஞ்சா அடிச்ச கீரோவை நான் பார்க்கல?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.