Jump to content

ஒரு நிமிடக் கதை தங்கக் கோடாலி!


Recommended Posts

ஒரு நிமிடக் கதை தங்கக் கோடாலி!

 

 

p61.jpg தங்கக் கோடாலி!

ழை விறகுவெட்டி ஒருவன் காட்டுக்குச் சென்று, ஒரு மரத்தை வெட்டிக்கொண்டு இருந்தபோது, அவன் கையிலிருந்த கோடாலி கை நழுவிப் பக்கத்தில் இருந்த கிணற்றில் விழுந்தது.

‘‘கடவுளே! இனி நான் பிழைப்புக்கு என்ன செய்வேன்? என் கோடாலி எனக்குத் திரும்பக் கிடைக்கும்படி செய் யுங்கள்’’ என்று கண்ணீர் மல்க வேண்டினான்.

ஒரு தேவதை அவன் முன் தோன்றி, ‘‘கவலைப் படாதே! நான் எடுத்துத் தருகிறேன்’’ என்று அந்தக் கிணற்றில் மூழ்கி, ஒரு தங்கக் கோடாலியுடன் வெளியே வந்து, அவனிடம் நீட்டியது.

‘‘இல்லை. இது என் கோடாலி இல்லை. என்னுடையது இரும்புக் கோடாலி’’ என்றான் விறகுவெட்டி.

‘‘உன் நேர்மையை மெச்சினேன். பரவாயில்லை. இதை வைத்துக்கொள்! இந்தத் தங்கத்தைக் கொண்டு வேறு தொழில் செய்து பிழைத்துக்கொள். மழை தரும் மரங்களை இனி வெட்டாதே!’’ என்று புன்னகையோடு சொல்லிவிட்டு மறைந்தது தேவதை.

- எஸ்.ரவி

 

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

ஒரு விறகுவெட்டி ஒருநாள் ஆற்றங்கரை ஓரம் விறகு வெட்டி கொண்டு இருந்தான். கை தவறி ஆற்றில் கோடாலி விழுந்து விட்டது.அவனுக்கு நீச்சல் தெரியாததால் அழுது கொண்டு இருந்தான். அந்த நதியில் இருந்த தேவதை வந்து கேட்டது ஏன் அழுகிறாய் என்று. விறகு வெட்டி சொன்னான் , என்னிடம் இருப்பது ஒரே ஒரு கோடாலி , அது இல்லை என்றால் மரம் வெட்ட முடியாது எனவே பிழைப்பே கஷ்டமாக போய் விடும் என்றான். 

தேவதை நீரில் மூழ்கி ஒரு தங்க கோடாலி எடுத்து காண்பித்தது அவன் தேவதையே நானோ ஏழை என்னிடம் இது போல தங்க கோடாலி இல்லை என்றான்.தேவதை மீண்டும் ஒரு வெள்ளி கோடாலியை காண்பித்து ,அவன் அதுவும் இல்லை என்றவுடன் அவனின் இரும்பு கோடலியை எடுத்துக்கொடுத்து அவன் நேர்மையை  மூன்று கோடாலிகளையும் அவனுக்கு பரிசளித்தது.  

இக்கதையின் பாகம் இரண்டு

இது நடந்து  சிறிது நாட்களின் பின்னர் அந்த விறகுவெட்டியின் மனைவி  ஆற்றில் விழுந்து விட  அதே தேவதை அவன் முன் தோன்றி நயன்தாராவை கூட்டிவந்து  இது தான் உன் மனைவியா என்று கேட்டது.  அவன் உடனே ஆமாம் இவள் தான் எனது மனைவி என்று கூற தேவதைக்கு கடும் கோபம் வந்தது. முன்பு ஏழையாக இருந்த போது நேர்மையாக நல்லவனாக இருந்த நீ இபோது மோசமானவனாக மாறி விட்டாய் என்று கோபத்துடன கேட்க விறகுவெட்டி அமைதியாக கூறினான் “நான் இது என மனைவி இல்லை என்று கூறினால் நீங்கள் தமன்னாவை அழைத்துவந்து இது உன் மனைவியா என்று கேட்பீர்கள். நான் இல்லை என்று  கூற பின்னர்  என மனைவியை அழைத்து வந்து உன் நேர்மையை பாராட்டி மூவரையும் தருகிறேன. என்று மூவரையைம்  என்னுடன்  விட்டுவிட்டு சென்று விடுவீர்கள். ஏற்கனவே ஒன்றுடன் நான் படும் பாட்டிற்கு மூன்று பேரையும் என்னால் சமாளிக்க முடியாதப்பா அதனால் தான் அப்படிச் சொன்னேன்” என்று கூறினான். ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப குசும்பு பிடித்த தேவதைபோல் இருக்கு.... ஓவியாவையும், கீர்த்தியையும் தனக்கு ஒளிச்சு வச்சுக் கொண்டு தமனையும், நயனையும் அந்தாளின் தலையில கட்டப் பார்க்குது....!  tw_blush:

Link to comment
Share on other sites

தேவதை குசும்பு புடித்துதோ இல்லையோ, இந்த tulpen குசும்பான ஆளாக இருக்கிறார்..:grin:

 

8 hours ago, suvy said:

ரொம்ப குசும்பு பிடித்த தேவதைபோல் இருக்கு.... ஓவியாவையும், கீர்த்தியையும் தனக்கு ஒளிச்சு வச்சுக் கொண்டு தமனையும், நயனையும் அந்தாளின் தலையில கட்டப் பார்க்குது....!  tw_blush:

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.